Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19100
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87984
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    3311
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/01/25 in all areas

  1. கோப்பையை தூக்கும் அணி என்பதிலிருந்து அதிக ஓட்டம், விக்கெட், இத்யாதி கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவுசை மட்டுமே தெரிவு செய்திருக்கின்றேன் இந்தியாவை அரையிறுதியிலேயே கழட்டி விட்டுட்டேன் அவுசை நம்பி மவுசு போனாலும் பரவாயில்லை 😂 முதலுக்கே மோசம் போயிட்டது😇
  2. நான் எழுதிய கருத்தின் பின்னர் வசி உட்பட பலர் எழுதியவை. தாம் ஒருவரோடு, அல்லது பலரோடு பழகிய அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இனத்தையே எடை போடுகிறார்கள். இது 1990 இல் புலிகள் எடுத்த அதே அணுகுமுறை. அதாவது தனிமனிதர்களின் அல்லது குழுக்களின் தவறுக்கு இனத்தையே பழிகூறுவது. நாம் வாயளவில் மன்னிப்பு கேட்டாலும், பலரின் முஸ்லிம்கள் பற்றிய பார்வை 1990 இல் இருந்து அப்படியே உள்ளது என்பதை இது காட்டுகிறது. சாத்ஸ்சுக்கான பதில் - கோட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பலர் அரச படையுடன் சேர்ந்து இயங்கினர். அமைச்சராகவும் இருந்தனர். ஆனால் இதை 1990 காலத்தோடு ஒப்பிட முடியாது. 1990 போலன்றி இது அவர்கள் அமைப்பாக அல்லது, தனி மனிதர்களாக அரசுக்கு ஆதரவழித்த நிகழ்வு. டக்லஸ், கருணா என பல தமிழர்களும் ஆதரவழித்தனர். அதை வைத்து ஒட்டுமொத்த தமிழரை குற்றம் சொல்ல இயலாதே. புதிதாக ஒவ்வொரு வருடமும் ஒரு கதை சேர்ப்பது பற்றி ஏலவே என் கருத்தை முதலாம் பதிவிலே கூறிவிட்டேன். நீங்கள் சொல்வது உண்மையே ஆகினும் (எனது தனிப்பட்ட வாழ்வில் சுயநலமிகளை இன வேறுபாடின்றி சகல இனத்திலும் கண்டுள்ளேன்) அதனால் மட்டும் அவர்களுக்கு அவர்கள் வாழிடத்தில் இருக்கும் உரிமையை நாம் இல்லை என மறுக்க முடியாது.
  3. "என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] இன்று இன்னுமொரு அகவை நாள் மெழுகுவர்த்தி தவிர்த்து தெளிவைத் தேடுகிறேன் மனதில் ஒளியை ஏற்றி உண்மை தேடுகிறேன் கடந்த பாதையை மீண்டும் பார்க்கிறேன்! சில நேரங்களில் நான் சிரித்துக்கொண்டே சில நேரங்களில் நான் அமைதியாக அதிகம் பேசும் நண்பனைப் போல வாழ்வு எனக்கு துணையாய் வந்தது! அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய நாட்களும் உண்டு அறிவுகொண்டு உணர்ந்த இரவும் உண்டு! ஆரம்பித்த எதுவும் முடிவு காணும் ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்கும் ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்! இன்பம் துன்பம் சம பங்கே இரண்டும் நாமே உருவாக்கிய பாதைகளே இதயம் திறந்து வரவேற்கப் பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்! ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை ஆன்மாக்களுக்கு இடையிலான பாலமே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை! உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உண்மை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உங்கள் துணையாக நேர்மை இருக்கட்டும்! ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே! எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்! ஏழை பணக்காரன் தற்கால நிலைதான் ஏற்ற இறக்கம் வாழ்வின் இசைதான் ஏமாற்றம் நிறைந்தது இந்த உலகம்தான் ஏணியின் கடைசிப் படி சுடுகாடுதான்! ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு! ஒடுங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல ஒண்டிக்கட்டை ஆனாலும் நிமிர்ந்து நில் ஒரு விளக்காய் என்றும் இருந்து ஒளிர்ந்திடு அணையாத வழிகாட்டும் சுடராக! ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்! உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன் பேராசையால் உடையும் ஒற்றுமை கண்டேன்! ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் சாதி மதம் கடந்து இனம் ஒன்றாகட்டும் அதுவே நம் விடுதலையின் விதையாகட்டும்! ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்! நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் சகோதரர்கள் & சகோதரி கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்குத் தந்தினம்! ராமனை வெறுத்து சீதை பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து சித்தார்த்தன் புத்தனான் அன்பை போதித்து சமயம் பல பிறந்தாலும் சமயம் வளர்க்க அரசு கொலை செய்யுது! ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை மண்ணில் புதைந்த மைந்தர்களின் குரல் என் இதயத்தில் இன்னும் முழங்குகிறது! கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதிவேண்டி கண்ணகி சிலம்பை உடைத்தாள் காதுகேளாத உலகில் நியாயத்திற்காக அழுகிறோம்! விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது! என் பிறந்தநாளைக் கொண்டாடும்போது என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] On this birthday of mine, I look not for candles, but for clarity. Life has walked beside me, sometimes smiling, sometimes silent— like a friend who knows too much to speak. The beautiful life I began now walks toward its close, counting not wealth, but the hearts it has touched. There were days when I ruled with pride, and nights when wisdom ruled me back. Everything that begins must end, but endings are not always defeat— if anger softens, the soul shines clearer, if ego falls, the human rises. I have seen joy and sorrow in equal share, but both were chosen roads of my own making. Open your heart, tell yourself— welcome what comes, and let go of what never was. Faith—yes, it is only a hope that breathes, and charity—only the bridge between souls. I write these words as the sky burns with evening light, until my own fire joins that distant blaze. Let noble dreams rise in the mind, let truth guard every pact you sign. Life will not return once it departs— so let honesty be your final companion. Without