Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Leaderboard

  1. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11938
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19356
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    32707
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    2
    Points
    46894
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/09/26 in Posts

  1. ஒரு பிரச்சனையுமில்லை. ஏராளன், இந்த திட்டம் சம்பந்தமாக முதல் ஒரு மலசல கூடம் கட்டும் நிர்மாண செய்தியை தந்திருந்தார். அதில் குறிப்பிட்ட தொகையையும் தெரிவித்திருந்தார். அதை நான் பொறுப்பெடுத்திருந்தேன். அதை மீறி எதையும் புதிதாக எதையும் தனிப்பட செய்ய மாட்டேன். ஏனைய பங்களிப்புகளும் திட்டங்களும் முன்னோடியின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்.
  2. முதலில் விசேட தேவை உள்ளவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யலாம் அதே வேளை எங்களால் பயன்பெறும் பயனாளர்கள் வேறு அமைக்களிடம் இருந்து பெரிய அளவில் உதவியையும் பெறாதவர்களாக இருக்க வேண்டும். சிலர் பல இடங்களில் உதவிகளை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஒன்றுமில்லாதவர்கள் போல இருப்பார்கள் இவர்களை எல்லாம் அந்தப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அல்லது கிராம சேவை அலுவலர்கள் மூலம் அறிந்து உண்மையான வறுமை உள்ள குடும்பங்களைத் தெரிவு செய்யலாம்
  3. கிடைத்த தொகையை அறிவிக்கத் தான் வேண்டும். நான் மேலே பிழையாக எழுதிவிட்டேன்.🙏 அத்தியாவசியமான உதவித் திட்டம் என்ற அடிப்படையில் ஓரளவு நன்கொடை கிடைத்ததும் வேலைகளை ஆரம்பித்தல் நல்லது என்றே நினைக்கின்றேன் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி அராலியில் எங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை மற்றவர்களின் கருத்துக்களையயும் கேட்போம்
  4. அண்ணை, பெயர் குறிப்பிடுவது நன்கொடையாளரின் விருப்பம். ஆனால் ஒவ்வொரு நன்கொடை கிடைத்ததும் அதை இங்கே வெளிப்படையாக பதிவது நல்லது. ஆவணப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஒரு மலசலகூடம் புதிதாக அமைக்க/பூரணப்படுத்த(வட்டு.தெற்கு) அல்லது திருத்த(பொன்னாலை) நிதி முழுவதும் கிடைத்த பின் பணிக்குரிய நிதியை படிப்படியாக வழங்குவமா? இல்லை முதற்கட்டமாக 50000 ரூபாவை வங்கிக்கணக்கிற்கு வழங்கி வட்டு.தெற்கில் மலசலகூடக்குழி வெட்டத் தொடங்கச் சொல்லவா?
  5. இதைத் தான் நானும் முன் கூட்டியே சொல்லியிருந்தேன் பொருளாளராகிய ஏராளன், குறிப்பிட்ட நிதி வங்கிக்கணக்கிற்கு வந்ததும் எத்தனை பேர் அனுப்பினார்கள்........ அல்லது யார் அனுப்பினார்கள்... எவ்வளவு தொகை அனுப்பினார்கள்...... என்ற விபரத்தை உடனே வெளியிடக் கூடாது கிடைத்த தொகையை மட்டும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வோம் முதலில் அராலி அடுத்து பொன்னாலை இவற்றின் வெற்றிக்குப் பின்னர் எமது உண்மையான இலக்கை நோக்கி ஒவ்வொரு காலடியாக எடுத்து வைப்போம். அது முதலில் காரைநகரில் ஒரு காலடியாகவோ அல்லது சுழிபுரத்தில் ஒரு காலடியாகவோ இருக்கலாம் அந்த நேரத்தில் பயனாளர்களின் உண்மையான நிலைமைக்கு ஏற்ற மாதிரிச் செயற்படுவோம், அதற்கு முதல் வாத்தியாரின் நிதி உதவியினால் செய்யப்பட்டது கு சா அண்ணாவின் செயற்பாட்டால் செய்யப்பட்டது அல்லது கோஷான் அவர்களின் உதவியால் செய்யப்பட்டது என்ற எந்த ஒரு வார்த்தைப் பிரயோகமோ அல்லது கருத்துக்களோ இங்கே வரக்கூடாது முன்னோடி அமைப்பினரால் என்ற அந்த ஒன்றின் பின்னால் தான் நாங்கள் எல்லோரும் என்பது இங்கே எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் அண்ணா இதுவே எனது கருத்து மற்றவர்களும் அதையே விரும்புகின்றார்கள் என்பது அவர்களின் கருத்துக்களில் இருந்து தெரிகின்றது இங்கே யாழ் களத்தின் உறவுகளால் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னோடி என்ற அமைப்பே முன்னோடும்
  6. தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம். புதிதாக வருபவர் இவரைவிட பாயக் கூடியவராம். வழமையாக பாவனைக்கு உதவாத கப்பல்கள் விமானங்கள் என்று இப்படி ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பு செய்வது. இந்ததடவை அகப்பட்டது இலங்கை.
