Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    34065
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    89365
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20564
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10351
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/15/26 in Posts

  1. கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் வசிக்கும் ஜேர்மனியின் Baden-Wuerttemberg மாநிலத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, Alliances 90/ The Greens கட்சி 30.3 சதவீத வாக்குகளையும், Christian Democratic Union கட்சி 29.7 சதவீத வாக்குகளையும் பெற்றன. இரு கட்சிகளுக்கும் மாநில நாடாளுமன்றத்தில் தலா 56 இருக்கைகள் கிடைத்ததால், மாநில நாடாளுமன்றம் இன்னும் சிக்கலானதாக மாறியிருக்கின்றது. ஆனால் இந்தத் தேர்தலைப் பற்றி அதிகமாக பேச வைத்தது வேறு ஒரு சம்பவம். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட Free Democratic Party(FDP) கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் Nicole Buettner (41), ஜனவரி மாதத் தொடக்கத்தில் Schwaebische Zeitung பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். “இந்தத் தேர்தலில் எப்படியும் எங்கள் கட்சி மாநில நாடாளுமன்றத்தில் நுழையும். அப்படி நுழையாவிட்டால் நான் மொட்டையடித்துக் கொள்வேன்!” என்று அவர் தைரியமாகக் கூறியிருந்தார். தன் கட்சி குறைந்தபட்சம் ஒரு இருக்கையாவது கைப்பற்றும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கிருந்தது. ஆனால் அரசியல் கணக்கு எல்லாக் காலமும் எதிர்பார்த்தபடி இருக்காது. தேர்தல் முடிவுகள் வந்தபோது FDP கட்சி வெறும் 4.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பாரிய தோல்வியைச் சந்தித்தது. மாநில நாடாளுமன்றத்தில் அமர அவர்களுக்கு ஒரு இருக்கை கூடக் கிடைக்கவில்லை. பல அரசியல்வாதிகள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் பழைய வார்த்தைகளை மறந்து விடுவது வழக்கம். ஆனால் Nicole Buettner அப்படி செய்யவில்லை. ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) மாலை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. அதில் அவர் விருப்பமில்லாத புதிய “முடி அலங்காரத்தை” அதாவது முழுக்க மொட்டையடித்த தலையை காட்டிக்கொண்டே,“நான் ஒரு பந்தயம் கட்டினேன். அதில் தோற்றுவிட்டேன். அந்தத் தோல்விக்காக என் தலைமுடியை தருகிறேன்,” என்று சிரித்தபடி கூறினார். அதோடு அவர் மேலும் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார், “நான் என் வார்த்தையில் உறுதியாக இருப்பவள். நான் நினைப்பதைச் சொல்கிறேன். நான் சொல்வதைச் செய்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுகிறேன். இப்போது என் புதிய சிகை அலங்காரத்தோடு அதையே நிரூபிக்கிறேன்.” அரசியலில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் கரைந்துவிடுவது புதிய விசயம் அல்ல. ஆனால் சொல்லியதைச் செய்து காட்டும் அரசியல்வாதிகள் அரிது. தமிழ்நாட்டிலும் மாநிலத் தேர்தல் வருகிறது. அதில் போட்டியிடும் ஒரு தலைவருக்காவது இப்படிப்பட்ட சவால் விடும் ‘தில்’ இருக்கிறதா?
  2. வீதியோரம் . மலர் . .......... 8. ஓரிரு வாரங்களாகி விட்ட நிலையில் வழமைபோல் கடை வியாபாரம் மிக நன்றாக நடக்கின்றது. இப்போது கடையில் இறால் வடை, மாலுபணிஸ், கட்டைசம்பல்,ரோஸ்பாண், அப்பங்கள் போன்ற சில சிற்றூண்டிகள் புதிதாக கண்னாடிப் பெட்டிக்குள் தென்படுகின்றன. அவையெல்லாம் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா வரும் யாத்திரீகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அது ஒரு மாலை நேரம் றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் ஒன்றில் நடுத்தர வயதிருக்கும் இருவர் வந்திறங்குகின்றனர்.அவர்கள் அன்றுதான் அந்தக் கடைக்கு முதன்முதலாக வருபவர்கள் போல் இருக்கிறது. அவர்களைக் கண்டதும் மது, போதைவஸ்து விற்பவனும் கூடவே அந்தத் தொழில் செய்யும் பெண்களும் அவர்களருகில் நடமாடுகின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவ் இருவரும் இவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் போகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவன் வந்து கடையில் இறைச்சிப் பொரியல், கணவாய் மற்றும் றால் பிரட்டல் போன்ற சைட்டிஸ் ஆயிட்டங்களாக வாங்கிக் கொண்டு போகிறான்.அவன் சென்ற சிறிது நேரத்தில் மற்றவன் வந்து தேவையான சாப்பாடு,சிகரெட், சுருட்டு என்று வாங்கிக் கொண்டு போகிறான். காட்டுக்குள் ஒரே பைலாப்பாடல்களும், குத்துப்பாடல்களுமாய் கொண்டாட்டம் நடக்கின்றது. இரவாக ஆக எங்கும் சத்தங்கள் அடங்கி விடுகின்றன. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்தப் பெண்களும், சாராயம் விற்பவனும் கடைக்கு வந்து வாங்கில் அமருகின்றனர். பெண்கள் இருவரும் மிகவும் தளர்ந்து போய் இருந்ததால் மேசையில் முகம் குப்புறப் படுத்து இருக்கின்றனர். அவர்களது ஜாக்கட்டுக்குள் பெருமளவு பணநோட்டுகள் செருகப் பட்டிருக்கின்றன. அவர்களில் ஒருத்தி சே….