Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    34065
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20141
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34554
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    35031
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/11/26 in all areas

  1. வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது. ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம். சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......! மலர் .......1.🌻
  2. எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.
  3. வீதியோரம். மலர் ...........2. அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி காவியுடை தரித்து தலை மழித்த சாதுக்களும் சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர். பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில் அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது. நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள். சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள் இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும். பிள்ளைகளைப் பார்த்து நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....! மலர் . ........ 2. 🌼🌼
  4. விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  5. நாளைதான் போட்டி விபரங்கள் வரும். 26 மார்ச் ஆரம்பிப்பார்கள். இதற்குள் கேள்விக்கொத்து தயாரித்தாலும் எத்தனை பேர் உடனடியாக பதில்கள் தருவார்கள்?
  6. கிறிஸ்தவர், சன்னி, சியாக்கள், யூதர் என சேர்ந்து வாழ்ந்த, கிழக்கின் பாரிஸ் என போற்றப்பட்ட பெய்ரூட்டும், லெபனானும் 1979 இல் முல்லாக்கள் ஈரானில் ஆட்சிக்கு வந்ததுடன் நாசமானது. ஈரான் யாசிர் அரபாத்துக்கு எதிராக ஹமாசை கொம்பு சீவி, அவரின் பட்டா இயக்கத்தை காசாவை விட்டு கொலைகள் மூலம் அடித்து விரட்டியது. பலஸ்தீன பிரச்சனை தீரக்கூடாது என்பதில் வலதுசாரி யூதர்கள் போல் அழுங்கு பிடியாக நிற்பவர்கள் ஈரானிய முல்லாக்கள். என்ன காரணம் ? தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என குரான் சொன்னது போல் நடக்கும், நடக்க வேண்டும் என்ற அடிப்படை வாத நம்பிக்கை. இது வேற பிரச்ச்னை…. 8 க்கும் 5 க்கும் வித்தியாசம் தெரியாத நுனிப்புல் மேய்தல்+சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை ஆங்கிலத்தினூடு விளங்கி கொள்ளமுனைதல்+வேற்று கிரக மொழியாளுமை எல்லாமும் சேர்ந்த ஒரு வித மாய உலகத்தில் வாழ்வதன் பிரதிபலன். And you translate, cut and paste what you want us to see 😂
  7. 🤣............... தாரை தப்பட்டை என்று எதையாவது தூக்கிக் கொண்டு உடனேயே கலந்து கொள்ளுகின்றோம்...................... கூட்டம் சேர்ந்து விடும்................
  8. 2024 இல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இதே போல இரண்டுமுறை போட்டி விபரங்களை வெளியிட்டார்கள் . நீங்கள் இரண்டாவதாக வெளியிட்ட போட்டிகளைவைத்து போட்டியினை நடாத்தினீர்கள். சென்ற வருடம் 74 போட்டிகள் நடைபெற்றன. இம்முறை 84 போட்டிகள் நடைபெறவுள்ளது. 20 போட்டிகளின் விபரங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. மிகுதி 64 போட்டிகளை மட்டும் வைத்து நீங்கள் போட்டியை நடாத்துங்கள். கடந்த சிலவருடங்கள் போட்டிகளை அழகாக நடாத்தியுள்ளிர்கள். போட்டிகளை நீங்கள் நடாத்தினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு இம்முறை போட்டியினை நடாத்த நேரமில்லாமல் இருந்தால் மட்டும் நான் போட்டியினை நடாத்துகிறேன். தமிழக சட்டசபை தேர்தல் போட்டி கட்டாயம் நடைபெறும்
  9. தீடீரென பள்ளத்தில் விழுந்த கார்கள்! இந்தியாவில் 5 குட்டி போட்ட ஆபிரிக்க சிவிங்கிப்புலி.