  7. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
  8. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA AFG 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA USA NED Select NED NED NAM Select NAM NAM 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK NZ 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK ENG 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL SL 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS IND 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA AUS 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ NZ PAK Select PAK Select SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), IND NZ IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG AUS ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND ENG IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CAN 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VIRAT KOHLI 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JaspritBumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Suryakumar Yadav 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Kahn 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VIRAT KOHLI 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  9. கட்டாயம் வங்கிக் கணக்கு கிடைத்த உடனேயே உதவித் தொகையை அனுப்பிய உறவிற்கு கோடி நன்றிகள் 🙏
  10. அத தெரண கருத்துப்படங்கள்.
  11. அரசியல் வேண்டாம், பேச்சுவார்ததைகள் வேண்டாம், நாம் அடித்து தான் பிடிப்போம் என்று முடிவெடுத்தால் எதிரியும் அதை அடித்து தடுக்கவே முயற்சி செய்வான் . இது உலக நியதி. மனித மனப்பாங்கு எக்காலத்திலும் அப்படியானது தான். தொடர்சசியான அரசியல் Negotiation ல் இரு பகுதியும் தோல்வியடைவதில்லை. சேர்ந்தே இருவரும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. அடித்து பிடிப்பதில் ஒருவர் மட்டுமே வைற்றி பெறுவார். தோல்வி கண்டுவிட்டு , அவன் துரோகி, இவன் துரோகி என்று காலாகாலத்துக்கு கத்தி ஒப்பாரி கொண்டு திரிவதிலோ அவனை மண்ணள்ளி திட்டுவதாலோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அது அரசியலும் அல்ல. அப்படியான தவறான அரசியலை ஊக்குவிப்பவர்களே சமுதாயத்தின் முதல் எதிரிகள்.
  12. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என தமிழில் 3 வகையாக காலங்களை வகுக்கின்றனர், தற்போது இதனை விளக்குகின்ற எனது நிலை கஸ்ட காலம் என கருதுகிறேன்🤣.
  13. இதைவிட இவர்களால் வேறென்ன செய்ய முடியும்? வந்த அழிவுகளை கண்டும் திருந்தாத நம் இனம், பின்னர் யாரும் இதுபற்றி எச்சரிக்கவில்லை என்றும் பதிவிடுவார்கள். இயற்கையை முற்று முழுதாக நம்மால் கணிக்கமுடியாது, ஒருவேளை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும், அல்லது கூடுதலாக இருக்கும், அது இயற்கையின் மாற்றத்தை பொறுத்தது. கவனமாக முன்னெச்செரிக்கையுடன் இருப்பதில் எந்த தப்பும் இல்லை.
