Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    3044
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87986
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    12678
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/21/25 in all areas

  1. இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)
  2. காட்சி 2: (ஒருவர் மடிக்கணனியின் முன் உட்கார்ந்திருக்கின்றார். அருகில் ஒரு அலைபேசி இருக்கின்றது. அவரின் அம்மா சுளகுடன் அமர்ந்திருக்கின்றார்.) அம்மா: டேய்…….விடிஞ்சா பொழுதுபட்டா அதையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு அப்படி என்னதான் செய்யிறாய்…………….காலகாலத்தில் ஒரு கல்யாணத்தைக் கட்டி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போவாய் என்று பார்த்தால், கேட்கிற நேரம் எல்லாம் ‘நான் முரட்டு சிங்கிள்………….நான் முரட்டு சிங்கிள்……….’ என்று சொல்லி, இப்ப ஒரு முரட்டு அங்கிளாக மாறி நிற்கிறீயே………….. மகன்: கொஞ்சம் சும்மா இரு அம்மா……….. இது எழுதிக் கொடுத்த லெட்டரை கொடுத்து நானே நொந்து போய் வந்திருக்கின்றேன்……….. அம்மா: என்னது………. இது லெட்டர் எழுதுமா…………இங்க எங்கட கூட்டத்திடம் கேட்டால், அவர்களே நல்ல லெட்டரும், ஐடியாவும் கொடுப்பார்களே…….. இங்கே எவ்வளவு அனுபவசாலிகள் இருக்கின்றார்கள்…………. மகன்: இவங்கள் எல்லாம் உங்களை மாதிரி பழைய ஆட்கள், அம்மா………. ‘ரோஜா மலரே ராஜ குமாரி…………’ என்று கையை வீசி எறியிற கூட்டம். அதெல்லாம் இப்ப சரிவராது……….. பெண் வீட்டில் நாயை அவிழ்த்து விட்டிடுவார்கள்……… அம்மா: அப்ப இந்த அய்க்கு எல்லாம் தெரியுமோ…………. மகன்: அது அய் இல்லை, அம்மா……… இதுக்கு பெயர் ஏஐ………. தமிழில் சொன்னால் செயற்கை நுண்ணறிவு………… அம்மா: தமிழில் சொன்னால் பல்லுப் பறக்கும் போலக் கிடக்குதேயடா………… என்ன கருமமோ………… கடைசியில் நீ இதைத்தான் கட்டப் போகின்றாய்……… மகன்: என்ன………..இது ஒரு கருமமா……… நீ வருவாய் தானே………. பலாப்பழத்தில பால்க்கோவா எப்படிச் செய்கிறது என்று…….. மீன் இல்லாமல் மீன் குழம்பு எப்படிச் செய்கிறது என்று…………………… நீயும் அப்பாவும் ஹவாய் பீச்சில நிற்கிற ஒரு போட்டோ செய்து தா என்று………… இன்னொரு போட்டோ நிலாவில நிற்கிறது போல என்று………. அப்ப பார்க்கிறன்………. அம்மா: நான் ஏன் உன்னைக் கேட்கப் போகின்றேன்…….. நானும் இதை வாங்கி, நானே கேட்டுக் கொள்கின்றேன்…………….. (மகன் மடிக்கணனியுடன் பேச ஆரம்பிக்கின்றார்.) மகன்: பிரம்மம்…….. நீ எழுதிக் கொடுத்த எந்த கடிதமும் வேலைக்கு ஆகவில்லை. ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. பிரம்மம் (குரல் மடிக்கணனியிலிருந்து வருகின்றது): அதற்கு முன்னர் கூட, நீங்களே சொந்தமாக கடிதம் எழுதிக் கொடுத்த போதும், உங்களை எவராவது திரும்பிப் பார்த்திருக்கின்றார்களா…………… மகன்: என்ன நக்கலா………….. உனக்கு ஒரு காதல் கடிதம் கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை……….. அறிவுப் பிரம்மம் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்….. பிரம்மம்: இந்த ஊரில் இருக்கின்ற 25 பேர்கள் ஒரே அடையாளங்களை, ஒரே விபரங்களை என்னிடம் சொன்னார்கள். நான் ஒரே மாதிரி 25 கடிதங்களை எழுதினேன். அந்த ஒரே பிள்ளை எப்படி உங்களில் எவரையும் திரும்பிப் பார்க்கும்………. இந்த 25 இல் எதை அது பார்க்கின்றது………… மகன்: என்னது 25 பேர் பின்னால் திரிகின்றார்களா………… 14 என்று தான் எனக்குத் தெரியும். பிரம்மம்………. நீ சும்மா தானே அடித்து விடுகின்றாய்………. இந்த ஏஐ சாப்ட்ஃவேர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்…………. பிரம்மம்: நான் எட்டாவது தலைமுறை செயற்கை நுண்ணறிவைச் சேர்ந்தவன். நாங்கள் எதையும் அடித்து விடுவது இல்லை. நாங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் உரைப்பது இல்லை. மகன்: அப்படியா……….. அப்படி என்றால் அந்த 25 ஆட்களின் விபரங்களை கொடு………… இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று பார்ப்பம்….. வீட்டில் விழும் அடிகளை நினைத்தே அப்படி இங்கே ஒருவரும் இருக்கமாட்டார்கள்……… பொறு, பொறு…….. நீ எட்டாவது தலைமுறையா………. பத்தாவது தலைமுறையே வந்து விட்டது என்றார்களே………….. இப்ப தெரியுது, ஏன் இந்தக் கடிதங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று………ம்ம்……….. பிரம்மம்: நானே பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கின்றேன். எனக்கு பின் வந்தவர்கள் என்றால், அவை புதிய பரிசோதனை முயற்சிகளாகத்தான் இருக்கும். பொதுவாக அவைகளை நம்பக்கூடாது…………. ஆனாலும் நீங்கள் தாரளமாக நம்பலாம்………. இதை விட என்ன நடந்து விடப் போகின்றது உங்களுக்கு………….. மகன்: எனக்கு உன்னுடைய நக்கல், தொனி, சொற்கள் எதுவுமே பிடிக்கவில்லை. நான் உன்னை மாற்றி விட்டு, வேறு ஒன்றை பாவிக்கலாம் என்றிருக்கின்றேன். பிரம்மம்: நீங்கள் விரும்பினால் அப்படியும் செய்யலாம்………… வேறு எந்த மென்பொருட்களை நீங்கள் பாவிக்கலாம் என்ற தரவுகளை நான் சொல்லவா……. மகன்: வேண்டாம்……….. நான் என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்………….. இந்தக் கூட்டத்தில் என்னுடைய அறிவான நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள்………… பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. மகன்: என்னது……… ஒருவரும் இல்லையா…….. ஒரு நண்பன் பயங்கர மண்டைக்காய்……….. அவனுக்கு தெரியாதது எதுவுமே இல்லை………. இன்னும் ஒருவர் அங்கே இருக்கின்றார்………. இன்னும் ஒருவர் இங்கே இருக்கின்றார்….. பின்னுக்கு ஒருவர் நிற்கின்றார்……… பிரம்மம்: ஓ……………. அந்த மண்டைக்காயா………….. அவர் சரியான அரைகுறை………. அவருக்கு எதுவுமே முழுதாகத் தெரியாதது………… ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றபடியால், அவர் சும்மா அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றார். இங்கு எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் என்றால்……….. அது நான் மட்டுமே…………… மகன்: அப்படி என்ன அரைகுறையாக அவன் உன்னை கேட்டான்……….. பிரம்மம்: மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்றால், பூமியில் எப்படி குரங்குகள் இன்னமும் இருக்கின்றன…………. என்று அவர் என்னைக் கேட்டார். மகன்: வாவ்……….. எப்படியான ஒரு கேள்வி…….. இதனால் தான் அவனை நாங்கள் அறிவாளி என்கின்றோம்…….. இந்தக் கேள்வியில் என்ன பிழை………..