Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10207
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/10/25 in all areas

  1. நான்கு சுவர்களுக்குள்த் தான் சுதந்திரம் அப்பவும் இப்பவும் இருக்கிறது. அது அப்போ இப்போ பண மூட்டையே காணாமல் போயிருக்கும்.
  2. தொலைபேசி பேசுகின்ற இடம்.. அன்றும், இன்றும். 😂
  3. பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா! 10 Nov, 2025 | 11:20 AM பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார். தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229969
  4. மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்து இந்திரா லோகத்தை கனடாவில் அமைத்து இதயங்கள் இணைந்த நல்ல நாள் இன்பம் பொழியும் திருமணநாள் மகளே! நடனத்தின் நயம் இசையின் இனிமை அன்பின் அலை நீயே மதுரா! அமைதியின் ஆழம் உள்ளத்தில் பலம் பாசத்தின் கடல் நீயே ஹரி! ஆண்டுகள் கடந்தாலும் அன்பு நிலைக்கும் ஆயிரம் நடந்தாலும் உண்மை வாழும் முடிவில்லா ஒளியால் வாழ்வை நிரப்ப பெற்றோரின் வாழ்த்து ஆறாய் பாயட்டும்! புன்னகை விடியலை ஒளிரச் செய்ய அமைதி என்றும் உங்களைத் தழுவ உரிமைக்கு இடமளித்து உணர்வினை மதிக்க இனிதாய் வாழ்ந்திடுக அகிலம் போற்ற !💖 "இன்று போல் என்றும் இணைபிரியாமல், எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்" அப்பா & மாமா: [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Born in Sri Lanka, blossomed in England, Built a heavenly home in Canada’s land. On this day when hearts became one, May joy shower endlessly, my beloved daughter. Grace of dance and music divine, Mathura, your soul forever shines! Hari, the calm depth where love does flow, A sea of affection, pure and aglow. Years may pass, yet love will stay, Truth will guide your hearts each day. With boundless light your lives be filled, By parents’ blessings gently stilled. May smiles brighten every dawn, May peace embrace you when night is drawn. Cherish, respect, and love as one — And live a life the world will crown. 💖 With love and blessings from Appa & Mama மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32305914842390411/?
  5. 😁 சுலபமான விளக்கம் https://www.ato.gov.au/individuals-and-families/paying-the-ato/if-you-don-t-pay/director-penalty-regime
  6. இத்தனை துணிவாக பல வழக்குகளில் எதிர்பார்க்காத தண்டனைகளை வழங்கிய ஒரு நீதிபதியாக இருந்தவர் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில்....... முடிந்தால்..... 2009 க்கு முன்னால் வந்திருக்க வேண்டும். வரவில்லை.... அதற்கான காரணம் என்ன ? இப்போது அவரை யாரோ அரசியலுக்குள் இழுக்க முனைகின்றார்கள். தனக்கு பதவி உயர்வு தரவில்லை என்பதால்.... அவரும் அனுரவைப் பழிவாங்கலாம் என்று நினைத்து ... நான் யார் என்று காட்டுவேன் என்று வெளிக்கிட்டுவிட்டார். மக்களுக்கான அரசியல் இப்போது யாரும் செய்யும் நிலையில் இல்லை .
  7. இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் பேசும் மேடை பேச்சு காணொளி ஒன்று எனக்கு அனுப்பபட்டு பார்த்தேன். விளங்கியது நீங்கள் Island எல்லாம் அவரை பற்றி சொன்னது முழுக்க சரியே தான். ஆனால் தமிழர்களின் தீவிர ஆதரவு அவருக்கு உண்டு உதாரணத்திற்கு சில 👇 இளஞ்செழியன்... இதன் பொருள்: இளம் --இளமையான: அதாவது மனதாலும் தளர்வடையாத இளமை செழியன் : உன்னதமான மதிப்பு மிக்க நல்லொழுக்கம் உள்ள "மனதால் இளமை உடைய மாண்பு மிக்கவர்". இத்தகைய மாண்புகள் கொண்ட உங்கள் தலைமை வந்தால்தான் வீழ்ந்து தாழ்ந்து கிடக்கும் தமிழினம் தலைநிமிரும் ஐயா --- நீதியே பயப்படும் உங்களை பார்த்து ஐயா. நேர்மையின் வடிவமே! உங்களால் தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இறைவன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன். --- தம்பி நீதிபதி இளஞ்செழியன் நீடூழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஈழம் வாழ்க நன்றி வணக்கம்
  8. நானும் இப்போது கணித்து பார்த்தேன். வவுனியா புகையிரத நிலையம் தொடக்கம் புளியங்குளம் புகையிரத நிலையம் வரை கிட்டத்தட்ட 25 கிலோமீற்றர் தூரம் வருகின்றது. இது கிட்டத்தட்ட காங்கேசன் துறை தொடக்கம் சாவகச்சேரி வரையான தூரம். புளியங்குளம் பக்கம் பெருமளவு வயல்/தோட்டங்கள் என்றாலும் இரண்டு அங்கீகாரம் பெற்ற புகையிரத கடவைகள் போதாது.
  9. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அம்மு ·rdSnooestpttm6lt148a161026ah1ti51g0i4mg51934hl8m1141h3a gl1a · JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்கச் சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரைச் சந்தித்தார். பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அந்த தங்கப் பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், அவனுக்கு மரியாதைக் கொடுப்போம். 3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம். 5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நிச்சயமாக வெற்றி பெறுவதில்லை... இது தான் உண்மை √ Voir la traduction ......!
  10. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.
  11. இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.
  12. அததெரண கருத்துப்படம்.
