Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87986
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    38749
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2948
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33034
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/08/25 in all areas

  1. ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!
  2. நன்றி தமிழ் சிறி அண்ணா யாழ் இணையத்திற்கும் எனக்குமான தொடர்பு குறைந்து கொண்டே போகிறது ஆனால் அந்த நாளில் யாழிணையத்தில் இணைந்த பலர் முகநூலில் ஒரு சில சந்திப்புக்களின் படங்களைக் கண்டு தொடர்பு கொள்வார்கள் அப்போது இருந்த புனைப்பெயரான முனிவர் ஜீ சொன்னால் அது நீதானாடா என்ற கேள்வியுடன் நண்பராக பழகி கொண்டதுதான் அஜிவன் அண்ணையின் நட்பு இறந்த செய்தி முகநூலில் தான் கண்டேன் ஆனால் அதற்கு முதல் கிழமையில் ராஜன் ஆஸ்பத்திரில இருக்கன் மூச்சு விட முடியல நுரையீரல் பிரச்சினை என சொன்னார். படங்களையும் அனுப்பி இருந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் அஜிவன் அண்ணா அநேகமாக சிலருடன் நட்புக்காகவாது யாழ் நண்பர்களுடன் பேசி வருகிறேன் நலன் விசாரிப்பு நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் கொன்டு செல்ல போவதில்லை அவரவர் நினைவுகளையாவது சுமந்து கொள்ளலாம் . அழைப்பின் வரிசையில் எல்லோரும் ............................................ யாழ் நண்பர்கள் அனைவரும் நலமாக இருங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். J.Rajah
  3. அவர் செய்தது சரியா தப்பா ........! 😂
  4. எம்ஜிஆர் நடித்த படங்களில் எப்போதும் ஒரு இனிமையான மெலோடி பாடல் இடம்பெறும். எம்ஜிஆரின் இந்தப் பாணியை இயக்குனர் எஸ்.சங்கரும் தனது படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். எம்ஜிஆர் படங்களின் மெலோடி பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா, பி.பி.சிறீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,கே.ஜே.யேசுதாஸ் போன்ற மென்மையான குரலுடைய பாடகர்களை அவர் பயன்படுத்தினார். சில சமயங்களில் ரி.எம்.எஸ். பாடியபோது, பெண் குரலுக்கு எஸ்.ஜானகியை இணைத்திருப்பார். அறுபதுகளில் எம்ஜிஆர் பட பிரபல மெலோடி பாடல்கள் என, குலேபகாவலி – ஏ.எம்.ராஜா& ஜிக்கி பாடிய "மயக்கும் மாலை பொழுதே நீ போ..." மஹாதேவி – ஏ.எம்.ராஜா & சுசீலா பாடிய "கண்மூடும் வேளையிலும் கலை என்ன…" திருடாதே – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம்..." பாசம் – பி.பி.சிறீனிவாஸ் & சுசீலா பாடிய "பால் வண்ணம் பருவம் கண்டு..." என்று பலதை சொல்லிக் கொள்ளலாம். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் வர்ணத்திரைப்படமாக வெளியான படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" ஆகும். அந்தப் படத்தின் "மாசிலா உண்மைக் காதலே" பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வண்ணப் படத்தின் பாடல் காட்சி இங்கே கறுப்பு வெள்ளையில் வந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த இந்தப் பாடல், அன்றைய காதலர்களை கட்டிப்போட்ட இனிமையான மெலோடியாக இருந்தது.
  5. அததெரண கருத்துப்படம்
  6. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனமே அல்ல, இனம் என்பதன் வரைவிலக்கணத்தை தளர்த்த்தினால் கூட. சுன்னி, மற்றும் ஷியா என்பவை மதங்கள். அதனால் தான் அரபு, மற்றும் பெர்சியன் (ஈரான்) என்ற இனக்குழுமங்களை தாண்டி வேறு பல இனங்களுக்கும் இஸ்லாம் பரவ்வி உள்ளது, கிறிஸ்தவம் போல. பாகிஸ்தானில் முஸ்லீம் என்ற இனம் இல்லை, புஞ்சபி என்பதே பெரும்பான்மை இனம், அடுத்து பாஸ்துன் இனம். இப்படியே, இஸ்லாம் மதத்தை தழுவிய நாடுகளில் எல்லாம். மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேசியாவில் கூட முஸ்லீம் என்ற இனம் இல்லை, ஜவனீஸ் என்பதே வீதாசாரத்தில் மிகப் பெரிய இனம் இந்தோனேசியாவில். இலங்கை முஸ்லிம்கலில் மிகச்சிறிதளவு அரபு கலப்பு இருக்கிறது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் அரபு கலப்பை விட கூடியளவு கலப்பு பாகிஸ்தானில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் இருகிறது . குறிப்பாக கேரளாவில் மாப்பிளை முஸ்லிம்கள் என்ற (அரபு கலப்பு தோற்றப் ) பிரிவு கேரளா முஸ்லிம்களில் இருக்கிறது. இவர்கள் எல்லோருமே (தாய் வழி) இனத்தையே அவர்களின் இனமாக அடையாளப்படுத்துவது. ஆகவே, இலங்கை முஸ்லிம்களை அரேபியர் என்ற இனக்குழுமமாக அடையாளப்படுத்தாது. இலங்கையில் மலேயே வழித்தோன்றல் முஸ்லிகளும் இருக்கிறார்கள், அப்போது ஏன் இலங்கை முஸ்லிம்களை மலேயர் என்ற இனக்குழுமமாக அடையாளப்டுத்த முடியாது என்ற கேள்வியும் எழுகிறது. இலங்கை முஸ்லிம்கள் சொல்வது போல அடையாளப்டுத்தினால், சிங்களவர் ஐரோப்பியர் என்ற அடையாளம் வரும். மலையாகத் தமிழர் என்ற அடையாளம் சமூக அடையாளமே தவிர, இன அடையாளம் அல்ல. இலங்கை முஸ்லிம்களின் புரட்டு வாதம் எந்தவொரு தர்க்கம், விஞ்ஞான, மற்றும் மானிட, தொல்லியல், வரலாற்று அடிப்படைகளில் நின்று பிடிக்காது.