courage, failure is certain, without love, union is hollow. He who quarrels with his own people kills his roots before his death. Rich and poor, all stand on temporary ground— ups and downs, a rhythm we must dance. Deceit and loss are teachers too, and even the ladder to the grave has rungs of habit. Do not live folded or afraid; raise your head, even if alone. Be the lamp that burns and teaches light— the “guiding flame” that never dies. I learned from reading, from wandering, from wounds. I sought truth across oceans, and found masks upon men, love traded for coins, and unity broken by greed. I searched for a united Tamil people I found diversity even in the house of death Let the race be one, transcending caste and religion Let that be the seed of our freedom Tamil, rise beyond faith and frontier, be one heart, one hand, one song. Like the banyan root that never breaks, stand firm, even when storms rise. I chose to live as myself no caste, no creed, no hate My brothers and sister visit me in dreams offering me the experiences they had Sita leapt from a world of lies, Buddha turned from war to truth, Religion was born to teach love, but men used it to sharpen swords. I have no mother now, no wife beside, no land to claim The voice of the children buried in the soil Still rings in my heart We lit lamps in Kartikai nights, we planted stones for heroes lost. Kannagi broke her anklet for justice, and still we cry for fairness in a deaf world. We must learn to yield yet live, to ask yet earn, to build a just path that stays. When united, life itself becomes victory. Let us speak the truth together, demand reason, seek remedy, for even the stones of the grave ask questions, and echo with our unfinished songs. Today, as I celebrate my birthday, I smile when I think of myself, I weep when I think of her, I burn with the world’s injustices, and yet— I find joy when I think of death, for it too is but another homecoming. Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna. "என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32134260759555821/?
  4. இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல! அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை . தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன். அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார். அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார். அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள். இளங்குமரன் அந்த பேட்டியில், "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார். தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது? நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன். ஆனால், சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை. ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை. எச்சரிக்கை மணிகளை புரிந்து கொள்ளுங்கள். சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார். சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும். கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள், (மறைமுகமாக) சிறீதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன்நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம். இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது. ஆனால், மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது. இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது. கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது. ஜே.வி.பி. என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம். இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்தக் கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை? இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர். கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது. தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி, கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான். சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரி வராது. ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல! NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவுஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு! திரும்பவும் சொல்லுறன், இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு. ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன்நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான். இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார். குறித்து வைத்துக்கொள்ளுங்கள்! சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து...
  5. மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள். பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார். உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது. ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன. பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது. இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது. அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும். இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும். இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது. யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம். பானுஷா நிமல்… ஊடகக் கற்கைகள் துறை, யாழ் பல்கலைக்கழகம் https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/
  6. 2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது. இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.