என்ன மனுசங்களடி அவங்கள்,பிசாசுகள் என்று சொல்ல மற்றவள் விடடி ஒரு மாதம் உழைக்கிற பணத்தை ஒரு நாளில் உருவியாச்சுது இப்ப இருக்கிற நிலைமையில அவங்கள் இரண்டு நாளைக்கு எழும்ப மாட்டாங்கள் போல் இருக்கின்றது, நிறைவெறில இருக்கினம் என்று சொல்கிறாள். அவள் மணிமேகலையைப் பார்த்து அக்கா தலை இடிக்குது இஞ்சி துருவிப் போட்டு நல்ல திக்காக டீ போட்டுத் தாக்கா என்று சொல்கிறாள். மற்றவர்களும் தங்களுக்கும் சேர்த்து சொல்கின்றார்கள். மணிமேகலையும் இரண்டு தேசிக்காயைப் பிழிந்து ஜுஸ் போட்டு பெரிய கிளாசில் ஊற்றி அதை பெண்களிடம் குடுத்து இதை இப்ப குடியுங்கோ என்று சொல்லிவிட்டு அவனுக்கு ஸ்ட்ராங்கா இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து பக்குவமாய் தருகிறாள். அவனும் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறான். அவன் சாராயம், போதைவஸ்து விற்பவனானாலும் அவற்றை விற்பதுடன் சரி. ஆனால் அவன் குடிப்பதுமில்லை “தம்” அடிப்பதுமில்லை. அவன் உடுத்தும் கந்தையில் அழுக்கு இருக்கும், அவன் சிந்தையில் துளியும் அழுக்கு இல்லை. ஏதோ அவன் பிழைப்பு இப்படியாகி விட்டது. என்பது மணிமேகலைக்குத் தெரிந்திருந்தது. அங்கே ஒரு மினிபஸ் வந்து கடைக்கு முன்னால் நிக்கிறது.அதில் இருந்து இறங்கியவர்கள் கடைக்குள் போகிறார்கள். சிலர் நேராக பின்னால் போகிறார்கள். அப்படிப் பின்னால் போனவர்கள் சில வினாடிகளில் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். என்னவென்று பார்க்க விநோதனும் வேறு சிலரும் டார்ச் லைட்டுடன் போகிறார்கள். சுஜிதாவும் ஒரு பெட்றோல்மாக்சை எடுத்துக் கொண்டு பின்னால் போகிறாள். போனவர்கள் எல்லோரும் அங்கே அந்தக் கோரமான காட்சியைப் பார்க்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருத்தனை குளத்தருகே முதலைகள் கடித்து இழுக்கின்றன. அவனோ ஈனஸ்வரத்தில் முனகுகிறான். நிறைவெறியில் இருந்தவனால் கத்தக்கூட முடியவில்லை. அந்நேரம் அவன் வெற்றுடலுடன் ஜட்டியோடு இருந்ததினால் முதலைகளும் அவனது முகம், தொடை, கை கால் என்று பிய்த்து புடுங்குகின்றன. வெளிச்சத்தையும் ஆட்களின் வருகையையும் சத்தத்தையும் தொடர்ந்து அவை வேகமாக குளத்தினுள் குதித்து மூழ்கிப் போய்விடுகின்றன. அவனது கை ஒன்று முழுதாக இல்லை, கால் எலும்புகளுடன் முறிந்திருக்கிறது,முகமெல்லாம் சிதைந்து கண் ஒன்றும் கிழிந்து போய் இருக்கு, ஆனாலும் உடலில் உயிர் இன்னமும் இருக்கு.இன்னும் கொஞ்சம் தாமதித்து இருந்தால் அவனது உடல் முழுதாக குளத்தினுள் இழுத்து செல்லப் பட்டிருக்கும். பின்பு அங்கே போலீசும் அம்புலன்சும் வந்து அவனையும் சிதறிக் கிடந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு போக , போலீசார் மட்டும் அங்கிருந்து சில விசாரணைகளை செய்துவிட்டு இனிமேல் இங்கு இதுபோன்ற குடி, விபசாரம் மற்றும் தப்பான காரியங்கள் எதுவும் நடக்கக் கூடாது. ஏற்கனவே இங்கு தப்பான காரியங்கள் நடைபெறுவதாக புகார்கள் எங்களுக்கு கிடைத்திருக்கு, கவனம் என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். மற்றவன் இன்னும் வெறி முறியாமல் நினைவின்றி லொறிக்குள் கிடக்கிறான். வெளியே அவர்கள் ஓட்டிவந்த றோயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் அனாதரவாய் நிக்குது...... அடுத்தநாள் அதிகாலை அந்த இடத்தை விநோதனும் மணிமேகலையும் போய் பார்க்கிறார்கள். அப்போது அங்கு நின்ற சில முயல்களும் பறவைகளும் பாய்ந்து ஓடுகின்றன. அங்கு போத்தல்கள் தட்டுகள் மிச்சமான உணவுகள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. இரவு சில விலங்குகள்,பறவைகள் எல்லாம் வந்து சாப்பிட்ட அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுகுது. விநோதனும் அவைகளைக் கைகளால் தொடாமல் ஒரு தடியால் தள்ளித் தள்ளி ஒதுக்கிக் கொண்டு வருகிறான். மணிமேகலையும் ஆங்காங்கே தென்பட்ட ரூபாய் நோட்டுகள் சில்லறை காசுகள் என்று எடுத்துக் கொண்டு வரும்போது பெல்ட்டுடன் தோலுறை ஒன்றைக் கண்டு அதை எடுத்துப் பார்க்க அதனுள் ஒரு கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறது. கூடவே சில தோட்டாக்களும் ஒரு குழாயும் இருக்கின்றன. அதை அவள் அவனிடம் தருகிறாள். அதை வாங்கிய விநோதன்....ம் . ...இது ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு என்று சொல்லி மிக லாவகமாய் அதைப் பிரித்து தோட்டாக்களை அதில் போட்டு அந்தக் குழாயை அதன் முனையில் பொருத்தி விட்டு சுற்றுமுற்றும் பார்க்க தூரத்தில் பற்றைக்குள் இருந்து முயல் ஒன்று எட்டிப் பார்க்கிறது. அவன் அனாசயமாய் அந்தக் கைத்துப்பாக்கியால் அதை நோக்கி சுடுகிறான்…..சிறு சத்தமும் வெளியே வரவில்லை ஆனால் அந்த முயல் மட்டும் வெளியே துள்ளி விழுகின்றது. மேகலை ஓடிப்போய் அதை பார்க்க சரியாக அதன் நெற்றியில் பொட்டு வைத்ததுபோல் சூடு பட்டிருந்தது.அதன் கண்கள் திறந்தபடி இருக்க விநோதன் அருகில் வந்து அந்தக் கண்களை கைகளால் மூடி விடுகிறான். அவனது செய்கைகளை வியப்பு விலகாமல் அவள் பார்க்கிறாள். அவன் எழுந்து ஒன்றும் பேசாமல் ரிவால்வருடன் வீடு நோக்கிப் போகிறான். மேகலையும் அந்த முயலைத் தூக்கிக் கொண்டு பின்னால் போகிறாள்...........! மலர் ........ 🪻 8.
