Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10098
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10206
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/06/25 in all areas

  1. சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂
  2. சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.
  3. நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.
  4. தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.
  5. இவ்வளவு பொருட்களும் இங்க இப்ப தட்டுப்பாடு அண்ணோய்!!
  6. 1) இன்றைய தினம் 05/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் 50000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். திரு செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  7. பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம். கட்டுரை தகவல் கமிலா வெராஸ் ப்ளும்ப் பிபிசி நியூஸ் பிரேசில் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர். சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள். ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள். ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாண்டோஸ், 1906 இல் பாரிஸில் முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இது சர்வதேச விமானக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியானால் எது உண்மை? பட மூலாதாரம்,NATIONAL LIBRARY OF FRANCE படக்குறிப்பு, சாண்டோஸ் டுமாண்ட் தனது 14-பிஸ் விமானத்தில் பாரிஸில் பறந்தார். சாண்டோஸ் டுமாண்ட்: மக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விமானப் பயணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்தனர். அந்தக் காலகட்டத்தில், விமானங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கையளிக்கும் நகரமாக பாரிஸ் மாறியது. அங்கு நல்ல பொறியியல் கல்லூரிகள் இருந்தன. உலோகவியல், இயந்திரங்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பணமும் எளிதாகக் கிடைத்தது. "அந்த நேரத்தில், அது விரைவில் நடந்தேறக்கூடிய ஒன்றாகத் தான் தெரிந்தது," என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜீன்-பியர் பிளே கூறுகிறார். அதேபோல், முதல் விமானமாக எதைக் கருதுவது என்பதை விமான நிபுணர்கள் முடிவு செய்தனர். எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் (கவண் போன்ற சாதனங்கள் இல்லாமல்) விமானம் பறக்க வேண்டும் என்றும், மக்கள் அதை தங்கள் கண்களால் நேரில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர். 1906 நவம்பர் 12 அன்று, சாண்டோஸ் டுமாண்ட் இவை அனைத்தையும் செய்தார். பாரிஸில் ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தனது 14-பிஸ் விமானத்தை 220 மீட்டர் தூரம் பறக்கவிட்டார். அடுத்த ஆண்டு, அவர் 'டெமோயிசெல்லே' என்ற மற்றொரு புதிய விமானத்தை வடிவமைத்தார். இது தான் உலகின் முதல் இலகுரக மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் விமானம் டெமோயிசெல். ஆதாரங்களை மாற்றுதல் ஆனால் 1908 ஆம் ஆண்டில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் தாங்கள் விமானத்தில் பறந்ததாக ரைட் சகோதரர்கள் கூறினர். இதைக் கேட்டு பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பறக்கும் கிளப்புகளுக்கு இடையே கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு இருந்து வந்தது. தரையிலிருந்து நீண்ட தூரம் பறக்கக்கூடிய முதல் விமானத்தை உருவாக்க ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் ரைட் சகோதரர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், தங்களது காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருந்ததாகவும், தங்கள் யோசனையை யாராவது திருடிவிடுவார்கள் என்று பயந்ததாகவும் ரைட் சகோதரர்கள் கூறினர். ஆனால் உண்மையில், 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் அவர்களது ஃப்ளையர் பறப்பதை ஐந்து பேர் மட்டுமே பார்த்தார்கள். ஒரு தந்தி செய்தி, சில புகைப்படங்கள் மற்றும் ஆர்வில் ரைட்டின் நாட்குறிப்பு போன்ற மிகக் குறைந்த ஆதாரங்கள் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுள்ளன. ஆர்வில் தனது நாட்குறிப்பில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் இருந்தது என்று எழுதியுள்ளார். அதாவது, அந்த அளவுக்கு காற்று இருந்ததால், விமானத்தால் என்ஜின் இல்லாமல்கூட பறக்க முடிந்திருக்கலாம் என்று பிரேசிலின் வானியல் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஹென்ரிக் லின்ஸ் டி பாரோஸ் போன்ற சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது, இயந்திரம் இல்லாமல் கூட தானாகவே விமானம் பறக்கக்கூடிய அளவுக்கு காற்று பலமாக வீசியது. இருப்பினும், ரைட் சகோதரர்களின் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை. 14-பிஸ் பாரிஸில் பறப்பதற்கு முன்பே, ரைட் சகோதரர்கள் 1904-05 ஆம் ஆண்டில் விமானத்தின் சிறந்த மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் முதன்முதலில் 1903 இல் பறக்க முயன்றது. "அன்று காலை (டிசம்பர் 17, 1903) ரைட் சகோதரர்கள், முதல் முறையாக மிகவும் சிறப்பாக பறந்தனர். அதன் மூலம், பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக அவர்களே உறுதியாக நம்பினர்" என்று கூறுகிறார் ஸ்மித்சோனியனின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பணியாற்றியவரும், ரைட் சகோதரர்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியவருமான வரலாற்றாசிரியர் டாம் க்ரூச். "அவர்கள் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனாலும் அவர்களது விமானம் கட்டமைக்கப்பட்டு ஏற்கெனவே பறந்து விட்டது," என்றும் அவர் கூறுகிறார். 