  7. இவர்கள் இருவரிலும்தான் எல்லாம். யார் போட்டுத்தாக்கினமோ அவர்களுக்கு வெற்றி. ஸ்மிரிதி ஒரு பெரிய ஓட்டம் அடிக்க எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது. லோரா ஏலவே பெரிதாக அடித்துவிட்டா. அதனால்..... நாம...... என்ன சொல்ல வாறம்..... என்டா. ....... 😆
  8. களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ. written by admin November 1, 2025 பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது. ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. சுயமாக தன்னை அடையாளப்படுத்துவது என்பது வியக்கத்தக்கதொரு விடயம் என்று தான் கூற வேண்டும். எனது முன்னேற்றத்திற்கு பின்னால் எனது தாய் இருக்கின்றாள், எனது தந்தை இருக்கிறார், எனது சகோதரர்கள் இருக்கின்றார்கள் அல்லது எனது ஆசான் இருக்கின்றார் என்பதை தாண்டி எனது முன்னேற்றத்திற்கு பின்னால் நானும் எனது முயற்சியும் இருக்கின்றது என்பது சிறப்பிற்குரிய விடயம்தான். இப்படியான ஒரு இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவரே கிளிநொச்சி வட்டக்கச்சி என்கின்ற அழகியதொரு கிராமத்தை இருப்பிடமாக கொண்ட துஷானி சத்தியசீலன். துஷானி அவர்கள் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு சுயத்தொழில் செய்வதனை ஆர்வம் கட்டிவந்தார். அவருடைய ஆர்வம் பல துறைகளில் திறமை உடையவராக மாற்றியது. பெண் ஒருவர் எவ்வாறான தொழிலை செய்தாலும் அந்தப் பெண் தனக்கென ஒரு கைத்தொழிலை கற்று அதில் தேர்ச்சிகளை பெற்றிருப்பது கட்டாயமானது. அது அவளினுடைய எதிர்காலத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயன் தருவதாக அமையும். பெற்றோர் தனது பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் காண்பார்கள். அவை கனவுகளாகி விடாமல் அதனை நிஜமாக்க வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒவ்வொன்றையும் வழிகாட்டுகின்றார்கள். பிள்ளைகளையும், அவர்கள் செல்லும் வழிகளையும் பெற்றோர் கண்காணிப்பதும் வழக்கம். அதில் ஆதரவும், கண்டிப்பும் இருப்பது கூட வழக்கம் தான். அவ்வாறு துஷானி அவர்களுக்கும் அவரது சுய தொழில் சார்ந்து பெற்றோர்களிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. தனது பிள்ளை நன்றாக கல்வி கற்க வேண்டும், பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாக அரசாங்கத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது பிழையானதொரு விடயமும் இல்லை. ஆனால் துஷானி அவர்களுக்கு மேற்கொண்டு கற்றல் மீதான ஈடுபாட்டை விடவும் அவர் கைப்பணிகளை செய்வதிலேயே பெருமளவில் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைய காலங்களில் பட்டதாரிகளாக இருந்தாலும் நிரந்தரமான தொழிலுக்காக பல காலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு மாறிவரும் சூழலில் துஷானி அவர்கள் கற்றல் செயற்பாட்டை இடைநிறுத்திவிட்டு கைத்தொழிலை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் செய்கின்றார். இன்றைய சூழலில் சான்றிதழ்களுக்கு தான் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. துஷானி அவர்களுக்கு சான்றிதழ் இல்லை என்பதால் அவர்களுடைய உற்பத்திகளுக்கு தரம் இல்லை என்று பலர் மத்தியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சான்றிதழ் என்பதனை தாண்டி தனது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததால் பல துறைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் ஒரு தொழிலை மட்டும் செய்வதுடன் நின்று விடாமல் பல கைவினை உற்பத்திகளை செய்து தொழிலில் முன்னேற்றத்தை அடைந்தார். இவருடைய தொழில்களாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது, நூல் ஆபரண தயாரிப்பு, ரெசின் கலை வடிவமைப்பு, cake செய்தல், online