  14. முன்னோடி உதவி நிறுவனத்தின் அடிப்படை சுகாதாரத் திட்டத்துக்காக தனியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. தனியாக யாழ்கள உறவுகளால் மட்டும் இதை நடைமுறைப்படுத்த இயலாது. வெளியாரிடமும் இருந்து உதவிகள் பெற வேண்டிய தேவை அவசியம். ஆகவே முன்னோடி உதவி நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். மாதாந்தம் குறைந்தது பத்து டொலர்கள் அளவிலாவது, முழுமையாக தன்னார்வ அடிப்படையில், உதவி வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளலாம். குமாரசாமி தன்னால் நூறு பேர்களை இணைக்க முடியும் என தெரிவித்திருக்கிறார். அதேபோல், மற்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவர்களை முன்னோடி நிறுவனத்துடன் இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த மாதத்திலிருந்து எனது மாதாந்த உதவித் தொகையை ஏராளன் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்க உள்ளேன். மேலும், எனக்குத் தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து தெரிவிப்பேன். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் சேரும் பொது நிதியின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, தனிநபர் பொறுப்பாக அல்லாது, அனைவரும் இணைந்து பங்களிக்கும் கூட்டு முயற்சியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். குமாரசாமி, நான் பங்களிப்புடனேயே நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள், வாத்தியார் இருவரும் பேசித் தீர்மானிக்கலாம். ஒன்றும் அவசரமில்லை. நேரம் எடுத்து முடிவெடுங்கள். தற்சமயம் முன்னோடியின் முதல் திட்டத்தை ஆரம்பிப்போம். இணைந்து பயணிப்போம்.
  15. ராஜதந்திரம் இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம். டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர். திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும். தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம். தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை. ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
  16. அதில ஒரு கை கடும் கறுப்பா இருக்கட்டும்
  17. SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.
  18. அவரால் இந்தியாவை எதிர்த்து, இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் செய்த அக்கிரமத்தைக் கூற முடியுமா? 1987 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சாத்தான்கள் 1990 இல் வெளியேறும்வரை மண்டையன் குழு எனும் கொலைப்படையினை நடத்தி, ஆயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் எப்படி இந்தியாவைக் குறை கூறுவார். இந்தியாவிற்கு வெள்ளையடிப்பதே அவரது ஒரே பணி. இங்கு வசி இந்தியா செய்தவற்றை மறந்துவிட்டு, விட்டுக் கொடுத்துப் போங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவின் கொலைப்படையாக வலம்வந்த பிரேமச்சந்திரன் நிச்சயம் இந்தியா தமிழருக்கு எந்த அநியாயத்தையும் செய்யவில்லை என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வதில் வியப்பில்லை.
  19. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் உள்ள் மத்திய வங்கி ஏனைய நாடுகளில் உள்ளதை விட மிகவும் வேறுபட்டது. அது ஒரு ஒற்றை அமைப்பு அல்ல. அதில் தனியார் ஆதிக்கம் அதிகம்.
  20. இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email