  7. அஜீவன், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் இருந்தவர். மறைந்த நடிகர் முரளியின் நண்பன். யாழ் இணையத்தில்தான் அவருடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது. சஞ்சீவ்காந்துடன் (இளைஞன்) என்னையும் என் மனைவியையும் சந்திப்பதற்காக ஒருதடவை யேர்மனிக்கு வந்திருந்தார். பழகுவதற்கு இனியவர். குறும்படங்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஐரோப்பாவில், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளில் எம்மவர்கள் குறும்படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தயாரிப்புகளில் அஜீவனின் குறும்படங்கள் தனித்துவமானவை. அவை புலம்பெயர் வாழ்க்கையை அழகாக வடிவமைத்ததும், திரைப்படக் கலைஞராக அவரது திறமையை வெளிப்படுத்தியதும் உண்மை. அஜீவனின் திறமையும், திரைத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களும், அவர் எளிதில் ஈழத்துக்கான சினிமாவில் ஒரு உயர்ந்த நிலையை அடையக் கூடியவையாக இருந்தன. ஆனால், அதற்காக அஜீவன் மிகுந்த முயற்சி எடுக்கவில்லை. அவரின் அரசியல் தொடர்புகள், தனிமை, பொருளாதாரச் சிக்கல்கள், ஊக்கம் தராத நண்பர்கள் போன்றவை அதற்கான காரணங்களாக இருந்திருக்க வேண்டும். ஒரு திறமையான கலைஞனை இழந்திருக்கின்றோம். வாழும் போதெல்லாம் அவரின் திறமையை ப் பெரிதும் பாராட்டாமலும், மதிக்காமலும் இருந்துள்ளோம். அது தான் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவமானமாக இருக்கக்கூடிய ஒரு நிலை. அஜீவனின் எச்சில் போர்வை குறும்படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் (யாழ் இணையம் 27.09.2003) சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை. ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன. லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும், தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன். ஒரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமராப் பார்வை. கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை. யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது. முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை. கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே. புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா? அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.
  8. குறள் எண்: 891 குறள் எண்: 236 குறள் எண்: 1271 மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos
  9. மிகவும் "நம்பக் கூடியதாகத்" தான் இருக்கிறது😎: என்ரெறோமிக்ஸ் (Enteromix) என்ற இந்த "தடுப்பூசி" புற்று நோய்க்கெதிராக 100% விளைவைக் காட்டியிருக்கிறதாம். இந்த "100%" என்பதே தகவலின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது. இவ்வளவு வினைத்திறனான புற்று நோய்த் தடுப்பூசியின் ஆய்வு முடிவுகளை, எந்தவொரு விஞ்ஞான சஞ்சிகையிலும் பிரசுரிக்காமல் Eastern Economic Forum என்ற வர்த்தகக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்! புரின் புரியன்மார் , ரஷ்ய விசிறிகள் யாவரும்- உண்மையிலேயே அவர்கள் அப்படியாக இருந்தால் - வரிசையில் முன்னுக்குப் போய் நின்று இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேணும்! செய்வார்களா😇?
  10. ரசியாவுக்கு தடைவிதித்த நாடுகள் விரிசையில் போய் நிற்கப் போகிறார்களே?
  11. @தமிழ் சிறி உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறார். நல்ல விடயம் .இதே மாதிரி மற்றைய இடங்களிலும் திறக்க வேண்டும்.
  12. இருட்டுக்குப் பயந்தால் தூங்க முடியாது கஷ்டத்துக்கு பயந்தால் வாழ முடியாது. உழைக்க பயந்தால் வாழ முடியாது. வாழக் கற்றுக் கொள் வாழ்க்கை ஒரு முறைதான் வாய்ப்பு தரும். ஒரு காலத்தில் என் பிள்ளைகள் கூட தனியே நடக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் என் மனைவி என் கை பிடித்து தான் நடக்க ஆசைப்படுகிறாள். காடு மலை தாண்டி ஆவது கல்வி கற்று விடு. கட்டியவன் கை விடடாலும் நாம் கற்றுக்கொண்ட கல்வி ஒருபோதும் நம்மைக் கைவிடாது. எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் " நீ நல்லாய் இருப்பாய் ""என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்போடு ஓடச் செய்கிறது உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்கும் வரை அதன் அருமை தெரியாது .எப்போது பழுதடைந்து போகிறதோ அப்போது தான். அதனருமை பெருமை புரியும் . வாழ்க்கை சற்று கடினமான தேர்வு தான் பலர் அதில் தோல்வியுற காரணம் ,அவரவர்க்கு தனித்தனி கேள்வித்தாள் என அறியாது பிறரைப் பார்த்து நகலெடுப்பது தான் சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கி கொண்டு நம்மை எழுந்து நடமாட வைக்கும். நம் மனம் தான் சிறந்த நண்பன். உதவிக்கு யாரும் இல்லை எண்ணாதே.தைரியமாய் போராடு உதவிக்கு நான் இருக்கிறேன் .இப்படிக்கு தன்னம்பிக்கை அனைத்தும் ஒரு நாள் கடந்து போகும் எனக் காத்திருந்தேன் . ஆனால் எதுவும் கடந்து போகாது பழகிப்போகும் என உணர்த்தி விட்டது காலம். காலத்துக்கேற்ப மாறவில்லை என்றால் அதுவாகவே நம்மை மாற்றி விடும்.
  13. ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் அவதானியுமான நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை பாராட்டியபோது இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு அக்கறை காட்டாமல் இருந்தார்களோ தெரியவில்லை. அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது. பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக கூறமுடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன் மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. “இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது. “அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார். கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா செய்த உடன்படிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது. இத்தகைய பின்புலத்தில் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். “இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார். இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும் அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை. கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை, மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட, மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில் அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத உணர்ச்சிகளை தூண்டிவிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதாக தெரிகிறது. வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும் ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர். கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை. காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக கச்சதீவு உடன்படிக்கை பற்றி மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி கச்சதீவு விவகாரத்தை மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது. திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். https://arangamnews.com/?p=12304
  14. அந்த ஆன்மிகவாதியின் பெயர் என்ன? ஆறுதிருமுருகனா?