shopping இத்துடன் மேலும் பல கைவினை வேலைகளைக் கொண்டு சுயதொழிலை செய்து வருகின்றார். துஷானி அவர்கள் கைவினை கலைகளில் களிமண் நிகழ்வுகள் தயாரிப்பதை இணையதளங்களின் மூலம் பார்த்து அதன் மீதான ஆர்வத்தினால் தானும் YouTube videos ஊடாக பயிற்சிகளை பெற்று தேர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தியாவில் அணிகலன்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு online வகுப்புகளினூடாக களிமண் அணிகலன்களை உருவாக்குவது தொடர்பாக நுட்பமான விடயங்களை கற்றுக் கொண்டார். இன்று தனக்கானதொரு அடையாளத்தை Qresh store என்ற வணிகத்தளத்தினூடாக தனது சுய தொழில்களை செய்து வருகின்றார். துஷானியினுடைய களிமண் அணிகலன்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர்வோர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவரினுடைய முயற்சியால் பிற்பட்ட காலங்களில் பெற்றோரின் ஆதரவும் கிடைத்தமையானது இவருக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. துஷானியின் இந்த விடாமுயற்சியினால் எவ்வாறு You Tube காணொளிகளை பார்த்து கற்றுக் கொண்டாரோ அதுபோல இன்று YouTube, Facebook, Instagram, Tik Tok, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது வியாபாரத்தை மேம்படுத்துவதுடன் கைவினைகளை செய்வது தொடர்பாக கற்றும் கொடுக்கின்றார். அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக நேர்காணல்களையும் கொடுத்துள்ளார். ஒரு பெண் ஆணுக்கு சமமாக இந்த சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது என்பது சவால்கள் நிறைந்ததாகும். அந்தவகையில் தனது முழுமையான உழைப்பை கொடுத்து சுயதொழிலை மேற்கொண்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் களிமண் அணிகலன்கள் உருவாக்குவதற்கான உபகரணங்களையும் பெற்றுக் கொள்கின்றார். மேலும் அணிகலன்கள் உருவாக்குவதற்கான களிமண்ணை கொள்வனவு செய்து அணிகலன்களை உருவாக்கினார். கொரோனா தொற்றுக் காலபகுதிகளில் களிமண்ணைத் தானே தயாரித்துக் கொண்டார். அந்த காலப்பகுதியில் களிமண் அணிகலன்களை உருவாக்குவதிலும் அவற்றை விநியோகம் செய்வதிலும் பெருமளவான சவால்களுக்கு துஷானி முகம் கொடுத்துள்ளார். இருந்தாலும் சுயதொழிலில் சரிவுகள் ஏற்பட்டாலும் தனது முயற்சியை கைவிடாது போராடி இன்று சமூகத்தில் இளந்தலைமுறை பெண்களுக்கு முன்னோடியாக தடம் பதித்துள்ளார். 22 வயதான துஷானி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுயதொழிலில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளார். அவருடைய இந்த விடாமுயற்சி அவருக்கு சிறந்த அளவில் வருமானத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. கிரிஜா மானுஶ்ரீ கிழக்கு பல்கலைக்கழகம் https://globaltamilnews.net/2025/222165/
  9. நாளைக்கு இந்த‌ கோப்பைக்கு இந்தியா ம‌க‌ளிர் ச‌ந்தோச‌த்தில் முத்த‌ம் கொடுப்பின‌ம் அந்த‌ ச‌ந்தோச‌த்தில் நாங்க‌ளும் நாங்க‌ளும் யாழ் க‌ள‌த்தில் துள்ளி குதிக்கிறோம்..................................
  10. இந்திய மகளிர் வரலாற்று சாதனை .......... ! என்ன கொடுமை சரவணா .........நான் மட்டும் தனியாக "தனிஆவர்த்தனம் " செய்து கொண்டு ......எல்லோரும் அவுஸ் லாஸ் எண்டு ஹவுசுக்குள் முடங்கி விட்டார்களோ.......! 😊
  11. வஞ்சிசிட்டு நெஞ்சை தொட்டு ......... ஜெய்சங்கர் & பிரமீளா ........! 😍
  12. அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.
  13. நன்றி! இது ஒரு பொழுதுபோக்கான விடயம் சீரியசாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அதே போல உங்கள் கருத்துக்களையும் தாராளமாக கூறுங்கள்.
  14. இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...
  15. என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.
