Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87986
    Posts
  2. அபிராம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    173
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20008
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10206
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/28/25 in all areas

  1. சிங்கள சம்பந்தி சுமந்திரன்... சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது பெருமை என்றெல்லாம் ஆனந்தப் படுபவர், சிங்களவனுக்குத்தானே தனது விசுவாசத்தை காட்டுவார். அந்த சுத்துமாத்தை, நம்புவதற்கும், வெள்ளை அடித்து முட்டுக் கொடுப்பதற்கும்... சில அரைகுறை தற்குறிகளும் இருப்பதுதான் வேடிக்கை. 😂 🤣 தமிழர்கள், ஆபிரஹாம் சுமந்திரனை... தமிழரசு கட்சி தலைவர் தேர்தலிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்... செருப்பால் அடிக்காத குறையாக நிராகரித்து வெளியே அனுப்பிய பின்பும்... தமிழர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வெட்கம் இல்லாமல் பிலாக்காய்ப்பால் மாதிரி.... சூடு, சொரணை, ரோசம், மானம் எதுவுமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற ஏழரை தான் இந்த சுத்துமாத்து. தமிழருக்கு பிடித்த தரித்திரம் இது. 😵
  2. இங்கு வந்த பின்புதான் இந்தனை விதம் விதமான கிளிகள் பல வர்ணங்களில் இருக்கும் என அறிந்து கொண்டேன், வீட்டில் இந்த கிளிகள் பாண், பிஸ்கட் என்பன உண்பதற்காக வருகின்றன, மழைகாலங்களில் அவை அதிகமாக வரும். வீட்டில் இருக்கும் பாதுகாப்பு இரும்புக்கதவை மனிதர்கள் தட்டுவது போல பலமாக தட்டும், இரவு வேலை முடித்துவிட்டு உறங்கும் நேரத்தில் அவற்றின் தொல்லை இருக்கும், ஆனால் கண்டு கொள்வதில்லை, குழந்தைகளின் கைகளில் இருந்து பிஸ்கட்டினை வாங்கி உண்ணும் அதனால் எனக்கு பிஸ்கட் கிடைப்பதில்லை.🤣
  3. யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.
  4. முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள். மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள். வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நந்தன் ( @நந்தன் )!
  6. 🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா? இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன். ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!
  7. அய்யா இப்படி சொல்லுவாரு ...இவைக்கு பிணைகொடுக்க நீதவானும் ...பிணைகேட்க 10 சட்டத்தரணிகளும், போதாக்குறைக்கு வருத்தம் சொல்ல வைத்தியரும் இருக்க அச்சம் ஏன்
  8. 1) பார் சிறி 2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன் 3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன் இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
  9. LNW Tamilவிக்கிக்கு ஏற்பட்ட நிலையேஅர்ச்சுனாவுக்கும் ஏற்படுமாம் - அ...அரசியலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்ப 👆 சுமந்திரனுக்கு விலாங்கு மீன் பட்டம் கொடுத்து எங்கள் யாழ் கள "சுமந்திரன் லவ்வர்ஸ், கணிதப் புலிகள்😎, உசார் மடையர்கள்" என அனைத்து தரப்பினரையும் கிச்சு கிச்சு மூட்டிய "இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்" தலைவர் ஜெயேந்திரன் இவர் தான்! அடுத்த தேர்தலில் அனுர கட்சியில் போட்டியிடத் தயாராக இருக்கும் ஒரு எதிர்கால "தமிழ் பா.உ"🤣! "...எதிர்வரும் காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்"
  10. மக்கள் எழுச்சிக் கட்சி என்றும் ஒரு கட்சி இலங்கையில் உள்ளதா ? ஈழ மக்கள் எழுச்சி கட்சி, தமிழர் எழுச்சி கட்சி என்று இல்லாமல் மக்கள் என்று இருப்பதனால் இது சிங்கலவர்களை கொண்ட பெரிய கட்சியாக இருக்க வேண்டும். சிங்கல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கட்சி ஒன்றுக்கு அருள் ஜெயந்திரன் ஒரு தமிழர் தலைவராக இருப்பது மகிழ்ச்சி.
  11. வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
  12. Here’s the current situation: Yes, Exxon Mobil is exploring a potential re-entry into Russia’s Sakhalin-1 oil and gas project, but no official deal is in place yet. These discussions are contingent on evolving geopolitical conditions and regulatory approvals. Here’s what’s happening in more detail: What’s Going On 1.Confidential Talks with Rosneft Exxon Mobil has conducted back-channel negotiations with Russia’s state oil giant Rosneft about possibly returning to the Sakhalin-1 project. These talks hinge on a potential peace process progress in Ukraine and would require approvals from both U.S. and Russian governments. 2. Legal and Political Conditions U.S. licenses from the Treasury Department allow Exxon to discuss “stranded assets” with Russian counterparts. Any formal re-entry would need U.S. government approval amid existing sanctions. 3. Russian Legal Framework On August 15, 2025, Russian President Putin signed a decree that conditionally reopens the Sakhalin-1 project to foreign investors—including Exxon—provided they: Supply foreign-made equipment, Assist in lifting Western sanctions, and Invest capital into the project. Russia also extended the deadline to 2026 for Exxon to claim its unclaimed stake in the project. 4. Strategic and Market Considerations Sanctions remain a significant obstacle, complicating any return even though Sakhalin-1 itself isn’t directly sanctioned. U.S. officials and the Trump administration have floated this as part of broader diplomatic incentives in Ukraine peace talks. On the other hand, some industry experts doubt a full-scale U.S. return, citing tremendous past losses and unstable political risks. ஆம் என்று தான் சாட் ஜிபிரியும் சொல்கிறது. இது தான் இந்தியாவின் குற்றச்சாட்டும். அமெரிக்கா ரசியாவுடன் எத்தனையோ வியாபாரங்களை இப்போதும் செய்கிறது. ஆனால் எங்களை செய்விடாமல் தடுக்கிறது.
  13. கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதிகமாகவே பிரயத்தனம் செய்கின்றார்கள். கீழைத்தேய நாடுகளில் சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்ட திறமைகளே ஒரு ஐந்து அல்லது ஆறு தான் இருக்கும். மற்றவை எல்லாமே உருப்படாத விசயங்கள். ஆகவே அங்கே யாராவது தன்னிடம் என்ன இருக்கின்றது என்று கண்டறிந்தாலும், அது அநேகமாக உருப்படாத ஒரு விசயமாகவே அங்கே கருதப்படவும் கூடும். மேற்கத்தைய நாடுகளுக்கு குடிபுகுந்த நாங்கள் எங்களின் வளரும் காலத்தில் தவறவிட்டவற்றை பிள்ளைகளின் மூலமாக இன்று இங்கே பிடித்து விடலாம் என்று நினைப்பதும் உண்டு போல. ஒரு எண்ணை ஒரு தாளில் எழுதி, அதை ஒருவரின் தலைக்கு பின்னால் பிடித்தால், அவர் கண்ணை மூடிக் கொண்டே அந்த எண்ணை சரியாக சொல்லும் ஒரு திறமை இருக்கின்றது என்கின்றார்கள். முதலில் இந்த விடயத்தை, திறமையை ஒரு கோர்வையாக புரிந்து கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. ஆனால் இதற்கு ஒரு ஆசிரியரும், குரு என்பதே சரியான பதம், மாணவர்களும் இருக்கின்றனர். இந்த திறமையில் அடுத்த அடுத்த படிகள் கூட இருக்கின்றன என்று ஒருவர் சொன்னார். இதனால் உருப்படியில்லாத விசயங்கள் என்று அன்று அங்கே சமூகம் பல திறமைகளை வகைப்படுத்திய விதத்தை முற்று முழுதாக தவறு என்றும் சொல்ல முடியவில்லை. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளிடம் இருக்கும் இசைத் திறமையையும் கண்டுபிடித்து விட முயல்கின்றார்கள். இது அன்று அங்கே இருந்த சங்கீதப் பாடம் போல அல்ல. சித்திர ஆசிரியர் அடிக்கின்றாரே என்று சங்கீத ஆசிரியையிடம் ஓடிப் போகும் நிலை அல்ல இது. ஒரு தடவை ஒரு பாடசாலையில் சித்திரத்திற்கும் போகாமல், சங்கீதத்திற்கும் போகாமல் வகுப்பில் பதுங்கியிருந்த சிலரை சித்திர ஆசிரியர் அடித்து பிக்காசோவின் கிறுக்கு சித்திரங்கள் போல ஆக்கினார். பின்னர் அதே ஆசிரியர் கலப்பையை கீறு என்று ஒரு நாள் சொல்லும் போது, எம்ஜிஆரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததில், எம்ஜிஆர் படங்களில் தூக்கிக் கொண்டு திரிந்த கலப்பையை சரியாக பார்க்கவில்லை என்ற உண்மை புரிந்தது. புல்லாங்குழல் தான் வாசிக்கப் போகின்றேன் என்றார் மகள். 