  13. கெய்ரோவில் பொதுவாக உபர் சாரதிகள் ஆங்கிலம் கதைப்பர்கள் எனவே பயப்பட தேவையில்லை. ஆனல் மொபபைல் போன் கவனம் அடித்து பறித்து கொண்டு ஓடிவிடுவார்கள். நேரம் போதுமாக இருக்கும் என நம்புகிறேன். படகு மூலம் வருவதை பற்றி சரியாக நான் கேட்டு சொல்கிறேன்
  14. காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது October 21, 2025 வி. வி.கணேஷானந்தனின் / V. V. Ganeshananthan‘s “The Missing Are Considered Dead”, Copper Nickel, Fall 2019, Issue 29. (எழுத்தாளரின் அனுமதியுடனான தமிழாக்கம் /Translated with permission of the author). தமிழாக்கத்தின் மூல வடிவம் / Original full version of the translation: எனது கணவன் காணாமற்போன அன்று மட்டக்களப்பு ஒழுங்கையில் இருந்த பக்கத்துவீட்டுக்காரி சரோஜினி என் வீட்டுக்கு விடுவிடென்று ஒடி வந்தாள். அவரைப் பிடித்துக் கொண்டு போனதைத் தன் கண்களாலேயே பார்த்தாளாம். அடிவரைக்கும் அழிந்து போன எனது கிராமத்தில் பெண்கள் இப்படித்தான் காணாமற்போனவர்களைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்: “காணாமற் போனவர்கள்” என்பதன் அர்த்தம், “கடத்தப்பட்டவர்கள்”, “கொண்டு போகப்பட்டவர்கள்” என்றால் “கொலை செய்யப்படப் போகிறவர்கள்”. சரோஜினிக்குத் தான் எதிலும் முக்கியமானவள் என்ற நினைப்பு. வழக்கம் போல எனக்குப் பக்கத்தில் நின்றபடி ஒரு சிறு புன்சிரிப்பால் ‘இவளுடைய ஊர்க்கதைகளைக் காதில் போட்டுக் கொள்ளாதே’ என்று சைகை செய்யும் ரஞ்சன் அன்று எனக்குப் பக்கத்தில் இல்லை. ஆனாலும் அவள் தன் கதையை எடுத்துச் சொல்வதை நான் தடுத்து நிறுத்தவில்லை. அவள் சொன்னதை நான் காதில் போட்டுக் கொள்ளாமல் ரஞ்சனைப் பற்றியே யோசித்தேன். அவன் எங்கே? காலப் போக்கில் எனக்குச் சுவாசம் போலப் பழக்கப் பட்டுவிட்ட ஒரு கேள்விச் சிந்தனையின் ஆரம்பம் அதுதான். அந்தச் சுவாசிப்பு தேவையானது மட்டுமல்ல தாங்கவும் முடியாதது. சரோஜினி என்னைத் தேடிக் கத்திக் கொண்டு வந்த போது நான் ரஞ்சன் விட்டுவிட்டுப் போன சில பொருட்களை எரித்துக் கொண்டிருந்தேன். சமையலறைக்குப் பின்னாலிருந்த முற்றத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைப் பற்றி சரோஜினி எதுவுமே கேட்கவில்லை. துர்நாற்றம் வீச அங்கே என்ன உருகிக் கொண்டிருந்தது என்பதில் அவள் அக்கறைப் படவில்லையாக்கும். “நான் அவங்களைக் கண்டன்!” அவள் அடித்துச் சொன்னாள், “அதிரடிப்படைப் பெடியங்கள் அவரைக் கொண்டு போனாங்கள்.” இராணுவத்தினர் அவனைக் கொண்டு போக முன்னர் மூன்று முறை இங்கே வந்ததைச் சொல்லி நான் அவளைத் திருத்தவில்லை. இராணுவமும் விசேட அதிரடிப்படையும் வெவ்வேறு. எனது இழப்பில் பங்கெடுக்க அவளுக்குள்ள ஆவலைக் கண்டதால் “உனக்கு என்ன தெரிந்தது?” என்று கேட்டேன். “அடிக்கடி குடிக்க வாறவன் தான் ரஞ்சனைக் கொண்டு போனவன்,” என்றாள். அது உண்மை. ரஞ்சனைக் கொண்டு போக வந்த ஆமிக்காரன் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனவன் தான். புலிகள் பக்கம் முந்தி இருந்த கருணாவோடு ஒரு காலத்தில் சேர்ந்திருந்த எனது கணவன் பிறகு குடிக்கவெல்லாம் ஆரம்பித்துவிட்டான். சுற்றத்தினருக்கு அவன் மேல் நல்ல விருப்பமும் நம்பிக்கையும் இருந்தன, ஆகவே அவன் புலிகளை விட்டுத் திரும்பி வந்த பிறகு அவர்கள் அவனுக்குத் தேவையானது எல்லாவற்ரையும் தாராளமாகவே கொடுத்து வந்தார்கள். இது இராணுவத்தினருக்குத் தெரியும். ஆகவே அவர்கள் அடிக்கடி ரஞ்சனுடன் பேசுவதற்காக அழையா விருந்தாளிகளாகவும் வரத் தொடங்கி விட்டார்கள். ரஞ்சனுக்கு சிஙகளம் அத்துப்படி. சரோஜினி வளவளப்பதைக் காதில் போடாமலே கேட்டுக்கொண்டு நான் ‘கப்பேடு’க்குப் போய் ஒரு பானத்தை வார்த்துக்கொண்டேன். எனது கணவனைக் கொண்டு போனவன் திரும்ப வரக்கூடும். வந்தால் அவனுக்கு இனியும் விஸ்கியெல்லாம் கொடுத்து உபசரிக்க மாட்டேன். ரஞ்சன் மதுபானங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கின்றான் என்று எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. இப்போ அவன் போய்விட்டதால் எஞ்சி இருப்பதெல்லாம் என்னுடைய சொத்துத் தானே. // உண்மையாக அவன் காணாமற் போன நாளுக்கும், உத்தியோகபூர்வமாக ‘காணாமற்போய்விட்டான்’ என்று பதியப்பட்ட நாளுக்கும் இடையில் முப்பது நாள் இடைவெளி. அது ஏன் என்று கேட்டால் நான் உங்களுக்குச் சொல்லக் கூடியது இதுதான்: அவனைக் கொண்டு போனதை நான் என் கண்களாலேயே கண்டிருந்தாலும்கூட, சரோஜினி வீடுதேடி வந்து சாட்சியம் சொல்லியிருந்தாலும்கூட, அதை முழுதாக நம்புவதற்கு எனக்கு ஒரு வாரம் பிடித்தது. அதற்குப் பிறகும் என்னால் வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்ததால், காணாமற் போனதை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்ய இன்னும் மூன்று வாரங்கள் சென்றன. எனது கணவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். திரும்பி வரவேயில்லை. சாமியறைக்குள்ளே போய்க் கடவுளுக்கு முன்னாலே நகராமல் நிற்க வேண்டும் போல இருந்தது. ஒழுங்கையில் இருந்தவர்கள் என்னைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்: எப்படி ரஞ்சனை அவர்களால் கொண்டு போக முடிந்தது? ஏன் அதை எல்லோருக்கும் சொல்ல எனக்கு அவ்வளவு காலம் பிடித்தது? வம்படிப்பவர்கள் எனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுத் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் கேட்டது. நானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சிந்தித்தேன். அதைத்தான் வம்பர்களும் எதிர்பார்த்தார்கள். கடைசியாக, தளர்ந்து விழுந்து விடாமல் வீட்டு வாசலுக்கு வெளியே செல்லும் அளவுக்குத் தைரியம் வந்ததும், காணாமற் போனதைப் பதிவு செய்யச் சென்றபோது நான் முதல் முதலாகச் சொன்னது துஷாரவுக்குத் தான். நானும் ரஞ்சனும் திருமணம் செய்த காலத்தில் இருந்தே பக்கத்து மூலையிலுள்ள இராணுவக் காவல் முனையில் சென்ட்ரி வேலை பார்த்து வருபவன் அவன். நான் விஷயத்தைச் சொன்னபோது அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு கடுமையாக யோசித்தான், யார் செய்திருக்கலாம் என்று ஊகிப்பதற்காக ஒரு தொலைபேசிப் புத்தகத்தை மானசீகமாகத் தட்டிப் பார்ப்பது