Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    10206
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/04/25 in all areas

  1. மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போது பொதுமக்கள், போராளிகள் என்று அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை அரசு தெரிந்தே வைத்திருக்கிறது. தலைவரின் மறைவு குறித்த தெளிவான, தீர்க்கமான வெளிப்படுத்தலினை சிங்கள அரசைத் தவிர வேறு எவருமே இதுவரை செய்யத் தவறியிருக்கும் நிலையில் அவருக்கான அஞ்சலியினைச் செலுத்துவது குறித்த தயக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இது அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் அல்லது அவ்வாறு எண்ண விரும்பும் ஒரு தரப்பினரிடையே இருந்துவரும் அழுத்தங்களினால் ஏனைய தரப்புக்கள் இதுகுறித்து எதுவும் பேசாது மெளனமாகக் கடந்து செல்வது நடக்கிறதாகவே நான் எண்ணுகிறேன். தாயகத்தில் தலைவரின் உருவப்படம் வைப்பதற்கு இருக்கும் அரச எதிர்ப்பு என்பது சாதாரண போராளி ஒருவரின் மறைவினை நினைவுபடுத்த வைக்கப்படும் ஒளிப்படத்திற்கு நிகரானது என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் புலத்திலோ அவ்வாறான அரச அழுத்தங்கள் இல்லாதபோதிலும், நான் மேலே கூறிய அவர் இருக்கிறார் என்று நம்பும், நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினரிடமிருந்து வரும் எதிர்ப்பும், அவரது மறைவினை வெளிப்படுத்துவதினால் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் ஒரு குழுவினரும் இதனை வெளிப்படையாக அனுஷ்ட்டிப்பதை எதிர்க்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் தலைவருக்கான அஞ்சலியினை ஒவ்வொரு தமிழரும் தமது மனதில் செய்தாலே போதுமானது என்று நான் எண்ணுகிறேன். அவர் எப்போதும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை நினைவுகூர நாம் நாள்ப்பார்ரபதைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வதே அவருக்குச் செய்யும் உயர்ந்த கெளரவிப்பாக இருக்கும்.
  2. இஸ்ரேலியர்கள்…. காத்தான்குடிக்கும் பெருவாரியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம். 🙏 😂
  3. அது சரி ..... கிழக்கிலிருந்து தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகள் பிரதேசங்களை விட்டு விரட்டப்பட்டார்கள், அவர்களின் கோயில்கள், காணிகளை பறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை தனது அதிகாரத்தினால் மாற்றி, முஸ்லீம் வியாபார நிலையங்களை அமைத்தேன் என்று வீராப்பு பேசுகிறார் ஹிஸ்புல்லா. அங்கே முஸ்லீம் ஊர்காவற் படை, சிங்கள இராணுவப்படை இவ்வளவையும் தாண்டி முஸ்லிம்களை புலிகள் தாக்கினார்கள் என்றால் இவர்களது இராணுவப்படை, பலம் என்ன செய்தது? ஏன் அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. புலிகளை சீண்டி மிகுதியை எதிர்பார்த்தபடி தாம் அரங்கேற்றி, புலிகளின் தலையில் கட்டி புலிகளை பெலவீனப்படுத்தும் செயல் இது. சியா முஸ்லிம்கள் இராணுவத்தோடு செய்த அடடூழியம். தமிழரை கொன்ற ஊர்காவற் படையினர் இன்னும் உலாவருகின்றனர், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். இரண்டு போலீசாரை சுட்டும் வெட்டியும் ஆயுதங்களை எடுத்து விட்டு புலிகளின் தலையில் கட்டியவர்கள். ஏன் பலரை கொன்று விட்டு புலிகளின் தலையில் இராணுவமே போட்டது. எல்லாம் வெளிவரத்தான் போகுது. வெளிப்படாமல் மறைந்திருக்கும் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மைகள் வெளிவரும் காலமிது.