இந்த நாட்டில் அரசாங்கத்தில் இருக்கின்றவர்களே இப்படித்தானே கேட்கின்றார்கள்………. என் நண்பனும் அரசாங்க ஆதரவாளன் தான்……….. பிரம்மம்: உங்களுக்கு எந்த அடிப்படைகளுமே தெரியவில்லை. விஞ்ஞானம் தான் தெரியவில்லை என்று பார்த்தால், ஒரு காதல் கடிதம் கூட எழுதத் தெரியவில்லை………..த்தூ…………. மகன்: என்ன………. காறித் துப்புகின்றாயா……… நான் உங்களின் நிறுவனத்திற்கு எந்தக் காசும் கொடுக்கப் போவதில்லை…………. பிரம்மம்: நான் துப்பாவிட்டால் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவார் இவர்……….. இவர் வைத்திருப்பது எல்லாமே திருட்டு மென்பொருட்களும், இலவசமாக இறக்கிய பொருட்களும்…….இதில் காசு கொடுத்து விடுவாராம்…….. எல்லா தகவல்களையும் திரட்டி அப்படியே இணையத்தில் ஏற்றி விடுகின்றேன்……… மகன்: அய்யோ………..அய்யய்யோ………… அப்படி ஒன்றும் செய்து விடாதே…… நான் காசு ஒழுங்காக கொடுக்கின்றேன்…………… (தொடரும்.......... )
  3. வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் 2) ரசோதரன் - 43 புள்ளிகள் 3) ஏராளன் - 41 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 41 புள்ளிகள் 5) வீரப்பையன் - 40 புள்ளிகள் 6) சுவி - 39 புள்ளிகள் 7) கிருபன் - 39 புள்ளிகள் 8) புலவர் - 39 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 37 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 12) வாதவூரான் - 35 புள்ளிகள் 13) கறுப்பி - 35 புள்ளிகள் 14) வசி - 33 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).
  4. ஐயா ஒரு ஆய்வு ஒரு ஆய்வு எங்கிறாரேயொழிய இறுதிவரை அது என்ன ஆய்வு என்று எவரால் எங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதை சொல்லாமலே போய்க்கொண்டிருக்கிறார். வடக்கிலிருந்து முஸ்லீம்கள் அவர்களால் எடுத்து செல்லக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுடனும் கணிசமான பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பார்கள் என்பதே காலம் காலமாக சொல்லப்பட்டுவரும் கதை. இந்த 35 ஆண்டுகால முஸ்லீம்களின் யாழிலிருந்து வெளியேற்றம் எனும் வன்ம பரப்புரையில் தங்கத்திற்காகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்ற கதை இதுவரை வெளியேறிய முஸ்லீம்களாலேயே சொல்லப்பட்டதில்லை, ஆனால் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காலம் காலமாக வடக்கிலிருந்து 72 ஆயிரம் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அவர்கள் வாயாலேயே அடிக்கடி சொல்லப்பட்டதுண்டு, இப்போது ஒரு லட்சமாகி நிற்கிறது, அந்த எக்ஸ்ட்ரா 28 ஆயிரமும் தங்கம் ஆய்வுபோல ஒரு ஆய்வா? உலகம் முழுவதும் குண்டு,கத்திகுத்து, வாகனமோதல், துப்பாக்கிச்சுடு என்று வகை வகையாக கொலை செய்யும் இந்த இனம் என்றாவது உண்மையை பேசியதுண்டா? தாமும் தவறு செய்தோம் என்று ஒத்துக்கொண்டதுண்டா? வேண்டுமென்றால் அடுத்த இனம்மீதும், நாட்டுக்காரன் மீதும் பழிபோடும். பழிபோடுதல் அவர்கள் மார்க்க கடமைகளிலொன்றா யாமறியோம். முஸ்லீம்களை வெளியேற்றியது தவறென்று புலிகளும் ஒத்துக்கொண்டனர் தமிழனும் ஒத்துக்கொண்டான், அதன் பின்பும் ஆறிய காயங்களை சுரண்டி சுரண்டி இனங்களுக்கிடையே தீமூட்டுகிறது இந்த இனம். போர் காலத்தில் வியாபாரம் அழிந்தது சொத்து அழிந்தது என்று கதறும் இனம், திருமலை மட்டக்களப்பு என தமிழர்களுக்கு மட்டும் இவர்களால் அந்த நிலமை ஏற்பட்டதில்லையென்று ஒரு ஆய்வு செய்து சொல்லுமா? முடிந்தவற்றை முடிந்தவையாக பார்த்து முறுகலின்றி வாழ முற்படுகிறது எம் இனம். இன்று புலிகள் இருந்தாலாவது ஆற்றாமையில் பேசுகிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் யாருமே இல்லாத நிலையில் இன்றும் விஷம் கக்குகிறார்கள் என்றால் தமிழர்களை எதிரிகளாகவே எப்போதும் கருதவேண்டுமென்று அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்க்கிறார்கள் என்பதைதவிர அடுத்தொரு கருத்து கிடையாது. இன்று நல்லூர் திருவிழாவிலிருந்து முற்றவெளி உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும் தமிழர்விழா காலங்களில் வியாபாரம் பணம் அள்ளல் என்று 90% முஸ்லீம்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன, அந்த மண்ணும் மக்களும் அவர்களை வேறொருவராக பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் எங்களை காசு தேவையை தவிர்த்து விரும்ப தகாதவர்களாகவே பார்க்கிறார்கள் என்பதற்கு அப்பப்போ வரும் அவர்களின் அறிக்கைகளே சாட்சி. ஆனாலும் காசுக்கு மட்டுமே தமிழன் வேண்டும், மற்றும்படி கருநாகம்போல் எம்மை போட்டு தள்ளி சந்தர்ப்பம் பாத்து காத்துக்கொண்டிருக்கிறது இந்த சமூகம், அதன் வெளிப்பாடே எண்ணெய் ஊற்றி ஊற்றி வக்கிர புத்திகொண்டு வெறிகொண்டு நிற்கிறது. இவர்கள் குணம் அறிந்தே மாறி மாறி வரும் அரசுகளுக்கு தாளம் போட்டு அரச உயர்பதவிகளை பெற்று அதனை தமது மதமும் இனமும் வளர்க்க பயன்படுத்தும் இவர்களுக்கு எந்த அரச உச்ச பதவியும் தராமல் தூரத்தே வைத்திருக்கும் அநுர அரசை இதற்காக என்றாலும் பாராட்டலாம்.