  16. எனது வேலையில் ஒரு இந்திய இஸ்லாமியர் வேலை செய்கிறார், அவர் தொழுகைக்கு செல்லும் போது கழிப்பறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு செல்வார், அதனை உணர்ந்ததால் அவரிடம் எப்போதும் வேண்டுமானாலும் சென்றுவாருங்கள் என கூறியிருந்தேன். வேலையில் அனைவருக்கும் கடைசி ஓய்வு எடுக்க விருப்பம், அவருக்கும் அந்த விருப்பம் இருந்தது அதனால் எப்போதும் கடைசியாக போக விரும்புவார் பொதுவாக என்னுடனேயே வேலை செய்ய விரும்புவார், அதற்கு காரணம் பல நாள்களில் அவர் உபவாசம் இருப்பததால் பெரிதாக வேலை செய்யமாட்டார், அந்த வேலைகளையும் சேர்த்து நானே செய்வதுண்டு. இரண்டு வாரத்திற்கு முன்னர் முதலாவது ஓய்விற்கு சென்றுவிட்டேன், மறு நாள் கடைசி ஓய்விற்கு சென்றுவிட்டேன் (அணித்தலைவர் முடிவு) அதனால் அவர் என்னுடன் கதைக்கவில்லை. நான் அதனை திட்டமிட்டு செய்யவும் இல்லை ஆனால் அவருக்கு அது தெரிந்திருந்தும் எனது தவறாக எனக்கு சித்தரித்துக்காட்ட முயல்வதற்காக அவ்வாறு செய்தார் என கருதுகிறேன், இரண்டு மூன்று தடவை வேலை விடயமாக கதைத்த போது கூட பதில் கூறவில்லை, அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டேன் பின்னர் தானாக வந்து பேசுகிறார். அதனாலேயே அவ்வாறு பதிலளித்தேன்.
  17. உண்மைதான். அவ மிக வேகமாக சதமடித்தா. 75 சொச்ச பந்துகளில்.ன என்று நினைக்கிறேன். அதனாற்தான் ஒரு நேரத்தில், அவுஸ்ரேலியா 350க்குக் கூடுதலாக அடிக்கக் கூடிய நிலையில் இருந்தது. கிரிக்கின்போ தளத்தில் அவவைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்.
  18. சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!
  19. நான் அறிய.. விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறு பயிற்சிகளுடன் காவலரண் காப்பாளர்களாக இருந்தவர்களும்,சிறு சிறு அமைப்புகளுக்குள் இருந்தவர்களும் தனிப்பட்ட காரணுங்களுக்காக பல துஷ்பிரயோகங்களை செய்துள்ளார்கள் என நான் அறிந்துள்ளேன். இவையெல்லாம் தலைமை பீடத்திற்கோ அல்லது அது சார்ந்தவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லையாம். நம்பி விடப்பட்டவர்கள் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த இயக்க நடவடிக்கைகளுக்குள் கொண்டு வருவது நியாயமல்ல.
  20. 🤣............... என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣. அதுவென்றால் உண்மைதான்.................🤣. இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.
  21. 👍............. இப்ப ஞாபகத்தில் வருகின்றது.............. கோஷான் இங்கு களத்தில் ஒரு சிறு போட்டியும் வைத்திருந்தார்............... நான் ஆஸ்திரேலியாவை அன்றும் தெரிவு செய்திருந்தேன்............... என்னுடைய ராசி தான் பொல்லாத ராசி போல இருக்கின்றது, ஆஸ்திரேலியாவையே அடிவாங்க வைக்கின்றது..................🤣.
  22. ஓமோம் ஐயனே, இங்கு கவனிக்க வேண்டியது, அவர்களை தனி இனக்குழுவாக (ethnicity/ethnic group) புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்பதுவே. இங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் - சிங்களவரும் தமிழரும் போன்று - தனித் தனியான இனக்குழுக்களாக பிரிந்திருப்பதை தாம் ஏற்பதாகவே தவிபு கூறியுள்ளனர். எனவே அவர்களை தமிழர்களோடு சேருமாறு வற்புறுத்துவது என்பது எப்படி சரியென்று எனக்கு தெரியவில்லை. மேலும் இவ்விரு தமிழ் பேசும் இனக்குழுக்களும் "தமிழ் தேசிய மொத்தத்தின்" (Totality of Tamil nationality) கீழ் அடங்குகின்றனர். (பேரினம் என்னும் சொல் தமிழில் Genus என்பதைக் குறிக்க பாவிக்கிறார்கள், ஆகையாலே மாற்றுச் சொல்லை பரிந்துரைத்தேன்) ஆம், புலிகளே ஏற்ற பின்னர் நானும் அதை எதிர்க்க போவதில்லை.
