Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88484
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20226
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8950
    Posts
  4. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    2194
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/26 in all areas

  1. ரம் குளத்தைக் கலக்கி பருந்துக்கு இரையாக்கியுள்ளார்.
  2. மன்னிக்க வேண்டும். வேலைப்பழுவினால் தொடர்ந்து எழுதமுடியாது போய்விட்டது. மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு, கல்கிஸ்ஸை பொலீஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும், நிலாப்டீனும் மொறட்டுவை பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விசாரிப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை. நான் உட்பட இன்னும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களை அவர்கள் தனியான அறைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அறுவரும் கோண்டாவில், மாணிப்பாய், பருத்தித்துறை, சித்தங்கேணி, தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன் கொழும்பிற்கு வந்தவர்கள். நான் 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு உயர்தரத்தில் கற்பதற்காக வந்திருந்தேன். எங்களை ஒவ்வொருவராக அழைத்து விச்சரிக்க ஆரம்பித்தனர் ஜெயரட்ணமும் நிலாப்டீனும். சிறிய மரத்தினால் ஆன மேசை. மேசையின் ஒரு பக்கத்தில் ஜெயரட்ண‌ம் அமர்ந்துகொள்ள, இன்னொரு பக்கத்தில் நிலாப்டீன் அமர்ந்துகொண்டான். எங்களை ஒவ்வொருவராக அழைத்து ஜெயரட்ணத்தின் முன்னால் இருக்கச் சொல்லிப் பணித்தார்கள். அவனது கைய்யில் புகைப்பட அல்பம் ஒன்று இருந்தது. அதிலிருந்தவர்களைக் காண்பித்தவாறே அவனது விசாரணை ஆரம்பித்தது. முதலில் நான். ஜெயரட்ணமே முதலில் விசாரணையினை ஆரம்பித்தான். "எந்த ஊரடா நீ?" கோண்டாவில் என்று நான் கூறவும், உடனேயே அல்பத்தை திறந்து சில புகைப்படங்களைத் தேடினான். பின்னர் குறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று அதட்டியபடி கேட்டான். அப்புகைப்படம் புலிகளின் வீரர் ஒருவருடையது. கோண்டாவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முகாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றிய போராளி ஒருவருடையது. ஆனால் எனக்கோ அவரைத் தெரியவில்லை. ஆகவே, "இவரை எனக்குத் தெரியாது" என்று கூறவும், நிலாப்டீன் அறைந்தான். "கோண்டாவில் எண்டு சொல்கிறாய் ஆனால் இவனை உனக்குத் தெரியவில்லையா ?" என்று அவன் கத்தினான். "எனக்குத் தெரியாது " என்று மீண்டும் கூறினேன். அதன் பிறகு இன்னும் சில புகைப்படங்களைக் காண்பித்து அவர்களைத் தெரியுமா என்று ஜெயரட்னம் கேட்கவும், அவர்களில் ஒருவரையும் தெரியாது என்று மீண்டும் கூறினேன். தொடர்ந்தும் நான் எவரையும் தெரியாது என்று கூறவும், "எப்பயடா கொழும்பிற்கு வந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்டான். "1990 ஆம் ஆண்டு" என்று நான் கூறவும், "சரி, போ" என்று என்னை விட்டுவிட்டான். அதன் பின்னர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாவின் முறை. அவனது தம்பி புலிகள் இயக்கத்தில் இணைந்து சிலாவத்துறைச் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தவன். மாவீரர் குடும்பமாதலால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோது பிரபாவினால் இலகுவாக கொழும்பிற்கு வர முடிந்திருந்தது. மாவீரர் குடும்பத்தைச் சாராதவர்கள் சரியான காரணங்கள் இன்றி கொழும்பிற்கு வருவதென்பது அக்காலத்தில் புலிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரபா 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொழும்பிற்கு வந்தமையானது அவன் மீது கடுமையான சந்தேகத்தை ஜெயரட்ணத்திற்கும், நிலாப்டீனுக்கும் ஏற்படுத்தி விட்டிருந்தது. முதலில் புலிகளின் புலநாய்வுப்பிரிவினரால் அனுப்பப்பட்டவன் என்று கூறி அவனை இருவரும் கடுமையாகத் தாக்கினார்கள். அவன் "இல்லை, நான் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததினால்த்தான் கொழும்பிற்கு வந்தேன்" என்று கூறவும், "அப்படியானால் நீ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான், உண்மையை ஒத்துக்கொள்" என்று கூறி மீளவும் தாக்கினார்கள். அடி தாங்காமல் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அவனைத் தனியாக ஒரு மூலையில், தரையில் இருத்திவிட்டு, "விடியும் முன்னர் நீ எப்படி கொழும்பிற்கு வந்தனீ எண்டதைச் சொல்லிப்போடு, இல்லையெண்டால் காலையில உன்னை நாலாம் மாடிக்கு கொண்டுபோவோம், அங்க போன பிறகு நீ உயிரோடு திரும்ப இயலாது" என்று மிரட்டினார்கள். அடுத்தவன் லீலாகிருஷ்ணன். பருத்தித்துறையைச் சேர்ந்தவன். பல்கலைக்கழக மல்யுத்த அணியில் இருந்தவன், அதனால் உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவனும் கொழும்பிற்கு வந்திருந்தமையினால் அவனையும் தாக்கியபடியே விசாரித்தார்கள். அவனது குடும்பம் மாவீரர் குடும்பமா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறே தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆனால் கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்துவந்த புஸ்ப்பாகரன், சித்தங்கேணியைச் சேர்ந்த ரமேஸ் என்று மீதியாய் இருந்தவர்களையும் விசாரித்தார்கள் இடையிடையே தாக்கினார்கள். எல்லோரையும் நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்றே நாம் நம்பியிருந்தோம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்தார். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களை புலிகள் என்று தவறாகப் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அதிகாரி பீரீஸுடன் அவர் வாதிட்டார். "உன்னைப்போன்ற‌ சிங்கள துரோகிகளால்த்தான் புலிகள் கொழும்பில் குண்டுவைக்கிறார்கள். இவங்களை என்னிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவருடன் கர்ஜித்தான் பீரிஸ். ஆனால் அவர் விடுவதாய் இல்லை, "இவர்களில் இறுதியாண்டில் படிக்கும் ஆறு மாணவர்களையும் என்னுடன் அனுப்பி வைய்யுங்கள், இவர்களுக்கான பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நானே இவர்களை பரீட்சை முடிந்தவுடன் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று மன்றாட்டமாக அவர் பீரிஸிடம் கெஞ்சினார். சிங்களவராக இருந்தும் தமிழ் மாணவர்கள் பரீட்சையினைத் தவறவிடக் கூடாது என்ற அக்கறை அவருக்கு இருந்தது. அவருடன் சில நிமிடங்கள் தர்க்கித்துவிட்டு, "சரி, அழைத்துச் செல், ஆனால் இவர்களால் ஏதாவது தீங்கு ஏற்படுமாக இருந்தால் நான் உன்னை வந்து கொல்வேன்" என்று கத்தியவாறே எங்களை அவருடன் அனுப்பி வைத்தான். ஆனால் எங்களைத் தவிரவும் மூன்றாம், இரண்டாம் வருடங்களில் படித்துக்கொண்டிருந்த இன்னும் நாற்பது மாணவர்களை பீரிஸ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தான்.
  3. இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
  4. கிருபன் பொய்ச் செய்திகளை இணைக்காதீர்கள். அப்படி இணைப்பதானால் காணொளிகளுடன் இணையுங்கள்.