  10. இது உங்களிடம் நான் அவதானித்த ஒரு பிரச்சினை: Deduction என்பது சுத்தமாகக் கிடையாது. அத்தோடு ஒரு விடயத்தை ஒரு துவாரத்தினூடாக (tunnel vision) மட்டும் பார்த்து , அப்படியே நம்பி, இங்கே கொண்டு வந்து ஒட்டுவதை மட்டும் செய்வீர்கள்😂. 2015 JCOPA ஒப்பந்தப் படி மருத்துவத் தேவைகளுக்கான யுரேனியச் செறிவாக்கல் உதவிகள் (அது 60% வீதமாக இருக்க வேண்டியதில்லை என்பது வேறு விடயம்) ரஷ்யா உட்பட்ட சில ஐரோப்பிய நாடுகளால் வழங்கப் படும். எனவே, மருத்துவத் தேவைகளுக்காக ஈரான் செறிவாக்கவில்லை. ஈரானிடம் அணுசக்திக் கடற்கலம் ஒன்று கூட இல்லை, அவை தயாரிப்பு நிலையிலும் இல்லை. எனவே அதற்கும் 60% செறிவாக்கல் பயன்படவில்லை. இந்தத் தகவல்களைத் தொடர்பு படுத்தி நிலைமையைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா, அல்லது புரிந்து கொண்டால் உங்கள் தரப்பான ஈரானுக்கு ஆதரவாக எழுத இயலாது என்பதால் தவிர்க்கிறீர்களா என்பது உங்களுக்கே வெளிச்சம். இந்த நிலையில், ஓட்டையினூடாகப் பார்ர்க்காமல் எல்லா விடயங்களையும் கணக்கிலெடுத்து இங்கே பகிர்வோருக்கு அட்வைஸ் மழை வேற😂!
  11. இந்தியாவில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த சுமார் 20,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சித்தி சமூகமாக அறியப்படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். காலப்போக்கில், அவர்கள் சமூக விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகவே இருந்து, வறுமை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் இன்றைய சூழலில், சித்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இந்த தடைகளை எதிர்கொள்ள ஒரு சக்திவாய்ந்த வழியை கண்டுபிடித்துள்ளனர். விளையாட்டு வழியாக, அவர்கள் தனிமைப்படுத்துதலை உடைத்து, பாகுபாட்டை எதிர்த்து, தங்களுடைய வாழ்க்கையை மாற்றி வருகின்றனர். #BBCISWOTY #Changethegame இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  12. முன்னே வரட்டும் . .....முன்னேறி வரட்டும் . ........! 👍
  13. படங்கள் @வாத்தியார் அண்ணா. @goshan_che அண்ணை உங்கள் நண்பரிடமும் அவர்களின் வீட்டின் சூழலை காட்டும் படங்களை பகிருங்கள். தற்போது ஒரு மேசன் தம்பி முன் வந்திருக்கிறார், நேரடியாக வந்து பார்த்து தமது சம்பளம் பற்றி கதைப்பதாக கூறியுள்ளார். @வாத்தியார் அண்ணையும் தனக்கு அறிமுகமான மேசன் ஒருவரிடம் கேட்டுச் சொல்வதாக கூறினார்.
  14. 😂 கிறிஸ்மஸ் தாத்தா…. மூட்டை மூட்டையாக ரஸ்ய ஆதரவு கட்டுரைகளை அவிழ்த்து விடுவார் என ஆவலோடு எதிர்பார்க்கும் குழந்தை நான்😂. நான்மட்டும் அல்ல, யாழ்களத்தில் கருத்து எழுதும் இன்னும் பலரும் இப்படியான குழந்தைகளே😂. ஒரு விசயம் சொல்லட்டுமா… மேலே உள்ளவருக்கும், யாழில் யூடியூப் இணைப்போருக்கும் முன்பே சொன்னதுதான்… Keep an eye on your engagement figures…. இது கருத்துக்களம் - சொந்த சரக்குத்தான் - விற்பனை ஆகும். கூகிள் டிரான்சிலேடரின் கொச்சை தமிழில், பந்தியில் கடைசி வரிக்கு வரும் போது முதல் வரியில் என்ன வாசித்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு எழுத்து நடை உள்ள கட்டுரைகளை எவரும் வாசிக்க போவதில்லை. தலையங்கத்தை வாசித்து விட்டு போவார்கள். சொல்ல வேண்டியது என் கடன்… இல்லை… கதவை தட்டும் யெஹொவா சாட்சிகள் போல - நற்போதனை செய்து, மக்களுக்கு ரஸ்யாவின் அருமை பெருமைகளை புகட்டியே ஆவேன் என்றாலும் ஓக்கேதான்.
  15. sSprtoneodmc14002thgcc7uf4c5l1 h1451cma8haa9ahcm091g1i7clihi · சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன். . சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார். . ''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்! . என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன். . வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக்கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது. . அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு. . அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம். . அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?'' . சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?'' . சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான். . ''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?'' . ''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்.....!