  15. ஹோசி மின்னுக்கும் / வியட்னாமுக்கும் , சேலன்ஸ்கிக்கும் / உக்ரைனுக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி. வியட்னாம் ஐ எந்த கூட்டோடும் இணைப்பதற்கு ஹோசி மின் ஓ அவருக்கு பின் வியட்நாமோ முற்படவில்லை. அது தன வியட்நாமின் போராட்டம் சுதந்திர போராட்டமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சேலன்ஸ்கி நேட்டோவில் இணையும் போராட்டமாக உக்கிரைன் இன் ரசிய எதிர்ப்பை வழிநடத்துகிறார். இதனால் தான் மேற்கு அல்லாத அநேகமான எல்லா நாடுகளும் உக்கிரேனுக்கு ஆதரவு இல்லை.
  16. அததெரண கருத்துப்படங்கள்
  17. அஜீவன் அண்ணாவுடன் யாழ்கள உறுப்பினர்களின் சந்திப்பு பற்றிய திரி
  18. மாசில்லா உண்மைக்கு காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே பேசும் வார்த்தை உண்மை தான பேதையை ஏய்க நீங்கள்போடும் வேஷமா நான் சின்னாக இருக்கும் போது என் தந்தை விடுமுறைக்கு வந்தால் கொஞ்சம்" கள்" அடிப்பார் ..அம்மாவுடன் செல்ல சண்டைபோட்டு இதை பாடுவார் இரண்டுமூன்று வரிகள்தான் ...நினைவில் வந்து போனது இருவரும் பரலோகம் போய்விடடார்கள் .
  19. உக்கிரேனின் முக்கிய எண்ணெய் வழ்ங்குனர்களான கிரீஸ் மற்றும் துருக்கியினையும் விட ஸ்லோவாக்கியாவின் உக்கிரேனிற்கான எண்ணெய் வழங்கல் அதிகம், அண்மையில் ட்ருஸ்பா குழாயினை உக்கிரேன் தாக்கி அழித்தது அது கங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு இரஸ்சியாவில் இருந்து எண்ணெயினை எடுத்து செல்கிறது. இந்த தாக்குதல் மூலம் உக்கிரேனும் பாதிப்புள்ளாகின்றது எனும் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதானது எனும் எனது சந்தேகம் வலுக்கிறது என கருதுகிறேன். இந்தியாவும் இன்னபிற நாடுகளும் தமது இரஸ்சிய எண்ணெயினை உக்கிரேன் வாங்குவதனை கூறுவதில்லை, ஆனால் தமக்கு எதிராக களம் திரும்பும் போது உண்மைகளை வெளியே கூறுகிறார்கள், ஒவ்வொரு விடயங்களிலும் ஒன்று அல்ல பல பக்கங்கள் உள்ளது, ஆனால் எழுத்து சுதந்திரம் உள்ளதாக கூறப்படும் இக்கால கட்டத்திலேயே பல உண்மைகள் தெரிவதில்லை, கட்டமைக்கப்படும் பொய்களே வரலாறாகின்றன, அல்லது வரலாற்றின் பக்கத்திலிருந்து சில பக்கங்கள் இல்லாமலாக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜேர்மன் ஜப்பான் தமது சொந்த இராணுவத்தினை கட்டியமைப்பது தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறிய நாடுகளே தற்போது உக்கிரேனை இராணுவ ரீதியாக பெரிய இராணுவமாக கட்டமைப்பதற்கு இரஸ்சியாவிடம் அனுமதி ஏன் எதிர்பார்க்கவேண்டும் என கூறுகிறார்கள். உலகின் ஒரு பெரிய போரினை ஆரம்பிப்பதற்காக அது நிகழ்த்தப்படுகின்றது, இது ஒரு முட்டாள்த்தனம்.
  20. பளு வீரன் – தீபச்செல்வன் 01 நகரில் மூண்ட சமர் நின்ற வேளையில் கடிகாரமும் நின்றுபோயிருக்க வேண்டும். அதன் முட்கள் பன்னிரண்டைக் காட்டின. தூரத்தில் நடந்து வரும் சத்தியனைப் பார்த்தது நேரத்தின் எண்கள் உடைந்த கடிகாரம். காலம் உடைந்து போனதின் சித்திரமாக உருக்குலைந்த அதன் முட்கள் நெளிந்தழைப்பதைப் போலிருந்தன அவனுக்கு. எறிகணைகள் நுழைந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் காயமிட்டும் இருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் சுவர்களில் யாழ் நகரின் வெளுத்த முகம் தெரிந்தது. கோபுரத்திற்கு அண்மையாய் நடந்தவன், நிமிர்ந்து அதன் சுவர்களைப் பார்த்தான். போரின் தழும்புகள் அதன் உடல் முழுதும் சித்திரமாயிருந்தன. விதவிதமான முகங்கள். அத்தனையிலும் காயங்களும் தழும்புகளும். பெயர்ந்தலையும் சனங்களும் பதுங்கியிருக்கும் போராளியின் ஒளிமிகுந்த கண்களும் தெரிந்தன. வெடித்துவிட்ட எறிகணைகளின் வெற்றுக் கோதுகளும் கைவிடப்பட்ட பொதிகளும் அறுந்த செருப்புகளுமாய் அச் சித்திரம் அவனை அலைக்கழித்தது. யாழ் மத்திய கல்லூரியின் முதல் மணி ஒலிக்கவும் கவனம் பள்ளிக்கூட திசை நோக்கிற்று. பள்ளிக்குச் செல்வதற்காக யாழ் நூலக வீதியில் மெல்லக் காலடிகளை வைத்தான். பற்றை மண்டியிருந்தது யாழ் நூலக வளாகம். இன்னும் நெருப்பு யாழ் நூலக சுவர்களில் கனல்வதைப் போலிருந்தது அவனுக்கு. எரிந்த புத்தகங்களின் சாம்பல் நாசியில் மணந்தது. ‘பத்து வருசமும் ஆயிற்றுது… இன்னும் தீயின் வெம்மை குறையேல்லை’ சிவந்து கசியுமவன் கண்களில் இயலாமையின் அனல் வீசிற்று. கரிப்பிடித்த கூரையில் வௌவால்கள் தலை கீழாய்த் தூங்கின எறிகணை வீச்சு துளைத்த