  5. இராணுவம் வெளியேறியதும் சிறிது காலத்தில் கோட்டை உடைப்பு தொடங்கிவிட்டது. அப்போதைய காலத்தில் இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களுக்கு கோட்டை இடிப்பு தண்டனையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக தண்டனைக்காலம் மூன்று மாதங்கள் கோட்டை இடிப்பு என கேள்விப்பட்டுள்ளேன். கோட்டையில் இடிக்கப்பட்ட கற்களை இயக்கம் பின்னர் பல்வேறு தேவைகளிற்கு பயன்படுத்தியதாக நினைவு. கோட்டைக்குள் எதிர்காலத்தில் மீண்டும் இராணுவம் வரக்கூடாது என்பது அடிப்படை காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. கோட்டை இராணுவ முகாமை தகர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பு கொடுத்த விலை, உயிர்த்தியாகங்கள் அதிகம். அனைத்து கோட்டை தாக்குதல்களும் தோல்வியிலேயே நிறைவடைந்தன. கோட்டை முற்றுகை இராணுவம் தாமாக வெளியேறியதுடன் நிறைவுக்கு வந்தது. 1995ம் ஆண்டு இறுதிகளில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோட்டை இடிப்பு தொடர்ந்தது. இடிப்பு இதனால் முழுமை பெறவில்லை. கோட்டை இராணுவ வெளியேற்றத்தின் பின் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதும், அதைப்பார்க்க சென்று வந்ததும் நினைவில் உள்ளன. கோட்டையில் உயரமாக சென்றி பொயிண்ட் அமைத்து அதில் சினைப்பர்கள்/குறி பார்த்து சுடும் இராணுவத்தினர் துவக்கை யாழ் மத்திய கல்லூரி நோக்கி நீட்டுவதாக காண்பிக்கலாம். சுற்றுலா பயணிகளிக்கு வரலாறு தெரியவேண்டும் அல்லவா.
  6. சீனாவும் அமெரிக்கா போல பொருளாதாரத்தினை ஆயுதமாக்கும் நாடுதான், அவுஸ்ரேலியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் சீனாவில் தங்கியிருக்கின்ற நிலையில் அவுஸ்ரேலிய முன்னால் பிரதமர் ஸ்கொட் மொரிசன் எனும் பிரதமர் சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார் (அவர் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டவர், நாடே பற்றியெரிந்த போது உல்லாச பயணம் சென்று மாட்டிக்கொண்டவர்) அதற்கு பதிலளிக்க சீனா அவுஸ்ரேலிய பொருள்களின் இறக்குமதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்த்து (எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்).
  7. துணைவேந்தர் ஒருவாறு எங்களை தன்னுடன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். புலிகள் என்று கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்களை துணைவேந்தரே மீளவும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தமையானது சிங்கள மாணவர்களைடையே அதிருப்தியினை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவர்கள் பலரிடம் இருந்த கேள்வி, "உங்களை எப்படி போக விட்டார்கள்?" என்பதுதான். எங்களை முன்னின்று பிடித்துவந்து, பொலீஸில் கொடுத்த மாணவர்களில் சிலர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதில் மாணவர் சங்க தலைவனும் ஒருவன். சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியின் கம்பகா மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த அவன் பொலீஸ் நிலையத்தில் மிகவும் சாதாரணமாக உலாவந்தான். நாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள்? உங்களை என்ன செய்வதாகச் சொல்கிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். "தெரியாது, எவராவது வந்து எம்மை மீட்டுச் செல்லும்வரை பார்த்திருக்கிறோம்" என்று நாம் கூறினோம். "நீங்கள் யோசிக்கத் தேவையில்லை, உங்களை விசாரித்துவிட்டு, பிரச்சினை ஏதும் இல்லையென்றால், உடனேயே விட்டுவிடுவார்கள்" என்று பாசாங்காக பதிலளித்தான் அவன். அவன் செய்வது என்னவென்று எமக்கு நன்கு தெரிந்திருந்தது. நாங்கள் அறுவரும் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு பொலீஸ் நிலையத்தில் நடந்தது என்னவென்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால் எவருக்கும் எம்மீது அனுதாபம் இருக்கவில்லை. எம்மைக் காட்டிக்கொடுத்து, பொலீஸில் கையளித்தவர்களில் ஒருசிலர் வந்து எம்மிடம் பேசியபோது நான் வெளிப்படையாகவே "எங்களை பிடித்துக்கொண்டு வந்து பொலீஸில் கொடுத்ததே நீங்கள் தானே? இப்போது எதற்காக எங்களைப்பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. எமது கைதின் பின்னர், அதுவரை எம்முடன் சகஜமாகப் பேசும் சிங்கள மாணவர்களே எம்மிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், நாம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதை அறிந்த இன்னொரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எம்முடன் தொடர்பு கொண்டார்கள். கொழும்பில் வெளிவந்த அத்த எனும் சிங்களப் பத்திரிக்கை தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதிபற்றி கட்டுரை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், எம்மால் எமது அனுபவங்களை அப்பத்திரிக்கை நிருபருடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டார்கள். சிங்களத்திலேயே பேட்டி இருக்கும் என்பதனால் என்னையும், இரண்டாம் ஆண்டில் பயின் று வந்த வெள்ளை எனும் புனை பெயர் கொண்ட இன்னொரு மாணவனையும் சொய்ஸாபுர தொடர்மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அந்தப் பத்திரிக்கை நிருபரும், மாணவர் அமைப்பின் சில உறுப்பினர்களும் இருந்தார்கள். சுமார் இரு மணித்தியால‌ங்களாவது எமது அனுபவங்களைக் கேட்டபடி இருந்தார்கள். பொறுமையாக , இடையூறுகள் இன்றி, நாம் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, அடுத்த கேள்வியினைக் கேட்டார்கள் அவர்களின் முகத்தில் காணப்பட்ட உண்மையான வருத்தமும், தவறிழைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கமும் எமக்கு ஆறுதலாக இருந்தது. நாம் பேசுவதைக் கேட்டுவிட்டு இறுதியாக, "உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கியவர்கள் சிங்களவர்கள். ஆனாலும், மனிதநேயம் கொண்ட‌ சிங்களவரும் இருக்கிறோம். உங்களைப் புலிகள் என்றே அனைத்து பிரதான பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் உங்களின் அனுபவங்களைச் சொல்லவிருக்கிறோம், எங்கள் இனத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருந்துகிறோம்" என்று சொல்லி பேட்டியினை முடித்துக்கொண்டார்கள். அப்பத்திரிக்கையின் அடுத்தவார இதழில் எமது பேட்டி வெளியாகியிருந்தது. நாம் கூறியவற்றில் பெரும்பாலான விடயங்களை அப்படியே மாற்றம் செய்யாது வெளியிட்டது அத்த பத்திரிக்கை. அத்த பத்திரிக்கையில் வெளியான எமது பேட்டி பல சிங்கள மாணவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது. இப்பேட்டியினை வழங்கியது யாரென்று அறிய அவர்கள் முயன்றார்கள். சிங்களம் பேசுக்கூடியவன் என்பதனால் என்னிடம் வந்து, "நீயா இப்பேட்டியைக் கொடுத்தது? எங்களை இரக்கமற்றவர்கள் போன்று பேசியிருக்கிறாயே?" என்று கேட்டார்கள். அந்தப் பேட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நாம் மறுத்துவிட்டபோதிலும், "நீங்கள் செய்ததைத்தானே பத்திரிக்கையும் பேட்டியாக வெளியிட்டிருக்கிறது?" என்று என்னிடம் பேச வந்த சிங்கள மாணவர்களிடம் கூறினேன், அவர்களிடம் பதில் இருக்கவில்லை. இனவாதம் தலைக்கேறிய பின்னர் கூடவே படிக்கும் தமிழ் மாணவர்களையும் பயங்கரவாதிகள் என்றும், கொலைகாரர்கள் என்று அடையாளம் காணும் சிங்கள மாண‌வச் சமூகத்திலேயே எமது பல்கலைக்கழக படிப்பும் நடந்தேறியது.