  16. நல்ல விடயம் விசுகர் . ......ஆரோக்கியமாய் இருக்கும் பிள்ளைகளுக்கு அறிவுரை போதும் மாத்திரை வேண்டாமே ......!
  17. காளான் மிளகு வறுவல் . ...... மாமிச கறி சுவையை அடிச்சு தூக்கிடும் .......! 😂
  18. கோயில் நிலைய வித்துவான்களே 10 க்கு மேல் இருக்கும் நீங்கள் வேற .......! 😂
  19. அந்த திரியில் நிங்கள் கூறிய கருத்து👇 அதற்கு எனது அந்த திரியில்👇 IAEA ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறிய செய்தியினையும் அந்த திரியிலேயே இணைத்துள்ளேன் https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/ IAEA துறைசார் வல்லுனர்களின் கருத்தினடிப்படையில் அணுகுண்டு தயாரிக்காவில்லை என கூறும் நிலையில் நீங்கள் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டிற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுவது (90% செறிவூட்டலின் பின்னரே அணுகுண்டு தயாரிப்பினை மேற்கொள்ளலாம் என கூறுகிறார்கள், நான் துறைசார் நிபுணன் இல்லை) எனும் உங்கள் கருத்திற்கான பதிவினை நீங்கள் இப்போதும் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளீர்களோ தெரியவில்லை. நான் வெளிநாடு வந்த காலத்தில் என்னை பார்க்க வந்த ஒருவர் என்னை காரில் அழைத்து சென்றார், நாங்கள் மொத்தம் 5 பேர் அந்த காரில் பயணித்தோம், நகரத்திற்கு செல்லும் ஒரு குறுகலான இரு வழிப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாலை நேரமாக நினைவுள்ளது. காரினை ஒரு "U" வடிவ திருப்பம் ஒன்றினை அந்த நெரிசலில் மிகவும் சிரமப்பட்டு எடுத்தார், அது இலகுவாக இருக்கவில்லை, துரதிர்ஸ்டவசமாக எங்கிருந்தோ திடீரென காவல் துறை வாகனம் (சாதாரண கார் போல) வந்து எமக்கருகில் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டார், காரை ஓட்டினவர் பயிலுனர் அனுமதி அட்டை மட்டுமே வைத்திருந்தார் (காரில் வெளிப்புறத்தில் பயிலுனர் எனும் இலச்சினை வைத்திருந்தாரா என்பது நினைவில்லை). காவல் துறையில் இருந்த பெண்மணியிடம் காரை ஓட்டினவர் நான் நீண்டகாலமாக கார் ஓட்டுகிறேன் என அவரது பேச்சிற்கு எதிர் பேச்சாக பேசிக்கொண்டிருந்தார், உள்ளே இருந்த எனக்கு இவர் எதற்காக அந்தப்பெண்மணியிடம் வம்பிழுக்கிறார் என திகைப்பாக இருந்தது, காரை ஓட்டியவரரது சாரதி அனுமதி பத்திரத்தினை வாங்கிக்கொண்டு காருக்கு வந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் உனக்கு சாரதி முழு அனுமதி பத்திரம் உள்ளதா? என கேட்டார், அதற்கு அவர் இல்லை என கூறினார். பயிலுனர் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சரியான மேற்பார்வையின்றி வாகனம் செலுத்தியமை, போக்குவரத்து நெரிசல் உண்டாக்கியமை என இரு அபராதங்களை விதித்து விட்டு சென்றார்கள் (ஆனால் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்கள்?) நான் முதலில் இவர் வம்பிழுத்ததாக நினைத்தேன் பின்னர் அவரரது ஆங்கில புலமை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இருந்ததால் அவர் தனது வாகன செலுத்தும் திறமையின்மையினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறை நினைத்திருக்க கூடும் என நினைத்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை என நினைக்கிறேன். IAEA தெரியாத விடயம் ஜஸ்ரினிற்கு தெரிகிறது என்பதால் எனக்கு முரண்பாடெதுவும் இல்லை (இப்படியும் இருக்குமோ என்பதே எனது அபிப்பிராயம்).