  4. தலைவருக்கு வீரவணக்கம் செய்வது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை. நானும் புலிகள் தொடர்பில் எழுதத்தொடங்கிய போது - ஆவணங்களில் - 2021ம் ஆண்டு அதைத்தான் எழுதினேன். கோராவில் திரு. சாத்திரியாரின் 2011ம் ஆண்டு தலைவர் வீரவணக்க படத்தை பாவித்து செய்தேன். யாழ் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள் செய்த நிகழ்விற்கு ஆதரவு நல்கினேன். இவர்கள் தலைவரின் வீரவணக்க நிகழ்வை செய்த திகதி பற்றி எனக்கு கவலை இல்லை. செய்ய வேண்டும் - செய்தார்கள். நல்லம். எனினும் இவர்கள் செய்த நிகழ்வில் சில செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக மக்களும் போராளிகளும் புனிதமாக பார்க்கும் வரிப்புலியை சிறார்களுக்கு அணிவித்து அதனைக் கொண்டு அணிநடை போட விட்டது மிகவும் இழிவான செயலாகும். அவ்வாறு செய்திருக்கக் கூடாது. வரிப்புலி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் உயிர்விட்டனர். ஆனால் இவர்களோ அதை இவ்வாறு பாவிப்பது ஏற்க முடியாத செயலாகும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி செய்யப்போவதாக அறிவித்திருப்பது உண்மையில் மனமெரிய வைக்கும் செயலாகும். மே 18 என்பது இனப்படுகொலை நாளாகும். அதில் இதைக் கொண்டுவந்து செய்தால் - நாளை அது ஓர் பயங்கரவாதி உயிர்நீத்த நாள் என்று உலக நாடுகளாலும் இந்திய சிங்கள கூட்டுக் களவாணிகளாலும் ஒத்தூதப்படும். பின்னர் அந்நாள் தடை செய்யப்படும். இவர்கள இதை சிந்தித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவரும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் போன்று ஓர் மாவீரர்தான். அதே போன்று தான் தலைவருக்கும் நவ. 27இல் தான் ஆண்டாண்டு வீரவணக்கம் இனி செய்ய வேண்டும். மே 18 இல் செய்தால் அது எல்லாவற்றையும் திசை மாற்றி விடும். எனவே மே 18இல் செய்யாமல் நவம் 27இல் ஆண்டுதோறும் செய்வது சாலச் சிறந்தது. மாறி செய்தால் இந்த இவர்களும்*** புலனாய்வுத்துறைகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவது உறுதியாகிவிடும்.
  5. வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்! வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத் தலங்களை பார்வையிடவே அதிகமானோர் நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர். எமது பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதிகமான அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441658
  6. இந்த ஊடகவியலாளர் தானே "சுமந்திரன் பா.உ வாக வர இருக்கிறார்" என்று கடந்த டிசம்பரில் இருந்து யூ ரியூபில் வந்து சில்லறை பொறுக்கினார்? திரும்பவும் சில்லறை பொறுக்க ஒரு அரிய வாய்ப்பு! நல்லூர் திருவிழாவில் பிச்சைக் காரர்களுக்கு சீசனலாக வாய்ப்புக் கிடைப்பது போல இவையளுக்கும் பிழைப்பு ஓடுது😂!
  7. விதம் விதமான கடைகளும்போடவேண்டுமென்ரூம் கோரிக்கை விடுகின்றோம்..
  8. அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் - பொலிஸார் விசேட அறிவிப்பு Monday, August 04, 2025 செய்திகள் அருகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அருகம் குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்கள் ஈடுபடும் வணிக நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கடும் விமர்சனங்கள் எழுப்பபட்டிருந்தன. சட்டத்தை மீறாத எந்தவொரு வெளிநாட்டவரின் இருப்பு குறித்தும் கரிசனையாக நோக்கப்பட வேண்டியதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வரவேற்பதாகவும், இலங்கை ஒரு விரும்பத்தக்க சுற்றுலா தலமாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். அருகம் குடாவோ அல்லது வேறு எந்தப் பகுதியோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தேர்ந்தெடுப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் அல்லது வேறு எந்த நாட்டவர்கள் இலங்கைக்கு வந்தாலும், அவர்கள் நம் நாட்டின் அழகை அனுபவிக்கட்டும் என தெரிவித்துள்ளார். நாம் நம் நாட்டைப் பற்றி பெருமைப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் வருகை தருவது இலங்கையின் நன்மைக்கே. இது ஒரு பிரச்சினையாக ஏன் பார்க்கப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. நம் நாடு வளர்ந்து உயர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட பாதுகாப்பு படைகள் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள எப்போதும் விழிப்புடன் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வூட்லர் உறுதியளித்துள்ளார். பொலிஸ், முப்படைகள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அருகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்தது. இது போலத்தான்...இருக்கும் இந்த காத்தான்குடி படுகொலைப் பொய்களும்...... முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்
  9. ஒட்டு மொத்த இலங்கையே பின்னடைவை சந்திக்க நிர்வாக பிரச்சனையே காரணம் என எப்போது ஏற்றுக்கொள்வார்கள்?
