Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்18Points39465Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்11Points33869Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points89120Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19869Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/21/26 in all areas
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையில் நடக்க இருந்தது. பாகிஸ்தான் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்திருந்தது. எனினும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! பாகிஸ்தான் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் சிம்பாவ்வே ஆட்டங்களில் மழை வரவேண்டினேன். கோஷானாக இருந்து கொண்டு இதுக்கெல்லாம் ஆசைபட்டிருக்க கூடாதுதான்😂3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK USA NED NAM போட்டியாளர் செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் IND PAK நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா IND PAK நிலாமதி IND PAK நந்தன் IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் PAK IND நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா PAK IND நிலாமதி IND PAK நந்தன் IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NAM ஏராளன் USA வசீ USA புலவர் NAM சுவைப்பிரியன் NAM அல்வாயன் USA ஈழப்பிரியன் NED நியூ பலன்ஸ் USA வாத்தியார் NAM கறுப்பி USA வாதவூரான் USA வீரப் பையன்26 NAM சுவி NAM கிருபன் NED கோஷான் சே NED அஹஸ்தியன் USA கந்தப்பு NAM நியாயம் NAM எப்போதும் தமிழன் USA ரசோதரன் NAM பிரபா NAM நிலாமதி NAM நந்தன் OMA 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣................. மாதம் மும்மாரி மழை பொழிந்து உலகம் செழிக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன், பையன் சார்......................🤣. நேற்று நிலாமதி அக்காவும், நானும் நின்ற இடத்தில் இன்று பையன் சார் நிற்கின்றார்.............. சிட்டிவேஷன் சாங்: நேற்று வந்ததும் அதே மழை இன்று வருவதும் அதே மழை.................2 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒவ்வொரு கட்டமாக பணி நிறைவடைய நிறைவடைய தானே பணம் வழங்கலாம் அண்ணா. பிரதேச செயலகம் பொறுப்பு எடுத்து செய்யும் எனில் வழங்கலாம் என எண்ணுகிறேன். வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கும் அவ்வாறு தானே செய்தோம். ஒப்பந்தகாறர்கள் பேராசையில் இருக்கிறார்கள். சீலனும் காசை கழித்த கோபமோ என்னமோ பொன்னாலை மிகுதி வேலை இழுத்தடிக்கிறார்! (ஏரம்பு ஐயாவை 3 பைக்கற் சீமந்தும் இறுகாமல் இருக்க பிரட்டி வைக்கச் சொன்னேன்) உறவுகளே வேறு ஏதும் வழி இருந்தால் சொல்லுங்கோ.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 50) இலிருந்து 52) வரைக்கான புள்ளிகள்: 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ SA AFG CAN UAE போட்டியாளர் செம்பாட்டான் NZ SA ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் NZ SA அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் NZ SA நியூ பலன்ஸ் NZ SA வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் NZ SA கந்தப்பு NZ SA நியாயம் NZ SA எப்போதும் தமிழன் NZ SA ரசோதரன் SA AFG பிரபா NZ SA நிலாமதி SA AFG நந்தன் NZ SA 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் SA NZ ஏராளன் NZ SA வசீ NZ SA புலவர் NZ SA சுவைப்பிரியன் SA NZ அல்வாயன் NZ SA ஈழப்பிரியன் SA NZ நியூ பலன்ஸ் SA NZ வாத்தியார் NZ SA கறுப்பி NZ SA வாதவூரான் NZ AFG வீரப் பையன்26 NZ SA சுவி SA AFG கிருபன் NZ SA கோஷான் சே NZ SA அஹஸ்தியன் SA NZ கந்தப்பு SA NZ நியாயம் NZ SA எப்போதும் தமிழன் SA NZ ரசோதரன் SA AFG பிரபா SA NZ நிலாமதி SA AFG நந்தன் NZ SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் UAE ஏராளன் CAN வசீ CAN புலவர் UAE சுவைப்பிரியன் UAE அல்வாயன் CAN ஈழப்பிரியன் CAN நியூ பலன்ஸ் CAN வாத்தியார் UAE கறுப்பி CAN வாதவூரான் CAN வீரப் பையன்26 UAE சுவி CAN கிருபன் UAE கோஷான் சே UAE அஹஸ்தியன் CAN கந்தப்பு CAN நியாயம் CAN எப்போதும் தமிழன் UAE ரசோதரன் CAN பிரபா UAE நிலாமதி CAN நந்தன் CAN முதல் சுற்றுப் போட்டிகளுக்கான 52 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் @கந்தப்பு மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நாற்காலியில் உறுதியாகத் தக்கவைத்துள்ளார். சுமைதாங்கி மீண்டும் @goshan_che இடம் வந்துள்ளது. ஆனால் அது அடிக்கடி கைமாறலாம்!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்: 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI SCOT NEP ITA போட்டியாளர் செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 ENG WI சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG WI அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் ENG WI பிரபா ENG WI நிலாமதி ENG WI நந்தன் ENG WI 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் ENG WI ஏராளன் ENG WI வசீ ENG WI புலவர் ENG WI சுவைப்பிரியன் ENG SCOT அல்வாயன் ENG WI ஈழப்பிரியன் ENG WI நியூ பலன்ஸ் ENG WI வாத்தியார் ENG WI கறுப்பி ENG WI வாதவூரான் ENG WI வீரப் பையன்26 WI ENG சுவி ENG SCOT கிருபன் ENG WI கோஷான் சே ENG ITA அஹஸ்தியன் ENG WI கந்தப்பு ENG WI நியாயம் ENG WI எப்போதும் தமிழன் ENG WI ரசோதரன் WI ENG பிரபா ENG WI நிலாமதி WI ENG நந்தன் ENG SCOT 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ITA ஏராளன் ITA வசீ ITA புலவர் ITA சுவைப்பிரியன் ITA அல்வாயன் ITA ஈழப்பிரியன் NEP நியூ பலன்ஸ் ITA வாத்தியார் ITA கறுப்பி ITA வாதவூரான் SCOT வீரப் பையன்26 ITA சுவி NEP கிருபன் SCOT கோஷான் சே SCOT அஹஸ்தியன் ITA கந்தப்பு ITA நியாயம் ITA எப்போதும் தமிழன் ITA ரசோதரன் SCOT பிரபா ITA நிலாமதி SCOT நந்தன் ITA 49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @suvy ஐயாவுக்கும் @goshan_che க்கும் இடையில் ஆடு-புலி ஆட்டம் தொடர்கின்றது!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS SL IRE ZIM OMA போட்டியாளர் செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி AUS SL வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் AUS SL கோஷான் சே AUS SL அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் AUS SL பிரபா AUS SL நிலாமதி AUS SL நந்தன் AUS SL 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் AUS SL ஏராளன் AUS SL வசீ AUS SL புலவர் AUS SL சுவைப்பிரியன் AUS ZIM அல்வாயன் AUS SL ஈழப்பிரியன் AUS SL நியூ பலன்ஸ் AUS SL வாத்தியார் AUS SL கறுப்பி SL AUS வாதவூரான் AUS SL வீரப் பையன்26 AUS SL சுவி AUS SL கிருபன் SL AUS கோஷான் சே SL AUS அஹஸ்தியன் AUS SL கந்தப்பு AUS SL நியாயம் AUS SL எப்போதும் தமிழன் AUS SL ரசோதரன் SL AUS பிரபா AUS SL நிலாமதி SL AUS நந்தன் AUS IRE 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் OMA ஏராளன் OMA வசீ OMA புலவர் OMA சுவைப்பிரியன் OMA அல்வாயன் OMA ஈழப்பிரியன் OMA நியூ பலன்ஸ் OMA வாத்தியார் OMA கறுப்பி OMA வாதவூரான் OMA வீரப் பையன்26 OMA சுவி ZIM கிருபன் OMA கோஷான் சே ZIM அஹஸ்தியன் OMA கந்தப்பு OMA நியாயம் OMA எப்போதும் தமிழன் OMA ரசோதரன் OMA பிரபா OMA நிலாமதி OMA நந்தன் OMA 46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @goshan_che தனது பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய இறுதியான முதல்சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. வாசிம் அலி மாத்திரம் நிதானமாக 32 (33 பந்துகளில்) ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்து, இறுதியில் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 104 ஓட்டங்களுடனும் சுருண்டுகொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் மார்ஷும், ட்ராவிஸ் ஹெட்டும் பந்துகளை நாலாபக்கமும் விளாசித் தள்ளி 6 ஓவர்களிலேயே 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் வேகமாக அடித்தாடியபோதும் ட்ராவிஸ் ஹெட் 32 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும் மிச்சல் மார்ஷ் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 64 (33 பந்துகளில்) ஓட்டங்கள் எடுத்து 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். முதல் சுற்றின் 40 போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- றோசா முள்ளா? மலரா??
