Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3055
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1487
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/18/24 in all areas

  1. பூவரசம் வேர் -------------------- எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது. பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது. அதில் இருந்த மஞ்சள் பூ கண்ணுக்கு தெரிந்தது. பச்சை இலைகள் எப்போதும் பசுமையாக இருந்ததும் தெரிந்தது. பூவரசம் மரங்கள், எவரும் அவைகளைக் கவனிக்காமல் இருந்தாலும் கூட, ஒரு கவலையும் இல்லாமல் எப்போதும் செழிப்பாகவே இருந்தன. சமூக ஊடகங்கள் மிகப் பிந்தியே எனக்கு அறிமுகமானது. அதுவும் ஒரே ஒரு ஊடகம் மட்டுமே. ஆனால் ஒரே ஒரு சமூக ஊடகமே ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்நாளில் போதும். மேலும் ஒருவர் எவ்வளவு தான் பிந்திச் சேர்ந்தாலும், சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கும் பதிவுகளால், பிந்திச் சேர்ந்தவரும் முந்திச் சேர்ந்தவர்கள் போலவே சமூக ஊடகங்களில் ஒரு பூரண நிலையை மிக விரைவில் அடைந்தும் விடுகின்றார். பூவரசின் பயன்கள் என்ன என்னவென்று கும்பமுனி சித்தர் எழுதிய பாடல் ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வந்தது. அகத்திய முனிவரைத் தான் கும்பமுனி என்றும் சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் பூவரசு ஒரு ஆயுர்வேத மருந்தகம் என்று அந்தப் பாடல் சொல்கின்றது. பூவரசின் பச்சை இலை, பழுத்த இலை, பட்டை, வேர், பூ, விதை இவை எல்லாமே மருந்து என்றும், அவை என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் என்ற விளக்கங்களும் அதில் இருந்தது. எல்லாமே மருந்து, எல்லாமே நோய் என்கின்ற மாதிரித்தான் சமூக ஊடகங்களில் பதிவுகளும், காணொளிகளும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு நண்பன் நான் அவன் வீட்டிற்கு போய் இருந்த பொழுது வாழைப்பூ வடை சுட்டுக் கொடுத்திருந்தான். முப்பது வருடங்களுக்கும் மேலாக நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டிருக்கவில்லை. நான் அவனிடம் போயிருந்த போது அவனுக்கு நீரிழிவு உச்சத்தில் இருந்தது. அவன் இப்போது இல்லை. இந்த விடயத்தில் முறையான ஆலோசனைகளை தகுதியானவர்களிடம் இருந்து பெறுவதே சரியான வழியாக இருக்கும். ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது. ஆட்டோவில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த நாங்கள் அந்தக் கடையடியில் ஆட்டோவை நிற்பாட்டச் சொன்னோம். ஆட்டோக்காரர் மிகவும் தெரிந்தவர், உறவினர் கூட. எங்களுடன் இறங்கி வந்த ஆட்டோக்காரர் நாங்கள் உரல் வாங்குவதை தடுத்துவிட்டார். இந்த உரல்கள் சரியில்லை வேறு ஒரு இடத்தில் நல்ல உரல்கள் விற்கின்றார்கள், அங்கே கூட்டிக் கொண்டு போகின்றேன் என்றார். வீட்டில் இடியப்பம் எப்போதும் நல்லாவே தான் வந்து கொண்டிருந்ததது. இன்னும் நல்ல உரலில் இன்னும் நல்லா இடியப்பம் வரும் போல என்று நினைத்தேன். நல்ல உரல் விற்கிற அந்தக் கடை அயல் கிராமத்தில் இருந்தது, ஆனால் நாங்கள் போன அன்று பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த வீட்டில் கேட்டோம். இப்ப சில நாட்களாகவே பூட்டியிருக்குது என்றார்கள். திரும்பி வரும் போது ஆட்டோக்காரர் நல்ல இடியப்ப உரல் என்ன மரத்தில் செய்வார்கள் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது, ஆனால் வேம்பாக இருக்குமோ என்று அவரைக் கேட்டேன். 'பூவரசம் வேர்' என்ற பதில் அவரிடமிருந்து வந்தது. இதைக் கும்பமுனி கூட அவரின் பூவரச மரம் பற்றிய பாடலில் சொல்ல மறந்துவிட்டார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது பூவரசம் வேரில் செய்த ஒரு இடியப்ப உரல் வாங்கியே தீரவேண்டும்.
  2. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், துப்பரவாக்கள், குழந்தை பராமரிப்பில் ஓரளவு அனுபவமும் திறமையும் உண்டு. கைவசம் இப்ப வீட்டில் இருக்கும் கொஞ்ச காசும் உணவு பொருட்களும் ஒரு கிழமைக்கு தாக்குப்பிடிக்கும், அதற்குள் எப்படியும், படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஒரு வேலைக்கு போகவேண்டும். அப்ப தான் தன் இரு தம்பிகளும் இரு தங்கைகளும் படிப்பை தொடரமுடியும், சாப்பிடமுடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அதனால், தன் அம்மா அப்பா கூலிவேலை செய்த ஒரு சில இடங்களில், ஏதாவது வீட்டு வேலைகள் கிடைக்குமா என்று விசாரித்து பார்த்தாள். ஆனால் ஒருவரும் அவளை வேலைக்கு சம்மதிக்கவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்கள்தான் ஒருவாறு சாப்பாட்டுக்கு சமாளிக்கலாம். அப்ப தான், அவள் தன் குடிசைக்கு திரும்பும் பொழுது, இளம் தம்பதியர், தம் இரு சிறு குழந்தைகளுடன் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் போவதைக் கண்டாள். அவர்களின் மூத்த மகள் ஒரு நாலுவயது இருக்கும், சடுதியாக முன் படலை மூடமுன்பு வீதிக்கு ஓடிவிட்டார். நல்ல காலம், மலர் இதைக் கவனித்துக்கொண்டு இருந்ததால், ஓடிப்போய் தூக்கிவிட்டார், இல்லாவிட்டால், வேகமாக வந்த பாரவூர்தியில் நசிங்கிப்போய் இருப்பார். பாரவூர்தியின் சடுதியான நிறுத்தமும், குழந்தையின் அழுகுரலும் பெரும் அதிர்ச்சியை பெற்றோருக்கு கொடுத்தது, என்றாலும் குழந்தை பாதுகாப்பாக மலரின் கையில் இருப்பதைக் கண்டு, அவளுக்கு நன்றி கூறியதுடன், அவளின் உடையையும், முகத்தில் தவழும் சோகத்தையும் பார்த்த அவர்கள், அவளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தனர். அப்பொழுதுதான் மலரின் அப்பா, அம்மா இருவரும் சிலவேளை இவர்களின் வீட்டிலும் தொட்டாட்டு வேலை செய்தது தெரியவந்தது. அவர்களும் இவளின் இந்த திறமையை நேராக கண்டதாலும், அவளின் அப்பா அம்மாவின் அறிமுகம் முன்பே இருந்தலாலும், தமக்கு ஒரு வீட்டு உதவியாளராக, வேலைக்காரியாக, காலை பொழுதுக்கு சம்மதித்தனர். எது என்னவென்றாலும், அவளின் வேலையை, நடத்தையை பொறுத்தே நிரந்தரமாக்குவோம் என்று உறுதியும் கொடுத்தனர். அவளுக்கு நல்ல சந்தோசம், வீடு திரும்பியதும் அந்த செய்தியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டாள். அடுத்தநாள் காலை அவள் கண்விழித்து எழுந்தபோது, அவள் நேற்று வைத்த அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கும் நீ அலர வேண்டாம்..’ என்பதுபோல், கடிகாரத்தின் தலையில் தட்டி அடக்கி வைத்தாள். அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்ததுபோல் நாலு மணிக்கே எழும்பி விட்டாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக்கொள்ளும் சுகத்தைக் கோரின. எனினும் தான் இன்றில் இருந்து வேலைக்காரி என்ற நினைவு அதை மறுத்தது. அவசரம் அவசரமாக சாப்பாடு தயாரித்துவிட்டு, சகோதரர்களை சாப்பிட்டு விட்டு கவனமாக பாடசாலை போய் வரும்படி கூறி விட்டு, ஆறுமணிக்கு முதலே வேலைக்காரியாக, தன் முதல் நாள் வேலையை தொடங்கினாள். இங்கு சமையல் பெரிதாக இல்லாவிட்டாலும் குழந்தை பராமரிப்பும் வீடு, வளவு துப்பரவாளாலுமே முக்கியமாக இருந்தது. அவளுக்கு அவை ஏற்கனவே பழக்கமாக இருந்ததால், அது அவளுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. மேலே இருந்த அறை ஒன்றில், வீட்டுக்கார அம்மா தன் மகளை பாலர் பள்ளிக்கு தயார் படுத்திக்கொண்டு அவளும் தன்னை ஆயத்தமாகிக் கொண்டிருந்த அரவம் கேட்டது. மலர் கொஞ்சம் மேலே எட்டிப் பார்த்தாள். அந்த நாலு வயது பிள்ளை அடம் பிடித்துக்கொண்டு இருந்தது. அவள் நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இன்னும் வெளிக்கிடாமல் இருந்தாள். தன் நாலு தம்பி தங்கையுடன் பழகிய அனுபவம் நெஞ்சில் வர, 'அம்மா நான் உதவி செய்யவா?' என்று கேட்டவாரே மேலே ஓடிப்போய், அந்த குழந்தையின் கன்னத்தில் தடவிக் கொடுத்துக் கொண்டு, குளியல் அறைக்கு கூட்டிக்கொண்டு போய், பல் துலக்கி வாய் கொப்பளித்து, முகம் கழுவி பின் சாப்பாடு தீத்த தொடங்கினாள். அந்த குழந்தையும் அவளுடன் மகிழ்வாக சேர்ந்து கொண்டது. வீட்டுக்கார அம்மா, அப்படியே திகைத்து இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘ நாலு வயசுதான் ஆவுது, அதுக்குள்ளியும் இன்னா பேச்சு!..’ , மலர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அதன் பின் முதலில், சமையல் அறை போய் அங்கு சுத்தம் செய்தாள். பிறகு சட்டிப் பானைகள், சாப்பட்டு பாத்திரங்களை கழுவி வைத்தாள். மீந்தச் சாப்பாட்டை முதலில் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு பின்னர் உணவு தட்டுகளை பேசினில் [basin] போடாமல், அப்படியே வீட்டுக்காரர்கள் போட்டதால் கவலைகள் நிறைந்துக் கிடந்த அவளின் மனசைப்போல், பேசின் அடைத்துக் கொண்டது. எண்ணைய் மிதக்கும் தண்ணீரைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அடைத்துக் கிடந்த சோற்றை அகற்றிவிட்டு பேசினைச் சுத்தம் செய்து முடித்தாள். ' என்ன மலர் இன்னும் குசினியிலேயா?' வீட்டுகார அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பினாள். 'இனி காணும் கொஞ்ச நேரம் தம்பியுடன் விளையாடு , நான் சமைக்கப் போகிறேன்' என வீட்டுக்கார அம்மா மலருக்கு ஓய்வு கொடுத்தாள். அப்படியே துப்பரவாக்களும் குழந்தைகளுடன் விளையாட்டுமாக அன்றைய பொழுது மலருக்கு போய்விட்டது. என்றாலும் முதல் நாள் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணி கடந்துவிட்டது. என்றாலும் அவர்கள் மிஞ்சிய சாப்பாடுகளை அவளுக்கு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுத்துவிட்டனர். அவள் அங்கு மூன்று நேரமும் சாப்பிட்டதால், அதை சகோதரர்களுக்கு கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் அனுபவம் பெற, கெதியாக அதேநேரம் நேர்த்தியாக துப்பரவாக்கள் செய்ய தொடங்கினாள். இதனால், அவர்களின் மூத்த மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கணக்கும் தமிழும் மிஞ்சிய நேரத்தில் படிப்பிக்கவும் தொடங்கினாள். அது அவர்களை மிகவும் கவர்ந்தது. மலர் பாடசாலையில் படிக்கும் காலத்தில், ஒரு திறமையான மாணவியாக இருந்தது இதற்கு அவளுக்கு உதவியது. அவளை இப்ப அவர்கள் தங்களின் ஒரு குடும்ப உறுப்பினராக கருத தொடங்கியதுடன், அவளை சாதாரண வகுப்பு பரீட்சைக்கு தனியார் பரீட்சையாளராக தோற்றுவதற்கான உதவிகளையும் வழங்கி, அவளுக்கு தாமே ஓய்வுநேரத்தில் படிப்பித்தனர். இருவரும் பட்டதாரிகள் என்பதால், படிப்பித்தல் அவர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. மலரின் நேர்மையான திறமை அவளை மீண்டும் படிப்பை தனியார் மாணவியாக தொடர் வைத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் மறைந்து ஞாயிறு மலர திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த திருநாள் இது இவனின் பொன்நாள் திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க திறமையான அலங்காரம் காற்றில் ஆட திருப்தி கொண்டு இவனும் மகிழ திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது ஆகாரம் பலபல சுவையில் இருக்குது ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும்! "இளமை கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து ஈரக் கண்ணீர் சிந்த விடாதே ஈவு இரக்கம் காட்ட வேண்டும் ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!" "உலகம் போற்றும் வாழ்வு எட்ட உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் உரிமை உள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நின்று வாழ வேண்டும்!" "ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் ஊரார் எண்ணம் அறிய வேண்டும் ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !" "ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும் அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!" "காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் இரவும் பகலும் உன்னை அடையுமே!" "பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!" "குட்ட குட்ட குனியக் கூடாது குடை பிடித்து வாழக் கூடாது குறை இல்லாத வாழ்வு இல்லை குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!" "பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் பிரகாசித்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!" "ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே ஒன்பது அகவை இன்று உனக்கு ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. அவர் மருமகனுக்கும் பெறாமகனுக்கும் முன்னால வாயில வைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்! சீமான் அண்ணன் பாணியில் இது பனம்பால்!! பனை மூலிகைச்சாறு!! என்று பலவிதமாகச் சொல்லியும் மறுத்துவிட்டார்.