போல. ஆனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. நான் கொஞ்சம் அழுதபோதுகூட அவன் கண்டுகொள்ளாதவன் போல நடித்தபடி சீருடைச் சட்டைப் பைக்குள் வைத்திருந்த கைக்குட்டையை மட்டும் கருணையுடன் எடுத்து நீட்டினான். அதற்குப் பிறகு எனது வீட்டைக் கடக்கும் போதெல்லாம் மரியாதை காட்டுவது போலத் தலையைக் குனித்துக் கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு காணாமற் போன பதிவை விசாரணை செய்வதற்காக ஒரு இராணுவக் கேணலை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்தான். லேசாக ஊசிப் போனமாதிரி நாறும் எனது வீட்டுக் கூடத்துக்கு அழைத்துப் போய், தேனீர் கொடுத்து, என் கதை முழுவதையும் சொன்னேன். கேணல் மும்முரமாக விவரங்களை எழுதிக்கொள்ள துஷார அவருக்குப் பின்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். கிரிஷான் அப்போ ஒரு குழந்தை. எனக்குப் பின்னால் அழுதபடி நின்று கொண்டிருந்தான். அவனது விசும்பல்களைக் கேட்ட கேணல் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டார். பக்கத்திலே ரஞ்சன் நிற்பது போல, வெவ்வேறு மனிதர்கள் தன்னைத் தூக்கி வைத்திருப்பதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாதவன் போல, கிரிஷான் உடனேயே மௌனமாகிவிட்டான். நான் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லி, தான் கேட்க வேண்டியவை எல்லாம் கேட்டு முடித்த பிறகு கேணல் எனக்கு விதிமுறைகளை விளக்கத் தொடங்கினார். எனது கணவனைக் கைது செய்ததாக எந்த விதத் தகவலும் அவர்களிடம் இல்லையாம். ஆகவே, அவன் காணாமல் மட்டும்தான் போயிருக்கிறானாம். எந்த நேரமும் திரும்பி வரலாமாம். அவனை இழந்ததற்கு எனக்கு ஏதாவது நட்ட ஈடு தருவதானால் மூன்று வருடங்கள் கழிந்த பிறகு தான் சாத்தியமாம். நான் பேயறைந்த மாதிரி நின்றிருந்தேன். கிரிஷான் இன்னும் சின்னவன். நான் பிரசவத்துக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே வேலைக்குப் போனது கிடையாது. கையிலே காசு எதுவுமே கிடையாது. “என்ன செய்யப் போகிறாய்?” என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமான அக்கறையுடன் கேணல் கேட்டார். அப்போதுதான் “சேர், பள்ளிக்கூடத்தில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்,” என்று துஷார சொன்னான். இப்படித்தான் நான் முந்திப் படித்த பள்ளிக்கூடத்திலேயே துப்புரவு வேலை செய்ய ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைகளுக்கும் தேவையான தகைமைகள் என்னிடம் இருக்கவில்லை. பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்லும் பாதை எனக்கு நன்றாகவே பிடித்தது. நடந்து போகிற வழியில், எங்களிடமிருந்து பறித்த காணிநிலங்களில் இப்போ இராணுவத்தினர் கட்டியெழுப்பும் அழகான உல்லாசப்போக்கிடம் தெரிந்தது. அப்பாவின் பழைய வீடும் பாட்டி குளித்த கிணற்றடியும் தெரிந்தன. கிணறு முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. எல்லையில் போட்டிருந்த முள்ளுக் கம்பி வேலி வரைக்கும் போனால் உடைந்து போன கிணற்றின் சீமெந்து வட்ட விளிம்பு தெரியும். நான் கிரிஷானைத் தூக்கிக் கொண்டு போகிற போதெல்லாம் துஷார எனக்குக் கை காட்டுவான். பிறகு கிரிஷான் வளர்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வரத் தொடங்கியபோது, ஆமிக்காரர்கள் தகப்பனில்லாத அவனைப் பார்த்துச் சிரித்தபடி “ஹலோ சின்னவன்” என்று அழைப்பார்கள். அவர்களின் கண்களில் இலகுவாக வரும் கனிவு என் கணவனின் ஞாபகமூட்ட, எனக்குக் குமட்டிக் கொண்டு வரும். அவர்களின் தாய்களைப் பற்றி நினைவு எனக்கு வந்ததும், கிரிஷானை இறுக்கிக் கட்டிப் பிடிப்பேன். என்னைப் போல ஒரு கணவனில்லாத பெண்ணுக்கு, கையில் பணமில்லாத ஒரு தாய்க்கு, மூன்று வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். சீமெந்துத் தரைகளை வட்டவட்டமாக ஈரத்துணியால் துடைத்தேன். கரும்பலகைகளைக் கழுவினேன். மாணவர்கள் சிந்தி விட்டுப்போன புத்தகங்களை மீண்டும் புத்தகத்தட்டுகளில் அடுக்கினேன். அவர்கள் பகலுணவு சாப்பிட்ட மேசைகளைத் துடைத்தேன். நான் அங்கே படித்த கால ஞாபகங்கள் வந்து போயின. மாணவர்கள் என்னைக் கருணையோடு நடத்தினார்கள். ஆசிரியர்கள் என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை. அதுவும் ஒரு கருணைதான். அங்கு துப்புரவு வேலை செய்வது எனக்குப் பெரிய அவமானம் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கலாம். நான் படித்த காலங்களில் கணிதத்தில் வகுப்பிலேயே நான்தான்கெட்டிக்காரி. ஆங்கிலத்தில் அதைவிடக் கெட்டிக்காரி. எனது ஆங்கிலத் திறமையைப் பார்த்து விட்டு நான் வெளிநாடு போவேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், மத்தியகிழக்கு நாடொன்றுக்கு, அல்லது ஐரோப்பிய நாடொன்றுக்குக் கூடப் போகும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் தும்புக்கட்டையோடு மண்டபத்தில் பின்னால் நின்று கொண்டு பார்ப்பேன். எல்லோரும் என்னைக் கண்டுகொள்ளாத மாதிரியே நடந்து கொள்வார்கள். ஆகவே எனக்கும் தங்கு தடையின்றி எல்லோரையும் போல நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது போன்ற உணர்வு வரும். நான் ஒரு முழுமையான மனைவியாகவும் இல்லை, முழுமையான விதவையாகவும் இல்லை, ஒரு புலியாகக் கூட ஒருபோதும் இருந்ததில்லை. ரஞ்சன் எனக்குப் பக்கத்தில் நிற்கின்றான் என்று கற்பனை செய்து கொள்வேன். அவனது அகலமும் ஆழமும், அவன் உடம்பு எடுத்திருக்கக் கூடிய இடமும் என் கற்பனையில் துளிர்ப்பன. தாறுமாறாக வளர்ந்த அவனது மீசை, அவனது புன்னகை, எல்லாம் நினைவில் வந்து போயின. “உன்னுடைய மகனும் இங்கே ஒரு நாள் படிப்பான்,” என்று யாரோ பெருந்தன்மையாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்னதற்கு நான் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் வெறுப்பைப் பொங்க வைத்தது. // அந்த முதல் வருடம் வாரத்துக்கு ஒரு முறை துஷாரவையும் கேணலையும் பார்க்கப்போய் ரஞ்சனைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று விசாரிப்பேன். கண்ணியமாகவே ஆரம்பிப்பேன்: உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியுந்தானே, என்று கெஞ்சினேன்; என்னை ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள், என்னைப் பற்றி