2 pointsஇவர் என்னத்துக்கு கத்தரி இல்லாமல் ரோசாவை பறிக்கப் போனவர் . ...... பக்கத்தில் மல்லிகை இல்லையா .......! எப்படியோ நலமாக வீடுதிரும்பி வரட்டும் . .........! தகவலுக்கு நன்றி பாஞ்ச் .......!2 points- றோசா முள்ளா? மலரா??
2 points- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்1 point- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
மேற்குலகின் இசை அல்பங்கள் போல அல்லாமல்... தென்னிந்தியாவின் இசை அல்ப்பம் ---- தான் இசை அமைத்த பாட்டுக்கு கூலியை வாங்கி கொண்டுள்ளார், எனவே படத்தின் பாடல், இசை உரிமை தயாரிப்பாளரிடமும் அவரிடம் உரிமையை வாங்கிய நிறுவனமிடமுமே உள்ளது என்பதே வாதம். இதை இந்திய சட்டப்படி கோர்ட் அணுகும். ஒவ்வொரு படத்திலும் இவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் இருந்த ஒப்பந்த அடிப்படையில் சில உரிமை இவருக்கு வரலாம், வராமலும் போகலாம். இதெல்லாம் காப்புரிமை அடிப்படையில் கோர்ட் முடுவு செய்யும். இதில் காப்பரேட் கீப்ப்ரடேட் என புலம்புவது மாய்மாலம். காப்பரேட் லைக்காவையும், சோனியையும் தேவை என்டால் தலையில் வைத்து ஆடும் வியாபாரமே சினிமா. இவர்கள் என்ன தன்னார்வ தொண்டா செய்கினம் ? பிஜேபி கைக்கூலியான ராஜாவுக்காக டெல்லியில் அளுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள். தென்னாபிரிக்கா வென்றால் மிகமிக சந்தோசம்.1 point- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
மேற்குலகில் இசை அல்பங்களை உருவாக்கும் படைப்பாளிகள் சுயமாக தாமே இசை நிறுலனங்களாக, தமது அல்பமாக அதை உருவாக்குகின்றனர். அதன் காரணமாக அவர்களால் உருவாக்கப்படும் அல்பங்களின் உரிமை அவர்களிடமே இருக்கும். ஆனால், இந்தியாவில் படங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படத்தில் இசையமைத்து அதற்கான கூலியை இசையமைப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் போது போது அந்த இசை அல்பங்களின் றோயல்ரி தானாகவே பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுவிடுவதே இதன் காரணம் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் இசைமைப்பாளர்கள் இசை தயாரிப்பு நிறுவனங்களைப் பதிவு செய்து அந்திறுவன உரிமையாக பாடல்களை உருவாக்கி, தாம் உருவாக்கும் பாடல்களை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் பாவிக்கும் உரிமையை மட்டும் விற்பனை செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது என்பது எனது அபிப்பிராயம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதில் இருக்கும் நேரம் தலைவரே................... முதலாவது விளையாட்டு 10:30 இரண்டாவது விளையாட்டு 14:30................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 22 பெப் இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் சிறிலங்கா (Y4) ENG எதிர் SL 15 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும், 7 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும், @வீரப் பையன்26 இப்போட்டியில் விளையாடாத மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்! @வீரப் பையன்26 க்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் ENG வசீ ENG புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் ENG ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் SL கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 WI சுவி ENG கிருபன் SL கோஷான் சே SL அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் ENG ரசோதரன் SL பிரபா ENG நிலாமதி SL நந்தன் ENG இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா (X1) எதிர் தென்னாபிரிக்கா (X4) IND எதிர் SA அனைவரும் இந்தியா வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் IND வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் IND அல்வாயன் IND ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது தென்னாபிரிக்கா அணி முட்டைகளைப் பரிமாறுமா? @வீரப் பையன்26 🖕1 point- கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன?
கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன? பட மூலாதாரம்,AIG Conservation Dept கட்டுரை தகவல் கேத்தரீன் லேதம் 16 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன. நீண்டகாலமாகச் செயலற்றுக் கிடக்கும் எரிமலை சிகரங்களின் மீது கடல் நீரோட்டங்கள் காற்றைப் போல கர்ஜிக்கின்றன. இந்தக் கடலடி மலைகள், கடலின் தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, 3,300 அடி உயரம் வரை செல்கின்றன. சில மலைகளில் பள்ளங்கள் உள்ளன அல்லது முகடுகள் வரிசையாக அமைந்துள்ளன. மற்றவற்றின் உச்சியில் பெரிய, தட்டையான பீடபூமிகள் உள்ளன. சில நேரங்களில் இந்தச் சிகரங்கள் கடலின் மேற்பரப்புக்கு மேலே எட்டிப் பார்த்து, தீவுகளை உருவாக்குகின்றன. கடல் மலைகள் என்பவை ஆழ்கடல் மற்றும் திறந்தவெளிப் பெருங்கடல் உயிரினங்கள் சந்திக்கும் நீருக்கு அடியிலுள்ள மலைத் தொடர்களாகும். சிறிய மிதவை உயிரினங்களை உண்ணும் மீன்கள் முதல் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் வரை அனைத்துமே இங்கு கூடுகின்றன. இது கடல் உணவுச் சங்கிலியில் ஒரு பரபரப்பான இடமாக உள்ளது. இப்படியான கடல் மலை ஒவ்வொன்றும் தனித்துவமானது, நிரம்பி வழியும் உயிர் சூழலைக் கொண்டது. அவை பவளப் பாறைகள், ஓடுள்ள கணுக்காலிகள், கடற்பஞ்சுகள், கடல் நட்சத்திர மீன், மீன்கள், ஆக்டோபஸ்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், சுறாக்கள் எனப் பலவற்றால் செழித்துக் காணப்படுகின்றன. தட்டையான கடல் தரையுடன் ஒப்பிடும்போது, கடல் மலைகள் அதிக எண்ணிக்கையிலும் பன்முகத்தன்மையுடனும் அதிக உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பலவும் உலகில் வேறு எங்குமே காணப்படாதவை. மேலும், இந்த இடங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும். வடக்கு அட்லான்டிக்கின் உறைந்த நீரில் இருந்து வெப்பமண்டல பசிபிக்கின் ஆழமான பகுதிகள் வரை, உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடலடி மலைகள் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன. "கடந்த சில தசாப்தங்களாக கடல் தரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எரிமலை சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காலநிலை இயக்கவியல் துறை இணை பேராசிரியர் அலி மஷாயெக். இன்று, கடல் குறித்த ஆய்வு வேகமடைந்து வருவதால், மேன்மேலும் கடலடி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அட்லான்டிக் பெருங்கடலின் கடல் மலைகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தின்போது, விஞ்ஞானிகள் கடலின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் வேட்டையாடிகளான சுறா மீன்களை அசாதாரணமான எண்ணிக்கையில் கண்டுபிடித்தனர். "அது எங்கோ தொலைவில் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பது போல் இருந்தது," என்கிறார் அசென்ஷன் தீவில் ஏழு ஆண்டுகள் முதன்மைப் பாதுகாப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றிய சாம் வெப்பர். அசென்ஷன் தீவு என்பது ஆப்பிரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே உள்ள தீவு. வெப்பமண்டல மத்திய அட்லான்டிக்கில் தனிமையிலுள்ள ஒரு நிலப்பரப்பு. ஆனால், அந்தத் தீவைச் சூழ்ந்துள்ள கடல் அலைகளுக்குக் கீழே பார்த்தால், ஒரு வித்தியாசமான கதை வெளிப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள ஓர் எரிமலையின் உச்சியே அசென்ஷன் தீவின் நிலப்பகுதி. பட மூலாதாரம்,AIG Conservation Dept படக்குறிப்பு,அசென்ஷன் தீவின் கடற்கரைக்கு அப்பால், ஆராய்ச்சியாளர்கள் ஒரு பட்டுச் சுறாவை டேக் செய்வதற்காக இழுக்கின்றனர் அது, "கடல் மட்டத்தைத் தாண்டி ஒரு தீவாக மாறியுள்ளது" என்று வெப்பர் கூறுகிறார். இது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நீண்டு கிடக்கும் கடல் மலைகளின் சங்கிலியில் உள்ள ஒன்று. "அது செயின்ட் ஹெலினா வழியாகச் சென்று, அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா வரை செல்கிறது." தற்போது பிரிட்டனில் உள்ள எக்ஸிடர் பல்கலைக் கழகத்தில் கடல் முதுகெலும்புயிரி சூழலியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வெப்பர், அசென்ஷன் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 300கி.மீ தொலைவிலுள்ள மூன்று கடலடி மலைகளை ஆய்வு செய்தார். ஹாரிஸ் ஸ்டீவர்ட் கடல் மலையின் உச்சி ஆழமாக உள்ளது. மறுபுறம், கிராட்டன், யங் ஆகிய 'தெற்கு கடல் மலைகள்' ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்தவையாக உள்ளன. அவற்றின் சிகரங்கள், கடல் மட்டத்தில் இருந்து 330 அடி ஆழம் வரை உயர்ந்துள்ளன. அதோடு, அவை வெறும் 80கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளன. அந்த இடம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது என்கிறார் வெப்பர். பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வின் ஜேம்ஸ் கிளார்க் ராஸ் என்ற ஆய்வுக் கப்பலுடன் இணைந்து, வெப்பர் தனது 16 நாட்களில் பெரும்பாலான நாட்களை ஒரு சிறிய நீளமான மீன்பிடிப் படகில் கழித்தார். அப்போது அவர், தனது ஆய்வுக்காக சுறாக்களைப் பிடித்து டேக் செய்துகொண்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 41 மடங்கு அதிகமான சுறாக்கள் "நாங்கள் மீனவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். அவர்கள் மீன்களை மிகத் திறமையாகப் பிடித்தார்கள். பின்னர், நாங்கள் அதை டேக் செய்யும் வேலையைச் செய்தோம். அனைவரும் ஒன்றாக வேலை செய்தோம், சமைத்துச் சாப்பிட்டோம், ஒன்றாகத் தூங்கினோம்." இந்தத் தெற்கு