Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87986
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16458
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7038
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/24/25 in all areas

  1. இந்த மச்சை தானத்திலும், உடல் உறுப்பு தானத்திலும் எம்மவர்கள் அக்கறையாக ஈடு பட வேண்டும் என, சில ஆண்டுகள் முன்னர் ஒரு யாழ் கள உறவின் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பின் காலத்தில் எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதி முறைகள் இருக்கலாம். அமெரிக்காவில், மச்சை தானத்திற்காக பதிவு செய்ய 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டோரும் பதிவு செய்யலாம், ஆனால் பரிசோதனைக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். வயது ஒரு காரணமாக இருப்பதற்குக் காரணம், வயது அதிகரிக்கும் போது தானம் செய்பவரின் மச்சைக் கலங்கள் பெறுபவரின் உடலினுள் பெருக்கமடைவது குறைவாக இருக்கும் என்பதே.
  2. உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.
  3. இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
  4. 2009 போர் நிறைவடைந்தது. இப்போது ஆண்டு 2025 நிறைவடையும் தருவாயில் உள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் புத்தபகவான் வடக்கு, கிழக்கில் சிலைகளாகவும், விகாரைகளாகவும் வியாபிக்கின்றார். தொல்பொருள் திணைக்களம் காலங்காலமாக தமிழர் உரிமைகொண்டாடும் இடங்களை கையகப்படுத்துகின்றது. இலங்கை அரசு தரப்பில் யாராவது அனைத்து மக்கள் நலன்களையும் கருத்திற்கொண்டு அக்கறையுடன்/கரிசனையுடன் இப்படியான விடயங்களை கையாள்வதாகவோ கண்டுகொள்வதாகவோ தெரியவில்லை. யதார்த்தம் இலங்கையில் இவ்வாறு காணப்படுகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தமது இருப்பை, நலன்களை உறுதிப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். விடுதலை புலிகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்தார்களா ஆதரிக்கின்றார்களா என்பதற்கு அப்பால் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட தேசியகொடி ஒரு வெளிநாட்டு மாநகரசபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பலர் உழைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். இது தவறான விடயமாக தெரியவில்லை.
  5. கும்பகோணம் சக்ரபாணி கோயில் - மழைகாலத்தில்
  6. நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா….. 😂 🤣
  7. ஆரா ரோ ஆரிரரோ.. கண்ண தொறக்கணும் சாமி.. கைய புடிக்கணும் சாமி ..
  8. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  9. கரட் சாப்பிட்டால், கண் தெரியும். முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣
  10. போட்டியினை பார்க்காமல் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியணியின் ஆரம்பத்தினை பார்த்து இந்தியா ஒரு செத்த ஆடுகளத்தினை வழங்கியிருக்கும் என நினைத்தேன், சிகப்பு மண் கொண்ட ஆடுகளத்தினை கொடுத்துள்ளது, வேகபந்து வீச்சாளர்களுக்கும் சுழல் பந்து வீச்சிற்கும் சாதகமான ஆடுகளம், 4 மற்றும் 5 ஆவது நாளில் ஆடுகளம் விரைவாக காய்ந்து சுழல் பந்து வீச்சிற்கு மிக சாதகமாகிவிடும், இந்தியா தோல்வியினை தவிர்க்க முடியாது.
  11. 13க்கு குறி சுடப் போறாங்களோ? ஏன் இந்தியா எட்டியும் பார்க்கவில்லை?
  12. வா வாத்யாரே ஊட்டாண்டே .......... சோ & மனோரமா ........! 😍
  13. உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு! ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான அமெரிக்க முன்மொழிவைப் பற்றி விவாதித்த பின்னர் மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே அவர்கள் வழங்கினர். இந்த திட்டம் மொஸ்கோவிற்கு மிகவும் இணக்கமானதாக இருப்பதாக வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பலரிடையே கவலையைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மிகக் குறைந்த தகவல்களையே அவர் வழங்கினார். இந்தத் திட்டத்திற்கு உக்ரேன் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் குறைத்து மதிப்பிட்டார். அதிகாரிகள் விரைவில் மோலை நிறுத்தப்படுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும், அதிகாரிகள் திங்கள்கிழமை (24) மற்றும் அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் கூறினார். உயர் மட்ட அதிகாரிகள் இறுதியில் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் வரையப்பட்ட 28-புள்ளி திட்டம் உக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தனது நாடு தனது இறையாண்மை உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் அதற்குத் தேவையான அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு கடுமையான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர், தனது மக்கள் தங்கள் வீட்டை (நாட்டை) எப்போதும் பாதுகாப்பார்கள் என்றும் சபதம் செய்தார். ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக நிராகரித்த பல ரஷ்ய கோரிக்கைகளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்கிறது, இதில் பெரிய பகுதிகளை விட்டுக்கொடுப்பதும் அடங்கும். அதேநேரம், முன்னதாக, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு வியாழக்கிழமை காலக்கெடுவை ட்ரம்ப் நிர்ணயித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூபியோ அந்த காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினார். இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஜெலென்ஸ்கி இந்த வாரம் விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1453677
  14. அததெரண கருத்துப்படம்.
