Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்7Points87988Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்5Points20010Posts -
satan
கருத்துக்கள உறவுகள்5Points10099Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்5Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/15/25 in all areas
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்போ புரிகிறதா மக்கள் ஏன் தென்பகுதி கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று? கெஞ்சி கூத்தாடி வாக்கு பெறுவது, பின்னர் ஆதிக்கம் செலுத்துவது. சுமந்திரனுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, வாக்களித்த மக்களுக்கே தாங்கள் விரும்புவோரை நியமிக்க அதிகாரமிருக்கிறது. சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றாவிடின், கட்சி மக்களிடமிருந்து நிராகரிக்கப்படும்.5 points
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ. கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.2 points
-
கத்தார் சொகுசு விமானத்தை டிரம்ப் பரிசாக ஏற்க முடியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம் பதவி, பிபிசி வெரிஃபை 15 மே 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் இதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். விமானம் குறித்த செய்திகள் "தவறானவை" எனவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன எனவும் கத்தார் முன்பு கூறியது. தற்போது கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதிபர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்வது சட்டப்பூர்வமானதா என்பதைக் குறித்து பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது. விமானம் குறித்த தகவல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் ஜம்போ ஜெட் விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்க திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விமானம் மறுசீரமைக்கப்பட்டு, அதிபர்கள் பயணிக்கும் விமானமாக அறியப்படும் "ஏர் ஃபோர்ஸ் ஒன்" எனும் பெயரில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டார். அந்தப் பதிவில், "பாதுகாப்புத்துறை 40 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை தற்காலிகமாக மாற்றுவதற்காக, மிகவும் வெளிப்படையான மற்றும் பொதுவான பரிவர்த்தனையாக 747 விமானத்தை இலவசமாகப் பெறுகிறது." என்று குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இது கத்தாரின் சிறந்த செயல். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். இதுபோன்ற சலுகையை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்" என்று டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரியில், இரண்டு புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை போயிங் நிறுவனத்திலிருந்து நேரடியாக பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பற்றி, "போயிங் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை "ஒரு விமானத்தை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு விமானத்தைப் பெறலாம்" என்றும் கூறியுள்ளார். படக்குறிப்பு,டிரம்ப் பிப்ரவரியில் பாம் பீச்சில் விமானத்தை சுற்றிப்பார்த்தார் மேலே உள்ள படத்தில் காணப்படும் கத்தார் விமானம் பிப்ரவரியில் புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் படம் பிடிக்கப்பட்டது. அங்கு டிரம்ப் அந்த விமானத்தை நேரில் பார்வையிட்டார். 2015-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விவரக்குறிப்பு சுருக்கத்தின்படி, அந்த விமானத்தில் மூன்று படுக்கையறைகள், தனிப்பட்ட ஓய்வு அறை மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும் அது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும் என ஒரு கத்தார் அதிகாரி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கு பல ஆண்டு காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, டிரம்ப் பதவிக்காலத்தின் முடிவை நெருங்கும் வரை அந்த விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு அந்த விமானம் நேரடியாக அவரது அதிபர் காப்பகத்துக்கு அனுப்பப்படும் என்றும், அதிபர் பதவி முடிந்த பிறகு "அதை பயன்படுத்த மாட்டேன்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆயினும், இந்த நடவடிக்கை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் லாரா லூமர் போன்ற நீண்ட கால டிரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது "இது உண்மையாக இருந்தால், இந்த நிர்வாகத்தின் மீது இது ஒரு பெரும் களங்கமாக இருக்கும்," என லூமர் கூறினார். இந்தப் பரிசு சட்டப்பூர்வமானதா? இந்த பரிசை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனடர் ஆடம் ஷிஃப், அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவரும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டுத் தலைவரிடமிருந்து "எந்தவொரு பரிசையும்... எந்த வகையிலும்" ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த விதி அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ரீதியில் லஞ்சம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது" என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் ஃபிராங்க் கோக்லியானோ. "இது நிச்சயமாக அரசியலமைப்பின் எல்லைகளை மீறுகிறது. இந்த அளவிலோ அல்லது இது போன்ற ஒரு பரிசையோ நாங்கள் கண்டதில்லை" என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ மோரன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரொனால்ட் ரீகனின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் போயிங் 707, 2003 இல் அவரது அதிபர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது. 1966ஆம் ஆண்டின் வெளிநாட்டு பரிசுகள் மற்றும் அலங்காரச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள், வெளிநாட்டு பரிசுகளை ஏற்கும் விதிமுறைகளை வகுத்துள்ளன. இந்தச் சட்டங்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேற்பட்ட பரிசுகளை ஏற்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாக கருதப்படுகின்றது. தற்போது, 480 டாலர் குறைவான மதிப்புடைய பரிசுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்க அனுமதிக்கப்படுகின்றனர். விமானம் இறுதியில் தனது "காப்பகத்துக்கு" செல்லும் என டிரம்ப் கூறியிருந்தாலும், தனது அருங்காட்சியக அறக்கட்டளைக்கு செல்லும் என்பதையே டிரம்ப் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பொதுவாக தங்களுடைய ஆவணங்களை சேமிக்கும் நூலகத்தையும் (காப்பகம்), நினைவுச் சின்னங்களால் நிரம்பிய அருங்காட்சியகத்தையும் முன்னாள் அதிபர்கள் வைத்திருப்பார்கள். இவை பொதுவாக தனியார் நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகின்றது. விமானம் நேரடியாக அதிபருக்கு வழங்கப்படாமல், முதலில் அரசு நிர்வாகத்துக்கு தரப்பட்டு பின்னர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டாலும், இது அரசியலமைப்பை மீறுவதைத் தவிர்க்க முடியாது என்று பிபிசி வெரிஃபையுடன் பேசிய நிபுணர்கள் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எந்தவொரு நன்கொடையும் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டே பெறப்படும் என்று கரோலின் லீவிட் கூறினார் வாஷிங்டனில் உள்ள சிட்டிசன்ஸ் ஃபார் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் எதிக்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ், டிரம்ப் பதவியிலிருந்து விலகிய பிறகு அந்த விமானத்தை பயன்படுத்தினால் அது எல்லையை மீறுவதாக இருக்கும் என கூறினார். "ரீகனின் ஏர் ஃபோர்ஸ் ஒன் அவரது அதிபர் காப்பகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த விமானம் செயலிழக்கப்பட்டது. ரீகன் அதில் மீண்டும் பயணம் செய்யவில்லை. எனவே அது அருங்காட்சியகப் பொருளாக வைக்கப்படுகின்றது."