  5. விஷச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் போதெல்லாம் கள் இறக்குவதை அரசு தடை செய்து வைத்திருப்பதற்கு எதிரான குரல்கள் கேட்கும். பின்னர் அவை அமைதியாக அடங்கிவிடும். சமீபத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வந்திருந்த கட்டுரை ஒன்று கீழே உள்ளது. இதை காட்சன் சாமுவேல் அவர்கள் எழுதியிருந்தார். https://www.jeyamohan.in/202235/ ******************************************************** பனை மரம், கள்: ஒரு விண்ணப்பம்: காட்சன் June 29, 2024 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனை மர கள் நிபந்தனையின்றி விற்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சங்க காலம் துவங்கி, தற்போது வரைக்கும் கள் மருந்தாகவும் உணவாகவும் இருப்பதை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பாலசுந்தரம் அவர்கள் ஆஜராகி சமீபத்தில் கள்ள சாராயம் குடித்த பலர் பலியாகியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பனை மர கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையானது அரசின் கொள்கை ரீதியான முடிவுகளுடன் தொடர்புடையது. எனவே இந்த வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இந்த நான்கு வாரங்கள் பனை ஆர்வலர்களுக்கும் பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன். நம்பிக்கையுடன் நமது வாதங்களை முன்வைத்தால், கனிந்துவரும் இக்காலத்தில் மாபெரும் மாறுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. அரசு தனது கொள்கை முடிவினை மாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்களின் கோரிக்கைகள் அரசிடம் மிக வலிமையாக முன்னெப்போதும் இல்லாதவைகையில் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிடத் தகுந்த அசைவை இந்த நான்கு வாரங்களுக்குள் நம்மால் உருவாக்க முடிந்தால், மிகப்பெரும் மாற்றத்திற்கு வித்திடுகிறவர்களாக இருப்போம். ஒரு பண்பாட்டு அசைவை நேரில் காணும் பெறும்பேறு கிட்டும். பனங்கள், மரபு பனை மரக் கள் அல்லது பனங்கள் சங்க காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் களிப்புண்டாக்கும் உற்சாக பானமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், தங்கள் வெளிநாட்டு மதுவை விற்பனை செய்வதன் மூலம் அபரிமிதமாக வரி வசூலிக்க முடியும் என நம்பினர். ஆனால், இவ்வித கடுமையான போதைக்கு பழகாத தமிழக மக்கள் ஆங்கிலேயரின் போதை வஸ்துக்களை விரும்பவில்லை. உற்சாகமளிக்கும் மருந்தான கள் கைவசமிருக்கையில் வெளிநாட்டு மதுவினை எவரும் சீண்டிக்கூட பார்க்கவில்லை. வரி வசூல் பாதிக்கும் என்ற ஒற்றைப் பார்வையில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், பனை மர கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இந்தியா சுதந்திர அடைந்த பின்பு, தமிழகத்தில் கழக ஆட்சியில் மீண்டும் இருமுறை கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இம்முறை கள்ளுக்கடைகளுக்கு, பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்கி கொடுக்கவேண்டும் என்றும், பனையேறிகள் தாமே கள் இறக்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டது. பனையேறிகளிடம் வாங்கும் பதனீரை கள்ளுக்கடையில் வைத்து “கள் உறை” ஊற்றி புளிக்கச் செய்து கள்ளாக்கி விற்பனை செய்யப்பட்டது. இக்கடைகளில் பல்வேறுவிதமான போதை அளிக்கும் தாவரங்கள் மற்றும் மாத்திரைகள் சேர்க்கப்பட்டன என்ற கருத்துக்கள் பரவலாக இருக்கின்றன. இப்படித்தான் கள்ளில் கலப்படம் உருவாகியது. கள்ளுக்கடை என்பதை போதைக்கான ஒரு இடமாக சுவீகரிக்கும் போக்கு தமிழகத்தில் மேலோங்கியிருக்கிறது. அது உண்மைதான். இன்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும், கள்ள சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும் இவ்வித நிலைப்பாட்டில் இருந்து வருகின்ற எண்ணங்களே. அவ்வித எண்ணங்களுக்கு சற்றும் பொருந்தா தொலைவில் இருப்பது பனை மரக் கள். பனை மரக் கள், கடைகளுக்கு வரும்போது அங்கே வருகின்ற “குடிகாரர்களை” திருப்திபடுத்தும் நோக்கில் போதையேற்றம் செய்யப்படுகின்றது. அப்படி போதையேற்றும் சூழலில் பலவித கலப்படங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. கள் விஷமாகிவிடும் நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கள்ளுக்கடைகளிலேயே நடைபெறும். ஆகவே கள்ளுக்கடை என்ற ஒரு பிரம்மாண்ட தேவையற்ற, போலிகளை உருவாக்கும் வாய்ப்புள்ள கள்ளுக்கடைகளை திறப்பதை குறித்த தீங்கினை மக்கள் உணரவேண்டும். கள் இறக்குதல், பருகுதல் பகிர்ந்தளித்தல் – பனையேறியின் சுதந்திரம் . தான் இறக்கும் கள்ளினை தானே அருந்தவும் விற்பனையும் செய்ய இயலாத நாடு என்ன சுத்தந்திர நாடா? கருத்து சுதந்திரம் பேசுகிறவர்கள் உணவு சுதந்திரம் பேச முன்வராதது கொள்கை தடுமாற்றமன்றி வேறென்ன? ஒரு பனையேறிக்கு பனை மரத்தில் கள் கலயம் கட்டவும், அதிலிருந்து