கடல் மலைகளில்தான் வெப்பர் மற்றும் அவரது சகாக்கள், திறந்த பெருங்கடலுடன் ஒப்பிடும்போது, 41 மடங்கு அதிகமான சுறாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். சுற்றியுள்ள கடல் நீருடன் ஒப்பிடுகையில், வெப்பரும் அவரது குழுவும் தெற்கு கடல் மலைகளில் சுறாக்கள் மற்றும் இதர பெரிய வேட்டையாடி மீன்களின் மொத்த பன்முகத்தன்மை ஐந்து மடங்கு அதிகமாகவும் உயிர்க்கூளம் 30 மடங்கு அதிகமாகவும் இருந்ததைக் கண்டறிந்தனர். பல அழியும் அபாயத்தில் உள்ள இனங்களின் எண்ணிக்கையும் மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற வணிக ரீதியாகப் பிடிக்கப்படும் இனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகளவில் இருந்தது. "ஆழ்கடல் மற்றும் வலசை செல்லும் சுறாக்கள் உள்பட, சுறாக்கள் உலகப் பெருங்கடல்கள் அனைத்திலும் கடல் மலைகளைச் சுற்றி இருக்கவே விரும்புகின்றன" என்று பிரிட்டனில் உள்ள பிளைமௌத் பல்கலைக் கழக உயிரியல் மற்றும் கடல் அறிவியல் பள்ளியின் கடல் ஆளுகை நிபுணரும் இணை விரிவுரையாளருமான லிடியா கோலர் தெரிவித்தார். இருப்பினும், கடலடி மலைகள் ஏன் இத்தனை சிறந்த கடல் வேட்டையாடிகளைத் தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது ஓரளவுக்கு மர்மமாகவே உள்ளது. பட மூலாதாரம்,AIG Conservation Dept/ Univ of Exeter/ Univ of W Australia படக்குறிப்பு,அசென்ஷன் தீவு கடல் மலைக்கு அருகில், நீருக்கடியில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டபோது, ஒரு ஷார்ட்ஃபின் மேக்கோ சுறா இரையை ஆராய்வது பதிவானது கடலடி மலைகளும் புவி காந்தப்புலமும் கடல்வாழ் உயிரினங்கள் தங்குமிடம், சுத்தம் செய்துகொள்வது, உணவு எனப் பல காரணங்களுக்காக கடலடி மலைகளுக்குச் செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. அதோடு, அவற்றை அவை வழிசெலுத்தலுக்கான அடையாளமாகவும் பயன்படுத்தக்கூடும். சிறிய இரும்பு அணுக்களைக் கொண்ட எரிமலைப் பாறை குளிர்ந்து திடமாகும்போது ஒரு கடலடி மலை உருவாகிறது. பூமியின் காந்தப்புலத்துடன் சீரமைக்கப்படும் இந்த இரும்பு அணுக்கள், காலத்தால் உறைந்து போகின்றன. மேலும், அந்தக் கடலடி மலையின் தனித்துவமான காந்தப்புலம் அதில் நிலைநிறுத்தப்படுகிறது. திமிங்கிலம், சுறா ஆகிய இரு இனங்களும் கடலடி மலைகளின் தனித்துவமான புவிகாந்த அடையாளங்களை பாதை கண்டறியப் பயன்படுத்தக்கூடும் என்று வெப்பர் கூறுகிறார். "கடலடி மலைகள் மிகவும் வலுவான காந்த அடையாளத்தைக் கொண்டுள்ளன. மீன்கள் பலவும் அதை உணரக்கூடியவையாக உள்ளன. நாங்கள் ஆய்வு செய்த கடலடி மலைகள், சுமார் 100 முதல் 200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ள ஒரு மிக நீண்ட கடலடி மலைத்தொடரின் முனையில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் வலசைப் பாதையில் அவற்றை இடைத்தங்கல் இடங்களாகப் பயன்படுத்துகின்றனவா என்பதைக் கண்டறிய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்." "உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள வேட்டையாடிகள் உள்பட, கடலடி மலைகளில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆற்றலின் ஒரு செறிவாகும்," என்று வெப்பர் விளக்குகிறார். அவரது கூற்றுப்படி, அந்த ஆற்றல் இரண்டு முக்கிய இடங்களில் இருந்து வரலாம். "முதலாவதாக, கடலடி மலையிலேயே அது உருவாக்கப்படலாம். அதாவது, கடலடி மலை ஆற்றலை உருவாக்குகிறது அல்லது செறிவூட்டுகிறது. இதுவே சோலை கருதுகோள். அதாவது கடலடி மலை என்பது உயிர்ச்சூழலை ஆதரித்து வளர்க்கும் ஒரு சோலையைப் போன்றது." "இரண்டாவதாக, கடலடி மலைகள், வேறு இடங்களில் உணவருந்திவிட்டு, அந்த ஆற்றலை கடலடி மலைக்குக் கொண்டு வரும் உயிரினங்களுக்கான கூடுமிடங்களாகச் செயல்படுகின்றன. இதுவே சேவை மையம் கருதுகோள்." பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,பூமியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடலடி மலைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன பெருங்கடலை கலக்கி விடும் கடலடி மலைகள் கடந்த 1998இல், பெருங்கடல் ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளரான வால்டர் மங்க், கடல் மலைகளை "பெருங்கடலை கலக்கி விடும் தண்டுகள்" என்று விவரித்தார். ஒரு கடல் மலை எவ்வாறு வளமான, ஊட்டமளிக்கும் சோலையாக மாறக்கூடும் என்பதை விளக்குவதற்கு இது உதவக்கூடும். கடல் மலையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் நீர் கொந்தளிப்பாகவும் சீரற்றதாகவும் இருக்கலாம். கடல் நீரோட்டங்கள் நீருக்கு அடியில் உள்ள செங்குத்தான சரிவுகளில் மோதும்போது, நீர் உச்சிக்குத் தள்ளப்படுகிறது. இதனால், குளிர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த நீரை சூரிய ஒளி படக்கூடிய மேற்பரப்பை நோக்கித் தள்ளுகிறது. "பெருங்கடலின் ஆழமான நீரோட்டங்கள் இந்தக் கடல் மலைகளுடன் இடைவினை புரிவதால் உருவாகும் கொந்தளிப்பு, ஆழ்கடல் நீரோட்ட இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு வகிப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்" என்கிறார் மஷாயெக். உண்மையில், மஷாயெக் மற்றும் அவரது குழுவின் கூற்றுப்படி, மலைகளைச் சுற்றி நடக்கும் இந்தக் கலக்குதல், உலகளாவிய பெருங்கடல் கலவையின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்குக்குப் பங்காற்றுகிறது. "கடல் மலையால் தூண்டப்படும் இந்தக் கலவையானது ஊட்டச்சத்துகள், ஆக்ஸிஜன், வெப்பம், கரிமம் போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பண்புகளின் ஆழ்கடல் சேமிப்பைக் கட்டுப்படுத்துகிறது" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் பெருங்கடல் ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியருமான லாரா சிமோலி. ஆழ்கடல் நீர் மேற்பரப்புக்குத் தள்ளப்படும்போது, ஊட்டச்சத்துகள் மேல்நோக்கி வருகிறது. இது ஃபைட்டோபிளாங்டன்களின் பெருக்கத்திற்கு வித்திடுகிறது. இவை பெருங்கடல் உணவுச் சங்கிலியில் முதன்மையாக இருப்பதால், கடல் மலை ஒரு வளமான சோலையாக மாறுகிறது. இது சுறாக்கள் போன்ற பெரிய வேட்டையாடிகளை ஈர்க்கிறது. "கடல் மலைகள், அதன் மீது தொடர்ந்து அடித்துச் செல்லப்படும் பிளாங்டன் உயிரிகளுக்கு ஒரு மாபெரும் பொறியாகச் செயல்பட முடியும்" என்கிறார் வெப்பர். அதோடு, "இந்த பிளாங்டன் மேலும் கீழுமாக நகரும்போது, கடல் மலையால் அதை உச்சியில் சிக்க வைக்க முடியும். அந்த அற்றல், பின்னர் உணவு வலையின் ஊடாக, அதற்கு மேலே உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பரவுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,பொதுவாக தனிமையில் வாழும் மார்பிள் மின்சாரத் திருக்கை மீன்கள், போர்ச்சுகல் கடற்கரைக்கு அப்பால் உள்ள கோரிங்கே கடலடி மலையில் கூடுகின்றன 'சேவை மையம் கருதுகோள்' சில உயிரினங்கள் கடல் மலையைத் தங்கள் வீடாகக் கொண்டு, "நிரந்தரமாக வசிப்பதாகவும்" வெப்பரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அதோடு, கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற சில இனங்கள், திறந்தவெளி பெருங்கடலில் இரை தேடிய பிறகு கடல் மலைகளில் கூடுவதையும் காட்டுகின்றன. "ஆற்றல் கடல் மலைக்கு வெளியே உருவாக்கப்பட்டு, இரை தேடும், இடம்பெயரும் வேட்டையாடிகள் அதைச் சேகரித்து கடல் மலைகளுக்குக் கொண்டு வருகின்றன." இங்குதான் "சேவை மையக் கோட்பாடு" வருகிறது. கடல் மலைகள் ஒன்று கூடுவதற்கும், சமூக நடத்தைகளில் ஈடுபடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்குமான ஓர் இடமாகச் செயல்படலாம். அல்லது திறந்தவெளிப் பெருங்கடலில் வேட்டையாடிய பிறகு திரும்புவதற்கான ஒரு தளமாகக்கூட இருக்கலாம். கடல் மலைகளில் சுறாக்கள் விரும்புவதாகத் தோன்றும் சில குறிப்பிட்ட இடங்கள் உள்ளதாகக் கூறுகிறார் வெப்பர். "அவை மிக அதிக எண்ணிக்கையில் அந்த ஓர் இடத்தில் ஒன்று கூடுகின்றன." இதுதான் வெப்பருக்கு மிகவும் பிடித்தமான கருதுகோள். இதை அவர் 'சேவை மையக் கருதுகோள்" என்று அழைக்கிறார். மேலும், இதை அவர் விரிவாக ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார்: "அவை கடல் மலைகளை ஆற்றல் சேமிப்புப் புகலிடமாகப் பயன்படுத்துகின்றனவா என்பதை நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,ஒவ்வொரு கடலடி மலையும் தனித்துவமானது மற்றும் உயிர்ச்சூழல் நிரம்பியுள்ளது பல சுறா இனங்கள் தங்கள் செவுள்களுக்கு தொடர்ந்து தண்ணீரைச் செலுத்திக்கொண்டே இருக்க இடைவிடாமல் நீந்த வேண்டியுள்ளது. "அவற்றால் நீந்துவதை நிறுத்த முடியாது. இதுவொரு ஆற்றல் செலவை ஏற்படுத்துகிறது." வானத்தில் ஒரு கழுகு வெப்பக் காற்றோட்டத்தில் வட்டமிடுவதைப் போல, கடல் மலைகளைச் சுற்றி நீர் மேலே எழும்போது, அதேபோன்ற ஒரு நிகழ்வு சுறாக்களிடையே நடக்கக்கூடும் என்று வெப்பர் கருதுகிறார். இந்த மேல்நோக்கிய நீரோட்டம், சுறாக்கள் உணவு உண்ணாத நேரங்களில் மிதந்து ஆற்றலைச் சேமிக்க அனுமதிக்கும். "பின்னர் அவை மீண்டும் வெளியே சென்று நீலக்கடலில் இரை தேடுகின்றன." வெப்பரின் குழுவால் டேக் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பட்டு சுறா, ஒவ்வோர் இரவும் இரை தேடுவதற்காகக் கடல் மலையை விட்டு வெளியேறி, 100 கி.மீ வரை பயணிக்கிறது. "அவற்றால் இந்தக் கடல் மலைகளுக்கு மிகத் திறமையாகப் பாதையைக் கண்டறிய முடிகிறது. அவற்றால் நீண்ட நேரம் நீந்த முடியும், மிக விரைவாக மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பவும் முடியும்," என்கிறார் வெப்பர். ஆய்வாளர்களுக்குத் தெரிந்த மற்றொரு விஷயம் என்னவெனில், டேக் செய்யப்பட்ட சில பட்டுச் சுறாக்கள், சுமார் ஓராண்டுக்கு அந்தக் கடலடி மலையில் இருந்து காணாமல் போயின. அவை அவற்றை ஒரு சேவை மையம் போலப் பயன்படுத்துகின்றன என்பதை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் வெப்பர். "ஒரு நீண்ட பயணத்தில், அவை அங்கு வந்து, ஒருவேளை உணவுண்டு, பின்னர் தங்கள் வலசைப் பயணத்தைத் தொடர்கின்றன. அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் கடலடி மலைகளில் ஏராளமான உணவு உள்ளது. எனவே, அவை செல்லும் வழியில் இங்கு தங்கிச் செல்கின்றன." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,கோரின்ஜ் கடல்மலையின் வாழ்விடங்கள் ஏறக்குறைய 5 கிலோமீட்டர் ஆழம் வரை பரவியுள்ளன. மேலும் அவற்றில் கடற்பாசி காடுகள், குளிர்ந்த நீர் பவளப்பாறைகள், ஆழ்கடல் கடற்பஞ்சுப் படுக்கைகள் ஆகியவை அடங்கும் ஒளிவட்ட விளைவு கடல் மலைகளுக்கு சோலை, சேவை மையம் ஆகிய இரண்டு கருதுகோள்களும் பொருந்தக்கூடும் எனத் தெரிகிறது. அங்கு நிரந்தரமாக வசிக்கும் உயிரினங்கள், வழக்கமாக வந்து செல்லும் உயிரினங்கள், அவ்வழியாகச் செல்லும் சில உயிரினங்கள் எனக் கலந்து காணப்படுகின்றன. இவற்றின் விளைவாக கடல் உயிரினங்களின் எண்ணிக்கை இந்தப் பகுதிகளில் மலைகளின் உச்சிகளுக்கு அப்பால் வெகுதூரம் வரை பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, ஒரு கடலடி மலையைச் சுற்றி கிட்டத்தட்ட ஓர் ஒளிவட்டத்தைப் போல, உயிரினங்களின் செறிவு அதிகமாகக் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது திறந்தவெளிப் பெருங்கடலில் 6கி.