Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்16Points3054Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87988Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20012Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19122Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/06/25 in Posts
-
இன்னொரு சக்கரவர்த்தி
6 pointsஇன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.6 points
-
காற்றாடி
4 pointsகாற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)4 points
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து வாழமுடியாமல் இந்தியாவுக்கு சென்று அகதி தஞ்சம் கேட்ட தமிழரை எப்படி இந்திய நடுவண் அரசு நடாத்தியது ?3 points
-
"கரை கடந்த புயல்"
2 points"கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி] திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர். இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்கிழமை மாலை வரை, நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்ளனர். இது தவிர 9 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 8 வீடுகள் முழுமையாகவும், 620 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திருகோணமலையில் 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்வதால் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றராகக் காணப்படும் எனவும் ஆழ்கடல் பகுதிகளில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்தது. செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால் கவிழ்வதைக் கண்டனர். "கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு" 'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது. இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. "கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம் வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம் வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம் சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" "புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். “அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான். "உரு கெழு யானை உடை கோடு அன்ன, ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே" 'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான் கவிதா இருந்தாள். நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி, திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள். அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை அல்லது முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார். "புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை" திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறினர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர். "புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர். புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும். செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள். "புளகாங் கிதமே புறவேலி யாக. கன்னந் தனில் நீ சின்ன மாகள். அடைக்கலப் பொருள்போல் அமையப் பேணும்" [காதா சப்த சதி 1 - 69] [காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்] ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points
-
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பி.க்கள் பெற்ற இழப்பீட்டு தொகைகளை வெளியிட்ட அரசாங்கம்
2 pointsமுதல்ல இவர்களது வீடுகள் உண்மையாக எரிந்ததா என்று விசாரணை செய்ய வேண்டும். இதுவரை எத்தனை தமிழர்களின் உடமைகளை இவர்களே எரித்திருப்பார்கள். இதுவரை யாருக்காவது நஸ்டஈடு கொடுத்திருக்கிறார்களா? சிங்களவருக்கு வந்தால் இரத்தம். தமிழ் பேசும் மக்களுக்கு வந்தால் சட்னியா? இன்னமும் தமிழர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார்களே ஏதாவது நஸ்டஈடுடோ அதற்கு வாடகையே குத்தகையோ ஏதாகிலும் கொடுக்கத் தயாரா?2 points
-
சிரிக்கலாம் வாங்க
2 points2 points
- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
