Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19109
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/16/25 in all areas

  1. கிறிஸ்துமஸ் மரம் --------------------------- ஒரு ஒழுங்கான கூம்பு வடிவில் இருக்கும் சின்ன சவுக்கு மரமே கிறிஸ்துமஸ் மரம் என்று தான் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஊரில் இருந்த நாட்களில் இதை எங்காவது நேருக்கு நேரே பார்த்ததாக ஞாபகம் இல்லை. படங்களில் அல்லது கதைகளில் மட்டுமே நான் இதை பார்த்திருக்கவேண்டும். அப்படியே வெள்ளைப் போர்வையாக அந்த வீடுகளைச் சுற்றி பனி கொட்டிக் கொண்டிருப்பதாகவும் மனதில் பதிந்து இருந்தது. ஆகவே நிச்சயம் இது படமோ அல்லது கதையோ உண்டாக்கிய தோற்றம் மட்டுமே. ஊரில் கிறிஸ்தவ மக்கள் இருந்தார்கள். மற்றைய ஊர்களை விட என்னுடைய ஊரில் அதிகமாகவே இருந்தார்கள். அதில் ஒரு சிலர் என்னுடைய வயது உடையவர்களாவும், தெரிந்தவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். ஆனாலும் இந்தப் பண்டிகை நாட்களில் அவர்களின் எவர் வீடுகளுக்குள்ளும் போனதாக ஞாபகம் இல்லை. உண்மையில் அவர்களின் ஒருவரின் வீடுகளுக்குள்ளும் ஒரு தடவையும் போனதில்லை. பின்னர் அவர்களில் ஒருவன் நெருங்கிய நண்பன் ஆனான். அப்பொழுதும் கூட அவன் வீட்டின் வெளிக்கதவில் நின்றே அவனைக் கூப்பிடுவோம். அவன் அதற்கு முன்னர் அவ்வளவாக ஊர் சுற்ற எங்களுடன் வெளியில் வந்ததில்லை. அவர்கள் ஒரு உயர்குடி என்ற அபிப்பிராயம் எங்கள் மனதுகளில் பொதுவாக இருந்தது. மார்கழி மாதங்களில் அவன் வீட்டின் கண்ணாடி யன்னல்களில் சின்ன சின்ன மின்விளக்குகள் நின்று நின்று எரிந்து கொண்டிருக்கும். அவனின் வீடே அந்த நாட்களில் இன்னும் அழகானதாக மாறி இருக்கும். நண்பனின் வீட்டுக்குள் ஒரு கிறிஸ்துமஸ் மரம் இருந்திருக்கும். அந்த மரத்திற்கு சோடனைகள் செய்திருப்பார்கள். அதன் உச்சியில் ஒரு நட்சத்திரமும் வைத்திருப்பார்கள். ஆனால் நான் இவை எதையும் பார்க்கவில்லை. அவன் சில நாட்களில் சில தின்பண்டங்களை எடுத்து வருவான். அவை வித்தியாசமானதாக இருந்தன, நன்றாகவும் இருந்தன. பின்னர் அவனுடன் ஒன்றாக நான்கு வருடங்கள் தங்க வேண்டியிருந்தது. அது படிக்கும் காலம். இவ்வளவு நல்ல மனிதர்களும் இருக்கின்றார்களா என்று ஆச்சரியப்படவைத்தான். அதை நான் அவனுக்கு சில தடவைகள் நேரடியாகவே சொல்லியிருக்கின்றேன். ஒரு விதமாக சிரிப்பான். நீ தான் அடுத்த தேவமைந்தன் என்று பகிடி போல சொல்லியும் இருக்கின்றேன். சில மனிதர்கள் எப்படி அப்பாவிகளாகவும், மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பது பெரிய ஆச்சரியமாகவே இருக்கின்றது. இவ்வாறு இருப்பவர்களின் உலகத்தில் மிகச் சில விடயங்களே இருக்கின்றன. அவர்களின் உலகத்தில் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக இறைவன் ஒருவரும் இருக்கின்றார் போல. பின்னர் எங்கள் வாழ்க்கையில் நானும் மனைவியும் சேர்ந்து வருடாவருடம் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க வேண்டியதாகியது. இரு குழந்தைகளின் எதிர்பார்ப்பை ஏமாற்ற முடியவில்லை. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்துடன் சேர்ந்து வீடும் அழகாகவே இருந்தது. எதற்கு இருக்கின்றது தெரியாமல் இருக்கும் புகைபோக்கியினூடாக ஒரு தாத்தா வருவார் என்று அங்கு கொஞ்சம் இடம் ஒதுக்கி வைக்க வேண்டியதாகியது. வருடத்தில் ஒரு நாள் தாத்தாவிற்கு பிஸ்கட்டும், பாலும் வைக்கும் ஒரு வழக்கத்தையும் கற்றுக்கொண்டோம். முன்பக்கம் இருந்த அயல் வீடொன்றில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகன், அவர் வேறு எங்கேயோ இருந்தார். அடிக்கடி வந்து போவார். வெள்ளை இனத்தவரான அவர்கள் எங்களுடன் பேசவில்லை. அவர்கள் பேசுவதற்கு கூட முயலவில்லை என்றே சொல்லவேண்டும். நான் சிறிது முயன்றேன், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன். அவர் வயதானவர் என்றாலும் மிகவும் சுறுசுறுப்பானவராக இருந்தார். அவர் வீட்டில், வளவில் எல்லா வேலைகளையுமே மிகவும் நேர்த்தியாகச் செய்தார். அவர் வீட்டின் கூரையின் ஒரு பகுதியைக் கூட அவரே புதிதாகப் போட்டார். கூரையில் ஏறி கோழி கூட பிடிக்க முடியாத நான் கூரையை எப்படி மாற்றுவேன் என்று அதிர்ச்சி அடைவதை தவிர வேறொரு மார்க்கமும் எனக்கு இருக்கவில்லை. அவர் எந்த வேலை செய்தாலும் அவருடைய மனைவி எந்த உதவியும் செய்ததில்லை. அவர் வேலை செய்யும் போது வெளியில் வந்து எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர் கூரைக்கு மேல் நின்ற நாட்களில் கூட அவரின் மனைவி வீட்டினுள்ளேயே இருந்தார். அவர்களின் வீட்டின் முன் ஒரு மரம் நின்றது. அது நான் சிறு வயதில் கற்பனையில் கண்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தை ஓரளவிற்கு ஒத்தது. அதுவே தான் அவர்களின் கிறிஸ்துமஸ் மரம் என்பது முதல் வருடத்தில் பெரும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா சோடனைகளும் அந்த மரத்திற்கே நடந்து கொண்டிருந்தது. பரிசுப் பொதிகள் போன்றவை கூட அந்த மரத்தின் கீழே வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டினுள் கிறிஸ்துமஸ் மரம் இருக்கவில்லை. வெளியில் உயிருடன் நின்ற கிறிஸ்துமஸ் மரத்தை சோடிப்பதற்காகவே விசேடமாக சின்ன ஏணி, சில தடிகள் என்று அவர் வைத்திருந்தார். சில வருடங்களின் பின் அவர் மிகவும் தளர்ந்து போனார். ஒரு நாள் அவராகவே வந்து அவரது ஈரல் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார். அதன் பின்னர் மிகவும் நட்புடனும், நெருக்கத்துடனும் பேச ஆரம்பித்தார். அந்த வருடமும் அவரே கிறிஸ்துமஸ் மரத்தை சோடித்தார், கொஞ்சம் மெதுமெதுவாக. அவரின் மனைவி உள்ளேயே இருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் வீட்டின் முன் தெருவின் கீழ் போய்க் கொண்டிருந்த தண்ணீர்க் குழாயை இருவர் திருத்திக் கொண்டிருந்தார்கள். அவரின் மகன் அந்த இருவரின் அருகிலே நின்று கொண்டிருந்தார். குழாய் வெடித்து விட்டதா என்று அவரின் மகனிடம் கேட்டேன். ஆமாம், உடைந்து விட்டது, இன்று திருத்தி விடுவார்கள் என்றார் அவரின் மகன். கூரையையே மாத்தியவருக்கு இந்தக் குழாயை மாற்றுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை, ஆனால் இப்பொழுது உடம்புக்கு முடியாமல் போய் விட்டது என்று நினைத்தபடியே அப்பா எங்கே என்று கேட்டேன். 'அப்பா போன மாதம் இறந்து போனார்..................' '' வார்த்தை ஒன்றும் வரவில்லை. அந்தக் கணத்தில் உலகமே அப்படியே உறைந்து போனது. எனக்கு ஏன் சொல்லவில்லை என்று உரக்கக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இது என்ன உலகம், இந்த மனிதர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கையாலாகாத நிலையிலேயே அங்கே நின்றேன். 'அம்மா......................' என்றேன். 'அம்மா உள்ளே இருக்கின்றார்................'. எதுவும் சொல்லாமலேயே அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த அம்மா அந்த வீட்டுனுள் இருக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இரவுகளில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. உயிருள்ள கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மரம் இனி என்னவாகும் என்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. அந்த வருட பண்டிகைக்காலம் ஆரம்பித்த ஒரு நாள் வெளியே போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கிறிஸ்துமஸ் மரம் இருக்கும் திசையில் பார்வை அதுவாகப் போனது. அங்கே அதே விசேட சின்ன ஏணி, சில தடிகளை வைத்துக் கொண்டு அந்த அம்மா கிறிஸ்துமஸ் மரத்தை மெதுமெதுவாகச் சோடித்துக் கொண்டிருந்தார்.