மீ வரை பரவியிருந்தது. இந்த ஒளிவட்ட விளைவு சுமார் 40 கி.மீ வரைகூட பரவக்கூடும் என்று பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. "உச்சியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றாலும், அதிக எண்ணிக்கையிலான வேட்டையாடிகளை காணலாம். அந்த இடத்தில் கடல் ஆயிரக்கணக்கான மீட்டர்கள் ஆழமாக இருக்கும்," என்கிறார் வெப்பர். பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு சூரை மீன்கள், பெரிய கண் சூரை மீன்கள் கடல் மலை உச்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பயணித்தன. ஆனால், அவை "ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒட்டியே" இருந்ததாகத் தெரிகிறது, என்கிறார் வெப்பர். ஒலி அலைகள் மூலம் டேக் செய்யப்பட்ட கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள் இரண்டு தெற்கு கடல் மலைகளுக்கு இடையே உள்ள 80கி.மீ தூரத்திலும் பயணிப்பது காணப்பட்டது. அவை அந்த இரண்டு உச்சிகளையுமே தங்கள் வீடாகக் கருதுவது போல அது இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்கிடையே, பட்டு சுறாக்கள் இரவில் கடல் மலை உச்சிகளில் இருந்து விலகிச் சென்று, விடியற்காலையில் மீண்டும் திரும்பின. இது வேட்டையாடிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் நிறைந்த ஒளிவட்டம், இரவு மற்றும் பகலுக்கு ஏற்ப விரிவடைந்து, சுருங்குவதைக் காட்டுகிறது. கடல் மலைகள் ஆழ்கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஈடு செய்ய முடியாத சோலைகளாகும். மேலும் சுறாக்கள், திருக்கை மீன்கள், ஸ்கேட் மீன்கள் போன்ற அழியும் அபாயத்தில் உள்ள மீன்கள் உள்படப் பலவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பதை நிரூபிக்கும் சான்றுகளும் அதிகரித்து வருகின்றன. "ஆழமற்ற கடல் முதல் ஆழ்கடல் வரை, கடலோரப் பகுதி முதல் ஆழ்கடல் வரை, முழு கடல் சூழலியல் அமைப்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும் சுறா இனங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன" என்கிறார் கோலர். ஆனால், அவையனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது ஆபத்தானது. பல தசாப்தங்களாக, பெரிய கண் சூரை மீன் போன்ற விரும்பத்தக்க மீன்களை எளிதில் காணக்கூடிய கடல் மலைகள், டிராலர் எனப்படும் ஆழ்கடல் இழுவை வலை மீன்பிடித்தலுக்கு உள்ளாகி வருகின்றன. "சுறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அதிகப்படியான மீன்பிடித்தல்தான்" என்கிறார் கோலர். "இதில் வணிகரீதியாக அவற்றை இலக்கு வைத்துப் பிடிப்பது மட்டுமின்றி தற்செயலாக இழுவை வலைகளில் சிக்குவதும் அடங்கும்" என்கிறார் அவர். "அவர்கள் வேண்டுமென்றே சுறாக்களைப் பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், செல்லும் இடங்கள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான சுறாக்களைப் பிடிக்கிறார்கள். மேலும், அவற்றை கரைக்குக் கொண்டு வந்து சந்தைப்படுத்துகிறார்கள்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடல்வாழ் உயிரினங்களுக்கு இருக்கும் ஐந்து பெரிய அச்சுறுத்தல்களில், இழுவை வலை மீன்பிடித்தலும் ஒன்று. மேலும், இதனால் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில் சுறாக்களும் அடங்கும். ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் தொழில்களால் எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பதில் தெளிவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, கடல் தரையில் வலைகளைப் போட்டு இழுத்துக்கொண்டே செல்வதன் மூலம் மீன்பிடிப்பது அழிவுகரமான மீன்பிடி முறை என்கிறார் கோலர். "கனமான ஒரு வலை, கடல் தரை முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறது. மென்மையான கடற்பஞ்சுகள், பவளப் பாறைகள் போன்ற எளிதில் உடையக்கூடிய அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவை அடியோடு அகற்றப்படுகின்றன. இறுதியில் மிஞ்சுவது ஒன்றுமில்லாத வெற்று நிலப்பரப்பு மட்டுமே." அனைத்தும் கடல் தரையில் இருந்து சுரண்டி எடுக்கப்படுகின்றன. அங்கு இருக்கும் எந்தவொரு உயிரினமும் அகற்றப்படுகிறது. "கடல் தரையில் இழுவை வலைகளை வைத்து மீன்பிடிப்பது, அடிமட்ட சுற்றுச்சூழல் அமைப்பையே தகர்த்துவிடுகிறது. இதனால் முழு உணவுச் சங்கிலியும் அழிக்கப்படுகிறது" என்கிறார் வெப்பர். மேலும், "கடல் மலைகளில் வாழும் உயிரினங்களில் பலவும் மிக மெதுவாக வளரக்கூடியவை. அவை மிக மெதுவான வாழ்க்கை சுழற்சியைக் கொண்டவை. இழுவை வலையால் நிகழும் திடீர் மீன் பிடித்தல் முறை அவற்றை முழுதாக அள்ளிச் செல்கின்றன. இதனால் அவை முற்றிலுமாகக் காணாமல் போய்விடுகின்றன" என்றும் வெப்பர் குறிப்பிட்டார். இழுவை வலை மீன் பிடித்தலின் தாக்கம் கடலடி மலைகளில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்கிறார் கோலர். "இந்தச் சூழல் அமைப்புகள் மீண்டும் உருவாகி மீண்டு வருவதற்கு மனித வாழ்நாளைவிட அதிக காலம் எடுக்கும். இதற்கிடையே, உணவு ஆதாரங்கள், இனப்பெருக்கப் பகுதிகள் போன்ற மிக முக்கியமான அவற்றின் சேவைகளை கடல் உயிரினங்கள் இழக்க நேரிடும்." இருப்பினும், சுறாக்கள் எங்கு கூடுகின்றன என்பதை அறிவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கிய ஞானமாக உள்ளது. அசென்ஷன் தீவுகளிலும், 2019இல் முழு பிரத்யேக பொருளாதார மண்டலம் வணிக மீன்பிடித்தலுக்காக மூடப்பட்டது. 2021இல் ஐ.