'புல்லாங்குழல் கொஞ்சம் கஷ்டம் என்கின்றார்களே, புல்லாங்குழல் போல இருக்கும் வேறு ஏதாவது ஒன்றில் ஆரம்பிக்கலாமே.....................' என்று பணிவாக கேட்டுப் பார்த்தோம். ம்ஹூம்........... புல்லாங்குழல் தான் என்று ஒற்றைக் காலில் நின்றார். அவர் ஒற்றைக் காலில் நிற்கும் போதே அவரிடம் என்ன திறமை இருக்கின்றது எனறு நாங்கள் ஊகித்திருக்கவேண்டும். புல்லாங்குழல் விற்கும் கடைக்கு போனோம். அங்கு எல்லா கருவிகளும், வாத்தியங்களும் விற்பார்கள். 'நீங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்றில்லை. ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு போங்கள்.......... சரியாக வராவிட்டால் திருப்பிக் கொடுத்து விடுங்கள்................' என்றார் கடைக்காரர். பலத்த அனுபவசாலி என்று தெரிந்தது. எழுவாய்கள் இல்லாமலேயே, எவரையும் எதையும் குறிப்பிடாமலேயே, சில வசனங்களை மென்மையாகச் சொன்னார். ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஒன்றை வாங்குவது என்று முடிவெடுத்தோம். பலதை எடுத்து ஒவ்வொன்றாக விளக்கினார் கடைக்காரர். நீண்டு பெரிதாக, பளபளவென்று இருந்த ஒன்றை வாங்கினோம். இது தலைமுறை தாண்டியும் உழைக்கும் என்றார் கடைக்காரர். சில தீர்க்கதரிசனங்களை அவை சொல்லப்படும் போது நாங்கள், அதாவது உலகம், சரியாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. புல்லாங்குழல் பாடசாலை போய் வர ஆரம்பித்தது. சில இரவுகளில் அதை வீட்டில் கழட்டி, பொருத்துவதும் தெரிந்தது. எங்கள் வீட்டில் இசை அருவியோ அல்லது வெள்ளமோ இன்னும் பாய ஆரம்பித்திருக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் மாலை நேரம் பக்கத்து வீட்டில் இருந்து 'கடார்.........படார்..............' என்று தகரக் கூரையில் தடியால் விடாமல் அடிப்பது போல சத்தம் வந்தது. பக்கத்து வீட்டின் பின் வளவுப் பக்கத்தில் இருந்தே சத்தம் வந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கம் சுவருக்கு மேலால் எட்டிப் பார்க்கவும் முடியாத அதி உயர் நாகரிகம் கொண்ட நாடுகள் இவை. ஒரு தடவை அயலவர் ஒருவர் இறந்து போய் ஆறு மாதங்களின் பின்னேயே அவர் இறந்து போனார் என்ற தகவல் தெரிய வந்தது. அந்த வீட்டில் சத்தமே வராமல் அழுதிருப்பார்கள் போல. சில நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் அடிக்கும் சத்தம் வந்து கொண்டேயிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் தட்டினார். தங்களின் பிள்ளை பாடசாலையில் ட்ரம்ப் பழகுவதாகச் சொன்னார். சில நாட்கள் சமாளித்துக் கொள்ளும்படி கேட்டார். வாத்தியக் கருவியை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்தார்களா, அல்லது சொந்தமாகவே வாங்கினார்களா என்று நான் கேட்கவில்லை . ஆனால் அவர் சில நாட்கள் என்று சொன்னதால் அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது. பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்களை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு கொஞ்சமும் தயங்காத நாடுகள் மேற்கு நாடுகள். இங்கு ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பாடசாலைப் பருவத்தில் நூற்றுக் கணக்கான பதக்கங்கள் கூட பெற்றுவிடுவார்கள். ஒரு போட்டி என்று சொல்லுவார்கள், ஆனால் அதில் பங்குபற்றும் எல்லோருக்கும் இங்கு பதக்கங்கள் கொடுப்பார்கள். இந்த நடைமுறைக்கு பின்னால் சில உளவியல் ஆராய்ச்சி முடிவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளுக்கு முதல் ஒன்று இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் போது பெரும் பெருமைப்படும் பெற்றோர்கள், பின்னர் சில வருடங்களிலேயே ஒரு பெட்டியில் எல்லாவற்றையும் போட்டு மூடி, வீட்டின் கண்காணாத ஒரு இடத்தில் தள்ளி விடுவார்கள். புல்லாங்குழலுக்கும் கொடுத்தார்கள். பக்கத்து வீட்டு ட்ரம்பிற்கும் கொடுத்திருப்பார்கள். எதற்கும் தயங்கி நில்லாமல் சூரியனை சுற்றிக் கொண்டே விடாமல் சுழலுகின்றது பூமி. அதனால் அடுத்த வகுப்பும் வந்தது. ஒரு நூல் பிடித்தது போல வாழ்க்கை ஒரு கோட்டில் அசையாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் வேலைக்கு போகும் பெருந்தெருவில், அங்கே காலை நேரங்களில் அசைய முடியாத வாகன நெரிசல் இருக்கும், எதேச்சையாக பக்கத்து வாகனத்தைப் பார்த்தேன். அங்கே ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே வாகனத்தை நெரிசலில் செலுத்த முயன்று கொண்டிருந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் பார்க்க ஆரம்பித்தேன். அதே பெருந்தெருவில், அதே மனிதர்கள், அதே வேலைகளையே ஒவ்வொரு காலையிலும் செய்து கொண்டிருந்தார்கள். நானும் தான். அடுத்த வருட வகுப்புகள் ஆரம்பித்ததில் இருந்து பக்கத்து வீட்டில் இருந்து சத்தம் வருவதில்லையே என்ற எண்ணம் ஒரு நாள் வந்தது. புல்லாங்குழலையும் அந்த வருடம் காணவில்லை என்றும் தோன்றியது. அடுத்த நாள் விடிந்தது. புல்லாங்குழல் பள்ளிக்கூடம் போகவில்லை. 'ஏன்........ புல்லாங்குழல் தேவையில்லையா..........' என்றேன். 'இல்லை........... இந்த வருடம் வேறு வகுப்புகள்........ புல்லாங்குழல் இல்லை.........' என்றார். சங்கீதம் வராவிட்டால் சித்திரம் போல. அடுத்த தலைமுறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது ஒரு புல்லாங்குழல்.
  14. தடக்கி விழுந்து விட்டால் எழுந்து ஓடுவதற்கு உங்கள் கால்களை தயார் செய்யுங்கள். விழுந்தே கிடக்காதீர்கள் யாருடைய மௌனத்தையும் திமிர் என எண்ணி விடாதீர்கள் ஒரு வேளை அது அவர்களின் வலியின் வெளிப்பாடு கூட இருக்கலாம் . ஏமாந்து நிற்கும் போது தான் எண்ணுகிறோம் இவ்வளவு நாட்களாக எவ்வளவு முட்டாள்களாக இருந்திருக்கிறார் என்பதை . முதலில் தாங்க முடியாததாக தோன்றும் பின் பரவாயில்லை போல தோன்றும் அடுத்து கடந்து விட முடியும் என நம்பிக்கை தோன்றும் அடுத்து இதற்காகவா இத்தனை வருந்தினோம் என மனம் , லேசான தாகி விடும். வேண்டியது என்னவோ கொஞ்சம் பொறுமையும் வலியை தாங்கும் வலிமையும் தான் . இந்த வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது ..ரொம்ப அசிங்கப்படுத்திட்டிங்க என்னவெல்லாம் பேசினார் தெரியுமா ? என்று யாரோ எப்போதோ பேசுவதை மனதில் பூட்டி வைத்து வருத்தப்படுவது வேண்டாத வேலை. பக்குவ மற்றவர்களும் ,அவசரக்காரர்கள் ,புத்தி கெட்டவர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசியத்தை கல்வெட்டாய் மனதில் வைத்திருக்க கூடாது .அவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு பக்குவம் என கடந்து செல்ல வேண்டும். மன வலி என்பது நாமே நம்மை ஒரு கயிற்றால் கட்டி வைப்பது போல் மனவலியை சுமப்பவர் கவனம் சிதறும் அடுத்த வேலையை செய்ய விடாது சோர்வடைய செய்யும் பணம் செலவு செய்வதில் எது தேவையான செலவு என்பதை விட எது தேவையற்ற செலவு என்பது மிகப்பெரிய தெளிவு
  15. நந்தனுக்கு எனதினிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
  16. https://youtu.be/KUDyzfr1DUs?si=WZyxwBubO-RsYZd8 70 களின் ஞாபகம் வருகின்றது.
  17. https://youtu.be/S0SGB6pzxsM?si=JOhwr5WZxtfrpASH அழகான பிள்ளையார் சதுர்த்தி நடனம்.
  18. மிகச்சிறந்த கண்ணோட்டம் வசி! நீங்கள் எழுதியதும் அத்தனையும் உண்மையே. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அமைப்புகளும் விரிவடைய வேண்டுமாம். ஆனால் ரஷ்யா கூனிக்குறுகி நிற்க வேண்டுமாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய மனநிலை இப்படித்தான். உக்ரேனுக்கு நேட்டோ ஆசையும் ஐரோப்பிய ஒன்றிய ஆசையும் வருவதற்கு முதல் ஒழுங்காகத்தான் அந்த நாடு இருந்தது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்தியா அதி முக்கிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாகி விட்டது.எனவே மேற்குலகில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக கதவும் திறக்காது படலையும் திறக்காது என்பது என் கணிப்பு.