  2. எல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்து சுக்கு நூறாக்கி போட்டதின் சாபம். ஆகாய கங்கை இன்னும் பொழியுமாம்.🤣 குப்பனோடு விளையாடு....சுப்பனோடு விளையாடு.... ஏன் புட்டினோடு கூட விளையாடு. ஆனால் இயற்கையோடு விளையாடாதே. வைச்சு சாதிக்கும்.😎
  3. கதைக்கு நன்றி @ரசோதரன் . கிறிஸ்மஸ் மரமாக இருக்கும் pine, spruce மரங்கள் குளிர்காலத்தில் பனியுறைந்த நாடுகளின் வைக்கிங்குகள் தங்கள் மர வீடுகளில் நறுமணம் வீசுவதற்காக வைக்க ஆரம்பித்து, பின்னர் கிறிஸ்தவ மதம் அவர்களிடம் பரப்பப் பட்ட போது, அதுவே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் மரமாக மாறி விட்டது என்பார்கள். வீட்டில் வைக்க அழகாகத் தான் இருக்கும். ஊரில் நாம் வைக்கும் கிறிஸ்மஸ் மரம் Casuarina என்ற சாதியைச் சேர்ந்தது. கசூரினா (Casuarina) பீச் இந்த கசூரினா சாதி சவுக்கு மரங்களால் அழகு பெற்ற ஒரு இடம். 85, 86 இல் என்று நினைக்கிறேன். மில்க்வைற் கனகராசா அவர்கள் நூறு மில்க்வைற் சவர்க்காரப் பொதிப் பேப்பர்களைச் சேர்த்து அவர்களிடம் மீள ஒப்படைத்தால், ஒரு சவுக்குக் கண்டு வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தினார். நான் 200 சேர்த்துக் கொடுத்து 2 சவுக்குக் கண்டுகள் பெற்றுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரி வீதி ஸ்ரேஷன் வீதிச் சந்தியில் நாம் வாடகைக்கு இருந்த வீட்டின் முற்றத்தில் நாட்டினேன். இரண்டும் கிடு கிடுவென வளர்ந்து வந்தன. பின்னர் நாம் 90 இல் வீட்டை மாற்றிக் கொண்டோம். 2002 இல் நான் போய்ப் பார்த்த போது மரங்கள் இருந்தன. 2012 இல் இரண்டு மரங்களும் காணாமல் போய் விட்டன!
  4. இவளவு கடினமான பாதைகளில் பயணித்தவர்கள் இடையே ஒரு மௌனம் எப்போதும் குடியிருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறீர்கள். எந்த நிலையிலும் துவண்டு விடாது இருக்கும் உங்கள் துணிவு உங்கள் தனி சிறப்பு. உங்கள் அன்ராவின் ஆன்மா சாந்தியடையட்டும் !
  5. எந்த வித முன் ஆயத்தமும், சரிவருமா, ஏது நிலை என்ன என்ற ஆராய்ச்சியும் செய்யாமல், இந்தியாவின் கருத்து என்ன என அறியாமல், தனி நாட்டு கொள்கையை முன் வைத்து, மக்களை அதன்பால் ஒன்றிணைத்தது. இதன்பால் இளைஞர்களை ஒருங்கிணைத்தது. போகாத ஊருக்கு வழிகாட்டி உசுப்பேத்தியது. இந்தியா அது சரிவராது என உணர்த்திய பின்னும், அதை உணர்ந்த பின்னும், உடனடியாக மக்களிடம் திரும்பி அதை வெளிப்படையாக சொல்லி, தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம், ஏன் கைவிடுகிறோம் என்பதை விளக்கி, அந்த அடிப்படையில் வாங்கிய பா ஊ கதிரைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக கொழும்பிலும், சென்னையிலும் போய் ஒழிந்து கொண்டார். தனிநாட்டு கோரிக்கையே நடைமுறை சாத்தியமில்லை என தெரிந்துகொண்டு, அதை விட சாத்கியமில்லாத ஆயுத போராட்டம் மூலம் அதை அடையும் ஆரம்ப முயற்சிகளை உருவேற்றி, உசுப்பேற்றி வளர்த்தார். மாற்று அரசியல்வாதிகளை துரோகிகள் என பட்டியல் இட்டு, அரசியல் கொலை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அரசியல் கொலைகளை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் ஈற்றில் அவரும் அதற்கே பலியானார். விடுதலை இயக்கங்களை போராளிகளை தன் அரசியல் இலாபத்துக்கான பீரங்கி சக்கைகள் cannon fodder போல் பாவிக்க முனைந்தார். இயகக்க்கள் இடையே சைக்கிள் ஓடினார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அநியாயங்களை அடியோடு மறுத்து வெள்ளை அடித்தார். தன் மனைவி, பிள்ளைகளை அரசியல், போராட்ட-இராணுவ பதவிகளில் போட்டு ஒரு வாரிசு அரசியலை ஆரம்பித்தார். தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார். சம்பந்தர் செய்த நாச அரசியலை போல 10 மடங்கு செய்தவர் அமிர். ஆனால் சுட்டு கொல்லபட வேண்டியவர் அல்ல.
  6. இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?
  7. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்! Vignesh SelvarajUpdated: Thursday, July 10, 2025, 18:28 [IST] நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார். இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான். ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது. https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-holds-conference-near-madurai-amid-thousands-of-cows-and-goats-719413.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா🤣
  8. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி. "பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி. சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். "சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர். ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி. "என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்." என்கிறார் பேராசிரியர் ஜென்சி. தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு BBC News தமிழ்ஜென்சி: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் கல்வியா...கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.
  9. ஆடிக்கூழ். நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025) ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும். அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்! குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும். Babu Babugi
  10. சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை. யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன். 53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?
