Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3055
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4042
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/11/24 in all areas

  1. கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் முடியாது. இங்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தோராயமான வழங்கும் திகதியும், காலமும் இருக்கின்றது. அதை ஒரு வெப்சைட்டில் போய் பார்க்கலாம். பெண் கொடுக்கப் போகின்றவர்கள் சும்மா இருப்பார்களா? இப்பொழுது இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்க 15 வருடங்கள் அல்லது அதற்கு மேலேயேயும் எடுக்கின்றது. நிரந்தர வதிவுடமை இல்லாதவர்களுக்கு நாங்கள் பெண் எல்லாம் கொடுப்பது இல்லை என்று நேரேயே சொல்லி விடுகின்றார்கள். இந்த தடையை தாண்டினால், அடுத்த தடை மாப்பிள்ளை எந்தக் கம்பனியில் வேலை செய்கின்றார் என்ற கேள்வி. ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,...... இதில் ஒன்றா என்று அங்கே பாண்டிக்குப்பத்தில் இருந்து கேட்பார்கள். இங்கு வந்ததே கனவா அல்லது நனவா என்று சந்தேகத்தில் இருக்கும் பெரும்பானமையானவரின் நிலை, இதில் ஆப்பிளா அல்லது ஆரஞ்சா என்றால் அதற்கு எங்கே போவது? இந்தக் கம்பனிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ரவுண்டுகள் வரை இருக்கும் நேர்முகத் தேர்வுகள். ஒவ்வொரு ரவுண்டிலும் கேள்வி கேட்பவர்கள் நடிகர் கமல் போலவே கதைப்பார்கள். ஒன்றும் விளங்கவே விளங்காது. மன உளைச்சல் தான் மிஞ்சும். இதையும் தாண்டினால் சொந்த வீடு இருக்கா, கடன் ஏதும் இருக்கா என்ற அடுத்த தடையைத் தாண்டவேண்டும். அங்கு பரம்பரை வீட்டில் இருந்து கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். கடன் இல்லாமல் இங்கு எவரிடம் சொந்த வீடு இருக்கின்றது? வீடு என்ன வீடு, கடன் இல்லாமல் அமெரிக்காவில் கார் கூட ஒருவரிடமும் கிடையாது. இப்படியான எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நண்பன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்ணை நேரில் பார்க்கப் போயிருந்தான். எத்தனையோ பெண்களை கல்யாண தரகர்கள் மூலம் பேசி, மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளில் விண்ணப்பித்து, பல கல்லூரி ஒன்றுகூடல்களிற்கு போய், இங்கு கடலை கடலையாகப் போட்டு எதுவுமே சரி வராமல், எல்லாம் சுத்தமான தோல்வியாகி, ஒரு கேள்விக்குறியாக இருந்தவன் அவன். இந்தச் சம்பந்தம் எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது இருவரும் இங்கே ஒரு கம்பனியில், ஒரே அணியில் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்தப் பெண்ணை பார்க்க ஊருக்குப் போகும் போது கல்யாணம் கட்டாமல் திரும்பி வரவே மாட்டன் என்று சொல்லி விட்டுப் போனான் நண்பன். இதற்கு முன்னும் சில தடவைகள் ஊருக்குப் போய், போன மாதிரியே வெறுங்கையுடன் திரும்பி வந்தவன் தான், ஆனால் இந்த முறை அவன் கண்ணில் ஒரு உறுதி தெரிந்தது. அநேகமாக திரும்பி வர மாட்டான் என்றுதான் எனக்கும் மனதில் பட்டது. நாலு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் நண்பனின் குடும்பத்தில். நண்பன் தான் கடைசி. மற்ற நால்வரும் திருமணமானவர்கள். முதல் அண்ணா, அடுத்தது அக்கா. அப்பா இல்லை, அம்மா உண்டு. குடும்பத்தில் மூத்தவர் தான் எல்லா முடிவுகளும் எடுப்பது. பெண்ணை இவனுக்கு பிடித்துவிட்டது. நல்லாகவே பிடித்து விட்டது, அவனின் நிலைமை உங்களுக்கும் தெரியும் தானே. நண்பன் கொஞ்சம் கறுப்பாக இருப்பான். கொஞ்சம் கறுப்பு என்றால் ஆரம்ப கால ரஜனிகாந்த, விஜய்காந்த் அளவிற்கு கறுப்பாக இருப்பான். ஆபிஸில் ஏதாவது ஃபோட்டோ எடுக்கும் போது பலர் அவன் பக்கத்தில் போய் நின்று கொள்வார்கள். பெண் பார்த்து விட்டு, வீட்டுக்கு போய் சொல்கின்றோம் என்று மூத்தவர் கிளம்பி வந்துவிட்டார். என்ன வீட்டை போய் சொல்லுவது, இப்பவே சம்மதம் என்று சொல்வது தானே என்று இவன் நினைத்தான், ஆனால் மூத்தவரை நேரடியாகக் கேட்கத் துணிவில்லை. மூத்தவர் நண்பனைத் தனியே கூப்பிட்டுப் போனார். இந்தச் சம்பந்தம் சரி வராது என்றார் அவனிடம். அந்தக் கணத்தில் அவனுக்கு பூமி கால்களில் இருந்து நழுவியிருக்க வேண்டும். ஏன் என்று ஈனஸ்வரத்தில் முனகினான். மூத்தவர் சொன்னார்: அந்தப் பெண் நல்ல வெள்ளையாக இருக்குது. எங்களின் ஆட்களில் இப்படி வெள்ளையாக ஒருவர் வரவே முடியாது. இது ஏதோ கலப்புக் குடும்பம். அநேகமாக இது ஒரு முதலியார் கலப்பாகத்தான் இருக்கும் என்று. அது முதலியார் கலப்பாக இருந்தால் என்ன, அல்லது முதலைக் கலப்பாக இருந்தால் என்ன, தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இப்பொழுது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
  2. ஆக… மது அருந்துவதற்கும், மனைவிதான் காரணம். 😂 நல்ல அமைச்சர், நல்ல கண்டுபிடிப்பு. 🤣 அமைச்சர் தன்னுடைய வீட்டுப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் போட்டுடைத்து விட்டார். 😁
  3. மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024
  4. முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை 62 வயது வேலைகள் செய்ய முடிவதில்லை கோவப்பட்டு என்ன பயன் எனக்கு 67 வயது வர இறுதியில் வேலை செய்கிறேன் ...இப்பவும் இளைஞன் தான் 😂🤣🤪
  5. நான் அனேகமாக நாளை வந்து விடுவேன் என நினைக்கின்றேன். எனக்கும், @வீரப் பையன்26 க்கும் ஆளுக்கொரு எண்ணைப் போத்திலை ரெடி பண்ணி வையுங்கோ. 🤣
  6. ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் இவர்கள் கொஞ்சம் பரவாயில்லை என எண்ணித்தான் வாக்களித்திருப்பார்கள் அண்ணை.
