Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3052
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/12/25 in Posts

  1. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா............. கொஞ்ச நேரம் வெளியில் நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்............... நான் இந்த செட்டை முடித்து விட்டு வருகின்றேன்...........' 'ஏன், உங்களிடம் இன்னொரு நெட் செட் இல்லையா................இரண்டு நெட் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடலாமே............' சிட்டாவிடம் ஏராளமான தலைமைத்துவப் பண்பு இருப்பது அவனை சந்தித்த ஒரு நிமிடத்திலேயே தெரிந்தது. இதோ வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு நான் விளையாட்டைத் தொடர்ந்தேன். சிட்டா ஏழரை மணிக்கு பின்னர் வந்து வெளியில் நின்றவர்கள் ஒவ்வொருவருடனும் கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்தினான் என்றே காதில் விழுந்த அவனுடைய பேச்சுகளில் இருந்து தெரிந்தது. அவன் அநேகமாக தெலுங்கு தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே எனக்குப்பட்டது. தெலுங்கு மக்கள் அவர்களது பெயர்களின் ஒரு பகுதியாக தங்களது சொந்த ஊர்களின் பெயர்களையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. சிட்டா என்பது அவனுடைய ஊரின் பெயரின் ஒரு சுருக்கிய வடிவமாக இருக்கலாம். அவனுடைய நண்பர்கள் அவனை இந்தப் பெயரால் கூப்பிட்டு அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது போல. சிட்டா என்பது சிட்டு என்பது போலவும் அழகாக இருந்தது. தமிழர்களிடமும் இதே வழக்கம் ஓரளவு இருக்கின்றது. எம்ஜிஆரில் இருக்கும் எம் என்பது மருதூர் என்பதையே குறிக்கும். அவர் இலங்கையில் இருக்கும் நாவலப்பிட்டி என்னும் ஊரிலேயே பிறந்திருந்தாலும், கேரளவில் இருக்கும் அவரது பெற்றோர்களின் ஊரான மருதூர் என்பதையே தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்தார். நாவலப்பிட்டி கோபாலன் ராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு இருந்திருந்தால், நடிகர் சிவாஜிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் போட்டியாக வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் அவர்களை இரண்டாம் இடத்தில் தள்ள இன்னொருவர் தான் வந்திருக்கவேண்டும். நாவலப்பிட்டி என்னும் ஊரின் பெயரே கோபாலன் ராமச்சந்திரனை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கும். மிகவும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை அவருடைய சொந்த ஊர், சண்முகவடிவு என்பது அவருடைய தாயாரின் பெயர். ஒருவரின் பெயரில் அவருடைய அன்னையின் பெயரும் சேர்ந்து இருப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இருக்கின்றீர்கள் சிட்டா...................... 'சூப்பராக இருக்கின்றேன்................. ஆமா, நீங்க கன்யாகுமரிப் பக்கமா..............' 'இல்லை சிட்டா, அதுக்கும் கீழே................. யாழ்ப்பாணம்.............' சிட்டா புரியாமல் ஒரு கணம் என்னையே பார்த்தான். நான் ஶ்ரீலங்கா என்றேன். சிட்டா தமிழ் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. மொத்தமாக 18 பேர்கள் அன்று வந்திருந்தார்கள். சரியாக மூன்று அணிகளாக பிரிக்கலாம். ஒரு அணி வெளியில் நிற்க, மற்ற இரண்டு அணிகளும் 21 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகளுக்கு விளையாடலாம். தொடர்ச்சியாக இரண்டு செட்டுகள் விளையாடிய அணி வெளியே வந்து நிற்பார்கள். எங்களிடம் மூன்று நெட் இருக்கின்றன, ஆனால் 18 பேர்கள் இருக்கும் போது இரண்டாவது நெட் போடுவது அவ்வளவு நல்ல ஒரு யோசனை அல்ல என்று சிட்டாவிற்கு எங்களின் அடிப்படை பொறிமுறைகளை