  23. தமிழ் கார்டியன் மிக நுணுக்கமான ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. தமிழாக்கம் கூகிள்: தமிழர் தாயகத்தின் மக்கள் தொகை வீழ்ச்சி - இலங்கையின் 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு The Tamil homeland’s falling population – Sri Lanka’s 2024 census இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிதாக வெளியிடப்பட்ட முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை இழப்பு மற்றும் தேக்கநிலையின் அடிப்படையில் தமிழ் வடகிழக்கு, குறிப்பாக வன்னிப் பகுதி, தீவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகின்றன. இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் “மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு - 2024 முதற்கட்ட அறிக்கை”யின்படி, வன்னியின் மையப்பகுதியை உருவாக்கும் மூன்று மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகியவை முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை எண்ணிக்கை, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அடர்த்தி விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் பல தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலின் பேரழிவு தாக்கத்தை பிரதிபலிக்கின்றன, இதில் 2009 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன்றுவரை நீடிக்கும் இராணுவமயமாக்கல் ஆகியவை அடங்கும். 122,542 குடியிருப்பாளர்களுடன் முல்லைத்தீவு முழு தீவின் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகையைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் 123,674 மக்கள்தொகை மற்றும் கிளிநொச்சி 136,434 மக்கள்தொகை கொண்டவை. வவுனியாவில் 172,257 மக்கள் தொகை மட்டுமே பதிவாகியுள்ளது. தீவு முழுவதும் மிகக் குறைந்த மக்கள் தொகை நான்கு மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது, அடுத்த அருகிலுள்ள மாவட்டமான திருகோணமலையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகை 442,465 ஆகும் - இது தமிழர் தாயகத்தின் மற்றொரு மாவட்டம். தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும். தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும். கொழும்பு போன்ற பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,500 பேருக்கு மேல் உயர்ந்தாலும், வடகிழக்கில் உள்ள தமிழ்ப் பகுதிகள் மக்கள் தொகை குறைவாகவே உள்ளன. முல்லைத்தீவின் சமீபத்திய வளர்ச்சி விகிதம் 2012 முதல் 2024 வரை 2.23% ஆக உயர்ந்திருந்தாலும், முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மாவட்டம் முல்லைத்தீவு ஆகும், சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் மட்டுமே உள்ளனர். அதைத் தொடர்ந்து மன்னார் (66/கிமீ²) மற்றும் வவுனியா (96/கிமீ²) உள்ளன. ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின் போது கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இறப்புகள் ஏற்பட்ட மற்றொரு தளமான கிளிநொச்சி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 115 பேருடன் ஐந்தாவது மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகியவை கூட மக்கள் தொகை அடர்த்தி தரவரிசையில் கீழ் பாதியில் உள்ளன, இது தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இராணுவமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றின் நீண்டகால மக்கள்தொகை தாக்கத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வடகிழக்கு பின்தங்கிய நிலை ஒட்டுமொத்தமாக, தீவின் மக்கள்தொகையில் வடக்கு மாகாணம் வெறும் 5.3% மட்டுமே, கிழக்கு மாகாணம் 8.2% மட்டுமே, தீவின் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் வளர்ச்சியின்மையின் விளைவாக மட்டுமல்லாமல், பல தசாப்த கால மோதல்கள், பாரிய அட்டூழியங்கள், கட்டாய இடம்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கலையும் பிரதிபலிக்கின்றன. ஆயுத மோதலின் பேரழிவு எண்ணிக்கை, குறிப்பாக பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களைக் கொன்று லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர்த்த 2009 இனப்படுகொலை, இப்பகுதியின் மக்கள்தொகையை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. முறையான மீள்குடியேற்றம் இல்லாதது, தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் முதலீடு இல்லாதது ஆகியவை வன்னியிலும் தமிழர் தாயகம் முழுவதிலும் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. https://www.tamilguardian.com/content/tamil-homelands-falling-population-sri-lankas-2024-census
  24. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா, புதிய அணி உலக சம்பியனாவதை உறுதிசெய்தது 30 Oct, 2025 | 11:30 PM (நெவில் அன்தனி) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (30) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்தியா மூன்றாவது தடவையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதமும் அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் பெற்ற அரைச் சதமும் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வராற்றில் புதிய அணி ஒன்று சம்பியனாகப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை புதன்கிழமை வீழ்த்தி முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்ற தென் ஆபிரிக்கா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 339 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. உபாதைக்குள்ளான ப்ரத்திக்கா ராவலுக்குப் பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஷபால் வர்மா 10 ஓட்டங்களுடனும் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தனா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 