  7. இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான், போதும் இனி இலங்கை வாசம் என்று லஹிரு பிரபோதா கமகே முடிவெடுக்க காரணமாக அமைந்தது. கமகே (35) இலங்கையைச் சேர்ந்த மருத்துவர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து 2023 ஜனவரியில் பிரிட்டனில் பணிபுரியத் தொடங்கினார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 120கி.மீ தொலைவிலுள்ள ஹட்டன் நகரில் மருத்துவராக, சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இப்போது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் (என்ஹெச்எஸ்) முதுநிலை அதிகாரியாக இருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரம் நெருக்கடியால் விலைவாசிகள் உயர்ந்தன – 2022ஆம் ஆண்டு இறுதியில் பணவீக்க அளவு 73% ஆனது. இனி நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார் கமகே. “அது அவ்வளவு எளிதான முடிவாக இல்லை. ஆம், நாம் எனது நாட்டை மிகவும் நேசிக்கிறேன். அது என்றுமே மாறாது. நான் அங்கு எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்பது முக்கியமல்ல, அதேசமயம் படிப்புக்காகவும் வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கடமையும் இருந்தது” என்கிறார். இது ஒருவரோடு முடிவுபெறும் விஷயம் அல்ல. இலங்கையின் மிகப் பெரிய அரசு மருத்துவர்கள் தொழிற்சங்கமான ‘அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் சங்க’த்தின் (ஜிஎம்ஓஏ) சொற்படி, கடந்த இரண்டு ஆண்டுகளின் சுமார் 1,700 மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள், அதற்குப் பொருளாதார காரணங்களே பிரதானம் என்கிறது அச்சங்கம். வெளியேறியவர்கள் எண்ணிக்கை மொத்த மருத்துவர்களில் 10%. இலங்கையின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே வலுவிழந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கொழும்புக்கு தெற்கில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்பிலிப்பிட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 2 மயக்கவியல் மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிட்டதால் அனைத்து அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. இடைக்கால ஏற்பாடாக அருகில் உள்ள இன்னொரு அரசு மருத்துவமனையிலிருந்து மயக்கவியல் நிபுணர் இடம் மாற்றப்பட்டார். அவரோ மேல் படிப்பு பயிற்சிக்காக வெளிநாடு சென்றுவிட்டார். கொழும்பிலிருந்து வடகிழக்கில் 200கி.மீ தொலைவில் உள்ள அனுராதாபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் நலப் பிரிவில் பணிபுரிந்த மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பிறகு, அந்தப் பிரிவையே தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் புலப்பெயர்வு காரணமாக, சுமார் 100 ஊரக மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருக்கின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சர் ரமேஷ் பதிரானாவை எச்சரித்துள்ளது ஜிஎம்ஓஏ சங்கம். இவை அனைத்தையும் தவித்திருக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். பணமும் இல்லை மரியாதையும் இல்லை இலங்கையின் பண மதிப்பில் ரூ.64,000 காமேஜின் அடிப்படை சம்பளம். ஓவர்-டைம் ஊதியத்தையும் சேர்த்தால் ரூ.2,20,000. “நான் கார் வைத்திருந்தேன், உணவு உறைவிடத்துக்கான செலவு, அதுபோக கடன் தொகை, பெற்றோருக்கானச் செலவு. இவை எல்லாவற்றுக்கும் பிறகு கையில் நிற்பது ரூ.20,000 மட்டும்தான், கேளிக்கைகளுக்காகச் சென்றால் அதுவும் மிஞ்சாது” என்கிறார் கமகே. பண நெருக்கடிகளுடன் அரசு அதிகாரிகள் மரியாதையின்றி நடத்தியதும் அவரை இந்த முடிவை எடுக்கச் செய்தது. ஒரு சிறிய கிராமத்தில் இளநிலை மருத்துவராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தனது பணி நேரத்துக்குப் பின் சுகாதார முகாம்களை நடத்தியிருக்கிறார் கமகே. கோவிட் பெருந்தொற்று காலத்தில் பிற மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை அடையாளம் காணும் செயலி ஒன்றையும் உருவாக்கினார். அன்றைய அதிபர் கோதபய ராஜபக்சே, இவரது முயற்சியைப் பாராட்டி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அந்தப் பணியை ஒரு தனியார் நிறுவனத்துக்கு லாபம் வரும்படி ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக் கொடுத்துவிட்டார். “நாங்கள் எங்கள் செயலி குறித்து கோவிட்-19 தலைமைக் குழுக்கு விளக்கவுரை அளித்தோம். அவர்கள் கவனமாக கேட்டும் குறிப்பெடுத்தும் கொண்டனர். பின்னொரு நாள், தனியார் நிறுவனம் ஒன்றுதான் இந்தச் செயலியை – சில குறைகளுடன் – உருவாக்கியது என்பதைக் கேள்விப்பட நேர்ந்தது” என்கிறார் கமகே. கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையின் இதய நிபுணர் எராண்டா ரணசிங்கே அராச்சி (35), இலங்கையைவிட்டு வெளியேறும் முடிவை எடுக்கத் தூண்டிய மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவை, “முதலாவதாக, அடிப்படையில் பொருளாதார