விளங்கப்படுத்தினேன். சிட்டா நிறையவே யோசித்தான். சிட்டா ஒரு படு மோசமான விளையாட்டுக்காரனாகவே இருந்தான். கரப்பந்தாட்டத்திற்கு தேவையான திறமைகள் எல்லாமுமே அவனுக்கு சராசரிக்கும் குறைவாகவே வாய்த்திருந்தன. ஆனால் மிகவும் நன்றாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அத்துடன் காப்புறுதி மற்றும் வேறு சில சேவைகளும் வழங்கும் ஒரு சிறிய நிறுவனத்தையும் சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தான். அவன் எங்களுடன் கரப்பந்தாட்டம் விளையாட வந்திருக்கின்றானா அல்லது வாடிக்கையாளர்களை சேர்க்க வந்திருக்கின்றானா என்று எவராவது கேட்டால் அது ஒரு நியாயமான கேள்வியே. எப்போதும் எட்டு மணி அல்லது அதற்கும் பிந்தியே வந்தான். அவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு எவரும் விரும்பி முன்வருவதில்லை. ஆனால் அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவரும் வெளிப்படையாக எதிர்ப்பதும் இல்லை. ஒரு நாள் சிட்டா ஏழு மணிக்கே வந்துவிட்டான். அங்கு நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 'நான் இன்றிலிருந்து ஒரு ஸ்பைக்கர் ஆகப் போகின்றேன்........................' 'ஆகலாம் சிட்டா..............' 'நீங்களே அடிப்பதை பார்த்த பின் தான் எனக்கு ஒரு நம்பிக்கை.............. நீங்கள் அடிக்கும் போது நான் அடிக்க முடியாதா.............' உயரத்தையும், வயதையும் குறித்தே அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அன்று நெட் கட்டுவதற்கும், எல்லைகளை போடுவதற்கும் ஓடியாடி உதவிசெய்தான். பின்னர் அடிப்பதற்கு ஆயத்தமாக வந்து நின்றான். 1, 2, 3 என்று மூன்று கால் அடிகள் ஓடி, மூன்றாவதில் பாய்ந்து, நெட்டிற்கு மேலே கையைச் சுற்றி நான் போடும் பந்தை அடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதல் முயற்சியில் பந்து அவன் கையில் படவேயில்லை. பந்து தலையின் பின்புறமாக விழுந்தது. இரண்டாவது முயற்சியில் அவன் பாய்ந்து எழும்பி மீண்டும் கீழே வந்து நின்று கொண்டு, ஒரு ஆளுக்கு அடிப்பது போல பந்தை அடித்தான். அது நெட்டின் கீழால் போனது. 'சிட்டா, நீ மேலேயே பந்தை சந்திக்க வேண்டும்....................' 'இன்னுமொரு தடவை போடுங்கள்................. இந்த தடவை பாருங்கள் என்னுடைய அடியை...............' 'சிட்டா, நீ குடித்திருக்கின்றியா.....................' அவன் கதைக்கும் போது மணம் வந்து கொண்டிருந்தது. 'ஆமாம்............... நான் எப்போதுமே குடித்து விட்டுத் தான் வருவேன்.............. ஏன், இங்கு விளையாடும் போது குடித்திருக்கக் கூடாதா................' 'அப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இங்கு இல்லை.............. ஆனால் உன்னால் சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும்............' எவ்வளவு குடித்திருந்தாலும் தன்னால் எப்போதும் விடயங்களில் கவனமாக இருக்க முடியும் என்று சொன்னான். தினமும் காலையிலேயே ஆரம்பித்து விடுவானாம் என்றான். எப்பொழுதும் காரிலும் இருக்கும் என்றான். இப்பொழுது எனக்கும் தரவா என்றும் கேட்டான். 'தினமுமா..................' 'ஆமாம்..............' 'ஈரல், உடல் பழுதாகிப் போகாதா..................' 'இல்லை........... அதற்கு நான் ஒரு கைமருந்து வைத்திருக்கின்றேன். சில மூலிகைகளை அவித்து, அந்தக் கஷாயத்தை தினமும் படுக்கைக்கு போக முன் குடிப்பேன். அது ஈரலையும், முழு உடலையும் சுத்தப்படுத்திவிடும்..................' இங்கு கோவிட் காலத்தில், வீட்டில் சுத்தமாக்க வைத்திருக்கும் குளோரெக்ஸ், லைசோல் போன்றவற்றில் கொஞ்சத்தை குடித்தால், உள்ளிருக்கும் கோவிட் வைரஸ் அழிந்து விடும் தானே என்று அன்று அதிபராக இருந்தவர் சொல்லியிருந்தார். அவர் தான் இப்போதும் மீண்டும் அமெரிக்காவின் அதிபர். சிட்டா சொன்னது அதை ஞாபகப்படுத்தியது. 