தனக்கு உரிய கள்ளை எடுத்துக்கொள்ளவும், எஞ்சியவற்றை விற்பனை செய்யவும் முழு உரிமை உண்டு. பனைமரத்தடி கள் விற்பனை – சரியான எளிய முன்னுதாரணம் பனை மரங்களில் ஏறி கள் இறக்கும் பனை தொழிலாளியே பனை மர கள் விற்பனையை செய்யும் அதிகாரம் பெற்றவர். அவரே அவரது கள்ளிற்கு பொறுப்பு. பனை மரத்தின் கீழ் கிடைக்கும் கள்ளில் வேறு போதை ஏதும் இடவேண்டிய அவசியம் ஒரு பனையேறிக்கு இருக்காது. விருப்பமுள்ளவர்கள் வந்து நேரடியாக வாங்கிச் செல்லுவார்கள். வீட்டில் ஆப்பத்திற்கும், கோழி குழம்பிற்கும் வேறு வகையான உணவுகள் தயாரிப்பதற்கும், சூட்டை தணித்து உடல் குளிர்ச்சிபெறவும், வயிறு மற்றும் தோல் சம்பத்தமான நோய்களுக்கு மருந்தாகவும் மக்கள் இதனை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. கள் – நகர்புற மக்களுக்கு வேண்டாமா? கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்ற நிலை தான் இது. கள் வேண்டுமென்றால் பனை மரம் வேண்டும். பனை ஏறுகிறவர்கள் இருந்தாலே பனை மரக் கள் கிடைக்கும். நகர்புறத்தில் கள்ளுக்கடைகள் திறந்தால் அவை பனை மரக்கள்ளாக இருக்காது. மக்களை ஏமாற்றும் ஒரு போலி கடையாகவே இருக்கும். ஆனால் நகரங்களிலும், புறநகர்பகுதிகளிலும் ஏராளமாக பனை மரங்கள் இருக்கின்றன. கள் விற்பனை செய்ய அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தளர்த்தப்பட்டால், இவ்வித மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்ய முடியும். பனங்கள் – வேலை வாய்ப்பு பெருக்கும் அரசு தன் கள் தடைச் சார்ந்த “கொள்கை முடிவினை” மாற்றினால். தமிழகம் முழுக்கவே சுமார் 10 லெட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக சுயதொழில் செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது 5 கோடி பனை மரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொண்டாலும், நேரடி மற்றும் மறைமுகமாக பல்வேறு வாலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக அதிக பனை மரங்கள் ஏறும்போது, ஓலைகள் மற்றும் பனை நார் பொருட்களாலான தொழில்கள் புத்துயிர் பெறும். நெகிழி பிரச்சனிகளை கட்டுக்குள் கொண்டுவர இது முக்கிய காரணியாக இருக்கும். கள் – கட்டுப்படுத்தப்பட்ட விற்பனை அரசு தற்போது பரிசீலிக்கவேண்டிய காரியங்கள் கள் இறக்க பனையேறுகிண்றவர்கள் அனைவரும் முறையாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். (லைசன்ஸ் எளிமையாக கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்) பனை மரம் ஏறுகிறவர், தான் கள் இறக்கும் பனைமரங்கள் இருக்குமிடங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்ளேயே விற்பனை செய்யவேண்டும். மணி நேர கள் விற்பனை: பனை மரத்திலிருந்து இறக்கிய கள் சுமார் இரண்டு மணிநேரம் மிக நல்ல தரத்தில் இருக்கும். ஆகவே, காலை 6 – 8 மணி வரைக்கும், மாலை 4 – 6 மணி வரைக்கும் என அந்தந்த மாவட்டத்திற்கு என உகந்த நேரங்களை தெரிவு செய்யலாம். 100 நாள் கள் விற்பனை திட்டம்: ஒவ்வொரு மாவட்டமும் அவர்களுக்கு உகந்த 100 நாட்களை கள் விற்பனை நாட்களாக தெரிவு செய்யவேண்டும். இது காவல்துறை, பனையேறிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்குமுள்ள உறவினை சீர்படுத்தும். ஒருவருக்கு 1 லிட்டர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி: பனையேறியிடமிருந்து ஒருவர் ஒரு லிட்டர் கள் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கவேண்டும். பனையேறி அல்லாதோரிடம் ஒரு லிட்டருக்கும் அதிகமான கள் காணப்பட்டால் அவர்களை முறைகேடாக கள் வைத்திருப்பவர்கள் என காவல்துறை கைது செய்யலாம் பனை ஏறுகின்ற ஒவ்வொரு பனையேறியும் அந்தந்த கிராம முன்னேற்றத்திற்கு என்று குறைந்தபட்ச தொகையினை நிர்ணயித்து அதனை முன்பணமாக செலுத்த ஊக்கப்படுத்தலாம் பனையேறி ஒருவர் விற்கும் கள்ளில் ஏதும் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், வாழ்நாளில் அவர் மீண்டும் பனைமரம் ஏறாதபடி தண்டனை வழங்கலாம். (இதைவிட பெரிய தண்டனை ஒரு பனையேறிக்கு கிடையாது) மேலும் சில கருத்துக்கள் அரசு கவனத்திற்கு பனையேறிகள் என்பவர்கள் ஒற்றை ஜாதி கிடையாது. தமிழகம் முழுக்க எந்த ஜாதியைச் சார்ந்தவராகவும் ஒரு பனையேறி இருக்கக்கூடும். பனையேறிகளை கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் உண்டு. உணவை பகிர்ந்தளிக்கும் உழவரைப் போன்று என ஒரு புரிதலுக்காக சொல்லலாம். அதற்கும் ஒரு படி மேல் நின்று பணி செய்கிறவர்கள் இவர்கள். பனையேறிகளை குற்றப்பரம்பரையினர் போன்று கையாளுகின்ற தன்மையினை காவல்துறை உடனடியாக கைவிடவேண்டும். பனையேறிகளுக்கு இழைத்த ஒட்டுமொத்த கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் பரிகாரமாக தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு தன்னை சீர்தூக்கி பார்த்து செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவெளியில் பனையேறிகளிடம் மன்னிப்பு கோருவது