காரணங்கள். இரண்டாவது, நல்ல பணிச் சூழல் தேவை. மூன்றாவது, நமக்கும் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்” என்கிறார். மருத்துவ சேவைக்கு சமூகத்தில் பெரியளவில் மரியாதை கிடைக்கவில்லை, குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு இதை உணர்ந்ததாகச் சொல்கிறார். “கோவிட் பெருந்தொற்றின்போது மிகவும் கஷ்டபட்டோம், ஆனால் எங்களால் சாத்தியப்பட்ட வரையில் பல உயிர்களைக் காப்பாற்றினோம். கோவிட் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருந்த வேளையில் அதிக பணிச்சுமை காரணமாக பல நாள்கள் வீட்டுக்கூட செல்லவில்லை, என் வயதான பெற்றோருக்கும் கிருமி தொற்றிவிடுமோ என்ற பயமும்கூட. அந்த நேரத்தில் இப்படிப் பல மருத்துவர்கள் இப்படித்தான் தவித்தனர்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. பெருந்தொற்றுக்குப் பிறகு அதற்கு முன்பு இருந்திராத வகையில் நாடே பெருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. உணவு, மருந்து, எரிபொருள் (பெட்ரோல், டீசல்) உள்பட பல அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, மக்கள் நீண்ட நேர வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. அதில் மருத்துவர்களும் விதிவிலக்கு அல்ல. மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பு எரிபொருள் ஒதுக்கீடு செய்திட ஜிஎம்ஓஏ மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது, அதற்குப் பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பியது. “நான் பல நாள்கள், பல மணி நேரம் வரிசையில் நின்றேன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட இத்தனை மணி நேரங்களை நான் செலவுசெய்ததில்லை – ஆனால் மக்கள் பலர் இதைக் கேட்கும் மனநிலையிலேயே இல்லை” என்றார் ரணசிங்கே அராச்சி. ஒரு நல்ல எதிர்காலம் உயரும் பணவீக்கம், வெளிநாட்டுக் கடன் நிலுவை, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து, உணவு ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டத்தின் உச்சமாக 2022 ஜூலை மாதம் ராஜபக்சே வெளியேற்றப்பட்டார். நிதி நிர்வாக முறைகேடு காரணமாக நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக தடுமாறியது தொடர்பாக கோதபயாவும் அவரது சகோதரர்கள் மஹிந்தா ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் 2023 நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். ஆனால், ரணசிங்கே அராச்சி, ஓய்வுபெற்ற பெற்றோருடன் அவரது உடன்பிறப்புகள் மூவராலும் அதுவரைக்கும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால், 2022 ஆகஸ்டு மாதம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார் ரணசிங்கே. “இலங்கையில் நான் நடுத்தர நிலை மருத்துவராக பணிபுரிந்தபோது, மாதம் 400 பவுண்டுகள் சம்பாதித்தேன். இதே தரத்தில் பிரிட்டன் போன்ற நாட்டில் உள்ள டாக்டர் 3,000 பவுண்டுகள் சம்பாதிப்பார்” என்கிறார் ரணசிங்கே. மேலும், அந்த நேரத்தில் கழுத்தை நெரிக்கும் பணவீக்கம் ஏற்பட்டதால் இலங்கையில் ஆன செலவும் பிரிட்டனில் ஆகும் செலவும் ஏகதேசம் ஒன்றுதான் என்கிறார். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பே தனது கடனில் ஒரு பகுதியை அடைத்ததால், சற்றே சமாளித்தார். “ரூ.15 லட்சம் கடன் தொகையை ஓர் ஆண்டுக்குள் அடைத்தேன். இலங்கையில் இருந்திருந்தால், அதை நினைத்துகூட பார்த்திருக்க முடியாது” என்கிறார் கமகே. இதன் பின்விளைவுகளை நோயாளிகளும் மருத்துவமனைகளும் எதிர்கொண்டனர். ஜிஎம்ஓஏ – மருத்துவர்கள் தொழிற்சங்கம் – மருத்துவர்களை அவர்கள் இன்னல்களிலிருந்து மீட்க முயற்சி எடுக்க வேண்டி அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தனர். “மருத்துவர்கள் நினைப்பது என்ன, அவர்கள் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர்கள் பணியும் நாட்டுக்கு செய்யும் சேவையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதுதான் மிக முக்கியமான பிரச்சினையாக நாங்கள் இனங்கண்டுள்ளோம்” என்கிறார் ஜிஎம்ஓஏ சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹன்சமால் வீரசூர்யா. மேலும், சரியான தொழில் வளர்ச்சி அமைப்பு இல்லாததும் நாட்டின் தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் இருக்கும் பற்றாக்குறையும் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது என்கிறார். சமூகத்தில் ஆழமாக புரையோடியிருக்கும் சமூகப் பாகுபாடுகளும் சில மருத்துவர்களை பாதிக்கிறது. “இலங்கையில், சில மருத்துவர்கள் ஒன்றாக உட்காரவோ அல்லது செவிலியர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ மாட்டார்கள், அங்கு, ‘தான்’ என்ற அகங்காரத்துடன் சமூகப் படிநிலை கட்டமைப்புகளும் உள்ளன. பிரிட்டனில் யாரும் முழுதாக அறியும் முன் இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதில்லை. அப்படிப் பார்ப்பது