'இதையெல்லாம் நீ ஏன் செய்ய வேண்டும், சிட்டா, ஓரளவாகப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே..................' 'இல்லை........... நான் ஒன்றை நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன்.................' 'என்ன அது.....................' 'இது ஒன்றும் கூடாத விடயம் அல்ல................ இதனால் உடலுக்கு ஒரு கேடும் இல்லை...........' 'யாருக்கு நிரூபிக்கின்றாய்..................' 'இந்த உலகத்துக்கு.........................' பலருக்கும் உலகமே ஒரு போட்டியாக அல்லது எதிரியாக தெரிகின்றது போல. இவர்கள் உலகம் என்று சொல்வது ஒரு நாலு மனிதர்களாக இருக்கலாம், நாற்பது மனிதர்களாக கூட இருக்கலாம். யார் என்றாலும் அவர்களுக்கு என்று சொந்த வேலைகளும், சிக்கல்களும் இருக்கும் தானே. யார், எதை நிரூபிக்கின்றார்கள் என்றா சகமனிதர்கள் இங்கே அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தினமும் நியாயப்படுத்த முயல்வது பரிதாபமான ஒரு நிலையே. சிட்டா ஒரு ஸ்பைக்கர் ஆகவில்லை, ஆனால் தினமும் வந்து கொண்டேயிருந்தான். ஒரு நாள் விளையாடி முடிந்த பின் என்னுடன் தனியே கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றான். இனிமேல் விளையாட வரமாட்டேன் என்று சொன்னான். யாராவது அவனை ஏதாவது சொல்லி அல்லது திட்டி விட்டார்களா என்று கேட்டேன். அவனின் நிறுவனம் அவனை அமெரிக்காவின் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு மாற்றுகின்றார்கள் என்று சொன்னான். குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் உடனடியாக தனியே அங்கே போவதாகச் சொன்னான். பின்னர் அந்த வருட பாடசாலை ஆண்டு முடிந்தவுடன் குடும்பமும் அங்கே வந்து விடுவார்கள் என்றான். சில கணங்கள் இறுக்கிப் பிடித்தபடி நின்றான். பின்னர் சடாரென்று ஒன்றுமே சொல்லாமல் அவனுடைய காரை நோக்கி நடந்தான். விளையாட்டுத் திடலில் இருந்த மின் விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தன. கார்களின் தரிப்பிடத்தில் மட்டும் தெரு விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. அவனுடைய காரைத் திறந்த சிட்டா ஒரு கணம் அங்கிருந்து என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் மினுமினுத்தன. பல வருடங்களின் முன் இங்கு மிகப் பிரபலமான ஒரு தொழில்முறை கூடப்பந்தாட்ட வீரர் பார்வையாளர் ஒருவரை அடித்துவிட்டார். அந்தப் பார்வையாளர் தான் வீரரை மிகவும் தகாத வார்த்தைகளாள் சீண்டியிருந்தார். மிகவும் முன்கோபியான அந்த வீரரால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு தொழில்முறை வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவை. அந்த வீரரை ஒரு வருடம் விளையாட்டுகளில் இருந்து இடைநிறுத்தினார்கள். அந்த வருடக் கொடுப்பனவும் இல்லாமல். அது ஒரு 20 அல்லது 30 மில்லியன் டாலர்கள் வரும். அது பெரிய செய்தியானது. அந்த வீரரின் பாடசாலை நாட்களில் அவருடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவரிடம் ஒரு பேட்டி எடுத்தார்கள். அவர் இப்படிச் சொல்லியிருந்தார் - நான் தினமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இந்த வீரன் நேற்றிரவு துப்பாக்கியால் யாரையோ சுட்டான் என்ற செய்தி இருக்கவே கூடாது என்று தினமும் வேண்டிக் கொள்வேன் என்றார். சிட்டா இங்கிருந்து போன பின் அவனுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் போனது. சிட்டாவைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னை வந்தடையவே கூடாது என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன்.