1908ஆம் ஆண்டு, ரைட் சகோதரர்கள் தாங்கள் தான் முதலில் விமானத்தில் பறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் வரை, இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றியது. ரைட் சகோதரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட மாதிரி பயணங்களை நிகழ்த்தினர். அதில் ஒரு முறை அவர்கள் 124 கிலோமீட்டர் வரை பயணம் செய்தனர். "அந்த நேரத்தில், ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் வில்பருடன் விமானத்தில் அமர விரும்பினர். இது ஒரு பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது," என்று பேராசிரியர் பிளே விளக்குகிறார். அதே நேரத்தில், விமானங்கள் குறித்த பிரெஞ்சு ஆரம்பகால நிபுணரான ஃபெர்டினாண்ட் ஃபர்பர் போன்றவர்களும் ரைட் சகோதரர்கள் தான் முதன்மையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டனர். இவ்வளவு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு விமானத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று அவர்கள் கூறினர். பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் விமானப் பயணம் பற்றிய செய்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது. கவண் பயன்பாடு பற்றி எழுந்த விவாதம் ஐரோப்பாவில் காட்டப்பட்ட ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் விமானம் சக்கரங்கள் இல்லாமல் இருந்தது. அதனால், அது பறக்க ஒரு கவணின் (catapult) உதவி தேவைப்பட்டது (இது விமானம் பறக்க உதவுகிறது). இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விஷயமாக மாறியது. விமானத்தின் இயந்திரம் போதுமான சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், கவண் இருந்ததால் மட்டுமே அது பறக்க முடிந்தது என்றும் விமர்சகர்கள் கூறினர். சிலர், எந்த வகையான தரையிலிருந்தும் விமானம் புறப்படக்கூடிய வகையில் ரைட் சகோதரர்கள் கவணைப் பொருத்தியதாகக் கூறுகின்றனர். சாண்டோஸ் டுமாண்ட், ரைட் சகோதரர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் தாங்களே முதன் முதலில் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளனர் என்பது தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மானியர் குஸ்டாவ் வெய்ஸ்கோப், விமானப் பயணத்தின் ஆரம்பகால முன்னோடியாகவும் இருந்தார். அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த குஸ்டாவ் வெய்ஸ்கோப் என்பவர் 1901ம் ஆண்டிலேயே விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸும் மார்ச் 1903 இல் விமானம் ஒன்றை ஓட்டியதாக நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் ஹோவிக் நகருக்கு அருகில், ஜான் குட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் 1871ஆம் ஆண்டு ஒரு கிளைடர் மூலம் மனிதர்களை ஏற்றிச் சென்று, உலகின் முதல் விமானப் பயணத்தை முயற்சி செய்ததாகக் கூறப்படும் சில சான்றுகளும் உள்ளன. அதுவும் எந்த இயந்திர சக்தியும் இல்லாமல், வெறும் கிளைடரிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, அந்த கிளைடரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் உள்ளது. அதனால்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதைப் பற்றிய விவாதம் பயனற்றது என்று பல விமான வல்லுநர்கள் நம்புகிறார்கள். "யாரோ ஒருவர் ஒரு நாள் எழுந்து, ஒரு அமைப்பை வரைந்து, 'இது பறக்கும் விமானம்!' என்று சொன்னதால் அது நடக்கவில்லை" என்று ஜேன்'ஸ் ஆல் தி வேர்ல்ட்ஸ் ஏர்கிராஃப்ட்டின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பால் ஜாக்சன் கூறுகிறார். "டஜன்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால் மட்டுமல்ல, மாறாக நூற்றுக்கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் அது சாத்தியமானது," என்றும் அவர் கூறுகிறார். அங்கீகாரத்தின் கதை சாண்டோஸ் டுமோண்ட், வெய்ஸ்கோப் மற்றும் பல ஆரம்பகால விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பால் ஜாக்சன் கருதுகிறார். "இறுதியில், மதிப்புமிக்க வழக்கறிஞர்களைக் கொண்டவர்கள் தான் பெயர் பெற்றவர்களாக மாறுகிறார்கள்" என்று பால் ஜாக்சன் கூறுகிறார். "சோகமான விஷயம் என்னவென்றால், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், அவற்றுக்கான பெருமை பெரும்பாலும் தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது," என்கிறார் பால் ஜாக்சன். தொலைபேசியைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய ஸ்காட்டிஷ் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் உதாரணத்தை அவர் தருகிறார். இருப்பினும், அது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. உண்மையில், பெல் காப்புரிமை பெற்றிருந்தாலும், உண்மையான கண்டுபிடிப்பு இத்தாலியர் அன்டோனியோ மேயுச்சி (Antonio Meucci) என்பவரால் செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் 2002ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இத்தாலியைச் சேர்ந்த அவர், வறுமையில் வாடியதாகவும், கிரஹாம் பெல்லுடன் ஒரே பட்டறையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு விமானி க்ளென் ஹாமண்ட் கர்டிஸ். அமெரிக்க விமான வரலாற்றில் முக்கியமான முன்னோடியாகக் கருதப்படும் க்ளென் ஹாமண்ட் கர்ட்டிஸின் உறவினர் தான் மார்சியா கம்மிங்ஸ் என்பவர். 1909ஆம் ஆண்டு, தங்கள் காப்புரிமையை மீறியதாகக் கூறி கர்ட்டிஸ் மீது ரைட் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இன்று, ரைட் சகோதரர்களின் கதையின் உண்மைத்தன்மையை ஆராயும் ஒரு வலைப்பதிவை நடத்துகிறார் மார்சியா கம்மிங்ஸ். கர்ட்டிஸ் போன்றவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க ரைட் சகோதரர்கள் வேண்டுமென்றே முயன்றதாக அவர் நம்புகிறார். மறுபுறம், ஆர்வில் மற்றும் வில்பரின் கொள்ளுப் பேத்தி அமண்டா ரைட் லேன், அவர்களின் பணியைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் இந்தக் குற்றச்சாட்டை நம்பவில்லை. "ஆர்விலை எனக்குத் தெரியும். அவர் யாரையும் வேண்டுமென்றே குறிவைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை," என்று அமண்டா கூறுகிறார். "ஆம், ஆனால் தானும் வில்பரும் செய்ததைப் பற்றிய உண்மையை பாதுகாப்பதை அவர் உறுதி செய்தார்," என்கிறார் அமண்டா ரைட் லேன். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvj6d6y26zo
  8. கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?
