Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19869
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    89120
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1610
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    5623
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/26 in all areas

  1. காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
  2. 27 வருடமாக இவர் இரவு பகலாக சூட்டிங் போய்விட, இரெண்டு பிள்ளைகளின் நல்வாழ்வை கவனித்கவ்ர் யார்? நீங்களா? சங்கீதாதானே? அது உழைபில்லையா? உழைப்பில்லாத ரெஹ்மான் மனைவியை ரெஹ்மான் பிரிவின் போதும் கண்ணியமாக நடத்தினாரே? நல்லவேளை வழக்கு மேற்கு நாட்டு நீதிமன்றில் இல்லை - வினையின் சொத்தை பாதிக்கு கிட்ட சங்கீதாவுக்கு கொடுத்திருப்பார்கள். தனக்கு திரிஷா தேவை. நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்? இல்லை. முயல்வோர் பலர் உளர்.
  3. மேலேயும் கீழேயும் ஒரு மாற்றமும் இல்லை. நடுவில் சில மாற்றங்களுடன், இன்றைய நிலை.
  4. நீங்கள் போட்ட படத்தில் வகுப்பில் தனுசும், எஸ்கே யும் இருக்கிறார்கள். ஆனால் எஸ்கே டிவோர்ஸ் ஆகவில்லை. இமானின் டிவோசை ஆக்கிவைத்தார் என்பதே இமானின் குற்றச்சாட்டு. பிகு தனுசும், சிவாவும் கூட தெலுங்கர் என்கிறனர் மூ.பரிசோதனை தம்பிகள். எதற்கும் வடிவா விசாரிக்கவும்😂 பிள்ளைகள் 18 வயதுக்கு மேல் என்றால் அவர்களுக்கு வாழ்க்கை செலவை வழங்க தேவையில்லை. ஆனால் மனைவிக்கான ஜீவனாம்சம் என்பது பிள்ளைகளின் தற்போதைய வயதை விட, திருமண உறவின் காலம், இருவரின் பங்கு, தியாகம், விட்டு கொடுப்பு என்பது சம்பாஅனது. யூனிவசிட்டீ ஓப் இலண்டன் கல்லூரி ஒன்றின் பயோமெடிக்கல் பட்டதாரி, 27 வருடமாக ஏன் வேலை ஏதும் இல்லாமல் சென்னையில் வாழ்ந்தார் என்ற கேள்விக்கான பதில் முதன்மையானது. சங்கீதா இந்த டிவோர்சை இலண்டனில் போட்டிருக்க வேண்டும். பிழை விட்டுவிட்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே😂
  5. 30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.
  6. 😂 மனோகரா…பொறுத்தது போதும்…பொங்கி எழு😂
  7. இரண்டு அரை இறுதிப் போட்டிகளும், இந்தியாவில் நடைபெறும். இலங்கையில் அரை இறுதிப் போட்டி ஒன்றை நடாத்துவதற்காக, இலங்கை பாகிஸ்தானை போக வைக்கும் என்று, ஒரே கலபரம், கலாய்ப்பு. உந்த max fixing கோஸ்டியோட ஒரே தொல்லை. ஏனென்றால், இலங்கை உல்லாசத் துறைக்கு நல்லதாம். எதுக்கெடுத்தாலும், காச வாங்கிட்டாங்கள் என்று ஓடித்திரிவாங்கள்.
  8. நாளை தென்னாபிரிக்கா வெல்லும் என கணித்த 5 பேரும் கிரிகெட் மேதைகள் என்பதை நாளைய போட்டி முடிவு உறுதி செய்யுமா 😂. நாளை இந்தியா வென்றால் எனக்கு இங்கும், பின் அரையிறுதி கணிப்பிலும் புள்ளிகள் வரும். ஆனால் இந்தியா தோற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தோற்பதற்கான தியாகமா என் புள்ளிகள் போகட்டும் 😂.
  9. உதட்டோர மச்சம் அதிஸ்டத்தின் அடையாளம் என்கிறது சாமுத்ரிகா இலட்சணம். திரிசாவுக்கு முகத்தில் கீழ் உதடு நாடிக்கிடைப்பட்ட பகுதியில் சின்னதாக ஒரு மச்சம் உள்ளது. (எவ்வளவு இன்னெசெண்ட் நான் என்பதை இந்த பதிலை பார்த்து புரிந்து கொள்ளலாம்😂).