  2. வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் ; மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைவு - அமைச்சர் சந்திரசேகர் 12 Nov, 2025 | 04:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் . அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார். இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார். இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/230188
  3. திரைப்படம்: டவுன் பஸ் பாடல் : பொன்னான வாழ்வு இசை : கே.வி.மகாதேவன் பாடலாசிரியர் : க.மு. ஷரிப் பாடகர்கள்: திருச்சி லோகநாதன் மற்றும் எம்.எஸ் ராஜேஸ்வரி
  4. கண்ணன் பிறந்தான் எங்கள் .......! 😍
  5. எனது சந்தேகம் இந்தியாவே இதனை செய்திருக்கும் என, பாகிஸ்தானினை பயங்கரவாத நாடாக உருவகப்படுத்துவதற்கு இதனை தானே செய்திருக்க வாய்ப்புள்ளது, கொஞ்ச காலமாக ஆசிய பகுதியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இந்தியா மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையே ஒரு அச்சாணி போல இருந்த நிலையில், இந்தியா தற்போது புறந்தள்ளப்படுகின்றது, மறு வளமாக பாகிஸ்தான் திடீர் அமெரிக்க நட்பு என ஒரு நல்ல நிலையில் உள்ளது, இதனிடையே இலங்கை அணி பாகிஸ்தானிற்கு விளையாட சென்றுள்ளது, இதியணி பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் இருந்து கோப்பையினை வாங்குவதனை தவிர்த்திருந்தது. இலங்கை அணி மீது மீண்டும் ஒரு தாக்குதலை இந்திய ஆதரவுடன் செய்யவதற்காகவே புலிகள் உறுப்பினர்களுக்கும் தாவூத்திற்கும்? தொடர்பு என அண்மையில் இந்திய உளவுத்துறை கூறியதாக செய்தி விட்டிருக்கலாம்.
  6. எழுதுங்கள் அல்வாயன்................ உங்களின் எழுத்துகளை வாசித்து ரசிப்பதற்கு இங்கு பலர், நான் உட்பட, இருக்கின்றார்கள்.................👍. எழுதுவதில் உங்களுக்கு சோம்பேறித்தனமா................ ஊர்ப் புதினம் பகுதிகளில் சில திரிகளில் பிளந்து கட்டுகின்றீர்களே..................🤣. அதே உற்சாகத்துடன் இங்கேயும் எழுதுங்கள்.................🤝.
  7. காஜலிசம்=சோசலிசம்=கம்யூனிசம் ?! "எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிவிடும். இது வாழ்க்கையின் நிலையாமைக்கான ஒரு உதாரணம். அதற்காக, இன்று நம்மிடம் உள்ளதை சிறப்பாகப் பயன்படுத்துவோம்." என்று பலர் கூறுகின்றனர். ஆதலால் காதல் செய்வீர் .....பாரதி "காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."