விழுந்த ஓட்டையில் அமர்ந்திருந்த கருங்குயிலொன்று பெருந்தாகத்துடன் கூவியது. போரின் தழும்புகளால் நூலகத்தின் மேனி துடிதுடிப்பதைப் போலிருந்தது. கோயிலைப் போலிருந்த ஒரு நாளில் தான் புத்தகங்களை எடுக்கப் போயிருந்த வேளையில், வரலாற்றையும் கதைகளையும் தட்டுகள் முழுக்க நிரப்பியிருந்த புத்தகங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் எப்படி நோவுடன் எரிந்து போயிருக்கும் என்பதை நினைக்க இவனுடல் நடுங்கிற்று. மூதாதையர்களின் ஓலைச்சுவடிகளில் இருந்த தொன்மை நெருப்பில் எரிந்து சாம்பலாகும்போது எப்படி வாதையில் துடித்திருக்கும் என்பதை நினைக்க இவன் மனதில் தீக்கொழுந்து பரவியெரிந்தது. பள்ளிக்கூட வீதியில் நடந்தான். வாசலில் இருந்த வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்டு வாசல் பணிகளைக் கவனிக்கத் துவங்கினான். பிள்ளைகள் பள்ளியை நோக்கிக் குவியத் தொடங்கினர். “மணிமாறன்…. ஏன் இண்டைக்கு சூ போடேல்லை?…” “…” “அப்பு… இஞ்ச நில்லு… சேட்டை வடிவாய் உள்ளுக்கை விடு…” “…” “மருதன்… உதென்ன தலைவளப்பு?…” “…” “நாளைக்கு வரேக்குள்ளை தலைமுடி வெட்டியிருக்க வேணும்… சரியோ!” மோட்டார் வண்டியை தணித்தபடி அதிபர் வந்திறங்கவும் “வணக்கர் சேர்..” சத்தியன் வரவேற்றான். “உமக்கு வன்னிக்கு ட்ரான்ஸர் வந்திருக்குது… கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்… கடிதத்தை வந்து எடும்…” அதிபர் தன் பையைத் தூக்கியபடி நடந்தார். பள்ளியின் அடுத்த மணி ஒலித்தது. “…கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.” ஆண் பிள்ளைகளின் குரலில் ஒலித்த தேவாரத்தின் சுரம் சத்தியனின் மனதில் படர்ந்திற்று. மாணவர்கள் வகுப்பறைகளை நோக்கி நகர, பின்னால் நடந்தான் சத்தியன். 02 “நேற்று நிலமையள் எப்பிடி சேர்… எட்டு லட்சம் யாழ்ப்பாண சனங்களும் உயிரைப் பணயம் வைச்சு கிளாலியாலை போய் வர வேண்டிக் கிடக்குது என்ன?… ஆனையிறவு பாதை திறக்கிற நேரம் தான் கிளாலி படுகொலையளுக்கு முடிவு வரும்… நீங்கள் கையெழுத்தைப் போடுங்கோ சேர்…” பாடசாலை சம்பவத் திரட்டு புத்தகத்தில் சத்தியனின் வருகையை சோதிநாதன் அதிபர் பதிவு செய்தார். சத்தியன் வருகை ஏட்டில் ஒப்பமிட்டான். “நியமனமாகி இரண்டு வருசமாக்கும்… தமிழ் படிப்பிக்கிறதிலை நீங்கள் வலு கெட்டிக்காரனாம்… கேள்விப்பட்டன்… இளம் பெடியன் தானே.. ஓ.எல். பிள்ளையளுக்கு தமிழ் எடுங்கோ… வகுப்பாசிரியரும் நீங்கள்தான்…” கைகளைக் கொடுக்கவும் சத்தியன் வகுப்பறையைத் தேடி நடக்கத் துவங்கினான். நீண்ட இரண்டடுக்கு மாடியால் நிமிர்ந்திருந்த பள்ளியின் பெருமிதத்தைக் கவனித்துக் கொண்டே நடந்தான். சத்தியன் வரவும் மாணவர்கள் எழுந்து வணக்கம் செய்தனர். மேசையில் புத்தகங்களை வைத்துவிட்டு மாணவர்களை ஒவ்வொருவராகப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தான் சத்தியன். “அட மருதன்… நீ எப்பயடா இஞ்ச வந்தனீ…” அவன் தலையைக் குனிந்து கொண்டான். நல்லாய் நெடுத்த அவனின் தலை மாணவர்களிடையே உயரத் தெரிந்தது. உயர்ந்த தோள்களும் கருமை படர்ந்த தேகத்தில் வெண்ணுடை மினுங்கியது. சத்தியன் நெருங்கி வந்தான். பிடரி வரை வளர்ந்து போயிருந்தது தலைமுடி. “அங்கையும் சொன்னான்.. இப்ப இஞ்சையும் சொல்லுறன்.. நாளைக்குப் பள்ளிக்கூடம் வரேக்கை தலைமுடிய வெட்டியிருக்க வேணும்…” சத்தியன் விரல்களை நீட்டி எச்சரித்தான். மருதன் தலையைக் குனிய, அவன் கைகள் புத்தகமொன்றின் பக்கங்களைப் புரட்டின. நிமிர்ந்து சத்தியனைப் பார்த்து சிரித்தபடி ஆமோதித்தான். “பிள்யைள்… சீதமதி குடைக்கீழ் செம்மை அறம்கிடப்பத், தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்.. என்ற பாடலிலை நளனின்ரை ஆட்சிச் சிறப்பை புகழேந்திப் புலவர் நல்ல வடிவாய் சொல்லியிருக்கிறார்… விளங்கிச்சோ?…” குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள். சத்தியன் ஒவ்வொருவராக நெருங்கி வந்து எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தலையைக் குனிந்திருந்த மருதனின் அருகில் வந்து நின்றான். அவன் குறிப்பேட்டில் கையெழுத்து முத்துமுத்தாய் மினுங்கிற்று. “அச்சடிச்ச மாதிரி எவ்வளவு வடிவாய் இருக்குது உன்ரை கையெழுத்தெடாப்பா…” மருதனின் தலைமுடியைக் காணவும் சத்தியனின் முகம் மாறியது. “நானும் இரண்டு மாதமாய் தலை முடி வெட்டச் சொல்லுறன்…” “…” “நீ சொல்வழி கேட்கிற மாதிரி தெரியேல்லை..” “…” “வெளியிலை போய் நில்லு…” “…” “தலைமுடியை வெட்டிப் போட்டு வகுப்புக்குள்ளை வா…” எழுந்து பதிலற்று நின்றான் மருதன். “கெதியிலை வெளியிலை போ…” சத்தியன் சத்தமிடவும் தன் புத்தகங்களை எடுத்தபடி நடந்தான் மருதன். வெளியில் சென்று நிற்க வகுப்பில் பாடம் தொடர்ந்தது. மருதன் வெளியில் நின்றபடி தன் குறிப்பேட்டைச் சுவரில் வைத்து எழுதத் துவங்கினான். வகுப்புக்கு வந்த சத்தியன் முதல் ஆளாய் மருதனைத் தேடினான். அவன் தலைமுடி இன்னமும் நீண்டு வளர்ந்திருந்தது. சத்தியனுக்குக் கொதி உச்சத்தில் ஏறியது. வெண்கட்டியை தூக்கி எறிந்தான். மருதனுக்கு கிட்டவாக வரவும், அவன் எழுந்து கொண்டான். “நாலு மாதமாய் தலைமுடிய வெட்டச் சொல்லி நானும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன்… நீயோ சொல்வழி கேக்கிறேல்லை எண்டு சரியான பிடிவாதமாய் தான் நிக்கிறாய் என…” “…” “இவர் என்ன சொல்லுறது… நான் என்ன கேக்கிறது… அப்பிடித்தானே என்ன மருதன்?…” மருதன் மறுத்துத் தலையசைத்தான். சத்தியன் கோபத்தைத் தணித்தான். “அப்ப ஏன் தலைமுடி வெட்டேல்லை…?” சத்தியன் அமைதியாய் மருதனைப் பார்த்தான். தோலுடைந்து விழும் மாதுளை முத்துக்களாய் மருதனின் உதடுகள் பிரிந்து விழுந்தன சில வார்த்தைகள். “காரணம் இருக்குது சேர்…” பறவையைப் போன்ற அவன் கண்களொரு தாகத்துடன் அசைந்தன. சத்தியன் சுற்றியிருந்த மாணவர்களைப் பார்த்தான். “வெளிக்கிடு… அதிபரிட்டை கொண்டேய் விடுறன்… இண்டைக்கு இதுக்கொரு முடிவு கட்டுறன்… வெளிக்கிடு…” மீள தலையைக் குனிந்து கொண்டான் மருதன். “வா அதிபரின்ரை ஒப்பீசுக்கு…” மருதனை எழுப்பிக் கொண்டு நடந்தான் சத்தியன். “சேர் இவன் தலைமுடி வெட்டுற மாதிரி தெரியேல்லை… நானும் நெடுகச் சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போட்டன்… நாலு மாதம் ஆகிட்டுது… யாழ்ப்பாணத்திலை இருந்து தலைமுடியை வெட்டச் சொல்லி நானும் மண்டாடிக் கொண்டிருக்கிறன்… இவனும் கேக்கிற மாதிரி தெரியேல்லை… இது பெரிய கரச்சலாய்க் கிடக்குது… இண்டைக்கு எனகொரு முடிவு தெரிய வேணும் சேர்… இல்லாட்டில் உந்த வகுப்புக்குள்ளை நான் போகன்…” சத்தியன் கொந்தளித்தான். “முதலிலை… கொஞ்சம் அமைதியாய் இரும் சத்தியன்…” அதிபர் அமைதியாகச் சொல்லியபடி புன்னகைத்தார். சத்தியனுக்கு இன்னும் சினமேறியது. “அப்பு மருதன் நீ வெளியிலை அந்தக் கதிரையிலை இரு…” அலுவலகத்திற்கு வெளியில் அடுக்கியிருந்த கதிரையொன்றில் அமர்ந்து கொண்டான் மருதன். “சத்தியன் சில பிள்ளையளின்ரை குடும்ப பின்னணியலை பார்க்க வேணும்… அதைப் போல வேற ஏதாவது காரணங்களும் பின்னணிகளும் அவங்களுக்கு இருக்கும்…. அதையும் நாங்கள் சரியாய் அறிய வேணும்… அவன் தலைமுடி வளக்கிறான் தான்.. ஆனால் குழப்படியள் ஏதும் செய்யிறவனே.. இல்லைத்தானே… அவன் நல்ல பிள்ளை… நீர் ஒரு கொஞ்சக் காலம் அமைதியாய் இரும்.. பிறகு பாப்பம்… பிறகு தெரியும்… இப்ப வகுப்புக்கு போங்கோ…” “சேர் நீங்களும் அவனுக்கு நல்லாய் இடம் குடுக்கிறியள்… கடைசியிலை அவனை காவாளி ஆக்கப் போறியள்…” சத்தியன் எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தான். “மருதன், இப்ப உனக்கு நல்ல புளுகு தானே? நீ என்னெண்டாலும் செய்.. நல்லது சொன்னால் உங்களுக்கு உபத்திரமாய்த்தான் கிடக்கும்… இனிமேல் நான் உன்னைத் தலைமுடி வெட்டச் சொல்லிக் கேக்க மாட்டன்… நீ நல்லா தலைமுடியை வள…” மருதனைப் பார்த்துக் கையை விரித்தபடி நடந்தான் சத்தியன். “சேர்… சேர்…” பின்னால் துரத்திக் கொண்டே வந்தான் மருதன். “சேர்… கோவப்படாதையுங்கோ…” “…” “ஒரு லட்சியத்திற்காகத்தான் வளக்கிறன் சேர்..” சத்தியனுக்கு சினம் மிகுந்திற்று. “விசர்க் கதை பறையாதை…” “…” “மயிரை வளக்கிறதிலை என்னடா லட்சியம்…” கத்தியபடி சத்தியன் அடியதிர நடந்தான். தலையைக் குனிந்தபடி நின்றான் மருதன். பள்ளி மணி ஒலித்தது. மணியின் அதிர்வு ஆலாபனையாய் ஒலித்தடங்கியது. சத்தியன் அங்குமிங்கும் நடந்தான். மருதன் இருந்த இருக்கை வெற்றிடமாய் இருந்தது. வெண்கட்டியை எடுத்து ‘இலங்கை வளம்’ பாடலை கரும்பலகையில் எழுதினான். கைகள் தடுமாறின. வெண்கட்டி உடைந்து விழுந்தது. “பிள்ளையள், பாட்டை எழுதிப்போட்டு எல்லாரும் பாடமாக்குங்கோ… நான் ஒருக்கால் ஒப்பீஸ் போயிற்று வாறன்..” என்றபடி அதிபர் அலுவலகத்தை நோக்கி பதறியபடி நடந்தான் சத்தியன். “சேர் இன்றையோடை பத்து நாள் ஆகிற்று.. மருதன் வரேல்லை… நான் பேசினதுதான் அவனுக்கு