என்றார். விமானத்தை ஏற்றுக்கொள்வது ஏன் சட்டப்பூர்வமாக இருக்க முடியும் என்பதை விளக்கும் ஒரு ஆவணத்தை அமெரிக்க நீதித்துறை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆவணம் இன்னும் பொது வெளிக்கு அளிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டிடம் விமானத்தை பெறுவதில் உள்ள சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "இதற்கான சட்ட விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிச்சயமாக, இந்த அரசாங்கத்திற்கு செய்யப்படும் எந்த நன்கொடையும் முழுமையாக சட்டப்படி செய்யப்படுகிறது" என்றார். மத்திய கிழக்கில் டிரம்பின் குடும்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது? அமெரிக்காவுக்கான முதலீட்டை அதிகப்படுத்தும் நம்பிக்கையில் அதிபர் டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதிபரின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியரால் நிர்வகிக்கப்படும் டிரம்ப் அமைப்பால் பல வணிக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, டிரம்பின் இந்த பயணம் அமைந்துள்ளது இதில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் சொகுசு குடியிருப்புகள் கட்டும் திட்டங்களும் உள்ளன. ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது வணிக நிர்வாகப் பொறுப்புகளை மகன்களுக்கு ஒப்படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எரிக் டிரம்ப் மே 1 அன்று துபையில் இருந்தார் மே மாதத் தொடக்கத்தில், டிரம்ப் அமைப்பால் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. கத்தாரின் தலைநகரான தோகாவின் வடக்கே ஆடம்பர கோல்ஃப் மைதானமும், சொகுசு குடியிருப்புகளும் கட்டுவதற்கான ஒப்பந்தம் அது. "கத்தாரி டயர் மற்றும் டார் குளோபல் ஆகியோருடன் இணைந்து டிரம்ப் பிராண்டை கத்தாரில் விரிவுபடுத்துவதைப் பற்றி நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம்" என்று அச்சமயத்தில் எரிக் டிரம்ப் தெரிவித்தார். டார் குளோபல் என்பது சௌதி அரசின் பொதுக் கட்டுமான நிறுவனம். கத்தாரி டயர் என்பது கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம். "துபையின் மையத்தில் 80 தளங்களைக் கொண்ட, "ஆடம்பர வாழ்க்கை மற்றும் உலகத்தரமான விருந்தோம்பலுடன் பிராந்தியத்தின் முதல் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் & டவர்" கட்டப்படும் என ஏப்ரல் 30 அன்று டிரம்ப் அமைப்பு அறிவித்தது. எரிக் டிரம்ப் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார். மே 1ம் தேதி அன்று நடைபெற்ற டோக்கன் 2049 என்ற கிரிப்டோகரன்சி மாநாட்டில் அவர் பேசினார். டிரம்ப் இந்த பயணத்தின் போது தனது குடும்ப வணிகத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட போது, அதிபர் தனது தனிப்பட்ட நலனுக்காக எதையும் செய்வதாகக் கூறுவது "அபத்தமானது" என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதிலளித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgq8ep2rn0o2 points
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். - கனடாவின் பிரம்டன் நகரபிதா பட்ரிக் பிரவுன்.-2 points
-
ஐந்து ரூபாய் கட்டணம்
2 pointsஇப்போது எப்படியோ தெரியாது முன்னர் முக்காவாசி வழக்குகள் பங்கு காணி பங்கு கிணறு என்று சகோதரம் சொந்தம் பந்தத்தின் வழக்குகள் தான் என்பார்கள். ஊரிலே ஒரு முதுமொழி சொல்வார்கள் யாரும் குறை எண்ண வேண்டாம். நன்றாக இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்றால் மூன்றேமூன்று விசயத்தை செய்தால் காணும் என்பார்கள். 1)மூளை சுகமில்லாத பெண்ணை திருமணம் செய்து கொடுத்தல் 2) பங்குக் காணியை வாங்கிக் கொடுத்தல் 3) பழைய காரை வாங்கிக் கொடுத்தல்.2 points
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
சிவஞானம், சுமந்திரனின் தமிழரசு கட்சிடன்... சேர சந்தர்ப்பம் உள்ளது என ஊர்க்கிழவி சொல்லுது.2 points
-
தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா
பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரணார்ட், கேட் ஸ்டீஃபன்ஸ் மற்றும் டோனி ஜாலிஃப் பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம். பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே பிரிட்டன் விஞ்ஞானி. 'தங்கத் துகள்களை விட மதிப்பு மிக்க பொருள் இது' என்கிறார் அவர். "சீனாவின் மாதிரிகளை உலகில் யாரும் நெருங்க முடியாது. அவை இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,MAHESH ANAND படக்குறிப்பு,இந்த மாதிரிகளைப் பெற்று வர சீனா வரை சென்றார் பேராசிரியர் மகேஷ் ஆனந்த் 'புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்' லேசர் மூலம் இந்த துகள்களை ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் ஆனந்தின் குழு, நிலவு எப்படி உருவானது, பூமியின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஒத்த அளவில் இருந்த கிரகம் ஒன்று பூமி மீது மோதிய பிறகு அதன் இடிபாடுகளில் இருந்து பிறந்ததுதான் நிலவு என்னும் விஞ்ஞானிகளின் கோட்பாட்டுக்கான ஆதாரம் இந்த தூசித் துகளின் உள்ளே கிடைக்கலாம். 2020இல் சீனாவின் சேங்'இ 5 (Chang'e 5) விண்வெளிப் பயணத்தின் மூலமாக, மான்ஸ் ரும்கெர் எரிமலைப் பகுதியில் இருந்து இந்தக் கற்களை சேகரித்து வந்திருக்கிறது சீனா. கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமான பொருளை ஒரு எந்திரக் கை மூலம் தோண்டி எடுத்து, பூமிக்கு ஒரு கலம் மூலமாக எடுத்து வந்தது சீனா. அந்த விண்கலம் மங்கோலியாவின் உட்பகுதியில் தரையிறங்கியது. 1976இல் சோவியத் விண்வெளிப் பயணங்களில் நிலவின் துகள் மாதிரிகள் கொண்டு வரப்பட்ட பிறகு சீனா 2020இல் எடுத்து வந்தது தான் அடுத்த மாதிரி. இந்தச் செயல்பாடு சீனாவை நவீன விண்வெளிப் பந்தயத்தில் முன்வரிசைக்கு உந்தியது. உலகம் முழுவதும் இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நீண்ட பாரம்பரியம், உலகம் முழுவதும் உள்ள 7 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மாதிரிகள் கிடைக்க வழி செய்திருக்கிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும். பட மூலாதாரம்,MAHESH ANAND படக்குறிப்பு,துகள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பெய்ஜிங்கில் சென்ற வாரம் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ஆனந்துக்கு நிலவின் துகள் நிரம்பிய குப்பி வழங்கப்பட்டது. அங்கு அவர் தன்னைப் போலவே இந்தத் துகள்களைப் பெறுவதற்காக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், ஐரோப்பாவிலிருந்து இருந்து வந்திருந்த சக விஞ்ஞானிகளைச் சந்தித்தார். "அது ஏதோ வேறு உலகம் போல இருந்தது - விண்வெளி திட்டங்களைப் பொருத்தவரை சீனா, பிரிட்டனைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது," என்றார் அவர். தனக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசை, தன்னுடைய கைப்பையிலேயே மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிரிட்டன் வந்தார் அவர். மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது பரிசோதனைக் கூடத்திற்கு நாம் சென்றதும் அங்கிருக்கும் காலணிகளை நன்றாகத் துடைத்து பிளாஸ்டிக் கையுறைகள், மேலுடைகள், தலையை மூடும் வலைகள் எனப் பலவற்றைப் போட்டுக் கொண்டோம். இந்த உயர் பாதுகாப்பு அறை மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. பூமிக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் இந்தத் துகள்களுடன் பூமியைச் சேர்ந்த பொருள் ஏதாவது கலந்தால், அது பேராசியர் ஆனந்த் குழு செய்யும் ஆய்வை நிரந்தரமாகக் சீர்குலைத்துவிடக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சந்திரன் நிலாவின் தூசி வரிசையாக வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களின் முன் நாங்கள் கீழே தரையில் அமர்ந்தோம். அவற்றில் ஒன்றைத் திறந்த பேராசிரியர் ஆனந்த் அதன் உள்ளே இருந்து ஸிப்லாக் பையை எடுத்தார். ஒரு நெக்லெஸ் வைக்கும் அளவிலான மூன்று பெட்டிகளை அதனுள் இருந்து எடுத்தார் அவர். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குப்பி இருந்தது. அவற்றுக்குள் கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ள துகள்களைக் காண முடிந்தது. அவை நிலாவின் துகள் மாதிரிகள் பார்ப்பதற்கு பெரிதாகத் தெரியாவிட்டாலும், அதன் விண்வெளிப் பயணத்தை நினைத்துப் பார்த்தால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படுகிறது. மொத்தமாக 60 மில்லிகிராமுக்கு மேல் தங்களுக்குத் தேவைப்படாது என்கிறார் அவர். "இங்கே சிறியதுதான் மிக அதிகமானது. எங்களது பல வருட ஆய்வுப் பணிகளுக்கு இது போதுமானது. நாங்கள் நுண்துகள்களில் வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,தொழில்நுட்ப வல்லுநர் கே நைட் கே நைட் என்பவர் மற்றொரு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் . இந்தக் குப்பிகள் திறக்கப்பட்டதும் நிலவின் துகள்களில் வேலை செய்யப்போகும் முதல் நபர் அவர்தான். அவர் கடந்த 36 வருடங்களாக பாறைகளை அறுத்து, துகள்களாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ஆனால் நிலாவின் மேற்பரப்பில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒன்றில் அவர் வேலை செய்யப்போவது இதுதான் முதல் முறை. "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்ற அவர் ஒரு வைர பிளேடை வைத்து விண்கற்களை எப்படி அறுப்பார் என்று எங்களுக்கு செய்து காட்டினார். "ஆனால் எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது, காரணம் நம்மிடம் அதிக அளவிலான துகள்கள் இல்லை. திரும்பப் போய் எடுத்துவர முடியாது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று கூறினார் அவர். இன்னும் இரண்டு ஆய்வுக்கூடங்களுக்கு அவை எடுத்துச் செல்லப்படும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,தான் சொந்தமாக தயாரித்த கருவியான Finesse உடன் ஷாஷா வெர்சோவ்ஸ்கி அப்படிப்பட்ட ஆய்வுக்கூடம் ஒன்றில் எண்ணற்ற குழாய்கள், வால்வுகள், வயர்களுடன் மிக நுணுக்கமான வலைப்பின்னலைக் கொண்டிருந்த ஒரு கருவியைக் கண்டோம். கிட்டத்தட்ட 1990களில் இருந்து இந்தக் கருவியை உருவாக்கி வருகிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஷாஷா வெர்சோவ்ஸ்கி. அதில் இருக்கும் ஒரு சிறிய சிலிண்டரை நம்மிடம் காட்டுகிறார். அதில் இந்தத் துகள்களை 1400 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். இதில் இருந்து கார்பன், நைட்ரஜன் மற்றும் சில வாயுக்களை பிரித்தெடுக்க முடியும். இது மிகவும் தனித்தன்மை வாய்ந்த கருவி. தன்னுடைய ஆய்வகத்திற்கு இந்த அரிதான மாதிரிகள் கிடைக்க இந்தக் கருவியும் ஒரு காரணம் என்று நம்புகிறார் பேராசிரியர் ஆனந்த். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,நிலாவின் துகள்களைப் பரிசோதனை செய்யப் பயன்படுத்தும் இன்குபேட்டர் போன்ற கருவி ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ஜேம்ஸ் மாலி, இந்தத் துகள்களுக்குள் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் கருவியை இயக்கப் போகிறார். தான் செய்யப் போவதை நமக்கு பரிசோதனை ஓட்டமாகச் செய்து காட்டினார் அவர். "இந்த தட்டில் துகள்களை வைத்து அதில் லேசரைப் பாய்ச்சுவேன்," என்ற அவர், அந்தக் காட்சி கணினித் திரையில் பெரிதாவதைக் காட்டினார். "அது மெல்லமெல்ல ஒளிர ஆரம்பித்து பின்னர் உள்ளூர உருகத் தொடங்குவதைப் பார்க்கலாம்," என்றார் அவர். பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,சீனா எடுத்து வந்துள்ள நிலவின் துகள் மாதிரிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் வழிவகுக்கும் என நம்புகிறார் இந்த ஆய்வை செய்வதற்கு இந்தக் குழுவிடம் ஒரு வருடம் இருக்கிறது. அது முடியும் சமயத்தில் அவர்களிடம் இருக்கும் மாதிரிகள் மொத்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் சேங்'இ 5 திட்டத்திற்குப் பிறகு சீனா அதிக தூரம் சென்றுவிட்டது. 2024ஆம் வருடம் சேங்'இ 6 நிலவின் அடுத்த பக்கத்தில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. நிலவில் முன்பு எரிமலைக் குழம்பு ஓடியதற்கான ஆதாரம் இந்த ஆழமான மர்மமான பகுதியில் கிடைக்கலாம். "சீனா மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான நெடுநாள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான ஆரம்பமாக இது இருக்கும்," என்று கூறுகிறார் பேராசிரியர் ஆனந்த். "அப்போலோ பயணங்களில் கொண்டு வரப்பட்ட நிலவின் துகள் மாதிரிகளில் இருந்துதான் எங்களில் பலர் தங்கள் தொழில்வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இது ஒரு அருமையான பாரம்பரியம். மற்ற நாடுகளும் இதே விஷயத்தைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்," என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c20npxldy49o1 point
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
ஆப்பிள் நிறுவனத்தில் சீனா, தாய்வான், இந்தியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சங்கள் என்று ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் இந்த வகையான மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே இரண்டரை லட்சங்கள் தான். அவர்களின் ஊதியமோ பல மடங்குகள். இன்று ஆயிரம் டாலர்களாக இருக்கும் ஒரு ஐஃபோன் இங்கு அமெரிக்காவில் செய்யப்பட்டால் அதன் விலை 2500 டாலர்கள் ஆகும் என்கின்றனர். கணிதமும், விஞ்ஞானமும் படிப்பதென்றாலே மேசைக்கு கீழே குனிந்து மறைந்து ஓடும் நிலை தான் அமெரிக்காவில் இருக்கின்றது. இன்று ஒரு மாற்றம் ஆரம்பித்தால் கூட, இன்னும் சில தலைமுறைகள் போக வேண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை இங்கே உருவாக்கிக் கொள்ள. அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களின் நிலை இதுதான். அமெரிக்க அதிபர் 'வெதர் ரிப்போர்ட்' போல தினமும் ஒன்று சொல்வார். அவற்றை அவ்வளவாகக் கணக்கில் எடுக்காமல், பெரிய பல்தேச நிறுவனங்கள் சீனா, தாய்வான், இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மெக்சிக்கோ என்று அவர்களின் பொருட்களின்/சேவைகளின் உற்பத்தி தளங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இதையே தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
குரு நூற்றுக்கு 90 என்றால் நீங்கள் வென்று விட்டீங்கள் என்று அர்த்தம் 90விதம் கூட😁👍........................பத்து விதம் பிழையாக இருக்கலாம்.....................1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பையன் சார், 90 வீதம் என்றால் இங்கு அமெரிக்காவில் அநேக வகுப்புகளில் A- மட்டுமே கிடைக்கும். A+ எடுக்க வேண்டும் என்றால் 95 வீதத்திற்கு மேல் வரவேண்டும். இன்னும் ஒரு ஆறு வீதத்தை எப்படி எடுக்கலாம் என்று யோசிக்கின்றேன்..................🤣. இரு நாடுகளையுமே பலரும் பொய்யர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதில் போதாக்குறைக்கு அதிபர் ட்ரம்ப் வேற அவருடைய கனவுகளையும், நினைவுகளையும் நிஜமாகவே நடந்த நிஜங்கள் என்று விளங்கி கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். வயது நல்லாப் போகப்போக இப்படியான ஒரு தடுமாற்றப் பிரச்சனை வருவது சாதரணமே............... தமிழ்நாட்டில் அமைச்சர் துரைமுருகன் இன்னொரு உதாரணம்.................1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எனக்கும் கஸ்மீர் வரலாறு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நான் கேட்டதுக்கு அவர் சரியான விளக்கம் தர வில்லை...................அவர் நான் கேட்டதுக்கு இனங்க சிறு விளக்கம் தந்து இருந்தார் அதற்க்கு தான் நன்றி சொன்னேன் (குரு ) ரசோதரன் அண்ண எழுதினது நூற்றுக்கு 90விதம் உண்மை................................... சில சமையம் தேவை இல்லாம முரன் படுவதும் பார்க்க தெரிந்தாலும் தெரியாது போல் கடந்து செல்வது சிறப்பு........................பெரும்பாலான கஸ்மீர் மக்கள் இந்திய ஒன்றியத்துக்குள் இருக்க விரும்பல தனித்து இருக்கவே விரும்புகினம் இந்தியன் ஆமி கஸ்மீரில் செய்த கொடுமைகள் பல..............கஸ்மீர் இளம் பெடியங்கள் இந்தியன் ஆமிக்கு எதிரா கல்லால் எறிந்து தங்கட கோவத்தை வெளிப்படுத்தினவை.........................1 point
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அரைநிர்வாண பக்கிரி என அழைத்த காந்தியை, பயங்கரவாதி என அழைத்த மண்டேலாவை பங்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கவில்லையா? அதுபோலத்தான் இதுவும். அநேகமாக சகல “தீவிரவாதிகளுக்கும்” வாழ்வில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே மிகுதி அமையும்.1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன். ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு. # விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.1 point