  11. நானும் ஊரில் கிரிஸ்மஸ் காலத்தில் "கரோல் " ஆக கூட்டமாய் பாடிக்கொண்டு வருவார்கள் ........ பெரியவர்கள் அவர்களுக்கு பணம் , இனிப்புவகைகள் என்று கொடுப்பார்கள் .......நாங்கள் கூட்டத்துடன் கூடடமாய் நின்று பார்ப்பதோடு சரி . ......... இங்கு வந்ததும் பிள்ளைகளுக்காக வீட்டில் கிரிஸ்மஸ் மரம் வைக்க வேண்டியதாகி விட்டது .........அது இப்ப சுமார் 35 வருடங்களாக தொடர்கின்றது ........ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து அவரவர் வேலைகளைப் பார்க்க வெவ்வேறு இடங்களுக்கு பறந்து விட்டார்கள் ........ நானும் மனிசியும் இன்னும் அந்தக் காலங்களில் கிரிஸ்மஸ் மரம் வைத்து சோடித்துக் கொண்டிருக்கின்றோம் ......... ! 😁 நன்றி ரசோ ........ !
  12. தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪
  13. இப்படியான செய்திகளை நாம் கண்டும் காணாமல் போக வேண்டும். நாக்கை மடித்து எல்லாம் கோபப்படப்படாது.நாம எப்பவும் மேற்குலகிற்கு விசுவாசமாக நன்றியுடன் இருக்கணும் கோவாலு.
  14. இது தான் ஈழ தமிழின வரலாற்று தவறு. தனது தனிப்பட்ட விரோதத்திற்காக இனத்திற்குள்ளையே கூறு போட நினைத்தவர். கிழக்கு மாகாணத்தில் தமிழினத்தை கூறு போட்ட காரண கர்த்தா அமிர்தலிங்கம். அதன் வடு இன்று வரை அல்ல என்றும் தொடரும். அமிர்தலிங்கத்தின் மேடை பேச்சுக்களை வடக்கிலும் கிழக்கிலும் கேட்டவன்.அதன் பாகுபாடுகளை அறிந்தவன்.
  15. இராவணனுக்கு சிலை... பண்டாரவன்னியனுக்கு சிலை.. எல்ளானனுக்கு சிலை... சங்கிலியனுக்கு சிலை... சிவகுமாரனுக்கு சிலை.... தலைவர் பிரபாகரனுக்கு சிலை... தந்தை செல்வாவுக்கும் சிலை வைக்கலாம். ஏனென்றால் தமிழர்களுக்காக சாதித்து உயிர்த்தியாகம் செய்தவர்கள். அமிர்தலிங்கத்துக்கு சிலை வைத்து பூஜிப்பது இயற்கையின் நிஜதிக்கு செய்யும் துரோகம். அமிர்தலிங்கம் செய்ததையே சம்பந்தனும் செய்ய முயன்றார். அதன் பலன்களை சம்பந்தனின் வாரிசு சுமந்திரன் அறிவார். சிலுவை கூட வைக்க மாட்டார்கள்.😂
  16. கார்கள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் அதுதான் பிரச்சினையாகிவிடும், ஒரு தடவை இப்படி மழை பெய்து வெள்ளம் வந்த போது எனக்கு முன்னால் பக்கத்து வீதியில் சென்ற ஒரு SUV தண்ணீரில் (ஒரு அடி உயரமளவில்) மாட்டுப்பட அந்த வாகன ஓட்டுனர் பதட்டத்தில் என கருதுகிறேன் கார் கதவினை திறந்து விட்டார், தண்ணீர் காருக்குள் சென்றதனை பார்த்தேன், அவர் சிறிது மெதுவாக போனதால் அப்படி மாட்டி கொண்ட்டார் என ஊகித்து எனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தி கடக்க முயன்றேன் (எனது கார் சிறிய 4 இருக்கை கொண்ட கார்) கார் மிதக்க தொடங்கியது துரிதமாக காரினை வீதியினை பிரிக்கும் உயரமான பகுதியில் ஏற்றியதால் சேதம் இல்லாமல் தப்பித்தேன்.
  17. கார் ஓடும் வீதியில் காட்டாறு பாய்கிறது . ....... இவ்வளவு வளம் மிகுந்த அமெரிக்காவையே ஒரு வெள்ளம் ஸ்தம்பிக்க வைக்குது என்றால் , மற்ற நாடுகள் பற்றி என்னத்தை சொல்ல .........! நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும் பிரியன் . .......... !
  18. நான் இருப்பது மேற்குக்கரையில், அல்வாயன். இங்கு வெள்ளம் வருவது குறைவு அல்லது இல்லை, ஆனால் நெருப்பு எரியும். அநேகமாக ஈழப்பிரியன் அண்ணா இங்கு கலிஃபோர்னியா வரும் போது நெருப்பு எரியும் என்று நினைக்கின்றேன்...............😜.
  19. விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.
  20. பருவம் போன பாதையிலே ........... ! 😍
  21. இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும். இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள். அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம். இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது. 1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது. அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர். இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம். இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம். ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல. ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும். ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும். இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு: இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம். அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம். இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது. ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள. இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies). மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம். இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே. இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும். இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும். ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா. இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன். நன்றி
  22. இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது. தேவையானோர் கண்ணில் படுமா? காதில் ஏறுமா? பிகு இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன். என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு. இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும். நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  23. வணக்கம், யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 94 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைகின்றது. எனவே அதன் பின்னர் புதிய சுய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். (suvy) "கரை கடந்த புயல்" (kandiah Thillaivinayagalingam) காற்றாடி ( ரசோதரன்) "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" (kandiah Thillaivinayagalingam) இன்னொரு சக்கரவர்த்தி ( ரசோதரன்) "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" (kandiah Thillaivinayagalingam) "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" (kandiah Thillaivinayagalingam) கர்ண பரம்பரையின் கனவு ( ரசோதரன்) "அன்புடன் தேன்மொழி" (kandiah Thillaivinayagalingam) "ஏனிந்தக் கோலம்" (kandiah Thillaivinayagalingam) "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" ( kandiah Thillaivinayagalingam) ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! (goshan_che) இன்றைய அதிசயம் ( ரசோதரன்) "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] (kandiah Thillaivinayagalingam) இறை குறைபடுமோ ? - (சுப.