எனது 2011 Allion இனது தற்போதைய விலை ஒருகோடி 10 லட்சம். வாங்கும்போது 55 லட்சம் இரண்டாவது ஓனர். டொயோட்டா பேட்ச்சை ஒட்டிய எந்த அரதல் பழசையும் இலங்கையில் கண்ணை மூடிக்கொண்டு பாடிப்பாடி விற்கலாம். இலங்கையின் வாகனச்சந்தை நீங்கள் கூறியது போலவே மிக வினோதமானது. உது பச்சை உருட்டு, உந்த தேர்தல் நெருங்கும்போது போது மன்னார் கடற்படுக்கை எரிவாயு மற்றும் நீல இலங்கை வெளிநாட்டுக்கடனை அடைக்கக்கூடிய மாணிக்கக்கற்கள் வெளியே வருவது போல. https://srilanka.factcrescendo.com/english/misleading-images-about-the-volkswagen-factory-in-kuliyapitiya/ இலங்கையில் தற்போது Bajaj மற்றும் TVS கம்பெனிகள் இந்தியாவில் இருந்து முக்கிய பாகங்களை தருவித்து மோட்டார்சைக்கிள்களை அசெம்பிள் பண்ணுகிறார்கள். டயர் மற்றும் இருப்பினாலான உதிரிப்பகங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன. அப்படி அசெம்பிள் செய்யும் மோட்டார்சைக்கிள்களையே இலங்கையில் 7 லட்சத்திற்கு குறைய விற்கமுடியவில்லை. Micro வினால் அசெம்பிள் செய்யப்படும் வாகனங்களை தற்போதைய நிலவரப்படி 1.5 கோடிக்கு குறைய விற்கவே முடியாது. Micro assembled வாகனங்கள் ஏற்கனவே இலங்கையில் தலையிடிக்கு புகழ் பெற்றவை. BYD மிகவிரைவில் இலங்கைக்குள் பாயத்தயாராக இருக்கிறார்கள் போல இம்முறை ஊர் போயிருந்தபோது விற்பனை சேவை நிலையங்களுக்கு கேள்வி கோரிய விளம்பரம் கண்ணில்பட்டது. முழுவெடுப்புடன் இறங்கினால் ஒரு கலக்கு கலக்கலாம், இவர்களுடைய BYD ATTO 3 சிங்கையில் சக்கை போடு போடுகிறது. 0% down payment இல் தருகிறார்கள்2 points- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஒரு இலட்சம் = 100,000 Rs ஒரு கோடி = 100 இலட்சம். ஒரு மில்லியன் = 10 இலட்சம். ஒரு கோடி = 10 மில்லியன் ஒரு கோடி = 100x100,000=10,000,000 Rs ஒரு கோடி 10,000,000 Rs = 100 இலட்சம் = 10 மில்லியன். கணக்கு பிழை எண்டால் @ரசோதரன் அண்ணை திருத்துவார்🤣2 points- சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
No No No சாவகச்சேரி அர்ச்சுனாவுக்கு என்று எழுதியாச்சு.2 points- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes" https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள். விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி! என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".2 points- அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
2 pointsட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன. 1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது. 2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம். 4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்!2 points- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .1 point- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இங்கு ஒரு ஐந்தாறு வருடங்கள் முன் வரை கூட எம்மவர்கள் எவரும் அமெரிக்கன் கார்களை வாங்கவேமாட்டார்கள். நீண்டகால நம்பிக்கை இன்மை, மிகக்குறைந்த மீள்விலை, அதிக பெட்ரோல் செலவு இப்படி பலப்பல காரணங்கள். பொதுவாக எம்மவர்கள் ஜப்பான் தயாரிப்புகளை வாங்குவார்கள். வருமானம் அதிகமானால் ஜேர்மன் தயாரிப்புகள் தான், அது ஒரு அந்தஸ்து போல......... முன்னர் கொரியாவின் தயாரிப்புகளையும் பலரும் வாங்குவதில்லை. ஆனால் இப்பொழுது அவை மிகவும் தரமும், வசதியும் உள்ளவை என்று அவைகளையும் வாங்குகின்றனர். டெஸ்லா வந்த பின் வாங்குகின்றார்கள், ஆனால் அது வேற கணக்கு. நான் இன்னமும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு காசு கொடுக்க மனம் இல்லை. நான், முடிந்தவரை, அமெரிக்கன் வாகனங்களையே வாங்கிக் கொண்டிருக்கின்றேன். அமெரிக்க தேசியம் பேசி, அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣. 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் பின், அமெரிக்கா தெருவில் நின்றது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. வீடுகளை விட்டு விட்டு மக்கள் போய்க் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வாகன தயாரிப்புகளின் தலைநகரான Detroit இல் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் விவரணப் படம் ஒன்று ஒரு நாள் போனது. வாகனத் தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலையை விட்டு நிற்பாட்டியிருப்பதால், அந்த நகரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு குடும்பத்தலைவி வீட்டில் எதுவுமே இல்லை, மேசையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட இல்லை என்று சொன்னார். அவர் கண்களில் ஒரு