  19. "பல்துருவ உலகம்" பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அத்தகைய பல்துருவ உலகிற்கு நானும் ஆதரவு😎. ஆனால், ஒட்டு மொத்த சமூகத்திற்கும், எங்கள் மண்ணிறத் தோல் கொண்டு உலாவரப் போகும் அடுத்த சந்ததிக்கும் எதிரான திட்டங்களை வகுக்கும் ஜேர்மன் AfD நவநாசிகள், பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்க திட்டமிடும் ஹங்கேரி, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் அதி வலதுசாரிகள் - இந்த தரப்புகள் ஒரு துருவமாக இருக்கவே கூடாது. வலதுசாரிகளாக மாறி விட்ட அமெரிக்காவிற்கு எதிரான துருவமாக முற்போக்கான ஐரோப்பிய ஒன்றியம் இருக்க வேண்டும். இது தான் நான் எதிர்பார்க்கும் "பல்துருவ" உலகு. என் அவதானிப்பின் படி, ஐரோப்பிய ஒன்றியம் சரியான திசையில் நகர்கிறது. உக்ரைனில் ஊழலை ஒழிக்க முயலும் அதே வேளை, போலந்தில் நீதித் துறையை வலதுசாரிகள் முடக்கி விடாமலிருக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் வேலை செய்கிறது. பிரான்சிலும், ஜேர்மனியிலும் குடியேறிகளுக்கெதிரான கட்சிகள் ஆட்சிக்கு வர முயலும் போது, அந்த நாடுகளின் மிதவாத சக்திகளோடு சேர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள் அவர்களை ஆட்சிக்கு வர முடியாமல் முடக்கியிருக்கின்றன. இதை நீங்கள் "மக்களின் தேசிய விருப்பிற்கெதிரான நகர்வுகள்" என்று கண்டிப்பது போலத் தெரிகிறது. இப்படி 33% வீத மக்களின் தேசிய விருப்பின் படி தான் நாசிகள் ஆட்சிக்கு வந்தார்கள் - வரலாற்றில் அதனால் நிகழ்ந்த அழிவுகளை யூ ரியூபிலாவது தேடிப் பார்த்து அறிந்தால், இதைக் கண்டிப்பீர்களா தெரியவில்லை!
  20. ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு யூரோ நாணயம் வந்த போது டாலரை வீழ்த்தவே என்று பேசிக் கொண்டார்கள். இதை நம்பி ஈராக் ஜனாதிபதியும் யூரோவில் வியாபாரம் செய்யப் போய் ஆளும் இல்லை நாடும் இல்லை.
  21. அது வேறொண்ணுமில்ல, போகும்பொழுது தாகமாய் இருந்திச்சிது அதுதான் சாரதிக்கு தண்ணி காட்டிட்டு இறங்கிட்டன் ........ ! 😂
  22. காலையில் இப்பாடலைக் கேட்க இனிமையாக இருக்கும். ஊரிலே கேட்க்கும் ...உற்சாகமாக இருக்கும். வெளிநாட்டில் ....நாமிழந்த வற்றில் இதுவும் ஒன்று .... ஆனால் வெளிநாட்டில் ஒரு சில வழிபாடுகளில் காலையில், கோவிலுக்கு அண்மையில் வசிப்பவர்களுக்கு இம்மணியோசை கிடைக்கக்கூடும்
  23. வேறு எதற்கு? ஒன்றில் வருவோரிடம் காசு சேர்த்து கும்மாளம் அடிப்பதற்கு! அல்லது ஏற்கனவே ஏமாற்றி சேர்த்த காசை கரியாக்குவதற்கு! வேறு என்ன உருப்படியாக செய்கிறார்கள் இவர்கள்!
  24. பாகம் இருபத்தினான்கு 2009 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒரு நாள்... சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசம் லக்சபானாவில் இருந்து வரும் மின்சாரத்தில் ஒலித்து கொண்டிருக்க கணவன் நாதனை தட்டி எழுப்பினாள் ராணியம்மா. என்னங்க....ஒருக்கா எழும்பி வெளிக்கிட்டு உந்த ICRC அலுவலகம் மட்டும் போயிற்று வாங்கோவன்....புதுசா கொஞ்ச பேரின் பெயர் விபரம் வந்திருக்காம்..எங்கட நேசனின் பெயரும் இருக்கோ என்று பார்த்திட்டு வாங்கோவன்.. வழக்கமாக பாடும் பல்லவியாக இருந்தாலும் ... நாதனுக்கு இன்று ஏதோ மனம் சொல்லியது மகன் கிடைத்திடுவான் என்று.. சரியப்பா ..ஒரு கோப்பியைப் போடு குடிச்சிட்டு ஒரு எட்டு போய் என்ன என்று கேட்டுவிட்டு வாறன்... அண்டைக்கும் இப்படித்தான் ஒரு கந்தசஷ்டி நாளில் நேசன் இயகத்துக்கு போனான்..அவனைப்பார்த்து இன்றுடன் இரண்டு வருசம். இடையிலே தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்..கடைசியாக போன மாசம் தான் இராமனாதன் அகதி தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி வவுனியாவில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து வந்ததிலிருந்து ராணியம்மா இரவு தூக்கத்தையும் தொலைதிருந்தா... சொல்லுங்கள் உறவுகளே எப்படி தூங்க முடியும்.. என்னும் எவ்வளவு நாட்கள் எடுக்குமோ அவர்கள் நிம்மதியாக தூங்க... கணவனுக்கு கோப்பியை போட்டு வழியனுப்பி விட்டு..முருகன் படத்துக்கு பூவை வைத்து..அப்பனே முருகா இன்றாவது அவர் ஒரு நல்ல செய்தியுடன் வரவேண்டும் என்று மனமுருக வேண்டினார்.. சரணடைந்த பெடியங்களை அங்கே வைச்சிருக்கிறாங்கள்..இங்கே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல சொல்ல ராணியம்மா அலையாத இடம் இல்லை.. வைத்திய சாலைகள்..சிறைக்கூடங்கள்..என்று யார் யாருடையதோ கையை காலை பிடித்து தேடியலைந்தாகிவிட்டது.. இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த ICRC யின் பெயர் பட்டியல் தான்.. மதியம் ஒரு மணியை தாண்டி இருந்தது .. இன்னும் அவரை காணவில்லை.. வாசற் கதவில் தலை சாய்த்தபடி சாலையின் முனையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நற் செய்தியுடன் வருவார் தன் கணவன் என்று... காத்திருக்கிறாள்.... ஒரு போராளியின் அம்மா... (முற்றும்.)
  25. பாகம் பதினேழு காத்திருந்த அந்த நாளும் வந்தது. நேற்று தான் விடுதலை புலிகளின் தலைமை அந்த முடிவுக்கு வந்தது. கடந்த பத்து நாளாக நடந்த பயிற்சிக்கான சண்டைகளம் நாளை. விடுதலைப்புலிகளின் தலைமையும் முக்கிய தளபதிகளும் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடாத்தி காட்டுக்குள் செல்லும் முடிவானது, காயபட்ட போராளிகள் பொதுமக்கள் , ஏனைய போராளிகள், ஆதரவாளர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்களை என்ன செய்வது தெரியாமல் காலம் தள்ளி போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று அரசியல் பிரிவு, ஜெனிவா சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக நாளை மதியம் இரண்டு மணியளவில் செஞ்சிலுவைச்சங்கம் போராளிகளையும் பொதுமக்களையும் தங்களின் பாதுகாப்பில் கையேற்பதாக உறுதியளித்திருந்தது. அதனடிப்படையில் நாளை நடு இரவில் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்துவதற்கான தயாரிப்பு பணியில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். கடல் தாண்டிய அந்த தாக்குதலுக்காக, நேற்று இரவு முதல் உலர் உணவுகளையும், பழ ரின்களையும், இறைச்சி துண்டுகள் நிறைந்த ரின்களையும் பொதி பண்ணிகொண்டிருந்தார்கள் போராளிகள். கடந்த மூன்று நாட்களாக எதுவுமே சாப்பிடாமல், வயிறுகள் காயும்போதும், பொதிகள் மெழுகுதிரியில் உருக்கி கட்டும்போது வாயில் வரும் உமிழ்நீர்களை கூட அடக்க முடியாத பசி அவர்களுக்கு. இருந்தாலும் அடுத்த மூன்று மாதத்துக்கு தேவையான உணவு என்று ஒரு சொற்ப உணவையே பகிர்ந்தளிதிருந்தார்கள். சொல்லுங்கள் உறவுகளே ,மக்களுக்காக போராட உணவு தேவை என்று, பட்டினியோடு பொதி பண்ணும் போராளிகள் கிடைக்க என்ன தவம் செய்தீர்கள்.? கொண்டு செல்ல வேண்டிய ஆயுதங்களையும் நன்றாக சுத்தப்படுத்தி பொலித்தீன் பைகளால் சுத்திகட்டி வைத்திருந்தார்கள். இன்று மதியம் ஒரு மணியளவில் அந்த சந்திப்பு தொடங்கி இருந்தது. முள்ளிவாய்க்கால் உண்டியல் சந்திக்கு அருகாமையில் இருந்த பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகே அந்த மூத்த தலைவரின் வழிகாட்டலுக்காக தளபதிகள் உட்பட நானூற்று ஐம்பது விசுவாசமான போராளிகள் காத்திருந்தார்கள்.