  9. நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே… உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா… கண்ணதாசன் தன்னை வெளிக் காட்டிய வரிகள்
  10. புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன் இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம். புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை இது. மல்லாவிச் சந்தையில் கனெக்ஸ் என்று அழைக்கப்படும் கனகரட்ணம் மீன் வாங்க வந்திருந்தார். அவர் அப்பொழுது வெற்றிலை சப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாய்க்குள் இருந்த வெற்றிலை எச்சிலை அப்படியே நிலத்தில் துப்பினார். அதை அங்கே இருந்த அன்பு மாஸ்டர் கண்டுவிட்டார். அவர் கனெக்ஸை நோக்கிப் பாய்ந்தார். “ஒரு பொது இடத்தில் அதுவும் சாப்பாட்டுப் பொருட்கள் விற்குமிடத்தில் எப்படி சுகாதாரக் கேடான விதத்தில் வெற்றிலையைத் துப்புவாய்” என்று அவர் கனெக்சை நோக்கி கேட்டார். கனக்ஸ் திரும்பிக் கேட்டார் “நான் துப்பியதால் உனக்கு என்ன வந்தது? நான் யாருடைய முகத்திலும் துப்பவில்லை. நிலத்தில் தானே துப்பினேன்? ” என்று. அன்பு மாஸ்டர் விடவில்லை. “நீ துப்பிய நிலம் பொது நிலம். சுற்றி வர மீன்கள், மரக்கறிகள் விற்கப்படும் இடம். உன்னுடைய துப்பலில் மொய்க்கும் இலையான் இங்குள்ள சாப்பாட்டுப் பொருட்களின் மீதும் மொய்க்கும். எவ்வளவு அசுத்தம்? எவ்வளவு ஆரோக்கியக் கெடுதி?… என்று கூறி கனெக்ஸை சண்டைக்கு இழுத்தார். இப்படி இரண்டு பேரும் வாக்குவாதப்பட சந்தைக்கு வந்தவர்கள், சந்தை வியாபாரிகள் என்று அனைவரும் இந்த இரண்டு பேர்களையும் சூழ்ந்து விட்டார்கள். இருவருமே ஒரு பொது இடத்தில் எச்சில் துப்புவதில் இருக்கக்கூடிய சுகாதாரக் கேடான விடயங்களை தர்கபூர்வமாக உரையாடத் தொடங்கினார்கள். சூழ்ந்திருந்த மக்கள் இரண்டு பேரையும் விலக்குப் பிடிக்க முயற்சித்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலில் மக்களும் ஈடுபடத் தொடங்கினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் தெரிந்தது அது ஒரு நாடகம் என்று. சந்தைக்குள் சுகாதார விழிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கனெக்சும் அன்பு மாஸ்டரும் இணைந்து தயாரித்த – நவீன நாடகம் -கட்புலனாகா அரங்கு அது. அன்பு மாஸ்டர் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். போர்க் காலத்திலேயே இறந்து விட்டார். கனெக்ஸ் ஒரு நாடகச் செயற்பாட்டாளரும் அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார். நாலாங் கட்ட ஈழப்போரில் உயிர் நீத்தார். இருவரும் இப்பொழுது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேரும் எதற்காக நாடகமாடினார்களோ அந்த விடயம் இப்பொழுதும், கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரும் உண்டு. அதுதான் சந்தைக்குள் சுகாதாரச் சீர்கேடுகள். யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய மரக்கறிச் சந்தை திருநெல்வேலியில் உள்ளது. அதற்குப் பின்புறம் உள்ள சிறிய பாதை சில சமயங்களில் கழிப்பறையாகவும் குப்பைக் கூடையாகவும் காணப்படும்.தமது வீட்டுக் கழிவுகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த வீதியில் கொண்டு வந்து போடுகிறார்கள். இத்தனைக்கும் அந்த வீதி வளைவில் ஒரு பாடசாலை உண்டு. சில சமயங்களில் அந்த வேலியோடு நின்று சிறுநீர் கழிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தை வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள். இது சந்தைக்கு வெளியே. சந்தைக்கு உள்ளே போனால், அங்கே மரக்கறிகள் பரப்பப்பட்டிருக்கும் அதே தளத்தில்தான் வியாபாரிகள் தமது கால்களைப் பரப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.அதாவது விற்கப்படும் பொருட்களை வைப்பதற்கு உயரமான ஏற்பாடு இல்லை.அதனால் வியாபாரிகள் மரக்கறிகளை பரப்பி வைத்திருக்கும் அதே இடத்தில் சிலசமயம் செருப்புக் கால்களோடு இருப்பார்கள். அதே செருப்போடுதான் அவர்கள் கழிப்பறைக்கும் போகிறார்கள். அது மட்டுமல்ல,சந்தையின் மூலை முடுக்குகளில் வெற்றிலைத் துப்பல்களைக் காணலாம்.