நன்று. மக்கள் கவனிக்க கள் எனபதை உணவு, மருந்து மற்றும் நம் உரிமை என பாருங்கள். பனையேறிகளை தேடிச்சென்று சந்தியுங்கள். அவர்களிடம் நேரடியாக எதையும் வாங்குங்கள். பனையேறிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருங்கள். பனையேறிகளின் பிரச்சனையில் ஓங்கி குரல் கொடுங்கள். இன்னும் நான்கு வாரத்தில் தமிழக மக்களின் தீர்ப்பே சிறந்த தீர்ப்பாக ஐக்கோர்ட்டு சொல்ல வாய்ப்பிருக்கிறது. பனையேறிகளின் கவனத்திற்கு உங்கள் தொழில் உயர்வானது. நீங்கள் உயர்வானவர்கள். நீங்கள் உங்களை எவருக்காகவும் கீழிறக்கிக்கொள்ளாதீர்கள். கட்சிகளை கடந்து ஜாதிகளைக் கடந்து பனை சார்ந்த உறவுகளை கட்டியணைத்து அலையென புறப்படுங்கள். கள் நமது உணவு – கள் என்பது தமிழர் உணர்வு கள் நமது உரிமை கள் உண்பேன் என்பது உரிமைக் குரல் கள் விற்பேன் என்பது விடுதலை பயணம் அனைத்து நலங்”கள்” பெற்றிட இதனை தவறாது பகிருங்கள் பனை திருப்பணி. காட்சன் சாமுவேல் 9080250653
  6. பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன்.............. இதை வாசித்து நான் சிரி சிரி ....என்று சிரிக்க வீட்டுக் காரன் கேட்க்கிறார் என்னப்பா கனவு கண்டு சிரிக்கிறாயா என ? கண்ணூறுபடப்போகுது...கொஞ்ச நாளாக இந்த பென்சனியர்களின் சேட்டை சொல்லி வேலையில்லை ...யாழ்கள ஜாம்பவான்களின் பகிடிகளில், இருக்கு மட்டும் சிரித்து சந்தோஷமாயிருப்போம். ( யாரும் யாரையும் கோவிக்காமல் பகிடியாய் எடுத்து நடபு பாராட்டுவது யாழ்களம் தந்த சிறப்பு )
  7. எனக்கு கைத்தொலைபேசியை கையுடன் கொண்டு திரிவது அல்லது இருப்பில் செருகிக்கொண்டு திரிவதெல்லாம் விருப்பமில்லை. தேவையான போது பாவிக்க வேண்டும் அதுதான் என் கொள்கை. ஆனாலும் அவசர நேரங்களில் கையுடன் கொண்டு திரிவதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன். சரி...விசயத்துக்கு வருவம். பலகாரம் எல்லாம் சாப்பிட்டு முடித்தவுடனும் நான் ரெலிபோனை பார்க்கவேயில்லை. நினையா பிரகாரமாக மண்டப சுற்றாடலை நிமிர்ந்து பார்த்த போது நான் சந்திக்கவிருந்த இருவரும் மண்டபத்திற்குள்ளேயே வந்து நின்றார்கள்!!!!!. எனது மனதில் இவர்கள் வந்ததும் ரெலிபோன் அடிப்பார்கள். காருக்குள்ளேயே இருப்பார்கள் கண்டுபிடிக்க கார் நம்பரை சொல்வார்கள் என நினைத்திருந்தேன்.காரணம் என்னை அவர்களுக்கு தெரியாது அல்லவா?மண்டபத்துக்குள் எப்படி என்னை அடையாளம் காண்பார்கள் என்ற நினைப்பில் இருந்தேன். ஆனால் இருவரின் படங்களையும் ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து படங்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களை சந்தித்த தருணத்தில் என் தொலைபேசியை பார்த்த பின்னர் தான் தெரிந்தது சிறித்தம்பியர் என்னுடன் தொடர்புகொள்ள இரு தடைவைகள் எனக்கு ரெலிபோன் எடுத்துள்ளார் என தெரிய வந்திருந்தது. இவ்வளவு சொல்லியும்,அவதானமாக இருந்தும் அழைப்பை தவற விட்டது அந்த நேரத்திலும் சிறு மன இறுக்கத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் பாஞ்ச் ஐயாவும் சிறித்தம்பியும் மண்டபத்திற்கு வந்ததில் எனக்கு அதிரடி மகிழ்சியாக இருந்தது. உடனே எழும்பி ஓடிப்போய் இருவரையும் வணக்கம் வாங்கோ என வரவேற்று கைகுலாவி மேசை கதிரைகளை காட்டி அமர வைத்தேன்.பாஞ்ச் ஐயா எதையுமே கேட்டுக்கொள்ளாமல் நாங்கள் குமாரசாமி என்பவரை தேடி வந்திருக்கின்றோம் என என்னிடமே கேட்டார்.சிறித்தம்பியர் என்னை யாரென்று ஊகித்தாரா என தெரியவில்லை. ஆனாலும் இருவரும் எனக்கு முன்னாலேயே என்னை தேடுகின்றார்கள் என அவர்கள் கண்களிலையே தெரிந்து கொண்டேன். நானோ நான் தான் யாழ்கள குமாரசாமி என பாஞ்ச் ஐயாவிடம் சொல்லி விட்டு சிறித்தம்பியிடம் என் குரல் உங்களுக்கு தெரிந்திருக்கும்...கண்டுபிசிருப்பியள் என தொடர அவர்கள் சுதாகரித்து விட்டார்கள் என தெரிந்தது. என்றாலும் பாஞ்ச் ஐயாவின் கண்களில் பல்லாயிரம் கேள்விக்குறிகள் ஓடியதை கவனிக்க முடிந்தது.சிறித்தம்பியர் என் குரல் மூலம் என்னை யாழ்கள குமாரசாமிதான் என உறுதிப்படுத்தி விட்டாரார் என நினைக்கிறேன். நீங்கள் ரெலிபோன் அடிச்சனீங்களோ என நான் சிறித்தம்பியரை கேட்டபடி தொலைபேசியை நோண்டிய போது சிறித்தம்பியர் இரண்டு தரம் என்னை தேடி ரெலிபோன் அடித்திருந்து பதிலளிக்காமல் விட்டதிற்கு என்னை நானே நொந்து கொண்டிருந்த தருணம்...... பாஞ்ச் ஐயா நான் யாழ்கள் குமாரசாமி எண்டால் உப்புடி இருப்பியள் எண்டு எதிர்பார்க்கேல்லை.....தலை முழுக்க மயிர் எண்டு தொடர்ந்தார்....இளமை..... நான் இப்ப என்ன நினைக்கிறன் எண்டால் யாழ்கள குமாரசாமி எண்டால் ஓமக்குச்சி நாராயணன் கொம்பனி வெவல்லை கற்பனை பண்ணி வைச்சிருக்கிறார் எண்டு....🤣
  8. செல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன். சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு. புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர். செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.