சோமசுந்தரம்) காதலர் தினக் கதை ( ரசோதரன்) காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்... (alvayan) "கும்மிருட்டில் நடனம்" (kandiah Thillaivinayagalingam) "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" (kandiah Thillaivinayagalingam) ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ( ரசோதரன்) இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே (alvayan) "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" (kandiah Thillaivinayagalingam) இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? (ஈழப்பிரியன்) ஒரு முட்டை ஆயிரம் டாலர் ( ரசோதரன்) சும்மா ஒர் பதிவு (putthan) "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) கைவிலங்குகள் ( ரசோதரன்) நியாயத்தின் சாம்பல் (villavan) "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" (kandiah Thillaivinayagalingam) ஓயும் ஊசல் ( ரசோதரன்) ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் (goshan_che) "பிள்ளை நிலா" (kandiah Thillaivinayagalingam) "செருக்கு” [தன்முனைக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) குறள்மொழி இன்பம் / "குறள் 1265" (kandiah Thillaivinayagalingam) மூன்று கோழிக்குஞ்சுகள் ( ரசோதரன்) "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" (kandiah Thillaivinayagalingam) விதியற்றவர் (மெசொபொத்தேமியா சுமேரியர்) ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நீயில்லா வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) பூனைகளின் பேச்சுவார்த்தை ( ரசோதரன்) "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" (kandiah Thillaivinayagalingam) “ஏனடி இந்த வேதனை..?” (kandiah Thillaivinayagalingam) "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" (kandiah Thillaivinayagalingam) ராணுவ ரகசியம் ( ரசோதரன்) "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" (kandiah Thillaivinayagalingam) அமைதி மணம் (villavan) "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" (kandiah Thillaivinayagalingam) "பாலியல் வன்கொடுமை" (kandiah Thillaivinayagalingam) முழிக்கும் மொழி ( ரசோதரன்) பிட்டுக்கு மனம் சுமந்து (மெசொபொத்தேமியா சுமேரியர்) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே (Kavi arunasalam) "நீயில்லை நிழலில்லை" (kandiah Thillaivinayagalingam) அவளைத்தொடுவானேன்....??? (விசுகு) "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" (kandiah Thillaivinayagalingam) "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) கண் கண்ட தெய்வம் ( ரசோதரன்) தூத்துகுடி கொத்தனாரு…. (goshan_che) "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” (kandiah Thillaivinayagalingam) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) பார்த்தீனியம் ( ரசோதரன்) கிழவனை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) "கிராமியக் கலைஞன்" (kandiah Thillaivinayagalingam) தலைவரை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்? (villavan) "தை மகளே வருக" (kandiah Thillaivinayagalingam) பம்மாத்து (சுப.சோமசுந்தரம்) அப்பா...... (விசுகு) நானும் ஊர்க் காணியும் (மெசொபொத்தேமியா சுமேரியர்) "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" (kandiah Thillaivinayagalingam) "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " (kandiah Thillaivinayagalingam) செவ்வந்தியில் செவ்வந்தி ( ரசோதரன்) இரத்த சொந்தம் (நிலாமதி) “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” (kandiah Thillaivinayagalingam) "தை பிறந்தால்" & "பரோபகாரம்" (kandiah Thillaivinayagalingam) ஏழரைக்கனவு (தனிக்காட்டு ராஜா) யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. (தமிழ் சிறி) "புதிய ஆரம்பம்" (kandiah Thillaivinayagalingam) "வாடகை வீடு..!" (kandiah Thillaivinayagalingam) "உன்னைச் செதுக்கு" (kandiah Thillaivinayagalingam) "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" (kandiah Thillaivinayagalingam) "எங்களுக்கும் காலம் வரும்" (kandiah Thillaivinayagalingam) "கந்துவட்டி" (kandiah Thillaivinayagalingam) "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" (kandiah Thillaivinayagalingam) "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" (kandiah Thillaivinayagalingam) கூடுவேம் என்பது அவா / குறள்1310 (kandiah Thillaivinayagalingam) "தனிக் குடித்தனம்" (kandiah Thillaivinayagalingam) "மௌனம் சம்மதமா?" (kandiah Thillaivinayagalingam) “போராடி வென்றவள்" (kandiah Thillaivinayagalingam) "உயிர்பெறுமா ஓவியம்" (kandiah Thillaivinayagalingam) "வீட்டு வேலைக்காரி" (kandiah Thillaivinayagalingam) "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" (kandiah Thillaivinayagalingam) "மீட்டாத வீணை.." (kandiah Thillaivinayagalingam) பதியப்பட்ட 94 ஆக்கங்களில் களஉறுப்பினர்கள் @kandiah Thillaivinayagalingam 53 ஆக்கங்களையும் @ரசோதரன் 16 ஆக்கங்களையும் பதிந்துள்ளனர். கள உறுப்பினர்கள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம், ரசோதரன் ஆகியோருக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  24. “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விரும்பி பார்க்கும் நிலையில் இல்லை. அவள் மலரவனைப் பார்த்துப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மரத்தடியில் சோக கண்ணீருடன் விடைபெற்று இன்று பத்து ஆண்டுகள். அப்போது அவள் இளமையாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவன், தனது புத்திசாலித்தனமான மனதுடன், அவர்களின் சிறிய கிராமப் பள்ளியில், எப்போதும் தனித்து நின்றான். நன்முல்லை, கல்வியில் அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும், அவனது இதய நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக, அன்பாக ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்களின் பந்தம் குறுகிய தூசி நிறைந்த பாதைகள் மற்றும் அவர்களின் கிராமத்தின் அமைதியான வயல்களுக்கு மத்தியில் வளர்ந்தது. கடற்கரை ஓரத்தில் துள்ளி விளையாடியது. பழைய ஒற்றை மரத்தடியின் கீழ் முழுமைபெற்றது. மலரவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான செய்தி கிடைத்ததும், அந்தக் கிராமத்தின் பெருமைக்கு எல்லையே இல்லை. அவர்களின் பள்ளியில் இருந்து, இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் மாணவன், அவனே ஆகும். ஆனால், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நன்முல்லையின் இதயம் கனத்தது. அது ஏன் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவன் அங்கிருந்து வெளியேற எல்லாம் மாறும் என்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி மாலையில், மலரவன் அவளை, அதே கடலோர ஒற்றை