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல் இவாவின் அணிக்கு நல்ல மாதிரி அமைய வில்லை...............லக்னோ ஓனர் எடுத்ததுக்கு எல்லாம் கோவப் படுவார்................இவா தோல்வியோ வெற்றியோ வீரர்களுக்கு ஊக்கம் கொடுப்பா👍......................1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........ காவ்யா & srh விசிறி ......! 😁1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கென்றால் அவருக்கு முறையான ஒரு பயிற்சியாளர் தேவை என்று நினைக்கிறேன். அத்தோடு உடற்தகுதியையும் பேணவேண்டும். அவரின் பந்துவீச்சு முறைமையால், அடிக்கடி காயம் வரும். மலிங்க இல்லாட்டி பும்ரா இல்லை. அதேபோல் ஒருவர் பதிரானவுக்கும் வேண்டும். அவரின் கை சுழற்சியிலேயே ஒரு ஒழுங்கு இல்லை. தட்டையாக கையை நீட்டி வீசுவது இலகு இல்லை. வேகம் எடுப்பதற்கு எத்தனிக்கும் போதுதான் அதிகமான அகலப்பந்தை வீசுவார். பிராவோ எல்லாம் அதில வின்னன். எப்ப மெதுவாக வீசவேண்டும் தெரியும். இப்போ எல்லாம் வேகத்துக்கு மதிப்பில்லை. துல்லியமான வீச்சுதான் முக்கியம்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா
என்னென்னமோ செய்கிறார்கள் . ........... அவர்கள் செய்யட்டும் ....... நல்லதே நடக்கட்டும் . .......... ! ஏதோ நம்மால் முடிஞ்சது காலையில் பூமியின் துகளை மேனியில் பூசிவிட்டு மாலையில் சவர்க்காரம் பூசி கழுவி மீண்டும் பூமிக்கே அனுப்பத்தான் முடியும் ........... ! 😁1 point- ஐந்து ரூபாய் கட்டணம்
1 pointஇன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா? கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள். முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும். இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. "ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். திகைத்து நின்றார் அவர். சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். "அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன். படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான். இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா? வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html1 point- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிறைய இப்படியான சம்பவங்கள் இடம்பெறும்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ... அப்பிடியா. உங்கடை கதையைக் கேட்டா நீங்கள் 90களின் பையன் போல. 1996க்கு முன் எவ்வளவோ நடந்திருக்கு. இப்போ அப்போதிருந்த வீரர்கள் இருந்தால், தூள் கிளப்புவினம். அவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய வீரர்கள். கிரிக்கெட்டில் Golden era என்று சொல்ல முடியும். இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி என்று சொல்ல முடியவில்லை. கிரிக்கெட் என்றால் என்ன என்று அறிந்தது அந்தக் காலகட்டத்தில் தான். இலக்கங்களையோ, தரவுகளையோ வைத்து ஒரு வீரையோ அல்லது ஒரு அணியையோ அனுமானிக்க கூடாது என்பது அன்றைய காலகட்டத்தில் நான் அறிந்தது, படித்தது1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கு மட்டும் இருந்த சிறப்பு உரிமைச் சட்டங்களை (சட்டம் 370 மற்றும் 35A) நீக்கியதற்கான பிரதானமான காரணமாக இந்திய ஒருமைப்பாட்டையும், காஷ்மீரினூடாக முழு இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு/பயங்கரவாத பிரச்சனைகளையுமே காரணங்களாக முன்வைத்தது. ஒரு தேசத்துக்குள் இரண்டு தேசங்கள் இருக்க முடியாது என்பதே பாஜகவினதும், இதை ஆதரித்த இந்திய மக்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முடிவை பல தமிழர்களும் ஆதரித்தார்கள். பலரினதும் பார்வையில் ஒரு பொதுவான இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இருந்தது. ஒரு வரலாற்றுப் பார்வை அல்ல. இன்று இதே போன்று தான் எம் மக்களிடையே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானிற்கு ஆதரவான பார்வையும் உள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேச வழமைச் சட்டம் போன்ற கூறுகளும் இங்கே சிறப்பு உரிமைகளாக இருப்பதால், காஷ்மீர் மக்கள் தவிர்ந்த ஏனையோர் அங்கு நிலம் வாங்க முடியாது. காஷ்மீரின் அபிவிருத்தியை இது தடுக்கின்றது என்ற பொருளாதாரக் காரணியும் சொல்லப்பட்டது. இந்தச் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்ட பின், காஷ்மீர் அபிவிருத்தி அடைந்து உள்ளதா? காஷ்மீரிய மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்று இப்போது சொல்கின்றார்களா? ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், அன்று பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்தே அன்றைய சுதந்திர நாடான காஷ்மீர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தங்களே இந்த சிறப்பு உரிமைகள். இன்று அவர்களுக்கு இரு பக்கங்களாலும் நெருக்கடிகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எனக்கு ஒரு காஷ்மீரிய குடும்பம் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள். இந்துக் குடும்பம். எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களைத் தனியே விட்டுவிடுங்கள் என்று தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். ஏனைய காஷ்மீர் மக்களின் அபிப்பிராயம் எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய அபிப்பிராயமும் இதுவே.1 point- ஐந்து ரூபாய் கட்டணம்
1 pointபெற்றோர் எழுதி வைக்காத விடத்து அனைத்திலும் எல்லா பிள்ளைகளுக்கும் பங்கு கொடுக்க வேணும் . அந்த கனடா பிள்ளைக்கு தெரியாது போலும்..அண்ணன் காரன் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பார் போலும்.பேராசை அதிகம் தான்.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம் சொல்பவர் நிலாம்டீன். முஸ்லிம் லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்கு குண்டுகள் வெடிக்க எல்லாம் தெரியாது. அவர்களுக்கு அன்பை அள்ளி வீச தான் தெரியும். இலங்கை சஹ்ரான் மாதிரி1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
விளக்கத்துக்கு நன்றி நீங்கள் பூர்விகமாய் தமிழ் நாடா....................................1 point- அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
அண்ணன் அமெரிக்காவின் சொல் கேட்டு நடந்த ஐரோப்பியர்கள் இப்போது தலைமுடியை பிய்த்துக்கொள்வார்கள்.1 point- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
.கரியின் பொறுப்புக்கள் என்ன? முக்கிய பொறுப்புகள்:குற்றம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு: கனடாவின் குற்ற விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள். போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுடன் ஒருங்கிணைப்பு. எல்லைப் பாதுகாப்பு: கனடா-அமெரிக்கா எல்லை பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள். தீவிரவாதம் மற்றும் உளவு நடவடிக்கைகள்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களைக் கண்காணித்தல். தொழிலாளர் சட்டங்கள்: பணியிட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய கொள்கைகள். 2. சிறப்பு திட்டங்கள்:குடியுரிமை மற்றும் குடிவரவு: புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிவரவு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல். பழிவாங்கும் குற்றங்கள் (Hate Crimes): இன, மத, பாலியல் அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து நடவடிக்கை. போதைப்பொருள் கட்டுப்பாடு: போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள்.1 point- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
எங்கு புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்களோ அங்கு ஒரு சின்ன சுமந்திரனாவது இருக்கும். அதுக்கு பெயர்தான் தலைவிதி,தலையெழுத்து. 😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது ஒரு அதிர்ச்சிகரமான போட்டி. இப்பிடி, ஏதாவது ஒன்று, ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் நடைபெறும். பல உலகக் கிண்ணத்தில் இலங்கையும் அப்பிடித்தான். 1996 வரையும், இலங்கை 4 போட்டிகளைத்தான் வென்றிருந்தது. பாக்கிஸ்தான் வென்ற 1992ல், இலங்கை ஒரு போட்டியிலும் வெல்லவில்லை. 1996ல் எல்லாம் மாறியது. ஒரு போட்டியையும் தோற்காமல், கோப்பையைத் தூக்கியது.1 point- நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்.