  3. வீதியோரம். மலர் . ........ 5. அப்போது ஒரு ஜீப் வண்டி வேகமாய் வந்து பிரேக் அடித்து நிக்கிறது. அதை கண்டு இவர்கள் அவளை விட்டுட்டு வெளியே ஓடி வருகிறார்கள். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இவன் தன் காலடியில் கிடந்த தண்ணிபோத்தலை கால்களால் அவளருகில் தள்ளிவிட அவளும் அதை எடுத்து மட மடவென்று குடிக்கிறாள். ஜீப்பில் இருந்து இறங்கியவன் இவர்களிடம் சத்தம் போட்டு எதோ சொல்லி தூசணங்களால் பேசுகிறான். உடனே இவர்கள் அறைக்குள் வேகமாய் ஓடிவந்து இவனது கட்டுகளையும் அறுத்து விட்டு இவனோடு அவளையும் தூக்கிவந்து ஜீப்புக்குள் எறிந்து விட்டு அவர்களும் ஏறிக்கொள்ள ஜீப்பும் வீதியில் ஏறி வேகமாய் செல்கிறது. அப்பொழுதுதான் அவனும் அவளும் ஜீப்பினுள் பார்த்த பொழுது அதற்குள் ஏற்கனவே இரு சிறுவர்கள் குற்றுயிராய் அங்கே கிடக்கிறார்கள். மேகலை : என்னடா அப்படிப் பார்க்கிறாய், அவளது கேள்வியில் அவன் சுயநினைவுக்கு வருகிறான். — ஒன்றுமில்லை மேகலை. — இல்லை இன்று உன் பார்வை ஒரு மாதிரியாய் எனக்குத் தெரிகிறது. ஆனால் அதில் தப்பாக ஏதும் இல்லை என்றும் புரிகிறது. என்ன சொல்லு. — ஏன் மேகலை நீ உன் குடும்பத்தை எங்கு என்று தேடிப்பார்த்து சேர்ந்து கொள்ளக் கூடாது. — இதுவா இவ்வளவு நேரமாய் யோசிச்சனி. அன்று என்னை அந்த நிலைமையில் நீ பாத்தனிதானே. அதற்கு முன் எத்தனை மிருகங்கள். ம் …. குடும்பமாய் வாழ்ந்த அந்த வாழ்க்கை இனி எங்கையடா கிடைக்கப் போகுது. இனி அங்கு போவதற்கும் நான் தயாரில்லை. அதெல்லாம் கனவாகிப் போய் நெடுங்காலமாச்சுது. இனி இப்படியே மிச்ச காலத்தைப் போக்க வேண்டியதுதான். — உன்னைப் போன்ற நிலைமையில்தான் நானும் அவங்களிடம் பிடிபட்டு இருந்தேன் மேகலை. என்னையும் எத்தனை மிருகங்கள் அசிங்கப்படுத்தினதுகள் என்று கணக்கே இல்லை. அது கிடக்கட்டும் விடு….. இனிமேலும் நாங்கள் இப்படியே இருந்திடுவோமா….. — நீ இப்ப என்ன சொல்ல வருகிறாய்…… — ம்…. வந்து …. தயங்குகிறான் — எதுவென்றாலும் பயப்படாமல் சொல்லு….நானும் எதிர்காலம் பற்றி நிறைய யோசிக்கிறதுண்டு. இந்தப் பிள்ளைகளும் இப்ப வளர்ந்து விட்டார்கள்…… — ஏன் மேகலை நாங்கள் சேர்ந்து வாழக் கூடாது. இனி நாங்கள் யாருக்காக எங்களுடைய மிச்ச வாழ்க்கையை வீணாக்க வேண்டும்…….. பின்னடிக் காலத்தில் ஒரு பேச்சுத்துணைக்காகவாவது உரிமையுள்ள ஒரு துணை வேண்டாமா…… — ம்….. எதோ ஒரு காரணத்தோடுதான் நாங்கள் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் விநோ….இல்லையென்றால் அன்றே அவங்கள் எங்கள் நாலுபேரையும் சுட்டு காட்டுக்குள் வீசிவிட்டுப் போயிருக்கலாம். அல்லது நாங்கள் கூட தற்கொலை செய்திருக்கலாம். இல்லையே இப்ப நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதுதானே நிஜம். பொதுவாய் பார்த்தால் இனி நாங்கள் குடும்பத்துடன் போய் சேர்ந்து வாழப் போவதில்லை. இந்தப் பிள்ளைகளுக்காவது நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். — மேகலை, நீ சொல்வதையும் நான் யோசிப்பதுண்டு. — அதுமட்டுமில்லை விநோ இப்பவே இங்கிருக்கும் தொழில் செய்யும் பெண்களும் சரி வேறு சிலரும் சரி எங்களைப் பற்றி தப்பாகத்தான் நினைக்கிறார்கள்…..முகத்துக்கு முன் சிரிப்பதும் அங்காலை போய் கேலி செய்வதையும் நான் கவனித்துக் கொண்டுதான் வாறன். “உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடேலாது தானே” — விநோ கோபத்துடன் யார் யாரெல்லாம் அப்படி தப்பு தப்பாய் பேசுவது…..சொல்லு இப்பவே போய் அவர்களை இங்கிருந்து விரட்டி விட்டு வருகிறேன். என்று வேகமாக எழும்புகின்றான் . அப்படி எழுந்தவனை கொஞ்சம் பொறு விநோ அவசரப்படாதை என்று அவள் இழுக்க அவனும் எதிர்பாராமல் அப்படியே அவள்மீது சரிகிறான். “எதிர்பாராது வந்த துணையே வந்து என்னை அணையே” என்று அவள் உடலும் அவனை அலுங்காமல் ஏற்றுக் கொள்கிறது “ஆலங்கட்டி மழை அல்லிப்பூவில் விழும்போது அதன் மகரந்தம் சிலிர்த்து சிதறுகின்றது போல்” அந்த அணைப்பினில் அன்பும் பரிவும் மேலோங்க இதுவரை அவர்கள் மனதினில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி இனி ஒரு புது வாழ்வு துவங்க இன்பம் மலர்கின்றது. அன்று கயவர்களால் ஏற்பட்ட காயங்களும் தழும்புகளும் கூட இன்று இந்த இஷ்டப்பட்ட இவன் தொடும் ஸ்பரிசத்தில் வீணையின் தந்திகளாகி நாடிநரம்புகளுக்குள் ஊடுருவி ஹிந்தோளராகத்தில் “ஆனந்த தேன் காற்றாய்” தாலாட்டுகின்றது. நவதுவாரங்களையும் விரல்கள் மீட்டி வருகையில் முகத்தில் நவரசங்களும் கொப்பளிக்கின்றன. சந்தத்தின் மீது தவழ்ந்து செல்லும் சங்கீதம் போல் சந்தமாய் அவன் இருக்க சங்கீதமாய் தாவித் தழுவிக்கொள்கிறாள் . “முழுதாய் ஒரு நுங்கு எடுத்து மூழ் விலக்கி முன்னால் அரிந்து முக்கண்ணை மோந்து ஒரு விரலால் அழுத்தி அடுத்தொரு விரலால் அள்ளியெடுத்து அருந்தியபடி மூச்சுவாங்க ……..”இருவரும் பரவச நிலையினின்றும் மீள்கின்றனர். அவர்களின் கைகள் அனிச்சையாக ஆங்காங்கே கிடக்கும் ஆடைகளை துழாவி எடுத்து அணிந்து கொள்கின்றன. சற்று நேரம் அமைதி ……… அவள் இனம் புரியாத மகிழ்ச்சியில் அவனிடம் சொல்கிறாள் , வாழ்நாள் எல்லாம் விரக்தியிலேயே போய்விடும் என்றுதான் எண்ணியிருந்தேன் இதுவரை, இந்நாள் முதல் உன்னால்தான் இனியெல்லாம் திருநாளாய் ஆகும் என்னும் நம்பிக்கையைத் தருகின்றது . ....... அப்புறம் அவன் சொல்கிறான் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவாவது நாம் திருமணம் செய்தாக வேண்டும் மேகலை. — ஓம் …… ஆனால் எனக்கு இன்னொரு தாலி கட்டுவதில் இஷ்டமில்லை விநோ . — சரி, அப்படியென்றால் இங்கொரு பாதிரியார் வருவாரே அவர் முன்னிலையில் மோதிரம் மாற்றலாமா ….. — மணிமேகலை கொஞ்சம் யோசித்து விட்டு சொல்கிறாள்….தற்போது எங்களுக்கு மறுவாழ்வும் வாழ்க்கைக்கு வழி காட்டியதும் இந்த சாதுக்கள்தான் அதனால் அவர்களின் முன்னிலையில் இங்கிருக்கும் நண்பர்களுடன் மாலை மாற்றினால் போதும். ஆடம்பரம் எல்லாம் அவசியமில்லை. அவனுக்கும் அதுவே சரியென்று படுகின்றது. அவளிடம் அப்படியே செய்யலாம் , நீயும் நேரமிருக்கும்போது தலைமை பிக்குவானவரிடம் கேட்டுப்பார் என்கிறான். ம்…..என்று மெதுவாக எழுந்தவள் மென்மையாய் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கடைக்குப் பின்னால் இருந்த வீட்டுக்குப் போகிறாள். நிலவின் ஒளியில் தேவதைபோல் நடந்து செல்லும் அவளழகை இவள் என்னவள் என்னும் நினைப்பில் எதுவித லஜ்ஜையுமின்றி ரசிக்கிறான்……..! மலர் . ........... 🌺 5.