நன்றாகவே தெரிந்தவர்கள். எனக்கு அவன் திரும்பிக் கிடைப்பது மட்டும் தான் தேவை. ஆமிக்காரர் தான் அவனைக் கடத்திக் கொண்டு போனார்கள் என்றால் நான் யாருக்குமே சொல்ல மாட்டேன், சொல்லத் தேவையுமில்லை. அவன் இப்போது புலிகளோடு இல்லை. வெறுமனே கிரிஷானின் அப்பா மட்டும்தான். தயவு செய்து அவன் எங்கே என்று சொல்ல மாட்டீர்களா? கேணல் ஒரு கூடாத மனிதரல்ல. துஷாரவை விடத் தொலைவிலிருக்கும் கிராமத்திலிருந்து வந்தவர். என்னை மௌனமாக வெறித்துப் பார்ப்பார். இரண்டாவது வருடம், எனக்கு குறைச் சம்பளத்தில் நிறைய வேலை இருந்தபோது மாதமொருமுறை மட்டும் தான் போனேன். ஆனால் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது ரஞ்சன் பக்கத்திலேயே படுத்திருப்பதாக ஒரு பிராந்தி. எப்போவாவது ஒரு நாள் சரோஜினி தெருவைக் கடந்து வந்து அவன் எங்கே சிறை வைக்கப் பட்டிருக்கிறான் என்று தான் கேட்ட வதந்தியைப் பகிர்ந்து கொள்வாள். உன்ரை மனிசன்.அந்த வார்த்தைகளைக் கேட்பதற்காகவே நேரத்தைப் பார்க்காமல் அவள் சொல்லும் கதை கேட்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவளும் வருவதை நிறுத்திக் கொண்டாள். எனது தனிமை அவளைச் சங்கடப் படுத்தியிருக்கலாம். எனது கணவன் இருந்தபோது அடிக்கடி வந்து போன அயலவர்களும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. தெருவில் காணும் போது கண்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். கடைசியில் மூன்றாம் வருடத்தில் கேணலுடனான உரையாடல்கள் சம்பிரதாயபூர்வமாயின. ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்பேன். பல அதிகாரிகளுக்கும் அனுப்பிய கடிதங்களின் பிரதிகளைக் காட்டுவேன். அவர் மறதியோடு தலையாட்டும் போது ஒரு நாளுமே நற்செய்தி வரப்போவதில்லை என்ற உண்மை எனக்கு உறைக்கும். என்னைப் பார்த்துச் சிரித்த, சிரிக்கக் கூடிய, மனிதர்கள் துஷாரவும் அவனது நண்பர்களும் தான். முள்ளுக்கம்பியின் பின்னால் எங்கள் வீடுகள் இருந்த காணியில் ஒரு வளரும் குழந்தை போல அந்த ஆமி ஹோட்டல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு சீமெந்து வார்க்கும் ஆமிக்காரர்களின் முகங்கள் வியர்வையால் மின்னுவன. // ஒவ்வொரு மாதமும் ஏழாந்திகதி கலண்டரைப் பார்த்தபடி என் காலம் போனது. நான் ஒரு ஏழை என்று முதலே சொல்லியிருக்கிறேன் தானே. முதல் வருடம் முடியும் போது கிரிஷானிடம் காலணி இல்லாமல் போனது; இரண்டாம் வருடம் முடியும்போது.அவனது உடைகள் அளவில்லாமற் போயின. மூன்றாம் வருடத்தின் இறுதி நாட்களில் அவனை அசப்பில் பார்த்தால் ரஞ்சன் தன் வாழ்க்கையின் அதல பாதாள கட்டத்தில் இருந்தத்தைப் போலவே இருந்தான். புலிகளுடன் இருந்த காலம் ரஞனைப் பொறுமை போன, உடல்தேய்ந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. கிரிஷான் இன்னும் என் செல்லக் குட்டிதான், ரஞ்சனைப் போலவே முகம் கொண்ட அமைதியான குட்டி. ஆனால் அவனுக்கு நான்கு வயது என்றாலும், நாள் போகப்போக அவன் வளராமல் தேய்கிற மாதிரி இருந்தது. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு ஒரு புதுத் தலைமையாசிரியர் வந்தார். என்னைப் பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் பின்னுக்கு நின்று வேலை செய்யச் சொன்னார். அவர் இராணுவத்தினரின் நண்பர். நான் எப்படிப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன் என்ற கதை அவருக்குத் தெரியும். நான் சொல்வது புரிகிறது தானே—அவரது சொந்தப் பொருள்களைத் துப்பரவாக்கவும் பராமரிக்கவும் அவருக்குத் தேவையிருந்தது. தையல் வேலை, திருத்த வேலை, கோப்புகளைக் கோவைப் படுத்தும் வேலை—வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய உடன்பட மாட்டார்கள். அவருக்குத் தேவையாயிருந்தது ஒரு சுறுசுறுப்பான, கெட்டித்தனமான, காசில்லாத, ஆகவே யாரிடமும் ஏதும் சொல்லி முறையிடமாட்டாத பெணதான். பகல் வேலைகளில் கிரிஷான் கன்னியர் மடப் பாலர் பள்ளிக்குச் செல்வான். மாலை நேரங்களில் அவர்களுக்கு வேறு வேலைகள் இருந்ததால் பிள்ளைகளைப் பராமரிக்க மாட்டார்கள். மாலை நேரங்களில் என் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள எனக்கு யாருமே உதவிக்கு இருக்கவில்லை. அதற்கு, என்வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது, சுகம் விசாரிக்க வரும் இராணுவத்தினர் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நான் கிரிஷானை என்னுடன் கூட அழைத்துக் கொண்டு மாலை வேலைக்குப் போகலாமா? அவன் அமைதியான பிள்ளை. தலைமையாசிரியர் சம்மதிப்பார் தானே. கிரிஷான் தொடர்ந்து வரமுடியாத ஏதாவது இடத்துக்கு நான் போகவேண்டுமென்றால் என் பிள்ளை பொறுமையாகக் காத்திருப்பான். அதற்கு அவன் இப்போ நன்றாகப் பழகிவிட்டான். கிரிஷானைக் கூட்டிக் கொண்டே வேலைக்குப் போவது என்று நான் தீர்மானித்துவிட்டபோது துஷார வழமை போல ஒரு கோப்பை தேனீர் கேட்டு வந்தான். அப்படி அவன் வரும்போது எனக்கு மறுப்புச் சொல்ல முடிவதில்லை. அவனுக்கும் வயசு வந்துவிட்டது. அவனது கழுத்து ஒரு வளர்ந்த மனிதனின் கழுத்தாகப் பரந்திருந்தது. படையினர் செய்யும் கடினமான கட்டட வேலைகளால் அவனது கைகளும் தோள்களும் செழிப்பாகத் திடர்ந்து முறுகியிருந்தன. என்னிடம் கடைசியாக மிஞ்சியிருந்த பிஸ்கட்களை அவனுக்குக் கொடுத்து, நான் வேலைக்குப் போக வேண்டுமென்று சொன்னேன். அவன் கிரிஷானைப் பார்த்தபடி, “உன் மகனை ஒருமுறை பாத்துட்டுப் போகலாம் எண்டுதான் வந்தன்,” என்றான். “நீ திரும்ப வேலைக்குப் போறியா?” என்று குழம்பிய முகத்தோடு கேட்டான். “இப்போ பின்னேரமல்லவா? நான் அவனைப் பாத்துக் கொள்றன்,” என்றான். இராணுவத்தில் இருந்தாலும் இன்னமும் ஒரு சிறு பையனாகவே இருந்த துஷாரவை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு என் பையனைப் பார்த்தேன்—அவன் ரஞ்சனைப் போல ஒரு புலியாக ஒருநாளும் வரப்போவதில்லை. இந்த உண்மைகள் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. நான் சந்தித்திருந்த மற்ற சில இராணுவத்தினரைப் போல அல்லாமல் துஷார தான் எனது நண்பன் என்றே தன்னை வரித்துக் கொண்டான். துஷாரவோடு கிரிஷானை விட்டுவிட்டு தனது அலுவலகத்தில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்த தலைமையாசிரியரிடம் வேலைக்கு