மனங்களைக் காயப்படுத்திவிடும் என்கிறார் கமகே. “இலங்கையின் சுகாதார கட்டமைப்பு முறை எனக்கு அலுத்துவிட்டது. பொருளாதார விஷயங்கள் போதுமான அளவுக்கு மேம்பட்டால் – பணவீக்கப் பிரச்சினை குறைந்தால் – சில மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்ப தயாராக உள்ளனர். இந்தக் குறைந்த கால இடைவெளியில் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன், ஆனால் இலங்கையைப் போல் வேறொரு நாட்டைப் பார்க்க முடியவில்லை. நாட்டின் நிலைமைகள் சீராகுமேயானால், எங்கள் பணி முறையாக அங்கீகரிக்கப்படுமானால், எங்களுக்கான உரிய சம்பளம் கொடுக்கப்படுமேயானால், மீண்டும் இலங்கைக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்கிறார் ரணசிங்கே அராச்சி. இவை அனைத்தும் விரைவாக நடக்கும் என்பதற்கான சாத்தியப்பாட்டை ரணசிங்கே அராச்சி பார்க்கவில்லை. இப்போதைக்கு வடக்கு அயர்லாந்துதான் அவரது வீடு. https://www.arunchol.com/saroj-pathirana-article-on-sri-lanka-loses-10-percent-of-its-doctors
  8. இன்று ருவிற்றர் மற்றும் பல சமூகவலைத்தளங்களில் நாம் தமிழர் தம்பிகள் அந்தப்பாட்டை பரப்பி அதகளப்படுத்தியிருக்கிறார்கள்..திமுக அரசு சாட்டைையை அச்சுறுத்த நினைத்து நாட்டையை மேலும் பிரபலப்படுத்தியதுமல்லாமல் அந்தப்பாட்டை உலகம் முழுவதும் கேட்க வைத்து விட்டார்கள். போதாக்குறைக்கு சீமானும் பாடி முடிந்தால் கைது பண்ணிப்பார் என்று சவால்விட்டிருக்கிறார்.
  9. படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அனுலோமா மற்றும் பிரிதிலோமா என கலப்பு சமூக மக்கள் அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஜூலை 2024, 08:19 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மனிதர்கள் உருவான காலம் முதல் தற்காலம் வரையிலும் உள்ள சமூகம் பல மாறுதல்களை தாண்டி வந்திருக்கிறது. அக்கால மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்தின் அமைப்பை மையமாகக் கொண்டு வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டனர். அதன்படி குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் மற்றும் பாலை என்ற பெயரில் ஐந்து வகையான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தாம் செய்கின்ற தொழில்களின் பெயர்களை சொல்லி அழைக்கின்ற பழக்கம் அம்மக்களிடம் உருவாகியது. உதாரணமாக கடல் சார்ந்த பகுதியில் மீன் பிடிக்கும் மக்கள் மீனவர் வலைஞர், உம்பளவர் என்றும், மருத நிலத்தில் வயல் வேலை செய்தவர்கள் கடைஞர், குடும்பர்கள் என்றும், காடு சார்ந்த பகுதியான முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்தமக்கள் இடையர்கள், ஆயர்கள் எனவும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் தேன் எடுத்தும், வேட்டையாடி வாழ்ந்த மக்கள் வேட்டுவர் மற்றும் குறவர் என்றும் தொழிற்சார்ந்துள்ள பெயர்களில் அழைத்துக் கொண்டதை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சங்க காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்த களப்பிரர்கள் தமிழ் மக்கள் இடையே தங்களது பண்பாட்டை பரப்பியபோது தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. தொடர்ந்து பல்லவர்கள், சேர, சோழ,பாண்டியர் காலத்திலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டது. அதிலும் இரு பிரிவுகளுக்கு இடையே மண உறவு ஏற்பட்டு அதனால் புதிய சமூகப் பிரிவுகள் உருவாகத் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி உருவான மக்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அனுலோமா மற்றும் பிரிதிலோமா இனத்தவர்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுலோமா பிரிவினர் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களில் யார், யார் கலப்பு சமூகப் பிரிவு மக்கள் என்பதை கல்வெட்டுக்கள் காட்டுவதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார். அனுலோமா, பிரிதிலோமா என்று இரு கலப்பு சமூகப் பிரிவு மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இவற்றில் அனுலோமா என்பதற்கு உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்துள்ள மக்கள்" என்று அறிந்து கொள்ள முடிகிறது என்றார் பன்னீர்செல்வம். "அனுலோமா சமூகத்தைச் சேர்ந்த மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள். இவர்கள் பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருக்கோயில்களில் பூசை செய்வதற்கு பணியமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அவர். படக்குறிப்பு,அனுலோமா சமூகத்தைச் உள்ள மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள் என கல்வெட்டுகள் கூறுகின்றன. பாரசிவர்களின் பணிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ள சிவன் கோயிலில் ஜடவரும சுந்தரபாண்டியரின் 16-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1312) வெட்டப்பட்ட