மனக்கசப்போ தெரியேல்லை… படிக்கக்கூடிய பெடியன் சேர்… நான் ஒருக்கால் அவன்ரை வீட்டை போய் பாத்திட்டு வரவே…” அதிபர் பதற்றமாயிருந்த சத்தியனை வடிவாய் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் அனுமதிக்கவும், பதிவேட்டில் இருந்த அவன் முகவரியைக் குறித்துப் பொக்கற்றில் சொருகினான். சைக்கிளை ஏ-9 தெருவில் விட்டான். முன்பக்கத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் தலைவர் பிரபாகரன். “தமிழர் பிரச்சினைக்கு பிரேமதாசா அரசின் தீர்வு என்ன?” கேள்வியுடன் புத்தகக் கடையொன்றில் தொங்கின விடுதலைப் புலிகள் ஏடு. தொங்கும் பத்திரிகையைப் பார்த்தபடி நின்ற மாணவனைப் பார்க்க மருதனைப் போலிருக்கவும், கடையின் முன்னால் சைக்கிளை நிறுத்தினான் சத்தியன். “மருதன்!…” மெல்ல அவன் தோள்களைத் தட்டினான். அவன் விழிபிதுங்கியபடி திரும்பினான். “பின்னாலை பாக்க என்ரை மாணவன் மருதன் மாதிரிக் கிடந்தது… அதான் அப்பு..” சத்தியன் மீண்டும் சைக்கிளை எடுத்து மிதித்தான். வழிநெடுக அவன் கண்கள் மருதனைத் தேடின. குன்றும் குழியும் விழுந்த தெருவில் சைக்கிள் விழுந்தெழும்பித் திணறியது. அவனோ பெடல்களை வேகமாக மிதித்தான். படலையடியில் நின்று எட்டிப் பார்த்தான் சத்தியன். ஓலையால் தாழ்வாரம் பணிய வேய்ந்த குடிசை. அவன் கண்கள் வீட்டு முற்றத்தை நோக்கிச் சுழன்றன. ‘இது தான் வீடாக இருக்க வேணும்’ சைக்கிளை விட்டிறங்கினான். “அப்பு மருதன்… மருதன்…” குரல்கொடுத்துப் பார்த்தான். ‘சிலமினில்லை.. உள்ளுக்கை போய் பாப்பம்…’ படலையைத் திறந்து நடந்தான். ஒரு பக்கத்தில் பனையோலைப் பாயில் பினாட்டை பிரட்டி காய வைத்துக் கொண்டிருந்தாள் ஒரு ஆச்சி. கிட்டவாகச் சென்ற சத்தியன் ஆச்சியின் அருகில் குந்தினான். “ஆச்சி இதே மருதனின்ரை வீடு…” “…” “அவர் ஏன் பள்ளிக்கூடம் வரேல்லை…” “…” “நான் அவரின்ரை மாஸ்டர்…” “…” “அதான் தேடி வந்தனான்…” அவள் எழுந்தாள். சத்தியனும் எழுந்து கொண்டான். கண்களை கூர்ந்து இடக்கையை நெற்றியில் வைத்து வெயிலை மறைத்தபடி இவனைப் பார்த்தாள். “உந்தத் திண்ணையிலை இருங்கோ…” உள்ளே சென்று பித்தளைச் செம்பொன்றில் தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள். சத்தியன் குடிசையை எட்டிப் பார்த்தான். ‘மருதனை வீட்டுக்கையும் காணேல்லை..’ சத்தியன் பரபரத்தான். மருதனின் பாடசாலைக் காலணிகள் இரண்டும் ஒருசேர திண்ணையின் சுவர்க்கரையோரமாக முன் பக்கம் உயர்த்திச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. ஆச்சியின் முகத்தை பார்த்துப் பதிலுக்குக் காத்திருந்தான் சத்தியன். “தம்பி…” “…” “அவன்…” “…” “இயக்கத்துக்கு…” “…” “போயிற்றான்….” “…” “அப்பு…” சத்தியன் அதிர்ந்தபடி எழுந்தான். முகம் வியர்த்தது. கண்கள் கலங்கிக் காரணத்தை தேடி அதிர்ந்தன. எழும்பிய அதே வேகத்தில் மீண்டும் அமர்ந்தான் திண்ணையில். “நானும் அவனைப் பேசிப்போட்டன்…” “…” “அதாலைதான் இயக்கத்துக்குப் போட்டானோ?” “…” “பள்ளிக்கூடம் பக்கம் காணேல்லை எண்டு மனம் கேக்காமல்தான் வந்தனான் ஆச்சி…” சத்தியனின் முகத்தில் பதற்றம் விளைந்தது. “நீங்கள் அப்பிடி நினைக்காதேங்கோ தம்பி…” “…” “அவனுக்கு உங்களிலை நல்ல மரியாதையும் விருப்பமும்..” “…” “சேர் நல்லவர்…” “…” “நல்லா வழிப்படுத்துறவர் எண்டு தான் நெடுகப் பறைவான்…” “…” “எனக்கவன் பேரன்… தேப்பன் யாழ் நூலகத்திலை வேலை செஞ்வன்… பியோன்தான். யாழ் நூலகம் எரிச்சதோடை அவனுக்கு மனநிலையே ஒரு மாதிரிப் போட்டுது… பிறகு நஞ்சைக் குடிச்சுப் போட்டு செத்துப் போயிற்றான்… பிள்ளைக்கு அதுதான் பெரிய தாக்கம்… அவன் இயக்கத்துக்குப் போறதுக்குத்தான் இஞ்ச வந்தவன்…” அவள் சுருண்ட சேலைத் தலைப்பால் கன்னங்களைத் துடைத்தாள். மருதன் இல்லாத வீடு வெளித்திருந்தது. மெல்ல எழும்பி நடந்தாள். கொடியில் உலர்ந்து அசைந்தன அவன் சட்டைகள். போயதை எடுத்து முத்தமிட்டு விசும்பினாள் ஆச்சி. ஒடுங்கிய விரல்களால் கண்களைத் துடைக்குமவளை வணங்கிய சத்தியன் படலையை நோக்கி நடக்கத் துவங்கினான். 