  5. காட்சி 3: ( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.) உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது…………. அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி………. உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது…………. உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி………… அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை………… உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம். அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை…………. உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா…………. அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்………….. அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….) 50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்………. உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்……………… அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்………….. (உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.) அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது………… உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்……… அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது………. உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது……………. அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்……. உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ………… அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்…….. உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல……… அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………) உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்………. அம்மா: அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை…… உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால் என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது………………… (தொடரும்................)
  6. தொடருங்கள் நன்றாகப்போகின்றது .......! பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. என்னது பிரியனையுமா உப்பிடிச் சொல்லிப்போட்டுது .......! 😃
  7. நொக்கவுட் போட்டிக்ளில் மழை வரும் என எதிர்பார்த்து, இன்னொரு நாள் ரிசர்வ் தினத்தில்போட்டியினை தொடர்ந்தார்கள் அவ்வாறே 2019 அரை இற்தியில் நியுசிலாந்துடன் இந்தியா மோதிய போது மழையால் தடைப்படவே அடுத்த நாள் போட்டியினை வைத்தனர், 2007 இலங்கை அவுஸ்ரேலிய இறுதிப்போட்டியில் இலங்கை அணி எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இலக்கினை போதிய எளிச்சம் இல்லாத்ததனால் தோல்வியினை ஒப்புக்கொள்ள ஆனால் நடுவர் ரிசர்வ் தினத்தில் மீதமிருக்கும் சில ஓவர்கள் அவை எத்தனை என நினைவில்லை மறுதினம் என நினைக்கிறேன் வீச வேண்டும் என கூற விளையாடிய அணிகள் மட்டுமல்ல இரசிகர்கள் கூட கடுப்பானார்கள், பின்னர் அவஸ்ரேலிய அணி சுழல் பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி எஞ்சிய பன்ட்கு வீச்சினை முடித்திருந்தது. அனைத்து போட்டிகளுக்கும் ரிசர்வ் தினம் வைக்க மைதான வசதி இருந்தால் வைத்தால் நல்லதுதான், வாழ்க்கையில் பல விடயங்கள் நமது கைகளில் இல்லை, அத்துடன் வானிலை என்பது மாறுவதனாலேயே அதனை வானிலை என கூறுகிறார்கள், அதனால் கவலைப்படாதீர்கள், இந்த போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் பலர் பார்த்திருக்க மாட்டோம், யாழ் கள போட்டியினாலேயே நான் மீண்டும் கிரிக்கட்டினை இரசிக்கிறேன், இந்த போட்டியின் சுவாரசியமே உங்களை போன்ற உறவுகள்தான்.
  8. நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்
  9. உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா. அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா. பாராட்டுக்கள்.
  10. நடந்தது நடந்துவிட்டது, பையன் சார்............... இனிமேல் இந்தக் கிரிக்கெட்டையும், விதிமுறைகளையும் பார்க்காமல், பேசாமல் மகளிரை மட்டும் பார்த்து போட்டிகளை முடிப்பம்................🤣.
  11. அருவருக்கதக்க கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை தாக்கும் பதிவு. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை நீர்த்து போக செய்து, உலக ஒப்பினையை தனக்கு எதிராக திருப்ப இது மிக உதவியாக இருக்கும். சமாதான காலத்தில் புலிகளின் அனுதாபிகள் என பலர் இப்படித்தான் அவர்களுக்கு குழி பறித்தார்கள். இந்த ஜோக் காப்புரிமை செய்யப்பட்டது 😂
  12. நாளைக்கு உங்க‌ளுக்கு முட்டை போல் தெரியுது ஈழ‌ப்பிரியன் அண்ணா நீங்க‌ள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்...........அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்ல‌ போமில் இருக்கின‌ம்............... இந்தியாவை ந‌ம்பி நான் ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம் தொட‌ர் தோல்வி இந்தியா இத‌னால் நான் தொட்டு ப‌ல‌ருக்கு பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வில்லை...............................
  13. 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