ஐயாவின் தோற்றம் மிக நீண்ட காலமாக ஊடகங்களில் பார்த்து பரீட்சயமான ஒன்று. நேரிலும் சில தடவைகள் கண்டுள்ளேன் என நினைக்கின்றேன். இவரது பணிகள், வாழ்க்கை பற்றிய பதிவுகளை பகிருங்கள் வாசித்து பார்ப்போம். ஓம் சாந்தி!1 point- உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
அவர் தனக்கு தேவையானதை வைத்துக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் .......... அது ஏழ்மையல்ல .......... இன்றைய உலகில் பொருளாதாரத்தை வைத்து அளவீடு செய்வது சரியல்ல . ......... அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . ....... ! 🙏1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நேற்று ஒரு பாகிஸ்தான் ஆளின் விபரிப்பை வாசித்தேன். அவரது தியரிப்படி இந்தியா முதலில் அணு ஆயுதத்தை ஏற்றி செல்ல கூடிய பிரம்மோசில் அணு ஆயுதத்தை ஏற்றாமல், வழமையான வெடிபொருளை நிரப்பி அனுப்பியாதம். இதில் வருவது அணு ஆயுதமா இல்லையா என தெரியாத நிலையில் - இந்த வெருட்டுக்கு பதில் சொல்ல… இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்படும் வலையமைப்பை பாக்கிஸ்தான் ஜாம் பண்ணியதாம். இவைதான் அணு ஆயுதத்தை காவி செல்ல கூடிய இந்திய ஏவுகணைகள். இதை ஜாம் பண்ணி முடக்கி விட்டால் இந்தியாவிடம் அணுகுண்டு இருந்தாலும் அதை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் - ஜெய்சங்கரும், தோவால் வாசிங்டனுக்கு போனை போட்டார்களாம். பாகிஸ்தான் ஆளின் விபரிப்பு. கஞ்சா கப்ஸா கதையாகவும் இருக்கலாம். தனக்கு இந்திய இராஜதந்திரிகளிடம் தொடர்பும் இருப்பதாக அவர் முன்பே யாழில் எழுதி இருக்கிறார். ஒரு குண்டு மணி அளவு கூட இந்த தாக்குதல்தாரிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க ஆதாரம் காட்டவில்லை. சகல வெளிநாட்டு ஊடகங்களும் இதை கேட்டன. ஆனால் இந்தியா எந்த ஆதாரத்தையும் கொடுக்காமல் தன்னிச்சையாக தாக்கியது.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை. எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல. ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம். விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
6 வாயில்களையும் அடிச்சிருக்கிறான் இந்தியன் என்றால் பாருங்கோவன்.😁1 point- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
முன்னர் இருந்த நீதித்துறையை விடவும் அதிகம் பொறுப்புகளும், பட்ஜெட்டுகளும் கூடிய அமைச்சு. வாழ்த்துக்கள் ஹரி !!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட் செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
18 அல்லது 21 வயதுக்குட்பட்டவர் எனில், சுயமாக சிந்திக்க தெரியாத வயது என பாவம் பார்க்கலாம். ஆனால் 27 வயதில் அதுவும் ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிய பின்னும், ஹெரோயின் போன்ற மிக மோசமான போதைப்பொருளின் விளைவு பற்றிய அக்கறை இன்றி, பொறுப்பும் இன்றி உட்கொண்டு இருக்கின்றார். இப்படியானவர்கள் இருந்து என்ன பிரயோசனம்? படுகுழி எனத் தெரிந்தும் அதற்குள் போய் விழ விரும்புகின்றவர்களை ஒன்றும் செய்ய ஏலாது.1 point- ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
அவர் சிங்களவர் தான் பெயர் Abailija Patawadige Pathum Udayanga வயது 31 https://essential-japan.com/news/sri-lankan-man-arrested-over-death-of-female-brazilian-tourist-in-japan/1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?1 point- எமது கிராமத்தின் வரலாறு
1 pointஎழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பாடும் என்ற நிலையில் சந்தோசமாகவும் அமைதியாகவும் எந்தவிதமான கோபதாபம் பிணக்குகளின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆதிமுதல் “பெரும்படை” என்னும் தெய்வத்தையே தமது குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். வழமையாக வருடாந்தம் பங்குனி மாதம் கொண்டாடப்படும் பெரும் பொங்கல் தினத்தையே பெருவிழாவாகக் கொண்டாடி வந்தனர். ஒரே சமூகமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற சிலரின் தீய எண்ணத்தாலோ ஏதோ ஒரு காரணத்தாலோ ஒரு பொங்கல் தினத்தன்று இவர்களுக்கிடையே பிரச்சனைகளும், மனஸ்தாபங்களும், குரோதங்களும் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தமக்கொன அதே பெயரில் இன்னொரு “பெரும்படை” என்னும் கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர். அன்று தொடங்கிய பகை நீண்ட காலம் வேண்டத்தகாத சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறமைகளையும் இவர்களுக்கிடையே வளர்த்தது. இது இவர்களுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்து இவர்களின் சீரான வாழ்வைச் சீரழித்தது. இம் மக்கள் கடற்கரையையண்டி வாழ்ந்தபடியால் கடல்படு திரவியம் தேடும் தொழிலே பிரதான தொழிலாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் விவசாயத்தையும் தம் தொழிலாகக் கொண்டனர். அக்காலம் போதிய போக்குவரத்து வசதி இன்மையால் தாம் பெற்ற சரக்கைத் தனங்கிளப்பிற்கு நேரேயுள்ள கடற்கரையிலிருந்து காவுதடி கொண்டு சாவகச்சேரிச் சந்தையில் விற்றுப் பணமாக்கினர். இந்த நிலை வீண் சிரமத்தையும் கஷ்டத்தையும் கொடுத்ததைக் கண்டு ஒரு சில பெரியவர்களினதும் நல்ல உள்ள கொண்டவர்களது மன எண்ணத்தின்படியும் தம் கடற்கரையிலே தாம் பிடித்த சரக்கை விற்பனை செய்து சம்பாதிப்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கம் உதயம் இம்மக்களை ஒன்றுபடுத்தி இவர்களது வாழ்வைச் சிறப்புறச் செய்யவும் வீணான குரோதங்களை இல்லாமற் செய்யும் நோக்கத்திற்கும் ஒரு ஸ்தாபனம் தேவைப்பட்டது. அதன் நிமித்தம் கூட்டுறவுச் சங்கம் உதயமானது. அதன் தலைவராக தச்சன்தோப்பைச் சேர்ந்த அறிவு மிக்க திருவாளர் முருகேசு காசிப்பிள்ளையும், செயலாளராக திரு கனகர் சதாசிவம், பொருளாளராக திரு வேலுப்பிள்ளை பொன்னம்பலம் ஏனைய சிலர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர். இந்நிகழ்வு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. சந்தை ஆரம்பம் கைதடி நாவற்குழி தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சந்தையைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு கடற்கரையோரம் சிறு கொட்டிலை அமைத்தது. நல்ல நாளாக சித்திரைப் பரணி தினத்தன்று வியாபாரம் தொடங்கத் தீர்மானித்தனர். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் பல ஊர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தினர். அன்றைய தினம் தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையுள்ளோர் சமூகம் கொடுத்து மீன் வகைகளைக் கொள்வனவு செய்தாலும் நாளடைவில் – காலப்போக்கில் மக்கள் அநேகம் பேர் கூடவும் வியாபரம் பெருகவும் வழி உண்டாயிற்று. வியாபாரத்தைக் கண்காணிக்க மகேசனும், சிப்பந்தியாக திரு.வி.சின்னத்துரையும் நியமிக்கப் பெற்றனர். சிப்பந்தி நகைச்சுவையாக “காத்தடி கொண்டு காவினதெல்லாம் அந்தக்காலம், இப்போ கையிலே தூக்கி கரையிலை வைப்பது இந்தக் காலம்” எனக் கவிதையும் யாத்துப்பாடியது இப்போதும் காதில் கேட்கின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் சேவை கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதும் ஆரம்பத்திற் குறிப்பிட்ட ஒரு தொகையினர் அங்கத்துவராகச் சேரப் பின்னடித்தாலும், ஏனையவர்களோடு சங்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. சங்கத்திற்கு ஒரு பெயர் வைப்பதற்காக பூசாரி க.