அதில் ஒருவனாக ராணிமைந்தனும் காத்திருந்தான். அந்த மூத்த தலைவர் ஊடறுப்பிற்கான திட்டத்தை விளக்க தொடங்கி இருந்தார். ஆங்காங்கே விழும் செல்களுக்கும், மிக அருகில் கேட்கும் யுத்த டாங்கியின் இரைச்சலுக்கும், பெரும் சண்டை சத்தத்துக்கும் நடுவில், அவரின் மிடுக்கான பேச்சு கொஞ்சம் உரத்தே ஒலித்தது. "நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்" "நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை" "உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்". "உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்" "எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்" "இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டு ஆதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்" "இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்" "இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.." இவ்வாறு அந்த மூத்த தலைவர் திட்டங்களை தெளிவுபடுத்தி கொண்டிருக்கும்போது, அவரின் பிரத்தியேக அலைபேசி அழைத்தது. "பப்பா அல்பா ..பப்பா அல்பா .. ரோமியோ ஒஸ்கா " "பப்பா அல்பா ..பப்பா அல்பா ..ரோமியோ ஒஸ்கா " "சொல்லுங்க ரோமியோ ஒஸ்கா " "என்னென்டா பப்பா அல்பா ..ஆமி வன்-வன் இன் (11 இன் ) லைனை உடைச்சு உங்களுக்கு கிட்டே வந்திட்டான். புது பெடியள் விட்டிட்டு ஓடிட்டாங்கள்..உங்களுக்கு முப்பது மீற்றருக்குள்ளே அவன் வந்திட்டான் அண்ணே ..நீங்கள் உங்கட ஆட்களை பின்னுக்கு எடுக்கிறது தான் நல்லது அண்ணே " மூச்சிரைக்க சொல்லி முடித்தான். "தம்பி..இப்போ அது சாத்தியம் இல்லை..நிறைய ஆட்கள்.. வில்லுகள் (ஆயுதங்கள்) பொதிக்குள்ளே பின்னுக்கு எடுக்கிறது என்றால் இழப்புகள் வரும். அதை தவிர இந்த இடத்துக்கு சாமி கும்பிட (தலைவர்) வரபோறார் தெரியும் தானே . எதிரியை பின்னுக்கு தள்ள முடியாதோ ?" "இல்லை அண்ணே அவனின் 8 (8 man team ) வெளிகிட்டான்கள் அண்ணே. எங்கட உடுப்போட வாறாங்கள்.. கிட்டே வந்திட்டாங்கள் என்றால் கலைகிறது கஷ்டம் அண்ணே ..எண்ட ஆக்கள் எல்லாம் சங்கர் (இறந்திட்டார்கள் )..விளங்குதா அண்ணே .." "சரி பொறுடாப்பா...கொஞ்ச அரிசி (ஆட்கள்) அனுப்புறேன். எண்ட மூட்டையிலே (அணியிலே) இருந்து .." "சரி அண்ணே விரைவா ..கோயில் முருகன் மூலை (வடகிழக்கு) " "நன்றி அவுட்' அந்த அலைபேசி அணைப்பை துண்டித்த அந்த மூத்த தலைவர். தம்பிமார் கேட்டு கொண்டு தானே இருந்தனீங்கள் ..இப்ப்போ உங்களிலே ஒரு அணி எதிரியின் முன்னேற்றத்தை முறியடிக்க போகவேணும் என்று சொல்லி முடிக்க முன்னர் அகிலன் தலைமையில் ஒரு அணி எழுந்து நின்றது. அண்ணே நாங்கள் போறம் அண்ணே.. அண்ணே ..நாங்கள் உங்கள் கூடவும் தலைவர்கூடவும் கடைசி மட்டும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பினான்கள். இப்போ இந்த சண்டையில் காயப்பட்டால் அந்த அணியில் நாங்கள் இருக்க முடியாது என்றும் எங்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு பேரும் உங்களையும் தலைவரையும் காப்பாத்தி எங்கட விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவான்கள் என்ற நம்பிக்கையில் நானும் என்ர அணியும் போறோம் அண்ணே ... அந்த மூத்த தலைவர் தலையசைக்க .பதினெட்டு பேர் கொண்ட அகிலனின் அணி களமுனைக்கு விரைந்தது. பொதி செய்யப்பட்ட ஆயுதங்களை பொதியிலிருந்து எடுத்தவாறு ஓடிபோனார்கள் அந்த மானமாவீரர்கள் தங்கள் ஆசை துறந்து... தலைவன் உயிர் காக்க. அந்த மூத்த தலைவர் சண்டைப்பொறுப்பை தளபதி அன்பு மாஸ்டரிடம் கொடுத்தார். அன்பு மாஸ்ரர் அலைபேசியில் சண்டையை நெறிப்படுத்தினார். "அல்பா ரோமியோ ..சண்டை நெருக்கமாக நடக்குது எங்களிலே மூன்று சங்கர் ..அவன் வேகமாக வாறான்..வாழைப்பொத்திகள் (ஆர்பிஜி) வைச்சு அடிக்கிறான்.இன்னும் கொஞ்ச நேரம் தான் நிண்டுபிடிக்கலாம்..வேகமாக முடிக்க சொல்லுங்க அண்ணே" "அல்பா கிலோ ..அப்படி இல்லை உங்களுக்கு என்ன வேணும் என்று சொல்லுங்க ..தரலாம் அவனை ஒரு அடி கூட முன்னுக்கு நகரவிடக்கூடாது..பிறகு எல்லாம் பிழைச்சு போகும் தெரியும் தானே .." "அல்பா ரோமியோ ..ஒரு கிபிர் (கரும்புலி ) வந்தால் ..நிலைமையை கொஞ்சம் சமாளிக்கலாம் .." "சரி கொஞ்சம் பொறுங்கள் கிபிருக்கு ஏற்பாடு செய்கிறேன்".. அன்பு மாஸ்டர் அந்த மூத்த தலைவரை நோக்கி திரும்ப. "எனக்கு விளங்குதடாப்பா..ஆனால் எல்லா கரும்புலிகளையும் பின்னுக்கு நகர்த்தியாச்சே ..சக்கை மட்டும் தான் இங்கே இருக்கு ..ஆட்கள் பின்னாலிருந்து வர ஒரு இருபது முப்பது நிமிஷம் என்றாலும் ஆகும் (மக்கள் நெரிசல் அப்படி)..என்ன செய்கிறது என்று தாண்டாப்பா யோசிக்கிறேன். "என்றார் அந்த மூத்த தலைவர். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் ஒரு குரல் .. நான் போகிறேன் அண்ணே .. ராணிமைந்தன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் . (தொடரும்) பாகம் பதினெட்டு இங்கே அழுத்துங்கள்
  26. பாகம் பதினைந்து மக்கள் அலையலையாக சென்று கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், வயதானவர்கள் காயமடைந்தவர்களை, துணிகளில் கட்டி தூக்கியபடியும், ஒடுங்கிய பாதையூடாகவும், கடல்நீரேரியூடகவும் மக்கள் ராணுவத்திடம் சென்ற வண்ணம் இருந்தார்கள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன். "கடவுளே என் அம்மா அப்பா, என் குடும்பம் இப்படி இராணுவத்திடம் போக கூடாது" என்று. மனசை எதுவோ பிசைந்தது. எங்களின் இயலாமை அதில் தெளிவாக தெரிந்தது. கொள்கைக்கும் உயிராசைக்கும் இடையில் போட்டி நடந்தது. மானத்துக்கும் மனசுக்கும் போராட்டம் நடந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மனசில், கொண்ட கொள்கையை விட, தமிழனின் மானத்தை விட, உயிர் மேல் இருந்த ஆசை பெருசாகபட்டது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் யாருக்காக போரடினமோ அந்த மக்கள் கூட்டத்தில் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து என்னை அதிர வைத்த சம்பவம் அது. ஆமாம். மக்களை போகவேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்போராளிகளை ஒரு மக்கள் (??) கும்பல், கதற கதற தூக்கி சென்று ராணுவத்திடம் ஒப்படைத்தது. அந்த கொலைவெறி பிடித்த ராணுவ அதிகாரி, அந்த மக்களுக்கு முன்னாலேயே இரு பெண் போராளிகளையும் தலையில் சுட்டு கொன்றான். மக்களுக்காக தங்கள் உயிரையும் மதிக்காது போராடிய அந்த போராளிகள், தங்கள் சொந்த மக்களாலேயே தூக்கி சென்று கொடுத்த போதே பாதி உயிரை விட்டிருப்பார்கள். அந்த துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் மீதி உயிரையும் எடுத்து, எங்கள் தாய் மண்ணில், ஈரமும் உப்பும் நிறைந்த அந்த வெளியில் அவர்கள் உடலை சாய்த்தது. தூக்கி சென்று கொடுத்த மக்கள் கும்பலுக்கு ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பழிக்கு பழி வாங்கிய மகிழ்ச்சி. யாருடைய கோபத்தை வேறு ஒருவரிடம் காட்டிய சந்தோசம். ராணுவத்திடம் பாராட்டு வாங்கி மென்பானம் வாங்கி குடித்தார்கள். மக்களுக்காக போராடியதை தவிர, எதுவுமே அறியாத அந்த இளம் பெண் போராளிகளின் உடல்கள், உள்ளே வந்த மக்களின் பார்வைக்காக போடப்பட்டிருந்தது. நெஞ்சையே கொதிக்க வைக்கும் இந்த சம்பத்தை சிலர் மனம் பதைபதைக்க, சிலர் இவங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, சிலர் கண்டும் காணததுமாக போக, சிலர் வழி தெரியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக எதிரியிடம் சரணடைந்த போராளிகள் கூட எதுவுமே நடக்காதது போல வாழாவிருந்தார்கள். சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்கள் சகோதரிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்...? உங்களுகாக தங்கள் ஆசைகள், உறவுகளை விட்டுவிட்டு போராட வந்ததுக்கு இது தான் கைமாறா ..?? அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்..