கல்வெட்டின் மூலம் பாரசிவர்கள் திருக்கோயிலில் பணியாற்றியுள்ளதை அறியலாம். "ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடையம்பன் மாரன திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு 13-வது உடையார் ஊர் பாகம் கொண்ட அருளிய நாயனார் கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவர்க்கு விவாஸ்த்த பத்திரம் பண்ணிக் கொடுத்த பரிசாவது..." என தொடங்கும் கல்வெட்டில் பாரசிவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளதை அறிய முடிவதாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம். "பாண்டிய மண்டலம், சோழமண்டலம், மகதை மண்டலம், நடுவில் மண்டலம் ஆகிய பகுதியில் உள்ள திருக்கோயில்களில் பூசை செய்து வருகின்ற பாரசிவர்களுக்கு உரிமைகள் மற்றும் மரியாதை உண்டு என்று சொல்லியுள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது." படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் மேலும் பாரசிவர்கள் பற்றி போளூர் வட்டம் கப்பலூர் மற்றும் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோயில்களிலும் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பாண்டியர்களின் கல்வெட்டுகளில் சிலவற்றில் பாரசிவர்கள் சிவபெருமானுக்கு பூசை செய்பவர்கள் என்ற ஒரே விதமான செய்திகள் மட்டும் அறிய முடிகின்றது. அதே நேரத்தில் பாரசிவர்கள் பிராமணர்களை விட சமூக அமைப்பில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தவர்கள் என்பதும் புலப்படுவதாகவும் முனைவர் பன்னீர்செல்வம் கூறினார். பிரிதிலோமா பிரிவினர் "பிரிதிலோமா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள்" என்று பன்னீர்செல்வம் விளக்கினார். பிரிதிலோமா பிரிவினரின் பணிகள், உரிமைகள் புதுச்சேரி திருபுவனையில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உள்ள விக்ரமச்சோழனின் 9-ம் ஆட்சியாண்டு (கி.பி 1127) கல்வெட்டின் மூலம் உத்கிரிஸ்ட் - ஆயோகவர் என்ற கலப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் வாழ்ந்துள்ளது அறிய முடிகிறது. இதில் அவர்களுடைய உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதே போல் பிரிதிலோமா பிரிவைச் சேர்ந்த சிவன் படவர்கள் பற்றி கரூர் அருகே திருமுக்கூடல் என்ற ஊரில் உள்ள கோவிலில் மாறவருமன் ராஜகேசரி வீரபாண்டிய தேவரின் 11-ம் ஆட்சியாண்டு (கி.பி .1344) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அமுது படைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பிரிதிலோமா பிரிவை சேர்ந்தவர்கள் பணம் 20 தருவதாக ஒத்துக் கொண்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது" என்கிறார் பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/ce4qr88gdg3o
  10. இது தானே சிக்கல் 🤪 🤣
  11. நான் இன்னும் இளமையானவன்தான் தம்பி. என் வயது 18. சஎழுத்துக்கு “அ” முன்னலை வகிப்பதுபோல் எண்ணுக்கு “1” முன்னலை, அதனால் 1றை முன்னுக்குப் போட்டேன்.🤪
  12. சீ. சீ. அப்படியில்லை உண்மை தான் பதிந்தேன். எல்லா விடயங்களையும் எழுத முடியாது ஆனால் மனிதன் நன்றாக அனுபவித்து வாழ்ந்து உள்ளது ஒழுங்காக குடும்பம் என்ற ஒன்றுமில்லை அவ்வளவு தான் மேலும் தமிழர் கூட்டணியின். பெயரில் 6 -7-24 இல கிளிநொச்சியில் சம்பந்தனுக்கு அஞ்சலி கூட்டம் நத்தினார்கள் இதில் ஆனந்தசங்கரி அருண்மொழிவரமன் தம்பிமுத்து. [இவர் முன்னாள் கூட்டணி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். சாம் தம்பிமுத்துவின். மகன் ]அசோக்குமார் ஐயம்பிள்ளை நிக்சன் பவதராணி ராஐசிங்கம். உட்பட பலரும் கலந்துகொண்டனர் இதில் பயனற்றுப் போன சம்பந்தனின் தியாகங்கள் என்று சங்கரி உரையாற்றினார் [ நண்பன்டா ]. அருண் தம்பிமுத்து. திருகோணமலையில் கலந்து கொண்டு அண்ணமலை சிறிதரன். ......உரையாற்றினார்
  13. உண்மையாகவா… கேட்கவே உடம்பெல்லாம் புல்லரிக்குது. 😂 அடுத்த தீபாவளிக்கு முயற்சி பண்ணி பார்ப்போம். 😛 🤪 😜 🤣
  14. 🤣...... அது நான் இல்லை............ அதோட நான் மாநிறமாக்கும்.............😜. என் நண்பனின் ஊரின் பெயர் அந்தக் கதையிலேயே இருக்கின்றது. ******************* சுவி ஐயா எழுதியது போலவே என்னுடைய கதையை எழுதினால் இப்படித் தான் இருக்கும்: நான்: இப்ப என்ன அவசரம்.........நான் இன்னும் படித்தே முடிக்கவில்லை, இன்னும் ஒரு வருஷம் இருக்கு. வீட்டார்: இப்ப எழுதிட்டு போ..... அடுத்த வருஷம் கல்யாணம் வைக்கலாம். நான்: பெண்....? வீட்டார்: அது தான் அடுத்த ஒழுங்கையில்............... நான்: அதுவா, அதுக்கு எத்தனை வயசு? வீட்டார்: என்ன சின்ன வயசு.......... இந்த வயதில நாங்கள் கையில இரண்டு, மடியில இரண்டு என்று பெத்துப் போட்டிட்டம்.............. (என் வீட்டார்கள் அதற்குப் பிறகு இன்னும் நாலு பெற்றவர்கள்......... மொத்தம் எட்டு உருப்படிகள்....🤣)
  15. “வீட்டை கட்டிப் பார், திருமணத்தை செய்து பார்” என்ற பழமொழி 100 வீதம் உண்மை.