ஆறு உடைத்து ஓட தயாராக இருந்தது. வேலை எதுவும் தங்களுக்கு இங்கே இல்லை என்று சொன்னார். இலவச உணவு கொடுக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொன்ன போது, அவர் அடக்கமுடியாமல் அழுதார். பின்னர், மிகக் குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அரசு இந்தப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. அவர்கள் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்தார்கள். அது ஒரு புரட்சி, ஆனால் இங்கு வாழும் எம் மக்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு விடயம் நடந்ததையே எங்களில் பலர் அறியார்கள். அந்த நிறுவனங்களும், அந்த மக்களும் மீண்டு வந்தார்கள்.1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
இப்பொழுது இரண்டு வேலியும் எடுத்து விட்டார்கள் ,,என நினைக்கிறேன் ..அங்கு இப்ப நல்ல முன்னேற்றம் ..கல்வியை சொல்லவில்லை ...கட்டிடங்களை சொல்லுகின்றேன்..பழைய ஹொஸ்டல் இடிக்கப்பட்டு புது கட்டிடங்கள் வந்துள்ளது.(ஸ்கோர் பலகை இருந்த இடத்தில்).ஒரு கட்டித்திற்கு அதிபர் பேராயிரவரின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது இதில் உடற்பயிற்சி நிலையம் ,சதுரங்கம் கிளப் போன்றவை உள்ளது ...1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
மட்/சென் மைக்கலில் படித்தவர்...அவரது முழுப் பெயர் பிரேம்....கு...1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
தமிழ் தேசியத்திற்கு விரோதமான கருத்தை சிலர் ..எப்பொழுது தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கிச்சோ அப்பொழுது இருந்து விதைத்து வருகின்றனர்... தமிழர் விடுதலை கூட்டனி தொடங்கிய காலத்தில் ,அமிர்தலிங்கம்,செல்வா,ஜீ.ஜீ போன்றோரை வசை பாடினார்கள்... பிறகு பிரபாகரனை வசை பாடினார்கள் இன்று சிறிதரனையும் ,குமார் பொண்ணம்பலத்தையும் வசைபாடுகின்றனர்... அர்ஜூனா ராமனாதன் ...நான் தேசிய தலைவரின் வழிவந்தவன் என கூறி கொண்டு பாராளுமன்றில் செய்யும் கூத்துக்களை பாருங்கள் ...இதுவரை ஒர் சாதாரண எம்.பி கூட செய்யாத,பேசாத இழிவான ,தரக்குறைவான செயல்களை செய்கின்றார்...இவரின் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை...சிங்கள பா.உ..க்களே இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேணும் என பாராளுமன்றில் கூறியுள்ளனர்...1 point- இன்னொரு சக்கரவர்த்தி
1 pointதவறுகளை உணரும்வரை அவரும் சக்கரவர்த்திதான் ..........! 😁 நல்ல கவிதை ரசோதரன் . ........!1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இங்கு அவருடைய ஆதரவாளர்களாக இருக்கும் நம்மவர்களின் வாதங்கள், பூனை ஒன்று ஒரே இரவில் ஒரு சிங்கமாக மாறியது போல இருக்கின்றது. ஜனநாயக் கட்சியினர் எல்லோரையும் நாட்டுக்குள் விடுகின்றனர், நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை முன்னேறவே இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை,............ இப்படியான பலதைச் சொல்கின்றனர். நாங்களும் இங்கு ஓடித்தான் வந்தோம். படித்து விட்டு, மேற்படிப்பிற்கு என்று, முறையாக வந்தோம் என்பது இதற்கான ஒரு நியாயமே கிடையாது. படித்து முடித்தவுடன் அங்கிருந்து தப்பவே இங்கு வந்தோம். படித்திருக்காவிட்டால், ஏதோ ஒரு நாட்டுக்கு எப்படியோ போய்த்தான் இருப்போம். அதுதானே மிகப் பெரும்பாலானோர் முன்னிருந்த ஒரே ஒரு தெரிவு. அதையே தான் வேறு நாட்டவர்களும் செய்கின்றனர். எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது, ஆகவே இனி அவர்கள் இங்கு வரவே கூடாதா................. ஒரே ஒரு சின்ன மாற்றம்................. நாங்கள் படித்து முடித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் போது, இதே ட்ரம்ப் அவர்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்து இருந்தால், நாங்கள் எவருமே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தே இருக்கமாட்டம். நாங்கள் எல்லோருமே ட்ரம்பைத் திட்டிக் கொட்டிவிட்டு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா அல்லது கனடா தான் போய் இருப்போம். ஆனால், இன்று அதே கூட்டத்தில் ஒரு பகுதி அவர் தான் சரி என்கின்றது............🫣.1 point- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
க்ளூ தந்திருக்கிறாரே மேலே? VW தான், அதிலும் பழைய VW Beetle ஆக இருக்கும் என ஊகிக்கிறேன்😂! நான் சொல்வது தவறாக இருக்கலாம் (வசி "ரச்"😎)1 point- படித்ததும் பகிர்ந்ததும்.