நா சபையின் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீடு, "மீன்பிடிப்பு, கடலடி மலைச் சூழல் அமைப்புகளுக்குத் தற்போதுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியது. மேலும், அக்டோபர் 2025இல் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் "தீர்மானம் 032" ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடலடி மலைகளில் இழுவை வலை மீன்பிடித்தல் முறையில் உலகளாவிய மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d0j884vlyo1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிடைக்க இருந்த இரண்டு புள்ளியும் போச்சே ஹா ஹா இப்ப என்ர குரு சந்தோசப் படுவார் லொள்😄...........................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம்…புரிகிறது. எனது கரிசனை இரெண்டு: இது உங்கள் மேற்பார்வை வேலைச் சுமையை கூட்டும். நீங்கள் இழுத்து போட்டு செய்வீர்கள், ஆனால் உங்களில் அதிகம் சுமை ஏற்ற கூடாது. ஒரு கட்டத்தை செய்கிறோம் என் காசை வாங்கி கொஞ்சத்தை செய்து போட்டு, அதில் கொஞ்சத்தை தூத்தரித்து போட்டு அப்படியே விட்டால். நாம் எடுத்த காரியம் பாதியில் நிக்கும். கொடையாளிக்கும் ஒரு மனநிறைவு கிடைக்காது. ஆனால் பயனாளர் தெரிவில் நம்பிக்கையாக சொன்னபடி கட்டம் கட்டமாக செய்யகூடியவர்களை தேர்ந்து எடுத்து செய்யலாம். ஆனால் இது உங்கள் சுமையை மேலும் கூட்டும். ஒப்பந்தகாரரின் பேராசை மற்றும் இழுத்தடிப்பு: இது போன்ற சிக்கல்கள் நான் முன்பும் தனியாக சில நல்லதை செய்ய வெளிக்கிட்ட போது ஏற்பட்ட கெட்ட அனுபவங்கள்தான். அந்த செய்தி திரியில் நான் சொன்ன கருத்து, கேலி என்பதை விட, சுய அனுபவத்தால் வந்த பட்டறிவு என்பதே சரி. பிகு கட்டிட வேலை செய்வோர் எங்கும் இப்படித்தான் போலும். இலண்டனிலும் உயிரை வாங்கி விடுவார்கள்.1 point- துரியோதனப் பார்வை
1 pointதுரியோதனப் பார்வை மக்களில் பலவகை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் கருப்பு வெளுப்பில் 'உண்டு - இல்லை' என்ற அளவில் பிரிக்கும் போது பல வகைகளில் மனிதர்களையும் இரு எதிர் எதிர் வகைகளாகப் பிரிக்கும் நிலை தோன்றுகிறது. அப்படி உள்ளவற்றில் ஒரு எதிர்-எதிர் இருமையைப் பற்றியக கதை இது. *** துரோணருக்கு அருச்சுனன் மேல் தனிப்பட்டப் பாசம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறிது காலமாக தருமனின் மேலும் அதிகப் பாசம் காட்டுவது போல் இருக்கிறது. பாண்டு மகன்களில் மேல் அழுக்காறு கொண்ட துரியோதனனுக்கு இது மேலும் எரிச்சலைத் தந்தது. நேராகச் சென்று பிதாமகர் பீஷ்மரிடம் 'ஐயா. ஆசிரியர் எங்கள் எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. அவருக்கு பாண்டவர்கள் என்றால் ஒரு தனிப்பாசம் இருக்கிறது. அதுவும் தருமன் என்றால் தலையில் வைத்து ஆடுகிறார்' என்று முறையிட்டான். பீஷ்மருக்கு நடப்பது என்ன என்பது ஓரளவிற்குத் தெரியும். ஆனாலும் அதனைத் தானே துரியனுக்குச் சொல்வதை விட ஆசிரியர் சொன்னால் நன்று என்றெண்ணி அவனை ஆசிரியர் அழைத்துச் சென்றார். ஆசிரியரும் 'பரத குலத் தோன்றலே. இருவரும் எனக்கு ஒரே மாதிரி தான். ஆனால் அவர்கள் பார்வையில் தான் பிசகு இருக்கிறது. அதனால் என்னில் குறை காண்கிறார்கள்' என்றார். வீடுமரும் 'ஐயா. நீங்களே அதனை துரியனுக்குப் புரிய வைக்கவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். ஆசிரியரும் தருமனையும் துரியனையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒரு காரியத்தைச் சொல்லி அனுப்பிவைத்தார். தருமனிடம் 'உன்னை விட கீழானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். துரியனிடம் 'உன்னைவிட மேலானவரைக் கண்டு அழைத்து வா' என்றார். சிறிது நேரம் சென்று இருவரும் தனித் தனியே வந்தனர். என்ன என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது. தருமன்: ஐயா. நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன். எல்லோருமே என்னைவிட மேலானவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் என்னால் அழைத்து வர முடியவில்லை. துரோணர்: உன்னை ஒப்பு நோக்கும் போது சிறு குறைகளும் உள்ளவர் யாருமே இல்லையா? தருமன்: ஐயா. சிறு குறைகளுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் நிறைகளை ஒப்பு நோக்கும் போது அவர்களின் குறைகள் பொருட்படுத்த முடியாத வண்ணம் இருக்கிறது. துரோணர்: அப்படியென்றால் ஒருவர் கூடவா உன்னை விட கீழானவர் இல்லை? தருமன்: இல்லை ஐயா. துரோணர்: துரியா. நீ ஏன் யாரையும் அழைத்துவரவில்லை? துரியன்: ஐயா. என்னை விட மேலானவர் யாரையும் நான் காணமுடியவில்லை. அதனால் அழைத்து வரவில்லை. துரோணர்: உன்னைவிட நல்ல குணங்கள் உடையவர் எவருமே இல்லையா? துரியன்: இருக்கிறார்கள் ஐயா. ஆனால் யாருமே குறையில்லாதவர்களாக இல்லை. அவர்களின் குறைகளைப் பார்க்கும் போது அவர்களின் குணங்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. துரோணர்: பார்த்தாயா துரியா?! நீ எல்லாவற்றிலும் தீயதைப் பார்க்கிறாய்; அதனைப் பற்றியே பேசுகிறாய். அவன் எல்லாவற்றிலும் நல்லதைப் பார்க்கிறான். அதனைப் பற்றியே பேசுகிறான். வருங்காலம் உன்னைப் போல் எல்லாவற்றிலும் தீயதையே கண்டு அதனையே பேசி வருபவர்களை 'துரியோதனப் பார்வை' கொண்டவர்கள் என்று அழைக்கும். அது மாறவேண்டும் என்றால் நீ மாறவேண்டும். *** துரியோதனனின் கதை எல்லோருக்கும் தெரியும். அவன் மாறவில்லை. 'துரியோதனப் பார்வை' கொண்டவர்களும் நிறைய இருக்கிறார்கள். *** இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 24 மே 2007 அன்று இடப்பட்டது. https://koodal1.blogspot.com/2008/04/blog-post.html1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா.