  21. அமெரிக்கா, ரஸ்யா அல்ல, புட்டினின் ரகசிய ஏஜெண்ட் டிரம்ப். அமெரிக்கா இப்போதும் சீனா, ரஸ்யாவை விட பல மடங்கு இராணுவ பலம் கொண்டுதான் உள்ளது…. ஆனால் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக, இராஜதந்திர ரீதியாக அமெரிக்கா மிகவும் அடிவாங்குகிறது. இந்தியா முதல் ஐரோப்ப ஒன்றியம் நேட்டோ வரை நண்பர்களை அமெரிக்கா பகைவர்களாக்குகிறது… அப்பட்டமாக சர்வதேச சட்டத்தை வெனிசுவேலாவில் மீறி அமெரிக்கா 2ம் உலக போருக்கு பின் கட்டமைத்த rules based system என அவர்கள் சொல்லிக்கொள்ளும் அமைப்பை அவர்களே போட்டுடைக்கிறார்கள். அடுத்து கீரீன் லாந்தில் கைவைக்கலாம்… அத்தோடு ஐரோப்பா+அமெரிக்கா இடையான பாரம்பரிய உறவு மீட்க முடியாதவாறு உடையும். அதே போல் கிம் ஜப்பான் கடலில் ஏவுகணை விட்டாலும்…. குறித்து வைத்து கொள்ளுங்கள்… சீனா தாய்வானை பிடிக்கும் போதும்… அமெரிக்கா முன்னர் போல் எதிர்வினை காட்டாது. இஸ்ரேலை தவிர அமெரிக்காவின் ஏனைய சகல நட்புந்நடுகளில் இருந்தும் அமெரிக்காவை பிரித்து எடுத்து தனியாக்குவதே டிரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. பொதுவாக சதிகோட்பாட்டை யாழில் எழுதுவது இன்னொருவரின் வேலை😂. ஆனால் இந்த விடயத்தில் இதுதான் நடக்கிறது என்பதை நான் ஊகிக்கிறேன். Majorie Green Taylor போன்ற MAGA வின் அச்சாணியாக இருந்த டிரம்ப் ஆதரவாளர் கூட இப்போ டிரம்பை மிக கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். தாமதமாகவேனும் இதை விளங்கி கொண்டனர் என நினைக்கிறேன். ஐரோப்பிய தலைவர்கள் இதை எப்போதோ புரிந்து கொண்டார்கள் என நினைக்கிறேன். கிரேக்க புராணத்தில் Trojan Horse என ஒரு கதைவரும். அதன் ஒட்டியே கம்யூட்டர் வைரஸ் கூட டிரோஜன் என அழைக்கப்படும். அப்படி அமெரிக்காவின் அகொ உச்ச பவர் செண்டருக்குள் புட்டினால் புகுத்த பட்ட டிரோஜந்தான் டிரம் என்பது என் கணிப்பு. இது நாட்கள் போக போக அதிகரிக்கிறதே அன்றி குறையவில்லை.
  22. இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.
  23. வெனிசூலாவை ஆக்கிரமித்த அமெரிக்கா.. - எஸ்.வி.ராஜதுரை 4 Jan 2026, 11:48 AM 1823இல், அப்போது அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோவின் அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த க்வென்ஸி என்பவரால் எழுதப்பட்டதும் அன்று முதல் இன்று வரை அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் கூறாக உள்ளதும்தான் ‘மன்றோ கொள்கை’ (Monroe Doctrine) எனக் கூறப்பட்டு வருகிறது. அக்காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த தென்னமெரிக்க நாடுகளில் நடந்த புரட்சிகரக் கொந்தளிப்புகளின் காரணமாக அவை தேசிய விடுதலை பெறும் நிலையில் இருந்தன. இருந்தபோதிலும் அமெரிக்காவின் மன்றோ கொள்கை இனி ‘புதிய உலகம்’ எனச் சொல்லப்படும் அமெரிக்கக் கண்டங்களில், குறிப்பாக இலத்தின் அமெரிக்கா எனச் சொல்லப்படும் தென்னமெரிக்காவிற்குள் – ஐரோப்பிய நாடுகள் இனி புதிய ஆக்கிரமிப்புகளைச் செய்யக்கூடாது என்றும், அதேவேளை ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் உள்விவகாரங்களிலோ அல்லது அவற்றிடம் எஞ்சியிருந்த இலத்தின் அமெரிக்கக் காலனி நாடுகளிலோ அமெரிக்கா தலையிடாது என்றும் மன்றோ கொள்கை கூறியது. ஆனால், இலத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகிலுள்ள வேறு எந்த நாட்டிலும் அமெரிக்கா தலையிடாது என்ற வரம்பு மன்றோ கொள்கையில் சேர்க்கப்படவில்லை. எனவே அமெரிக்கா இலத்தின் நாடுகளில் மட்டுமின்றி உலகின் ஆறு கண்டங்களிலும் தலையிட்டுள்ளது. புவிக் கோளத்தில் குறைந்தபட்சம் பாதியளவு தனது உடைமையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் குறிக்கோள். இலத்தின் அமெரிக்க நாடுகளைத் தன் புழக்கடையாகக் கருதும் அமெரிக்கா தன் நலனுக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் நாடுகளை ஆக்கிரமித்தோ அல்லது அந்த நாடுகளில், தனது உளவுத் துறை மூலமாகவோ ‘எதிர்க் கட்சிகளை’ உருவாக்கி ஆட்சிக் கலைப்பு செய்தோ தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. உலக நாடுகளில் பிரதிநிதி என்று சொல்லப்படும் ஐ.நா.