  10. ஏழாவது(July) மாதச் செலவுகள் மூன்றாவது மாதத்தில் இருந்து புதிதாக காரைநகரைச் சேர்ந்த இரண்டு விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்த உதவி வழங்க தொடங்கி உள்ளோம் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவோரின் விபரங்கள் 1) செல்வி இரட்சகன் நிவேதா (வயது 25) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவருடைய தாயார் திருமதி இ.சுதாரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 2) திரு ஏரம்பு கண்ணதாசன் (வயது 34) 3) திரு ஏரம்பு கரிதாசன் (வயது 33) (பொன்னாலை மேற்கு, (ஒரே குடும்பம்) 10000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஏ.பராசக்தி அவர்களுடைய தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 4) செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த் (வயது 13) (பொன்னாலை மேற்கு) 5000 ரூபா செல்வன் ம.டினுசாந்த் அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 5) செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன் (வயது 20) (சுழிபுரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி பா.சந்திரகலா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 6) செல்வி ஜசிந்தன் பவன்யா (வயது 16) (சுழிபுரம் மத்தி) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஜ.சுபாஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 7) செல்வி மகாலிங்கம் நிரோஜினி (வயது 25) (தொல்புரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ம.சரோஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 8) செல்வி சாந்தகுமார் கோபிசா (வயது 10) (பாண்டவெட்டை சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி சா.ரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 9) செல்வி ஐங்கரன் கருண்யா (வயது 8) (விக்காவில், காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஐ.ரதிலேகா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 10) செல்வி நாகராசா சசிகலா (வயது 36) (அல்வின் வீதி, காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய சகோதரி செல்வி நா.மஞ்சுளாதேவி அவர்களின் இலங்கை வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. மாதாந்தக் கொடுப்பனவிற்காக 50000 ரூபா 22/07/2025 அன்று மீளப்பெறப்பட்டு அன்றே தபாலக சேமிப்புக் கணக்குகளில் 9 பேருக்கு வைப்புச் செய்யப்பட்டது. ஒருவருக்கு 23/07/2025 இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது. எமது புலர் அறக்கட்டளைக்கு உதவ விரும்பும் கருணை உள்ளம் கொண்ட உறவுகள் +94 77 777 5448 அல்லது +94 77 959 1047 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம். மூவர் இணைந்த வங்கி விபரம் K BALAMURUGAN R PARANEETHARAN S THEVAKUMARAN A/C NO: 107250178888 National Savings Bank Chankanai Jaffna Sri Lanka SWIFT CODE - NSBALKLX
  11. இப்போ இந்தியா தொடரை சமனாக்க கூடிய நிலையில் உள்ளது போல் தெரிகிறது. எல்லாம் இன்று காலநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துத்தான். நல்ல வெய்யில் அடித்தால் இங்கிலாந்து வெல்லும். மழை மூட்டம் என்றால் இந்தியா வெல்ல வாய்ப்புக்கூட! இப்போ இருக்கும் இரு ஆட்டக்காரர்களுக்கும் பந்து மட்டையில் படுவதைவிட காலில்தான் படுகிறது!!
  12. இது ஒரு மிலேச்சத்தனமான செயல், எதற்காக தொடர்ந்தும் அப்பாவிகளை பிணைக்கைதிகளாக வைத்துள்ளார்கள், பலஸ்தீன மக்களே இவ்வாறு கடத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கவேண்டும், இவ்வாறானவர்களுக்கு உதவி வழங்குவதனை ஈரான் நிறுத்த வேண்டும், அவுஸ்ரேலியாவில் காசா மக்களுக்காக பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள், அதில் ஈடுபட்ட மக்கள் இன மதம் வேறாக இருந்தாலும் சாதாரண மக்கள் பாதிக்கபட்டதற்காக வந்திருந்தார்கள், காசா அழிவுகள் உலகளவில் மிக பெரியளவில் மக்களை வந்தடைகிறது ஆனால் இந்த அப்பாவி இஸ்ரேலியர்களின் வலிகளை பற்றி மறந்துள்ளோம்.