மனம் திறந்து சொல்லுங்கள். மக்களிடம் கொக்கரித்து கொண்டிருந்த சிங்கள வெறியன்களுக்கு பாடம் படிப்பிக்க விடுதலை புலிகளின் கரும்புலி அணி தீர்மானித்தது. சாதாரண பெண்கள் போல சட்டை அணிந்து, உடுப்பு பைகளுடன் இரண்டு பெண் கரும்புலிகள் ராணுவத்திடம் சரணடைய சென்றனர். தங்களை முன்னாள் போராளிகள் என்று இராணுவத்திடம் அறிமுகப்படுத்த அவர்களை தனியே கூட்டிகொண்டு, ராணுவ சகாக்கள் மத்தியில் விடும்போது, அந்த வீர தமிழிச்சிகள், தங்களை வெடிக்க வைத்து சிங்களவனுக்கு மானம் என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன என்று காட்டினார்கள். அந்த இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியன்களும் சிதறிப்போய் இருந்தார்கள்.அந்த இரு இளம் பெண் போராளிகளை கதற கதற சுட்ட அதிகாரிகள் உட்பட. கொலைவெறி கொண்ட சிங்கள ராணுவம் எழுந்தமானதுக்கு மக்களை நோக்கி சுட தொடங்கியது. இனி தப்பி விட்டோம், இனி சாகமாட்டோம் என்று நினைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே உயிரை விட்டார்கள். விடுதலைப்போராட்டம் என்பது தனியே உயிர் சம்பந்தபட்ட விடயம் அல்ல. அது மானம் கொள்கை சம்பந்தபட்டது. சிங்களத்தின் தலைப்பு செய்தி : - மக்களோடு மக்களாக வந்து புலிகள், தப்பியோடும் மக்களை தாக்கியதில் நாற்பது பொதுமக்கள் பலி. எங்களை ஏற்றி செல்லவந்த படகுகளில் ஏறி நாங்கள் வலைஞர்மடத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது. அங்கும் மக்கள் பதட்டமாக கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாக்கால் நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் செல்களும், துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு வந்த சன்னங்களும் மக்கள் உயிர்களை குடித்து கொண்டிருந்தது. என் தோளில் துப்பாக்கியை சுமந்தபடி, வலைஞர்மட வைத்தியாலைக்கு முன்னால் இருந்த மண் பாதை வழியாக, இராணுவம் வலைஞர்மடத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க பயணித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கர்ப்பிணிதாயை ஏற்றி கொண்டு, முகப்பு ஒளியை பாய்ச்சிய வண்ணம், ஒலி எழுப்பியபடி ஒரு நடுத்தர வயது கணவன், பிரசவ வலிதாங்காத தன் மனைவியை உந்துருளியில் ஏற்றிய வண்ணம் கத்தி வழி கேட்டபடி வந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த சன்னம் ஒன்று அவன் தாடையை கிழித்து கொண்டு போனது. மனைவியுடன் வீதியில் விழுந்தான். வாய்க்குள் இருந்து தண்ணீர் குழாயில் வருவது போல குருதி கொப்பளித்து பாய்ந்து கொண்டிருந்தது. மூக்கின் கீழ்பகுதி தாடையுடன் இல்லை. ஓஒ என்று கத்தி அலறிய அந்த கர்ப்பிணி மனைவி, தன் பிரசவ வலியால் ஒரு கையை தன் வயிற்றிலும், மறுகையை தன் கணவனின் வாயிலும் வைத்தபடி கத்தி அழுதாள். "அண்ணே யாராவது ஓடி வாங்கோ, ஆராவது வந்து காப்பாத்துங்கோ" என்று தன் பிரசவ வலிக்கும் மத்தியில் பலமாக கத்தினாள். தொடர்ந்து வந்து கொண்டிருந்த சன்னகளுக்கு மத்தியில், யாருமே அவர்களுக்கு கிட்டே போகவில்லை. நான் அந்த இடத்துக்கு விரைந்தேன். வாய் பிளந்து குருதி வருவதால் என்னால் கட்டுப்போட முடியவில்லை. இன்னும் ஒரு மூன்னூறு மீட்டரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டும். அவரது உந்துருளியை நிமிர்த்தி அவரை உட்கார வைத்து நான் முன்னால் ஏறி கொண்டேன். இப்போ இன்னொருவர் பின்னால் இருந்து அவரை பிடிக்கவேண்டும். அந்த கர்ப்பிணி தாயால் இரண்டு பக்கமும் காலை போட்டு இருக்க முடியாது. அருகில் இருந்தவர்களை கெஞ்சினேன். யாருமே உதவிக்கு வரவில்லை. எனக்கு ஒரு கயிறு அல்லது துணி வேண்டும் என்று கேட்டேன். அந்த கர்ப்பிணித்தாய் ஓடி சென்று, ஒரு தரப்பாள் கூடாரத்தில் இருந்த சேலையை உருவி வந்து என்னுடன் தன் கணவரை சேர்த்து கட்டினாள். நான் வைத்தியசாலைக்கு அவரை கொண்டு வர அந்த பெண் கத்தியபடியே பின்னால் ஓடி வந்தாள். அவரை கொண்டு போய் நான் வைத்தியரிடம் ஒப்படைத்த போது, அந்த கணவனின் உயிர் பிரிந்திருந்தது. அந்த கர்ப்பிணி மனைவியை எதிர்கொள்ள மன தைரியமற்ற நான் ஒரு ஒரமாக வெளியேறினேன். என் உடலெங்கும் அப்பி இருந்த அவரின் இரத்ததை, ஒரு தொகுதி இலையான்கள் மொய்த்து கொண்டிருந்தன. (தொடரும்) பாகம் பதினாறு இங்கே அழுத்துங்கள்
  27. பாகம் பதினான்கு அந்த கடல்நீரேரியின் மறுபுறத்தில் அமைக்கபட்டிருந்த கிடுகு வேலியையே பார்த்து கொண்டிருந்தேன். புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்தது ஒரு முந்நூறு மீற்றர் தொலைவில்.. ஒரு இடிந்த கல் வீட்டுக்கு நடுவில்.. பச்சை குழைகளால் உருமறைப்பு செய்தபடி எங்கள் நிலை இருந்தது. ஆனந்தபுரம் வரலாற்று சமருக்கு பின்னர், எங்கள் தானை தளபதிகளை எதிர்கொள்ள திராணியற்று இரசாயன ஆயுதங்கள் கொண்டு அழித்து, கடல் நீரேரியின் மறுபுறத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி. அங்கிருந்து கொண்டு மக்கள் வாழிடங்களை நோக்கி சரமாரியான எறிகணை,குறிசூட்டு,விமான தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தான். கடல்நீரேரியை கடக்க விடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ ஓய்வு காலபகுதியில் வழங்கபட்ட குறிசூட்டு பயிற்சியின் பின்னர், ஒரு குறிசூட்டு (சினைப்பர்) ஆயுதத்துடன் நான் காத்திருந்தேன் எதிரின் வரவுக்காக. ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் ஒரு இருபது முப்பது பொதுமக்கள் நீரேரியை கடந்து இராணுவத்திடம் செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அதை தடுத்து நிறுத்த சொல்லி கட்டளை இருந்தாலும், அவர்களின் நிலையை பார்த்து நான் போக அனுமதிப்பதுண்டு. அங்கிருந்த எல்லா மக்களுக்கும் புலிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் பிடித்திருக்கவோ அல்லது புரிந்து கொண்டிருக்கவோ அவசியம் இல்லைதானே. அதைவிடவும் எவ்வளவோ மக்கள் புலிகளுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கும்போது, ஒரு பத்திருபது மக்கள் இராணுவத்திடம் ஓடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கட பக்கம் இருப்பதை விட இராணுவத்தின் பக்கம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி, அவர்களை நான் கண்டும் காணாமலும் ஓட விடுவதுண்டு. இரவிரவாக கழுத்தளவு தண்ணீரில் எங்கள் நிலை கடந்து எதிரியிடம் போன மக்களை விடியும் வரை தண்ணீரிலேயே நிறுத்தி வைத்திருப்பான் எதிரி. நன்றாக விடிந்தபின்னர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அனைத்து ஆடைகளையும் களைந்து தான் தனது நிலைக்குள் எடுப்பான். இதெல்லாம் மக்கள் சொல்லி தான் கேள்விபடிருந்தேன். ஆனால் அன்று அதிகாலை என் குறிசூடு கருவியின் தொலைநோக்கியூடாக பார்த்த போது தான், எங்கள் மக்கள் எதிரியிடம் படும் அவலத்தை நேரடியாக கண்டேன். தந்தைக்கு முன்னால் வயது வந்த மகளின் உடையெல்லாம் களைந்து நிர்வாணமாக, கணவனுக்கு முன்னால் மனைவியின் உடைகளைந்து நிர்வாணமாக , எங்கள் மக்கள் எதிரியிடம் சரணடைவதை நேரிலே கண்டேன். கட்டிய கணவனுக்கு முன்னால் கூட உடை மாற்றாத இனத்தில் பிறந்து, கண்டவனுக்கு முன்னால் நிர்வாணமாக எங்கள் மக்கள் நிற்பதை பார்க்க எல்லாரையும் சுட்டு கொன்றுவிடலாம் என்று கூட தோணியது. எங்கே ஒரு இராணுவ வீரன் தலை காட்டி இருந்தாலும் என் ஆத்திரம் அவன் தலையில் தெரிந்திருக்கும். என்ன செய்வது எல்லாம் எங்கள் மக்கள் என்று, ஆயுதத்தை மடித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். இதை போய் எங்கள் மக்களிடம் சொன்னாலும் சிலர் நம்ப மாட்டார்கள். எங்களை இராணுவத்திடம் போகவிடாமல் தடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லுவார்கள். வேண்டாம்..