வின் விதிகளையும் சர்வதேசச் சட்டங்களையும் துச்சமெனக் கருதும் அமெரிக்கா, 2000த்தில் தொடங்கிய புத்தாயிரமாண்டில் மட்டும் லிபியா, சிரியா, இராக், பாலஸ்தீனம் முதலிய நாடுகளில் நேரடியாக இராணுவத் தலையீடு செய்துள்ளது. அண்மையில் வங்கதேசத்திலும் நேப்பாளத்திலும் நடந்த ”இளந்தலைமுறையினரின் புரட்சிகளி”லும் அமெரிக்காவின் கை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கக் கண்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற மன்றோ கொள்கையைக் காட்டி, 1950களில் குவாதமாலா நாட்டிற்கும் 1960களில் கியூபாவிற்கும் சோவியத் யூனியன் செய்த பொருளாதார உதவிகளையும்கூட அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் செய்யப்பட்ட தலையீடு என்று அமெரிக்கா கூறியது.1960 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, கியூபாவுடன் எந்த நாடும் வணிகம் செய்யக்கூடாது என்ற தடை விதித்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. இலத்தின் அமெரிக்க நாடுகள் ஏதும் சோசலிசத்தை மட்டுமல்ல சுயேச்சையான, இறையாண்மையுள்ள பொருளாதாரத்தை உருவாக்குவதைக்கூட அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த நாட்டின் மீதும் இராணுவத் தலையீடு செய்யும் திமிர் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. அணு உலைகள் தொடர்பான சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு ஈரான் உடன்படவில்லை என்று கூறியும் உலக எஜமானனாகத் தன்னைப் பாவித்தும் சிலமாதங்களுக்கு முன் அமெரிக்க இராணுவ விமானங்கள் ஈரானின் அணு உலைகள் இருந்த இடத்தின் மீது குண்டு மாரி பொழிந்துவிட்டுச் சென்றன. அந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகுத்தியது ஈரான். தற்போது ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அந்த நாட்டின் அரசை எதிர்த்து வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துபவர்கள் மீது ஈரானிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்கா அந்த நாட்டில் தலையிடும் என்று இரண்டு நாள்களுக்கு முன் ட்ரம்ப் விடுத்த அறிக்கைக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம். 1998முதல் 2013 வரை வெனிசூலாவின் குடியரசுத் தலைவராக இருந்த ஹ்யூகோ சாவெஸ், அந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்கா தன் உளவுப் படைகள் மூலமும் அங்குள்ள அரசியல் கைக்கூலிகள் மூலமும் சாவெஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பல முயற்சிகளைச் செய்தது. சாவெஸ் இறந்த பிறகு அவரது அரசியல் வாரிசான நிக்கோலா மதுரோ ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீர்குலையும்படி செய்து வந்தது. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசூலா. அந்த வளத்தைக் கொள்ளையடித்து வந்த பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன வெனிசூலாவின் சாவெஸ், மதுரோ அரசாங்கங்கள். ட்ரம்ப் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற முதல், வெனிசூலா அரசாங்கம் போதைப் பொருள்களை அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லும் கும்பல்களுக்கு ஆதரவளிப்பதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார். அது உண்மைதான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும்கூட, உலகில் மிக சக்தி வாய்ந்த நாடாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா போதைப் பொருள்கள் தன் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்திருக்க வேண்டுமல்லவா? மேற்சொன்ன பிரசாரத்துடன், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினரைத் திரட்டிக் கொண்டு வந்துள்ளவருமான மரியா கொரினா மச்சோடோ போன்றவர்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாட்டில் கலவரச் சூழ்நிலையை ஏற்படுத்தி வந்தது ட்ரம்ப் அரசாங்கம். மேலும், அங்கு கூலிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் தனக்குப் பிடிக்காத அரசாங்கங்களை எண்ணற்ற முறை கவிழ்க்கவும் தேவைப்பட்டால் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கொல்லவும் தீர்மானித்து வந்த அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவம், தன் கைக்கூலி நாடுகளுடன் இணைந்து 1983இல் கரீபியன்கடல் பகுதியிலுள்ள சின்னஞ் சிறு தீவு நாடான கிரெனாடாவின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பிரதமர் மாரிஸ் பிஷப்பைக் கைது செய்து வீட்டுக் காவலில் வத்து பின்னர் கொலை செய்தது. அமெரிக்க நேரப்படி 3.1.2026 அதிகாலையில் அமெரிக்க இராணுவ விமானங்கள் வெனிசூலாவின் தலைநகர காரகாஸ் மீதும் நாட்டின் பல பகுதிகள் மீது பரவலாகவும் குண்டுமாரி பொழிந்துள்ளன. வெனிசூலாவின் இராணுவத் தளங்கள், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீதே தாக்குதல் தொடுப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் கூறினாலும், மக்கள் வசிக்கும் இடங்களிலும் இராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனிமேல்தான் தெரிய வரும். இது ஒருபுறமிருக்க வெனிசூலாவின் குடியரசுத் தலைவர் நிக்கோலா மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து வேறு நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக ட்ரம்ப் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட அக்கிரமமான செயல் உலக அரசியலில் இருக்க முடியுமா? மதுரோவும் அவரது மனைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கான சான்றை அமெரிக்கா தர வேண்டும் என்று வெனிசூலாவின் துணைக் குடியரசுத் தலைவர் வற்புறுத்தியுள்ளார். அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரோ, தனது நாடு எவருக்கும் பணிந்துவிடாது என்றும் அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். எத்தனை பிணக்குவியல்களை அந்த நாடு காணப் போகிறதோ? அமெரிக்க மக்களில் 35 விழுக்காட்டினர் மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றாலும் அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களும், இராணுவமும், காவல் துறையும் ட்ரம்பிற்குப் பக்க பலமாக இருக்கின்றன. வியட்நாம் போரின் போது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக அந்த நாட்டுக் குடிமக்கள் கிளர்ந்தெழுந்தது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்குமா? அல்லது ரஷியா, சீனா, ஈரான் போன்றவை வெனிசூலாவுக்கு ஆதரவாக அறிக்கையுடன் நிற்காது வேறுவகையில் உதவி செய்யுமா? காஸா விவகாரத்தில் நடந்து கொண்டது போல இந்திய அரசாங்கம் இப்போதும் மெளனம் காக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற தீய சக்தி ஒழிந்தால்தான் உலக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கட்டுரையாளர் குறிப்பு: எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார். https://minnambalam.com/the-monroe-doctrine-and-american-occupations/
  24. உக்ரேனின் மீது ரஸ்யா செய்த அடாவடிக்கும்…. இதற்கும் கிஞ்சித்தும் வித்தியாசமில்லை. என்ன….நாளைக்கு சீனா தய்வானை சுற்றி மூண்டு “போதை படகை” அனுப்பி போட்டு - இறங்கி அடிப்பான் - கேட்டால் அதே நியாயம்😂. அமெரிக்கா சதாமிற்கு பின் என்ன என திட்டமிடாமல் பாக்தாத்தில் இறங்கி சில்லவல்ல பட்டதை விட மோசமாக இங்கே மூக்குடைய கூடும். வெனிஸ்சுவேலாவின் செவேஸ் ஆதரவாளர்கள் மிக பலமானவர்கள். அத்துடன் எதிரணி நோபல் பரிசு வென்ற மரியாவையும் டிரம்ப் புறக்கணித்து பேசியுள்ளார். மதுரோவின் deputy ஐ டிரம்ப் விரும்புவதாக பேச்சில் தெரிந்தத்து. ஆனால் டிரம்பின் பின் டீவியில் தோன்றிய அந்த பெண்மணியோ, அமெரிக்கவை போட்டு வாங்கி விட்டு, இன்னும் மதுரோவோ ஜனாதிபதி என கூறுகிறார். தம்பர் நல்லா ஆப்பு இழுத்து விட்டார் என நினைக்கிறேன். ஐயோ அதையே கேக்கிறியள்😂. தம்பர் போரை விரும்பாத உத்தமர் என புகழ்ந்த அண்ணைக்கெல்லாம்… வெரி டெலிகேட் பொசிசன்.
  25. Backyard Chef,,இந்த பகுதியிலும் நிறைய சமையல்கள் பார்க்கலாம்.
  26. சுலபமாய் செய்யக்கூடிய சுவையான பிரியாணி ........! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.