Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2951
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/28/24 in Posts

  1. அண்ணன்மார் இருவருக்கும் நான் அன்புடன் எழுதுவது, கூப்பிடப்பட வேண்டிய ஆட்களின் பெயர்கள் உங்களிடம் இருந்தால், அதை எங்களுடன் பகிரவும். நாங்கள் உடனேயே 'பகிரங்க அநாமேதயக் கடிதம்' ஒன்றை ஒரு ஊடகத்தில் எழுதி, ஆக வேண்டிய காரியங்களை முன்னெடுக்கின்றோம்..............🤣. பிற்குறிப்பு: இதனால் எங்களுடன் யாராவது பிரச்சனைக்கு வந்தால், 'அண்ணன்மார் இரண்டு பேர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள், இது அவர்கள் கொடுத்த பெயர்கள், உங்களால் முடிந்தால் அவர்களைத் தொட்டுப் பார்.................' என்று உடனேயே உங்கள் பக்கம் கையையும் காட்டிவிடுவோம்.............😜.
  2. அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
  3. எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!
  4. மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி பிரேசிலில் உள்ள சீப்ரா நகரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மதுபான விடுதியில், இரு ஆண்களுக்கிடையே ஒரு பயங்கரமான மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் பணம். திருப்பித் தருகிறேன் என்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால்தான் அந்தச் சண்டையே தொடங்கியது. கடனாகக் பரிமாறப்பட்ட தொகை ஒன்றும் லட்சக்கணக்கானவை இல்லை. வெறும் 25 யூரோக்கள்தான். கிவால்டோ, ரைமுண்டோக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் ரைமுண்டோ துப்பாக்கியை எடுத்து சுடும் அளவுக்குப் போய் விட்டது. கிவால்டோ இறந்து போனான். சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸ் வருவதற்கு முன் ரைமுண்டோ தப்பி ஓடி விட்டான். கொலையாளி ரைமுண்டோ இல்லாமல் நீண்ட வருடங்களாக நடந்த வழக்கு 2013இல் முடிவுக்கு வந்தது. ரைமுண்டோவுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. தண்டனை அனுபவிக்க மட்டும் ரைமுண்டோ இல்லை. அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. அவன் இருக்கிறானா? இறந்து விட்டானா? என்ற செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. கிவால்டோ இறக்கும் பொழுது அவனின் மகளான கிஸ்லேனுவுக்கு ஒன்பது வயது. தந்தையின் மரணம் அதுவும் அவர் கொலை செய்யப்பட்டது கிஸ்லேனாவை பெரிதும் பாதித்திருந்தது. தனது தந்தையின் மரணம், தந்தையைக் கொன்றவன் தண்டனையில் இருந்து தப்பியது, அவன் சுதந்திரமாக வாழ்வது எல்லாமே அவளது மனதை எப்பொழுதும் உறுத்திக் கொண்டேயிருந்தன. அந்த உறுத்தல்களுக்கு மத்தியிலும் கிஸ்லேனா படித்து 2014இல் சட்டத்தரணியானாள். சட்டத்தரணியாக இருந்தாலும் ரைமுண்டோவை எப்படியாவது கண்டு பிடித்து, அவனுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது. பொலிஸ்துறையில் சேர்ந்து விட்டால் ஒருவேளை அது சாத்தியமாகலாம் என்று எண்ணியவள் அங்கே இணைந்து கொண்டாள். பயிற்சிகள் எல்லாம் முடித்து 2022இல் பொலிஸ் குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றத் தொடங்கினாள். தந்தையின் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தேடி எடுத்துக் கொண்டாள். ரைமுண்டோ பற்றிய தேடலை ஆரம்பித்தாள். அவள் குற்றப் புலனாய்வாளராக இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ரைமுண்டோ பற்றிய பல தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. கடந்த புதன் கிழமை (25.09.2024) ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ரைமுண்டோவை(60), கிஸ்லெய்ன் கைது செய்தாள். அவளது தந்தை கொலை செய்யப்பட்டபோது அவரின் வயது 36. தனது தந்தையைக் கொன்றவனை கைது செய்யும் கிஸ்லெய்னுக்கு தற்போது வயது 36. "இன்று எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உள்ள உணர்வு என்னவென்றால்,ஒரு குற்றவாளிக்கான நீதி வழங்கப்பட்டுள்ளது, இறுதியாக நாங்கள் எங்கள் அமைதியை ப் பெற்றிருக்கின்றோம்" என கிஸ்லெய்ன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறாள். இனி அவளுக்கான உறுத்தல் இல்லாமல் போகும். ஆனாலும் அவளின் தந்தையின் இழப்பு அவளிடம் இருந்து கொண்டே இருக்கும். https://www.facebook.com/reel/382733548229265
  5. 🤣................ அமெரிக்கா வங்குரோத்து அடிக்கக் கூடாது என்று தான் உலகம் முழுக்க அங்கங்கே இப்படி ஆள் வைத்து அடித்துக் கொண்டு திரிகிறது போல. எத்தனை கையாட்கள்............. நிலைமை கை மீறினால், இரகசியமாக அச்சடிக்க வேண்டியது தான்......... அதை வாங்கிப் பதுக்கத் தான் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்........ அந்த ஆள் சண்டையில் சாகாது, நஞ்சூட்டிச் சாகாது.......... இது தெரிந்து தான் சாகப் போகுது...........🤣.