  8. 😂 இதே திரியில் கூட கண்டிருப்பீர்கள்… ஒரு காலத்தில் தமிழ் தேசிய சிங்க வேடம் போட்டு இதே யாழில் உலா வந்த அண்ணமார் …. இப்போ அனுரவுக்கு… ஹொந்தடோம…”பொங்கல்” தெனவா😂 ஆனாலும் இப்படி ஒரு போக்கிரிகளின் லிஸ்டை போட்டு விட்டு… அவர்களை தமிழ் தேசிய உணர்வாளர் என எழுதுவது எல்லாம் அடுத்த லெவல் ஜோக்😂
  9. பண்டத்தரிப்பில் இருந்து வெளியேறிய இராணுவம்; பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் Published By: Vishnu 29 Jan, 2026 | 09:31 PM மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து புதன்கிழமை (28) முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசிதனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார். மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான 31 பரப்புடைய காணியை யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி இராணுவ முகாம் அமைத்திருந்தனர். குறித்த காணிக்குள் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான "கொல்களம்" இருந்த நிலையில் , அதுவும் இராணுவத்தினரின் பிடிக்குள் இருந்ததால் , தெல்லிப்பழை பகுதியில் வாடகை இடமொன்றில் கொல்களம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, காணி பிரதேச சபைக்கு மீள கிடைத்த நிலையில் , அது தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், குறித்த காணியில் சபைக்கு வருமானத்தை ஈட்ட கூடிய வகையில் மிக சிறந்த பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். காணிக்குள் முன்னர் கொல்களம் இயங்கி வந்தது. அதனை மீள அவ்விடத்தில் இயக்குவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் மற்றும் அப்பகுதி வட்டார உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை கடந்த வாரம் சுழிபுரம் பகுதியில் இருந்த மினி இராணுவ முகாம் ஒன்றும் அகற்றப்பட்டு, அக்காணிகள் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237366
  10. சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
  11. பொன்ஜூர் ரூஸோ! ஷோபாசக்தி இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸ் நகரத்திலுள்ள ‘பந்தியோன்’ மணிமண்டபத்திற்கு அரசு மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு, வோல்த்தேயரின் உடலுக்கு அருகே சமாதி வைக்கப்பட்டது. இவர்களுக்கு அருகேதான் விக்டர் ஹூகோவும், அலெக்ஸாந்தர் டுமாவும், ஜோசப்பின் பாக்கரும், எமில் ஸோலாவும் நீள்துயிலில் இருக்கிறார்கள். பொன்நிறமான பந்தியோன் மணிமண்டபம் கட்டடங்களின் அரசி போன்று நகரத்தின் மையத்தில் உயர்ந்து நிற்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு இது தேவாலயமாக இருந்தது. புரட்சியின் போது, இந்தத் தேவாலயம் பிரான்ஸின் மாண்புமிகு எழுத்தாளர்களதும் கலைஞர்களதும் அறிஞர்களதும் உடல்களைச் சமாதி செய்து வைக்கும் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. மண்டபத்திலிருந்து குறுகிய படிகளின் வழியே கீழே இறங்கிச் சென்றால், அங்கே சிலுவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசாலமான பாதாள மண்டபத்துள், அரை இருளில் இவ்வாறாக எண்பத்துமூன்று சமாதிகள் இருக்கின்றன. இவற்றைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வெயில், பனி பாராமல் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். காலை பத்து மணிக்குத்தான் மணிமண்டபத்தைப் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடுவார்கள். மணிமண்டபத்தின் தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறுமணிக்கே வேலைக்கு வந்துவிடுவார்கள். இன்று, சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தைச் சுத்தம் செய்யவேண்டியது அபினாவின் முறை. அபினா இங்கே வேலைக்கு வந்து சரியாக முப்பது வருடங்களாகின்றன. அவர் வேலைக்குச் சேர்ந்த அதே வாரத்தில்தான் ‘ஸ்ஸோ’ நகரத்தில் புதைக்கப்பட்டிருந்த மேரி கியூரியின் உடல் அறுபது வருடங்களுக்குப் பின்பு தோண்டி எடுக்கப்பட்டு, இந்த மணிமண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சமாதி வைக்கப்பட்டது. அப்போது அபினாவுக்கு இருபத்தைந்து வயது. அவர் வட ஆபிரிக்காவிலிருந்து அகதியாக பிரான்ஸுக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. வோலோவ் குடியில் பிறந்து, சிறிய பாலைவனக் கிராமத்தில் வசித்திருந்த அபினாவுக்கு பாரிஸ் நகரம் மிரட்சியைத்தான் கொடுத்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவத்தைக் கொண்டிருக்கும் அபினா அந்நியர்களுடன் பேசுவதற்குத் தடுமாறினார். வாயை மூடிக்கொண்டு வேலைக்கு வந்து திருத்தமாக வேலையைச் செய்துவிட்டு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது மணிமண்டபத்தின் வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நடுத்தர வயதுப் பிரெஞ்சுக்காரருக்கு அபினாவின் இந்தப் போக்கு அதிருப்தியைக் கொடுத்தது. ஒருவரையொருவர் பணியிடத்தில் காலையில் சந்திக்கும்போது ‘உங்களுக்கு நல்ல நாளாகட்டும்’ என்ற பொருள்தரும் ‘பொன்ஜூர்’ எனும் வணக்கத்தைச் சொல்வது பிரெஞ்சு நடைமுறை. ஆனால், அபினா ‘பொன்ஜூர்’ எனப் பாதுகாப்பு அதிகாரிக்குச் சொல்வதில்லை. அப்படி ஒரு கண்டிப்பான வழக்கம் இருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. பாதுகாப்பு அதிகாரி, தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளரிடம் இது குறித்து முறையிட்டார். மேற்பார்வையாளரும் அபினாவின் நாட்டவர்தான். அவர் இந்த ‘பொன்ஜூர்’ நடைமுறையை அபினாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, வாயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அவசியம் வணக்கம் வைக்கவேண்டும் என்றார். அபினா கற்றுக்கொண்ட முதல் பிரெஞ்சு வார்த்தை ‘பொன்ஜூர்’. அன்று முழுவதும் அபினா பரீட்சைக்குப் படிப்பது போன்று இந்த ‘பொன்ஜூர்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சாடனம் செய்தவாறேயிருந்தார். அவரது நீண்டு தடித்த நாக்கில் அந்த வார்த்தை தங்காமல் வழுக்கி விழுந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையில் அபினா வேலைக்கு வந்தபோது, வாயில் பாதுகாப்பு அதிகாரி வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கையில் அவரைக் காணவில்லை. ‘பொன்ஜூர்’ சொல்லும் அபாயத்திருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என்று எண்ணிக்கொண்டே அபினா அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சென்றார். வரிசையிலிருந்த முதலாவது கழிப்பறையின் கதவை அபினா தள்ளித் திறந்தபோது, உள்ளே வாயில் பாதுகாப்பு அதிகாரி சிறுநீர் கழித்துக்கொண்டு