துப்புவது யார் என்றால் வியாபாரிகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும்தான். சந்தைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் அவ்வாறு துப்புவது குறைவு. பொதுச் சுகாதாரச் சட்டத்தின்படி பொது இடங்களில் துப்புவது சட்ட விரோதமானது. ஆனால் அதை சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. ஏனென்றால் அது ஒரு பண்பாடு. அவ்வாறு துப்பாமல் விடுவதனை ஒரு பண்பாடாக மாற்ற வேண்டும். யார் மாற்றுவது ? யாழ் நகரப் பகுதியை அண்டியுள்ள சந்தைகளில் கல்வியங்காட்டுச் சந்தை தொடர்பாக முறைப்பாடுகள் அதிகம். அந்த சந்தைக்கு ஒரு சாதிப் பெயர் வேறு வைத்திருக்கிறார்கள். அங்கு வாங்கிய மீனில் ரசாயன வாடை வீசுவதாக திருப்பிக் கொடுத்தவர்கள் உண்டு. பொதுச் சுகாதாரப் பரிசோதர்களிடம் முறைப்பாடு செய்தவர்களும் உண்டு. ஒரு முறை அவ்வாறு முறைப்பாடு செய்த போது பிஎச்ஐ சொன்னார் அந்த ரசாயனத்தை சோதிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் இங்கு யாழ்ப்பாணத்தில் இல்லை. அதனால் அந்த மீனை அனுராதபுரத்துக்கு அனுப்பி எடுக்க வேண்டும். அதுவரை அந்த மீனைக் கெடாமல் வைத்திருக்கவும் வேண்டும் என்று. கல்வியங்காட்டுச் சந்தையில் வாங்கிய மீனில் ஃபோமலின் வாடை வீசியதாக முறைப்பாடுகள் உண்டு. ஓர் ஆசிரியர் சொன்னார், அவர் வாங்கிய மீனில் அவ்வாறு ஃபோமலின் வாடை வீசியதாகவும்,எனவே அந்த மீனைக் கொண்டு போய் குறிப்பிட்ட வியாபாரியிடம் கொடுத்து “நீ ஏமாற்றி விட்டாய்” என்று ஆத்திரப்பட்ட பொழுது,அந்த வியாபாரி சொன்னாராம் இந்த மீனைத்தான் கூலர் வியாபாரிகள் நூற்றுக்கணக்கான கிலோக்கள் வாங்குகிறார்கள். நீங்கள் ஒரு கிலோ வாங்கி விட்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று. இதை இவ்வாறு எழுதுவதன் பொருள் யாழ்ப்பாணத்தின் ஏனைய சந்தைகளில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்பதல்ல.மேலும் கல்வியங்காட்டுச் சந்தையில் உள்ள எல்லாருமே ரசாயனம் கலந்து மீனை விற்கிறார்கள் என்ற பொருளிலும் அல்ல. இப்படித்தான் இருக்கிறது பொதுச் சந்தைகளில் சுகாதாரம். இப்பொழுது புதிய உள்ளூராட்சி சபைகள் வந்துவிட்டன. மேற்சொன்ன விடயங்களில் உள்ளூராட்சி சபைகள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன ? குப்பை ஒரு தீராப் பிரச்சனை. சந்தைச் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல பெரும்பாலான வீதிகளில் குப்பை ஒரு பிரச்சினை. குப்பை அள்ளும் வாகனம் வராத நாட்களில் மதில்களில் குப்பைப் பைகள் தொங்கும். ஏனெனில்,கீழே வைத்தால் கட்டாக்காலி நாய்கள் பைகளைக் குதறி விடும். சில மறைவான வீதித் திருப்பங்களை அந்த ஊர் மக்களே தற்காலிக குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள். அங்கு குப்பை கொட்டவேண்டாம் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டிருக்கும். அல்லது அந்த மதிலுக்கு அல்லது வேலிக்குச் சொந்தமான வீட்டுக்காரர்கள் அவ்வாறான அறிவிப்புககளை ஒட்டியிருப்பார்கள்.எனினும், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு குப்பைகள் கொட்டப்படும். இதனால் வெறுப்படைந்த வீட்டுக்காரர்கள் தமது வீட்டு மதிற் சுவரில் அல்லது வேலியில் எழுதி வைத்திருக்கும் வாசகங்கள் அவர்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அந்த வாசகங்கள் வருமாறு…”இங்கே குப்பை போடுகிறவன் உன்னுடைய பெண்டாட்டியையும் கொண்டு வந்து போடு” என்று ஒரு வாசகம். ”இங்கே குப்பை போடுகிறவன் ஒரு மன நோயாளி” இது இரண்டாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டினால் உன்னைப் பேய் பிடிக்கும்” இது மூன்றாவது வாசகம். “இங்கே குப்பை கொட்டுகிறவன் ஒழுங்காகப் பிறக்காதவன்”…..என்று ஒரு வாசகம். இவைபோல பல்வேறு விகாரமான விபரீதமான அறிவிப்புகளைப் பார்க்க முடியும். ஒரு வீட்டுக்கார் தன்னுடைய வீட்டு வெளி மதிற் சுவரில் சுவாமிப் படங்களை ஒட்டி விட்டார். ஆனால் சுவாமிப் படங்களுக்குக் கீழேயும் குப்பைகள் கொட்டப்பட்டன. குப்பைகளைக் கொட்டுபவர்கள் யார் என்று பார்த்தால் அதில் படித்தவர்கள் உண்டு,விவரம் தெரிந்தவர்கள் உண்டு. யாரும் பார்க்காத ஒரு நேரத்தில், யாரும் பார்க்காத விதமாக அவர்கள் குப்பையை அந்த இடத்தில் தட்டி விட்டுப் போவார்கள். அங்கே கமரா பொருத்தினாலும் அதை மீறிக் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் கமரா பொருத்துவதற்கும் காசு வேண்டுமே? இவ்வாறான குப்பை கொட்டும் ஒரு சுகாதாரச் சூழலில் அல்லது தன்னுடைய குப்பையை மற்றவர்களுடைய முற்றத்தில் கொட்டும் ஒரு சீரழிந்த கலாச்சாரச் சூழலில், புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரதேச சபைகள் சந்தைச் சுகாதாரத்தையும் சந்தையில் விற்கப்படும் உணவுகளின் நுகர்வுத் தரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு புதிய வினைத்திறன் மிக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.