  6. அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
  7. கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.
  8. நியாயம்... அவர், பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி, உங்கள் கதை இருக்கு.
  9. புதிதாக பதவியேற்ற அநுர என்பவர் தற்போது வீசும் அநுர அலையை தக்க வைக்கவேண்டுமென்றால், திடீரென தமிழ் மக்களிடம் அவர் பக்கம் வீச தொடங்கிய நன்மதிப்பை தக்க வைக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் தமிழர் சார்பில் பாராளுமன்றத்திலும், அரசிலும் அங்கம் வகித்த எவரையும் தனது அரசவையிலோ மக்கள் நிர்வாக சேவைகளிலோ சேர்த்து கொள்ளவே கூடாது. அதுவே தமிழர்கள் இவர்மேல் தாமாக கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.
  10. தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  11. 28 SEP, 2024 | 11:22 AM வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு சென்று மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/194971
  12. பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின் இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது. இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.
  13. ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஒருவர் புதிதாக ஆட்சியேற்று மூன்று மாதங்கள் பின்னரே ...... அந்த ஆட்சி பற்றி கருத்து கூறமுடியும். ஆளும் புதிசு கட்சியும் புதிது ஆட்சியும் புதிசு
  14. இதுவொரு புதிய ஆரம்பம் என நினக்கின்றேன். ஆளும் புதிசு ஆட்டமும் புதிசாய் இருக்கக்கூடும்.😁 இரு பெரும் கட்சிகளின் ஏமாற்று வேலைகளை பார்த்து அழிந்து விட்டோம். இலங்கை அரசியலில் புதிய முகம். என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம். எதுவும் கெட்டு விடாது. அடுத்த நான்கு வருடங்கள் காத்திருப்போம்.
  15. தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣. ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........
  16. நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கும்
  17. Hon. M. A. Sumanthiran, M.P. Party Illankai Tamil Arasu Kadchi (ITAK) Electoral District / National List Jaffna Date of Birth : 09-02-1964 Civil Status : Married Religion : Christianity Profession / Occupation : Attorney-at-Law Contact Details On Non-Sitting Days 0112559352 On Sitting Days 0112366314 sumanthiran_m@parliament.lk Political Career Academic Qualifications B Sc (Physics), LLM (Internet and Electronic Law); O./L A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣 👍
  18. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (28) ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா (S.Srisatkunarajah) தலைமையில் இன்று (29) நடைபெற்றது. பேராசிரியராக பதவி உயர்வு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் (UGC) சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் ஆகியாரின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், வணிகவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் இலத்திரனியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/2-lecturers-promoted-as-professors-in-jaffna-uni-1727520875#google_vignette
  19. களுத்தரா...., மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
  20. Sweet Sixteen ஐ அந்தக் காலத்திலேயே கொண்டாடி இருக்கிறார்களோ?
  21. ஒன்று செல்லவண்டி. மற்றது செல்லக்குட்டி வண்டியினுள்.
  22. அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
  23. சாத்தான்... வேதம் ஓதுகின்றது. எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன்.