நின்றிருந்தார். அவர் திடுக்கிட்டுத் திரும்பி அபினாவை உணர்ச்சியற்ற சாம்பல்நிறக் கண்களால் பார்த்தார். அபினாவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நேற்றிலிருந்து உச்சாடனம் செய்துகொண்டிருக்கும் ‘பொன்ஜூர்’ மந்திரம் எதிர்பாராமல் அவரது நாவிலிருந்து நடுக்கத்தோடு உருண்டு விழுந்தது. அதைச் சொல்லிவிட்டு அபினா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட்டார். பாதுகாப்பு அதிகாரி அபினாவின் மேற்பார்வையாளரைத் தேடிச் சென்று அவரிடம் சொன்னார்: “அந்தப் பெண் எனக்கு ‘பொன்ஜூர்’ சொல்லத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், மெனக்கெட்டு என்னைத் தேடி வந்து கழிவறைக்குள் கண்டுபிடித்து அவள் வணக்கம் சொல்ல வேண்டியதில்லை.” இவ்வாறாகத்தான் முப்பது வருடங்களுக்கு முன்பு அபினா பிரெஞ்சு மொழி பழக ஆரம்பித்தார். இப்போதுவரை அவரது வாயில் தங்காமல் பிரெஞ்சு மொழி வழுக்கிக்கொண்டேயிருக்கிறது. என்றாலும், எதிர்ப்படும் எல்லோருக்கும் ‘பொன்ஜூர்’ வணக்கத்தை அபினா சொல்லிக்கொண்டேயிருந்தார். தானாகவே போய் உளமும் முகமும் மலரச் சொல்வார். மெத்ரோவில், தெருவில், சந்தையில், மணிமண்டபத்தில் என எல்லா இடங்களிலும் தன்னுடைய புன்னகையால் தோய்ந்த வணக்கங்களை அளித்தார். தற்போது வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவன் போலந்து நாட்டு இளைஞன். அவனுக்கு “என் மகனே…பொன்ஜூர்…” என அபினா வணக்கம் சொல்லிவிட்டு, வேலையைத் தொடங்கினார். பாதாள மண்டபத்தில் இருக்கும் எந்தச் சமாதியில் எவரின் உடல் இருக்கிறது என்பதை இந்த முப்பது வருட அனுபவத்தில் அபினா அறிந்து வைத்திருந்தார். வோல்த்தேயரின் சமாதியைத் பூப்போல துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, ரூஸோவின் சமாதியைச் சுத்தம் செய்ய அபினா வந்தபோதுதான், அந்தச் சமாதியின் மீது ஒரு மனிதர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அபினாவின் இருதயம் வழுவி அவரது பருத்த வயிற்றுக்குள் விழுந்த சத்தமோ என்னவோ அவருக்கே கேட்டது. அதே நேரத்தில் அவரது பச்சை குத்தப்பட்டிருந்த தடித்த உதடுகள் அகலப் பிளந்து அப்படியே நின்றன. என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறியவர் ‘பொன்ஜூர் ரூஸோ’ எனத் திறந்த வாய் மூடாமலேயே முணுமுணுத்துவிட்டு, வாயைக் கைகளால் பொத்தியவாறே ஓடிச் சென்று, படிகளில் ஏறி மூச்சிரைப்புடன் மணிமண்டபத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மணிமண்டபத்தின் நிர்வாகிகள் இருவர் அலுவலகத்திற்குள் இருந்தார்கள். அபினா தட்டுத்தடுமாறி அவர்களிடம் சொன்னார்: “பொன்ஜூர்…. தனது சமாதியிலிருந்து… திரு. ரூஸோ வெளியே வந்துவிட்டார்.” 2 பந்தியோன் மணிமண்டபத்துள் ரூஸோவின் சமாதிமீது படுத்திருந்தவரது பெயர் கதிரன் சிவபாலன். அவருக்கு நாற்பத்தைந்து வயது. சற்றே வழுக்கையான தலையும் ஒல்லியான உடலும் கொண்ட கரிய மனிதர். “இந்தக் கறுப்பனையா அந்தப் பெண்மணி ரூஸோ எனச் சொன்னார்?” என ஆச்சரியத்துடன் மணிமண்டபத்தின் நிர்வாகி தனது உதவியாளரிடம் கேட்டார். பீட்ரூட் போன்ற நிறமும் உருவமும் கொண்ட உதவியாளர் சதை மடிப்புகள் விழுந்த தனது தாடையைத் தடவியவாறே சற்று யோசித்துவிட்டு “ரூஸோ அடிமை ஒழிப்பு குறித்து நிறைய எழுதியிருப்பதால், ரூஸோ ஒரு கறுப்பரே என அந்தப் பெண்மணி நினைத்திருக்கக்கூடும்” என்றார். “அந்தப் பெண்மணிக்கு எழுதப் படிக்கவே தெரியாதே… வேலை ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் வைக்கவே அவருக்குத் தெரியாது. ஒட்டகம் போன்ற ஏதோவொன்றைத்தான் வரைந்து வைக்கிறார்” என்றவாறே நிர்வாகி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே நிமிடங்களில் பாரிஸ் நகரக் காவல்துறையினர் அங்கே வந்துவிட்டார்கள். சென்ற வாரம்தான் கொள்ளையர்கள் ‘லூவர்’ அருங்காட்சியகத்திற்குள் நோகாமல் நுழைந்து நெப்போலியனின் மனைவியின் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்… அதற்குள் பந்தியோன் மணிமண்டபத்தில் ஒரு சம்பவமா எனக் காவல்துறையினர் அலறியடித்துக்கொண்டு அங்கே வந்திருந்தார்கள். சமாதிமீது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கதிரன் சிவபாலனை உலுக்கி எழுப்பிய காவல்துறை அதிகாரிகள் அவரது கைகளில் விலங்கை மாட்டிவிட்டு, மணிமண்டபத்தின் அலுவலக அறைக்கு அழைத்துவந்து உட்கார வைத்தார்கள். சிவபாலனுக்கோ எந்தப் பதற்றமுமில்லை. அவர் உற்சாகமாகத் தனது கால்களை ஆட்டியவாறே “ஒரு தேநீர் கிடைக்குமா?” என ஆங்கில மொழியில் கேட்டார். காவல்துறையினர் அவருக்குத் தேநீர் வழங்கிவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினார்கள். 3 பாரிஸில் ‘லிபி வட்டம்’ என்றொரு தமிழ் இலக்கியக் குழுவினர் ஏழெட்டு வருடங்களாகவே இயங்கிவருகிறார்கள். நாவல் – சிறுகதை வாசிப்பு, விமர்சனம் என அவ்வப்போது கூட்டங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டங்களுக்குப் பதினைந்து – இருபது பேர் வருவார்கள். லிபி வட்ட உறுப்பினர்களே ஏழெட்டுப் பேர் இருக்கிறார்கள். எல்லாக் கூட்டங்களிலும் அதே முகங்கள்தான் திரும்பத் திரும்பக் காணப்படுகின்றன. லிபி வட்டத்தினர் உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தீவிரமான கருத்துகளைக் கொண்டவர்கள். பேச்சைத் தொடங்கும்போதே “எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, அந்தோனியோ கிராம்ஷி மீது அதிருப்தி இருக்கிறது” என்றெல்லாம் அதீத தன்நம்பிக்கை மிளிரப் பேசக் கூடியவர்கள். தேசியம், தலித்தியம், பெண்ணியம், மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என எல்லாவற்றைப் பற்றியுமே அவர்களிடம் ஆளுக்கொரு திட்டவட்டமான கருத்து இருந்தது. அவர்கள் எல்லோருமே வாரத்திற்கு ஆறு நாட்கள் கடுமையாக வேலை செய்பவர்கள். இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது என்றாலும், இலக்கியத்திற்காகக் காசு செலவழிப்பதில் பின்நிற்காதவர்கள். தமிழில் வெளிவரும் அநேகமான நூல்களை பாரிஸ் தமிழ் புத்தகக் கடைகளில் அறாவிலைக்கு வாங்கியாவது வாசித்துவிடுவார்கள். வாசித்தவற்றைத் தங்களுக்குள் தீவிரமாக விவாதிப்பார்கள். அவர்களுடைய பொதுவான கருத்துப்படி தற்போது இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுணக்கத்தை உடைப்பதற்குத் தங்களால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தபோதுதான், இலங்கையில் சிறுகதைப் பரிசுப் போட்டியொன்றை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு என்றெல்லாம் கொடுத்தால் ஆறுதலுக்காக எழுதுபவர்களும் கதைகளை எழுதி எல்லோரது நேரத்தையும் வீணடிப்பார்கள் என்பதால் ஒரேயொரு கதைக்குத்தான் பரிசு. மரத்தில் ஒரேயொரு கனி