1 point1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
இதனால் ஏதாவது லாபம் இருந்தாலே இந்திய அரசு செயல்ப்படும்.1 point- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
கோஷானுக்கு எப்படியான ஷேப் பிடிக்கும்?1 point- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
🤣.................... களத்தில் ஒரே ஒரு கணக்கு வாத்தியார் தான்................. அது யார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேலே இருக்கும் கோஷானின் பதிவிற்கு சிரித்து வைத்திருக்கும் அடுத்தவர் யார் என்று பார்க்கவேண்டும்............🤣.1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கொலம்பிய அரசு போல உங்கள் விமானத்தை அனுப்பி கெளரவமாக கூட்டி வந்திருக்கலாமே? இலங்கையில் இருந்து போன அகதிகளை கெளரமாக நடாத்த முடியவில்லை. அங்கு பிறந்த பிள்ளைகளுக்கு குடியுரிமை கொடுக்க விருப்பமில்லை. அங்கு படித்த பிள்ளைகளுக்கு மேற்படிப்பு படிக்க முடியாது. இந்த இக்கட்டான நேரத்தில் எமது அகதிகளையும் யோசிக்க வைக்கிறது.1 point- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
🤣 சிரிக்க வைத்த உதாரணம். காணி அளவீடு பற்றி கேட்டால் தலை சுத்தும். 1 பரப்பு =1.2 லாட்சம் ஆ? அல்லது 1 பரப்பு = 1 லாட்சம் ஆ? பல பேரிடம் கேட்டு விட்டேன். ஆளுக்கு ஒரு கதை.1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
கொஞ்சம் உயரத்துக்கு போனால் தமிழனுக்கு மூளை முழம் காலுக்குள் போயிடும் தன்னினம் எக்கேடு கெட்டாலும் திரும்பி பார்க்காதுகள் அது வழமையான ஒன்று .1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
தமிழ்நாட்டு மீனவனை சிங்களவன் சுட்டு கொன்ற போது ரத்தம் கொதிக்கல... இப்ப குஜராத்திக்காக... இரத்தம் கொதிக்குதாம். குகன் அருமைநாட்டார்1 point- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
'உருக்கமான கண்டனம்' 😂1 point- அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான். இத்தீர்வையால் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் பல இலட்சம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த சில வாரங்களாக வெருட்டி வந்தார். ட்றம்பைப் போலவே ‘ Onrtario is Not For Sale’ எனத் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் ட்றம்ப் பாணியில் பவனி வரும்போது இவரும் ஏதோ திட்டமிடுகிறார் எனப்பட்டது. இத் தொப்பி மூலம் திடீரென அவருக்கு ஏறிய மவுசைப் பயன்படுத்தி தனது ஆட்சியை நீடிக்கும் கனவோடு அவரும் அதிரடித் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார். இப்படியான அதிரடிகள் அரசியல்வாதிகளால் தற்காலிக வெற்றிகளுக்காகப் பாவிக்கப்படும் சுய இன்ப முயற்சிகள். பெரும்பாலான தருணங்களில் இவை எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. ட்றம்பரைப் போலவே 1930 களில் ஹேர்பேர்ட் ஹூவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி 20% இறக்குமதித் தீர்வையை அறிவித்து அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சூளுரைத்தார். ஆனால் The Great Depression என்ற பெயரில் அது அமெரிக்க பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டதுமல்லாது அவரையும் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது. ட்றம்பர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்று இதற்கு முன் நான் எழுதியிருந்தேன். அதற்குப் பல முணு முணுப்புகள் கிடைத்தன. அவரின் வருகையால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிவாங்கும் அதனால் உலகம் கொஞ்சம் சுவாசிக்க இடைவேளை கிடைக்கும் என்பதுவே எனது வரவேற்புக்குக் காரணம். ஆனால் இந்த இறக்குமதித் தீர்வை விவகாரம் நான் எதிர்பார்த்ததை விட மேலும் அதிகமான நன்மைகளைத் தரப்போவதாக இப்போது நான் கருதுகிறேன். அமெரிக்கா உருவாகிய காலத்திலிருந்து கனடாவை அது தனது சின்னத் தம்பியாகவே கருதி வந்தது. கனடாவின் இயற்கை வளங்களை வேறெவரும் அனுபவிக்காதவாறு ‘தலையைத் தடவித்’ தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்தது. கனடிய