03 சத்தியனின் சைக்கிள் முரசுமோட்டைச் சந்தியால் திரும்பி ஊரியான் வீதியில் மிதந்தது. யாரையோ வரவேற்பதைப் போலிருந்தன நெல்லுப் பூத்த வயல்களின் சிரிப்பு. வேலிக்கரையாய் பூவரசுகளும் பூத்துக் குதுகலித்தன. காற்றில் சடசடவெனப் பறந்தது வயல் காக்கும் வெள்ளைக் கொடி. ஊரியான் சந்தி கடக்கத் துவங்கும் பற்றைக் காடுகளில் படர்ந்து பூத்திருந்தன காந்தள்கள். போராளி அணியொன்று உருமறைப்பு செய்தபடி வீதியைக் குறுக்கறுத்து நகர்ந்தது. தேசக்கனவுடன் சீர்மையாக நகரும் போராளிகளின் வரிசை அவன் மனமெங்கும் கனவைப் பூக்கச் செய்திற்று. சத்தியனுக்குக் கைகளைக் காட்டுமொரு போராளியின் முகத்தில் கறுப்புக் கோடுகள். தலையில் துணித் தொப்பி. அதனையும் மூடி இலைகுழைகளால் உருமறுப்பு செய்யப்பட்டிருந்தது. நகர்ந்து கொண்டிருந்தவன், சட்டெனத் தரித்து நின்றான். சத்தியனைப் பார்த்தான். அவனை நெருங்கி வந்தான் அந்தப் போராளி. சத்தியன் சைக்கிளை மெதுவாக நிறுத்தி பிறேக்கை அழுத்திப் பிடித்தான். இவன் சைக்கிள் காண்டிலை பற்றிக் கொண்டான் அந்தப் போராளி. “சேர்….. எப்பிடி இருக்கிறியள்?…” அணுக்கமான அந்தக் குரல் அவன் மனதில் ஈரத்தைச் சுரக்கச் செய்திற்று. முகத்தை முடியிருந்த இலைகுலைகளை விலக்கினான். “நான் மருதன் சேர்…” சத்தியன் தடுமாறியபடி சைக்கிளை விட்டிறங்கினான். ஸ்டான்டைப் போட்டு சைக்கிளை நிறுத்தினான். அவனேதான். வார்த்தைகள் வர மறுத்தன. பருத்து அகன்ற அவன் தோள்களைத் தொட்டுத் தழுவினான். பரந்து விரிந்த நெஞ்சு நிமிர்ந்திருந்தது. மீசை வளர்ந்து அடந்திருந்தது. அந்த வெண் சிரிப்புடன் சத்தியனை வணங்கினான் மருதன். “என்ரை ராசா… எப்பிடியடா இருக்கிறாய்?…” “…” “ஒரு வருசத்துக்கும் மேலாய் உன்னைத் தேடாத இடமில்லை…” “…” “வகுப்பிலை நீ இல்லாமல் பெரிய கவலையடாப்பா…” சத்தியனின் முகம் அதைத்து மலர்ந்தது. நெடுத்த அவனின் தலையை விட கூராய் நீண்டிருந்தது எல்எம்ஜி. குனிந்த அவன் தலையைத் தடவினான் சத்தியன். “நான் நல்லா இருக்கிறன் சேர்…” “…” “இந்த ரீமுக்கு நான்தான் பொறுப்பு…” மருதனின் கன்னங்களைத் தொட, பெருமிதத்தில் சத்தியனின் கண்கள் ஒளிர்ந்தன. “நல்லா பெரிய ஆளாய் வளந்திட்டாய் என்ன?…” மெல்ல அவன் உருமறைப்பு இலைகுழைகளை அவிழ்த்துத் தொப்பியை கழற்றினான். நீண்ட அவன் தலைமுடி பின்பக்கமாய் சுருண்டிருந்தது. “அட இஞ்சை பார்… இயக்கத்திலையும் உன்ன தலைமுடி வளர்க்க விட்டவங்களே…” சத்தியன் சிரித்தான். “எல்லாம் காரணமாய்தான் சேர்…” “…” “லட்சியத்தோடைதான் வளர்க்கிறன்…” மருதனின் கண்களின் ஒளி இன்னும் பிரகாசித்தது. அதை ஏற்றாற்போல தலையசைத்த சத்தியன், மளமளவென அருகில் இருந்த கடையை நோக்கி ஓடினான். தின் பண்டங்களை அள்ளி வாங்கினான். பிஸ்கற் பைக்கற்றுக்களை ஒரு பையில் போட்டான். அவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். “தம்பியாக்கள் வடிவா சாப்பிடுங்கோ…” “…” “இதுகளைக் கொண்டு போங்கோ…” போராளிகள் மருதனைச் சூழ்ந்து கொண்டனர். சிறுவர்களைப் போல அவற்றைப் பகிர்ந்துண்டு பகிடி விளையாடும் போராளிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சத்தியன். “ஒரு நாளைக்கு பொடியளோடை வீட்ட வா… நல்லாய்ச் சாப்பிட்டுப்போட்டுப் போகலாம்… உனக்கு ஒரு அண்ணாவை மாதிரி இந்த சேர் இருக்கிறன்…” எதற்கும் பணியாத மருதனின் கண்கள் அப்போதுதான் கலங்கின. நிமிர்ந்து வாஞ்சையுடன் சத்தியனைப் பார்த்தான். “சரி சேர்… நான் போயிற்று வாறன்…” கையைக் காட்டியபடி நகரத் துவங்கினான் மருதன். “அப்பு… ராசா… கவனமடா…” கத்தினான் சத்தியன். போராளி அணி, காட்டுக்குள் நுழைந்து மறைந்துவிட்ட பிறகும் நகராமல் தரித்தே நின்றது சத்தியனின் சைக்கிள். அசையாத காட்டின் மீது சூரியன் கவியத் தொடங்கியது. 04 ‘இரவிரவாய் ஆனையிறவுப் பக்கம் ஒரே சத்தம்… ஏதும் சண்டையோ தெரியேல்லை.. மருதன் இப்ப எங்கை நிக்கிறானோ…’ யோசனையுடன் ஈழநாதம் பத்திரிகையைக் கையில் எடுத்து விரித்தான் சத்தியன். ‘டிங்கிரி பண்டா விஜயதுங்கா மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை… அதனால் சனாதிபதி வேட்பாளராக காமினி அறிவிப்பு…’ தலைப்புச் செய்தியுடனிருந்த பத்திரிகையின் பக்கங்களை புரட்டினான் சத்தியன். “இலங்கைத் தலைநகரில் தமிழரின் சாதனை..” அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவன் கண்கள் நம்ப முடியாத திகைப்பில் உறைந்தன. திரும்பத் திரும்பப் பார்த்தான். சத்தியனின் விரல்கள் நடுங்கத் துவங்கின. கண்கள் ஒருமுறை இருண்டு வெளித்தன. அவன் தான். கொழும்பில் தலைமுடியில் பாரவூர்தி ஒன்றைக் கட்டி இழுக்கும் அவன் மருதன்தான். ஒரு பக்கம் முழுவதும் அவன் சாதனை குறித்த படங்களும் செய்தியும்தான். “பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…” ஊடகங்கள் சூழ்ந்திருக்கப் பேசும் அவனுடைய