  8. முயற்சி பண்ணினால் கடவுள் எழுதிக்கொடுக்கும் அந்த காகிதமும் கிடைக்கும் ...வாழ்த்துக்கள் ரசோ.. இடக்கு மடக்கு எழுத்துக்கள்.... அதை எவர்மூலம் வாசித்தாலிம் சிறப்பு... நானும் எத்தனயோ விடையங்களை எழுத நினைக்கின்றேன் ...சோம்பல்தனம் டடுத்து விடுகின்றது...
  9. 🤣................ 'கடவுள் இருக்காரு அல்வாயன்...............', ஆனால் கோயில் மண்டபத்தில் வைத்து எனக்கு எழுதிக் கொடுக்கும் அளவிற்கு அவர் என்னோடு இதுவரை அவ்வளவு நெருக்கம் இல்லை போல............ 'மானிடனே, உன்னுள் இருந்து எழுதுவதும் நானே........... அல்வாயனின் உள்ளே இருந்து வாசிப்பதும் நானே..................' என்று இன்று இரவு கனவில் வந்து நிற்கப் போகின்றார்............🤣.
  10. எனக்கும் இந்தக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு நாங்கள் இந்த பிரபஞ்ச பயணத்தை வாயேஜர் போல கண்களை(கமரா) இறுக மூடிக்கொண்டு தொடருவோம்!
  11. உங்களை போன்ற அறிவாளிகள் ஒரு சிலர் பிறப்பார்கள் அந்த வெப்பத்தில் தமிழ் இனம் உயிர் பெரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு
  12. ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது. டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது. மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான். அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன். உங்கள் அன்பு மகள், லிண்டா..! அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.. கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார். அங்கு இவ்வாறு எழுதியிருந்தது: பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். 😂 🤣
  13. சிறி முன்பக்க கடிதத்தோடு நெஞ்சுவலி வராமல் விட்டது பிள்ளை செய்த புண்ணியம்.
  14. ஒவ்வொரு வெங்காய அறுவடை மாதங்களிலும் அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் குறைத்து உற்பத்தியாளர்களின் வருவாயை வீழ்த்துகிறதென்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் அரசு கவனமெடுக்க வேண்டும்.
  15. போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும் க‌ந்த‌ப்பு அண்ணா. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக ஈழப்பிரியன் அண்ணா, வீரப்பையன்.
  16. வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ......! --- பாடினாள் ஒரு பாட்டு ---
  17. புதியதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசனைக் குழுவில், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளும் இடம் பெறவில்லை.
  18. தம்மை விட பெரும்பான்மையாக உள்ள சிங்களவரோடும் ஒத்து போகமுடியவல்லை. தம்மை விட சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம் மக்களோடும் ஒத்து போக முடியவில்லை. தமக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களுடனும் மதம் மாற்றுகிறான் என்று இடைக்கிடை பாய்ச்சல். பக்கது நாடு இந்தியாவுடனும் தந்திரோயபாய ரீதியிலாவது நட்புடன் இருக்க முடியவில்லை. சர்வதேசத்தில் சக்திவாய்ந்த நாடுகளான மேற்குலகோடும் முரண்டு பிடி. யாராவது தமிழருக்குள் சற்று moderate ஆக சிந்தித்தாலும் அவர்களுக்கு துரோகி என்று கூறி பழி போட்டு ஒதுக்கல். இப்படியான குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் குறுந்தேசியவாதம் என்றுமே வெற்றி பெறப்போவதில்லை.
  19. நம்மை நாமே பயமுறூத்தக்கூடாது...பார்ப்போம் ..அன்னமையிலரபுநாட்டுக்கரனின் காத்தான்குடி பள்ளீ வீடியோபார்த்தென்...அதில் அவன் பேட்டிகாணும் பள்ளி அமைப்பாளர் ..சொல்கிறார்..ஒவ்வொரு வெள்ளியும் 5000பேர் தொழுகைக்கு வருவினம் ...காத்தான்குடியில் இப்ப இந்தநிலையென்றால் ...யாழ்ப்பாணத்திற்கு இது வர ...பயப்படாதீங்க ...பயப்படுத்தாதீங்க..