வரியிறுப்பாளர்களின் தலைகளில் மிளகாயை அரைத்து அது தனது சுயநலத்திற்காக கனடாவைச் சுரண்டிக்கொண்டு வந்தது. அமெரிக்க – கனடிய – மெக்சிக்கோ சுதந்திர வலய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்நாடுகளிடையே பண்டப் பரிவர்த்தனை பரஸ்பர பலன்களுடன் சுமுகமாக நடைபெற்று வந்தமையால் எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதன் பலனாக உறவு அமைதியாகவும் பலமாகவும் இருந்தாலும் அமெரிக்கப் பெரியண்ணரே கூடிய அனுகூலங்களைப் பெற்றுவந்தார். முக்கியமான விவகாரங்களில் அவரே முடிவு எடுப்பவராகவும் சின்னத் தம்பிமார் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாகவும் இருந்து வந்தனர். வெளியார் அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் தமது பாதுகாப்பை பெரியண்ணர் பார்த்துக்கொள்வார் என்ற நிலையில் அவரது சலசலப்புக்களைப் பொருட்படுத்தாது இனிதே வாழ்ந்து வந்தனர். இதனால் தமது சுய தேவைகளைக் கவனிக்காது அசமந்தமாக இருந்து வந்தனர். ட்றம்பரின் வருகையால் அவர்கள் இப்போ விழித்துக்கொண்டு விட்டனர். இனிமேல் கனடாவும் மெக்சிக்கோவும் தமது சுய அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது காலம் சிரமப்பட்டாலும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது அவசியமானது என்ற நினைப்பு இவ்விரு நாடுகளுக்கும் ஏற்பட்டதற்கு ட்றம்பருக்கே நன்றி சொல்ல வேண்டும். ட்றம்பரின் அறிபிப்பிற்கு எதிர்வினையா நேற்றிரவு கனடிய பிரதமர் ட்றூடோ பதிலடி அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் சுமார் $155 பில்லியன் டாலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என ட்றூடோ அறிவித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் $30 பில்லியன் பெறுமதியான இறக்குமதிப் பண்டங்களுக்கு இத்தீர்வை அமுலாக்கப்படும். மேலும் மூன்று வாரங்களின் பின் மீதமான பண்டங்கள் தீர்வைக்குள்ளாக்கப்படும். இத்தீர்வைக்குள்ளாகும் பண்டங்களில் சில: அமெரிக்க பியர், வைன், சில வகை விஸ்கி, பழங்கள், பழரசங்கள், மரக்கறி வகைகள், வாசனைத் தைலங்கள், ஆடைகள், சப்பாத்துகள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் (appliances), தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கும். “ட்றம்ப் கூறுவதைப் போல் அமெரிக்கா ‘பொற்காலத்தில்’ நுழைய வேண்டுமாகில் கனடாவுடன் பங்காளியாகப் போகவேண்டுமே தவிர அதைத் தண்டிக்கக் கூடாது. ட்றம்பின் இந்நடவடிக்கை உங்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என பிரதமர் ட்றூடோ அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது “கனடியரும் தம் பங்கினைச் சரியாகச் செய்யவேண்டும்; அமெரிக்கத் தயாரிப்புகளுக்குப் பதிலாக நீங்கள் கனடியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என கனடியருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு இப்போதுதான் கனடியத் தேசியம் விழித்துக்கொண்டிருக்கிறது. அல்பேர்ட்டா முதல்வரைத் தவிர ஏனைய மாகாண முதல்வர்களும், நாட்டு மக்களும் பிரதமர் பின் அணி திரள்கிறார்கள். சரிந்துபோயிருந்த அவரது செல்வாக்கு திடீரென்று உச்சம் பெறுவதுடன் அவரது கட்சிக்கான ஆதரவையும் அது மேலெழச் செய்திருக்கிறது. ட்றம்பின் அலை சிலவேளைகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய அலையையே அடித்து சென்றுவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திருக்கிறது என்கிறார்கள். பொதுமக்கள் பலர் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அல்பேர்ட்டாவின் மசகு எண்ணை இதுவரை குழாய்கள் மூலம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேற்குப் பக்கமாக வான்கூவர் மூலம் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய, மானில அரசாங்கங்கள் எடுத்த முயற்சியை சுதேசிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் கனடாவின் எண்ணை வருமானம் தனியே அமெரிக்காவின் தயவிலேயே இதுவரை இருந்து வருகிறது. ட்றம்பரின் அதிரடி