சந்தைகளைச் சுத்தமாக வைத்திருப்பதில் இருந்துதான் ஒரு உள்ளூராட்சி சபையின் வெற்றிகள் அனைத்தும் தொடங்குகின்றன. சந்தைகளைச் சுத்தமாகப் பேணும் ஒர் உள்ளூராட்சி சபை தன் எல்லைக்குட்பட்ட கிராமங்களையும் சுத்தமாகப் பேணும். எனவே சந்தைச் சுகாதாரம் எனப்படுவது ஒரு குறிகாட்டி. புதிய உள்ளூராட்சி சபைகள் இதைக் கவனத்தில் கொள்ளுமா? உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்ட உடனடுத்த நாட்களிலேயே குப்பைகளைப் பிரித்தெடுத்து எரிக்கும் இடங்களில் முரண்பாடுகள் எழுந்தன. இணுவில்,கல்லுண்டாய் வெளி ஆகிய இடங்களில் குப்பைகள் ஏரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து முறைப்பாடுகள் எழுந்தன. குப்பைகளை எரிப்பதற்குப் பதிலாக அவற்றை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் புதிய நவீன சிந்தனைகள் தேவை.உதாரணமாக ஸ்வீடன் நாடானது குப்பைகளை மீள் சுழற்சி செய்வதில் வெற்றியடைந்த நாடாகப் பார்க்கப்படுகிறது. அங்கே ஒரு கட்டத்தில் மீள் சுழற்சி செய்வதற்கு உள்ளூர்க் குப்பைகள் போதிய அளவு இருக்கவில்லை.அதனால் மீள் சுழற்சி மையங்கள் தொடர்ந்தும் இயங்குவதற்காக குப்பைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தில் நவீனமான, வினைத்திறன் மிக்க முடிவுகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நான் உரையாடிய பொழுது ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்னிடம் கேட்டார்,”அரசியலில் குப்பை கொட்டும் இந்தக் கட்சிகளிடம் பிரதேசசபைகளில் குப்பைகளை அகற்றுங்கள் என்று கேட்பது பொருத்தமானதா” என்று? பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் அவ்வாறான ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதனை புதிய பிரதேச சபை உறுப்பினர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அபிப்பிராயத்தை மாற்றியமைக்கும் விதத்தில் உள்ளூராட்சிப் பிரதேசங்களை சுத்தமானவைகளாகவும் சுகாதாரமானவைகளாகவும் பசுமைப் பூங்காக்களாகவும் மாற்ற முன் வர வேண்டும்.அன்னை தெரேசா கூறுவார்… “தொண்டு செய்வது என்பது வீட்டிலிருந்து தொடங்குகின்றது”என்று. அப்படித்தான் சுத்தமும் சுகாதாரமும் உள்ளூராட்சி சபைகளிலிருந்து தொடங்கட்டும். https://www.nillanthan.com/7506/
  11. அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-2025
  12. அத்துடன்.... மிருக வைத்தியசாலைக்கு வந்து, நோய் குணமாகாமல் இறந்த மிருகங்களையும், அடக்கம் செய்யுற செலவும் மிச்சம். கையோடை ஆட்களுக்கு கிறில் பண்ணி விற்று காசாக்கிப் போடலாம். 🤣
  13. அவர் சரியான இடத்தில்தான் கடை போட்டிருக்கிறார் ........ கால்நடைகளை வாங்க அங்கு இங்கு அலையத் தேவையில்லை ......... ! 😂
  14. 06 JUL, 2025 | 09:36 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தம் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதன்கிழமை (09) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் இதற்கு முன்னரும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட சூத்திரதாரிகள் குறித்து எந்த வெளிப்பாடுகளையும் அரசாங்கம் கூற வில்லை. எனவே புதன்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு விவாதத்தின் போது, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்துவோம் என்று அநுரகுமார திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் உறுதியளித்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் கூறியது. குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், அன்றைய தினம் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவ்வாறு வெளிப்படுத்தப்பட வில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுப்படவுள்ளது. இதேவேளை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தலின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாளை திங்கட்கிழமை, பேராயர் இல்லத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219267
  15. மன்னிக்கவும்! அவர்களுக்கு இப்போ இவற்றுக்கு நேரமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உட்கட்சிப்பூசல், குழி பறித்தல், உறுப்பினர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தல் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
  16. அதே! இனியாவது சொல்வதை செய்வார்களா? இந்தப்போக்கு நிலைத்தால்; எதிர்காலத்தில் இவர்களின் பொருட்களை வாங்குவோருமில்லை, இவர்கள் உற்பத்திசெய்யும் தேவையுமில்லை.