  4. மலர் . ........... 4. இப்பொழுதெல்லாம் இந்தப் பிரச்சினைகளால் விநோத்துக்கும் மணிமேகலைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்தபடி இருக்கு. இதெல்லாம் மணிமேகலைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை……அதனால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள் …….ஒருநாள் ஒரு ஓய்வான நேரத்தில் விநோத்திடம் விநோ நீ ஒன்றைக் கவனித்தாயா …..! என்ன சொல்லுங்கோ…..! — இப்பொழுதெல்லாம் சாதுக்கள் இவ்வழியே போனாலும் இங்கு பிக்ஷை ஏற்க வருவதில்லை தெரியுமா…..! — ஓமக்கா நானும் அதைக் கவனித்திருக்கிறேன்….. ஆனால் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…….! — எனக்கும் விளங்குது விநோ ….. நீயும் நானும் வீணாக சண்டை பிடிப்பதில் அர்த்தமில்லை. “ குதித்தோடிவரும் ஆமைக்குஞ்சுகளை தாய்போல் தாவியோடி வந்து தன் அலைக்கரங்களால் அரவணைத்து அழைத்து செல்லும் கடல்போல்” நாங்கள் நினைத்ததை விட எம்மையும் மீறி இந்த “வீதியோரக்கடை” மக்களிடையே பிரபலமாகி விட்டது . அது தானாகவே பலதரப்பட்ட மனிதர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கு அதுதான்……. என்றாலும் விநோ, நாங்கள் இங்கு நடக்கும் தப்பான காரியங்களைத் தடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.புரியுதா…… — ஓம் மேகலை, இனிமேல் நானும் முயற்சி செய்கிறேன் …… நீங்களும் கணக்க யோசிக்காதையுங்கோ…….! அன்று மதியம் வரை கடையில் நல்ல வியாபாரம் நடந்து முடிந்து விநோதன் ,மணிமேகலை, சுஜிதா, யுகேந்திரன் மற்றும் அங்கு தொழில் செய்யும் விலைமாதர் இருவரும் ஓய்வாக வாங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். மணிமேகலை எழுந்துபோய் எல்லோருக்கும் தேநீரும் வடையும் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு அந்த இரு பெண்களையும் பார்த்து நீங்களும் எடுத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தனது தேநீரை எடுத்துக் கொண்டு சென்று வானொலியின் சத்தத்தை கொஞ்சம் அதிகரித்து விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்கிறாள். வெளியே ஓரிரு லொறிகள், பேரூந்துகள் நிக்கின்றன. வானொலியில் எஸ்.பி.பி “என்காதலே என்காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று உருகி உருகிப் பாடுகின்றார். எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று மேகலை சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். இது இளையராஜா என்று நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, இல்லையக்கா என்று அந்த இரு பெண்களில் ஒருத்தி சொல்லி விட்டு இது ஏ .ஆர். ஆர் என்று சொல்கிறாள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வைரமுத்து அப்படி எழுதியிருப்பார். “காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீள்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா, விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா” இந்த வரிகளின் செறிவினில் யுகேந்திரனையும் சுஜிதாவையும் தவிர ஏனையோரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அங்கு ஒரு கனத்த மௌனம்……யாரு யாரையும் ஆற்றுப்படுத்தவில்லை. அவரவர்களுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள், வலிகள். பின் சற்று தெளிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிற்றூண்டியுடன் சினேகமாக உரையாடுகின்றார்கள். இவர்கள் நால்வரின் கடந்த காலங்களும் நால்வருக்கும் ஓரளவேனும் தெரிந்தே இருக்கின்றது. பின்னேர சமையலுக்கு மேகலை ஆயத்தம் செய்ய, யுகேந்திரனும் சுஜிதாவும் விறகு சேகரிக்க காட்டுக்குள் செல்கின்றனர். எல்லோரும் கலைந்து போக மேகலையும் எதோ யோசனையில் நாடியில் கை வைத்தபடி இருக்கிறாள்.விநோதன் தான் இருந்த வாங்கில் அப்படியே கால் நீட்டிப் படுத்திருக்கிறான். அவன் ஒரு காலுடன் மற்றகாலை உரசுவதைப் பார்த்த மேகலை என்னடா கால் வலிக்குதா ….. — ஓம் மேகலை, மலை ஏற்றத்தில் சைக்கிளை உழக்கிக் கொண்டு போனது. அதுதான். — சொன்னால் நீ கேட்பதில்லை. ஸ்கூட்டரை அல்லது வானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் தானே. — ஸ்கூட்டரை சுஜியும் வானை யுகேந்திரனும் கொண்டு போய் விட்டார்கள் மேகலை. — ஓ …. அதுக்காகவா அப்போது யுகேந்திரனை நீ கண்டிச்சனி. — ஓம் மேகலை, அவன் வானை கொண்டு போனதுக்காக அல்ல. அவனிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எடுத்திடலாம். அதற்கிடையில் விபத்து நடந்தாலோ அல்லது போலீசில் பிடிபட்டாலோ பிரச்சினைதானே. அதுதான் கொஞ்சம் பொறுமையாய் இருடா என்று சொன்னனான். — சரி சரி விடு அவன் சின்னப்பொடியன்தானே ….. — மேகலை நீங்கள் அவனுக்கு நிறைய செல்லம் குடுக்கிறீங்கள் …..! — உனக்கென்ன தெரியும், இந்நேரம் இவன் வயதில எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு எண்டு . (அவள் தனக்குள் நினைப்பதை வெளியில் சொல்லவில்லை). சரி இரு வாறன் என்று சொல்லி எழுந்து சென்று ஒரு சிறிய “நோ எண்ணெய்” போத்தலுடன் வந்து அவனது இரு கால்களிலும் தொடையில் இருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்து விட்டு விரல்களையும் ஒவ்வொன்றாய் இழுத்து இழுத்து நெட்டி முறித்து விடுகிறாள். அது அவனுக்கு சுகமாக இதமாக இருக்கின்றது. அவன் பரிவுடன் அவளைப் பார்க்க நினைவுகள் சில வருடங்கள் பின்னே போகின்றது.......! அன்று அவனை இரண்டுபேர் அவன் கை கால்களைக் கட்டி வைத்து அடித்து அந்த ஹாலில் போட்டு விட்டுப் போகிறார்கள். அங்கு சுவரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சமையல் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கு. ஒருவர் விதம் விதமாய் உணவுகள் செய்து குடுக்க சிலர் ஒரு வட்ட மேசையை சுற்றி இருந்து சுவை பார்த்து உண்கின்றனர். சற்று நேரத்தில் இவர்களுடன் இன்னும் இருவர் ஒரு பெண்ணை தர தரவென்று தரையோடு இழுத்து கொண்டு வருகிறார்கள்.அவள் ஆடைகள் அலங்கோலமாய் இருக்க அவள் ஈனஸ்வரத்தில் என்னை விடுங்கோடா என்னால் முடியல்லையடா என்று அரற்றுவது இவனுக்கு கேட்கிறது.அவர்கள் இவன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்கிறார்கள். அவளும் இடைக்கிடை கைகால் கட்டுடன் தரையில் இரத்தம் ஒழுகக் கிடக்கும் இவனையும் பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவன் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்பாமல் மேலே டீ .வீ யைப் பார்க்க அதில் அவர்கள் கோப்பை நீருக்குள் கிடக்கும் சிகப்பு வைனில் வெந்த சிப்பியை எடுத்து முள்ளுக்கரண்டியால் பிளந்து சதையை குத்தி சாப்பிடுகிறார்கள்..........! மலர் .........🪷 4.