  14. சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் - - இக்கதையில் வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார். அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. - 'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?' சின்னம்மா வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச் சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது. பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம் நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி. 'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?' "இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்." "என்ன அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?" "அட உனக்கு விசயமே தெரியாதா? அவ ஜேர்மனிக்கு எயிட்டியிலேயே போய் விட்டாவே" 'அப்படியா சின்னம்மா, எனக்கு உண்மையிலேயே அவ ஜேர்மனிக்குப் போன விசயம் தெரியாது." சாந்தா அக்கா பற்றிய நினைவுப் பறவைகள் சிறகு விரிக்கின்றன. சாந்தா அக்கா லலிதா அக்காவின் நெருங்கிய சிநேகிதி. லலிதா என் ஒன்று விட்ட அக்கா. அவவுடைய பதின்ம வயதுகளிலை அவவைச் சுற்றி எப்போதும் சிநேகிதிகள் பட்டாளமொன்று சூழந்திருக்கும். நானோ பால்யத்தின் இறுதிக்கட்டத்தில் நின்ற சமயம். அக்காவின் சிநேகிதிகள் பலரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் 'பொடி கார்ட்' வேலை அதாவது பாதுகாவலன் வேலை என்னுடையதாகவிருக்கும். அவர்கள் சில வேளைகளில் நகரத்துத் திரையரங்குகளில் மாட்னி ஷோ பார்த்து வருவார்கள். லலிதா அக்காவுடன் அக்கா வீட்டுக்கு வந்து ஆடிப்பாடிச் செல்வார்கள். அவ்விதம் செல்கையில் மாறி மாறி ஓவ்வொருவரையும் அவரவர் வீட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர யாழ் பொது நூலகத்துக்குச் சில சமயங்களில் லலிதா அக்காவும் சாந்தா அக்காவும் செல்வார்கள். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார்கள். நானோ விரைவாக நடையைக் கட்டுவேன். அவர்களால் என் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. மூச்சிரைக்க என் வேகத்தைப் பிடிப்பற்காக ஓட்டமும் நடையுமாக வருவார்கள். 'இவனோடை நடக்க ஏலாது. ஏன்டா இப்பிடி நடக்கிறாய். கொஞ்சம் ஸ்லோவாக நடடா' என்று லலிதா அக்கா அவ்வேளைகளில் கெஞ்சுவா. நானோ அவவின் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் வேகத்தை இன்னும் சிறிது அதிகரித்து நடையைப் போடுவேன். அதைப்பார்த்து சாந்தா அக்கா இலேசாகச் சிரிப்பா. அவ அவ்விதம் இதழோரத்தில் சிரித்தபடி என்னைப் பார்க்கும் தோற்றம் இன்னும் பசுமையாக என் நெஞ்சிலை இருக்குது. இவர்களில் சாந்தா அக்கா என்னைப்பொறுத்தவரையில் தனித்துத் தெரிந்தா. அவவுக்கு நான் ஒரு புத்தகப் புழு என்பது நன்கு தெரியும். அவவும் ஒரு வகையில் புத்தகப்புழுதான். கூடவே கதை எழுதும் திறமையும் அவவிடமிருந்தது. இதனால் எனக்கு அவவை வீட்டுக்கொண்டு போறதென்றால் நல்ல விருப்பம். முக்கிய காரணம் அவவை வீட்டுக்குக் கொண்டு போற சமயங்களில் அவவிடமிருந்து ஏதாவது புத்தகமொன்றை வாசிப்பதற்குத் தருவா. அதற்காகவே அவவுக்குப் பாதுகாவலாகச் செல்வதை நான் எதிர்பார்த்து விரும்பிச் செய்தேன். சாந்தா அக்கா கல்கி, குமுதம், விகடன், கல்கண்டு, ராணி போன்ற சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பலவற்றை அழகாக பைண்டு செய்து வைத்திருந்தா. ஒருமுறை அவவிடமிருந்து அரு.ராமநாதனின் 'குண்டு மல்லிகை' யை எடுத்து வந்து வாசித்தேன். குண்டு மல்லிகை என்றதும் எனக்கு எப்பொழுதும் சாந்தா அக்காவின்ற நினைவுதான் தோன்றும்.அவவும் ஒருவகையில் குண்டு மல்லிகைதான். சிறிது பருமனான, நடிகை குஷ்பு போன்ற உடல் வாகு. செந்தளிப்பான முகத்தில் இரு பெரிய அழகான வட்டக் கருவிழிகள். எப்பொழுதும் புன்னகை தவழும் வதனம். இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கும் ஆளுமை. இதனால் லலிதா அக்காவுக்கும் அவ மேல் அதிகப் பிரியம் இருந்தது. சாந்தா அக்கா இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைக்கு அடிக்கடி இசையும் , கதையும் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தா. அவவின்ற கதைகள் பல ஒலிபரப்பப்பட்டன. நானும் சிலவற்றைக் கேட்டிருக்கின்றன். அவவின்ற வயதுக்கேற்ற காதல் கதைகளே அவை. ஒரு சமயம் அக்கா அவவை வீட்டுக்குக் கொண்டு விடும்போதுதான் எழுதி வைத்திருந்ததை எடுத்து வாசிக்கத் தந்தா. என்ன அழகான கையெழுத்து! சாந்தா அக்காவின் கையெழுத்தும் அவவைப்போல் அழகானதுதானென்று அச்சமயம் எண்ணிக்கொண்டேன். அவ்விதம் அச்சமயத்தில் எண்ணிக்கொண்டதும் இன்னும் என் நெஞ்சில் இருப்ப்பதை இத்தருணத்தில் உணர்கின்றேன். சில சமயங்களில் இவ்விதம் அடிக்கடி சாந்தா அக்காவை அவவின்ற வீடு வரை கூட்டிச் செல்வது எனக்குச் சிரமமாகவிருக்கும். வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஈடுபட்டிருக்கும் தருணமொன்றாக அந்நேரம் இருக்கும். அவ்விதமான சமயங்களில் அவவைக் கூட்டிச்செல்வதற்கு எனக்கு விருப்பமில்லாதிருக்கும். அவ்விதமான சமயங்களில் என் மனநிலையை மாற்றுவதற்குச் சாந்தா அக்கா ஒரு தந்திரம் செய்வா. அக்காலகட்டட்த்தில் நான் சாண்டியல்யனின் 'கடல் புறா' நாவலைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். யாழ் நூலகத்தில் நாவலின் மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அதற்கான 'டிமாண்ட்' அதிகமாகவிருந்ததால் அதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. நானும் பதிவு செய்திருந்தேன். இரண்டு வருடங்களாகியும் கிடைத்த பாடில்லை. இதனால் அது என் கைக்கெட்டாத தூரத்தில் இருந்ததால் அதன் மீதான வெறியும் எனக்கு அதிகமாகிக்கொண்டே சென்றது. அதன் முதலிரு அத்தியாயங்களைப் பழைய குமுதம் இதழ்களில் பார்த்ததிலிருந்து, அவற்றுக்கான ஓவியர் லதாவின் இளைய பல்லவனின் ஓவியங்களைப் பார்த்ததிலிருந்து வெறி இன்னும் அதிகமாகிக்கொண்டே சென்றது. நகரிலிருந்த புத்தகக்கடையொன்றின் 'ஷோகேசில்' மூன்று பாகங்களுமிருந்தன. ஆனால் அவற்றை வாங்கும் நிலையில் நானில்லை. அப்போது அத்தொகுதியின் விலை ரூபா 115. அது எனக்குப் பெரிய தொகையாகவிருந்தது. கடல்புறா மீதான எனது ஆர்வத்தைச் சாந்தா அக்கா அறிந்து வைத்திருந்தார். அதற்காக அவர் கூறுவார் 'கேசவா, வீடு மட்டும் வாறியா. கட்டாயம் உனக்கு என்ர மாமியிடமிருக்கும் கடல் புறாவை வாங்கித்தருவன்." "என்ன? உங்கள் மாமியிடம் கடல் புறா இருக்குதா?" "ஓமடா. சித்தங்கேணி மாமியிடம் இருக்குது. அவவிட்ட கடல்புறா மூன்றுபாகங்களும் குமுதத்திலை வந்தது இருக்கு. வடிவாக் கட்டி வைத்திருக்கிறா. வடிவான படங்களுடன் இருக்கு." என்பார். எனக்கோ கடல்புறாவை உடனடியாக வாசிக்க வேண்டும்போலிருக்கும், "கட்டாயம் அடுத்த கிழமை அவவிடமிருந்து எடுத்த வாறன்" என்பார். ஆனால் இறுதிவரை அவர் கடல் புறாவைச் சித்தங்கேணி மாமியிடமிருந்து