அறிவிப்பிற்குப் பின் சுதேசிகளின் தலைவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கு இணைப்புக்குழாய் திட்டத்தைத் தொடரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுவரை கனடிய மசகு எண்ணையைச் (crude oil) சுத்திகரிக்கும் நிலையங்கள் எதையும் கனடா தனது மண்ணில் நிர்மாணிக்கவில்லை. அதனால் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் பெற்றோலாக நாம் வாங்கவேண்டியிருந்தது. ட்றம்பரின் அறிவிப்பின் பின் கனடா இனிமேல் தனது சொந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மொத்தத்தில் ‘வாயும் வயிறும் வேறு’ என்று கனடியர்கள் உணரும் நிலைக்கு ட்றம்பர் தள்ளிவிட்டிருக்கிறார். இதுவரை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் சில சீன இறக்குமதிகளுக்கு, குறிப்பாக மின் வாகனங்களுக்கு அதிக தீர்வையை வசூலிக்கப் போவதாக கனடா அறிவித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்வாகங்கள் ரெஸ்லா போன்ற அமெரிக்க இறக்குமதிகளூடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. இனிமேல் அமெரிக்க ரெஸ்லா வாகனங்களுக்கு கனடாவில் வழங்கப்படும் ஊக்கப்பணம் நிறுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. ட்றம்பரின் இவ்வெருட்டுக்கள் எல்லாம் உண்மையில் இறக்குமதி சம்பந்தப்பட்டதல்ல, அவை வேறு விடயங்களில் கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகளை இணங்க வைக்க ட்றம்பர் பாவிக்கும் ஒரு ஏமாற்று வித்தை எனச் சிலர் கூறுகிறார்கள். கொலம்பியாவில் இந்ந்டைமுறையைப் பாவித்து அவர் வெற்றிகண்டுவிட்டார் எனவும் இதன் மூலம் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளே இவை எனவும் சிலர் நம்புகிறார்கள். கனடாவிலிருந்து ஃபென்ரனில் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவுக்குள் வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் ஃபென்ரனில் போதை மருந்தின் அளவு 0.2% மட்டுமே. அடுத்த சில மாதங்கள் கனடிய மக்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கலாம். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக செலவீனத்தை ஏற்படுத்தலாம். வீட்டு விலைகள் மேலும் வீழ்ச்சி காணலாம். வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் கரடு முரடாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனவே பட்சி சொல்கிறது. பார்ப்போம். https://veedu.com/அமெரிக்க-வரி-கனடாவின்-அத/?fbclid=IwY2xjawIMamhleHRuA2FlbQIxMQABHQJ_b9AA4eTrx0CVohnSiUPhQaHDzOVLFWHxmOEEntyOeY6VlWt3yeK0bw_aem_5s4krdp_DP8GXYgD88VeEw#google_vignette1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இலங்கை சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்களித்தனர், அப்படி போராடி பெற்ற சுதந்திர நாளில் இவ்வாரத்தில் தமிழர் பகுதியில் கரிநாள் என போராடியதேன்? இங்கு என்ன காரணமோ அதற்கு ஒப்பான காரணத்திற்காக தான் பெரியாரும் எதிர்த்தார். தமிழனின் குடுமி ஆங்கிலேயரிடமிருந்து வடநாட்டவருக்கு கைமாறுகிறது, குடுமி விடுபடவில்லை. அதே போல் பெரியார் தனிநாடுக்கு கடைசி வரை குரல்கொடுத்தார் ஆனால் அதற்கு ஆதரவு பெருமளவு இல்லை. தனிநாடு கோரிக்கையை கைவிட்ட திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointவாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointஅங்கே பாருங்கள் அங்கே ஒருத்தர் உங்களின் கருத்துக்கு சிரிக்கிறார் . ....... உந்த நக்களுக் கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது . ....... எப்போதும் போல அண்ணாவாகவே இருந்துட்டுப் போறேனே .......! 😢1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தகவல்களுக்கு நன்றி. சமாதான காலத்தில், பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டியில் சொன்னதை என் மனதில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அது இதுதான். 30 வருடங்களில், அப்பழுக்கற்ற தலைவரான பிரபாகரன் தன் மக்களுக்கு கொடுத்த நற் பெறுபேறுகளை விட, மோசமான ஊழல்வாதியான கருணாநிதி தன் மக்களுக்கு கொடுத்த நற்பெறுபேறுகள் அதிகம். திராவிட நாடு கோரிக்கை கைவிடலை, சொந்த நாட்டு விடுதலை போரில் பங்கெடாமல் ஓடி வந்த நாம் பரிகாசிப்பது ஒரு முரண்நகை என்பதற்கும் அப்பால்…. அதன் பின்னால் உள்ள சிக்கலான அரசியலையும், அந்த கைவிடலை ஏற்று கொண்ட மக்களையும் black or white பார்வையுடய நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