  16. நீங்க தானே அண்மையில் திருமணத்தை நடாத்தி முடித்தீர்கள். நிறைய அனுபவம் இருக்கும். எப்படித் தான் கவனமாக செய்தாலும் அதையும் மீறி ஏதாவது குறைகளும் வரும். போட்ட கணக்கை விட கூடுதலாகவே முடிந்திருக்கும். அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு கனடாவில் மாப்பிள்ளை பார்த்த போது பெற்றோர்கள் சீதனமாக வீடுவளவு கேட்டார்களாம். பெற்றோர்கள் இருக்கிறது அவளுக்கு தானே என்றாலும் பிள்ளை அந்த வீட்டு தொடர்பே வேண்டாம் என்று விட்டுவிட்டா.
  17. இந்தக் கலரையும்...தடுமாற்ற்த்தையும் பார்த்தால்ல் இவருதான் மாப்பிள்ளை...ஒரு படத்தோடை விளக்குங்கோவன் கவியர்.. தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இதுதான் நானும் செய்தது
  18. உலகம் எங்கும் திருமணச் செலவு கொரோனாவுக்குப் பின் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. உணவு, உடை, திருமண மண்டபம் என்று 100 பேருடன் சாதாரணமாக ஒரு திருமணத்தை செய்யவே 15,000 ஐரோவை தாண்டி விடும். நகையையும் சேர்த்தால் 25,000 ஐரோ நிச்சயம். பிற் குறிப்பு: சீதன கணக்கை மேலே சேர்க்கவில்லை. 🤣
  19. இந்தநாள் நல்லநாள் ...........! 😍
  20. சம்பந்தருக்கு அடுத்து சங்கரியாரை கிழித்து தொங்க விட இப்பவே… “ஹோம் வேர்க்” செய்து வையுங்கள் தமிழன்பன். 😂
  21. நீங்கள் சொன்ன அத்தனை கேள்விகளையும் பாஸ் பண்ணிய பின் .......... சுவி....... கொஞ்சம் பெண்ணைப் பார்க்கலாமா ...... அவர்கள்........ ஓ.....அதுக்கென்ன தாராளமா ...... அம்மா கொடியிடை இங்கே வாம்மா, மாப்பிள்ளை உன்னைப் பார்க்க வேண்டுமாம்...... (பெண் வருகிறாள்) அவர்கள் ....... என்ன மாப்பிள்ளை யோசிக்கிறீங்கள் ........ பெண் பிடித்திருக்கா ....... சுவி ......... அதுவந்து பெண்ணுக்கு கண் கொஞ்சம் வாக்கு போல ........மூக்கும் சப்பையாய் ......யு.எஸ் சில் ஒரு பங்க்சனுக்கு அழைத்துப் போவதென்றாலும் கலர் கம்மி ....... நண்பர்கள் பின்னால் நின்று கேலி பண்ணுவார்கள் போல..... பெயருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமேயில்லை போலிருக்கே....... அவர்கள்......... அது நாங்கள் அவ பிறந்தவுடன் வைத்த பெயர்.........இப்ப கொஞ்சம் தடியாகிட்டா ...... சுவி........ஓ......சரி......இப்ப நாங்கள் போட்டு பிறகு சொல்லி அனுப்புகிறோம்....... அவர்கள்.....அதெப்படி நீங்கள் எங்கள் பெண்ணைப் பார்த்து விட்டு வேண்டாம் என்று சொல்லலாம்...... சுவி....... நீங்கள் கேட்ட அத்தனை தகுதியும் எனக்கு இருக்கும் போது நானும் எனக்கு ஏற்றவாறு பெண்ணைத் தேடுவது ஒன்றும் தப்பில்லையே ....... ஓக்கே அப்ப வரட்டா .......! 😂 (எனக்கும் இப்படி பெண்ணைத் தேடிப்பார்க்க விருப்பம்தான் ....... அதுக்கு இனியொரு சந்தர்ப்பம் அமையுமோ தெரியவில்லை).