  13. துருக்கியர் ஒருவருக்குத் தமிழ் வாசிக்க தெரிந்து அவருக்கு யாழ்களத்திலும் உறவு இருந்தால்…தம்பி தமிழ் சிறி இனித் துருக்கிக்கு ஊர்உலா செல்லவோ, அங்கு தலைகாட்டவோ முடியாது.😭
  14. போக்குவரத்து திணைக்களம் முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, நாராஹேன்பிட்ட, இலங்கை. தொலைபேசி: +94 112 033333 E mail - Werahera : dmtweraheracom@gmail.com
  15. பாகம் ஒன்று சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல். "தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது. யார் அவர்கள்..?? காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது.. "தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய். அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள். இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம். ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை. காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும். அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான். "தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக. வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??" அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள். அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப.. (தொடரும்) பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்
  16. இந்த விசாரணை தேவை என்பதைவிட ...தமது அரசியல் இருப்பு பாதுகாக்கக்ப் படவேண்டும் என்ற முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டலே தற்சமயம் உடனடியாக ...இந்த விசாரணைத் தூண்டல் ...இதனை செய்து குழப்பியடிப்பதன் மூலம் அரசுடன் அண்டுவதே இவர்களின் நோக்கம் ...இதற்கு இம்மக்கள் பகடைக்காய்கள்...சிலவேளைதமிழருக்கான ஏதோ தீர்ப்புவந்தால் ..அதை வைத்தே இவர்கள் வாதிடமுடியும்...ஆனால் அவர்கள் விசாரணை கேட்பது .. நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சுயநலம் கருதி என்பது என்னுடைய கருத்து
  17. காதல் என்றால் என்ன ....... ! 😍
  18. வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் : { எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு பெண் : லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே } (2) பெண் : பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் பெண் : அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும் பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும் பெண் : அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே பெண் : தஞ்சமென்று ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய் என் மனதின் கோவிலிலே தெய்வ மென்று வந்தாய் பெண் : நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில் என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில் பெண் : என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் கனவே வரும் நினைவே இனி உன்னை நான் தினம் வாங்குவேன் ......... ! --- எந்த பூவிலும் வாசம் உண்டு ---
  19. இதே போன்ற ஒரு போராட்டத்தினை மட்டு-அம்பாறை வாழ் தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல்படையினர், காடையர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோர வேண்டும்.
  20. ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் உருவாகாமல் ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் கூறுவது மிகவும் சிக்கலானது. முதலாவது, ஜெருசலேம் நகரில் இருக்கும் முஸ்லீம்களின் அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் அதேவிடத்தில் யூதர்களின் வணக்கத்தலமும் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு இப்பகுதி எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது யூதர்களுக்கு. ஆகவே ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் என்பது ஆரம்பத்திலேயே சிக்கலாகப் போகிறது. அடுத்தது, இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஹமாஸினால் சுதந்திரமான பலஸ்த்தீனத்தை ஆயுத ரீதியில் அடைந்துகொள்வது சாத்தியமானதா? இன்று சர்வதேசத்தில் பலஸ்த்தீனர்களுக்குச் சார்பாக திரும்பியிருக்கும் நிலைப்பாடானது அங்கிருக்கும் மக்களின் பட்டிணிச் சாவை ஒட்டிஏற்படுத்தப்பட்டது என்பதே ஒழிய ஹமாஸின் இராணுவ வல்லமையினால் ஏற்பட்டதொன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் பலஸ்த்தீன மக்கள் தமது உயிர்த் தியாகத்தினாலும், குருதியினாலும் சர்வதேசத்தில் ஏற்படுத்திய இத்திருப்பத்தை ஹமாஸ் தனது பிடிவாதத்தினால் நீர்த்துப் போகச் செய்ய எத்தனிப்பதாகவே எனக்குப் படுகிறது. கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, சர்வதேசம் விரும்பும் சுதந்திரப் பலஸ்த்தீனம் அல்லது இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு பலஸ்த்தீனர்களுக்கான தீர்வை வழங்குவதை விடுத்து ஆயுதப் போராட்டத்தினை நீட்டித்து அழிவுகளையே ஹமாஸ் எதிர்ப்பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
  21. உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லை😂. ரஞ்சித் விளக்கமாக எழுதியிருக்கிறார், அதற்கு விருப்பக் குறி இட்டிருக்கிறீர்கள். ரஞ்சித் எழுதிய அதே விடயத்தை ஏனையோர் சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது புரட்டு என்று வாதிடுகிறீர்கள்! நான் நினைக்கிறேன், இன்னும் நீங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டுமென்ற விருப்பத்தில், வெளியே இருந்து வரும் உங்கள் விருப்பத்திற்கு மாறான தரவுகளை உதாசீனம் செய்து விட்டு ஒரு குமிழிக்குள் அமர்ந்திருக்கிறீர்கள்.
  22. 3 இல் இருந்து போகும் பாதை அடைபட்டுவிட்டதால் 3 தான் நிரம்பும் ஐயா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.