என்றால்தான் பறவைகளின் கவனம் சிதறாது என்பது லிபி வட்டத்தினரின் எண்ணம். தேர்வு செய்யப்படும் கதைக்கு இலங்கை நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபாயுடன் விருதுக் கேடயமும் கொடுப்பது எனவும் பரிசு பெறும் எழுத்தாளருக்கு பிரான்ஸ் விசா கிடைத்தால், அவரைப் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்துக் கவுரவித்து அனுப்புவது எனவும் முடிவு செய்தார்கள். லிபி வட்டத்தினரிடம் பரிசுப் போட்டி வைப்பதைத் தவிர இலக்கியத்திற்குப் பொருந்தாத இன்னொரு குணமும் உண்டு. அவர்கள் நேரம் தவறாமையை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பார்கள். குறித்த நேரத்திற்கு ஒரு பார்வையாளர்கூட வரவில்லை என்றாலும், வெற்று நாற்காலிகளை வைத்துக்கொண்டே கூட்டத்தை ஆரம்பிக்க அவர்கள் தயங்கியதில்லை. அவர்களுடைய கூட்டத்திற்கு வருவதென்னவோ பத்திருபது பேர் என்றாலும், ஒரு மாநாட்டையே நடத்துவது போன்ற கண்டிப்பான திட்டமிடலுடன்தான் ஒழுங்குகளை மேற்கொள்வார்கள். சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களாக வெளியாட்களை அவர்கள் நியமிக்கவில்லை. எங்களுடைய பரிசு, எங்களுடைய பணம், எங்களுடைய முயற்சி என்பதால் நாங்களே சிறந்த கதையைத் தீர்மானிப்போம் என்பது அவர்களது நிலைப்பாடு. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. அவர்களைப் பேச விட்டால் புதுமைப்பித்தனை விட எஸ்.பொன்னுத்துரை ஏன் முக்கியமானவர் என ஒருநாள் முழுவதும் விரிவாகப் பேசுவார்கள். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில்தான் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கதிரன் சிவபாலன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதியிருந்த ‘மாறிலி’ என்ற சிறுகதைதான் பரிசு பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவோரின் கனவான் தந்திரங்களைச் சித்திரித்து யதார்த்தமாகவும் எள்ளலாகவும் அந்தச் சிறுகதை எழுதப்பட்டிருந்தது. எழுதியவரின் முதற்பெயர் ‘கதிரன்’ என இருப்பதால் அவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராகவே இருப்பார் என லிபி வட்டத்திலுள்ள ஒவ்வொருவருமே தமக்குள் எண்ணினார்களே தவிர, அந்த எண்ணத்தை எவருமே அடுத்தவருக்கு வெளிப்படுத்தவில்லை. சிவபாலனுக்கு பிரான்ஸ் விசாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடக்கியபோதுதான், சிவபாலன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக இருக்கிறார் என்பது லிபி வட்டத்தினருக்குத் தெரிய வந்தது. அரசாங்க உத்தியோகத்தர் என்பது பிரான்ஸ் விசா கிடைப்பதற்குப் பெரும் சாதகமான விஷயம். தவிரவும், லிபி வட்டம் கலாசார அமைப்பாக பிரான்ஸில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் சாதகமான விஷயமே. லிபி வட்டத்தினரால் ‘ஸ்பொன்சர்’ கடிதம் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டு சிவபாலனுக்கும் கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், விசா கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்திலேயே லிபி வட்டத்தினர் இருந்ததால், பரிசளிப்பு விழாத் தேதியை பொதுவெளியில் அறிவிக்காமலேயே இருந்தார்கள். பிரெஞ்சுத் தூதரகத்தில் நூறு கேள்விகள் கேட்டுக் குடைந்த பின்பாக சிவபாலனுக்கு இரண்டு வாரங்களுக்கான விசா வழங்கினார்கள். அந்தச் செய்தியை அறிந்ததும் லிபி வட்டத்தினர் உற்சாகத்தில் குதித்தனர். பரிசளிப்பு விழாவுக்கான தேதி உடனடியாகவே பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது. சிவபாலனை இரண்டு வாரங்கள் கவுரமாகவும் சிறப்பாகவும் பாரிஸில் உபசரித்து, எந்தக் குறையுமில்லாமல் விழாவை நடத்தி முடித்து, விருதுக் கேடயத்துடன் அவரை இலங்கைக்கு வழியனுப்புவது வரையான திட்டங்களை லிபி வட்டத்தினர் பார்த்துப் பார்த்துச் செதுக்கத் தொடங்கினார்கள். சிவபாலன் பாரிஸிலுள்ள தனது உறவினர்களின் வீட்டில் தங்கவே விரும்புவார் என்றே லிபி வட்டத்தினர் நினைத்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் தனக்கு உறவினர்கள் அய்ரோப்பாவிலேயே கிடையாது என்று சிவபாலன் தொலைபேசியில் லிபி வட்டத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களுக்கு இது புதினமாகக் கிடந்தது. அய்ரோப்பாவில் சொந்தக்காரர்களே இல்லாத ஒரு யாழ்ப்பாணத்தானா என்று அவர்கள் வாயைப் பிளந்தார்கள். “சிவபாலன் மலையகத்தைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம்… இப்ப யாழ்ப்பாணத்தில படிப்பிக்கலாம்” என்று ஒருவர் தனது ஊகத்தை வெளியிட்டார். லிபி வட்டச் செயற்பாட்டாளர் கருணானந்தன் வீட்டில் முதல் வாரமும், இன்னொரு செயற்பாட்டாளரான அலெக்ஸ் வீட்டில் அடுத்த வாரமும் சிவபாலனைத் தங்க வைப்பதாக முடிவானது. பாரிஸைச் சுற்றிக்காட்டும் பொறுப்பை ‘பசுமை’ மதியரசு ஏற்றுக்கொண்டார். இதற்காகவே வேலையிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்க அவர் முடிவு செய்திருந்தார். லிபி வட்டத்தினர் எல்லோருடைய வீட்டிலும் முறைவைத்து சிவபாலனை விருந்துக்கு அழைப்பது என்பது அவர்களது பெரு விருப்பம். இந்தத் திட்டங்கள் எல்லாவற்றையும் பிசகில்லாமல் வகுத்த பின்பும் அவர்களிடம் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது. எழுத்தாளர் சிவபாலன் எப்படியான மனிதராக இருப்பார்? தொலைபேசியில் பேசும்போது கொஞ்சம் அப்பாவித்தனமாகவும் அதேவேளையில் தன்னடக்கத்துடனும் பேசுகிறார். “எனக்கும் இலக்கியத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைப் பாருங்கோ… நான் படிச்சது கணிதம், படிப்பிக்கிறதும் கணிதம். பின்ன, கொரோனா காலத்தில வீட்டுக்கேயே அடைஞ்சு கிடைக்கேக்க என்ர மனிசி வாசிக்கிற கதைப் புத்தகங்களில சிலதை எடுத்து வாசிச்சுப் பார்த்திருக்கிறன். உண்மையா நடந்த ஒரு சம்பவத்தை வைச்சுக் கதை எழுதியிருக்கிறன். எனக்கு நீங்கள் தந்த பரிசு இலக்கியத்துக்காக கிடைச்சது இல்ல… உண்மைக்கு கிடைச்சதுதான்” என்றார். தொலைபேசியில் பேசியதைப் போலவேதான் நேரிலும் சிவபாலன் இருந்தார். மிக மென்மையான குரலிலும் தொனியிலும் பேசினார். அடிக்கடி அலைபேசியை உருட்டி அதில் ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் மிக நீளமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். இருபது வருட ஆசிரியப் பணியால் இந்தப் பண்பு அவரிடம் வந்திருக்கலாம். சிவபாலன் பிரான்ஸுக்கு வந்த அன்றிரவு, லிபி வட்டத்தின் பொருளாளர் காண்டீபன் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேசையில் மதுவும் இருந்தது. தனக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்று சிவபாலன் புன்னகையுடன் சொன்னார். அன்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவபாலனுக்குத் தூக்கம் கண்களை அழுத்தினாலும் புன்னகையுடன் சமாளித்துக்கொண்டிருந்தார். பேச்சு சிவபாலனின் ‘மாறிலி’ சிறுகதையில் வந்து நின்றது. கருணானந்தனே முதலில் ஆரம்பித்தார். “உண்மையில மாஸ்டர்… அற்புதமான ஒரு கதை எழுதியிருக்கிறியள். படிச்சால் கண்ணீரும் வருகுது ஆனால், அதை மீறிக்கொண்டு கோவமும் வருகுது. உதுதான் கதையின்ர வெற்றி. டொமினிக் ஜீவாட கதையளிலும் இந்தப் பண்பு இருக்கு. ஒரு தலித்துக்குக் கிடைக்கிற கொடுமையான வாழ்க்கை அனுபவம் எங்கிட லிபி வட்டத்தில இயங்கிற ஒருத்தருக்கும் இல்லை எண்டதுதான் உண்மை. ஆனால், உங்கிட கதை அந்த அனுபவத்தை எங்களில தொற்ற வைச்சிற்றுது. ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது. அதுதான் எழுத்தின்ர வீரியம்! கலையின்ர தரிசனம்! பெரிய விஷயம் மாஸ்டர்!” மூர்த்திக்கு உரத்த குரல். “மாஸ்டர் உங்கிட கதையில ‘காடல்முனை’ எண்டொரு ஊர் வருது. நான் கேள்விப்பட்டதேயில்ல…” “கேள்விப்பட்டிருக்க மாட்டியள். அதொரு சின்னக் கிராமம். வடமராட்சியில இருக்கு. அதுதான் என்ர ஊர்” என்றார் சிவபாலன். சிவபாலனை நாளுக்கு ஒவ்வொரு இடமாக ஈஃபிள் கோபுரம், அருங்காட்சியகங்கள், வெர்சாய் அரண்மனை என்றெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்ட வேண்டும் என்று மதியரசு திட்டமிட்டிருந்தார். அதன்படியே ஈஃபிள் கோபுரத்திற்குப் போய்விட்டு வரும் வழியில், தமிழர்களின் கடைத்தெருவான லாசப்பலுக்கு சிவபாலனை தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். சிவபாலன் ஈஃபிள் கோபுரத்தைப் பார்த்தபோது “இதைப் பார்த்துப்போட்டு மகாத்மா காந்தி ‘இரும்புக் குப்பை’ எண்டு சொன்னவராம்… சரியாத்தான் சொல்லியிருக்கிறார்” என்றார். அந்தக் கோபுரத்தையே பார்த்து ஆச்சரியப்படாத சிவபாலன் தமிழர்களின் கடைத்தெருவைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார். பாரிஸில் இப்படி ஓர் இடம் இருக்குமென அவர் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. தமிழர்களின் கடைத்தெரு என்பதை விடக் கடைத் தெருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழெட்டுத் தெருக்களில் கடைகள் பரவியிருந்தன. நடுவிலே சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்டு இரண்டு சிங்களக் கடைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் அந்த வீதிகளிலே தேநீர் அருந்தியவாறும், வெற்றிலை சப்பியவாறும், வீதியில் நின்று அரட்டையடித்தவாறும் இருந்தார்கள். சிவபாலனின் கணித மூளை கடகடவெனக் கணக்குப் போட்டு லாசப்பல் டவுன், பருத்தித்துறை டவுனைவிடப் பெரிது எனக் கண்டுபிடித்தது. அடுத்தநாளிலிருந்து மதியரசு எங்கேயாவது அருங்காட்சியம் அல்லது அரண்மனைக்குப் போகலாமென்றால், சிவபாலன் “நாங்கள் லாசப்பலுக்குப் போவம்” என்றார். “மாஸ்டர் அங்க என்ன கிடக்கெண்டு அதைப் பார்க்கோணும் எண்டுறியள்?” என்று மதியரசு சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டார். “தமிழ் சனங்களைப் பார்க்க ஆசையாக்கிடக்கு.” “ஹோம் சிக்! மாஸ்டருக்கு ஊருக்குப் போற எண்ணம் வந்திற்றுது போல… இன்னும் நாலு நாள்தானே… கூட்டத்தை முடிச்சுக்கொண்டு போயிடலாம் மாஸ்டர். கவலைப்படாதேயுங்கோ” என்றார் மதியரசு. 4 பரிசளிப்புக் கூட்டத்தில் சிவபாலன் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்: “முதலில் லிபி இலக்கிய வட்டத்து நண்பர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எடுத்த முயற்சியால்தான் நான் இப்போது உங்கள் முன்னே நின்று இந்தக் கவுரவத்தைப் பெறுகிறேன்…” சிவபாலன் பேசி முடித்தபோது, மதியரசுவுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. யாரும் பார்க்காதவாறு இரகசியமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ‘சிவபாலனிடம் பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டபோது, சபை சர்வ அமைதியாக இருந்தது. வழமையாகவே இப்படித்தான் நடக்கும் என்பது லிபி வட்டத்தாருக்கும் தெரியும். அந்த அமைதியை உடைத்தெறியும் தந்திரமும் அவர்களுக்கு அத்துப்படி. அவர்களில் ஒருவரே முதல் கேள்வியைக் கேட்டுவிட்டால், பின்பு சபையோர் நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளைக் கேட்பார்கள். கேட்காவிட்டால் தமது மாண்பு குறைந்துவிடும் என்பது போல் கேள்விகளுடன் முண்டியடிப்பார்கள். எனவே, முதல் கேள்வியை கருணானந்தனே கேட்டார்: “நாற்பது வயதுக்குமேலே இலக்கியம் எழுத வந்து வெற்றிபெற்ற ஒரேயொரு எழுத்தாளர் என கி.ராஜநாராயணனைச் சொல்வார்கள். நீங்கள் நாற்பத்தைந்து வயதிலே உங்களது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறீர்கள். இது தொடருமா?” சிவபாலன் தனது வழக்கப்படி நீளமாகவே பதிலளித்தார். “நான் எழுதியது எனது சொந்தக் கதை. விரக்தியின் உச்சத்தில் இருந்து நான் எழுதிய கதை. இருபது வருடங்களுக்கு மேலாக நான் ஆசிரியராக இருக்கிறேன். என்னுடைய கல்வித் தகமைக்கும் பணிமூப்புக்கும் உரிய பதவி எனக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது. இப்போது நான் தலைமையாசிரியராக ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் தலைமையாசிரியராக வரக்கூடாது என்பதற்காக ஆதிக்கசாதியினர் பல தந்திரமான நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள். இது யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மாவட்டக் கல்வித்துறையில் அதிகாரம் உயர்ந்த சாதி எனச் சொல்லப்படுபவர்களிடமே குவிந்திருக்கிறது. இதற்கு எதிராக நான் பல வழிகளில் போராடிப் பார்த்துவிட்டேன். எல்லாத் திசைகளிலும் நிராகரிப்பே எனக்குக் கிடைத்தது. என்னுடைய கதையில் வரும் ஆசிரியர் கோபமுற்றுத் தனது வேலையையே ராஜினாமா செய்துவிடுகிறார். நான் விரக்தியோடு ஒரு கதை எழுதினேன். அவ்வளவுதான்.” “அய்யா… யாழ்ப்பாணத்தில் இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என்கிறார்களே. கதைக்காக நீங்கள் மிகைப்படுத்திச் சொல்கிறீர்களா?” என்றொரு கேள்வி சபையிலிருந்து வந்தது. “இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என உங்களிடம் யார் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சொன்னவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராக நிச்சயமாக இருக்கமாட்டார். வட்டுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புத் தாக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டவர்கள் தேரில் வடம் பிடிப்பதைத் தவிர்ப்பதற்காக இராணுவத்திரை, இயந்திரத்தை வைத்துத் தேர் இழுத்த சம்பவங்கள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புக்கு நடுவே ஆதிக்க சாதியினரின் சுடுகாடு, சாமிக்குப் பூ வைத்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞன் தாக்கப்பட்டது போன்ற மிகச் சில சம்பவங்கள் மட்டும்தான் வெளியே வந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். உயர்சாதி எனச் சொல்லப்படுபவர்கள் எங்களைச் சக மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதே உண்மை.” கேள்விகளுக்குச் சிவபாலனின் பதில்கள் எப்போதும் போலவே மிக விரிவாகவும் தெளிவாகவுமிருந்தன. ஒவ்வொரு பதிலுக்கும் லிபி வட்டத்தினர் கைதட்டினார்கள். விழா முடிவில் ஒட்டுமொத்தச் சபையுமே எழுந்து நின்று கைதட்டி, சிவபாலனுக்கு மரியாதை செலுத்தியது. 