சதாசிவம் பூசை செய்யும் வைரவர் கோயில் முன்றலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடற்றொழில் இலாகாவைச் சேர்ந்த திரு சோமசுந்தரம் என்னும் உயர் அதிகாரியால் “ஸ்ரீ மகாவிஷ்ணு கடற் தொழில் கூட்டுறவுச் சங்கம்” என்னும் பெயர் மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்கம் வளர்ச்சியடைந்து அங்கத்துவர்களுக்கு கடன் வசதி, வலை, கம்பு, வள்ளம் போன்ற உபகரணங்களையும் பெற்றுக் கொடுத்தது. இதனைக் கண்ட ஏனையோரும் அங்கத்துவர்களாகச் சேரத் தொடங்கினர். கடற்கரை வீதி வரலாறு கூட்டுறவுச் சங்கத்தின் முதலாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடற்கரை மைதானத்தில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வே.குமாரசாமி அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். கோவிலாக்கண்டி சந்தியில் இருந்து கடற்கரை வரையான பாதை மோட்டார் வாகனமன்றி துவிச்சக்கர வண்டி கூட செல்ல முடியாதளவு பெரும் மண் தரையாக இருந்தபடியால் பாராளுமன்ற உறுப்பினர் தமது மோட்டார் வாகனத்தை திரு.வே.சிவசுப்பிரமணியம் ஆசிரியரது வீட்டில் நிறுத்தி விட்டு கூட்டம் கூடும் இடத்திற்கு நடந்தே வந்தார். மக்களும் மேளதாளத்தோடு மாலை அணிவித்து மிகவும் மரியாதையாக அழைத்து வந்தனர். அன்றைய தினம் தனது பேச்சின் போது, தான் இவ்விடத்திற்கு மோட்டார் வாகனத்தில் வரமுடியாது நடந்தே வரவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அடுத்த முறை இவ்விடத்திற்கு வருவதாயிருந்தால் தனது மோட்டார் வாகனத்திலேயே இவ்விடம் வந்து இறங்குவேன் எனக் கூறினார். அவர் அப்பொழுது பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவராகவும் இருந்தபடியால் குறுகிய காலத்தில் வீதிக்கு ரூபா 10000/= ஒதுக்கப்பட்டது. அப்போது சதத்தில் பணப் புழக்கம். இப்போது இத் தொகை பத்துக் கோடிக்குச் சமனாகும். இவ் வீதியை புனரமைக்க காரைநகைரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அவரும் விரைவில் வீதியைச் சீரமைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் தாம் கூறியவாறு மோட்டார் வாகனத்தில் வந்திறங்கினார். இவ் வீதி சீரமைக்கப்பட்டதால் கிராமமும் மக்களும் பெரிதும் அபிவிருத்தியடைந்ததோடு பெற்றவராயினர். பல நன்மைகளும் கிடைக்கப் பெற்றவராயினர். இவ்வேளை இக் கிராமத்து மக்களை ஒன்று படுத்துவதில் திரு.க.சதாசிவமும் திரு.வே.பொன்னம்பலமும் பெரிதும் முயற்சியெடுத்தனர். ஓரளவு வெற்றியும் நிறைவும் பெற்றனர். பாடசாலை ஆரம்பம் இக்கிராமத்துப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியை யா/கோவிலாக்கண்டி மகாலக்குமி வித்தியாசாலையில் கற்று வந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அப்பாடசாலையிற் கற்றவர்கள் அதனோடு தமது கற்றலையும்,சிலர்நாலாந்தரத்தோடும் நிறுத்தியுள்ளனர். இதற்கு அவர்களது போக்குவரத்து வசதியீனமும் வறுமையும் காரணமாக அமைந்துள்ளது. இக்காலத்தில் நான் க.பொ.சா/தரப்(SLC) பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.உ/ தரம்(HSC) சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கற்று வந்த வேளையில் திரு.ந.இளையப்பா ஆசிரியர் அவர்களைச் சந்தித்த வேளையில், இக் கிராமத்துப் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்காமல் நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு என ஒரு பாடசாலையை எமது கிராமத்திலே ஆரம்பித்தால் அவர்கள் தொடர்ந்து கற்கச் சந்தர்ப்பம் உண்டாகுமென, ஆண்டவன் அருளால் உதித்த எனது எண்ணக் கருத்தினை வெளிப்படுத்தினேன். அதற்கு அந்த நல்ல உள்ளம் கொண்ட பெரியவரும் தானும் வேண்டிய உதவி செய்வதாகவும் பாடசாலையை ஆரம்பிக்கும்படியும் கூறினார். அப்போதுள்ள சமூக, சமுதாய சூழ்நிலை இக் கைக்காரியத்துக்கு கடும் எதிர்ப்பும், பகையும் கிடைக்கும் என்றுணர்ந்தும் நல்லதொரு காரியத்துக்கு ஆண்டவன் பக்க பலமாக துணைநிற்பான் என்ற அசையாத துணிச்சலோடும், நம்பிக்கையோடும் பாடசாலை ஆரம்பிக்கத் தொடங்கினேன். பாடசாலை நடாத்துவதற்கு ஒரு இடம், கட்டிடம் தேவைப்பட்டது. அப்பொழுது கடற்றொழிளாருக்கென கட்டிடம் ஒன்று புதிதாகக் கட்டப் பெற்ற நிலையில் இருந்தது. அதனை சங்க நிர்வாகிகளுடன் கதைத்துப் பெற்றுள்ளேன். 1960 ஆம் ஆண்டு புரட்டாதித் திங்கள் 30.09.60 நவராத்திரி காலத்தின் விஜயதசமியன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.ந.நவரத்தினம் அவர்களைக் கொண்டு திறப்பதற்கு தீர்மானித்த வேளை அவர் அவசியம் பாராளுமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் துணைவியார் திருமதி இரகுபதி நவரத்தினம் அவர்களை அனுப்பியிருந்தார். அந்த அம்மையாரும் சமூகம் கொடுத்து அன்றைய தினம் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாடசாலை இக் கிராமத்தில் தொடக்கி வைக்கப் பெற்றதால் பிரிந்து நின்றவர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும் பழைய பகைமைகளை மறந்து சந்தோஷமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பாடசாலையை அரசு பொறுப்பேற்பதாக இருந்தால் நிரந்தரக் காணி, நிரந்தரக் கட்டிடம் தேவைப்பட்டது. இதற்காக இப்போது பாடசாலை அமைந்துள்ள காணியை உரியவர்களான திரு.மு.கனகர், திரு.ம.ஆறுமுகம், திருமதி ம.சின்னாச்சி என்போரிடம் இருந்து பெருமுயற்சி எடுத்து சம்மதம் பெறப்பட்டது. உடனே நொத்தரிசுக்கு கிளாக்கராக இருந்த திரு.வ.செல்லத்துரை என்பவரைக் கொண்டு உறுதி எழுதப்பட்டது. இனி நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும். அதற்குரிய கல், சீமெந்து பாடசாலைக் காணிக்கு கொண்டு வர முடியாத நிலை. அந்தளவுக்கு புழுதி மணல் நிரம்பிய பாதை. திரு.சு.கந்தையா என்பவர் தனது மெசினில் கொண்டு வரும் கல், சீமெந்தை தற்போது ஆலடி அம்மன் கோயிலாகவிருக்கும் இடத்தில் பறித்துவிட்டுப் போய் விடுவார். அப்போது எம்மிடம் வண்டில் மாடு இருந்தமையால் மாடுகள் இழுக்கக்கூடிய அளவு கல், சீமெந்தை ஏற்றி பாடசாலைக் காணிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். ஏனைய உதவிகள் பெற்றோராலும் கிடைக்கப் பெற்று கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றது. கிணற்றினைத் திரு.வியாழரத்தினமும் அவரது மகன் தியாகராசா உடன் நானும் சேர்ந்து வெட்டினோம். மேசன் திரு.வ.சிதம்பரநாதனுக்கு நான் உதவியாளராக இருந்து கிணறு கட்டி முடிக்கப்பட்டது. அப்பொழுது இப் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியரான திருமதி அ.இளையப்பா அவர்கள் தலைமை ஆசிரியராகவும், திரு.வே.இராமர், செல்வி.வி.சிவபாக்கியம், செல்வி.சி.இராசேஸ்வரி பின்பு செல்வி.சி.சின்னக்குட்டி ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். வகுப்புகள் தரம் | தொடக்கம் தரம் V வரையுமே நடைபெற்றன. அரசு பொறுப்பேற்றல் அப்போதுள்ள கல்விச் சட்டத்தின்படி பாடசாலை ஆரம்பித்து சில மாதங்களில் பொறுப்பேற்க வேண்டிய நிலையிருந்தும் எதிர்ப்புகள் காரணமாக காலதாமதமாகியது. அப்போது மத்துகம் தொகுதி பா.