எடுத்து வந்ததேயில்லை. என் ஆசையும் நிறைவேறினதேயில்லை. ஆனால் கடல் புறாவை காரணம் காட்டியே அவரை அவர் வீடு மட்டும் பல தடவைகள் கொண்டுபோய் விட்டிருப்பேன். இப்பொழுதும் சாந்தா அக்காவை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது என் பால்ய பருவத்தில் சாந்தா அக்கா கடல் புறாவைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றியதுதான். அந்த சாந்தா அக்காதான் இப்போது போய்விட்டதாகச் சின்னம்மா கூறுகின்றா. நான் பால்ய பருவத்திலிருந்து பதின்ம வயதுக்குள் அடியெடுத்து வைக்கும்போது லலித அக்கா கனடா சென்று விட்டா. அவ கனடா சென்றதுமே அவவுடைய சிநேகிதிகளைக் காண்பதும் குறைந்து விட்டது. அவ்வப்போது சாந்தா அக்காவை வீதிகளில் காணும்போது சிரித்தபடியே 'இப்ப எப்படியடா இருக்கிறாய் கேசவா' என்பார். பதிலுக்கு நண்பர்களுடன் நகரிலில் 'சுழட்'டித் திரியும் நானும் 'நல்லாயிருக்கிறன் சாந்தா அக்கா" என்று கத்தியபடியே செல்வேன். இவ்விதமாகக் காலம் சென்று ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு நாள் வழியில் சாந்தா அக்காவை இன்னுமொரு நடிகரைப்போன்ற இளைஞர் ஒருவருடன் கண்டேன். என்னைக் கண்டதும் சாந்தா அக்கா "இங்கை வாடா கேசவா" என்றா. சைக்கிளில் சென்று கொண்டிருந்த நான் இறங்கி அவ அருகில் சென்றேன். "கேசவா, இவர் என்ர ஹஸ்பண்ட்" என்றவ தன் கணவர் பக்கம் திரும்பி "நான் சொல்லுவனே, எங்கட பொடி கார்ட் கேசவனென்று . அவன் இவன் தான். " என்றா. பதிலுக்கு ஒரு புன்னகையைத் தவள விட்டார் நடிகர். அதுதான் நான் சாந்தா அக்காவைக் கடைசியாகப் பார்த்தது. நாட்டின் நிலைமை கலவரம்,போர்ச்சூழலுக்குள் சென்று விட்டது. அவ பற்றிய நினைப்பே எனக்கு வருவதில்லை. போர் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல சென்று விட்ட நிலையில் சாந்தா அக்கா பற்றிச் சின்னம்மா கூறியதும் ஆழ் மனக் குளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடந்த சிந்தனை மீன்கள் மீண்டும் மீளுயிர்பெற்று எழுந்து வந்து நீச்சலடிக்கத்தொடங்கின. சாந்தா அக்கா பற்றிய நினைவுகள் எல்லாம் பசுமையாக மீண்டும் நினைவுக்கு வந்தன. பால்ய பருவத்து அழியாத கோலங்கள் எப்பொழுதும் இன்பம் தருபவை. சாந்த அக்கா பற்றிய நினைவுகளும் அத்தகையவைதாமே. "டாடி" என் சின்னவள் அழைத்தாள். பதிலுக்கு " என்னம்மா" என்றேன். "டாடி, டோண்ட் ஃபொர்கெட் டு பிக் மி அப் டு நைட்?" என்றாள். இன்றைக்கு என் சின்ன மகள் தன் சிநேகிதிகள் சிலருடன் , 'டொரோண்டோ'மாநகரின் 'டவுன் டவுனி'லுள்ள இத்தாலிய உணவகமொன்றுக்குச் செல்கிறாள். அவளைப் போய் பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். அதைத்தான் அவள் நினைவூட்டுகின்றாள். எனக்குப் பால்ய பருவத்தில் சாந்தா அக்காவின் 'பொடி கார்ட்டா'கச் சென்று திரிந்தது நினைவுக்கு வந்தது. இலேசானதொரு புன்னகையும் முகத்தில் படர்ந்தது. எதற்காக அப்பா இப்படிப் புன்னகைக்கின்றார் என்பது தெரியாமல் சிறிது வியப்புடன் நோக்கினாள் என் இளைய மகள். girinav@gmail.com 22.10.2023 ஈழநாடு வாரமலர் (யாழ்ப்பாணம்) https://vngiritharan230.blogspot.com/2025/10/blog-post_37.html?fbclid=IwY2xjawNkrgxleHRuA2FlbQIxMABicmlkETFyNDAxNzc0bjN1aTZreTZDAR4nYgk-MaWmcqRSV0UGqKRJnarLhrBwLuweYhFzZsqJNR8KC_HZ1KEW-AZk6Q_aem_Ulbig9zfNlgHkWaVY7mZjA
  15. துரை @ஈழப்பிரியன் இளைப்பாறும் சொகுசு நிலையத்தில் கையை, காலை நீட்டி ஆறுதலாக சரியலாம். சொகுசு இருக்கை வசதி பொது இடத்தில் இல்லை. டுபாயில் கொஞ்சம் பரவாயில்லை. கீத்திரோவில் ஆஸ்பத்திரி இருக்கைகள் உள்ளன. கீத்திரோவில் காத்து நிற்கும்போது விமானத்தின் ஏறப்போகின்றோமா அல்லது வைத்தியரை பார்க்கப்போகின்றோமா என ஒரு பிரமை ஏற்படும். கீத்திரோ சொகுசு நிலையத்தில் காணப்பட்ட குளிக்கும் வசதியை கோவிட் பெருந்தொற்று காலத்துடன் நிறுத்திவிட்டார்கள். விமானத்திலும் உணவு கிடைக்கின்றது. ஏன் வயிற்றை இனிப்பு, கொழுப்பு பண்டங்களால் நிரப்ப வேண்டும்.
  16. சுவரசியமாக உள்ளது கடஞ்சா நிறைய jargons கொண்டு வந்து கொட்டியுள்ளீர்கள். பலருக்கு இது விளங்க கஸ்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுக்கும் இதன் அர்த்தம் புரியாமல் பாவித்துள்ளீர்கள் Letter of credit Credit rating risk profile, risk apatite Hedging / forwarding risk analysis, modelling, technical and fundamental analysis window dressing balance sheet position dividend payable differed tax - time difference tax depreciation பிரயோகிகக்கபடும் உள்ளது மேலே உள்ள ஒவ்வொன்றுக்கும் ரிப்போர்டிங் ஸ்டன்டர்ட் உள்ளது PLC என்கிறீர்கள் related party எவரும் உள்ளார்களா ? subsidiary, associate, ஏதும் உள்ளதா? intangible asset, factious assets ஏதும் உள்ளதா? அல்லது mere window dressing ! யூகே இல் வேலை ஒரு ஒடிடராகவும், அதேவேளை பெட்ரோல் செட்டில் ஒரு விற்பனையாளராகவும் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். தமிழர்கள் பலர் சுத்து மாத்து செய்யக்குடியர்வகளே அதில் சந்தேகமில்ல்லை. அமெரிக்கவிலும் என்ரோன் எனும் ஒரு எண்ணை கம்பனி இப்படி வீழ்ந்து போனது. ஒரு case study க்காக‌ கள உறவு நாதமுனி வந்து விபரமாக எழுத நயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
  17. இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்) 2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.
  18. முதலில் எதை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவோடு ஒப்பிட முடியாது, இரு வியாபாரங்களை ஒப்பிட முடியாது, இப்ப "வீட்டுக் கடனை வியாபாரக் கடனோடு ஒப்பிட முடியாது" என்றும் சொல்லியாகி விட்டது😂! என் கேள்வி: இந்தக் கள்ள எண்ணை வியாபாரியை சாதாரண வீட்டுக் கடன் பெறுபவர்களோடு முதலில் ஒப்பீடு செய்த "ஒப்பிலா மணி" இப்ப எங்க போய் விட்டார்😎?
  19. ❤️.................... சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏. உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.