5 வியாழக்கிழமை சிவபாலனின் விசா முடிகிறது. அன்றுதான் அவர் இலங்கைக்குத் திரும்ப வேண்டும். திங்கட்கிழமை காலையில், சிற்பக்கலையில் சிறந்த ‘நோத்துறு டாம்’ தேவாலயத்தைப் பார்வையிட சிவபாலனை, மதியரசு அழைத்துச் சென்றிருந்தார். “கெதியாக் கோயிலைப் பார்த்து முடிச்சிட்டு லாசப்பலுக்குப் போய் தமிழ் ஆக்களைப் பார்ப்பம்” என்றார் சிவபாலன். அவர்கள் காரில் லாசப்பலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சிவபாலன் அலைபேசியில் ஏதோ ஆராய்ந்தவாறே வந்தார். பின்பு அவர் மதியரசுவிடம் “நான் இப்பிடியே பிரான்ஸிலேயே நிக்கலாம் எண்டு பார்க்கிறன்…நீங்கள் ஃப்ளைட் டிக்கெட்ட கான்ஸல் பண்ணுங்கோ” என்றார். லாசப்பலில், அம்மாளாச்சி உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “மாஸ்டர் ஒரு நிமிசம் இருங்கோ… இந்தா வாறன்” எனச் சொல்லிவிட்டு மதியரசு உணவகத்திற்கு வெளியே வந்து, மூர்த்தியை அலைபேசியில் அழைத்து “மாஸ்டர் இங்கேயே நிற்கப் போறாராம்” என்றார். “நிற்கப் போறாரோ? இதென்னடாப்பா கரைச்சல்” என்று பதறினார் மூர்த்தி. மூர்த்தியின் மூலமாக லிபி வட்டத்தினருக்கு உடனடியாகச் செய்தி பரவியதும், அவர்கள் எல்லோருமே கலவரமானார்கள். சிவபாலன் பிரான்ஸ் விசா வாங்குவதற்காக ‘ஸ்பொன்சர்’ கடிதம் கொடுத்த தங்களுக்கு எதுவும் சட்டச் சிக்கல் ஏற்படுமா எனக் கலந்தாலோசித்தார்கள். சட்டச் சிக்கல் வராது என்பது தெளிவானதும் கொஞ்சம் நிம்மதியானார்கள். எனினும், பரிசளிப்பு விழாவுக்கு என அழைத்துவிட்டு, விசா முடிந்த பின்பும் அவரை இங்கேயே தங்கவைப்பது நியாயமற்றது என்ற முடிவுக்கே அவர்கள் வந்தார்கள். அன்றிரவு மகிந்தன் வீட்டில் சிவபாலனுக்கு விருந்து ஏற்பாடாகியிருந்தது. இதைப் பற்றி அங்கே பேசலாம் என்று லிபி வட்டத்தினர் முடிவெடுத்தார்கள். வழமைபோல அன்று விருந்து உற்சாகமாக இல்லைத்தான். ஆனால், சிவபாலன் வழமையைவிட உற்சாகமாக இருந்தார். மூத்தவர் கருணானந்தனே பேச்சைத் தொடக்கினார். “மாஸ்டர்… இஞ்சயே நிற்கப்போறதாச் சொன்னீங்களாம்… மெய்யே?” “ஓம். அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்!” “உங்களுக்கு விசா முடியுதெல்லே மாஸ்டர்… பிறகு எப்பிடி?” “நான் இஞ்ச அரசியல் தஞ்சம் கேட்கலாம் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.” சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அலெக்ஸ் அந்த அமைதியை உடைத்தார். அவருடைய வீட்டில்தான் சிவபாலன் இப்போது தங்கியிருக்கிறார். “இலங்கையில சண்டை முடிஞ்சு பதினாறு வருசமாகுது மாஸ்டர். நீங்கள் நினைக்கிற மாதிரி லேசா அகதி விசா எடுக்க ஏலாது. கிடைக்காது எண்டதுதான் உண்மை.” “நான் சண்டையைக் காரணம் காட்டி விசா கேட்கப் போறதில்ல. சமூகப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை. அதைக் காரணம் காட்டியும் விசா கேட்கலாம் எண்டு ஜெனிவா அகதிச் சட்டத்தில இருக்குத்தானே…” “அப்பிடி இல்லையே மாஸ்டர்…” “இருக்குதுங்கோ… உங்களுக்குத் தெரியாதே? நான் ‘நெட்’டில எல்லாம் தேடி வாசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தனான்.” “ஆனால், நீங்கள் இலக்கிய விழாவுக்கு எண்டு விசா எடுத்து வந்தனிங்கள். பிறகு என்னெண்டு அகதி விசா கேட்கலாம்?” “முந்தியும் இலங்கையிலயிருந்து வேற வேற இலக்கிய விழாக்களுக்கு விசா எடுத்து வந்த சில ஆக்கள் அகதி விசா போட்டிட்டு இங்கேயே இருக்கினம்தானே?” “அதுவும் ‘நெட்’டில வந்திற்றுதோ?” என்று கொஞ்சம் சலிப்புடன்தான் கேட்டார் மூர்த்தி. “அது பிழைதானே மாஸ்டர்… சட்டவிரோதம்” என்றார் கருணானந்தன். “அகதியா வாற ஆக்கள் எல்லாருமே சட்டவிரோதமா இப்பிடி ஏதாவதொரு வழியிலதானே இங்க வாறது. நீங்களும் அப்பிடித்தானே வந்திருப்பீங்கள்?” “உண்மைதான் மாஸ்டர்… ஆனால், அகதியா வாற அளவுக்கா இலங்கையில சாதிப் பிரச்சினை இருக்குது?” என்று வெடுக்கெனக் கேட்டார் மகிந்தன். “இருக்குது எண்டுதானே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில சொன்னனான்!” “மாஸ்டர்… நீங்கள் அங்க படிப்பிக்கிறீங்கள். அந்த நல்ல வேலையை விட்டிட்டு இஞ்ச நிண்டு எங்களோட சேர்ந்து கூட்டித் துடைச்சு வேலை செய்யப் போறீங்களே?” “மரியாதையோட கூட்டித் துடைக்கலாம் எண்டு நினைக்கிறன். இந்த ரெண்டு கிழமையா ஊரைச் சுத்திப் பார்த்திட்டன். எல்லாருக்கும் எல்லாரும் மரியாதை. உங்கிட எல்லாற்ற வீட்டையும் வந்து நான் சாப்பிடுறன், தங்குறன். என்ன சாதியெண்டு நீங்களும் பார்க்கயில்ல. நானும் பார்க்கயில்ல. லாசப்பலைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக் கிடக்கு! என்னென்னவோ சாதி ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்து ஒரு வலுவான சமூகமாக உருவாகியிருக்கிறியள். அதுதான், லாசப்பல் போக வேணும் எண்டு நெடுகவும் மதியரசிட்டக் கேக்கிறனான். எனக்கு அகதி விசா கிடைச்சா என்ர குடும்பத்தையும் இஞ்ச கூப்பிடலாம். நான் படுற அவமானத்தை என்ர பிள்ளையளும் அங்க கிடந்து படவேண்டாம். சாதி பார்க்காம வாய்ப்புத் தாற நாடு இது!” “மாஸ்டர்… இந்த நாட்டில நான் முப்பது வருசம் அகதியாக இருந்த அனுபவத்தில சொல்லுறன்…” என்று மூர்த்தி என்னவோ சொல்ல ஆரம்பிக்க “நான் மூவாயிரம் வருசமா அகதி” என்றவாறே மூர்த்தியின் கண்களைப் பார்த்தார் சிவபாலன். கருணானந்தன் முடிவாகச் சொன்னார்: “மாஸ்டர்! நீங்கள் குறை நினைக்க வேணாம். நாங்கள் ஸ்பொன்சர் கடிதம் தந்துதான் நீங்கள் இஞ்ச வந்திருக்கிறியள். தயவு செய்து நீங்கள் திரும்பிப் போகத்தான் வேணும். பின்னடிக்குப் பிரச்சினை வேணாம்!” சிவபாலன் அமைதியாக இருந்தார். லிபி வட்டத்தினர் தாங்கள் ஒழுங்கமைத்த திட்டப்படியே செயலாற்றினார்கள். செவ்வாய்கிழமையன்று ‘கொன்கோர்ட்’ சதுக்கத்தைப் பார்க்க சிவபாலனை மதியரசு அழைத்துச் சென்றார். எக்காரணம் கொண்டும் லாசப்பலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என மதியரசுவுக்கு லிபி வட்டத்தினர் அறிவுறுத்தியிருந்தனர். புதன்கிழமையன்று காலையில் ‘வைட் சேர்ச்’ பார்க்க சிவபாலனை அழைத்துச் சென்ற மதியரசு மாலை நான்கு