  24. சரியாக சொன்னீர்கள் விசுகு. மாற்றத்தை... நாம் செய்யாமல், மற்றவனிடம் அதை எதிர்பார்ப்பது நிலைமையை இன்னும் சிக்கல் ஆக்கும். இளையவர்கள் வழி விட வேண்டும் என்று சுமந்திரன் வாயை குடுத்த மாதிரி... செயலில் காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால்... வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அது தான்...மனிதனுக்கு அழகு. அதை விட்டுட்டு நெடுகவும் சுத்துமாத்து கதைகள் கதைத்துக் கொண்டு இருந்தால்... இவர்கள் கிழித்தது காணும் என்று, சனம்... சிங்கள கட்சிக்கு வாக்குப் போட்டு விட்டு, தங்களுடைய அலுவலை பார்க்கப் போய் விடுவார்கள். அந்த மாற்றம் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாகவே நான் கருதுகின்றேன்.
  25. அதெப்படி ?? அப்படியானால் அவர் இங்கே சொல்வது ஊருக்கு உபதேசமா??? மாற்றம் எதுவாயினும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
  26. கண் - பார்க்க , காது - கேட்க , மூக்கு - நுகர , வாய் - பேச , உடல் - ஒரு மனிதனின் முழுப்பாகமும் , அதில் அந்த நாலும் உண்டு, ஆனால் அவற்றை விட மேலும் பல உண்டு . உதாரணமாக உடல் இல்லையேல் உயிர் இல்லை, ஆனால் அந்த நாலும் அப்படி அல்ல, உதாரணமாக கண் இல்லை என்றால் குருடு மட்டுமே . அது தான் வித்தியாசம்
  27. "சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி
  28. நான் 16 தாண்டி 17 போறேன் .......... மிக ஜாலியான ஒரு பாடல் . ........நாகேஷ் & மனோரமா ..........! 😍
  29. சொல்லலாம் பிரச்சனை என்ன என்றால் அங்கையுள்ள ஒருவர் தன்னை. கவனிக்க வேண்டும் என்பார் 😂😂. எனவே பேசாமல் இருப்பம். அனுரவின். அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன் 🙏
  30. சுமந்திரன்.... இதனை "இதய சுத்தியுடன்" சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன் வெளியேறி போட்டியிடாமல் விட்டால், மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள். அவர் கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... இவரின் நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  31. வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁 இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?.. ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.
  32. இவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறார். இவர் பதவியை விட்டுபோகும்போதும் இப்படியே இருக்குமா? இவரது வீடு, கிராமம், உறவுகள் ஜனாதிபதியென்கிற களையோ, மக்கள் பட்டாளமோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கிறது. உறவுகளும் ரொம்ப எளிமையாக தெரிகிறார்கள். பதவி, இவர்களையும் வாழ்க்கைச்சூழலையும் சுற்றுப்புறத்தையும் மாற்றுமா? பொறுத்திருந்து பாப்போம். அனுர, அதிக அவசரம் காட்டுவதுபோல் தெரிகிறது. ஒன்று இந்த அவசரம் ஊழல்வாதிகளை துரத்தியடிக்கும் அல்லது இவரை அரசியலில் இருந்து துரத்தியடிக்கும்.
  33. இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி.... சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅
  34. இங்கும் இதே நிலை தான்.சிலர் விழுந்து , விழுந்து சாமி கும்பிடுவார்கள் ஆனால் விரத நாள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். ஒரே மச்ச சாப்பாடாக இருக்கும்.நமக்கு அதைப் பார்க்கும் போது அருவருக்கும்..ஆனாலும் எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சூழ் நிலை கைதிகள் தான்.
  35. தமிழரசுக் கட்சியில் யார்யார் கேட்க வேண்டும் என்று சீட்டுக் கொடுக்கும் நிலையில் சுமந்திரன் இருக்கும்போது சுமந்திரனுக்கே சீட்டுக் கொடுக்க வேண்டாமென்கிறார்களே? இது திருப்பதிக்கே லட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கே.
  36. நான் சிறுவனாக இருந்த போது பல நாட்கள் வீட்டாருடன் சேர்ந்து விரதங்கள் இருந்திருக்கிறேன். இப்போது விரதமே இருப்பதில்லை. அதன் முக்கியத்துவம் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. நன்றி தில்லை.
  37. பொதுத்தேர்தலை இந்த வருடத்தினுள் வைக்க துணிந்த படியால் இவருக்கு பணம் எங்கே இருந்து வருகின்றது என்ற கேள்வி எழுகின்றது ...சிங்கள் டயஸ்போராக்கள் கொடுப்பினமோ 😆
  38. உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்). என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.
  39. நீரின்றி அமையாது உலகு . ......! 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.