2 விக்.) ஆனால், சிரேஷ்ட வீராங்கனைகளான ஜெமிமா ரொட்றிகஸ், ஹாமன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறப்பான நிலையில் இட்டனர். அஹாமன்ப்ரீத் கோர் தசை இழுப்புக்குள்ளான சொற்ப நேரத்தில் அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க விளைந்து ஆட்டம் இழந்தார். அவர் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது தீப்தி ஷர்மா அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து அநாவசியமாக விக்கெட்டை தாரைவார்த்தார். அவர் 24 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் புகுந்த ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று கவனக்குறைவான அடி தெரிவால் ஆட்டம் இழந்தார். அவர் 4ஆவது விக்கெட்டில் ரொட்றிகஸுடன் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிகஸ் 134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள் அடங்கலாக 127 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். ஆமன்ஜோத் கோர் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களைக் குவித்தது. ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த அபார சதம், எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவின. அவர்களின் முயற்சிகள் ஜெமிமா ரொட்றிகஸின் அபார சதத்தினால் வீணடிக்கப்பட்டுவிட்டது. உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய அணித் தலைவி அலிசா ஹீலி வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், ஃபோப் லிச்ஃபீல்ட், எலிஸ் பெரி ஆகிய ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஃபோப் லிச்ஃபீல்ட் 93 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 119 ஓட்டங்களைக் குவித்தார். பெத் மூனி 24 ஓட்டங்களுடனும் அனாபெல் சதர்லண்ட் 3 ஓட்டங்களுடனும் எலிஸ் பெரி 77 ஓட்டங்களுடனும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தார். மத்திய வரிசையில் ஏஷ்லி கார்ட்னர் 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிகஸ் https://www.virakesari.lk/article/229089
  25. அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.
  26. கண் போன போக்கிலே ........! 😍
  27. இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
  28. யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..! Vhg அக்டோபர் 30, 2025 யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம். நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது. ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.? அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது? இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும். அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும் ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர். இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு. தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு. இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார். இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள். இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது. அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர். இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர். எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது. -பா.அரியநேத்திரன்- https://www.battinatham.com/2025/10/35.html
  29. கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்று பிரிந்து, சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 35 ஆண்டுகளாகின்றன. 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம். “யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கட்டளைப்படி 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள். புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று “இளம்பருதி” கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்.நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா? ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம். பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது. பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது…… ஈவிரக்கமற்ற விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று சாதாரணமாக கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதல் அளித்தாலும் பலவந்த வெளியேற்றத்தை நினைத்ததும் உள்ளங்கள் கொதித்தன. முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும். தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது யாழ் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈட்டுடன் கூடிய மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றம் நிகழ அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்…!! கலாபூஷணம் பரீட் இக்பால்- யாழ்ப்பாணம். https://madawalaenews.com/30874.html