  5. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  6. கவிஞர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள்! எரிச்சல், பொறாமை மிகுந்த, சிறிய மனிதர்கள் நிறைந்தது இலக்கிய உலகம். தனக்கு பரிசு பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதை விட மற்றவனுக்கு கிடைக்கக்கூடாது என இங்கு நினைப்பவர்கள் பலர்.
  7. விருது என்ன பவுடர் டப்பாவா? ஷாம்பூவா😂
  8. https://web.facebook.com/photo/?fbid=26386733690956285&set=pcb.26386735687622752 காலில் மண்படாமல் சமயகிரியை செய்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.
  9. கட்சிகள், வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் என்ன? வாக்காளர் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (2021-ஆண்டு கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதுபற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதாக நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பதை இங்கே பட்டியலிடுகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம். பொது நடத்தை விதிகள் 1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்னைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது. 2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது. 3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும். 4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது. 5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும். 6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. 7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும். 8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. 9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும். 10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது. பட மூலாதாரம்,Getty Images பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறைக்கு உதவும். 2. பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். 3. அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். 4. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 5. பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும். பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் 1. பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. 2. போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 3. பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். 4. பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். 5. மிக நீளமான பாதையில் பேரணி செல்லுமானால் பேரணி செல்லும் பாதை, பகுக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 6. காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல் இயன்றளவு பேரணி சாலையின் வலது பக்கமாகவே இருக்க வேண்டும். 7. ஒரே பாதையில் அல்லது ஒரே சாலையின் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பேரணி நடத்த திட்டமிட்டால், பேரணி செல்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அதை ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும். 8. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பேரணி செல்லும் இருவேறு தரப்பினர் இடையே சுமூகமான முடிவு எடுப்பதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் இயன்ற அளவில் விரைவாக நாடலாம். 9. விரும்பத்தகாத சக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள பொருட்களை பேரணியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேரணியிபோது கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். 10. பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களை உருவகிக்கும் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr45y1qz3xzo
  10. இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை (காளியம்மாள் -சீமான் ஓப்பீடு). பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது இந்த சமூகத்தின் கண்ணாடி. அங்கே ஊத்தை வருகிறது எண்டால் இங்கேயும் வரும். அதை நாம் விவாதிக்க வேண்டும். அசூசை என ஒதுக்கி தள்ளுவதால் எந்த பலனும் இல்லை என்பது என் நிலைப்பாடு. ஆனால் நிர்வாக முடிவுக்கு கட்டுப்பட்டேன். உங்களை போல் விதிமீறல் செய்து - ரீச்சர் கண்காணிப்பில் இருக்கும் அரிவரி பிள்ளைகள் நிலைக்கு நான் என்றும் இறங்கியதில்லை. பெண் குழந்தைகளை அரைகுறை ஆடையில் ரிக்கார்ட்டு டான்ஸ் ஆடவிடும் இன்ஸ்டாவில் எனக்கு ஒரு வேலையும் இல்லை. அதே போல் முகபுத்தகம் ஒரு பூமர் கூடாரம். தவிர இவை யாழை போல டீசண்டான தளங்கள் அல்ல. யாழில் சபை நாகரீகம் தெரிந்து என்னவும் எழுதலாம். சபை நாகரீகம் தெரியாதவர்களை கூட நிர்வாக மேற்பார்வையில் எழுத விடுவார்கள். ஆனால் புலிகளின் பாடலை, படத்தை போட்டாலே கணக்கை மூடும் முகபுத்தகமும், இன்ஸ்ண்டாவும். இப்படியான தளங்களில் மேற்கின் அடிவருடிகள் கும்மி அடிக்கலாம், என்னால் முடியாது. சிறுவயதில் இருந்து மத நம்பிக்கை அதிகம் இல்லை என்றாலும் நண்பர்கள் கூப்பிட்டா கோவில், சேர்ச், மசூதி எங்கும் போவேன். ஆனால் யார் கூப்பிட்டாலும் கள்ளுதவறணைக்கு போவதில்லை. எனவே உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். கீழே ஒரு சிச்சுவேஷன் காமெடி இணைத்துள்ளேன். பார்த்து மகிழவும்.