  10. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு 01 மார்ச் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, ஸிம்பாப்வே (X2) எதிர் தென்னாபிரிக்கா (X4) ZIM எதிர் SA ஐந்து பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எனினும் ஒருவரும் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 17 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகவும் @vasee இப்போட்டியில் விளையாடாத நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ NZ புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் AUS வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் AUS வீரப் பையன்26 AUS சுவி AUS கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் AUS எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா AUS நிலாமதி AUS நந்தன் AUS இப்போட்டியில் தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா? 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், இந்தியா (X1) எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (X3) IND எதிர் WI அனைவரும் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! அத்தோடு இப்போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் IND வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் IND அல்வாயன் IND ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?
  11. என்னையா ..நீங்கதனே இப்ப உதவி கமிசனர் ...கிருபன் ஜீ உடன் கதையுங்க
  12. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் புயல் வேக செஞ்சுரியான 100 (60 பந்துகள்) ஓட்டங்களுடனும், பக்கர் ஸமனின் மின்னல் வேக 84 (42 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தும், பவன் ரத்தநாயக்கவின் அதிரடியான 58 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தசுன் ஷானகவின் விளாசலான ஆட்டமிழக்காமல் எடுத்த 76 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் வேறு இலக்கை அண்மித்தும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. எனினும் நியூசிலாந்தை ஓட்ட விகிதத்தில் முந்துவதற்கு இலங்கையை 147 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெல்ல வேண்டியிருந்த நிலையில், சிறிலங்கா அணி 207 ஓட்டங்களை எடுத்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @சுவைப்பிரியன் க்கும் புள்ளிகள் கிடையாது!
  13. 😂 நாளைக்கி இந்தியாவும் வென்றால் 4 செமி பைனல் அணியை சரியாக கணித்தேன் என என்னை நானே ஆறுதல் படுத்த முடியும் என்பதால் ஒரு சின்ன சந்தோசம்😂
  14. செய்யலாம்தான் தான் தோழர். ஆனால்... ஊரில் உள்ளவர்களிடம் சொல்லப் போனால், பிய்ந்த செருப்பால் அடிப்பார்கள். 😂
  15. பாஸ்போட் கொப்பி அனுப்புறன் ....இணைத்து விடுங்கோ ரசோ...
  16. கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.
  17. இரானிலை ஆம்புளையெல்லாம் போர்முனைக்கு போட்டாங்களாம்.......வீடு காணிக்கு காவலுக்கு ஆள் எடுத்தவையாம்..
  18. அவர் எப்போதும் நீண்ட தூரம் பயணிக்கிற ஆள். மத்திய கிழக்கில நிக்கிறாப்ல
  19. செம்பாட்டார் ..காசு சேர்க்கமாட்டார்.....கல்குலேட்டர் எடுத்துக் கொடுப்பார் அதுதான் வாழ்த்து அதன் வாழ்த்து சொல்லுரதுக்கு கொப்பி அடிச்சனான்
  20. 15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை. ஒரு கூட்டுப்புழுவை விட விஜய்யின் நிலை மோசம்.................. வருகின்ற தேர்தலுக்கு இரண்டு பெரிய கூட்டணிகளும் தலா 6000 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு 100 கோடியை சங்கீதாவுக்கு கொடுத்து விஜய்யை போட்டியில் இருந்து வெளியேற்றலாம் என்றால், சொந்தப் பணத்தை வெளியில் விட தயங்கும் எடப்பட்டியாரே அதில் 50 கோடி கொடுப்பார்......................🤣.