என் சகோதரியின் நிர்வாண உடலை பார்த்ததை ஊரெல்லாம் சொல்லி, அவளை மேலும் நிர்வாணமாக்க நான் விரும்பவில்லை. உயிரை விட மானம் தான் பெரிது என்று வாழ்ந்தவர்கள் எங்கட பக்கம் இருக்க , மானம் என்ன மானம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று, உயிரை காக்க எதிரியின் பக்கம் போனவர்களை , தனது காமபசிக்கும், கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினான் எதிரி. அன்றும் அப்படிதான்... பொக்கணையை அண்டிய நீரேரிபகுதியில்.. அதிகாலையில் பசியாலும், இரண்டு மூன்று நாள் இடைவிடாமல் கண்விழித்து காவல் இருந்ததாலும் சற்று கண்ணயர்ந்த போராளிகளின் நிலையை உளவு பார்த்து ஒரு மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சென்றடைந்தது. அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.ஒரு இராணுவ அணி அவர்களை வந்த பாதையை காட்டுவதற்காக கூட்டிவந்திருந்தது . பாதை காட்ட மறுத்த மக்களை சுட்டு அடிபணிய வைத்தது . வந்த எதிரி அணி அந்த நிலையில் கண்ணயர்ந்திருந்த போராளிகளை கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு, எங்கள் நிலைகளை ஊடறுத்து ஒரு பெரிய படை நடவடிக்கையை செய்தான். வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியும், சாலை பொக்கணை மாத்தளன் பகுதியும் துண்டாடப்பட்டது. அம்பலவன் பொக்கணை ஊடக இராணுவம் கடற்கரை வரை சென்று மக்களை துண்டாடியது. தொடர்பு அறுபட்ட நிலையிலும் போராளிகள் தீரமாக போராடினார்கள். இராணுவம் இடைவிடாத செல் மழை பொழிந்தது. ஒரு கோர தாண்டவமாடியது. இராணுவம் வந்துவிட்டதை உணர்த்த மக்கள் புலிகளின் பகுதிக்கு ஓட முற்படுவதை தடுக்க இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் கொண்டு மக்களை கொன்று குவித்தது ராணுவம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை விடிருந்தார்கள். தெருவெங்கும் பிணக்கோலங்கள். உடம்பில் பட்ட இரசாயன (பொஸ்பரஸ்) குண்டின் எரிவு தாங்காமல் கடலுக்கு ஓடி வந்து பாய்ந்தார்கள். முகங்கள் எரிந்த நிலையில் வழி தெரியாமல் பிஞ்சு குழந்தைகள், கடற்கரை மண்ணில் முகம் புதைச்சு தேய்த்தார்கள். எங்கும் மரண ஓலமும், புகை மூட்டங்களும், காணமல் போன தங்கள் உறவுகளின் பெயரை கூவி கத்தியபடி பித்து பிடித்தது போல மக்கள், அங்கும் இங்கும் அலைந்து ஓடினார்கள். நாங்களும் எங்கள் நிலையும் பிரதான எங்கள் தளத்திலிருந்து துண்டாடப்பட்டிருந்தது. தரைவழி தொடர்பறுந்த நிலையில் நாங்கள் மாத்தளன் துண்டுக்குள் மாட்டுபட்டிருந்தோம். எங்களுக்கான கட்டளைகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருந்தது. தப்பிபோக வழி இல்லாமல் ராணுவத்திடம் சரணடையும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி நிலைமை சொல்லி, கடல் வழியாக அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுப்புமாறு பணிக்கபடிருந்தோம். சாரை சாரையாக ராணுவத்திடம் சென்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு சொற்ப போராளிகளுடன் நானும் கெஞ்சி கொண்டிருந்தேன். "அண்ணே நில்லுங்கோ போகாதேங்கோ.." "அக்கா.. அக்கா.. தயவு செய்து நில்லுங்கோ ஆமியிடம் போகாதேங்கோ..." "பொறுமையா இருங்கள்..இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு விடிவு கிடைச்சிடும்.." என்று ஆண் பெண் போராளிகள் பேதமின்றி மக்களின் கால்களை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தார்கள். அனைவரும் முடிவு செய்து கைகோர்த்து மக்களை மறித்தோம். எங்களை தள்ளி விழுத்தி எங்களுக்கு மேலால் மக்கள் ஏறி சென்றார்கள். நான் ஒரு ஐயாவை மறித்தேன். இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு வந்திருந்தார். பசியால் மெலிந்து எலும்புகள் தெரிந்த இரண்டு குழந்தைகள்.. தலை எல்லாம் நரைத்து எலும்பு கூடாக அந்த ஐயா.. "ஐயா தயவு செய்து போகாதீங்கள்.." "நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக புலிகளின் பக்கம் நின்றால் தான் உலகம் எங்களுக்கு ஒரு தீர்வை தரும்" "தம்பி என்னடா விசர் கதை கதைக்கிறாய்..இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்தால் நாங்கள் சாப்பாடு இல்லாமலே செத்து போயிடுவம், அதுக்கு பிறகு உங்கட தீர்வை கொண்டே என்ன செய்ய போறீங்கள்" "அப்படி இல்லை ஐயா, உங்களுக்காக தானே நாங்கள் வீட்டை எல்லாம் விட்டிட்டு போராட வந்தனாங்கள், நீங்கள் போய்விட்டால் இவ்வளவும் தான் மக்கள் என்று, எங்களோட இருக்கிற மக்கள் எல்லாரையும் புலி என்று அழிச்சிடுவான், இது நீங்கள் மிச்ச மக்களுக்கு செய்கிற துரோகம் இல்லையா" "தம்பி எனக்கு துரோகமா இல்லையா என்று வாதிட கூட தெம்பு இல்லை. இந்த பிள்ளைகளின்ட அம்மா, அப்பா எல்லாரும் செத்து போட்டினம், என்ர மனுசி கூட நேற்று தான் செல்லடியிலே செத்தவ..செல்லுக்கு கூட தாக்கு பிடிக்கலாம்.. சாப்பிடாமல் பசிக்கு தாக்குபிடிக்க முடியலை தம்பி" "தம்பி எனக்கு நல்லா தெரியும்.நீங்கள் எங்களுக்காக தான் போராடுறீங்கள். சிங்களவன் கெட்டவன் என்றும் தெரியும். ஆனால் இப்போ பசிக்கு, உயிரை காப்பாத்த வேற வழி தெரியலை தம்பி." "தம்பி எனக்கும் தமிழீழம் வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். நான் கடவுளை ஒவ்வொருநாளும் கும்பிடுறேன். நீங்கள் நாளைக்கு ஆமிக்கு ஓடி எங்கள் வீட்டுக்கு வந்தால் ஒளிச்சு வைச்சு சாப்பாடு குடுக்கிறேன். எனக்கு இந்த மண் மீது இப்பவும் பற்று இருக்கு.. என்னை போக விடு தம்பி. மூன்று உயிரை காப்பாத்தின புண்ணியமாவது உனக்கு கிடைக்கும்" என்று என் காலில் விழுந்து அழுதார். சொல்லுங்கள் உறவுகளே..இராணுவத்திடம் ஓடிய மக்கள் எல்லாரும் எங்களை வெறுத்த மக்களா..? எங்களை வேண்டாம் என்று ஓடிய மக்களா..?? எங்களை உயிராய் நேசிச்ச மக்கள் தான்..பசியாலும் பட்டினியாலும் சிங்கள் கொலைவெறி அரக்கனின் கோர தாண்டவத்தாலும் உயிரை காப்பாற்ற தான் எதிரியிடம் ஓடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அவர்கள் எதிரியிடம் விரும்பி ஓடனும் என்றால் மன்னாரில் சண்டை தொடங்கும்போதே ஓடி இருப்பார்களே. இவ்வளவு காலம் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு எங்களுடனே வரவேண்டிய தேவை என்ன..?? "ஐயா ..எழும்புங்கோ ..நீங்க போயிற்று வாங்கோ..நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் அப்போ திரும்பி வாங்கோ .." அவர் கண்ணில் மட்டுமல்ல என் கண்ணிலிருந்தும் ஒரு துளி கண்ணீர் அந்த மண்ணை நனைத்தது.. (தொடரும்) பாகம் பதினைந்து இங்கே அழுத்துங்கள்