  11. மேற்குத் தனது ஆயுதங்களை ரஸ்யாவில் பரீட்சிக்கலாமென்றால் சீனா இஸ்ரேலில் பரீட்சகக்கூடாதென்று இல்லைத்தானே.(இஸ்ரேலிய நேசர்கள் கோவிக்கப்போகிறார்கள்) போர் முடிவில் எந்தத் தரப்பிற்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை நிகழ்நிலை நேரநகர்வு உணர்த்துகிறது. ஒருவேளை இறங்கவுள்ள ஈரூடகப்படையணி எண்ணைப்போக்குவரத்துப் பாதையைக் கைப்பற்றினாலும் பாதுகாக்க முடியுமா(?) என்பது வினாவாகவே நிற்பதை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். இரண்டுவாரத்தைக் கடந்தும் இரண்டு நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஒருநாட்டை அடிஅடியென்று அடித்தும் ஒருபயனையும் காணமுடியவில்லை. அமெரிக்கத்தலைமை ஆயுத உற்பத்தியாளர்களோடு உரையடியுள்ளதைப் பார்க்கும்போது போர் நீண்டு செல்லப்போகிறதா அல்லது ஆயுதப்பற்றாக்குறையேற்பட்டள்ளதா என்ற வினாவும் உள்ளது. முத்தரப்பும் மக்களை அழித்து உலக பொருண்மியத்தை சிதைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இதில் எந்தத் தலைமையும் வெளியே சென்று மக்களது அவலங்களைப் பார்போரல்லவே. ஐ.நாவும் 2008இலேயே தோல்வியுற்ற அமைப்பாகிவிட்டது. உலகம் இப்படியே மாறிமாறி அடிபட்டு அழிந்துபோகும்போலவே தோன்றகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்
  13. என்னை சந்தை விலை கூடினால், அமெரிக்க / மேற்கு பொருளாதாரம் படுத்து விடும். ஏனெனில். அமெரிக்கா பெற்றோ டாலர் கடனில் (சுருக்கமாக) இயங்குவது இந்த மாடல் இல்லை என்றால் அமெரிக்கா எப்போதோ இரானின் என்னை வளத்தை தாக்கி இருக்கும். ஹோர்மோஸ் நீரிணையில் இரானின் என்னை கப்பல்களை மட்டும் தாக்கி இருக்கும் அதாவது petro டாலர் என்பது - அமெரிக்காவின் கடனை நிதிவடிவத்துக்கு க்கொண்டு வருவது. இதுவே அமெரிக்கா பொருளாதாரத்தின் அடிப்படை. அது உலகப்பொருளாதாரத்தின் பெரும்பகுதி. pax americana இன் அடிப்படை. இதில் உள்ள சிறப்பு - அமெரிக்கா கடன் பெற்றோ டாலர் ஆல் நிதிவடிவம் ஆக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கு முதலீடாக வருவது. அதாவது அமெரிக்கா கடன் முதலீடாக வருகிறது. இந்த வட்டத்தை முறித்தால் அமெரிக்கா படுக்கும். (இதுவும் ஒரு காரணம் அமெரிக்கா பசுமை சக்தி, மற்றும் காலநிலை மற்றம் போன்றவற்றை புறக்கணிப்பது, எதிர்ப்பது) அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் அந்த பெரும் முதலீட்டை செய்வது அரபு நாடுகளே, அமெரிக்கா பங்கு மாற்றம் இதர சந்தைகளில் இப்போதைய (போர் , மற்றும் அமெரிக்கா கடன் நிலையில்) நிலையில் இன்னும் கூர்மையானதை இந்த பிரச்சனை . இது petro dollar உம் ஆக குறைந்தது பகுதியாக படுத்தால்,குறிப்பாக pax americana பகுதியாகவேனும் படுத்துவிடும் படுத்துவிடும். பின் அமெரிக்கா / மேற்கு முன்பு இருந்த நிலைக்கு வரமுடியாது. அமெரிக்கா (எவரின்) எண்ணை வளத்துக்கு அழிவை ஏற்படுத்தினால், இரானின் வலைக்குள் அதுவாக போய் விழுவது. இதில் இரானும் அரபு நாடுகளின் எண்ணெய் வளம், உற்பத்தி கட்டுமானங்களை தாக்கும் இங்கு ஈரான் தான் சொல்கிறது யுவானில் விலை குறிக்கப்படும் எண்ணெய்க்கு வழிவிடுவதை பற்றி, அனல் சீனா அதை சொல்லவில்லை. அதாவது அது இரானின் தெரிவு -அமெரிக்கா / மேட்ற்கு பொறுளாதாரத்தை முறிப்பதத்திற்கு, இரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா / மேட்ற்கு முறித்தது போல. இதூவும் முக்கிய ஈரான் அமெரிக்கா தளங்களை தாக்குவது - அந்த தளங்கள் பெற்றோ டாலர் அமைப்புக்கு, அரபி நாடுகளுக்கு பாதுகாப்பு - அதனால் அரபுக்கு நாடுகள் பெற்றோ டாலர் அமைப்பை ஏற்பது. அத்துடன் இந்த அரபு நாடுகளும் அமெரிக்கா இரான் தாக்குதலுக்கு பலலவழிகளில் உதவுகின்ன்றன இதை தான் முன்ப வேறு திரியில் சொல்லி இருந்தேன் - ஈரான் அரபு நாடுகளிடம் அறிவுறுத்தியது, இரான் மீது அமெரிக்க தாக்குதலுக்கு வழிகொலு;வத்துக்கு துணைபோவதை கைவிடல் என்பது. அமெரிக்கா எப்போது மற்றவரை பார்த்து நடந்தது? அனால், இபோதையா நிலையில், அமெரிக்கா / மேற்கு ஆப்பிழுத்த குரங்கு என்பதிலும் பாதக நிலை என்பதே பொதுவாக.
  14. தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. - விகடன் @கிருபன் - IPL மிகுதி 64 போட்டிகளும் விரைவில் அறிவிப்பார்கள். நீங்கள் போட்டியினை விரைவில் தயாரிக்கலாம்.
  15. அத தெரண கருத்துப்படங்கள்.
  16. ஈரான் மீதான போர் சொல்லும் செய்தி! --- --- --- *மத்திய கிழக்கு பொருளாதார முதலீடுகளை மேற்கு- ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றுவதே, அமெரிக்கத் திட்டம். *இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு நெருக்கடி *இந்திய வெளியுறவுக் கொள்கைக்குள் ஒளிந்திருக்கும் இலங்கை... *ஜீசிசி நாடுகளின் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் தாக்கப்பட்டால்??? --- --- -- ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (Gulf Cooperation Council - GCC) நாடுகள் பாரசீக வளைகுடாவின் எல்லையில் உள்ள ஆறு அரபு நாடுகளாகும். யுஏஇ (UAE) எனப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை இப்பேரவை உள்ளடக்கியது. எண்ணெய் எரிவாயு மற்றும் அரசியல் - பொருளாதார இயங்குநிலையின் மீதான இந்த நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக செயற்பட்டு வரும் இந்த அமைப்பு, 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஆறு அரபுநாடுகளின் பொருளாதார – அரசியல் இலக்கின் அடிப்படையில் தான், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார கட்டமைப்பும், புவிசார் நலன்களும் தங்கியுள்ளன. மிகச் சமீபத்திய காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் என்பது எண்ணெய் சார்ந்திருப்பதில் இருந்து விலகி, 2032 ஆம் ஆண்டுக்குள் $24.7 பில்லியன் என எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வளர்ச்சி (Diversification) நோக்கி வேகமாக நகர்கிறது. சவுதி அரேபியா மற்றும் யுஏஇ எனப்படும் டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகின்றன. கச்சா எண்ணெய் வருவாயை மாத்திரம் நம்பியிருக்காமல், சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மத்திய கிழக்கு நாடுகள் முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக, யுஏஇ நாடுகளை மையப்படுத்திய சவுதி அரேபியாவின் திட்டங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன. அதாவது, பொருளாதாரப் பன்முகப்படுத்தல் (Diversification) இந்த நாடுகளின் பிரதான நோக்கம். இந்த நோக்கத்தை அரசியல் - பொருளாதார செயல் முறைமைகளின் ஊடாக இந்த நாடுகள் செயற்படுத்தி வரும் நிலைதான் மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட தவறியுள்ளது. குறிப்பாக மேற்கு - ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகள் குறைவடைந்து வந்தன. இஸ்ரேல் உட்பட மேற்கு – ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெரும் முதலீட்டாளர்கள், டுபாய், கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அமீரகத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இப் புன்பிலத்தில், 2015 ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரம், வர்த்தகம், ஆகியவற்றில் ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவை வளர்ச்சி அடைந்துள்ளது. 2024 ஆண்டு ஜீசிசி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product – GDP) சுமார் $2.3 ரில்லியன் ஆக உயர்ந்தது. 2022 ஆம் ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததால் 7.3% வரையான வளர்ச்சியை. எட்டியது. 2023 - 2024 ஆம் வருட காலத்தில் உலக பொருளாதார சவால்களினால் அதன் வளர்ச்சி குறைந்தாலும், 2025 - 2026 காலத்தில் மீண்டும் 3–4.5 % வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதாக தபிஸ்னஸ்இயர் (thebusinessyear) என்ற ஆங்கில செய்தித் தளம் சுடடிக்காட்டியுள்ளது. குறிப்பாக கடந்த பத்து வருடங்களில் எண்ணெய் சாராத (Non-oil sectors) வர்த்தகம் சுற்றுலா, நிதி, தொழில்நுட்பம் ஆகிய பொருளாதார துறைகளிலும் பாரிய வேகமாக பாரிய முன்னேற்றத்தை அடைந்தது. அதேவேளை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன. இரண்டு உதாரணங்கள் பின்வருமாறு: 1) சவுதி அரேபியாவின் நியுஓம் எனப்படும் 'புதிய எதிர்காலம் (New Future - NEOM) எனப்படும் பெரிய திட்டம் 9 மில்லியன் மக்களுக்கான பெரிய நகர அபிவிருத்தித் திட்டமாகும். 