உறுப்பினராக இருந்த திரு. பங்குவில என்பவரை இங்குள்ள அவரது நண்பர் பாடசாலை விடயமாகக் கதைத்ததனால் அவர் பாராளுமன்றத்தில் எமது பாடசாலையின் விபரம், நிலைமையை எடுத்துக் கூறியதால் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.வை.துடாவையின் உத்தரவின் பேரில் யாழ் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய கல்வியதிகாரி திரு.எஸ். முத்துலிங்கம் அவர்கள் 1963 ஆம் ஆண்டு தை மாதம் 30ந் திகதி பாடசாலைக்கு சமூகம் கொடுத்து அரசாங்க பாடசாலையாகப் பதிவு செய்து பொறுப்பேற்றதை சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளார். இவ் வைபவம் இக்கிராமத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனைத் தொடர்ந்து பாடசாலை வளர்ச்சி அடையத் தொடங்கியது. 1964ஆம் ஆண்டு திரு. V.S.கந்தையா அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதிலிருந்து அந்த வருடமே கிராமசபை அங்கத்தவர் திரு.வே.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றதும், பரீட்சைகளில் மாணவர் திறமை காட்டி கல்வியில் முன்னேற்றமடைந்ததும், பெற்றார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதும் மறக்க முடியாதவையாகும். 1965, 1966 ஆகிய இரு வருடங்கள் ஆசிரிய பயிற்சி பெற்று 1967 ஆம் ஆண்டு தொடக்கம் க/புசல்லாவை சரஸ்வதி ம.வியில் 6 வருடங்கள் கடைமையாற்றி விட்டு இப் பாடசாலைக்கு மாற்றம் பெற்று வந்த பொழுது ஆண்டு 9 வரையும் உள்ள பாடசாலையில் ஆண்டு 5 வரையும் இருப்பதைக் கண்டு அதிபர் திரு.வே.நாகராசாவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு அதிபர் தரம் கிடைத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ம/கள்ளியடி அ.த.க பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். ஒன்பது வருடங்கள் அம்மாவட்டத்தின் பாடசாலைகளில் கடமையாற்றி விட்டு 1984ஆம் ஆண்டு யா/ கைதடி முத்துக்குமாரசாமி ம.வி.க்கு பிரதி அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது யா/கல்வித் திணைக்களத்தில் பிரதம கல்வி அதிகாரியாக கடமையாற்றிய திரு.கு.சோமசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்றேன். அப்பொழுது பதில் அதிபராக கடமையாற்றிய செல்வி இ.வசந்தாதேவி பாடசாலைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 1984ம் ஆம் ஆண்டு பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நான் 5ம் வகுப்புக்கு மேல் வகுப்புகள் வைப்பதற்கு முயற்சி எடுத்தேன். கொத்தணி முறையில் நிர்வாகம் இயங்கிய காலம் கைதடிக் கொத்தணி அதிபர் திரு.சோ.கணேசலிங்கம் தலைமையில் நடந்த அதிபர்கள் கூட்டத்துக்கு கல்விப் பணிப்பாளர் திரு. மன்சூர் அவர்களும் சமூகம் கொடுத்திருந்தார். அவரிடம் இப்பாடசாலையில் 6ம் வகுப்பு வைக்க வேண்டிய தேவைகளை எடுத்துக் கூறியதோடு அது பற்றிய கடிதமும் கொடுத்துள்ளேன். கொத்தணி அதிபர், ஏனைய அதிபர்கள் யாவரும் ஒத்துழைப்பு நல்கியதால் கல்விப் பணிப்பாளர் உடனடியாக 6ம் வகுப்பு வைப்பதற்கு அனுமதி தந்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்க சந்தர்ப்பம் உண்டானது. 9ம் வகுப்பு வைப்பதற்குக் கல்வி அமைச்சிலிருந்து அனுமதி கிடைக்க வேண்டும். அதற்கு இங்குள்ள கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிபார்சு செய்ய வேண்டும். நானும் பலமுறை வேண்டுதல் செய்தும் அவர்களும் ஏதோ காரணங்களைக் கூறி சிபார்சு செய்வதைப் பின் போட்டுக் கொண்டு வந்தார்கள். இந்தநிலையில் திருமதிபுஸ்பாகணேசலிங்கம் அவர்கள் சாவகச்சேரி கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலத்தில் மாணவர்கள் மேல் வகுப்பு படிப்பதற்குப் படும் கஷ்டங்களையும், போக்குவரத்து வசதியின்மையையும், வறுமை நிலையையும் எடுத்துக் கூறியதன் பேரில் இதனை நன்குணர்ந்து 9ஆம் வகுப்பு வைப்பதற்கு சிபார்சு செய்தமையை இந்நேரம் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் வைக்கப் பெற்று 1996ஆம் ஆண்டு க.பொ.சா/தரப் பரீட்சை எழுத வேண்டியிருந்த பொழுது பொல்லாத காலமாக நாட்டில் யுத்தம் மூண்டது. இக் கால இடைவெளிக்குள் மாணவர்கள் கல்வியில் அதீத முன்னேற்றம் கண்டனர். கல்வி அதிகாரிகளின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றனர். இப்பாடசாலையில் பன்னிரண்டு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் என்னோடு ஒத்துழைத்துக் கடமையாற்றிய ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி, அர்ப்பணிப்பான சேவை, ஆக்கபூர்வமாக கல்விப்பணி, மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றம் காணச் செய்தமையோடு பாடசாலைக்குப் பெரும் புகழையும் பெருமதிப்பையும் தேடித் தந்தன. இதனால் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நல்ல அதிபர் தெரிவில் மாவட்ட மட்டத்தில் நல்ல அதிபராகத் தெரிவுத் தெரிவு செய்யப் பெற்று கல்விப்பணிப்பாளர் திரு.இ.சுந்தரலிங்கம் அவர்களால் பாராட்டப்பெற்றுச் சான்றிதழும் பெற்றுள்ளேன். இந்தப் பெருமை எனக்கு கிடைக்கச் செய்தமை இக்காலத்தில் கடமையாற்றிய ஆசிரியர்களையே சாரும் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இக்கால இடைவெளி எல்லைக்குள் பாடசாலை அபிவிருத்தியோடு கிராமத்தின் அபிவிருத்தியிலும் பங்கு பெறும் வாய்ப்பு உண்டானது. தலைமையாசிரியர் திரு.V.S.கந்தையா அவர்களது பெரும் பங்களிப்புடன் கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் மூலம் பாடசாலை வீதி, பாடசாலை கடற்கரை வீதி, புதிய கிணறு கட்டியது, ஒழுங்கைகள் திருத்தம் போன்ற பணிகள் செய்யப் பெற்றன. உணவு இக் கிராமத்து மக்கள் சங்கக் கடையிலேயே அத்தியாவசியமான அரிசி,மா,சீனிபருப்பு போன்றவற்றைகூப்பன் முறையில் பெற்றனர். இச் சங்கக்கடை கைதடி நாவற்குழி வடக்கிலுள்ள முருக மூர்த்தி கோயிலுக்கருகில் அமைந்துள்ளது. இம் மக்கள் பெரும் வயல் வெளியைத் தாண்டியே நடந்து சென்று பொருள்களைப் பெற்று வந்தனர். மாரி, மழை காலங்களில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்தனர். இதனால் ஒரு பகுதியினர் கைதடி நாவற்குழி (வடக்கு) பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும், ஒரு பகுதி மக்கள் கோவிலாக்கண்டி மத்தி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலும் கூப்பன் பொருட்களைப் பெற்று வந்தனர். நாளடையில் இவ்விரு சங்கத்தினரும் இக் கிராமத்திலேயே இரு கிளைகளை நிறுவி திரு.சி.சங்கரப்பிள்ளை ஒரு கிளைக்கு மனேஜராகவும், திரு.க.கனகரத்தினம் என்பவரை ஒரு கிளையின் மனேஜராகவும் நியமித்து பொருட்களை விநியோகித்து வந்தனர். இந்த இழிநிலையைப் போக்கும் முகமாக நாம் எமது கிராமத்துக்கென பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை நிறுவ முயற்சி எடுத்தோம். அப்போது உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு.க.சிவப்பிரகாசம் என்பவரும் அரியாலையைச் சேர்ந்த கூட்டுறவுப் பரிசோதகர் திரு.க.பொன்னுத்துரை என்பவரும் பெரும் உதவி செய்தனர். கூட்டுறவுப் பரிசோதகருக்கு அவர் வேண்டுதலின் பேரில் இம் மக்களின் தொகை விபரங்களை வேலையாள், சாதாரணம், பிள்ளை, குழந்தை என்ற வகையில் வகைப்படுத்தியும் மேலும் வேண்டிய விபரங்களையும் வழங்கி உதவினேன். அப் பெரியவர்களது முயற்சியினால் இப் பகுதிக்கு கைதடி நாவற்குழி தெற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என தனியாக சங்கம் உருவானது. இதற்கும் கடைசி நேரத்திற் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவற்றை எழுத நான் விரும்பவில்லை. தென்மராட்சி மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க சமாசத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு திரு.