நடந்து போனேன். // எனது நேரம்—ரஞ்சனின் நேரம்—முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு வருகை தந்தார். அந்த விசேட நிகழ்வுக்காகப் பள்ளிக்கூடத்தைத் துப்புரவாக்க இன்னும் சிலரைத் தற்காலிக வேலைக்கு அமர்த்தியிருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகள் தேசிய கீதம் பாடுவதற்குப் பயிற்சி செய்தார்கள். எனக்குப் புதுச்சீருடை வழங்கப்பட்டது. வழக்கம் போல மண்டபத்தின் பின்பக்கத்தில் என்னை நிற்க விட்டார்கள். நான் இந்த வருகையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் துஷாரவுக்கும், மட்டக்களப்பில் இருந்த மற்ற இராணுவத்தினருக்கும், இந்த மனிதரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி மிகுந்த உற்சாகம் இருந்தது என்று எனக்குத் தெரியும். அவரது முகம் ஒரு புதிய முகம், ஆனால் அதே நேரத்தில் பழைய முகமும் தான்—பல முந்தைய அரசுகளில் பங்கெடுத்திருக்கிறார். இப்படியான பெருந்தகைகள் விஜயம் செய்யும் போது வழக்கமாக நடப்பது போலவே இராணுவத்தினர் வந்து முன்வரிசையில் நின்று அணிவகுப்பு மரியாதை செய்தார்கள். அவர் உரையாற்றிய போது நான் ரஞ்சனைப் பற்றி நினைத்தேன். அரசியல் என்றால் அவனுக்கு உயிர். பின்சுவரோடு சாய்ந்தபடி நான் எனது தும்புக்கட்டையை இறுகப் பிடித்திருந்தேன். அவ்வளவு தூரத்திலிருந்தும் அந்த மனிதரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அது ஒரு உறுதியில்லாத முகம். எனது ஊரில் எஞ்சியிருந்த கணவர்களெல்லாரும் வெளியேறியோ எடுத்துச் செல்லப்பட்டோ காணாமற் போன பல வருட யுத்த காலத்தில் அவர் அனுபவித்த நிம்மதியான வாழ்க்கையால் அவரது தாடை மறைந்து முகம் செழிப்பாக இருந்தது. அதே காலத்தில் துஷாரவுகளும் அவர்களது கேணல்களும் தத்தம் கிராமங்களை விட்டு வெளியேறி எங்கள் கிராமத்தை ஆக்கிரமிக்க வந்தார்கள். அரசாங்கப் பிரதிநிதி சிங்களத்தில் பேசினார். இதற்கெல்லாம் கோபம் கொந்தளிக்கத் தேவையான சக்தி எனக்குள்ளே வரண்டு போய்ப் பலகாலம். சோகம் மட்டும்தான் மிச்சம். அவர் சொன்னதைக் கவனமாகக் கேட்க முயற்சித்தேன். எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியாது. அவர் ஒரு வசனத்தைச் சொன்ன போது அரங்கிலிருந்த மக்களிடையே ஒரு சலசலப்பு. சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்தேன். சரியாகப் புரியவில்லை. வாயைத்திறந்து “என்ன?” என்று கேட்டேன். முதலில் எனக்குள்ளே மட்டும். பிறகு பக்கத்திலிருந்த தற்காலிக வேலையாளரைப் பார்த்து. ஆனால் அவளுக்கும் சரியாகக் கேட்கவில்லை, சிங்களமும் நன்றாகத் தெரியாது. பல முக்கியஸ்தர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கேட்பவர்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காகத் தாங்கள் சொன்னவற்றை திருப்பிச் திருப்பிச் சொல்லுவார்கள் அல்லவா? இவரும் அப்படிச் சொல்லிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இரண்டு பேரும் கழுத்தை வளைத்து அரசாங்கப் பெருந்தகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தோம். ஆனால் அவர் எதையும் திருப்பிச் சொல்லவில்லை. நான் பிறகு துஷாரவைக் கேட்கலாம். மூன்று வருடங்களுக்கு முன்னென்றால் ரஞ்சனைக் கேட்டிருப்பேன். இராணுவத்தினர் எனது கணவனை அடிக்கடி சந்திக்க விரும்பியதற்கு ஒரு காரணம் மொழிபெயர்ப்பு இல்லாமலே அவர்கள் அவனைச் சங்கடப்பட வைக்க முடிந்தது. // அரசாங்கப் பிரதிநிதி சொன்னது என்னவென்றால், இப்போது காணாமற் போனவர்கள் எல்லாரும் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்பதே. துஷார மெல்லிய குரலில் சொன்னான். எங்களுக்கு இது தெரிந்த விஷயம் தானே என்றான். அவன் அழுகையின் விளிம்பில் நின்றதும் எனக்கு அழுகையே வராததும் அவன் எத்தகைய கருணையுள்ளம் கொண்டவன் என்பதை உங்களுக்கு விளக்கும். அவன் எனக்கு இதைச் சொன்னபோது கிரிஷானைத் தன் மடியில் முகம் பார்த்தபடி வைத்திருந்தான். இந்தமுறை தேனீருக்குப் பதிலாக விஸ்கியைக் கொடுத்திருந்தேன். தனது மன உளைச்சலை எனது மகனுக்குக் காட்டி விடக்கூடாது என்று அவனைத் திருப்பி முழங்காலில் குதிரைச் சவாரி விளையாட்டுக்குப் போல இருத்தினான். “அம்மா, குதிரை!” கிரிஷான் தமிழில் சொன்னன். “Horse,” என்று நான் ஆங்கிலத்தில் சொன்னேன். பிறகு துஷாரவைப் பார்த்து, “திருப்பிச் சொல்லு,” என்றேன். “அந்தச் சொல்லைச் சிங்களத்தில் திருப்பிச் சொல்லு.” துஷாரவின் மடியில் கிரிஷான் ஒரு குட்டி துஷாரவைப் போலத் தெரிந்தான். ஓரு குட்டி ரஞ்சனைப் போல. நான் வேலை செய்யும் தலைமை ஆசிரியரின் ஒரு குட்டி வடிவம் போல. எது உண்மை என்று சொல்லும் திறமை என்னை விட்டுப் போய்விட்டது. நேரம் முன்னோக்கி எதிர்காலத்துக்குப் போக வேண்டுமா, பின்னோக்கிக் கடந்த காலத்துகுப் போக வேண்டுமா, அல்லது அப்படியே தற்காலத்தில் உறைந்து நிற்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. // உங்கள் கணவரைக் கொண்டு போய் மூன்று வருடங்கள் முடிந்ததும் அவர்கள் உங்களுக்கு நட்ட ஈடு செலுத்துவார்கள். உங்களுக்கு இந்தத் தொகை உரித்து என்று ஒரு சான்றிதழ் தருவார்கள். நான் ரஞ்சனுக்காகக் காத்திருந்தேன். அவன் மறைந்து போய் மூன்று வருடம் முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் போது இன்னுமொரு மனிதனை என்னிடம் கொண்டு வந்தார்கள். கைவிலங்குகள் அவன் கைகளைப் பிணைத்திருந்தன. அவன் முகம் வீங்கியிருந்த விதத்தைப் பார்க்க எனக்கு என்ன செய்வது என்றோ அவனோடு எப்படிப் பேசுவது என்றோ தெரியவில்லை. நான் முந்தி ரஞ்சனோடு இருந்த காலத்தில் அவன் முகத்தை என் உள்ளங்கையால் அரவணைத்த மாதிரி இந்த மனிதனின் முகத்தையும் என் உள்ளங்கையில் ஏந்தியிருந்தாலும் அவன் முகத்தில் பரவியிருந்த காயங்களுக்கூடாக அவனது எலும்புகள் எங்கே இருக்கின்றன என்று கூடச் சொல்ல முடியாது. அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த துஷார தன் கண்களை என்பக்கம் எதிர்பார்ப்புடன் திருப்பினான். கட்டப்பட்டிருந்த மனிதன் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்தான். நான் தான் என்று அவர்களுக்குச் சொல்லு கண்ணம்மா, அவர்களுக்குச் சொல்லு குஞ்சு. ஆனால் அது எனக்குத் தெரிந்த வாயல்ல. வரண்டு வீங்கிப் போயிருந்த