வாழ்த்துகள். திரு புஷ்பா அவர்கள் தாயகபற்றாளர். ஊர்பற்றாளர். பிறந்த ஊரான குப்பிழான் மண்ணுக்கு உதவி புரிவதற்காக 9 பேருடன் சேர்ந்து குப்பிழான் விக்னேஸ்வரா மன்றம் பிரித்தானியா அமைப்பினை உருவாக்கினார்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடக்கும் பரிட்சையில் நான் பாஸ் ஆகினால் இரண்டாம் பிடிப்பேன் ஹா ஹா................ அல்லா அக்பட்........ பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான்😄💪...........................1 point- இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு
உலக அரசியலில் தமக்கு தாமே உதவுபவர்களுக்கே கடவுள் உதவுவார் என கூறுகிறார்கள். ஈரானின் உள்ளக அரசியல் நிலை உறுதித்தன்மையில் இல்லாமையால் அந்த ஆட்சி பீடத்தினை ஆதரிக்கும் தரப்பு ஒரு மதில் மேல் பூனை நிலையில் உள்ளதாக கருதுகிறேன். அமெரிக்க படை நகர்வுகள் பில்லியஙளை இழக்கின்ற நிலையில் இந்த நிகழ்வு வெறும் அச்சுறுத்தல் நடவடிக்கையாக முடிவடைந்து போக ப்போவதில்லை, ஆனால் பலரது கேள்வியாக இருப்பது அமெரிக்க இராணுவத்தினால் ஒரு முழுமையான மரபு வழிப்போருக்கு அமெரிக்கா தயாராகவுள்ளதா? என்பதாகும், நிச்சயமாக அமெரிக்காவிற்கு அந்த பலம் தற்போது இல்லை என்றே கருதுகிறேன், அமெரிக்காவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கலாம். ஒரு நாட்டின் பலமே அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது, வட கொரியாவிடம் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல, ஈரான் இந்த சமரசத்தினை ஏற்றுக்கொள்ளாது (எந்த ஆபத்தினை எதிர்கொள்ளும் நாடும் ஏற்காது). ஈரானிற்கு சமாதானமாக செல்ல முயன்றாலும் அழிவே கிடைக்கும் அந்த நிலையில் ஈரானுக்கு போர் ஒரு சிறிய சாதக நிலையினை கொண்டதாகவுள்ளது. இலங்கை உள்நாட்டு போரில் உலக தரப்புக்கள் அனைத்தும் ஒன்றினைந்து ஒரே கோட்டில் இருந்த நிலை இப்போது இல்லை (1990 -2017 Unipolar world order), உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்திலும் அதே போல உலக சக்திகள் பெரும்பாலானவை ஒரு தரப்பில் நிற்க முற்பட்டாலும் பலதுருவ உலக யதார்த்தம் அதனை கேள்வி குறியாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த போர் முயற்சி அமெரிக்காவினை ஒரு மீழ முடியா சிக்கலில் மாட்டி விடலாம். போர்களுக்கான காரணங்களில் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் ஒரு காரணமாக கூறப்படுகிறது, அதிபர் ட்ரம்பிற்கு உள்நாட்டில் ஏற்படும் அழுத்தங்களின் விழைவாக இந்த போரினை அமெரிக்கா தொடங்க முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி
1 pointஇரண்டு "தெலுங்கர்களும்" சந்தித்த போது... பேச வார்த்தைகள் வரவில்லையே. விஜயகாந்தின் மனிசி பிரேமலதா.... தனக்கும், தன்ரை தம்பி சதீசுக்கும்... பதவி எடுக்கத்தான், உந்த ஆட்டம் எல்லாம் ஆடுது.1 point- வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
"நம் அனைவருக்கும் வாய்க்கவேண்டும்" அது தான் சரியானது. மிக்க நன்றி பேராசான். அண்ணை, கருப்பு - பெரியாரை பின்பற்றுபவர்கள் / பகுத்தறிவாளர்கள். சிவப்பு - கம்யூனிஸ்ட் / இடதுசாரிகள். நீலம் - தலித் / அம்பேத்கார் வழி நடப்போர்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1 point- மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
ஜேவிபி பல இடங்களில் தூசு தட்டுவதாக தெரிகின்றது. தமிழர் பகுதிகளை விட சிங்கள பகுதிகள் அதிகம் என காதுவழி செய்திகள். உண்மை பொய் தெரியவில்லை.1 point- வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
சிறப்பு. உங்கள் இடத்திலிருந்து உங்களுக்காக மட்டும் நீங்கள் சொல்ல முடியும் என்பது மிகச் சரி. நீங்கள் சொல்லிவிட்டதால் இப்போது நான், "நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும்" என்று எழுத முடியும். 👍1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நாளை முதல் நடைபெறவுள்ளது. பிரித்தானிய நேரப்படி நாளை சனி 21 பெப் முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் பாகிஸ்தான் (Y3) NZ எதிர் PAK 14 பேர் போட்டியில் உள்ள நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஏழு பேர் போட்டியில் உள்ள பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத ஆப்கானிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் NZ வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் NZ ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் NZ வாத்தியார் NZ கறுப்பி NZ வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் PAK கந்தப்பு PAK நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா PAK நிலாமதி AFG நந்தன் PAK நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... இந்தப் பிரச்சனையை தவிர்ப்பதற்காகவே, முடிந்த வரை அணிகளின் தலைவர்களை நான் தேர்ந்தெடுப்பது.............. சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் என்று தெரிவுகளில் சோடி கட்டி விடுவதும் உண்டு...............🤣.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதிலும் அவன் கிலென் பிலிப்ஸ் இருக்கானே, பறவை மாதிரி. எக்ஸ்ரா கவர் இடம் அவனின் ராஜ்ஜியம். அடிச்சுப் பாருங்கோவன்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Laws of mathematics, physics இற்கு அப்பாற்பட்ட சக்தி கோஷான் என்பதை உங்களுக்கு காலம் உணர்த்தும்😂1 point- கருத்து படங்கள்
1 point- றோசா முள்ளா? மலரா??
1 pointஅண்ணை இதை இப்பதான் பாக்கிறன். சுகமாய் வீடு வந்தது சந்தோசம். உண்மையை சொல்லுங்கோ குத்து விட்டது, ரோஜாவோ? செல்வமணியோ😂1 point- றோசா முள்ளா? மலரா??
1 pointஇன்று காலையில் வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂 நலம் விசாரித்த @Paanch அண்ணை, @குமாரசாமி அண்ணை, @விளங்க நினைப்பவன், @satan, @யாயினி, @alvayan, @ஈழப்பிரியன், @நியாயம், @ஏராளன், @suvy ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏1 point- றோசா முள்ளா? மலரா??
1 pointஅண்மையில் காதலர் தினம் வந்து போனது. சிறியர் ஏடாகூடமாய் ஏதும் உணர்ச்சி வசப்பட்டு ரோசாவிடம் குத்து வாங்கியிட்டாரோ?1 point- றோசா முள்ளா? மலரா??
1 pointறோஜாவை மணக்கலாம் கட்டி அணைக்கக் கூடாது. சிங்கன் விரைவில் நலமாகி யாழில் ஓடித்திரிய வேண்டுகிறேன். தகவலுக்கு நன்றி பாஞ்ச்.1 point- றோசா முள்ளா? மலரா??
1 point- றோசா முள்ளா? மலரா??
1 pointவைத்தியசாலையில் தங்கி இருக்கும் அழவுக்கு ரோசா குத்தி விட்டதா...? காலையில் யாழில் புதியவர் ஒருவரை இன்ரவியூ எடுத்து கொண்டு இருந்தாரே..🤭.சரி பூரண நலம் பெற்று வீடு திரும்புங்கோ சிறியண்ண.👋1 point- கருத்து படங்கள்
1 point- கருத்து படங்கள்
1 point1 point- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வழக்கம்போல நம்மட உறவுகள் எழுதுங்கோ, வாசிக்க தயார்.1 point- கருத்து படங்கள்
- றோசா முள்ளா? மலரா??
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.