  28. பாகம் பன்னிரண்டு கோம்பாவில் குளத்தடியால் வந்த ராணுவத்தையும் தேவிபுரம் காட்டுப்பகுதியால் வந்த ராணுவத்தையும் இரணைப்பாலை வடக்கு பகுதியில் மறித்து உக்கிர சமர் நடத்தினர் புலிகள். கடும் சமர்க்களம் அது. தளபதி லோரன்ஸ், தளபதி தீபன் வழி நடத்தலில் புலிகள் தீரமாக சண்டை போட்டனர். அந்த களமுனையின் காவலரணில் ஒரு தொகுதி தலைவனாக என்னை நியமித்து இருந்தனர். ஒரு நாள் மாலை பொழுதில் அவள் வந்தாள். பின்னால் இருந்து ஒரு பழக்கமான குரலில் அண்ணா என்று கூப்பிட்ட போது, திரும்பிய என்னை அவளின் அழகான புன்னகை மூலம் அன்பை காட்டினாள். அவள் வேறு யாருமில்லை என் உடன் பிறவா கள தங்கை கலையரசி தான். கேப்பாபுலவு களமுனைக்கு பிறகு இப்போ தான் சந்திக்கிறேன். ஒரு நாற்பது நாள் இடைவெளி. எவ்வளவு மாற்றம் காலங்களில். எதிரி புதுக்குடியிருப்பை பிடித்து இரணைப்பாலை வரை வந்துவிட்டான். மறுபக்கத்தாலே விசுவமடுவில் இருந்த இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் பிடித்து இரணைப்பாலை வடக்கு வரை வந்துவிட்டான். மக்கள் புதிய பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மட பகுதிகள் நோக்கி நகர்ந்துவிட்டார்கள். இடைவிடாத செல் மழை, கிபிர் குண்டுவீச்சுகள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகளுக்கு நடுவில் மக்களுக்காக மறவர்கள் தீராத மனவுறுதியுடன் போராடினார்கள். இவற்றுக்கும் மத்தியிலும், போராளிகளின் மனவுறுதியை குலைப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வரும், வழங்கல் (உணவு) தொகுதிக்கும் அடிக்கடி குறி சூட்டு (சினைப்பர்) தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தினான் சிங்கள ராணுவம். சிலவேளைகளில் ஐந்து நாட்களுக்கு கூட சாப்பாடு இல்லாமல் சண்டை போட்டார்கள் போராளிகள். அது அவர்கள் மக்கள் மேல் வைத்த பாசத்தின் வெளிப்பாடு. ஒரு நேர சாப்பாடு தராவிட்டாலும் அம்மாவுடன் சண்டைபோட்ட நாங்கள், ஐந்து நாட்கள் சாப்பாடு வராவிட்டாலும் யாரையும் நோகாமல எதிரியுடன் சண்டை போட மக்கள் மீது எவ்வளவு பாசம் வேண்டும். அது சில வேளைகளில் அவர்களின் அம்மா மீது இருந்த பாசத்தை போல பல மடங்காக கூட இருக்கலாம் இல்லையா.? பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு. வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம். ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு. அன்றும் அப்படி தான். எனக்கு இரண்டு மூன்று நாளாக காய்ச்சல். பட்டினி, உடலில் சத்தின்மை, அசுத்த நீர் இதில் ஏதாவது ஒன்றினால் தான் அந்த காய்ச்சல். இருந்தும் களத்தை விட்டு நகரமுடியாத நிலை. எனக்கு ஆறுதலாக இருந்தவள் கலையரசி தான். எதிரிக்கு தெரியாமல் அடுப்பு மூட்டி, கொதிநீர் வைத்து தருவாள். குடிக்கவும் ஒத்தணம் பிடிக்கவும். என் கூட பிறந்த தங்கை அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாளோ அதை விட அதிகமாக செய்தால் என் அன்பு தங்கை கலை. இரண்டு நாளாக சாப்பாடும் இல்லை. வாயெல்லாம் கசத்தது. ஏதாவது புளிப்பாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. கலையிடம் கெஞ்சினேன். "அண்ணா உனக்கில்லாததா.. இரு இப்பவே கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு போனவள் தான். ஒரு படீர் என்ற வெடிச்சத்தம். அதை தொடர்ந்து "அண்ணா....." என்ற அலறல் என்னை திடுக்கிட்டு எழும்ப வைத்தது. காய்ச்சலுடன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன் கையில் என் ஆயுதத்தையும் எடுத்து கொண்டு. அங்கெ எங்களுக்கும் எதிரிக்குமிடைப்பட்ட பகுதியில் இருந்த புளியமரத்துக்கு கீழே, கையில் கொத்தாக புளியமிலையுடன், என் தங்கை உயிரை விட்டிருந்தாள். நெத்தியில் இருந்து வந்த அவளின் குருதி மண்ணை நனைத்திருந்தது. இந்த பாழாய் போன அண்ணனுக்காக, காய்ச்சலுடன் நான் கேட்டேன் என்ற கடமைக்காக, ஒரு கொத்து புளியமிலைக்காக, இந்த மண்ணுக்காக என் தங்கை, இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறாள். எனக்கே களம் என்றும் பாராமல் ஓஒ ... என்று கத்தி அழனும் போல இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையா உறவுகளே.. போராளிகள் என்றால் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அவர்களும் உங்களை போல தான். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். சாவுகள், இரத்தம், சதைகள் என அவர்களின் மனசை இறுக்கி இருந்தாலும் சில வேளைகளில் அவற்றையும் மீறி உணர்வுகள் வெளிபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும். ஏன் என்றால் நாங்களும் மனுஷர் தானே உறவுகளே..எங்களுக்கு மட்டும் கடவுள் மனசை கல்லாக படைக்கவில்லை தானே .. அங்கெ நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. கலை கொஞ்சம் உயரம் குறைவானவள். அதுவே அவளுக்கு எமனாகவும் வரும் என்று எள்ளளவும் யோசித்தும் இருக்கமாட்டாள். எங்கள் நிலைகளுக்கு பின்னால் இருந்த புளியமரத்தில் தாழ்வாக இருந்த இலைகள் எல்லாம் கடந்த ஒன்பது பத்து நாட்களாக போராளிகளின் வயிற்றுபசிக்காக பிடுங்கபட்டு மொட்டையாக இருந்தது. உயரத்தில் இருந்தவை அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. ஏறி தான் பிடுங்கவேண்டும். ஏறி பிடுங்கும் போது குறி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நிலையில், எங்கள் அரணுக்கு முன்னால் இருந்த மரத்தில் தாழ்வாக இருந்த இலைகளை பறித்து கொண்டு ஓடிவந்திடலாம் என்று முடிவெடுத்து அதனை செயற்படுத்திய போது தான் அவள் கொடிய எதிரியின் குறி சூட்டுக்கு இலக்காகி இருக்கிறாள். என்னால் என் தங்கையின் உயிரை தான் காப்பற்ற முடியவில்லை. அவளின் புகழுடலையாவது எதிரியின் கைகளில் சிக்காமல் எடுத்து அவளின் குடும்பத்தினரின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு அண்ணனாக நான் இதைக்கூட செய்யணும் இல்லையா என் உறவுகளே..? பதுங்கி நிலையெடுத்து, ஊர்ந்தபடி அவளின் புகழுடல் இருந்த இடத்தை அண்மித்துவிட்டேன். மீண்டும் படீர் என்ற சத்தம். என் காலை பதம் பார்த்தது கொடிய சிங்கள எதிரியின் குறி சூட்டு சன்னம் ஒன்று. என் தொடைகளை ஊடுருவி மறுபக்கத்தால் சென்று இருந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த என் சக போராளிகளை சைகை மூலம் நிறுத்திவிட்டு, அந்த புளியமரத்தின் வேர்களுக்குள் உருண்டு மறைந்து கொண்டேன். உடலை தூக்க வரும் போராளிகளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அந்த கொடிய குறி சூட்டாளன். மறைந்திருந்தவாறே என் ஆயுதத்தை நிமிர்த்தி, எதிரிகளின் நிலைகளை நோக்கி எழுந்தமானத்துக்கு சுட்டு என் கோபத்தை காட்டினேன். கால் விறைத்து, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கள மருத்துவ இறுக்கி துணியை (பில்ட் கொம்பிரசறை) எடுத்து என் காலை சுற்றி கட்டினேன். என்ன விலை கொடுத்தாவது என் தங்கையின் உடலை எடுத்தே தீருவது என்ற மன வைராக்கியத்தை என்னுள் வளர்த்து கொண்டேன். இந்த வைராக்கியம் இதை கேட்கும் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை உறவுகளே. ஏன் என்றால் அங்கெ விழுந்திருப்பது என் தங்கை மட்டும் இல்லை. உங்கள் தங்கையும் கூட. என்னில் இருந்து ஒரு நான்கு அல்லது ஐந்தடி தள்ளி தான் அவள் உடல் இருந்தது. தனது ஆசை அண்ணனுக்கு பிடுங்கிய புளியமிலை கொத்தை விடாமல் பிடித்திருந்தாள். இந்த இலைகளை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த கனவுடனே மண்ணில் கிடந்தாள், என் மன்னிக்கவும் எங்கள் தங்கை கலையரசி. அருகில் இருந்த ஒரு மொத்த தடியினை எடுத்து அதன் கிளையினை என் தங்கையின் தலை முடியினுள் செருகி, அதனை சுற்றி சிக்கு பட வைத்தேன். பின்னர் என் பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். என் தங்கை என்னை நோக்கி அசைய தொடங்கினாள். இடையில் அந்த சிக்கு கழன்று தடி விடுபட்டது. ஆனால் நான் என் முயற்சியை விடவில்லை. மறுபடியும் முயன்றேன் என் கை எட்டும் அளவுக்கு வந்து விட்டாள் என் தங்கை. கையால் எட்டி அவள் தலை முடியை பிடித்து எனக்கு அருகில் அவளை , அவளின் உடலை எடுத்து விட்டேன். கட்டி அழனும் போல இருக்கு. உங்களுக்கு இல்லையா ..?? அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன். இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே. இது அவளின் கடைசி ஆசைக்காக.. (தொடரும்) பாகம் பதின்மூன்று இங்கே அழுத்துங்கள்