  9. 🤣............ கவிஞரே, நீங்கள் எங்கே சுற்றினாலும் எங்கே வருகிறீர்கள் என்று தெரிகின்றது............😜. என்றாவது நீங்கள் என் வீட்டிற்கு வந்தால், அன்று என் வீட்டில் உங்களுக்கு இப்படி ஒரு பதில் கிடைத்தால்.......... தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடித் தப்பி விடுங்கள்...............🤣.
  10. எண்பதுகளின் ஆரம்பம். யேர்மனியில் அகதி முகாமில் இருந்த நேரம். மூன்று நேரமும் நல்ல ஆரோக்கிய உணவு தருவார்கள். ஆனால் சாப்பிட மனம் வருவதில்லை. ஊரில் உறைப்பு, உப்பு, புளி, தாளிப்புகளுடன் சாப்பிட்ட ருசி தேடி நாக்கு அடம்பிடிக்கும். தங்குமிடத்தில் சமைக்க அனுமதி இல்லை. ஆனாலும் 10 மார்க் கொடுத்து ஒரு மின்சார அடுப்பு வாங்கியிருந்தோம். அதை யார் கண்ணிலும் படாமல் கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருப்போம். எங்கள் முகாமுக்கு அருகே ‘பெனி’ மார்க்கெற் இருந்தது. அங்கே கோழியின் முதுகுப் பகுதியை 99 பெனிக்குகளுக்கு வாங்கிக் கொள்வோம். அதை வாங்குவதற்குக் கூட ‘சிண்டிகேட்’ தான். அப்பொழுது மாதாந்தம் கைச்செலவுக்கென கிடைத்தது 60 மார்க்குகள் மட்டுமே என்பதனால்தான் இந்தச் சிக்கனம். கோழியின் முதுகுப் பகுதியை விறாண்டினால்தான் ஏதோ கொஞ்சத் துகள்கள் போல் இறைச்சி கிடைக்கும். ஆனலும் சாப்பிட்டோம். அப்பொழுது என்னுடன் இருந்த சந்திரன், “எப்பதான் காப்புக் கையால் சமைச்ச சாப்பாட்டை சாப்பிடப் போறனோ?” என்று சொல்வான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைப் பார்க்கப் போயிருந்தேன். அவனது மனைவி “இருங்கோ வருவார்” என்று சொன்னார். கிச்சினை விட்டு வெளியே வந்த சந்திரன், “இரு மச்சான். கறி அடுப்பிலை. இறக்கிப் போட்டு வாறன்” என்று சொன்னான்
  11. Published By: DIGITAL DESK 7 17 JUL, 2024 | 12:08 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடா, ஹார்ட் ரொக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொலம்பியாவை மேலதிக நேர கோலின் உதவியுடன் 1 - 0 என வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியின் மேலதிக நேரத்தின் 112 ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸ் போட்ட கோலே ஆர்ஜன்டீனாவை சம்பயினாக்கியது. விளையாட்டரங்குக்கு வெளியே இரசிகர்கள் குழப்பங்கள் விளைவித்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதித்தே இறுதிப் போட்டி ஆரம்பமானது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் கடும் உபாதைக்குள்ளான அணித் தலைவர் லியோனல் மெஸி, களம் விட்டு வெளியேறினார். கடும் உபாதையினால் பலநிமிடங்கள் தரையில் வீழ்ந்திருந்த நிலையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் அவர் வெளியேற, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். வீரர்கள் ஆசனத்தில் முகத்தை மறைத்தவாறு அவர் வேதனையுடன் அழுதுகொண்டிருந்தார். போட்டி தொடர்ந்து நடைபெற்றதுடன் ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மேலதிக நேரம் வழங்கப்பட்டது மேலதிக நேரத்தின் 112ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸ் அலாதியான கோல் போட்டு ஆர்ஜன்டீனாவை வெற்றிபெறச் செய்தார். அப் போட்டியுடன் 36 வயதான ஆர்ஜன்டீன வீரர் ஏஞ்சல் டி மரியா சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து விடைபெற்றார். இது இவ்வாறிருக்க, செப்டெம்பர் மாதம் மீண்டும் தொடரவுள்ள தென் அமெரிக்க வலயத்திற்கான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் மெஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா விளையாடவுள்ளது. https://www.virakesari.lk/article/188654
  12. நினைச்சது சரிதான். சமையல் ஐயாதான் என்பது மேலும் உறுதியாயிற்று. பூவரசும் தேக்கு மாதிரி உறுதியானதுதான். தளபாடம் செய்யப் பயன்படுத்துவார்கள். அடுத்தமுறை ஊருக்குப் போய் பூவரசம் வேரில் செய்த இடியப்ப உரல் வாங்கி வந்து இடியப்பம் அவிச்சு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். ஒன்றும் அவசரம் இல்லை.
  13. ஒன்று போனால் இன்னொன்று! பழையதை மறந்து புதியதுடன் சந்தோஷமாக இருப்பார்கள்! இதையே மனிதர்களுக்கும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்!