  15. ஆசிய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை அணி வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து மிக சொற்ப ரண்களில் ஆட்டமிழந்ததனால் இந்தியா இலகுவாக வென்றிருந்த்து. அந்த சுப்பர் ஓவரில் வேறு ஒரு சுவாரசியமான நிகழ்வும் நடந்தது ஆனால் அதனால் கூட இலங்கை அணிக்கு எந்த பலனும் பெரிதாக ஏற்படவில்லை.🤣
  16. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரில்தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஒட்டங்களை பெற்றது. வங்காளதேசம் அணி 9 விக்கெட் இழப்புடன் 125 பெற்று சமநிலை அடைந்தது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் அணி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளும் இழந்தது 6 ஓட்டங்களை பெற்றது. இன்னும் 3 பந்துகள் இருந்தும் 2 விக்கெட் இழப்பினால் வங்காளதேசத்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தான் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
  17. நீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனம் செய்து "பெண்கள் உள் நுழைய முடியாது" என்று விதி வைத்திருக்கும் கோவில் அல்லவா இது? பெண்களை விலக்கி வைத்தவர்கள் திருடர்களை அவர்களுக்கு மாதவிடாய் வருவதில்லை என்ற காரணத்தால் அனுமதித்திருக்கிறார்கள். பிறகு தங்கம் திருடு போகாமல் இருக்குமா😎?
  18. 2004 இல், மகிந்தவை மறைமுகமாக பதவிக்கு வர ஆதரித்து முள்ளிவாய்க்காலில் மக்களையும் இழந்து தாமும் அழிந்த புலிகளும் இப்போது இல்லை. 2024 இல் சஜித்தை ஆதரித்த சுமந்திரனும் இப்போது மக்கள் பிரதிநிதியாக இல்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் வரை புலிகளோடு அரசியல் துறைப் பிரபலமாக பயணித்த நிலாந்தன் மாஸ்ரர் மட்டும் எதையும் இழக்காமல் "ஆய்வாளர்" பதவியிலேயே இருக்கிறார்😂!
  19. அமெரிக்கா முன்மொழியும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருந்தால்..... அமெரிக்கா உக்ரேன் பிரச்சனையிலிருந்து வெளியேறலாம். அதன் பின் புட்டின் சொன்னதே நடக்கும். ரஷ்யாவை எதிர்க்கும் சக்தி ஐரோப்பாவிடம் அறவே இல்லை. இப்போதும் ரஷ்ய எரிசக்தியை மறைமுகமாக வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். நிலைமை இவ்வாறு இருக்க.... உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.😂
  20. RAVI MANY · பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி உள்நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மாத்திம் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரை ஊடறுத்துச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாற்படைகளுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் வாயிற்காவலுனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாயிற்கதவினூடாக அவர்கள் நுழைந்தனர். சுவரை கட்டியெழுப்புவதில் சோலியாக இருந்த சீனர்கள், வாயிற்காவலாளியை கட்டியெழுப்ப மறந்து விட்டனர். மனிதனை கட்டியெழுப்புவது வேறு அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விடயமாகும். இன்றைய மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய கருத்து இது. கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன. 1- குடும்பங்களை சீர்குழைத்தல் 2- கல்வியை இல்லாமல் செய்தல் 3- முன்மாதிரிகளையும், மூலாதாரங்களையும் வீழ்த்துதல் குடும்பத்தை சீர்குழைக்க வேண்டுமா? தாயின் வகிபாகத்தை இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள். கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணர்களும் அவர்களை பரிகஷிக்கும் அளவுக்கு செய்து விடுங்கள். முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள். உணர்வுபூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூலாதாரமும் வீழ்ச்சியுறும் போது பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?! Voir la traduction
  21. மிக்க நன்றி ஈழப்பிரியன்.. நலமே. தாங்கள் நலமா? அரசியலில் பிடிப்பும் ஆர்வமும் எப்பொழுதும் இல்லை.ஈழத்தின் அரசியல் புரியாத ஒன்று. ஆகவே முன்பு போல் இங்கே களமாட இயலவில்லை, ஐயா.
  22. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ........! 😍
  23. இந்த பாட்டரி நினைவில் இருக்கிறதா.?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.