  17. அவர் பாடகி… நடிகை…. மருத்துவர்…., நக்கல் அடிக்கும் நாம்?🤣
  18. நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣. George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?
  19. பாரைக் கருவாடு "வாசம்" வீசாதா? முழு சாப் பாட்டுச் சாமான்களையும் கட்டிக் கொண்டு வந்து விட் டீர்கள்.( எக்ஸ்ட்ரா லக்கேஜை )😃
  20. இதென்ன கடை போட வாங்கிக்கொண்டு வந்தது போல கிடக்கு... 🤣
  21. நீரோடும் வைகையிலே ....... ! 😍
  22. தலாய் லாமா தேர்வு எப்படி நடக்கிறது? - 600 ஆண்டுகளாக தொடரும் 'ஆன்மீக மரபு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கட்டுரை தகவல் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளை ஜூலை 6ஆம் தேதி கொண்டாடுகிறார். திபெத்திய பௌத்தத்தின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாமல், சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவும் பலர் அவரைப் பார்க்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும், அடுத்த தலாய் லாமாவாக யார் வருவார்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக செயல்முறை என்று அவரைப் பின்பற்றும் மக்கள் நம்புகிறார்கள். தலாய் லாமா என்றால் யார் ? திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்திய பௌத்தத்தின் மிகச் சிறந்த முகமாகவும், தலாய் லாமா அவரைப் பின்தொடர்பவர்களால் பார்க்கப்படுகிறார். அவரை, திபெத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் தெய்வமான அவலோகிதேஸ்வரா (அல்லது சென்ரெசிக்) என்பவரின் மனித உருவாகவே அவர்கள் பார்க்கிறார்கள். தலாய் லாமாவின் பாத்திரம், பல நூற்றாண்டுகளாக மறுபிறவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிரப்பப்பட்ட ஒன்று. காரணம்,யாராவது இறந்தால், அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பது பௌத்த நம்பிக்கையாக உள்ளது. தற்போதைய தலாய் லாமா 1935 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, வடகிழக்கு திபெத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது, அவர் 13வது தலாய் லாமாவின் மறுபிறவியாக அங்கீகரிக்கப்பட்டார் "தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா. முனைவர் துப்டன் ஜின்பா ஒரு முன்னாள் துறவி. அவர் திபெத்திய பௌத்தத்தில் மிக உயர்ந்த இறையியல் தகுதியை அடைந்துள்ளார். மேலும் அவர் 1985 முதல் தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். எல்லா தலாய் லாமாக்களும் ஒரே ஆன்மாவின் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும் , தற்போதைய தலாய் லாமா, இந்த நம்பிக்கையை அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்வது போலத் தெரியவில்லை என்று முனைவர் துப்டன் கூறுகிறார். "14 பேரும் ஒரே நபரின் மறுபிறவி என்று தலாய் லாமா நம்புகிறார் என்று சொல்ல முடியாது, சில சந்தர்ப்பங்களில், அவரே இதை நேரடியாக நம்பவில்லை என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்," என்று பிபிசியிடம் கூறிய ஜின்பா, "ஆனால் அந்த பரம்பரையில் உள்ள ஒவ்வொருவருக்கும், தலாய் லாமா மரபுடன் ஒரு தனித்துவமான ஆன்மீக தொடர்பு இருக்கிறது என்று அனைவரும் நம்புகிறார்கள்," என்றும் கூறினார். பௌத்தம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான மதமாக இருக்கிறது. ஆனால் தலாய் லாமா என்ற பதவியும், அதனைச் சுற்றியுள்ள அமைப்பும் சமீபத்தில் உருவானதுதான். "முதல் தலாய் லாமாவாக 1391-ல் பிறந்த கெதுன் ட்ருப் என்ற நபர் என்று அங்கீகரிக்கப்பட்டார். ஆனால், ஒரு பௌத்த ஆசிரியர் மறுபிறவி எடுத்து, தங்கள் முன்னோடியின் சொத்துகளையும், அவரைப் பின்பற்றுவபர்களையும் மரபுரிமையாகப் பெறுவார் என்ற சிந்தனை அதைவிட பழமையானது," என்கிறார் அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் இமயமலை ஆராய்ச்சிக்கான ஸ்காட்டிஷ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்ட்டின் ஏ மில்ஸ். "அந்த நம்பிக்கை குறைந்தபட்சம் 300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது" என்று பேராசிரியர் மார்ட்டின் ஏ. மில்ஸ் கூறுகிறார். தலாய் லாமா எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,CHRISTOPHER MICHEL படக்குறிப்பு, 'தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்' என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா. "தலாய் லாமாவைத் தேர்வு செயல்முறை மிகவும் கடுமையானது, சிக்கலானது மற்றும் விரிவானது" என்று ஜின்பா விளக்குகிறார். ஒரு தலாய் லாமாவை அடையாளம் காணும் செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். உதாரணமாக, 14வது தலாய் லாமாவை அடையாளம் காண நான்கு ஆண்டுகள் எடுத்தது. முந்தைய தலாய் லாமா இறந்த பிறகு, அந்த நேரத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு சிறுவனைத் தேடுவதற்காக உயர்மட்ட துறவிகள் தங்களது தேடலைத் தொடங்குகிறார்கள். இந்த தேடல் பல துப்புகள் மற்றும் ஆன்மீக அறிகுறிகளால் வழிநடத்தப்படுகிறது. துறவிகளில் ஒருவருக்கு வரும் கனவில் தலாய் லாமாவின் மறுபிறவியாக இருக்கக்கூடிய சிறுவனைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். முந்தைய தலாய் லாமாவின் இறுதிச் சடங்கில் எழும் புகையின் திசையும், மறுபிறவி எங்கு இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது. சிறுவனின் இருப்பிடம் கண்டறியப்பட்டவுடன், அவனிடம் பல பொருட்கள் காட்டப்படுகின்றன. அவற்றில் சில, முந்தைய தலாய் லாமாவுக்குச் சொந்தமானவையாக இருக்கும். அந்த சிறுவன் அவற்றை சரியாக அடையாளம் காண்பதால், துறவிகள் அதை மறுபிறவியின் உறுதியான அறிகுறியாகக் கருதுகிறார்கள். உயர்மட்ட துறவிகள் திருப்தி அடைந்தவுடன், சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மதப் பயிற்சி மற்றும் இறையியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவான். ஒருவர் மங்கோலியாவிலும் மற்றொருவர் வடகிழக்கு இந்தியாவிலும் என இரண்டு தலாய் லாமாக்கள் மட்டுமே திபெத்துக்கு வெளியே பிறந்துள்ளனர். தற்போதைய தலாய் லாமா, தனக்கு 90 வயது ஆகும் இந்த மாதத்தில், தனது வாரிசு குறித்து மேலும் தெளிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். சீனக் கட்டுப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திபெத்திய பௌத்தத்தில் இரண்டாவது முக்கியமான ஆன்மீகத் தலைவரான பஞ்சன் லாமாவாக, தலாய் லாமா 1995-ல் ஒரு ஆறு வயது சிறுவனை தேர்வு செய்தார். அந்த சிறுவன் சில நாட்களில் காணாமல் போனார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் சீன அரசு கடத்தியதாகக் கூறப்படுகிறது. 1950-ஆம் ஆண்டு, திபெத்தின் மீது உரிமை கோர சீனா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியது. 1959-ஆம் ஆண்டு, சீனாவுக்கு எதிரான எழுச்சி தோல்வியடைந்த பிறகு, தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அங்கு அவர் திபெத்தியர்களுக்காக ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தார். தலாய் லாமா திபெத்திய அரசாங்கத்தின் தலைமை பதவியில் இருந்து விலகியிருந்தாலும், அவர் இன்னும் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவே பார்க்கப்படுகிறார். திபெத்தில் அல்லாமல் வேறு நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்ற தலாய் லாமாவின் கூற்று, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு எதிரான ஒரு நடைமுறை தீர்வாகவே பார்க்கப்படுகிறது. மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக் கூறி, திபெத்திலிருந்து வெளியேறிய அரசியல் தலைவர் என்று தலாய் லாமாவை சீன அரசு நிராகரிக்கிறது. 2007 ஆம் ஆண்டில், சீன அரசு 'திபெத்திய பௌத்தத்தில் வாழும் புத்தர்களின் மறுபிறவி மேலாண்மை நடவடிக்கைகள்' என்ற பெயரில் ஒரு ஆணையை வெளியிட்டது. இந்த ஆணை, அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்டது. திபெத்தின் மீதான அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலாய் லாமாவின் பாரம்பரிய இடமான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது சாதாரண திபெத்தியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பேசினாலோ அல்லது தலாய் லாமாவின் புகைப்படத்தை காட்டினாலோ, சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு திபெத்திய பிரச்சாரகரின் உதவியுடன், திபெத்தில் வசிக்கும் இரண்டு துறவிகளையும், புத்த மதத்தை பின்பற்றும் ஒருவரையும் பிபிசியால் தொடர்புகொண்டு பேச முடிந்தது. தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். "என் கிராமத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் தலாய் லாமாவை அவமதித்தார்கள், மேலும் அங்கு இருந்த அனைவரையும் கடுமையாக எச்சரித்து, மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தினார்கள்," என திபெத்தின் அம்டோ பகுதியில் வசிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவர் கூறுகிறார். அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அடுத்து வரவுள்ள முக்கிய தினத்தை முன்னிட்டு, சீன போலீசாரும் ராணுவத்தினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் நம்புகிறார். "மடத்திலும் அதைச் சுற்றியும் அதிகமான வீரர்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார். சீன அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், சிலரால் தலாய் லாமாவுடன் நெருக்கமாக உணர முடியவில்லை என்றும் அவர் நம்புகிறார். "பல இளைஞர்கள் தலாய் லாமாவை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அதற்கு முரணாக, அவரைப் பற்றிய தகவலை அவர்கள் [சீன] அரசின் பிரச்சார ஆவணங்களிலிருந்து மட்டுமே கேட்கிறார்கள்," என்கிறார் அந்த நபர். தொடர்ந்து பேசியபோது, "வயதானவர்களுடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் நம்பிக்கை பலவீனமானது"என்றும் அவர் குறிப்பிட்டார். பல திபெத்திய மடங்கள் தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் உள்ளன. ஆனால், சிலர் இன்னும் அந்த மதத்துக்கான ஆடைகளை வெளிப்படையாகப் புலப்படும் வகையில் அணிந்து, மத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்." 