  22. அவங்களே அரச காசில் பிழைப்பை நடத்துறாங்கள் ..இதில வேற அவர்களிடம் ஆலோசனை ....75 வருடம் அழித்தது போதாதா
  23. இதுக்கெல்லாம் கோடு போட்டுக் கொடுத்தது நம்ம சம்பந்தர் ஐயா தான். 😂 பிற் குறிப்பு: விசுகர்… நீங்கள், அந்தத் திரியை அணைய விடாமல் பார்த்துக் கொள்ள வேணும். 😁 எண்ணை ஊத்துறது உங்கள் பொறுப்பு. ஓகே…. 🤣
  24. ‘ஆப்பிள்’, ஆரஞ்சு’, ‘கம்பனி’ ,’ஆபிஸ் எண்டு உங்களையே அறியாமல் எழுத ஆரம்பித்து விட்டீர்கள். அந்த மாப்பிள்ளை நீங்கள் இல்லை என்று நம்புகிறேன்
  25. சுற்றுச் சூழலைப் பற்றி இங்கு அரசு கவலைப் படவில்லை. இந்திய நிறுவனத்தை திருப்திப் படுத்துவதிலேயே அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றது. தீவுப்குதி, மன்னார், திருகோணமலை, பூநகரி என்று தமிழர் வாழும் பகுதிகளையே குறி வைத்து கெடுப்பது ஏன்? போய்…. சிங்களவர் பகுதிகளில் உங்கள் திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதானே… அவன் ஒற்றுமையாக எதிர்ப்பான் என்ற பயமா…. நமக்கு வாய்த்த அரசியல் வாதிகளால் எத்தனை துன்பத்தை அனுபவிக்க வேண்டி உள்ளது.
  26. அருகில் பாலர் பாடசாலை இல்லை. ஆனால் மிகவும் பிரபலமான Express Institute என்ற தனியார் பாடசாலை நீண்டகாலமாக உள்ளது.
  27. பூஸா முகாம் தானே.... நான் போகவில்லை...... தப்பி விட்டேன்...
  28. ஒரு முடிவோடை தான் களத்தில் இறங்கி இருக்குறார்கள்.😂
  29. அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார். ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார். உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும். நபர்களுக்கு. ஆயுள் கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம் என்று வாசித்து உள்ளேன் உண்மையோ தெரியவில்லை நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏
  30. உங்க‌ளுக்கு நான் வேறு மாதிரி எழுதி புரிய‌ வைச்சு இருக்க‌லாம் இர‌ண்டு கிழ‌டுக‌ள் மேல் இருந்த‌ கோவ‌த்தில் அப்ப‌டி எழுதி விட்டேன்☹️..................அவ‌ர்க‌ள் ம‌றைந்தாலும் அவ‌ர்க‌ள் இழைத்த‌ துரோக‌ம் . சொன்ன‌ பொய்க‌ள் செய்த‌ பித்த‌லாட்ட‌ம் க‌ண்ண‌ விட்டு அக‌ல‌வில்ல‌ . ம‌ழை விட்டு இருச்சு ஆனால் தூவான‌ம் விட‌ வில்லை ஒரு இன‌ம் அழியும் போது ஊட‌க‌ விய‌ளாள‌ர் கேட்ட‌ கேள்விக்கு க‌ருணாநிதி சொன்ன‌ ப‌தில்🫤..................... ச‌ம்ப‌ந்த‌ர் பொய் சொல்லி சொல்லியே ஈழ‌த்து எம் உற‌வுக‌ளை ஏமாற்றின‌வ‌ர்.............................
  31. சம்பந்தரின் அந்திரட்டிக்கு பிறகுதான் அவர் எமலோகம் வருவார் என்று எமதர்மராஜாவிடம் சொல்லி விடுங்கள். அவர் 91 வயது மட்டும் செய்த வேலைக்கு… இங்கை கிழிச்சு தொங்க விட்டுட்டுத்தான் அங்கை அனுப்புவம். 😂
  32. கோப்பிச் செடி மலர்களுடன் .........! 😁
  33. முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள்ளது. இந்நால் தமிழ் நிலத்திற்கு அப்பால் உள்ள வாசகர்க்கும் ஆனதால், பெரியாரின் நிகரற்ற வாழ்வு பற்றிய குறிப்பும் வரையப் பெற்றுள்ளது. முன்பு பேரா. தில்லைநாயகம் அவர்கள் தமது திருக்குறள் தமிழ் உரை மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்குத் தமிழில் அணிந்துரை தர அடியேனுக்கு அன்புக் கட்டளையிட்டது போல், இந்நூலுக்கு ஆங்கிலத்தில் அறிமுகவுரை தரப் பணித்தது எனது எழுத்துக்கான வெகுமதி. இனி அந்த அறிமுகவுரையும் இறுதியில் நூலின் அட்டையும் : PREFACE This book by Prof. S.Thillainayagam is in two parts, the first part is the English translation of the eight chapters of the book Materialism (Porulmudhalvaadham) penned by Periyar in Tamil and the second a brief sketch on Periyar's life and times. The target reader is obviously the non-Tamil speaking common man in India and outside and hence the author has naturally come out with a simple but powerful language befitting Periyar's message to the world at large. As the book is mainly for the non-Tamils, Thillainayagam has found it imperative that a chapter on Periyar is appended. The first part Materialism deals with Periyar's down to earth philosophical reflections on god, religion, soul, I (who am I ?), heaven and hell etc… Periyar, being a man for all, cannot afford to be an abstruse philosopher catering only to the elite. He comes down heavily on the society's stereotypical notions on religious charity, sin, virtue and good conduct in simple words and examples from day-to-day life. Atheism and rationalism were the be-all and end-all of his life. The title 'Periyar' bestowed upon him means 'Great Man' in Tamil. The first part Materialism shows Periyar as 'Periyar' in his own words and the second part Periyar’s Life, in the words of Thillainayagam, shows why and how Periyar is 'Periyar' in his deeds. A brief but perfect picturisation of Periyar right from his boyhood is a deserving tribute to the man he was, besides being a wholesome introduction to someone who had sown the seeds of the Self-Respect Movement in Tamil Nadu and had seen it within his lifetime, grow and blossom as the most humanitarian movement. The problems Periyar faced in his struggle for the oppressed classes were multifaceted. He had to fight not just against the regressive forces in the Brahminical camp but even against people of great stature, the likes of Mahatma Gandhi and Rajagopalachari who were steeped in the varnashram and the Manu dharma evils. Thillainayagam has taken great efforts to prove his point with facts and figures. I'm sure that this will earn him kudos from all progressive-minded people. S. Somasundaram, Professor of Mathematics (Retd.) Manonmaniam Sundaranar University Tirunelveli. https://www.facebook.com/share/p/yE43CLxhY4yCMXTU/?mibextid=oFDknk
  34. வணக்கம் இங்கே இறந்து போன ஒரு வயதானவர் பற்றிய கருத்துக்கள் அல்ல எழுதப்படுபவை. தனது ஏலாத வயதிலும் தமிழர்களின் முக்கிய காலகட்டத்தில் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே பாவித்தபடி சாகும் வரை அப்பதவியில் ஓட்டிக் கொண்டு இருந்தது. அவரது பதவியும் அந்த பதவி மூலம் அவர் அனுபவித்த சலுகைகளுமே இங்கே எழுதப்படுகின்றன. அவர் வந்து பதில் தரப்போவதில்லை. ஆனால் இனி வருபவர்களுக்கு எச்சரிக்கை . ..