  14. எங்கள் வீட்டிலும் சுற்றிவர பூவரசு முருங்கை கிளுவை கிளிசறியா இப்படி பல மரங்கள் வீட்டு எல்லையாக இருந்தது. ஆடு மாடுகளுக்கு குழை.பாடசாலை போகும் போது சாப்பாடு கட்ட பெரிய மூன்று இலை காணும். அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான். அத்தோடு இடியப்ப உரல் செய்யவென்று பெரிய கொழுத்த பூவரசுகளை விட்டி எடுப்பார்கள். இப்ப என்ன கொடுமை என்றால் வீட்டுக்கு வீடு மதில்களைக் கட்டி அழகு பார்க்கிறார்கள். இந்தப் பாட்டு வரமுதலே பூவரசு எம்முடன் வாழத் தொடங்கிவிட்டது. இல்லை இல்லை பூவரசுடன் நாம் வாழத் தொடங்கிவிட்டோம். இதில் இடியப்பம் அவித்தால் நன்றாக உலர வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் வெகுவிரைவிலேயே சக்குப் பிடித்துவிடும். எங்க வீட்டில் அவசரஅவசரமாக எங்கோ புறப்பட்ட போது இப்படி நடந்து அத்தனையும் எறிந்தது.
  15. இது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு பிரம்மச்சாரியாக வேலை செய்யும் பொழுது, ஆனால் இன்று எல்லாம் கனவே !!
  16. "மதமென்னும் போதை!!" "மதமென்னும் போதை தலைக்கு ஏற மதிகெட்டு நிலை மாறிய போர்த்துக்கேயர் மக்களை கூட்டி பதவிகள் கொடுத்து மரணத்தை காட்டி ஆசைகள் சொல்லி மதம் மாற்றிய யாழ்ப்பாண வரலாறு மனிதா நான் உனக்கு சொல்லவா ?" "எம் மதமும் சம்மதம் என்றாய் எல்லா ஊரும் எம் ஊரென்றாய் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எம் பண்பாட்டை ஏன்தான் விற்றாய் எருமைமாடாய் குளிர்காய சோம்பேறி பிடித்ததோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. முன்னர் பதவிகள் ஆசைகளைத் தூண்டி மாற்றினார்கள். இப்போது வலு நுட்பமாக ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்து அமுக்குகிறார்கள். இதில் பல ஏழைக் குடும்பங்கள் அகப்பட்டுப் போயுள்ளனர்.
  18. இவரை வைத்து கள அலுவல்களும் பார்க்கலாம். நாய்கள் வளர்ப்பது எஜமான்களின் பாதுகாப்புக்கே.
  19. அப்ப மறுபடியும் விசாரித்து உறுதிப்படுத்துகிறேன் அண்ணை! போனமாதம் கனடிய உறவினர்கள் சிலருக்கு வாங்கிக்கொடுத்தது.
  20. 🤣......... கனம் கோர்ட்டார் அவர்களே, ஒரு 'யூ' கதைக்குள் 'ஏ' விசயத்தை அல்வாயன் அவர்கள் புகுத்துகின்றார்............😃. வெங்காயம், முருங்கைக்காய், மட்டி, ................... இப்படி ஒரு வரிசையே இருக்குது போல......😜.
  21. அவர் ஏதோ ஒரு கிறக்கத்தில் எழுதியிருக்கின்றார் 😃
  22. அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அத்தோடு விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிக்கின்ற விடயம் இதனூடாக வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://tamilwin.com/article/alle-sayers-join-virgin-australia-s-airline-1721279120
  23. இதென்ன பிரமாதம்....இன்னும் திரில்லிங் இருக்கெண்டால் வந்த ஆக்கள் எப்பிடியான ஆக்களாயிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோவன்....🤣 என்ன ஒரு 70-80 கணிச்சிருப்பியளோ? 😎
  24. இங்க கள்ளிறக்க தடை இல்லை தானே அண்ணை?! பனை மரங்களைத் தான் களவாக வெட்டுகிறார்கள். பகிர்வுகளுக்கு நன்றி அண்ணை.
  25. ரசோதரா...சிவத்த வெங்காயம்..குறுக்கென்ன ..நெடுக்கென்ன..வட்டமென்ன எங்கேயும் ..எப்படியும் வ்வேலைசெய்யும்...சமையலில் மட்டுமில்லை...அறையிலும் வேலைசெய்யும்...🙃
  26. உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  27. அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார். இதில் தவறு ஏது? தம்மை அதி தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும், சுய லாபங்களையும் கவனத்தில் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் போல் உள்ளதே. டக்லஸ் ஆதரவு இவருக்கு உள்ளது என்றால் பிறகு ஏன் சாகவச்சேரியில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக உதவி கேட்கின்றார். தனக்கு யாராவது உதவி செய்யக்கூடிய வழக்கறிஞர் தேவை என ஏன் அறிவித்தார்? இவருக்கு ஏன் வழக்கறிஞர் கிடைக்கவில்லை? எமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வந்ததுதான் இவர் செய்த தவறா? நீங்கள் சொல்வதுபோல் வாயை மூடிக்கொண்டு தனது பதவியை தக்கவைக்க தவறிவிட்டார்.
  28. தில்லை ஐயா, உங்கள் பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  29. உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  30. அண்மையில் தமிழகத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட பகுஜன் சமசமாஜக் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ரோங்கின் கொலையின் பின்னணியில் திருமாவளவனின் கையிருப்பதாகவும் கதை அடிபடுகிறது.
  31. இலங்கையில் சண்டாளர் என்று ஒரு சாதிப் பிரிவினர் இல்லை என நினைக்கிறேன். சண்டாளர், சண்டாளப் பாவி என்று வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். இங்கே பிரச்சனைக்குள்ளான பாடலிலும் சண்டாளன் என்பது சாதி அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குரியது.
  32. உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  33. 🤣......... என்ன பையன் சார்........ இவர் கடைசியில் நியூயோர்க் பிட்ச் மாதிரி ஆகிவிட்டாரா..... தூக்கிப் போட்டிட்டு அடுத்ததிற்கு காத்திருப்போம்........
  34. https://www.facebook.com/share/v/XBTnNHvaTg7sn42M/
  35. அப்பன் நீங்களோ நானோ அரசியல்வாதிகளை சாடுவோம்.குற்றம் சாட்டுவோம்.உலக அரசியல்வாதிகளின் கொள்கைகளை கூட விமர்சிப்போம். அது எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி.... ஆனால் நாம் விமர்சிக்கும் அரசியல் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்பதிற்கு பதிலாக எம்மை/தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பவர்கள் தான் அதிகம்..