  30. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள்' பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. "சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது" என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார். "பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்" அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சுசான் ரீஸ் என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை. கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது "என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக" உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார். தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார். "எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Coral Expeditions ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன. தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது. "காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது," என்று கேத்தரின் கூறினார். "அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்." "இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்." "அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்" என்று நம்புவதாக கேத்ரின் கூறினார். ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபிஃபீல்ட், "சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் 'மிகவும் வருந்துவதாகவும்', ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்" கூறினார். "குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது" என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார். நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் 'டெண்டர்ஸ்' எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) 'க்ரூஸ்' பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார். "பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்" என்று மாலின்சன் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85jk2znvno
  31. இலங்கையில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் என்பது 1977 முன்பு பாரியளவில், அதாவது நாடு தழுவிய ரீதியில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் சில தகராறுகள் இருந்தன. அவை அவ்வப்போது கிளம்பும் போது இரு பகுதியினரிலும் சிவில் சமூகத்தினர் பேசி அதை முடிவுக்கு கொண்டுவருவர். இது கிட்டத்தட்ட யாழ்பாணத்தில் அதே காலப்ப்பகுதியில் அவ்வப்போது கிளம்பும் சாதி சண்டைகள் போன்றதாக இருக்கும். ஆனால் இது இருபகுதி மக்களிடையே பாரிய விரிசலாக, ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டதாக மாறியது ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றிய பின்னரே. வடக்கு மகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவம் இரு பகுதி மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதோடு தமிழர்களின் போராட்டதிற்கும் இதனால் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது. பிள்ளையார் பிடிக்க போக அது குரங்காக மாறிய கதையாக ஆயுத போராட்ட தேவைக்காக முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களது சொத்துகளை அபகரித்த செயல் அதே விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக பலத்த அடியை கொடுத்தது என்பதை உலகளாவிய அரசியல் பார்வையற்ற புலிகளால் அன்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசுக்கு தமிழர் போராட்டத்துக்கு எதிரான பரப்புரை செய்ய உதவியையே அன்று புலிகள் செய்தனர். ஆனால் இன்று கூட இதை புரிந்து கொள்ளாதவர்களாகவே தமிழ் அரசியலில் பலர் உள்ளார்கள். முஸ்லீம்களை வெளியேற்றியது மாத்தயாவின் தவறான அரசியல் தீர்மானத்தால் என்றும், கிழக்கில் அனைத்துக்கும் கருணா தான் காரணம் என்றும், பிரபாகரன் ஒன்றுமே அறியாத அப்பாவி என்றும் இக்கட்டுரை கூறி இருந்தால் இங்கு கருதெழுதிய பலர் இதனை ஆதரித்திருப்பார்கள். கட்டுரை எழுதிய இக்பாலுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கும் இவர்கள் பிரபாகரனின் வக்கீல்களாக இங்கு ஆஜராகினார்களே தவிர நாட்டின் இனப்பிரச்சளைக்கு தீர்வு காணவேண்டும் என்றோ எதிர்கால தமிழ் சந்ததி இலங்கையில் மகிழ்சியாக இனப்பாகுபாடற்ற ஒரு தேசத்தில் வாழவேண்டும் என்ற அக்கறையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியல் போக்கே என்பிபியை நோக்கி மக்கள் வாக்குகள் திரும்பக் காரணம். யுத்தம் காரணமாக பாரிய வீழ்சசியடைந்தி ருந்த தமிழர் சனத்தொகை மெதுவாக வளர்சசியடைய தொடங்கியுள்ளது . இது ஒரு நல்ல அறிகுறி. நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை என்ற நாட்டிற்குள் தான் தமிழ் மக்கள் வாழ்வு . நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் புரிந்துணர்வின் அடிபடையிலேயே ஒரு தீர்வு அமையப்பெறலாம். அதற்கேற்ப நல்லுறவை கட்டியெழுப்புவதும் சிறுபான்மையான இனங்கள் இரண்டும் புரிந்துணர்வின் அடிபடையில் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதும் காலத்தின் தேவை. ஆகவே, இது ஒரு இயக்கத்தின் தவறு மட்டுமே தவிர ஒட்டுமொத்த தமிழர்களின் தவறல்ல என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக இவ்வாறான ஒரு சிலரின் சீண்டல்களை புறந்தள்ளி எமது சமுதாயத்தை வட கிழக்கில் கல்வி, தொழில்நுட்ப, வர்த்தக பொருளாதார அரசியல் ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே இரண்டு தலைமுறையை நாசப்படுத்திய வழியில் சிந்திகாது புதிய தலைமுறையாவது அறிவார்ந்த அரசியலை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை நோக்கி நகருவதற்கான ஆரம்ப வழியையாவது சமைத்து கொடுக்க வேண்டும். அண்மையில் தாயகம் சென்ற போது அவதானித்த விடயம் 2000 ம் ஆண்டுகளில் பிறந்த ஆற்றலுள்ள பல திறமை சாலியான இளைஞர்கள்/ யுவதிகள் பலர் பல கற்கை நெறிகளில் பயின்று தமிழர் அரசியலில் ஆர்வம் அற்று தமிழர் அரசியலில் ஈடுபடுவோர் எல்லாம் படிபறிவற்ற காடையர்கள் என்ற கணக்கில் அந்தப் பக்கம் திரும்பி பார்கதவர்களாக உள்ளனர். நல்வாய்பாக இன மத வெறுப்புக்கு ஆட்படாதவர்களாக அவர்கள் இருப்பது சிறந்த பாராட்டப்படவேண்டிய விடயம் என்றாலும் அவர்கள் அரசியலில் அக்கறையற்று இருப்பது தமிழர் அரசியலுக்கு உணமையில் நல்லதல்ல. ஆனால், அவ்வாறு அவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வெறுப்பு அரசியலைப் பரப்பும் புலம் பெயர்/ தாயக தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.