  35. அது ச‌ரி தாத்தா இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ரால் இந்த‌ 15வ‌ருட‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் அடைஞ்ச‌ ந‌ன்மைக‌ள் என்ன‌.....................மேல‌ த‌மிழ்சிறி அண்ணா இணைச்ச‌ செய்தியை பாருங்கோ நீங்க‌ள் பிற‌ப்ப‌துக்கு முத‌ல் ஏதோ ஆர்பாட்ட‌த்தில் கைதாகி த‌ன‌க்கும் இந்த‌ ஆர்பாட்ட‌த்துக்கும் தொட‌ர்பில்லை என்று த‌ப்பித்த‌வ‌ர் தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர் .......................இவ‌ர் ர‌னில‌ மிஞ்சின‌ குள்ள‌ ந‌ரி..........................1980க‌ளில் இருந்த்ய் 1990 வ‌ரை பிற‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ந்த‌ர‌ தேசிய‌த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ப‌டியால் தான் இவ‌ரை தெரியும்...................... சிங்க‌ள‌வ‌னுக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் பிற‌விக் குன‌ம் தெரிந்த‌ ப‌டியால் தான் எலும்பு துண்டை போட்டு வ‌ள‌த்த‌வ‌ங்க‌ள்.......................கோழைத் த‌ன‌மாய் அர‌சிய‌ல் செய்து ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் என்ற‌ பெய‌ரில் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார் ச‌ம்ப்ந்த‌ர்...................... 15வ‌ருட‌த்தை வீன் அடித்த‌ த‌மிழ் அர‌சிய‌ல் வாதிக‌ள்................ம‌கிந்தா கும்ப‌லை போர் குற்ற‌வாளி என்று நிறுவிக்க‌ எவ‌ள‌வோ ஆதார‌ம் இருந்தும் எல்லாத்தையும் இவ‌ர்க‌ள் வேனும் என்று கோட்ட‌ விட்ட‌ மாதிரி இருக்கு.................... அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீ அர‌சாங்க‌ம் என்று ப‌ல‌ வருட‌மாய் வாயால் வ‌டை சுட்டு கால‌த்தை ஓட்டி விட்டார்..............இப்போது அவ‌ர்க‌ள் கெட்ட‌ கேட்டுக்கு நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ பிர‌த‌ம‌ர் வேட்பாள‌ர் தேர்த‌ல் ந‌ட‌த்தின‌மாம் உவைக்கெல்லாம் க‌க்கூஸ் க‌ழுவின‌ விளக்குமாறு மூல‌ம் ப‌தில் சொல்ல‌னும் ....................இதை விட‌ இந்த‌ நூற்றாண்டில் பெரிய‌ அவ‌மான‌த்தை நான் பார்த்த‌து இல்லை.......................த‌லைவ‌ர் இவ‌ர்க‌ளை எங்கு தான் பிடிச்சார்.......................எம் இன‌த்துக்கு துணிந்து செய‌ல் ப‌ட‌ நேர்மையான‌ துணிவான‌ த‌லைவ‌ர்ள் இல்லை இப்போது மீதிக் கால‌த்தையும் இந்த 15வ‌ருட‌த்தை வீன் அடிச்ச‌ மாதிரி தொட‌ர்ந்து வீன் அடிப்பார்க‌ள்🫤☹️.............................
  36. தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும் சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. சைவ சமயத்தை முன் நிறுத்தி மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும். ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே. சரி விடயத்துக்கு வருகிறேன் இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப் பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள். கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது. “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல. ‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள். ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார். ‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மன சாட்சி…’ சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.
  37. மாம்பழம் கிடைக்காத கவலையில் எங்கள் சாமி முருகன் அங்கியைத் துறந்தாலும் அங்குள்ளதை மற்றவருக்கு காட்டாமல் கோமணத்துடனாவது நின்றார்.😌 எங்கள் குமாரசாமியோ தனது தீவிர பக்தனென்றும் பாராமல் என் அங்கியைக் காரணம் காட்டினாலும்… எனது கோமணத்தையும் உருவி அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாரே என அவரது பின்னூட்டம் எண்ண வைக்கிறது.!!🤔😳😂
  38. எவர் வந்தாலும் அடுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான். ✌️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.