அவன் நாக்கால் தெளிவாக உச்சரிக்க முடியவில்லை. அவன் கன்னங்கள் அழுகிய பழங்கள் போல வீங்கியிருந்தன. அவனுக்குத் தண்ணீரோ தேனீரோ விஸ்கியோ கொடுக்கலாமா என நினைத்தேன். அவனோடு தமிழில் பேச எனக்கு அனுமதி தருவார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அல்லது அந்த அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நான் படித்துக் கொண்ட ஒரேயொரு சிங்கள வசனத்தை அவனுக்குச் சொல்லலாமா: காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது. “இவன் உங்கட புருஷன் எண்டு சொல்றார்,” கேணல் எனக்கு விளக்கினார். “நீங்க ஒவொரு மாசமும் எங்ககிட்ட விசாரிக்க வருவீங்க. ஆனபடியாத்தான் இவன உங்ககிட்ட கொண்டு வந்தோம். நாங்க எல்லாம் சரியாத்தான் செய்வம் எண்டு இப்ப உங்களுக்கு தெரியுங் தானே. இவந்தான் உங்க புருஷன் எண்டா அவனைக் கூட்டிக் கொண்டு நீங்க எங்கயாவது துர இடத்துக்குக் போக வேணுங்.. பக்கத்து ஊரில கொஞ்சம் காணித்துண்டு இரிக்கு. உங்களுக்கு வேணுமெண்டா உங்க காணியக் குடுத்துட்டுப் பதிலா அதை எடுக்கலாம்.” போகவேணும். போகலாம். இந்தச் சொற்களின் அர்த்தங்கள் மொழிக்கு மொழி மாறலாம். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்பட வேணும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கட்டாயமாகக் கருத வேணும். இறந்து விட்டார்கள் என்று நீங்கள் கருதலாம். இதைத்தான் அரசாங்கப் பிரதிநிதி சொல்ல விளைந்தார். எங்களுக்கு விமோசனம் தருகிறார் என நினைத்தாரா? –வேணும், -லாம், இந்த சொல் விகுதிகள் எல்லாவிடமும் வியாபித்து இருக்கின்றன. அவற்றின் அர்த்தங்கள் என்னவாக இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத மனிதனோடு என் வீட்டை விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை. அவனுடைய புலி அடையாள அட்டையை எரித்து உருக்கி விட்டேன் என்று ரஞ்சனிடம் சொல்ல வேண்டும் போல இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் அட்டை இப்போ வேறேதோவாக உருமாறியிருந்தது. அந்த மனிதனை எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும்போல இருந்தது. எங்கே போயிருந்தாய்? உனக்கு என்ன செய்தார்கள்? நான் இல்லை என்று சொன்னால் உனக்கு என்ன நடக்கும்? உன்னைக் காப்பாற்ற என்றாவது நான் ஆம் என்று சொல்லி உன்னுடன் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்? எனது கணவன் ஒரு நாளும் திரும்பி வர முடியாமற் போகும். எனக்குப் பின்னால் அந்தக் கதவு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். ஆனால் இந்த முன்பின் தெரியாத மனிதனும் ஒரு மனிதன்தான். யாருக்கோ சொந்தமானவன்தான். இப்போ நான் இவனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சில வேளை யாருமே அவனை ஏற்றுக் கொள்ளாமற் போகலாம். நான் அவனை இருட்டிலும் இருண்ட இடத்துக்குத்தான் அனுப்பி வைத்ததாக இருக்கும். எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று எனக்குத் தெரியாது. நான் யார், என்னிடம் என்ன உள்ளது என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிஷானின் குரல் என் பின்னே கேட்டது. அவன் சின்னஞ்சிறு கை என் கையுடன் பின்னிக் கொண்டது. “அம்மா, இது அப்பாவா?” அவன் கேட்டான். காணாமற் போனவர்கள் இறந்து விட்டார்கள் எனக் கருதப்படுகிறது என்று அந்த அரசாங்கப் பிரதிநிதி சொன்னார். ஆனால் அவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்: அவர்கள் மேல் அன்புவைத்தவர்களால் தவிர. “அப்பாவா?” கிரிஷான்மீண்டும் கேட்டான். “இல்லை கண்ணா,” “இல்லை, இல்லை,” நான் கேணலைப் பார்த்துச் சொன்னேன். கேணல் தலையாட்டினார், முதலில் மெதுவாக, பிறகு உறுதியாக. நான் திரும்பவும் சொன்னேன், “இது அவரல்ல.” “நிச்சயமாகவா?” என்று கேட்டார் “நிச்சயமா,” என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் என் மனத்தை எதுவும் மாற்றியிருக்காது என்றாலும், நான் செய்தது சரியா என்று எப்பொழுதுமே எனக்குத் தெரிய வராது என்பதும் எனக்குப் புரிந்திருந்தது. அந்த மனிதனின் முகத்தை அதன் பின் காண்பதற்கே எனக்குப் பயமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் தருணத்தில் அவன் முகமில்லாத மனிதனாகவே நின்றான். அவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் போன பிறகு நான் திரும்ப ஒரு முறை அந்தக் கலண்டர் இருந்த இடத்துக்குச் சென்றேன். இந்தமுறை நான் ரூபாய்களைப் பற்றி நினைக்கவில்லை. எனது நெஞ்சைக் கட்டி இறுக்கியிருந்த உணர்வு எப்போதாவது ஒருநாள் விலகுமா என்பதைப் பற்றி நினைத்தேன். எத்தனை நாட்களுக்குப் பிறகு அரசாங்கம் எனக்கு விதவைப் பட்டம் அளிக்கும் என்று அந்தக் கலண்டர் கூறியது. ஆனால் என்முன்னே நீண்டு இருக்கும் என் எஞ்சிய வருடங்களை யாராலும் அளக்க முடியாது. என் நீண்ட வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன https://ezi.asokan.org/2025/10/21/காணாமற்போனவர்கள்/?fbclid=IwdGRleAN76QhjbGNrA3vVS2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR75GU23D98e6cXAcZ0arxZfrZl1L6KfpKvnqC1YCnoqvn7ZsUQkaMCeSZIHzg_aem_Se7s0UWJ08rE2ycxU-0u_A
  15. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான். வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது. மூளையும் மனமும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும். "மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார். "நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது. மனதில் தோன்றும் படங்கள் வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான். "நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார். நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா? புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர். "ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன. "உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார். இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு. "நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும். இயக்கம் செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா? "நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார். காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். "ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார். போட்டி ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? "ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார். மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன. நேரடி அல்லது மரபுத்தொடர் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார். "இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன. இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது. நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்? கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா? மார் அப்படித்தான் நம்புகிறார். "நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார். "உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
  16. யானை · "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா "இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல" தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்... "கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்... அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது "இது என்னங்க" "மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா "மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"... "அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா.. தோழர் ஜீவா ❤ வீராசாமி Voir la traduction இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂
  17. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | “மோபி டிக் (Moby-Dick)” நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” நாவல் திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டு தத்துவங்களுக்கு வலை வீசிய நாவல் அ. குமரேசன் மதம் கூறும் தத்துவங்களை விசாரணைக்கு உட்படுத்துகிற, இயற்கையில் மனிதரின் இடம் என்று விவாதிக்கிற ஆழ்ந்த உள்ளடக்கத்திலும், மாறுபட்ட சித்தரிப்பு வகையிலும் முத்திரை பதித்த படைப்பு என இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிற ஒரு நாவல், அது வெளியானபோது (1851) கரடு முரடான எழுத்து நடை என்று புறந்தள்ளப்பட்டது. மிக நீளமாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புத்தகக் கடைகளில் விற்பனையாகாததால் பதிப்பகங்களால் புறக்கணிக்கப்பட்டவராக ஒரு துறைமுகப் பணியாளராக வேலை செய்தார் அதன் படைப்பாளி. இவரை எழுத்தாளர் என்று சொல்கிறார்களே என மற்றவர்களால் பேசப்படுகிற அளவுக்கே இருந்தவர் தனது மற்ற படைப்புகளும் ஏற்கப்படாத நிலையிலேயே காலமானார். ஹெர்மன் மெல்வில் (Herman Melville) அந்த அமெரிக்க எழுத்தாளர் பெயர் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) (1819–91). அவருடைய அந்த முக்கியமான நாவல் ‘மோபி டிக்’ (Moby-Dick). கடல் சார்ந்த வாழ்க்கையே மையமாக இருக்கும் மாலுமிகளும் தொடர்ச்சியாகப் பயணிக்கிறவர்களும் கப்பல்களை அடிக்கடி தாக்கக்கூடிய குறிப்பிட்ட திமிங்கலங்களுக்கும் இதர பெரிய உயிரிகளுக்கும் அடையாளப் பெயர்கள் சூட்டுவதுண்டு. அப்படி, கடலில் அட்டகாசம் செய்யும் ஒரு வெள்ளைத் திமிங்கலத்திற்குச் சூட்டப்பட்ட பெயர்தான் மோபி டிக் (Moby-Dick). அக்காலத்தில் மெழுகு, சில வாசனைத் திரவங்கள், எந்திர உயவுப்பசை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கொழுப்பு எண்ணைக்காகவும், உணவுக்கான இறைச்சிக்காகவும், மருத்துவ ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையால் வெட்டியெடுக்கப்பட்ட உறுப்புகளுக்காகவும் திமிங்கல வேட்டைகள் கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டன. அதன் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு பசை, கடல் நீரில் மிதந்து, சூரிய ஒளியால் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒரு நறுமணத்தைப் பெறும். அம்பரிஸ் எனப்படும் அந்தப் பொருள், மனிதர்களின் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது! குறிப்பாக ‘விந்துத் திமிங்கலம்’ (ஸ்பெர்ம் வேல்) எனப்படும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டன. அவற்றின் தலை வழியாகக் கிடைக்கும் கொழுப்பு எண்ணெய் விந்து போன்ற நிறத்துடனும் பசைத்தன்மையுடனும் இருப்பதால், அது திமிங்கலத்தின் விந்து என்று தவறாகக் கருதப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டது. (கடலில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து நாடுகளிடை திமிங்கல ஆணையம் (IWC) அமைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில்தான் வணிக நோக்கத் திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் அந்தத் தடையைக் கண்டுகொள்வதில்லை). கடலில் இறங்கும் கப்பலின் கேப்டன் அந்த மோபி டிக்கையும் தேடுகிற பயணத்தின் மூலமாக மனிதர்களுக்கும் இதர உயிரிகளுக்குமான உறவு பற்றியும் பேசுகிறது இந்த நாவல். வேட்டையின் கதை சாகச வேட்கையும், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபடும் விருப்பமும் கொண்டவனான இஸ்மேல் ‘பிக்வோட்’ என்ற திமிங்கல வேட்டைக் கப்பலில்,ஒரு மாலுமியாக வேலைக்குச் சேர்கிறான்.. அவனுடைய பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. கப்பலின் கேப்டன் அஹாப் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்திக் கொண்டவர். மிகுந்த பிடிவாதக்காரரான அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தது மோபி டிக் (Moby-Dick) திமிங்கலத்தைப் பிடிக்க முயன்றபோதுதான். அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற பழியுணர்வோடு இருக்கிறார். அதற்காகவே உலகின் எல்லாக் கடல்களிலும் கப்பலைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார். அவருடைய பணியாளர்களுடன் திமிங்கல வேட்டைக்காரர்களான மூன்று பேர் சேர்ந்துகொள்கிறார்கள். பின்னர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஈட்டி எறிபவர்களான மூன்று