அனுர குமார.... சவூதிக்கு போகும் போது பச்சை சேர்ட், இந்தியாவுக்கு மஞ்சள் சேர்ட், சீனாவுக்கு சிவப்பு சேர்ட், அமெரிக்காவுக்கு நீல சேர்ட் போட என்று... அவரின் அலுமாரி நிறைய கலர் சேர்ட்டுகள் வைத்திருக்கின்றாராம். 😂1 point- காற்றாடி
1 pointநம்ம காலத்தில் அரைக் காற்சட்டையில் இருந்து முழு காற்சட்டைக்கு மாறினால் ஓஎல் பாஸாகி விட்டான். மணிக்கூடும் கட்டினால் எஎல் பாசாகி விட்டான். தொடருங்கள்.1 point- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்1 point- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
1 pointஆ....கொஞ்சம் உசார் வந்துட்டு போலும்.🤭நல்லது தொடருங்கள் சுவி அய்யா.எங்கயோ எழுபது வயதுக்கு மேலாகிட்டு என்று எழுதி கிடந்து பார்த்த நினைவு..ஆகையால் இனிமேல் அண்ணாவிலிருந்து, அய்யாவுக்கு மாற்றம் பெறுகிறீர்கள்.சரி தானே.தொடர்ந்து நலமோடு நடமாடுங்கள்.🤭🖐️1 point- "கரை கடந்த புயல்"
1 point- சந்தோஷ் ஜா - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
நேற்று சிங்கக் கொடியுடன் நம்மவர்கள் அணிவகுத்து செல்வதைப் பார்க்க உடம்பெல்லாம் புழுக்கள் ஊர்வது போல இருந்தது. ஆனாலும் இது இந்தியாவுக்கு ஒரு செய்தியைச் செல்லியிருக்கும்.1 point- "கரை கடந்த புயல்"
1 pointதில்லை யாழில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் என்று சொல்லக் கூடிய ஓரிருவரில் நீங்களும் ஒருவர். ஆரம்பத்தில் ஏதோ சுனாமியைப் பற்றியே எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன். ஒரேஒரு கேள்வி ஐயா. நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா?அல்லது குரலால் பதிவு செய்கிறீர்களா? ஒரே குழப்பமாகவே இருக்கிறது.1 point- காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது. ட்ரம்ப் வருவதால் உலகத்திற்கே பெரும் கேடு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தேன். என்ன கேடு, அவர் எங்கே யுத்தம் செய்யப் போகின்றார் என்ற ஒற்றை வரிக் கேள்விகள் தான் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு எவ்வளவு நாட்களும், எத்தனை நிகழ்வுகளும் தேவை. இவர் போன்ற ஒருவரால் சர்வமும் நாசம் தான். 20 இலட்சம் மக்களை 'நீங்கள் உங்கள் மண்ணை விட்டு வேறு எங்கேயாவது போங்கள்...................' என்று சொல்லுவது எந்த யுத்தம் அளவிற்கும் கொடுமையானதே. என்ன ஒரு திமிரும், அறியாமையும் வேண்டும் இப்படிச் சொல்லுவதற்கு. சூடானில் பாடசாலையில் கொடுக்கப்படும் அந்த ஒரு நேர உணவிற்காகவே பாடசாலை போகும் அந்தச் சிறுவர்கள், அமெரிக்க உதவியை நிற்பாட்டிய பின், இன்று என்ன செய்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற அந்த நினைவே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதுவா இவர் வந்தால் உலகத்திற்கு கிடைக்கும் நன்மை. அதுவும் ஒரு வருடச் செலவே சில பில்லியன் டாலர்கள் மட்டுமே. பக்கத்தில் இருக்கும் நாடு கனடா. முழு உலகத்திலேயேயும் உற்ற தோழன் அது தான். அதனுடனேயே தகராறா............ இத்தனைக்கும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் போகும் குடியேறிகளும், போதைப் பொருட்களும் தான் மிக அதிகம். கனடாவை பகைப்பதால், பயப்படுத்துவதால், என்ன சமாதானம் இங்கே கிடைத்து விடப்போகின்றது. இங்கு அமெரிக்க உள்நாட்டில் இவருடைய மற்றும் இவரின் சகாக்களின் நடவடிக்கைகளை நீதிமன்றின் மூலம் கேள்வி கேட்கலாம். ஆனால், இவர்களின் அறியாமையினாலும், அதிகாரம் உள்ள திமிரினாலும் உலகிற்கு வந்து சேரப் போகும் கேடுகளுக்கு எவரைப் போய் கேட்பது.....................😌.1 point- யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!