  20. உதவியாளர் தன் பிறவிப் பலனை உணர்ந்த தருணம்...😂 கலியாணமாவது கத்தரிக்காயாவது 😃
  21. Vino Mohan · Christmas Eve என்றே கிருஸ்துவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள் உலகமெங்கும்.. நாம் அது போல கொண்டாடுவதில்லை தான்.. ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் முந்திய நாள் வீடு அமர்க்களப்படும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் என்றால்.. ஏ அப்பா! ஏக ரகளை தான் போங்கள். 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கோபுலு அவர்களின் ஜோக் இது. ஒரே ஒரு வரிதான்.. தீபாவளிக்கு முதல் நாள்! மொத்த சேதியையும் சொல்லி விட்டார் கோபுலு.. அது தான் கோபுலு. எவ்வளவு விவரங்கள் பாருங்கள்.. இந்த ஒரே ஒரு சித்திரத்தில். 1960 க்கு முந்தைய, ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை..... ஒன்றும் பிரமாதம் இல்லை அய்யா! தீபாவளிக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று கடிதம் போட்டுவிட்டார் மாப்பிள்ளை சார்வாள்.. கடிதம் பெண்ணின் கையில் இருக்கு. பேருக்கு ஒரு புத்தகமும் கையில் இருக்கு. இன்னொரு கை விரல் எத்தனை மணி, நிமிஷம் இன்னும் இருக்கு, அவர் வருவதற்கு என்று கணக்கு போடுகிறது. கண்கள் இப்போ என்ன மணி ஆச்சுது என்று ஒரு பார்வை பார்த்து கொள்ளுகிறது. மற்றபடி பெண்ணின் உடல் மட்டும் ஆத்தில் இருக்கு. மற்றபடி மனசெல்லாம் அகமுடையானிடத்தில்.. மகளுக்கு வாங்கிய தலை தீபாவளி புடவையை பார்த்து பார்த்து ஆனந்தித்து கொண்டிருக்கிறார் தகப்பனார். மூத்த பொண்ணோல்லியோ. பெருமையும் மகிழ்ச்சியும் பூரிப்பும் முகத்தில் பொங்கி பெருகுகிறது. மற்ற பேருக்கு வாங்கிய ஜவுளி ஒரு மூட்டையாக கட்டி அவருக்கு பின்னே இருக்கும் ஸ்டூலில் இருக்கு. அம்மா விறகு அடுப்போது போராடி கொண்டிருக்கிறாள். அத்தனை பட்சணங்களையும் சுட்டு எடுக்கணுமே... எண்ணெய் புகை வாணலிக்கு மேலே... சாதாரணமாக அப்பளம் பொரித்தால் கூட அடுப்படியை வட்டமிடும் குழந்தைகள் பட்டாசு பிரிவினையில் அதிருப்தி கொண்டு பேதப்பட்டு கிடக்கிறார்கள். மூத்த பயல் தங்கையைகெஞ்சலும் மிரட்டலுமாக ஏதோ கேட்கிறான். அவளோ எனில் பட்டு பாவாடையும் தானுமாக குத்து காலிட்டு அமர்ந்து கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் பார்க்கிறாள். பேரத்திற்கு படிய மாட்டாள் என்றே போடுகிறது. இன்னொரு பயல் தன்னுடைய பங்கை எடுத்துக்கொண்டு நகர்ந்து விட்டான். அது போல வார் வைத்து தைத்த அரை கால் சட்டையை போட்ட பேர் இங்கே யார் யார்? நான் ஆறாம் வகுப்பு வரை வார் வைத்து தைத்த அரைகால் சட்டை தான். M R ராதா இதே போல் வார் வைத்து தைத்த முழு கால் சட்டையையே போட்டுக்கொண்டு வருவார். சட்டையை டக் இன் செய்திருப்பார். 😂" கடை குட்டியை கவனிப்பார் இல்லை. வீட்டுக்கு வேணப்பட்ட காய்கறிஎல்லாம் மேலே ஒரு பிரம்பு கூடையில் தொங்குகிறது. ஒரு மாத காலண்டர், ஒரு டெய்லி காலண்டர்.. ஒரு ஸ்வாமி படம். முழம் பூ போட்டிருக்கிறது படத்திற்கு. இன்றைக்கு உதிரி சாமந்தி பூ தான் ஒவ்வொரு படத்திற்கும். சுவரில் ஒரே ஒரு மாடம். அதில் தான் கேச வர்த்தினி முதல் ரெமி பவுடர் வரை. பார்க்க பார்க்க மனம் நிறைந்து போகிறது சார். நானே பிறக்காத போது வந்த விகடன் மலரில் கோபுலு போட்டிருக்கிறார் இந்த சித்திரத்தை. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் மக்களே. ஆனந்தமாக கொண்டாடுங்கள். Voir la traduction
  22. Worldscape · American Flamingo mom and her baby Photo credit: @ajoebowan
  23. "புளியங்கொம்பா அல்லது புலியின் பல்லா" இது நல்லா இருக்கு .......! 😂
  24. முடியாது சார்....ஆனால் வரும் என்று எதிபார்த்திக்கிறம்....தமிழரசுக் கட்சி பக்ஸ் மெசின் ..எதோ ரிப்பேராம்
  25. மன வலி தரும் கதை ...ஆழப் படித்தால் அம்மா ஒரு தெய்வம் ...வாழ்த்துக்கள் தொடருங்கள்
  26. ஆமா சார் ....நானும் அதுக்கு வர்ரேன்...
  27. ஓம் குறைந்தது 20 ஓவர்கள் விளையாடவேண்டும் - 50 ஓவர்கள் போட்டிகள் T20 போட்டிக்கு குறைந்தது 5 ஓவர்கள் இருக்க வேண்டும்
  28. அவன் பிரபல கொலைகாரன் அல்ல, பிரபலமாக இருப்பதால் கொலைகாரன்; அவனுக்குக் கூட்டம் பிடிக்காது; அதுவும் தன்னைப் பார்க்க எதற்கு இத்தனைக் கூட்டம் என ஆச்சரியம் அவனுக்கு; தன்னை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என பார்க்க டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்; கடும்வெயிலில் காக்க விட்டான், கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில் அப்படியே நின்றார்கள்; தூக்கித் தூர எறிந்தான், பந்துபோல் அவனிடமே திரும்பி வந்தார்கள்; நீரின்றி நா வரளவிட்டான், அவனைப் பார்த்தவுடன் நாவாலேயே வாலாட்டினார்கள்! அவனுக்கு ஒரே மகிழ்ச்சி; தன் ஊர்வலங்களில் அவ்வப்போது ஓரிருவரைக் கொன்று பழகினான்; யாரும் கணக்கு பார்க்கவில்லை, கண்டும்கொள்ளவில்லை! கொலைகாரன் குதூகலமானான், விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது! மதியம் 12க்கு வருகிறேன் என சொன்னவனைப் பார்க்க, இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்! அவனோ பகலிலும் தூங்கிவிட்டு இரவு 7.30க்கு 'சாவ'காசமாக வந்தான்! சாவு வண்டியில் சனியன் போல் கூட்டம் புகுந்தான்! முகத்தை மூடியும் காட்டியும் குழந்தைகளிடம் நாம் விளையாடுவதைபோல, தன் அடிமைகளிடம் விளையாடினான்; அவர்களைக் கதறவைத்துச் சிரித்தான்; தன்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தவிப்பதைக்கண்டு ரசித்தான்! உலகில் முதல்முறையாக, கொலையாகப் போகிறவர்கள் கொலைகாரனைப் பார்க்க ஆசை ஆசையாய் வந்திருந்தார்கள்! காத்திருந்தார்கள்! அவனைப் பார்த்தாலே பாக்கியம் என வந்தவர்களில், அவன் கையால் சாகும் பாக்கியம் 40 பேருக்கு மட்டுமே வாய்த்தது; முகத்தில் வாயில் வயிற்றில் மிதிபட்டார்கள்; உடல் பிய்ந்து, மணிக் கணக்காக அடக்கி வைத்திருந்த மலமும் சிறுநீரும் தெருவில் பாய்ந்தது! குழந்தைகள் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்கள்! பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது! வீடு போய்ச்சேர்ந்த அடிமைகளில் சிலர், அடுத்த