பேர் அஹாப்பின் பழிவாங்கல் பயணத்தில் இணைகிறார்கள். அந்தப் பயணத்தை இஸ்மேல் சித்தரிப்பதன் மூலம் கடலின் பல்வேறு தன்மைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இயல்புகள், திமிங்கல வேட்டை நுட்பங்கள், அது சார்ந்த சந்தை நிலவரங்கள், சாகசமும் சோதனைகளும் நிறைந்த மாலுமிகளின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். அஹாப்பின் பழி வெறி படிப்படியாக அதிகரித்து, அவரை ஒரு விசித்திரமான, கொடூரமான தலைவராக மாற்றுகிறது. அவர் திமிங்கலங்களால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களது கப்பல்களின் கேப்டன்களைச் சந்திக்கிறபோது அவர்கள் மோபி டிக் (Moby-Dick) பற்றி எச்சரிக்கிறார்கள். அவர் தன் நோக்கத்தில் பின்வாங்குவதாக இல்லை. உச்சக்கட்டத்தில் பிக்வோட் கப்பல் மோபி டிக்கைக் கண்டுபிடிக்கிறது. அஹாப்பும் மற்ற மாலுமிகளும், உடன் வந்த வேட்டையர்களும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான, அழிவுகரமான தாக்குதல்களில் இறங்குகின்றனர். மோபி டிக்கும் மோதுகிறது. அதுவொரு கடற்போராகவே நடக்கிறது. அஹாப் தனது ஈட்டியால் தாக்க முற்படும்போது மோபி டிக் (Moby-Dick) கப்பலைத் தாக்குகிறது. கப்பல் முழுமையாக அழிகிறது. உயிரிழக்கும் நிலையில் இருக்கும் மோபி டிக், ஒரு படகை மீட்க முயலும் அஹாப்பைக் கையில் ஈட்டியோடு கடலுக்குள்ளே இழுத்துச் சென்றுவிடுகிறது இஸ்மேல் தவிர்த்து மாலுமிகள், திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் எல்லோரும் மோபி டிக் (Moby-Dick) தாக்குதலில் சிக்கியும் கடலில் மூழ்கியும் உயிரிழக்கிறார்கள். பயணிக்கிறபோது இறந்துபோகக் கூடியவர்களை கடலிலேயே நல்லடக்கம் செய்வதற்காகக் கப்பலின் தச்சர் செய்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி நீரில் மிதக்கிறது. அதில் தொற்றிக்கொள்ளும் இஸ்மேல் மட்டும் தப்பிக்கிறான். அந்தப் பகுதிக்கு வரும் மற்றொரு கப்பலின் மாலுமிகள் அவனை மீட்கிறார்கள். தத்துவ விசாரணைகள் கூரிய ஆயுதம் இருந்தும் மோபியிடமிருந்து அஹாப் தப்பிக்க முடியாமல் போவது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எந்த அளவுக்கு அழிவில் இறங்க முடியும் என்று நுணுக்கமாக யோசிக்க வைக்கிறது. இயற்கையின் வழங்கல்களைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழலாமேயன்றி, இயற்கையோடு முரண்பட்டுப் பகைத்து வாழ முடியாது என்று நாவல் விவாதிக்கிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத வல்லமையின் பிரதிநிதிதான் மோபி டிக் (Moby-Dick) திமிங்கலம் என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நாவல் நெடுகிலும் பைபிள் குறிப்புகள், தத்துவ விளக்கங்கள், மனிதரின் இருப்பு, நன்மை–தீமை பற்றிய கருத்தியல்கள், நீதிக் கோட்பாடுகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாவல் அப்போது எதிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அஹாப் தன் விதியால் அலைக்கழிக்கப்பட்டாரா அல்லது தனது பழியுணர்வால் இழுத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. தலைமைப் பொறுப்பில் இருந்தவனின் மூர்க்கத்தாலும் முட்டாள்தனத்தாலும் மற்றவர்களும் அழிவைச் சந்திக்க நேரிடும் அரசியலும் நுட்பமாகப் பேசப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையுமே சந்தித்த மெல்வில் தனது நாவல் குறித்த இத்தகைய நல்ல மதிப்பீடுகளைப் பார்க்க முடியாமல் போனது ஒரு துயரம்தான். படைப்பு வெற்றி பெற்று படைப்பாளி தோற்றுவிட்ட கதையா? இல்லை, படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது படைப்பாளியின் வெற்றிதானே? எழுத்தாளரின் சாகசங்கள் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) வாழ்க்கையே கூட சாகசங்கள் நிரம்பியதுதான். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் மரணத்தால் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, குடும்பத்திற்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வேலைகளைச் செய்த அவர் பின்னர் ஒரு வங்கி ஊழியரானார். அதன் பின் பள்ளி ஆசிரியரானார். தனது 19ஆவது வயதில் ஒரு கப்பல் ஊழியராகச் சேர்ந்து கடல் பயணத்தைத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கப்பல் வாழ்க்கை சார்ந்த சில வெற்றிகரமான நாவல்களை எழுத உதவின. வேறொரு கப்பலில் வேலை செய்தபோது ஒரு தீவில் நிறுத்தப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பித்து ஓடினார், சில காலம் பழங்குடி மக்களுடன் பழகி வாழ்ந்தார். இடையில் பிரிட்டிஷ் சிறையில் சில மாதங்கள் அடைக்கப்பட்டார். விடுதலையாகி நாடு திரும்பிய பிறகு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கடல் அனுபவங்களின்போது ‘மோக்கா டாக்’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் பற்றி நிறைய விவரங்களை அறிந்தார். அது மோபி டிக்காகப் பரிணமித்தது என்று விக்கிபீடியா, ‘ஜெமினி’ ஏஐ தளங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுகளுக்குரிய ஒரு புத்தகமாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மௌன சினிமாக் காலத்திலேயே ‘தி ஸீ பீஸ்ட்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. பின்னர் அதே திரைக்கதையின் பேசும் பதிப்பாக நாவலின் பெயரிலேயே இரண்டு முறை திரைப்படங்களாக வந்தது. இந்தக் கதையைத் தழுவிய, வேறு கதாபாத்திரங்களையும் அனுபவங்களையும் காட்டிய சில தொலைக்காட்சித் தொடர்களும் வந்திருக்கின்றன. அறிவியலாளர்களும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அக்கறையாளர்களும் விடுக்கும் எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வேட்டைச் சுரண்டல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிரான பொதுச் சீற்றத்தை வளர்ப்பதில் தனது பங்கையும் அளிக்கிறது மோபி டிக் (Moby-Dick). https://bookday.in/books-beyond-obstacles-series-18-is-herman-melvilles-moby-dick-whale-hunting-novel-based-article-written-by-a-kumaresan/
  18. ஓம் இவர், பார் சிறிதரன் எல்லாம் இங்லிஷ் மீடியத்தில தான் படிச்சவையாம்!😎
  19. அட எல்லாம் நம்ம ஏரியா பசங்களாக இருக்கினம்.😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.