2019 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. செங்கடலின் வடக்கு முனையில், எகிப்துக்கு கிழக்கே அகாபா வளைகுடா மற்றும் ஜோர்டானின் தெற்கு பகுதிகளை மையமாக் கொண்ட இத் திட்டத்தின் மொத்த பகுதி 26,500 கிமீ (10,200 சதுர மைல்) ஆகும். நீரில் மிதக்கும் தொழில்துறை வளாகம், உலக வர்த்தக மையம், சுற்றுலா விடுதிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களினால் இயக்கப்படும் நீளமான - குறுகிய நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் (linear City) உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை இது உள்ளடக்கியது. இது 2030 ஆண்டு நிறைவு பெற்று உலக மக்களின் பாவனைக்கு அனுமதிக்கப்பட இருந்தது. 2) டுபாயின் சகல துறைத் திறன் நகரத் திட்டங்கள் (Smart city) அதேநேரம் ஜீசிசி நாடுகள் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையம், சீனாவுடன் வர்த்தகம் $298 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. இது ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன், ஜீசிசி நாடுகளை இணைக்கும் முக்கிய பொருளாதார மையமாக மாற்றியுள்ளது. இப் பின்னணியில் தான், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்தது. இஸ்ரேலின் நோக்கம் எதுவாக இருந்தாலும், ஈரான் போரில் அமெரிக்க இலக்கு என்பது, ஜீசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் தொடர் வளர்ச்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் சாராத பொருளாதார வளர்ச்சியையும் அழிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டதை பகிரங்கமாக அறிய முடிகிறது. ஈரான் மீதான போரினால், ஜீசிசி பேரவையை மையமாகக் கொண்ட, மத்திய கிழக்கு நாடுகளில் குடிநீர் பயன்பாட்டுக்காக, கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் (Desalination Plants) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஜீசிசி நாடுகள் உலகளவில் 60% கடல் நீரை குடிநீராக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. குவைத், ஓமன், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இந்த நாடுகளுக்கு இதுவே முக்கிய குடிநீராகும். ஆகவே, இந்த ஆலைகள் அமெரிக்காவினால் தாக்கப்பட்டால், அது மனிதாபிமான - பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என அல்ஜசீரா (aljazeera) என்ற ஆங்கில ஊடகம் அச்சம் வெளியிட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பை விட இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் நிர்வகித்து வந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் எதிர்காலம் சிதைவடைந்துள்ளது என தகொன்வர்சேஷன் (theconversation) என்ற ஆங்கில ஊடகம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tension) சந்தைகளில் நிலையற்ற தன்மையை (Volatility) அதிகரித்துள்ளன. இதன் காரண - காரியமாக மேற்கு – ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தமது ஸ்திரத்தன்மையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்து ஜீசிசிக்கு ஒரு ஸ்திரமான வணிக மையமாக மாற்றும் பல்வகைப்படுத்தல் (Diversification) திட்டங்களும் தற்போது ஆபத்தில் உள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) அமெரிக்க ஊடகம் கூறுகிறது. ஜீசிசி நாடுகளின் எண்ணெய் சாராத துறைகளின் வளர்ச்சி (Growth Forecasts) குறைத்துள்ளது. ஏற்றுமதிக்கு முக்கியமாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) போர் ஆபத்தில் உள்ளதால், ஏற்றுமதி வருவாய்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எரிபொருட் சந்தையில் நிலையற்ற தன்மை தொடரும் என்றும், குறுகிய காலத்தில் எரிபொருள் விலைகள் $80-$90 வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் நீடிக்கும் கால அளவைப் பொறுத்து, இதன் தாக்கம் அமையும். ஸ்திரத்தன்மையை தக்கவைத்தல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுதல், மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வளங்களை உறுதி செய்தல் ஆகியவற்றில் பல சிக்கல்களையும் ஜீசிசி நாடுகள் எதிர்நோக்கும் அபாயம் உள்ளது. உலக வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் ஹார்மூஸ் நீரிணை ஊடாகவே மேற்கொள்ளப்படுவதால், எரிசக்தி மட்டுமல்லாது உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து உலகளாவிய பணவீக்கம் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. உலக எரிசக்தி வளங்களில் 31 சதவீதம் ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமே உள்ளன. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் 16 சதவீதத்தை சீனா பயன்படுத்துகிறது. எனவே, ஈரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கிடைக்கும் எரிசக்தி விநியோகத்தைத் தடுத்து, அதன் பொருளாதாரத்தை முடக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும்.அத்துடன் ஜீசிசி நாடுகளுக்கு செல்லும் முதலீட்டாளர்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகளுக்கு நகர வைப்பதும் பிரதான இலக்காகும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அறிக்கை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தில் வெனிசுலாவில் ஆரம்பித்து ஈரான் எனவும் இறுதியில் இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்றும் மறைமுக வார்த்தைகள் (Between Words) பொதிந்திருந்தன. இக் கட்டுரையாளர் சில விடயங்களை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம், இந்திய இராஜதந்திர நகர்வுகள் பற்றியும் இக்கட்டுரையாளர் எடுத்துக் காட்டியிருந்தார். இப் பின்புலத்தில், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அறிக்கையின் பிரகாரம், இந்தோ - பசுபிக் பிராந்தியம் தனது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை இந்தியாவுக்கு அறிவிக்கும் நோக்கிலேயே, அமெரிக்கா, ஈரான் கப்பலை தாக்கயிருக்கிறது என்பது பகிரங்கமாகிறது. அது சீனாவுக்கும் வலுவான ஒரு செய்தியைக் கொடுத்துள்ளது. ஆகவே, ரசியாவுடன் இந்தியாவுக்குள்ள இராதந்திர தொடர்பும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தயவுடன் இயங்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்குள்ள உள்ள பிரதான சங்கடமாகும். இப் பின்னணியில், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதனால் இரட்டைத் தன்மையான வெளியுறவுக் கொள்கைய இந்தியா இனிமேலும் தொடர முடியாத சூழல் உண்டு. ரசிய - இந்தியக் கூட்டு அல்லது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் என்ற கூட்டு. இந்த இரு கூட்டிலும் ஏதேனும் ஒரு கூட்டில் இந்தியா நிரந்தரமாக இணைய வேண்டிய கட்டாயத்தை ஈரான் போர் உருவாக்கியுள்ளது. இந்திரா காந்தி காலத்தில் இருந்து சர்வதேச அரங்கில் அணி சேராக் கொள்கை என்ற பெயரில், இந்தியா இரு வகையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்தது. ஈரான் - பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு எதிரான போரில் கூட, இந்தியா மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதேநேரம், ஜீசிசி நாடுகளின் பொருளாதாரம் தற்போது சரிவடைந்து வருவதால், இந்தோ - பசுபிக் பிராந்திய செயற்பாட்டில் சீனாவுக்கும் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சீனா - ரசியா - இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய ”பிறிக்ஸ்” பொருளாதார கூட்டுக்கும் சிக்கல் எழும் அபாயம் உள்ளது. இப் பின்புலத்தில், இந்தியாவின் சங்கடமான இராஜதந்திர நகர்வுக்குள் ஒளிந்து கொண்டு சீவியம் நடத்த வேண்டிய அவலம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0dJybxkVfwCbv5AKRcM3U4y2E1ULXJoSrCpzjZzdwJX7E2kZxfrii1Rg9c7yUMG93l&id=1457391262&mibextid=wwXIfr இதிலே நிக்ஸன் எழுதியதையே பல ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
  17. மனிசன் தனது நாட்டு சபைகளிடமே மூச்சுவிடலை.