நல்ல விடயம். இதில் இரத்ததானம் வழங்கிய தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழங்கப்பட்ட தண்டனை காலத்தையும் சிறிது குறைத்து அவர்களின் இச் செயலுக்கு மதிப்பை கொடுத்தால் நல்லது (பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல் போன்ற அதி தீவிர குற்றங்களை செய்தவர்களை தவிர்த்து) அப்படியே, வேலை வெட்டி இல்லாமல், போட்டிப் பரீட்சை கூட தமக்கு வைக்காமல் அரச வேலை வேண்டும் என்று போராடும் பட்டதாரிகள் இதையெல்லாம் செய்ய மாட்டார்களா? (அவர்களில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை வேறு செய்து இருக்கின்றார்.. குருதியை கொடுத்து விட்டு செத்து இருக்கலாம்)1 point- அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை. ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது. தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல. 1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும் 2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும். அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன். அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள். நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன். 4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை. பிகு 4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.1 point- இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஆமாம் ஜெயதேவன். தெரியும் மீசை வைத்து இருப்பார் பிரபல ரீயூசன. ஆசிரியர் பந்மநாதன். பிரயோக கணிதம். படிப்பித்தவர் தூய கணிதம். கிண்டினன். என்றவராக இருக்கும் கட்டை ஆள் யோகராசா உயிரியல் பிரிவு படித்தார நெடுகேணியை சேர்ந்த வேல்முருகன். விடுதி அப்ப தான் ஆரம்பித்தது ...சிவகுமார். என்ற பையன். அடிக்கடி வந்து கதைப்பது உண்டு” அதிபரின் வீட்டு ஓழுங்கையூடாக. மகளிர் கல்லுரி வழியாக வினயாகமூர்த்தியின். தனியார் வகுப்புகளுக்கு பேயயுள்ளேன். அங்கே மகளிர் கல்லூரி பெண் பிள்ளைகளும் வருவது உண்டு” உப அதிபர் மிகவும் மெல்லியவர். நகைச்சுவையனவர். அதிபர் மனைவி இராமநாதன் கல்லூரியில் படிப்பிந்தவர். இரண்டு குண்டு பெண்பிள்ளைகளுண்டு விடுதியில் இருந்த அனேகரின் பெயர்கள் மறந்து விட்டேன் நல்ல கல்லூரி அங்கே இடம் எடுப்பது மிகவும் கடினம் அங்கே தொடர்ந்து படிக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது இருந்தாலும் இன்றைய வாழ்க்கை மிக சிறப்பாக உள்ளது 🤣 குறிப்பு,......இரண்டு கல்லூரிகளுக்கும். இடையில் உள்ள வேலிகளை எடுத்து ஒன்றாக இணைத்து விட்டால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக படிப்பார்கள். [அல்லது வீடுகள் ] முரளி எங்கள் வகுப்பு மாணவ தலைவன் அதாவது மெனிட்டார்1 point- மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை. புலிகளின் பேட்டிகள் வீடியோக்கள் மற்றும் படங்களை கொண்டு வந்து தற்போது இங்கே கொட்டுபவர் அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே. அவ்வளவும் நஞ்சு. அத்துடன் உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம். போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை.1 point- ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
எதிர் அறிக்கைகளை மேற்கோள் காட்டும்போதுதானே ஆதரவான அறிக்கைகளும் பதியப்படுகின்றன! இது எனது அனுமானம் அல்லது எதிர்வுகூறல் என்றுசொல்லிவிட்டு செல்லவேண்டியதுதானே. நான்சொல்வதுதான் சரி மற்றவனெல்லாம் பிழை, முட்டாள் என்று சொல்வதால்தானே பிரச்சனையே!!1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இதன் பொருள் - இந்தியா வை வெள்ளைகாரரிடம் இருந்து (பிராமணிய) கொள்ளைகாரர்கள் கைப்பற்ற போகிறார்கள் என்ற சரியான எதிர்வுகூறல். இன்று வரைக்கும் தமிழர்களாகிய நமக்கு இந்திய, இலங்க சுந்தந்திர நாட்கள் கரி நாட்களாகத்தானே அமைந்து விட்டன? இதே காரணதுக்காக (பெரியார் திராவிடர் உரிமை, அம்மேத்கர் தலித் உரிமை) அம்பேத்கர் இலண்டன் வட்டமேசை மாநாடு வரை வந்து சுதந்திரத்தை கேள்வி கேட்டுள்ளார். இந்திய சுதந்திரம் பல இனவழி தேசிய இனங்களுக்கு அடிமை சாசனம். ஆகவேதான் அது ஒரு கரி நாள். இன்றும்.1 point- பரணில் கிடக்கும் பழைய நாட்குறிப்பேட்டின் பொக்கிசமான நினைவுகள்..
நியாமாய்யா இது 🤣… தலைப்பை வாசித்து விட்டு…. ஆதாரத்தோட சிங்கன் களமிறங்கீட்டான் என்றல்லவா ஓடோடி வந்தேன்🤣🤣🤣.1 point - ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.