மரத்தடியில் சந்திக்கச் சொன்னான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, தண்ணீரின் மேல் ஒரு தங்க நிறத்தை அது வீசியது. அவன், அவளின் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் கண்கள் உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. “நன்முல்லை” என்று அவன் குரல் கொஞ்சம் நடுங்கியது, “எதுவாக இருந்தாலும் சரி, நான் மருத்தவனானவுடன் உனக்காக இங்கு கட்டாயம் திரும்ப வருவேன்" என்று உறுதியளிதான். "நீ என் உயிர், என் எல்லாம் நீயே. எனக்காக காத்திருங்கள், தயவு செய்து." என்று கெஞ்சினான். அவள் தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் மென்மையான முத்தங்களைப் பதித்து அவளை இறுக அணைத்தான். அந்தக் கணம், அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியான நினைவாகப் பதிந்தது. அவள் என்றென்றும் சுமந்து செல்லும், ஒரு இன்பமான நினைவாக அது இருந்தது. ஆனால் அது ஒரு முடிவாகும் என்று அவள் அன்று நினைக்கவே இல்லை. முதலில் கொடுத்த வாக்கை அவன், கொழும்புப் பல்கலைக்கழகம் போன புதிதில் காப்பாற்றினான். கொழும்பிலிருந்து மின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தன, அவனது படிப்புகள், அவனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது கனவுகள் நிறைந்த கதைகள். ஆனால் திங்கள்கள், ஆண்டுகளாக மாற, தொடர்புகள் அடிக்கடி வருவதில்லை. "நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவன் தனது கடைசித் தொடர்பு ஒன்றில் கூறினான். பிறகு, மௌனம் தான் பதிலாக இருந்தது. விரைவில் மீண்டும் தொடர்புகொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, நன்முல்லை காத்திருந்தாள். ஆனால், நாளாக நாளாக, அவள் ஆழ்மனதில் ஒரு பயம் வளர ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவன், தனது இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றதாகவும், இலண்டனில் படிக்க மதிப்புமிக்க தகுதிசார் கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், செய்தி அவளை எட்டியது. அவள் இதயம் பெருமிதத்தால் வீங்கியது, ஆனால் அவன் மேலும் விலகிச் செல்கிறான் என்பதை உணர்ந்து, அதுவும் வலித்தது. என்றாலும் அவள் காத்திருந்தாள். அவன், தன் கனவுகளை அடைய தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகவும், அவன் உறுதியளித்தபடியே தனக்காகத் திரும்பி வருவான் என்றும், அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மலரவன் இறுதியாகத் தன் மேற்படிப்பை இலண்டனில் முடித்துக் கொண்டு, கிராமத்திற்குத் திரும்பியதும், எண்ணற்ற முறை நன்முல்லை நினைத்திருந்த மகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு நடைபெறவில்லை. அவன் அங்கு, அந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண்டு பழகிக், காதலித்த தனது காதலியுடனும் அவளின் பெற்றோருடனும், பெற்றோருக்கு நேரடியாக அறிமுகப்படுத்தவும், தனது திருமணத்தைப் பெற்றோரின் வாழ்த்துடன் உறுதிப்படுத்தவும் திரும்பி வந்ததாக மற்றவர்களிடமிருந்து அவள் கேள்விப்பட்டாள். நன்முல்லையின் இதயம் நொறுங்கியது, ஆனால் அதைத் தனது, தன் கண்களால் பார்க்கும் வரை நம்ப மறுத்தாள். ஒரு நாள் மாலை, அவள் அந்தப் பழைய ஒற்றை மரத்தடியில் நின்றபோது, அவன், தன் வருங்கால மனைவியுடன் கடற்கரையோரம் நடந்து செல்வதைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவன் முன்போல் இருக்கவில்லை. அந்த முன்னைய கிராம மண்வாசனை அங்கு இருக்கவில்லை. அதிக மெருகூட்டப் பட்டவனாகவும், அதிக நம்பிக்கையுடையவனாகவும், மற்றும் ஒரு நகர்ப்புற மண் வாசனைதான் அவனில் தெரிந்தது. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவன் இன்னும் அவள் நேசித்த மலரவன்தான். தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு, அவன் தன்னைக் கவனிக்கும் வரை காத்திருந்தாள். அவர்களின் கண்கள் சிறிது நேரம் சந்தித்தன, ஆனால் அவனது பார்வையில் எந்த உடன்பாடும் இல்லை. அவள் யார் என்று அவனது காதலி கேட்டபோது, அவன் தனக்குத் தெரியாது என்று நிராகரித்தான். "ஓ, சில பைத்தியக்கார கிராமத்து பெண் போலும், " என்று அவன் சாதாரணமாக, ஆனால் கொஞ்சம் உரத்த சத்தத்துடன் கூறினான். "அவள் தன் கணவனை இழந்திருக்கலாம் அல்லது எதையாவது இழந்திருக்கலாம்." என்றான். நன்முல்லையின் உலகம் சிதைந்தது. அவள் கத்த விரும்பினாள், அவனுடைய வாக்குறுதிகளை, அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பை அவனுக்கு நினைவூட்ட. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்ணியம் அவளைக்அந்த இடத்திலேயே வேரூன்ற வைத்தது. அவன் விலகிச் செல்வதைக் கண்டு அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் காதலியுடன் பேசும் போது, அவனது சிரிப்பு காற்றில் அவளுக்கு எதிரொலித்தது. அன்று முதல், நன்முல்லை வாழ்வு, கடலோர மரத்தடியில் நிலைத்தது. கிராமவாசிகள் அவளை அங்கு அடிக்கடி பார்ப்பார்கள். ஒரு புரியாத வெளிப்பாட்டுடன் அவள் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். மற்றவர்கள், அவளை கிராமத்தின் பைத்தியக்காரப் பெண் என்று கேலி செய்தனர். ஆனால் நன்முல்லை அவை எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் இதயத்தில், மலரவனின் நினைவுகளில், அவன் கொடுத்த வாக்குறுதியில், இன்னும் ஒட்டிக்கொண்டாள். அவள் தொடர்ந்து காத்திருந்தாள், அவன் திரும்புவதற்காக அல்ல, ஆனால் அவள் அறிந்த காதலுக்காக, தன் வாழ்க்கையை வரையறுத்த காதலுக்காக மட்டுமே! மலரவன் எண்ணம் இதயத்தில் எரிய அங்கு இருந்தாள்; கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். - அசோகா வனத்தில் சீதையின் நிலை / சுந்தர காண்டத்தில் இருந்து இறுதி மூன்று வரியும் எடுக்கப்பட்டது - (மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய) மலரவனின் எண்ணம் அவளை எரித்து துன்புறுத்த, நன்முல்லை, [சீதை அசோக வனத்தில் இருந்தது போல்] கற்பாறைக்குப் பக்கத்திலே [ பழைய ஒற்றை மரத்தின் கீழ் இருந்த] தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய அவள், மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள். ஆண்டுகள் கடந்தன, நன்முல்லையின் தலைமுடி நரைத்தது. ஆனால் அந்த கடலோரத்தில் இருந்த ஒற்றை மரம் வலுவாக நின்றது. அதன் கிளைகள் காற்றில் அசைந்தன. அவளுடைய தளராத காதலுக்கு மௌன சாட்சியாக. ஒரு நாள், கதிரவன் மறைந்து வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறியபோது, நன்முல்லை கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை இன்னும் தெரிந்தது. அவளுடைய காத்திருப்பு, இந்த மண்ணில் கடைசியாக முடிந்தது. இந்த பிறவியிலோ அல்லது மறுமையிலோ, மீண்டும் தன் மலரவனைக் கண்டுபிடிப்பேன் என்று அவள் நம்பினாள். அதுவரை கடல் அவளின் கிசுகிசுக்களை சுமந்துகொண்டே இருக்கும், மரம் அவள் நினைவுகளைக் காத்துக்கொண்டிருக்கும் - காலம் தாண்டிய காதலுக்குச் சான்றாக! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  25. "அன்புடன் தேன்மொழி" யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கையிலுள்ள 13 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து, 1974 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இன்று [2024] இலங்கையில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்றும் சலசலப்பாக , அதன் சிவப்பு செங்கல் சுவர்கள் கல்வி அபிலாஷைகள் மற்றும் இளமைக் கனவுகளின் நறுமணத்தில் மூழ்கி இருந்தது. 2024 இல், மாணவர்களின் கடலில், ஒரு பெயர் அடிக்கடி பாராட்டுக்களுடன் பலர் இதயங்களில் கிசுகிசுத்தது: அழகும் அன்பும் தன்னகத்தே கொண்ட, முதலாம் ஆண்டு அறிவியல் பீட மாணவி, 'தேன்மொழி' தான் அவள். சிகப்பு நிறமும், ஒல்லியும், சராசரி உயரமும் கொண்ட அவள், தன்னம்பிக்கையான தோரணையுடன், சிரமமின்றி எல்லோர் கவனத்தையும் தன்பால் ஈர்த்தாள். ஒரு பெண்ணின் அழகு இலக்கணத்தில் நீண்ட கால்கள், ஒரு மெல்லிய இடுப்பு மற்றும் அழகான மார்பு ஆகிய, மூன்று அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டது. அவள் இந்த இலக்கணத்துக்கே பொருள் சொல்லுபவளாக இருந்தாள். அழகிய தோற்றத்தையும், முகப்பொலிவையும் தரும் பிரகாசமான கண்களையும், சிரிக்கும் போது பார்ப்பதற்கு கவர்ச்சியையும் அழகையும் கொடுக்கும் கொழு கொழு கன்னங்களையும், கவர்ச்சியான முழு உதடுகளையும், மற்றும் சுருண்ட நீண்ட கருங் கூந்தலையும் கொண்ட அவள், தனது கனிவான புன்னகையாலும் கடுமையான இதயங்களைக் கூட உருக்கும் குரலாலும் ஒவ்வொருவரையும், குறிப்பாக ஆண்களை தனக்குத் தெரியாமலே கவர்ந்தாள். அவளுடைய அழகு சங்க இலக்கியங்களில் காணப்படும் விளக்கங்களை எதிரொலிப்பது போல் தோன்றினாலும் - உமாதேவியின் நேர்த்தியையும் கவர்ச்சியையும் அழகையும் சுட்டிக்காட்டும் முதலாம் திருமுறை தேவாரத்துடன் அவள் ஒப்பிடக் கூடியவள். "மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் ...... தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந் துமே னி ...... வார்மலி மென்முலை ....... வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் விண் நின்ற மதியின் மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார் ...... " அதாவது, விரும்பத்தக்க இளம்பிடியையும் [அழகிய பெண்ணையும்], இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய ....... இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் .......... கச்சணிந்த மென்மையான தனங்களை [பெண்ணின் மார்பகம்] உடைய ......... கரிய வண்ணமும் கொண்ட கூந்தல் தொகுதியை வட்டமாகப் பின்னி, கூந்தல் வட்டத்தில் மேகத்திலே தோன்றும் கிரணங்கள் விரிய, சந்திரனைப் போல, மெல்லிய பூக்களால் ஆன ’சிகழிகை’ [தலையைச் சூழ அணியும் மாலைவகை] என்னும் தலைமாலையைச் சூடிய ...... ' என்கிறது இந்த தேவார வரிகள். ஆனால் அவள் உண்மையில் இதைவிட அழகு! தேன்மொழி ஒரு செல்வந்த பிராமண குடும்பத்திலிருந்து வந்தவள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளில் அவளுடைய குடும்பம் வாழ்ந்து வந்தது. அவளுடைய சிறப்புப் பின்னணி மிகவும் நன்றாக பெருமையாக இருந்த போதிலும், அவள் அடக்கமாகவும், கனிவாகவும், கூர்வமான புத்திசாலியாகவும் இருந்தாள். அவளுடைய அரவணைப்பு மற்றும் வசீகரத்திற்காக அவளுடன் கூடப்படிக்கும் சகாக்கள் மற்றும் மூத்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் என்றும் காத்திருந்தனர், ஆனால் அவளுடைய இதயம் எனோ அமைதியாக ஒரு துணையை, நண்பனை தானே ஒருதலையாகத் தேர்ந்தெடுத்தது, அவன் தான் கலாநிதி [டாக்டர்] ஆய்வகன். கலாநிதி ஆய்வகன் புதிதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட இயற்பியல் [பௌதிகவியல்] விரிவுரையாளர், வயது ஒன்றும் பெரிதாக இல்லை, ஒரு இருபத்தி ஆறு அல்லது இருபத்தி ஏழு இருக்கும். இவனின் வருகை குறிப்பாக பெண்களை திரும்பி பார்க்கவைக்கும். ஒரு கிரேக்க கடவுளின் அல்லது மன்மதனின் கவர்ச்சியுடன், அவன் கம்பீரமான உடல் அமைப்பையும், உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை சுட்டிக்காட்டும் ஒரு தடகள உடலமைப்பையும் கொண்டிருந்தான். ஒரு கவிஞன் அவனைப் பார்த்திருந்தால், வீரத்தின் தமிழ் கடவுளான முருகனுடன் கூட ஒப்பிட்டிருக்கலாம்? அவனது ஒளிரும் அழகு மற்றும் வசீகரம் வர்ணிக்க முடியாது. அவனின் அழகை சுருக்கமாக சொலவதென்றால், கம்பனைத்தான் கூப்பிடவேண்டும். "தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்." ஆய்வகனின் தோள்கள், தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். அப்படி ஒரு கம்பீரம்! கலாநிதி ஆய்வகனின் அறிவுத்திறனும் அமைதியான கவர்ச்சியும் அவனைச் சந்தித்த அனைவரையும் கவர்ந்தன. அவன் தனது தொழில்முறை எல்லைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டு இருந்ததுடன், தனது வேலையிலும் முறைப்படி ஆழ்ந்த கவனம் செலுத்தினான். தேன்மொழியின் பின்னணியும் ஆய்வகனின் பின்னணியும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு கிறித்தவ கூலித்தொழிலாளியின் மகன் தான் இவன். என்றாலும் வறுமையின் பிடியிலிருந்தும், வசதிகளற்ற சூழலில் இருந்தும் தன் விடாமுயற்சியினூடாக எல்லா முரண்பாடுகளையும் உடைத்தெறிந்து, கடினமான உறுதியாலும், அறிவுக்கான தீராத தாகத்தாலும் உந்தப்பட்டு, இந்த நிலைக்கு உயர்ந்தவன் தான் அவன். அவன் அதை என்றும் மறக்ககவும் இல்லை, மறைக்கவும் இல்லை. தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஒரு பிறநாட்டு கலாநிதி பட்டத்துக்கான அவனது பயணம் பெருமைக்குரியது. "சாதிகள் இல்லையடிபாப்பா - குலத் தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி கல்வி - இவை நிறைய வுடையவர்கள் மேலோர்" இன்று சாதியம் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினர், சாதியம் என்பது யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தில் இல்லவே இல்லை, அல்லது பெரிதளவில் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “இப்பெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்பது தான், அவர்களது மகுட வாக்கியமாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, சாதாரண நகர்ப்புறச் சூழலில், வெளிப்படையான சாதியப் பாகுபாடுகள் இல்லாத நிலைமை, அங்கு முற்றிலும் சாதியமே இல்லையென ஒரு முடிவை எடுக்கத் தூண்டியிருக்கலாம். ஒரு வகையில், அந்த எண்ணத்தில் சிறிதளவில் உண்மை இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் சந்தித்த நேரடியான ஒடுக்குமுறைகள் தற்போது குறைந்திருக்கின்றன. ஆனால் அதற்காக, சாதியே இல்லையென்று கூறிவிட முடியுமா? இது தான் ஆய்வகனின் அனுபவம் கூட . அவனது ஒரு விரிவுரையின் போதுதான் தேன்மொழி முதன்முதலில் தன் இதயம் அவனை நோக்கி அசைவதைக் உணர்ந்தாள். பூதேவியான தனக்கு அருகில் சந்திரனைப் போல ஆண்கள் சுற்றி இருந்தாலும், அந்த பூமி [தேன்மொழி], தள்ளி நடுவில் நின்று ஈர்ப்பு விசைகள் பற்றி ஆழமாக விளங்கப்படுத்திக் கொண்டு இருக்கும் சூரியனான, ஆய்வகனின் கவர்ச்சியில் தன்னை இழந்து, சூரியனை சுற்றுவது போல, அவள் அவனைச் சுற்றி சுற்றி தன் எண்ணங்களை கற்பனை செய்து கொண்டே இருந்தாள். சிக்கலான கோட்பாடுகளை அவன் தெளிவுடன் விளக்கிய விதம், ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது அவனது புருவங்கள் ஏறி இறங்குவதிலும் சுருங்குவதிலும் அவள் கண்ட அழகு, இயற்பியல் பற்றி விவாதிக்கும் போது அவனது குரலில் இருந்த ஆர்வம் - இவை அனைத்தும் அவளைக் கவர்ந்தன. முதலில், அவள் அவனின் புத்திசாலித்தனமான மனதைப் போற்றுவதாக இருந்தாலும், நாட்கள் வாரங்களாக மாறியபோது, அது அதைவிட அதிகம் என்பதை அவள் உணர்ந்தாள். காதல் சொல்லிக்கொண்டு வராது என்பதை அப்பத்தான் அவள் உணர்ந்தாள். ‘கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ! திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!’ கண்ணனுடன் எப்போதும் கூடவே இருக்கும் பேறுபெற்ற சங்கு, அவனது கையில் எப்போதும் இருக்கும் பாக்யம் பெற்றது. அத்தோடு அவனது வாயமிர்தத்தை நுகரும் பேறும் பெற்றது. இவ்வெண்சங்கைப் பார்க்கும் போதெல்லாம் அதனிடத்தே தன் ஆற்றாமையை காட்டி பாடினாள் ஆண்டாள், அப்படித்தான் தேன்மொழி இருந்தாள். ஆய்வனுடன் நெருங்கிப் பழகுவதற்கு தேன்மொழியின் முயற்சிகள் முதலில் ஒரு சாதாரணமான பல பெண்களின் அணுகுமுறையாக இருந்தது. வகுப்பிற்குப் பிறகு, கொஞ்சம் விளக்கம் தேவை என்ற கேள்விகளுடன் நீடித்தது, முடிந்த அளவு அவனது திசையில் குறுக்கிட்டு அவனது பிரகாசமான புன்னகைக்கு காத்திருந்தாள். ஆய்வகன் அவளிடம் மற்றவர்களை விட கூடுதலான அன்பைக் காட்டினாலும், அவன் எப்பவும் ஒரு இடைவெளியைப் பேணினான். என்றாலும் அவன் ஒரு இளைஞன் தானே, அவளது அழகும் வசீகரமும் அவனது கவனத்தில் இருந்து தப்பவில்லை. ஆனால் அவன் இன்றைய சமூக பார்வையில் தன் பங்கையும் இருவருக்கும் இடையே சமூகம் ஏற்படுத்திய வேறுபாடுகளையும் தடைகளையும் என்றும் மறக்கவில்லை. "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? நியூட்ரான் எலெக்ட்ரான் – உன் நீலக்கண்ணில் எத்தனை?" 2011 –ஆம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன்’ என்ற அமரர் சுஜாதாவின் கதை திரைப்படமாக வெளிவந்தபோது, அதில் வைரமுத்துவின் பாடல் வரிகள் இது. ஆனால் இது ஒரு பழைய பௌதிகம். புதிய குவாண்டம் இயற்பியலில் உள்ள சிக்கலைப் பற்றிய கருத்தை ஒரு உருவகமாகப் பயன்படுத்தி, காதலில் அனுபவிக்கும் ஆழமான தொடர்பையும் தீவிர உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும் என்று தன் மனதில் 'காதல் பாசக் கோட்பாடு' ஒன்றை நிறுத்தினாள். குவாண்டம் இயற்பியலின் அடிப்படைகள், பொருளா ஆற்றலா என்று இனம் பிரிக்க இயலா தன்மை உடையவை. அப்படித்தான் அவள் மனதும் இரட்டை மனநிலைகளில், ஏன் எல்லாம் நாம் காண்பதுபோல் இருக்கின்றன? இல்லை, காண்பதுதான் இருக்கிறதா என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இரண்டிற்குமிடையில் தவித்தாள். ஒரு மாலையில், குவாண்டம் இயற்பியல் பற்றிய விரிவுரைக்குப் பிறகு, தேன்மொழி தன் உணர்வுகளை ஒப்புக்கொள்ள தைரியத்தைத் திரட்டினாள். மற்ற மாணவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த அவள் உறுதியும் பதட்டமும் கலந்து, ஆய்வகனை அணுகினாள். “டாக்டர் ஆய்வகன்,” என்று அவள் ஆரம்பித்தாள், அவளுக்குள் புயல் வீசினாலும் அவள் குரல் உறுதியாக சீராக இருந்தது, “எனக்கு ஒரு தனிப்பட்ட விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தயவு செய்து என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், நான் ... உங்களை ஆழமாக நேசிக்கிறேன். இது சாதாரண அன்பை விட அதிகம். நான் உங்களை காதலிக்கிறேன் என்று என் மனம் உறுதியாகச் சொல்கிறது" என்றாள். ஆய்வகனின் இதயமும் துடித்தது. அவளுடைய பாசத்தை அவன் சிலதடவை முன்பும் அவளின் செயல்களில், அணுகும் முறைகளில் உணர்ந்தான் ஆனால் அவள் இவ்வளவு தைரியமாக குரல் கொடுப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம், அவளின் கனிவான பார்வையில் அவன் தொலைந்து போனான், ஆனால் அவனின் உள் உணர்வு, அவனை அதில் இருந்து வெளியே இழுத்தது. "தேன்மொழி," அவன் மெதுவாக ஆனால் உறுதியாக அழைத்தான், "நீங்கள் ஒரு விதிவிலக்கான மாணவி, நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். ஆனால் இது... உங்கள் ஆசை ... இது நடக்காது. நமது உலகங்கள் மிகவும் வேறுபட்டவை. உங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், சமூகத்தின் நெறிமுறைகள் - இவைகள் எல்லாம் கட்டாயம் பல தடைகளை ஏற்படுத்தும்." என்றான். அவனுடைய வார்த்தைகளில் அவளின் இதயம் உடைந்தது, ஆனால் அவள் கைவிட மறுத்தாள். அடுத்த வாரங்களில், அவள் அவனுக்கு ஈ - மெயில் கடிதங்களை எழுதினாள். அவளுடைய இதயத்தை காகிதத்தில் ஊற்றினாள். ஒவ்வொன்றும் “அன்புடன், தேன்மொழி” என்ற வார்த்தைகளுடன் முடிவடைந்தது. இந்த கடிதங்களில், அவள் அடிக்கடி பழங்கால தமிழ் இலக்கியத்தின் கூற்றுக்களை, பாடல்களை, அன்பு மற்றும் அறம் பற்றிய திருக்குறளில் இருந்து வரிகளை மேற்கோள் காட்டினாள். அதில், ஒரு குறிப்பிட்ட வசனம் ஆழமாக எதிரொலித்தது: "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது." நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவனுடைய நெஞ்சு அவனுக்குத் துணையாக இருக்கும்போது நீ எனக்குத் துணையாக இல்லாமல் அவனை நினைத்து உருகுவது ஏன்?. அவள் தன் உள்ளத்தையே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. என்றாலும் அவளின் உணர்ச்சிகளின் உண்மைத் தன்மையை அவன் புரிந்துகொள்வான் என்று அவள் நம்பினாள். அவள் ஒரு சில மாதங்கள் காத்திருந்தாள், ஆனால் ஆய்வகனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அவள் இறுதியாக ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதி, அதுவே தனது இறுதிக் கடிதமாக, நேராகவே அவனின் கையில் "தயவுசெய்து இதைப் படியுங்கள், சார் ," என்று சொல்லிக் கண்ணீருடன் ஒரு நாள் கொடுத்தாள். அவள் குரலில் நம்பிக்கை மற்றும் உறுதி ஆகிய இரண்டும் இருந்தது. “இது தான் கடைசி. இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்." என்றாள். அன்று மாலை, ஆய்வகன் தனது ஆடம்பரமற்ற சாதாரண அறையில் அமர்ந்து, கடிதத்தை கையில் எடுத்து திருப்ப திருப்பப் பார்த்தான். அவளுடைய வார்த்தைகள் எளிமையாக, ஆனால் ஆழமாக, அவனுடைய ஆன்மாவைத் தொட்ட வார்த்தைகளால் நிரப்பப்பட்டு இருந்தன. அன்புக்குரிய டாக்டர் ஆய்வகன், உங்கள் காரணங்களை நான் புரிந்துகொள்கிறேன், உங்களின் எந்த முடிவையும் நான் மதிக்கிறேன். ஆனால் உங்கள் மீதான எனது அன்பு சமூக எதிர்பார்ப்புகளுக்கோ அல்லது குடும்ப அழுத்தங்களுக்கோ கட்டுப்பட்டதல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன். இது தூய்மையானது மற்றும் தன்னலமற்றது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது அப்படியே இருக்கும். என்றும் மாறாது! நீங்கள் எனக்கு இயற்பியலைக் காட்டிலும் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்; ஒருவரின் வலிமை, குணம் மற்றும் இதயத்திற்காக அவரைப் போற்றுவதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் எனக்குக் காட்டியுள்ளீர்கள். அதை நான் எப்போதும் போற்றுவேன், கடைப்பிடிப்பேன். உங்கள் விடைக்காக என்றும், எவ்வளவு காலம் சென்றாலும் காத்திருப்பேன். 