  20. எப்படி. சொல்கிறீர்கள்? இன்று. ஒரு பட்டியல். பார்த்தேன் பல. நாடுகளில. முஸலிம்களின். வீதம். ஐரோப்பா. நாடுகளில். எல்லாம். 20 % மேல். நான். நம்பபுகிறேன். யாழ்பாணம். அவர்களின். கைக்கு. வரும். 2050. மட்டில். இது. சாத்தியம். தமிழர்கள். ஒற்றுமைப்பட. வேண்டும். என்றால். ஏதாவது. லாபம். இருக்க வேண்டும். அல்லது. யாரவது. அடிக்க வேண்டும்.
  21. பாம்புக் கடி வைத்தியம் பற்றிப் பேசும் போது இந்த தொடர்பு பட்ட செய்தி கண்ணில் பட்டது. சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் பாம்புக் கடி மரணங்கள் அதிகம். அங்கே காணப்படும் மாம்பா போன்ற கொடிய விசப் பாம்புகளும், வைத்திய வசதிகள் இன்மையும் பிரதான காரணங்கள். அண்மையில், இந்தப் பகுதியில் காணப்படும் 18 விசப் பாம்புகளுள், 17 இற்கெதிராக வேலை செய்யக் கூடிய வகையில் ஒற்றை விச முறிப்பு மருந்தைப் (Polyvalent antivenom) பரீட்சித்திருக்கிறார்கள். வழமையாக குதிரைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாம்பினத்தின் விசத்தை ஏற்றி, குதிரையில் நோயெதிர்ப்பை உண்டாக்கி, அதன் பின்னர் அதன் இரத்தத்தில் இருந்து அந்தப் பாம்பினத்திற்கெதிரான விசமுறிப்பு மருந்து எடுக்கப் படுவதே வழமை. இந்த ஆய்வாளர்களோ, அல்பகா (Alpaca), லாமா (Lama) ஆகிய ஒட்டக விலங்குகளில் 18 பாம்புகளின் விசத்தைப் படிப்படியாக ஏற்றி, அவற்றின் இரத்தத்தில் இருந்து 17 பாம்புகளுக்கெதிரான விச முறிப்பு மருந்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். https://www.nature.com/articles/d41586-025-03541-3 இலங்கையிலும் இந்தியாவிலும் பயன்படும் விச முறிப்பு மருந்துகள் நாகம், முத்திரைப் புடையன், சுருட்டை விரியன், கண்டங் கருவளை ஆகிய 4 பாம்புகளுக்கெதிராகவும் வேலை செய்யக் கூடியவை . இவை இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகள்.
  22. அததெரண கருத்துப்படம்.
  23. தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.
  24. https://www.youtube.com/watch?v=I2A-dsi0gQ8 InvestopediaUnderstanding Fractional Reserve Banking: How It Fuels Ec...Learn how fractional reserve banking operates and drives economic expansion. Discover its role in lending, growth, and the global financial system.இங்கு பாதிக்கப்படுவர்களே குற்றவாளி ஆக்கப்படுகிறார்கள்.
  25. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற இருக்கைகளில் பெரும்பான்மை வகிப்பது ஜேர்மனி, ஓரிரு ஒன்றிய நாடுகளை தவிர ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தலையாட்டும் நாடுகளாகவே மீதி நாடுகள் இருக்கின்றன.இந்த இடத்தில் ஜேர்மனி இன்றைய தினம் இன்னும் மேலதிக கோடிகளை உக்ரேனுக்காக ஒதுக்கியுள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய தலைவியாக ஜேர்மனிய பெண்மணியே இருக்கின்றார். இது மாநில ஆட்சியிலும் நீங்கள் மத்திய ஆட்சியிலும் நீங்கள் என்பதற்கு ஒத்ததாகவே இருக்கின்றது.