  36. ஏற்கனவே தின்று கொழுத்த பன்றிகள் நடுவே தனியாக ஒரு பசு சமாளிப்பது கஷ்டம். பண பலமும் பதவி பலமும் அதிகம்.
  37. என்னை விழா,மண்டப வரவேற்பாளர் என நினைத்திருப்பார்களோ? 😀
  38. டாக்குத்தர் அர்ச்சுனா தான் பாக்க வந்த வேலையை சிவனே எண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம். கனக்க கதைக்க வெளிக்கிட்டு இப்ப டக்ளஸ் தேவானந்த அரசியலில் வந்து நிக்கிறார்.
  39. இந்த றம்போ அல்லது பைடனோ தமிழினத்தை ஒரு கருத்தாக எடுத்ததாகவே தெரியவில்லை. இருவரும் ஆட்சியில் இருந்தவரும் இருப்பவருமாக உள்ளனர். அவர்களுக்கு தத்தமது கவலை. அமெரிக்காவில் தீர்மானங்களை அரசுத்தலைவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் வெறும் அம்புகள். கொள்கைவகுப்பாளர்களால் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் வில்லிலே வென்றுவருபரை ஏற்றிவிடுவர். பாவம் தமிழினம் யே.ஆர் காலம்முதல் இன்றைய ரணில் காலம்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிச் சிங்கள அரசுகளுக்கு முட்டுக்கொடுத்துவருகிறது என்பதை உற்றுநோக்கினால் இவர்களுக்காகவா என்று தோன்றும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  40. இங்கு மட்டுமா யாழ் ஆஸ்பத்திரியை சுற்றி உள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்கள் யார் சிங்களவனா ? எல்லாம் இங்கு உழைத்தது காணாது என்று அங்கு போய் கொட்டமடிக்கும் தமிழ் பண பேய்கள் . சாவகசேரியில் வெடித்த வெடி அங்குள்ள தனியார் மருத்துவ மனை பங்குதாரர்களை அடையாளம் காட்டி உள்ளது .
  41. நில நடுக்கம் இலங்கைக்கு வராது என்றார்களே ஏதோ தில்லு முள்ளு செய்கிறார்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் இருக்க ஏதோ பன்றான்கள்.இந்த இனவாத சிங்கள பிச்சை கார கூட்டம் இரண்டு முறை பொய்யான ரத்தின கல்லை காட்டி விட்டார்கள் உலகிற்கு.
  42. சுலபமாய் செய்யுங்கள் சூப்பர் பிரியாணி போல ஒரு பிரியாணி ......! 👍
  43. 🛑1.சாவகச்சேரி ஆசுப்பத்திரியில் 400 மில்லியன் ரூபாவில் கட்டின building project இல் ஊழல் நடந்திருக்குமா? இல்லையா? நடந்திருக்கும்! நடந்திருக்கு எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑2.சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பிணத்தை வைச்சு JMOs காசு கறந்திருக்கிறாங்களா? இல்லையா? கறந்திருப்பாங்கள்! காசு கறந்தவங்கள் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑3.பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதா? இல்லையா? செய்யப்பட்டது! விற்கப்பட்டது , அதுக்கும் கேதீஸ்வரனுக்கும் சம்பந்தம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑4.அரச வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒரு சில வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருந்துகொண்டு, வராத நாளுக்கும் சம்பளம் எடுத்துக்கொண்டு அதே நாளில் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினமா? இல்லையா? செய்யினம்! 8மணித்தியாலம் ஒரு சில வைத்தியர்கள் வேலை செய்வதில்லை. களவா போய் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑5.ஒரு சில வைத்தியர்களுக்கும் pharmacy கடைகளுக்கும் தொடர்பு இருக்கு.சட்டவிரோதமாக Commission வாங்குகினமா? இல்லையா? வாங்குகினம்! வாங்குகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑6.ஒரு சில அரசியல்வாதிகள் பிழையாக நடக்கும் அரச வைத்தியர்களை தங்கள் அரசியல் செல்வாக்கால் காப்பாத்துகிறார்களா? இல்லையா? காப்பாத்துகினம்! ஒரு சில அரசியல்வாதிகள் தவறுசெய்த டாகுத்தர்மாரிடம் லஞ்சம் பெறுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑7.அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அபிவிருத்தி நிதியை ஒழுங்கா கையாளத்தெரியாமல் பல மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப்படுகிறதா? இல்லையா? அனுப்பப்படுகிறது! ஒழுங்கான திட்டமிடலும் project management உம் இல்லை எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑8.medical marfia வடக்கில் தலைவிரித்தாடுகிறதா? இல்லையா? ஆடுது! Medical Marfia வை ஒழிக்கவேணும் எண்டால் முதல்ல அடிப்படையில் ஆசுப்பத்திரியில் இருந்து ஆரம்பிப்பம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑9.நோயாளர்களை தகாத வார்த்தைகளால் சில வைத்தியர்கள் ஏசுகிறார்களா? இல்லையா? ஏசுகினம்! முறைப்பாடு செய்தால் courts case எண்டு அலையவேண்டி வரும் என சனத்தை ஒரு சில வைத்தியர்கள் வெருட்டுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑10. கடைசியா ஒரு கேள்வி... டாக்குத்தர் சத்தியமூர்த்தி, டாக்குத்தர் கேதீஸ்வரன், சாவகச்சேரி மரண விசாரணை வைத்திய அதிகாரி,Jaffna JMO சேர் பிரணவன் உட்பட இன்னும் சில ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிப்பாட்டி நீதியான விசாரணை செய்யோணுமா? இல்லையா? செய்யோணும்! நீதியான விசாரணைக்குழு ஒண்டு அமைச்சு எல்லா ஊழல்களும் விசாரணை செய்யவேணும் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை ஊழல்களை பாத்துக்கொண்டிருக்கிற நாங்கள் லூசா? #தமிழ்ப்பொடியன்#
  44. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு வித்தியாசத்தை இப்படிச் சொல்வார்கள்: தன்னை இப்படி கவனித்துக் கொள்ளும் இந்த வீட்டு மனிதர்கள் கடவுள்கள் என்று நினைக்குமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய். இந்த வீட்டு மனிதர்கள் தன்னை இப்படிக் கவனித்துக் கொள்வதால் தான் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொள்ளுமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் பூனை......🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.