க.ஐயாத்துரை என்பவரது வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப் பெற்றது. திரு.க.கனகரத்தினம் மனேஜராகக் கடமையாற்றினார். திரு.வே.பொன்னம்பலம் அடிக்கடி கண்காணித்து சங்க வருவாயைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதால் ஓரிரு வருடங்களில் சங்கம் பெரும் இலாபத்தை ஈட்டியது. அந்த இலாபப் பணத்தைக் கொண்டே புதிதாகக் கட்டிடம் கட்டப் பெற்றுள்ளது. அதுவே இப்போதுள்ள சங்கக் கட்டிடமாகும். உடை கைதடி நாவற்குழி தெற்கு கி.அ.சங்கத்தின் தலைவராக இருந்த நானும் செயலாளரான திரு.ஆ.கந்தையாவும் கிராம அபிவிருத்திச் சிறு கைத்தொழிற் திணைக்களத்தினருடனும் தொடர்பு கொண்டபடியால் மீசாலையிலிருந்து ஒரு தையற் பயிற்சி ஆசிரியர் இங்கு வந்து தையல் பயிற்சி வகுப்புகளை பயிற்றுவித்தார். புதிய வடிவில் சட்டைகளை அமைக்கவும், விதம் விதமாக றேந்தைகள் பின்னவும், அழகான வகை வகையான தையற் பயற்சிகளையும் நடாத்தினார். இப் பயிற்சியால் பெண்களும் குறிப்பாக இளம் யுவதிகளும் நன்மையடைந்தனர். கண்காட்சியும் நடாத்தப்பட்டது. வைத்தியம் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகா விஷ்ணு க.தொ.கூ. சங்கம் அதன் நிர்வாகத் திறமையால் இலங்கையில் முதற் தரமான சங்கமாகக் கணிக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது கடற்றொழிற் திணைக்களப் பணிப்பாளர் திரு.பீற்றர் அவர்கள் இங்கு சமூகம் கொடுத்து விருந்துபசாரத்தில் பங்கு பற்றிய பொழுது இங்கு வைத்தியத் தேவையை எடுத்துக் கூறிய பொழுது தான் கொழும்பு சென்று சுகாதாரப் பகுதியினருடன் கதைத்து ஒழுங்குபடுத்துவதாகக் கூறினார். சில மாதங்களின் பின் கைதடி வைத்தியசாலையிருந்து வைத்தியரும், உதவியாளரும் வார நாட்களில் இரண்டு நாட்கள் சமூகம் கொடுத்து வைத்திய சேவை ஆற்றினர். சிலரது வேண்டுகோளினால் ஏனைய கிராம மக்களும் பயன் பெறும் பொருட்டு ஆசிரியை திருமதி இராசம்மா வீட்டுக்கு மாற்றினர். பின்னர் மறவன்புலோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போது எந்த இடத்திலும் வைத்திய வசதி இல்லை. மின்சாரம் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள், பாடசாலை, கோயில்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றி கைதடி நாவற்குழி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்த பொழுது, அப்போதைய யாழ் மாவட்ட அமைச்சருக்கு மின்சாரத்தின் அவசிய தேவை பற்றிக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து எனது விடயம் கவனத்தில் எடுக்கப்படும் எனப் பதிற் கடிதம் கிடைத்தது. சாவகச்சேரிப் பிரதேச உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.சுந்தரம்பிள்ளை அவர்களுடன் மின்சாரத்தின் தேவை பற்றிக் கதைத்த பொழுது அப்பிரதேசம் நீண்ட வயல் வெளிப்பிரதேசம், அதிக பணம் தேவைப்படும், ஆசிய பவுண்டேசனுக்கு தெரியப்படுத்துகின்றேன், கிடைத்தால் உங்கள் அதிஷ்டம் எனக் கூறினார். சில மாதங்களின் பின் எமது பகுதிக்கு மின்சாரம் வழங்க அனுமதி கிடைத்ததாகவும், அது கோவிலாக்கண்டி பகுதிக்குப் போக இருப்பதாகவும் தகவல் அறிந்தோம். உடனடியாக மாவட்ட அமைச்சரது கடிதத்துடன் நான் தனஞ்செயன் என்பவருடன் அரசாங்க அதிபரைச் சந்தித்து கடிதத்தையும் காட்டி இது எமது பகுதிக்கே வரவேண்டியது என்றும், உதவி அரசாங்க அதிபருடன் கதைத்த விடயத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சுன்னாகத்தில் உள்ள மின்சாரசபை அதிகாரிகளைச் சந்திக்கச் சொன்னார். உடனே சுன்னாகம் சென்று மின்சாரசபை உயர் அதிகாரிகளைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். அவர்களும் நாளை மின்சாரக் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வாகனம் வரும். கைதடிச் சந்தியிலிருந்து வாகனத்தை மறித்து அவர்களுக்கு இடத்தைக் காட்டும்படியும் கூறினார்கள். அடுத்த நாட் காலை கைதடிச் சந்தியிற் காத்திருந்த வேளை மின்சாரம் பொருத்துவதற்கான வாகனம் தூண்களை ஏற்றிக் கொண்டு வந்தது. அதனை மறித்து வாகனத்தில் ஏறி இடத்தைக் காட்டினேன். கடற்கரையிலிருந்து தூண்கள் பறிக்கப்பட்டு விரைவில் வேலைகளைத் தொடங்கினார்கள். முதலாவது தூண் தற்போது வயலோரம் அம்மன் கோயில் செல்லும் வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி நாட்டப்பட்டது. திரு.க.ஆறுமுகம் இந்த இறைபணியைச் செய்தார். விரைவாக மின்சார வேலைகள் செய்து முடிக்கப் பெற்றது. மக்களும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டாடினர். இதுவே மின்சாரம் கிடைத்த வரலாறு. இதனைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திக்குப் பல வேலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவ்வாறன பணிகள் தொடங்கவும் நிறைவேறவும் ஏதே ஒரு மாபெரும் சக்தி துணை நின்றதை உணர்கின்றேன். வாழ்க்கை முறைகளும் வழிபாடுகளும் ஆரம்ப காலம் இம் மக்கள் கூட்டுறவு வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்தனர். ஒரே காணிக்குள் பல வீடுகளைக் கட்டியும் ஒரே வீட்டில் சில குடும்பங்களுடனும் வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையும் உதவியும் புரிந்தும் உணவு வகைகளைப் பங்கிட்டுக் கொடுத்தும் சந்தோசமாக வாழ்ந்து வரலாயினர். பனை ஓலையாலும், கிடுகுகளாலும் வேயப் பெற்றதும், கிடுகுகளால் மறைப்புத் தட்டிகள் அமைத்தும், மண் தரையுமாக வீடுகள் அமைந்துள்ளன. வேலிகளை கிடுகளாலும், அலம்பல் எனும் தடிகளாலும், மட்டை வரிந்தும் மறைப்புச் செய்தனர். தற்போது மாற்றமடைந்து கல்வீடுகளாகவும் மதில் சுவர்களாகவும் மாறியுள்ளன. கிராமத்தில் நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளில் சகலரும் பங்கு பற்றியும் சில நாட்கள் அவ் வீட்டிலேயே தங்கி நின்று உதவி செய்தும் தமதன்பை வெளிப்படுத்தினர். ஆதிகாலம் தொட்டு இவர்களது வழிபாட்டுத் தலங்களாக பெரும்படை அம்மன் கோயில், மகாவிஷ்ணு ஆலயம், வைரவர், வீதிகளில் சிறு கட்டிடங்களில் அமைந்த அம்மன் ஆலயங்கள் என அமைந்துள்ளன. இரண்டாகப் பிரிந்து நின்றவர்கள் தற்போது சகல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது மகிழ்ச்சியைத் தருவதோடு ஒற்றுமையையும் வளர்ப்பது ஆண்டவன் அருளாகும். இத்தோடு முன்பள்ளி பாடசாலை, அறநெறிப் பாடசாலையும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கிராமத்தின் வளர்ச்சியில் கைதடி நாவற்குழி ஸ்ரீ மகாவிஷ்ணுக.தொ.கூசங்கம், ஸ்ரீ மகாவிஷ்ணு சனசமூக நிலையம், ஸ்ரீ மகாவிஷ்ணு விளையாட்டுக்கழகம் போன்றவை அரும் சேவையாற்றி வருகின்றன. இன்னும் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். இக்கிராமம் மேன்மேலும் சிறப்புறவும் அபிவிருத்தியடையவும் இக்கிராம மக்கள் உறுதுணையாக இருப்பதோடு குறிப்பாக அறிவுசால் பெரியவர்கள் இளைஞர்கள் யுவதிகள் அனைவரும் ஒத்துழைத்தும் நல்சேவையும் ஆற்றி கிராமத்தைச் செழிப்புறச் செய்வார்களாகுக. வே.இராமர் ஓய்வு நிலை அதிபர் https://raamu.vaathiyaar.blog/ Download PDF file1 point - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.