'அன்புடன் தேன்மொழி' ஆய்வகன் தன் கொள்கைகளுக்கும் அவளை நோக்கி, ஒரு விளங்க முடியாத உணர்வு ஒன்று இழுக்கும் வலிமைக்கும் இடையே போராடி போராடி மணிக்கணக்கில் அந்தக் கடிதத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவளது தைரியம், அவளது அசைக்க முடியாத அன்பு மற்றும் அவன் மீதான அவளுடைய நம்பிக்கை அவன் இதயத்தைச் சுற்றி சுற்றி அவன் கட்டியிருந்த ஒவ்வொரு சுவருக்கும் சவாலாக இருந்தது. தமிழ் வரலாறு, இலக்கியம் பற்றிய நினைவுகள் அவன் மனதில் தோன்றின. சமூகக் கட்டுப்பாடுகளைத் தாண்டிய காதலைப் பற்றியும், புறப் பிரிவினைகளுக்கு மேல் உள்ளத் தூய்மையைக் கொண்டாடும் பண்டைய தமிழர் மதமான, தமிழ்ச் சைவத்தின் மரபு பற்றியும் நினைத்தான். காதலுக்காக அவன் தன் சமுதாயத்தை மறுக்க முடியுமா? இரவு செல்லச் செல்ல, வாழ்க்கை, அன்பு மற்றும் தனது சொந்த மதிப்பு பற்றி தனக்குத் தெரியும் என்று நினைத்த அனைத்தையும் அவன் கேள்விக்குள்ளாக்கினான். ஆனால் பதில் எளிதில் அவனுக்கு வரவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக இருந்தது - தேன்மொழியின் காதல் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அவன் இன்னும் பதில் கொடுக்காமலே, அந்தக்கடிதம் அப்படியே இருந்தது. அதேவேளை, பதிலை எதிர்பார்த்து எதிர்பார்த்து தேன்மொழியும்; "சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே! துறை போகு அறுவைத் தூ மடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே! எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ, சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, 5 அனைய அன்பினையோ, பெரு மறவியையோ ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!" குருகே! எம் ஊர்மக்கள் நீருண்ணும் துறைக்கு வந்து கெளிற்றுமீனை உண்டுவிட்டு அவர் ஊருக்குப் பறந்து செல்கிறாய். இங்கு நான் அவரை எண்ணி மெலிந்ததால் என் அணிகலன்கள் கழன்று விழுவதை அருக்குச் சொல்லுவாயோ சொல்ல மறந்துவிடுவாயோ தெரியவில்லையே! என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டே காலத்தைக் கழித்தாள். அவள் அறையில் ஆண்டாள் படமும், அவளின் ஒரு சில பாடல் வரிகளும் தொங்கிக்கொண்டு இருந்தன. ‘ஆசை வெட்கமறியாது’ என்ற பழமொழி இங்கும் சரியாய் போய்விட்டது. மிகுந்த காதல் கொண்டதால் இனிமேல் தன் காதலை மறைக்க முடியாது என்பது தெரிந்து எல்லோர் முன்னிலையிலும் தன் காதலை ஒத்துக் கொண்டு தன்னை எப்படியாகிலும் அவனுடன் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகோள் விடும் ஆண்டாளின் பாடல் அது! ‘நாணி இனியோர் கருமமில்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க உறுதிராகில் மானியுருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமை றியும் ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில் ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ ‘நாணி இனியோர் கருமமில்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார் பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க உறுதிராகில் மானியுருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமை றியும் ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில் ஆயர்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. 🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025) பதினெட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் உன் நினைவுகள் நெஞ்சில் என்றும் வாழுமே! கந்தர்மடம் ஆத்திசூடியில் அவதரித்த தேவதையே ஆசிரியரின் பாசத்தில் உருவான அழகு ஓவியமே! வேம்படி பள்ளியின் அறிவு விளக்கே உயிரியல் பாடத்தில் ஒளிர்ந்த பெதுமையே! இருபத்தாறு வயதில் மணமகளாய் மலர்ந்து அத்தியடியின் மருமகளாய் வலதுகால் பதித்தாயே! யாழின் நினைவுடன் இங்கிலாந்து சென்றாய் விதியை வென்று, வாழ்வை வளமாக அமைத்தாய்! தமிழும் ஆங்கிலமும் சமநிலையில் போற்றினாய் பழமை புதுமையைச் சேர்த்து பூந்தோட்டமானாய்! மூன்று மழலைகளின் அன்புப் பாசத்தாயே கருணையும் அறிவும் வாரி அளித்த குருவே! நடனம், இசை, விளையாட்டு அனைத்தையும் படிப்புடன் சேர்த்து ஊட்டி வளர்த்த மடந்தையே! ஓயாது உழைத்து, சோராது சமைத்து பசுமை வீடாய் குடும்பத்தை நிமிர்த்தினாயே! அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த உன் வழிகாட்டலில் பிள்ளைகள் ஒளிர்ந்தனவே பெருமைகள் சேர்த்தனவே! குடும்ப மரத்தில் இன்று எட்டு மொட்டுகள் அவர்களது சிரிப்பிலும் நீயே உறைந்திருக்கிறாய்! ஒவ்வொரு புன்னகையிலும், ஒவ்வொரு கண்ணீரிலும், உன் புகழ் நிழலாக நெஞ்சங்களை நனையச் செய்கிறதே! பதினெட்டு ஆண்டுகள் பறந்து விட்டாலும், நினைவுகள் நிலவாய் நம் வாழ்வை நிறைத்தவளே! இதயத்தில் என்றும் அணையாத தீபமே எம் ஆண்டவனாய் இன்று உன்னையே வணங்குகிறோம்! - தில்லைவிநாயகலிங்கம் குடும்பத்தனர் - 🕊️ In Loving Memory of Mrs. Jeyakumary Thillaivinayagalingam (08.06.2025) Eighteen years have come and gone, Yet your light still lingers on. Born in Kandarmadam’s gentle air, To teach and lead was your family’s care. Vembadi’s halls knew your name, In bioscience, you rose to fame. At twenty-six, you joined your hand, With an engineer from Athiady’s land. From Jaffna’s soil to England’s shore, You built a life, and so much more. With heart and hope, you learned anew, A tongue, a world — yet stayed so true. Three young lives you shaped with grace, Gave them strength, a grounded place. Books, dance, keys and strings, You taught them joy in many things. A mother, guide, a soul so bright, You worked by day, loved through the night. Not once you paused to claim your due, Your children rose because of you. Now eight sweet buds bloom from your tree, Your spirit lives in their melody. Though you have gone, we feel you near, In every smile, in every tear. Eighteen years, and still you shine, Our love for you, a sacred line. Forever missed, forever dear, Your memory blossoms year by year. - Thillaivinayagalingam's Family -
  27. ஆமாம் வீட்டிலே தான். 22ம் திகதிவரை நிற்பேன். ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம். வாழ்க்கையில் போராட்டமா? போராட்டமே வாழ்க்கையா? இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து இன்னும் பலரைக் காணவில்லை.
  28. அத்தியட்டி தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் பதிவுகளில், அந்தத் தம்பதிகளின் சுயவிபரப் படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு மகிழ்ந்திருந்த என்னை, இந்த நினைவாஞ்சலிப் பதிவு பெரும் அதிர்வைத் தந்து வருத்துகிறது.😭

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.