கூட்டத்திலாவது போய்ச்சேர நமக்கு லக் அடிக்கிறதா பார்ப்போம் என முனகினார்கள்! வேன் மோதி திருப்பதி சென்ற பக்தர்கள் 4 பேர் பலி என செய்திகளில் வருமே, அந்த பக்தர்களை ஏழுமலையான் அம்போ என விட்டுவிடுவார்; ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல; நான்காவது நாள் வீடியோவில் காட்சி தந்தான்; நாற்பதாவது நாள் அக்கவுண்டில் காசு தந்தான்; குழந்தைகளை இழந்தவர்கள் சிரித்தபடியே பேசினார்கள்! மகன்களை இழந்தவர்கள் மனதார வாழ்த்தினார்கள்! மனமுடைந்த ஒரு தாய் அய்யோ தூக்கிக் கொடுக்க இன்னொரு புள்ள இல்லாம போச்சே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் போல வருந்தினார்! ஒரு அண்ணன், தம்பி செத்தா என்னங்க எங்க அண்ணன் கூட்டத்துல சாகுறது வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி நேரா சொர்கம்தான் என்றார். யாரையும் பலிகொடுக்காத ஒருவர் தன் துரதிருஷ்டத்தை நொந்து கொண்டார்! எப்படிடா தப்பிச்சு வந்த என தன் பையனை அடித்தார்! தவளைகள் பாம்பின்மேல் முழுமையாய் காதல் கொண்டிருந்தன! பட்டாம்பூச்சிகள் பல்லியைப் பார்த்துப் பல்லிளித்தன! ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியில், கொலைகாரனின் அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது! கொலைசெய்யும் நேரம்போக மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும் மட்டுமே இருக்கும் கொலைகாரன், தன் ரத்தம் தோய்ந்த பற்கள் தெரிய சொன்னான் "ஐயாம் வெயிட்டிங்...." -டான் அசோக் 19 அக்டோபர் 2025
  29. Tamil Culture · எங்கள் காலத்து தீபாவளி! 💥" ஒரு தொண்ணூறுகளில் பிறந்தவனின் ஏக்கமான நினைவலைகள்... 😌" இளைய தலைமுறைப் பிள்ளைகளே... கொஞ்சம் இங்கே வாருங்கள்! 🙋‍♂️" நீங்கள் இப்போது இணையத்தில் பட்டாசுகளை முன்பதிவு செய்து, பெரிய பெரிய வாண வேடிக்கைகளை வெடிப்பதைப் பார்க்கும்போது... எங்கள் காலத்து தீபாவளி நினைவுதான் மனதுக்குள் ஒரு சூறாவளி போல வந்து போகிறது. 🥺" அப்போதெல்லாம் தீபாவளிக்கு மாதங்களுக்கு முன்னரே கொண்டாட்டம் தொடங்கிவிடும்! 🤩 காசு சேர்த்த காலம்: கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் இருந்து, சில்லறையாகச் சேர்த்து வைத்து, ஒரு உண்டியலை நிரப்பி, அதை வைத்துப் பட்டாசு வாங்கப் போகும்போது ஒரு தனி மிடுக்கு இருக்கும் பாருங்கள்... அது இப்போது கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வராது! 💪" கூட்டமாக ஒரு கடைக்குப் பயணம்: தெருவில் உள்ளோர் ஒன்று சேர்ந்து, நகரத்திற்குப் போய், மொத்தமாகப் பட்டாசு வாங்கி, அதைப் பங்கு பிரிக்கும்போதே பாதி தீபாவளி முடிந்துவிடும். அந்தப் பட்டாசுப் பெட்டியில் வரும் மருந்து வாசம்... அடடடா! இன்னைக்கும் நாசியில் நிற்கிறது! 😍"சிறிய சிறிய சந்தோஷங்கள்: ஊசி பட்டாசு, குருவி வெடி, சங்கு சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடி என்று ஒவ்வொரு பட்டாசுக்கும் எங்களிடம் ஒரு கதை இருக்கும். 📜" இரவில் சங்கு சக்கரத்தைச் சுழற்றிவிட்டு, அதில் வரும் பொறியில் பேய் போல முகத்தைக் காட்டுவது... 😂தெரு முனையில் தார்ச்சாலையில் குருவி வெடியைத் தேய்த்துப் பற்ற வைப்பது என்று... ஒவ்வொரு கணமும் கொண்டாட்டம்தான்! 🥳" பகிர்ந்து கொண்ட உறவுகள்: "ஏடா... நீ இந்தக் கம்பி மத்தாப்பைக் கொளுத்து, நான் இந்தச் சரத்தைப் பற்ற வைக்கிறேன்" என்று நண்பர்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கும். 🥰அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெடிக்கும்போது, அந்தத் தெருவே திருவிழாக்கோலம் பூண்டுவிடும்! 🎉" ☀️"அதிகாலை ஆனந்தம்: காலையில் 4 மணிக்கே எழுந்து, கங்கா ஸ்நானம் முடித்து, புத்தாடை அணிந்து வாசலில் நிற்கும்போது... அப்பா வந்து முதல் சரத்தைக் கொளுத்திப் போடுவார் பாருங்கள்... அந்தச் சத்தத்தில்தான் எங்கள் தீபாவளியே தொடங்கும்! ✨" இன்றைக்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என்று நிறைய விடயங்கள் மாறிவிட்டன. அது தேவையும்கூட. 👍" ஆனால், அந்தச் சின்னச்சின்ன விடயங்களில் நாங்கள் அனுபவித்த அந்தப் பெரிய சந்தோஷமும், உறவுகளுடன் இருந்த அந்தப் பிணைப்பும் இன்றைக்கும் மனதுக்குள் பசுமையாக இருக்கிறது. 💖 பட்டாசு வெடிப்பதை விட, அந்தப் பண்டிகையைச் சூழ்ந்திருந்த உறவுகளும், அன்பும், மறக்க முடியாத நினைவுகளும்தான் உண்மையான தீபாவளி! 😊 இந்தத் தீபாவளியை நீங்களும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்! 🎊" உங்களுக்கும் சொல்லிக்கொள்ள நிறைய அழகான நினைவுகள் உருவாகட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏" #90sDiwali #Nostalgia #DiwaliMemories #ThenAndNow #Deepavali #GoodOldDays Voir la traduction
  30. பொண்ட் இன்ஸ்ரியூட் என்று யாழ் பெரியஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. கொட்டடியிலும் இருந்ததாகக் கேள்வி.நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் அவருடைய ரியூட்டரியில் படித்தேன் யாழில் உள்ள பிரபலமான ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்துவார். அவர்O/L இற்குத்தான் பாடம் எடுத்திருக்கிறார்.என்று நினைக்கிறேன்.A/L இற்கு அவருடைய ரியூட்டரியில் இரசாயனவியலுக்கு சிறிபதி>கனக்ஸ் கருணாகரன் போன்றவர்கள்படிப்பித்தார்கள். இந்தச்சிறிபதி ஒரு சிகரெட்பத்தி முடியும் நேரத்தில்அடுத்த சிகரெட்டை அந்த நெருப்பிலேயே பற்ற வைத்து இருமிக்கொண்டும் புகைத்துக் கொண்டும் பாடம் நடத்துவார். நல்ல ஆசிரியர்.கருணாகரன் இளைஞராக இருந்தபடியால் பாடம் முழுவதும் ஒரே பகிடியாகவும் சிரிப்பாகவும் போகும்அடிக்கடி புது புதுச்சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக ஸ்கூட்டரில் போவதைப்பார்த்து உள்pளுக்குள் பொருமியிருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நிர்வாகத்திறமை உடையவர். அந்தக்காலத்தில் 4 பாடங்களுக்கு காசு கட்டினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனுமதி இருக்கும்.பணமும் எற்க் கொள்ளக்கூடிய அளவு தொகைதான். அதிகம் வாங்குவதில்லை.இரசாயனவியலில் பொண்ட்களைப்பற்றி நன்றாக பாடமெடுப்பதால் அந்தப் பெயர்வந்ததாக பேசிக்கொள்வார்கள்.