  21. இந்திய அரசியலில் பெரிய வீடு, சின்ன வீடு, பக்கத்து வீடு ,மேல் வீடு,கீழ் வீடு எல்லாம் சர்வசாதாரண நிகழ்வுகள் அல்லவா? 😂 இங்கே ஏன் கோசான் பதட்டப்படுகின்றார் என தெரியவில்லை? 🤣 அதிலும் படித்து பட்டங்கள் பெற்ற மனித நாகரீக மேற்குலகின் பாலியல் கதைகள் எல்லாம் இன்றைய பெரிய செய்திகளாக இருக்கும் போது விஜி அண்ணிக்காக போராடும் கோசானை பாராட்டியே ஆக வேண்டும். 👍
  22. முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்
  23. இந்த திருமணம் இங்கிலாந்தில் பதியபட்டது. ஆனால் திருமண வாழ்வு முழுக்க இந்தியாவில். இரு தரப்பும் பரஸ்பரம் புரிந்துணர்வில் சொத்து, ஜீவனாம்சத்தை பிரித்து கொள்ள முனைந்தால் இங்கிலாந்து கோர்ட்டில் விவாகரத்தை சிம்பிளாக முடித்திருக்கலாம். ஆனால் ஜீவனாம்சம்தான் பிரச்சனை ஆகியிருக்கிறது. இங்கிலாந்து கோர்ட்டில் contested divorce என்றால் சங்கீதாவுக்கு நல்ல தொகை கிடைக்கும். இருதரப்பும் ஏற்று கொண்ட உடன்படிக்கை பிரகாரம் எனில் அது அவர்கள் விருப்பபடி அமையலாம். தனக்கு பண ரீதியாக இந்திய கோர்ட் இலாபகரமானது என நினைத்து விஜை அதை விரும்பி இருக்கலாம். ஆனால் சங்கீதாவுக்கு contested divorce எனிலும் இலண்டன் போல அதீத % ஐ இந்திய கோர்ட் கொடுக்காது. ஆகவே இருவரும் அமர்ந்து பேசி இலண்டன் கோர்ட்டில் உடன்படிக்கை பிரகாரம் சொத்கை பிரித்திருக்கலாம். ஆனால் …அரசியல் என வந்த பின் இதை தூண்டி விட பலர் இருப்பார்கள். சங்கீதாவுக்கு விஜை கொடுக்கும் தொகையை விட பெரிய தொகை இப்போதே கைமாறி இருந்தாலும் ஆச்சரியமில்லை.
  24. களத்தில் ஏதோ பிழையோ என்று ஒரு கணம் திகைத்துப் போனேன்....................🤣.
  25. மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
  26. ❤️........................ மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
  27. எதுக்கும் மேற்கிந்தியாவ ஒரு வார்த்தை கேளுங்க.
  28. நேற்றைய இன்றையப் போட்டிகளின் பின், நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த புள்ளி விபரம். முதல் இருவரும் குத்துக் கல்லாடம் போல் அங்கேயே இருக்க, அல்வாயன் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். சுமைதாங்கிகளில் மாற்றமில்லை. இன்னும் 3 போட்டிகளே மீதமுள்ளன.
  29. நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார். மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல. பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள். ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம். இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்… தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம். இப்படி கோர்ட் படியேறி… நடிகையுடன் உறவில் இருந்தார்… என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்… புறக்கணித்தார்… நிதியை முடக்கினார்… என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல். அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும். வளர்ந்த பெண் பிள்ளை வேறு…. சரியான அடி முட்டாளாக இருக்கிறார். எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂. 😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா? புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா… அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂 போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂
  30. யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாவும் கற்பனையே😏) கஜி ரிப்போர்ட்
  31. வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! ஏனென்றால் தெரிவுகள் அப்படி!!
  32. யாரைய்யா இவர்? கால்களிற்கு மரக்கட்டையில் பாதவணி மாட்டியுள்ளார். ஆனால், எல்லா இடங்களிற்கும் உலங்குவானூர்தியில் உலவுகின்றார்.
  33. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!
  34. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!
  35. நம்ம நாட்டிலையும் மூணு தடவை மோசமாக்கிட்டுது....இப்பவும்...3 அடிச் சினோ வீட்டைசுத்தி இருக்கு ...பிரிசரில் உள்ள கோழியின் நிலைதான் நமக்கு ...சினோத்தம்பி ...அடிக்கத் தொடங்கவே நானும் மனையாளும் சவள் தூக்கிவிடுவம் ..நான் பருமட்டான..அடி ...அவர் அலங்கார அடி ...ஏலுமானவரை தூக்கி போடுவம் ...7 கார் பார்க் பண்ணுற முற்றம்...அத்துடன் மூலைவீடு ..தெருவான் எல்லாம் கூட்டிவந்து ..வரம்பும் கட்டிவிடுவாங்கள்... இந்த பயத்திலை தெருவில கொட்டினதைக்கூட ..வீட்டு மூலை காணிக்கை மெசினாலை அள்ளி இரைத்து விடுவம் ...இது ஒரு கடினமான சந்தோசம்தான் ...நீண்டகால கயிட்டம்தான் ...அதில் ஒரு திரில் இருக்கு
  36. அவர் பார்க்கப்போனது மாதா கோயிலை நீங்க வேற கனவில இருக்கீங்க
  37. இலங்கை தோத்தாலும் பாகிஸ்தான கலைச்சு விட்டதால, இலங்கை வென்ற மாதிரித்தானே. இலங்கையைத் தெரிவு செய்தாக்களுக்கும் இரண்டு புள்ளிகள் குடுக்கலாமே. 😉
  38. களத்தில் கனபேருக்கு கனபேரைத் தெரிந்திருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.