  26. முதல் 3 இடத்தை பிடித்த அகஸ்தியன், அல்வாயான், செம்பாட்டான் , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌ க‌ந்த‌ப்பு அண்ணாவுக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும்👏
  27. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றிபெற்ற @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் வாழ்த்துக்கள்
  28. இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂 முதல் மூன்றில் வந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மழையுடன் விளையாட்டு. தொடர் நன்றாகவே போனது. போட்டியை நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. என்னையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...
  29. போட்டியைத் திறம்பட நடத்திய @கந்தப்பு வுக்கு நன்றிகள். பலருக்கும் புள்ளிகள் கிடைக்கத் தக்கதாக கேள்விகள் அமைந்தன. “குண்டக்க மண்டக்க” கேள்விகள் இல்லை என்பது ஆறுதல்😂 போட்டியில் வெற்றிபெற்ற கிரிக்கெட் ஜாம்பாவன்கள் @Ahasthiyan , @alvayan , @செம்பாட்டான் க்கும் சியர்ஸ் போய் @வீரப் பையன்26 க்கும், கலந்து சிறப்பித்து திரியில் கலகலத்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
  30. மிக்க நன்றி @கந்தப்பு அண்ணா. போட்டியில் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்த 1) @Ahasthiyan அண்ணா, 2) @alvayan அண்ணா, 3) @செம்பாட்டான் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட கள உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  31. ❤️.................... களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏. போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள். போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.
  32. அப்பு சோறு முக்கியம். வேலை இல்லா பட்டதாரிகள் சொல்லுறாங்களே என்று வேலை நேரத்தில் கவனமப்பு. போதிய வசதிகள் இல்லாமல் போட்டியை திறம்படி நடத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். துல்லியமான விடைகளைக் கணித்து முதலாவது இடத்தைப் பிடித்த @Ahasthiyan னுக்கு வாழ்த்துக்கள். போட்டியை விறுவிறுப்பாக கொண்டு போன உறவுகளுக்கும் பாராட்டுக்கள். பையா எங்களை @கிருபன் கூகிளில் விடை எழுத பழக்கியதால் கூகிள் இல்லாமல் சரியாக விடைகள் எழுத முடியவில்லை.
  33. போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂
  34. முன்பு எவ்வாறு ருமேனியா விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றைய சட்டதிட்டங்களினால் பெரு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது விவசாயத்திலிருந்து ஒதுங்கினார்களோ, அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாட்டு விவசாயிகளுக்கெதிராக வரி, சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் (ஐரோப்பிய ஒன்றியத்தினால்); உக்கிரேனிய விவசாயிகளுக்கு மானியம் வரி விலக்களிப்பு, கடனுதவி என ஒரு தலைப்பட்சமாக அனைத்து வசதிகளையும் கொண்டதனால், உக்கிரேனின் விவசாய பொருள்கள் விலை மலிவாக காணப்படுகின்ற நிலையில், அந்த நிதியங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பணம் பெறும் நாட்டு விவசாயிகளுக்கு ஒரு தலைபட்சமாக விலை அதிகரிப்பு ஏற்படுத்தி ஒரு பாரபட்சமான சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டு மக்களின் நலனை பேண முற்படும் போது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் நிலை உருவாகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத உக்கிரேனுக்காக அதன் உறுப்பு நாடுகளின் குடிமக்களை தண்டிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகார எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்தும் "புலி வருது (இரஸ்சியா)" ஒரு புறம் பல உயிர்களை தொடர்ந்தும் காவுகொள்கிறது, போரினை முடிவிற்கு கொண்டு வருவதனால் அதிகார மட்டுப்படுத்தல் சிக்கலில் சிக்காமல் இருக்க முயற்சிப்பதற்காக உக்கிரேனை பயன்படுத்துகிறது, உக்கிரேனுக்கு இந்த விவச்சாய பொருளால் ஏற்படும் இலாபம் அதற்கு வாய்க்கரிசி போன்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.