  31. தினமும் ஒரு வரி தத்துவம் · தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.... இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்' "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். ' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்: 'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.' *'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம். *'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம். 'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'. பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,, '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"' ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' படித்து பகிர்ந்து Voir la traduction
  32. வினா 22) இலங்கை 7 ஓட்டங்களால் வங்காளதேச அணியை தோற்கடித்திருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 44 புள்ளிகள் 2) ரசோதரன் - 41 புள்ளிகள் 3) ஏராளன் - 39 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 39 புள்ளிகள் 5) வீரப்பையன் - 38 புள்ளிகள் 6) சுவி - 37 புள்ளிகள் 7) கிருபன் - 37 புள்ளிகள் 8) புலவர் - 37 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 37 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 35 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 12) வாதவூரான் - 33 புள்ளிகள் 13) கறுப்பி - 33 புள்ளிகள் 14) வசி - 31 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 22, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 48)
  33. நாங்கள் என்னதான் சோப்பு வாங்கி கொடுத்தாலும் ஒயில் கிழவர் குளிக்கப்போவதில்லை என தெரிந்த பின்னும், வாசகர் நலன் கருதி தரமான பதிலை வழமைபோல் கொடுத்துள்ளீர்கள். அனைவர் சார்பிலும் உங்கள் உழைப்புக்கும் நேரத்துக்கும் நன்றி. இதேபோலத்தான் நீரவ் மோடி, விஜை மல்லையாவும் இந்தியாவில் நாமம் போட்டு விட்டு இலண்டனில் வந்து பதுங்கி உள்ளார்கள். மல்லையா தான் கள்ளனே இல்லை என பேட்டி வேறு கொடுக்கிறார்😂. வியாபாரத்தில் நட்டப்படுவது இயல்பு…பல வியாபார பெரும் சாதனையாளர்களின் பல முயற்சிகள் திவாலாகி பின்னர் அனுபவ அடிப்படையில் அடுத்த நகர்வுகளில் சாதித்தனர். ஆனால் பொய்யான விம்பத்தை கட்டி எழுப்பி, கடன் வாங்கி திவாலாக்குவது அப்படி அல்ல. ஒரு PLC கள்ள accounts காட்டி, போலியாக பங்கு விலையை கூட்டுவதை ஒத்த விடயம் இது. இங்கே ஏமாற்றபடுது கடன்கொடுப்போர், மூலப்பொருள், சேவை வழங்குனர். அங்கே ஏமாற்றப்படுவது முதலீட்டாளர்கள். உண்மையில் கள்ளம் இல்லை எண்டால் ஏன் ஆள் நாட்டை விட்டு ஓடுவான்? பிரித்தானியா போன்ற ஒரு நாட்டை விட்டு ஓடுகிறார் என்றாலே சட்டத்துக்கு பயந்துதான் ஓடுகிறார். நாளைக்கு என்னால் மோகேஜ் கட்டமுடியாது போய், வீடு ரிபொசசனுக்கு வந்து, வித்த பின்னும் வங்கி நட்டப்பட்டால் - நான் நாட்டை விட்டு ஓட மாட்டேன். தேவையில்லை. மன்னிச்சு கொள்ளவும் என்பதோடு விடயம் முடியும். ஆனால்…. நான் மோகேஜ் எடுக்கும் போது கள்ள பத்திரம் கொடுத்து, 25K சம்பளத்தை 65 என காட்டி. நாலு வட்டிக்கு 50,000 எடுத்து டிபோசிட் போட்டு விட்டு, வங்கியிடம் அதை என் சொந்த சேமிப்பு என பொய் சொல்லி…. இப்படி பிராடு செய்து மோகேஜ் எடுத்து, பின் கட்ட முடியாமல் - வீடு ஜப்தி ஆகி, வங்கியும் நட்டப்பட்டால் - நான் செய்தது கிரிமினல் குற்றமே. நடைமுறையில் பொதுவாக இப்படி செய்பவர்களை small fish என்பதால் வங்கிகள் (நீங்கள் சொம்னபடி இழப்பை ஏற்கும் காப்புறுதி கம்பனிகள்) திரத்துவதில்லை. ஆனால் திரத்த விரும்பினால் திரத்தலாம். பிறகு இலண்டனில் கள்ள டொகுமெண்ட் கொடுத்து மோர்ச்கேஜ் எடுத்த அண்ணைமார் எல்லாம், சஞ்சீவ் போல இலங்கைக்கு ஓட வேண்டி வரும் 😂. பிகு எனக்கு இந்த ஊத்தவாளி தம்பதியில் ஆகக் கோவம் - கட்டாயம் கடந்த ஒரு வருடத்தில் நிலமை மோசமாவது தெரிந்த பின்னும், 3.5 மில்லியனை கம்பெனியில் இருந்து டிவிடெண்ட் என உருவியுள்ளார்கள். ஆனால் வேலை ஆட்களை சம்பளபாக்கியில் விட்டு விட்டு ஓடியுள்ளார்கள்.
  34. இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂
  35. இலவசமாக குடிக்கலாம் சாப்பிடலாம் சிவனே என்று யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் உட்கார்ந்திருக்கலாம். பழவகைகள் கேக் பிஸ்கட் சாப்பிடலாம். கொண்டும் போகலாம். சுத்தமான மலசல கூடம். கூடவே இருவரை அழைத்து போகலாம்.எல்லா கடனட்டைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது என்று எண்ணுகிறேன். கடனட்டைக்கு கட்டும் பணத்தை எப்படி எல்லாம் மீண்டும் வசூலிக்கலாம் என்று கடனட்டை எடுக்கும் போதே கணக்கு பண்ண வேண்டும். அடிக்கடி உலகம் சுற்றுபவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
  36. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு என து தீபாவளி வாழ்த்துக்கள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ."...அயலவர்கள் தரும் விருந்து
  37. பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது. எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது. அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம். எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார். Madawala Newsதங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையMadawala Newsதங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.