'குறைவான புதிய துறவிகள்' "நான் என் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதிலேயே துறவியாக ஆனேன்," என்கிறார் செரிங் (அவரது உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). 46 வயதான இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஏழு வயதிலேயே துறவியானார். சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக, மக்கள் துறவியாக மாற 18 வயது வரை காத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, மடங்களில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. "மடத்தில் புதிய துறவிகள் குறைந்து வருகிறார்கள்," என்று கூறும் அவர், "இந்த ஆண்டு, என் மடத்தில் மூன்று புதிய துறவிகள் மட்டுமே வந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைப் போலவே, மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து படிக்கவும் வழிபடவும் வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது" என்றும் குறிப்பிட்டார். திபெத்திய கலாச்சார அழிவின் பொருட்டு கிடைத்தது தான் சீன ஆட்சியின் பொருளாதாரப் பலன்கள் என்று செரிங் கூறுகிறார். "சிறுவயதில் எனக்கு உணவுக்கே சிரமமாக இருந்தது. மடத்தில் சில நேரங்களில் மோசமான உணவையே உண்ண வேண்டியிருந்தது," என்ற அவர், "பின்னர் வாழ்க்கை எளிதாகியது. போக்குவரத்து வசதிகள் பெரிதும் மேம்பட்டன. கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது." எனவும் தெரிவித்தார். ஆனால், "திபெத்திய மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது போலத் தெரிகிறது" என்றும் அவர் கூறுகிறார். அம்டோ நகாபா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு துறவி ஒருவரை நாங்கள் 'கோன்போ கியாப்' என்று அழைக்கிறோம். "நான் நிறைய மாற்றங்களை காண்கிறேன். ஆனால் அதை வளர்ச்சி என்று அழைப்பது கடினம்" என்கிறார் கோன்போ கியாப். தொடர்ந்து பேசிய அவர், "எனது புரிதலின் படி, திபெத்திய மொழியும் எழுத்தும் பௌத்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கத்தால் மட்டுமே நிலைத்திருக்கின்றன என்கிறார். அடுத்த தலாய் லாமா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தலாய் லாமா உலகளவில் நன்கு அறியப்பட்ட பொது நபர் மற்றும் 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். தலாய் லாமா பதவியின் 600 ஆண்டுகள் பழமையான ஆன்மீக மரபு தொடர வேண்டும் என்று 14வது தலாய் லாமா உறுதியாகக் கூறுகிறார். தனது வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் சீனா தலையிடுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் சீன அரசு நியமிக்கும் ஒருவரை நிராகரிக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தலாய் லாமா ஏற்கனவே கூறியுள்ளார். "மக்கள் அமைதியாக நடந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் உயிரை இழக்க விரும்பவில்லை. ஆனால், சீன அரசு நியமிக்கும் தலாய் லாமாவை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்," என்று முனைவர் ஜின்பா கூறுகிறார். "சீனாவால் மக்களை உடல் ரீதியாக கட்டுப்படுத்த முடியும், ஆனால் திபெத்தியர்களின் இதயங்களையும் மனதையும் வெல்ல முடியாது," என்றும் அவர் தெரிவித்தார். திபெத்தில் "செர்ஃப்கள் மற்றும் அடிமைகள்" ஒரு பிற்போக்கான இறையாட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்ற கண்ணோட்டத்தை சீனா தொடர்ந்து ஊக்குவிக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், திபெத்தை நவீனமயமாக்கும் பாதையில் கொண்டு சென்றதாகவும், மக்களின் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்தியதாகவும் கூறுகிறது. ஆனால் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள், திபெத்திய பௌத்தத்தின் தலைமை சீன அரசின் கட்டுப்பாட்டில் செல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செயல்படுவார்கள். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2kxnpgk9zo
  23. இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி
  24. இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/
  25. வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025 மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448, +94 77 959 1047 (WhatsApp, Viber)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.