மணியளவில், பந்தியோன் மணிமண்டபத்தைப் பார்க்கச் சிவபாலனை அழைத்துச் சென்றார். அதுதான் சிவபாலன் பாரிஸில் பார்க்கப் போகும் கடைசி இடம். நாளை அதிகாலையில் இலங்கைக்குப் புறப்படும் விமானத்தில் அவரை வழியனுப்பிவைக்க லிபி வட்டத்தினர் எல்லோருமே விமான நிலையத்திற்குச் செல்வதாகத் திட்டம். பந்தியோன் மணிமண்டபத்துள் நுழைவதற்குப் பார்வையாளர்கள் பெருங் கூட்டமாகக் காத்திருந்தார்கள். நீண்ட வரிசையில் நின்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு மதியரசுவும் சிவபாலனும் உள்ளே நுழைந்தார்கள். இன்னும் ஒரு மணிநேரத்தில் மணிமண்டபத்தை மூடிவிடுவார்கள். சன நெரிசலோடு நெரிசலாக அவர்கள் சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தில் சமாதிகளைப் பார்த்துக்கொண்டு மெதுமெதுவாக நகரும்போதே, ‘மணிமண்டபத்தை மூடும் நேரமாகிவிட்டது, பார்வையாளர்கள் வெளியேறவும்’ என்ற அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்டது. பார்வையாளர்கள் குறுகிய படிகளில் மேலேறிச் சென்று கும்பலாக வெளிவாசலை நோக்கி நகர்ந்தார்கள். சிவபாலன் மதியரசுவைப் பார்த்தார். மதியரசு வெளிவாசலில் பார்வையை வைத்தவாறே முன்னே நகர்ந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்த சிவபாலன் அப்படியே திரும்பி, சனக் கும்பலுக்குள் நுழைந்து பாதாள மண்டபத்தை நோக்கி நடந்தார். பாதாள மண்டபத்திற்குள் எங்கெல்லாம் கமெராக்கள் இருக்கின்றன என அவர் முன்பே கணக்குப் போட்டு வைத்திருந்தார். அந்தக் கமெராக்களின் பார்வையில் சிக்காமல் நடந்து சென்று ரூஸோவின் சமாதிக்குப் பின்னால் இருளில் மறைந்துகொண்டார். 6 பந்தியோன் மணிமண்டபத்தின் அலுலக அறைக்குள் சிவபாலனை விசாரணை செய்து முடித்த காவல்துறை அதிகாரி பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறே சிவபாலனின் கைகளிலிருந்த விலங்கை அகற்றிவிட்டு, ஆங்கில மொழியில் சொன்னார்: “திரு. கதிரன் சிவபாலன்! விமானத்தில், ரயிலில், கப்பலில், காய்கறி மூட்டைக்குள் மறைந்திருந்துவிட்டு அகதித் தஞ்சம் கோரியவர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். சமாதிக்குப் பின்னால் மறைந்திருந்து தஞ்சம் கோரும் ஒருவரை நான் இப்போதுதான் சந்திக்கிறேன். நல்வரவாகுக! இந்தத் துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் இங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் இருக்கிறது. நீங்கள் அங்கே சென்றால், முறையாக அகதித் தஞ்சம் கோருவதற்கு அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.” சிவபாலன் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் மணிமண்டபத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தார். அந்த வாசலின் கதவுகள் கண்ணாடிகளாலானவை. கண்ணாடியைத் துடைத்து அபினா சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணாடியில் மங்கலாக சிவபாலனின் உருவம் தோன்றியபோது, அந்த உருவத்தைப் பார்த்து “பொன்ஜூர் ரூஸோ” என்றார் அபினா. (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு சிறப்பு மலரில் வெளியாகியது. டிசம்பர் -2025) https://www.shobasakthi.com/shobasakthi/2026/01/24/பொன்ஜூர்-ரூஸோ/?fbclid=IwdGRleAPhQjZleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEelNjOvGfSYhzJwAYJxWdJm9TyKgcRk8KiKMQxqneSDw-oVgxu_mlHIvnSlhg_aem_TPU71sFRoGyA0LOMc86Lyg
  12. அரசியல் சம்பந்தமான காரணங்களை வைத்துத்தான் புகலிடக் கோரிக்கை வைக்கமுடியும் என்ற இலக்கியவாதிகளின் எண்ணத்தை வாத்தியார் கணக்கு மாற்றிப் போட்டிருக்கிறது. புலம்பெயர் இலக்கிய வாதிகளோடு ஷோபா சக்திக்கு என்ன பிரச்சினையோ? கதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. வடமராட்சியில் பனைமுனை என்ற ஊரை எனக்குத் தெரியும். காடல்முனை அறியப்படாத ஊராக இருக்கிறது. எது எப்படியோ காடல்முனை ஆட்களை நம்பவே கூடாது.
  13. ஆட்களை பொறுக்கியா இல்லையா என்பதை கண்டு பிடிக்கும் உங்கள் அளவீடு பிரமிக்க வைக்கின்றது.
  14. விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/
  15. தமிழ் செபஸ்ரியானையும் அவரது கொள்கைகளையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ஒரு சில தமிழர்கள் மேற்கு நாடுகளில் ஒரு செபஸ்ரியான் வந்து அதே செபஸ்ரியான் கொள்கைகளை பேசினால் அந்த செபஸ்ரியானைத் திட்டித் தீர்ப்பார்கள். அது ஏனோ?
  16. நானா, கேட்ட கேள்விக்கு இது பதிலில்லையே! கேள்வி திரிக்கு சம்பந்தமில்லாததை ஏன் எழுதுகிறீர்கள் என்பது!! தாங்கள் என்ன அரசியலில் PHD பட்டம் எடுத்தவரோ? எடுப்பதெல்லாம் புலியெதிர்ப்பு வாந்தி இதில தம்பட்டம் வேற!!🤣
  17. அது சரி இவர் சுவிசில் மாநில முதல்வர் ஆகும் தகுதி உண்டா? பல தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்ந்து அம்மண்ணின் மைந்தர்களாக தமிழை தவிர வேறு மொழி தெரியாதவர்களையே வந்தேறி, வாழலாம், ஆளக்கூடாது, என்று அடுத்த நாட்டின் அரசியலுக்குள் புகுந்து அதுவே சரி என நாட்டாண்மை காட்டும் கும்பல்கள் எல்லாம் இந்த முதலாம் தலைமுறை வந்தேறித் தமிழர் மாநில முதல்வர் ஆகியதைப் பாராட்டுகிறார்களே! அந்த கொள்கையை தள்ளி வைத்து விட்டார்களா? இந்த அநியாயத்தை கேட்க சுவிசில் ஒரு செபஸ்டியான் இல்லையா? 😂
  18. சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
  19. நீங்கள் இதனை வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும், ஒருவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு, முண்டு கொடுப்பவர்களுக்கு, காவடி தூக்குபவர்களுக்கு என்று சிங்களவர்கள் ஒரு சொற்றொடரை வைத்திருக்கிறார்கள். "புக்க தெனவா" என்பதே அது. இதனை நான் தமிழாக்கம் செய்ய விரும்பவில்லை.
  20. புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும். 1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும். அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை. இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும். ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம். அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். https://sathirir.blogspot.com/2009/02/blog-post_4579.html?m=1
  21. மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.
  22. புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  23. மிககுறைந்த உறைநிலைக்கு தொடர்ந்தும் இருப்பதால் பொழிந்த பனியெல்லாம் கொங்கிறீற் போல இறுகிப் போயுள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை உறைநிலையாகவே காலநிலை காட்டுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.