வெண்மையான சிரிப்பு பத்திரிகையின் பக்கங்களில் உதிராதிருந்தன. சத்தியனின் முகத்தில் பெருமிதம் பூத்தது. “என்னெண்டு கொழும்புக்குப் போனவன்…” “…” “இயக்கத்தை விட்டு விலத்திட்டானோ?” “…” “இல்லை இயக்கமாய்த்தான் போனவனோ..” “…” “அப்ப இதுக்குத்தான் முடி வளர்த்திருக்கிறான்…” “…” “பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…” “…” “அப்பிடி என்றால் இவன் என்னதான் செய்யப் போறான்…” கேள்விகள் தலையைக் குடையத் துவங்கின. பத்திரிகையின் பக்கங்களை மூடினான் சத்தியன். வகுப்பறையில் தலைகுனிந்திருந்த அவன் முகம் நினைவில் துருத்தியது. அவனின் முத்துமுத்தான கையெழுத்துக்கள் நினைவில் மிதந்தன. சத்தியனின் மனைவி வைத்துச் சென்ற தேநீர் ஆறிப்போயிருந்தது. திரும்பவும் பத்திரிகையைத் திறந்து பார்த்தான். “சேர்…” என்று அவனைப் பார்த்து அழைப்பதைப் போலவே இருந்தது மருதனின் வெண் சிரிப்பு. சத்தியனின் மனம் பெருமலையை சுமந்தாற்போலக் கனத்தது. 05 கொழும்பு நகரின் அந்த வீதி மூடப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் நகர்ந்தன. பவுத்த விகாரையில் பிரித் ஓதல் ஒலித்து மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. புத்தரின் முன்பாய் நிரம்பியிருக்கின்றன தாமரைகள். வீதியின் மதில்களெங்கும் கன்னத்தில் கைவைத்தபடி புன்னகைக்கும் காமினியின் படங்கள். பேருந்துகள் சனங்களைக் கொண்டுவந்து இறக்கின. ஒலி பெருக்கிகள் சரி செய்யப்பட்டு அதில் பரீட்சார்த்தக் குரல்கள் இடையிடை ஒலித்தன. சனக்கூட்டம் திரளத் துவங்கியது. தேர்தல் பிரசாரப் பாட்டுக்கு சிலர் ஆடிக் கொண்டிருந்தனர். “இதோ இலங்கையின் அடுத்த சனாதிபதி வருகிறார்…” ஒலிபெருக்கி மகிழ்ந்தறிவிக்கத் துவங்கியது. மகிழுந்தில் வந்திறங்கிய காமினி கைகளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியில் வந்தார். காமினியைக் கண்டதும் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் கத்தி ஆதரவை வெளிப்படுத்தினர். மேடையில் ஏறிய காமினியை அரச காவலர்கள் சூழ்ந்து நின்று காவல் செய்தனர். “எங்கள் கட்சியின் ஆட்சியால்தான் இந்த நாட்டை முழுமையான சிங்கள நாடாக்க முடியும்… அமைச்சராக இருந்தபோதே அதற்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்… ஜனாதிபதியானால் எவ்வளவை செய்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்… புச்சன்ன ஓன தேவல் புச்சல தானவ. அல்லகன்ன ஓன தேவல் அல்ல கன்னவ” காமினியின் பேச்சில் சனக் கூட்டம் களித்தது. “அப்பே ஜனாதிபதி மாத்துமா… அப்பே ஜனாதிபதி மாத்துமா…” எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். யானைச் சின்னம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் கைகளில் அசைய “ஜய… ஜய…” சனங்கள் கத்தினர். யாரும் எதிர்பாராக் கணமொன்றில் பேரதிர்வுடன் குண்டொன்று வெடித்தது. வானம் தகர்ந்தது போலப் பெருஞ்சத்தம். தொடர்ந்து வெடித்துச் சிதறின குண்டுகள். சனக்கூட்டம் சிதறி ஓடத் துவங்கியது. காமினியின் உடல் பாகங்கள் குருதியில் தோய்ந்திருந்தன. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் உடல்களின் மேலால் பறந்தன கிழிபட்ட தேர்தல் துண்டுப் பிரசுரங்கள். காமினி கையில் கொண்டு வந்திருந்த தேர்தல் அறிக்கைப் புத்தகம் குருதியூறிக் கிடந்தது. 06 எரிந்த புத்தகங்களின் நிழல் நூலகச் சுவர்களில் படிந்திருந்தது. பேரழிவின் காயங்களின் சாயல் தீராத கட்டடமெங்கும் பாழின் தடங்கள். புத்தகங்களின் கூட்டில் இட்ட மிலாசும் தீ நூர்ந்தடங்காமல் ஒரு தீக்குச்சியில் மூண்டது. சத்தியன் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து வந்து நூலக வாசலில் வைத்துப் பற்ற வைத்தான். அது காற்றில் எரிந்து கரையத் துவங்கியது. எழுத்துக்களின் குரல்களில் அடங்காத பெருமூச்சின் வெம்மை. தீயடங்காத முகங்களுடன் புத்தகப் பக்கங்கள் அலைந்தன. கைகளில் நிறைந்திருந்த பூக்களை வானத்தை நோக்கிக் காற்றில் எறிந்து நீர் ததும்பி நிலத்தில் சிந்தும் கண்களை இறுக மூடி வணங்கினான் சத்தியன். https://uyirmmai.com/article/uyirmmai-magazine-february-2025-deepatchelvan-short-story/
  21. யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா
  22. நான் நினைக்கின்றேன்...வாரிதி என்று பின்னால் முடியும் பெயராக இருக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.