  20. அதுசரி பிரியன் சார் ....பில்லியன் , மில்லியன் , லட்சக் கணக்கா உந்த சாமானுகளை பிடிக்கினம் ...எங்கைய்யவது நாட்டுக்கு இரகசியமா வித்து ...கடனில்லாமல் இருக்கலாமே
  21. இதுவே அமெரிக்கா என்றால் எங்கிருந்து பெற்றார்கள் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என முழு விபரமும் அறிந்த பின்பே விடயம் வெளியே வந்திருக்கும். இப்போது வெளியே உள்ளவர்கள் உசாராகி இருப்பார்கள்
  22. விசுகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே?
  23. இது சம்பந்தமாக நான் ஒரு விசாரணை கொமிசன் கோரி இருப்பேன்…. ஆனால் பும்ராவை தேர்ந்த எனக்கு புள்ளிகள் கிட்டி உள்ளதால்….. அங்கால திரும்பி பராக்கு பார்கிறேன்😂
  24. மாதவிடாயை தடுக்க அல்லது பிற்போட ஊசி எடுப்பது மாத்திரை எடுப்பது பிள்ளைகளின் உடல்நலத்தை பாதிக்காதா?
  25. தணிக்கைகள்/பிரச்சார போர்/ஊடக போர்/உளவியல் யுத்தம் இவைகளை தாண்டி உண்மை செய்திகள் வெளிவருகின்றதா என்பது சந்தேகம். அப்படியாக உண்மை செய்திகளை வெளிவிடும் ஊடகம் ஏதும் உள்ளதாகவும் தெரியவில்லை. அவரவர் அங்குமிங்குமாக பார்க்கும், கேட்கும், வாசிக்கும் செய்திகளை அளவுகோலிட்டு, ஆய்வு செய்து தத்தமது அறிவுக்கேற்ற வகையில் கிரகிக்க வேண்டியதுதான்.
  26. இரு வேறு நபர்கள். இலண்டன் டாக்டர் அமரர் சத்யமூர்த்தி புலிகளுகாக செயற்பட்டவர். வயது மூத்தவர். Tamil Heritage -வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 – 27.02.20...மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் நிபுனர் சத்தியமூர்த்தி 03.09.1951 - 27.02.2013 இன்று நினைவு நாள். சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வயதில் குறைந்தவர். முள்ளிவாய்க்காலில் அரும்பணி செய்து, உலகிற்கு உண்மையை சொன்னவர். பின்னாளில் ஆமியின் கைக்கு போய், இப்போ, அரசியல் சர்ச்சைகளில் சிக்குபவர், அதிகாரத்தில் இருப்பவர்.
  27. நீங்கள் குறிப்பிட்ட பின்னர் தான் கவனித்தேன். 2004 இற்கு முன்னர் இருவருக்கு அவர்கள் உயிர்வாழும் போதே மாமனிதர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு எல்லாம் இறந்த பின்னர் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது.
  28. ‘அடப்பாவி’ நான் ஒரு நேர்சு என்றுதான் எண்ணினேன்.🧐 வயித்தைப்பற்றி எரியுது.😩
  29. இன்று காரைநகர் ஊரி, கொட்டப்புலம் திரு அப்புத்துரை செல்லத்தம்பி அவர்களின் வீட்டிற்கு எமது யாழிணைய உறவு @வாத்தியார் அண்ணை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். சிறிய தற்காலிக குடிசை போன்ற வீட்டில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என்று திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் கூறினார். தற்போது 2009 முன் திருமணம் முடித்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் பின்பு திருமணம் முடித்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் கிடைக்கும். 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டத்தை அந்தப்பணத்தில் வீட்டுத்திட்டத்தை முடிக்கமுடியாது என்பதால் பலரும் வேண்டாம் என மறுக்கிறார்களாம். வாத்தியார் அண்ணை கிராமசேவகரிடம் மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர் கதைப்பதாக கூறினார்.
  30. இரண்டு விடயங்களுக்காக இதை பதிந்தேன். ஒன்று என் அனுபவத்தை பதிவது அடுத்தது இங்குள்ள பேரன்மார்களின் பேரன்பை வெளிக் கொண்டு வருவது...🥰 நன்றி சகோ. தேடல் தொடரும்
  31. அரிதான ஜெல்லி மீன். லிப்ரில் வெடித்த பலூன்கள். பூனைக்குட்டி ஒளித்த இடம்! மன்னிப்புக் கேட்ட விதம்!
  32. யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..! யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://yarlvasal.lk/?p=92893

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.