  29. பாகம் ஏழு சூரியகாட்டின் எல்லையோரம் அது. வற்றாபளை சந்தியில் இருந்து முன்னேறிவந்த ராணுவத்தை தடுத்து நிறுத்த புலிகளால் அமைக்கபடிருந்த காவலரண்கள் அவை. நந்திகடலோரம் மாலை மயங்கும் அந்தி அழகை கூட ரசிக்க மனமில்லாமல் காவலிருந்தார்கள் அவர்கள். முன்னால் நீண்ட புலிகளின் விமானபடை ஓடுபாதை. அதற்கு அப்பால் இருந்த காட்டுக்குள் அரக்கர்கள் கூட்டமா படையெடுத்து வந்து நிலையெடுத்து இருக்கிறது. நான்கு நாட்களாக அந்த அரக்கர் படை எடுத்த முயற்சிகள் எல்லாம் இவர்களின் தீரமான சண்டைகளால் முறியடிக்கபட்ட கோபத்தில் , கடுமையாக திட்டம் தீட்டி கொண்டிருந்தது எதிரிப்படை. புதுக்குடியிருப்பின் முக்கியத்துவம் கருதி, எதிரிக்கு விட்டு கொடுக்காமல் களமாட, முக்கிய பணிகளில் இருந்த போராளிகள் கூட குறுகிய பயிற்சியுடன் களமிறக்கபடிருந்தார்கள். இவர்களுக்கு வலதுபுறம் நிதிதுறையும், இடதுபுறம் கடற்புலிகளும் களமாடி கொண்டிருந்தார்கள். ஐம்பது மீற்றருக்கு ஒரு அரண் இருந்தாலும் இரண்டுக்கு ஒரு அரணில் தான் போராளிகள் இருந்தார்கள், மற்றவை எல்லாம் டம்மியாகத்தான் (போலியான) இருந்தன. அவ்வளவு ஆட்பற்றாக்குறை. பளை, கிளிநொச்சி முதல் அம்பகாமம், விசுவமடு,உடையார்கட்டின் மேற்குபுறம், தேவிபுரம், ஒட்டிசுட்டான், சூரியகாடு, வட்டக்கண்டல் என நீண்டு இருந்த அவ்வளவு எல்லை கூட்டிலும் ஆட்களை நிறுத்த புலிகளும் என்ன தான் செய்வார்கள். அந்த முறியடிப்புக்காக அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவனாக ராணிமைந்தன் நிலை நிறுத்தபடிருந்தான். பேனை பிடித்த கை முதன் முதலாக தானியக்க ஆயுதத்துடன். பதினைந்து நாட்கள் தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள். இன்னுமே சரியான குறி வைப்பதில் சிரமம், ஆயுத துப்பரவாக்களில் சிரமம், இப்படியான கள அனுபவம் கொஞ்சம் கூட இல்லாமல் ராணிமைந்தன் கொஞ்சம் சிரமபட்டுதான் போனான். ஒரு அரணில் இரண்டு பெண் போராளிகளுக்கு ஒரு ஆண் போராளி என்ற ரீதியில் இவர்களது பிரிவில் விடபட்டிருந்தார்கள். அங்கு சந்தித்தவள் தான் கலையரசி. அரணுக்கு காவலுக்கு வந்த முதல் நாளே ராணிமைந்தனுக்கு அவளின் தங்கையை ஞாபகபடுத்தும் உருவமாக திகழ்ந்தவள் கலையரசி. அவளுக்கும் இவன் ஒரு உடன்பிறவா சகோதரனாகவே தோன்றினான். அவர்களிடையே அப்படி ஒரு பாசபிணைப்பு. வரும் வழங்கல்களை, மீள் உருவாக்கம் செய்து ருசியாக்குவதில் கலையரசிக்கு நிகர் யாரும் இல்லை. பழைய இடியப்பம், பழைய சோறு, கருவாடு, முறுக்கு துண்டுகள் என இவளின் மீள் உருவாக்க உணவுகளின் ருசிக்கு ராணிமைந்தனும் ஒரு அடிமை. வீட்டை பற்றி நினைக்க எதிரி அவகாசம் கொடுக்காவிட்டாலும், அவனுக்கு வரும் வீட்டு நினைப்பை ஆற்றுப்படுத்தவல்ல ஆளுமை கலையரசிக்கு இருந்தது. அன்றும் அப்படி தான். முதல் நாள் இரவு சாப்பிட்ட மீள் உருவாக்க வழங்கலின் கோளாறு காரணமாக, ராணிமைந்தனுக்கு வயிறு அவ்வளவு சரி இல்லை. அடிக்கடி வயிற்றாலை போக தொடங்கியது, எதிரி எதற்குமே அவகாசம் கொடுக்காமல், அவனிடம் இருக்கும் அவ்வளவு ஆயுதங்களையும் பயன்படுத்தி கொண்டிருந்தான். இவர்களின் அரணை தகர்க்க மட்டுமே, இரண்டு ஆர்.பி.ஜி, இரண்டு பி.கே, ஒரு சின்னைப்பர், மற்றும் ஏ.கே யுடன் நான்கு பேர் கொண்ட எதிரி அணி, இடைவிடாது தாக்கி கொண்டிருந்தது. பறந்து வரும் சன்னங்கள், அருகில் பெண்களின் நிலை, இவற்றுக்கு நடுவில், வயிற்று கோளாறு ராணிமைந்தனை படாத பாடுபடுத்தியது. ஏன்ரா இயக்கத்துக்கு வந்தோம் என்று இருந்தது அவனுக்கு, மக்களாவது மண்ணாகட்டியாவது. வீட்டு நினைப்பு வேற. கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சு வட்டக்கச்சி வரை வந்திடானாம் என்ற செய்தி வேற இடியாக இருந்தது. இனி சண்டை பிடிச்சு என்னத்தை செய்யுறது என்ற நினைப்பு வேற. ஓடிவிடலாம் முடிவெடுத்தான் ராணிமைந்தன். அலைபேசியில், பின்னணி நிலையில் இருந்த கொம்பனி தலைவருக்கு தொடர்பெடுத்தான். "கிலோ மக், கிலோ மக், அல்பா சேரா" "சொல்லுங்க அல்பா சேரா" " எனக்கு வயிற்று சிக்கல் , உடம்பிலே ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்க கூட வலு இல்லை, என்னை பின்னுக்கு எடுக்க முடியுமா" "விளங்குது அல்பா சேரா, இண்டைக்கு கஷ்டம், ஆளை மாத்தி விடனும் இரவு மட்டும் தாக்கு பிடியுங்கள், நாளைக்கு மாத்திறம்" "நன்றி கிலோ மக் " "நன்றி அவுட்" இரவுக்கு எப்படிதான் தாக்கு பிடிக்கபோறேனோ என்று தலை வெடிக்க யோசித்தான் ராணிமைந்தன். கலையரசி தான் ஆறுதலாக இருந்தாள். " ராணி அண்ணா, ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, நாளைக்கு எப்படியும் உங்களை மாத்தி பின்னுக்கு விடுவினம்" . "கலை சொல்லுறேன் என்று குறை நினைக்காதே. இந்த முறை பின்னுக்கு போனால் மெடிக்சிலே விட்டால், நான் நூறு மீற்றர்.( ஓடப்போறேன் என்றதுக்கு போராளிகள் மத்தியில் இருந்த பரி பாசை அது ). எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு" "ஒரு மனுஷனுக்கு ஏலாமல் வரும்போது தான் பாசங்களின் நினைப்பு கூட வரும். எனகேண்டால் இந்த சண்டையில நாங்கள் வெல்லுவம் என்ற நம்பிக்கை இல்லை. அம்மாக்கள் எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியலை. அவையோட போய் இருக்க போறேன்." "இவ்வளவு உன்னோட பழகிட்டு உனக்கு சொல்லாமல் போக கூடாது என்று தான் உனக்கு சொல்லுறேன். யாருக்கும் சொல்லி போடாதே" "நிச்சயமா அண்ணா சொல்ல மாட்டேன். அம்மாவை கண்டால் நானும் கேட்டேன் என்று சொல்லு. உனக்கு இங்கயும் ஒரு தங்கச்சி இருக்கிறா என்று சொல்லு". அன்று இரவு முழுவதும், புலிகள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுட்டுகொண்டிருந்த இராணுவ சன்னங்களின் வெடியோசை, நாளை அம்மாவை காண போகிறேன் என்ற சந்தோசத்துக்கு கேட்டதாகவே தோன்றியது ராணிமைந்தனுக்கு. எப்படா விடியும் என்றிருந்தது ராணிமைந்தனுக்கு. உடுப்புகள், நாளேடுகள் அடுக்கிவைத்து விட்டு காத்திருந்தவனை எழுப்பியது எதிரியின் சன்னங்கள் தான். இண்டைக்கு அம்மாவை பார்க்க போறேன் என்று அவனுக்கும் தெரிஞ்சிட்டு போல. காலை பாதினொரு மணிக்கு தான் மாற்று ஆளணி வந்து சேர்ந்தது. ராணிமைந்தன் மாற்றபட்டு பின்களத்துக்கு வரவழைக்கபட்டான். கலையரசியை பிரிந்தது என்னவோ போலிருந்தது ராணிக்கு. இனி எப்போ பார்க்க போறேனோ..? என்ற கவலை மனசை வாட்டினாலும் அம்மாவை பார்க்க போறேன் என்ற சந்தோசம் எல்லாவற்றையும் வென்றது. பின்களத்தில் இருந்து மருத்துவ ஓய்விற்காக மூன்று நாட்கள் மெடிக்ஸ் அனுப்பபட்டான் ராணிமைந்தன். எப்படியாவது அங்கிருந்து ஓடி அம்மாவிடம் போய்விட வேண்டும். இதை தவிர அவனிடம் வேற எந்த எண்ணமுமே இல்லை. மூன்றாம் நாளே ஓட வேண்டும். திட்டமிட்டான் ராணிமைந்தன். அடுத்தநாள் அவன் திட்டத்தில் இடி விழப்போவது தெரியாமல் அன்று இரவு நிம்மதியாக படுத்துறங்கினான். வெடிச்சத்தம் கேட்காத அந்த இரவு. மறுநாள் ராணிமைந்தன் கனவில் இடிவிழபோகும் அந்த இரவு. மெல்ல கரைந்து கொண்டிருந்தது. (தொடரும்) பாகம் எட்டு இங்கே அழுத்துங்கள்
  30. இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில்..... ஒரு வேளை பற்றைகள் மறைவில் சட்ட விரோத செயற்பாடுகள் நடப்பதால் கொழுத்தி விடடார்களோ ? பாவம் பனைமரங்கள் அழிந்துபோக போகின்றன ,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.