  18. அது உங்களை நோக்கி எழுதப்பட்ட கருத்து அல்ல. இருப்பினும்....அங்கு வந்து வாங்கிக்கட்டி நொந்து இருப்பதை விட.... யாழ்களம் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.இங்கேயே இருங்கள். அங்கே வந்தால் அறுத்து விடுவார்கள். இன்ஸ்ரகிராமிலும் ஆதிக்கம் உண்டு. விரும்பினால் அங்கும் சாத்துப்படிகள். உண்டு.... யாழ்களம் எங்கும் எதிலும் பெரு மரியாதைக்குரிய களம். எவர் எங்கிருந்தாலும் அதற்கு களங்கம் விளைவிக்க மாட்டார்கள்.என்னைப்போன்றவர்கள் யாழ்களத்தை வேறு ஊடகங்களில் எள்ளளவும் விமர்சிக்க மாட்டார்கள். தர்க்கம் என்பது ஒருவர் ஒருவருக்கானது அல்ல. அது கொள்கை ரீதியானது. நீங்கள் பல இடங்களில் செய்த தர்க்கம் கொஞ்சம் விசித்திரமானது. அதி கேவலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையே யாழ்களத்தில் இணைத்து விவாதிக்க வேண்டும் என விரும்பியவராச்சே!?!?!?!?!?!? என்ன செய்வது... உங்களுக்கு பொழுது போக்கு பசி..... எங்களுக்கோ இன விடுதலை பசி.... அவ்வளவுதான் வித்தியாசம்.😎
  19. ஈரானிய அண்ணலுக்கு வணக்கம்! உங்கள் எதிர்ப்பு அரசியல் வரவேற்கத்தக்கதே. ஆனாலும் நேர காலம் அறிந்து செயலாற்ற வேண்டும். இன்றைய உலகம் அன்று போல் அல்ல. அதை உங்கள் மக்களும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும்.தனியே மதக்கட்டுப்பாடுகள் மக்கள் நலனாக இருக்க முடியாது. கட்டுப்பாடுகளாகவும் இருக்க முடியாது. உங்கள் நாடு. உங்கள் பிரச்சனை. இருந்தாலும்..... இவங்கள் ரொம்ப ரொம்ப மோசமானவனுகள்.மனித நேயம் இல்லாத யுத்தங்களை செய்தவனுகள். முதலாம் உலகப்போர்.இரண்டாம் உலகப்போர் எண்டு கனக்க சொல்லலாம்.தங்களுக்குள் தாங்களே அடித்து அழிந்து செத்தவனுகள்.ஹிரோசிமா நாஷசாக்கி அழிவுகளை பாருங்க அண்ணாச்சி.அப்போதைய ஜேர்மனி அழிவுகளை பாருங்க அண்ணாச்சி.நீதி நேர்மை நியாயம் பாக்கமாட்டானுவள் அண்ணாச்சி.சீனாவும் ரஷ்யாவும் ஒரு எல்லையோட நிப்பானுவள். மிஞ்சினால் பாயை விரிச்சிட்டு படுத்துடுவானுகள். வீர வசனத்த விடு அண்ணலே. ஈரான் மண்ணையே புல் பூண்டு முளைக்காத அளவுக்கு முடிச்சுவானுகள் அண்ணலே. Aral Sea வரலாறு தெரியுமா அண்ணலே. தெரியாட்டி போய் படி அண்ணலே. அண்ணலே! நான் ஜேர்மனியி இருக்கிறன். நான் இருக்கிற இடத்தில இருந்து ஒரு ஆயிரம் மீட்டர் தொலைவில ஒரு பெரிய குளம் இருக்கு. அதில இன்று கூட கைகால் அலம்பக்கூட அனுமதியில்ல. அந்த அளவுக்கு கெமிக்கல் குண்டுகளை கொண்டுவந்து கொட்டியிருக்கானுவள். விலகியிரு அண்ணலே. இல்லையேல் விளங்கமாட்டாய். வில்லங்கமானவனுகள்.விடானுகள்.
  20. யான் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்று எல்லோரையும் இந்தப் போருக்குள்ளே இழுத்து விடுவதே இந்த மனிசனின் நோக்கம். போர் தொடங்கும் போது இந்த நாடுகளிடம் விருப்பம் கேட்டு தொடங்கவில்லை .இப்போது வேணுமெண்டே எல்லாரையும் கொழுவுப்பட கொழுவுறான். கவனம். இந்த நாடுகளில் எங்கட சனங்கள் வாழுதுகள். ஏற்கனவே போர் வடுவைச் சுமந்து.
  21. opsdSreton5r3107m1af49à:m117566fa6L3e3 37m29tu5 7 8m07 21i1s · எத்தனை பேருங்க அடிச்சாங்க.... முதல்ல அபிஷேக் சர்மா அடிச்சாம்மா அப்புறம் சஞ்சு சாம்சன் அடிச்சாம்மா அப்புறம் இஷாந்த் கிஷன் அடிச்சாம்மா சரி இவனுங்களை அவுட்டாகிட்டால் போதும்டான்னு பாத்தால் ஷிவம் துபேன்னு ஒருத்தன் வந்தாம்மா அவன் பேட்டுல அடிச்சானா இல்லை ராக்கெட்ல அடிச்சானுன்னு தெரியலை அந்த அடி அடிக்கிறான் சரி அடிச்சிட்டு போங்கடான்னு விட்டுட்டு பேட்டிங் செஞ்சால் பும்ரான்னு ஒருத்தன் பந்து போட வந்தாம்மா அவன் பந்து போடுறானா இல்லை அணுகுண்டுகளை போடுறானான்னு தெர்லம்மா யாரையும் விட்டு வைக்கவே இல்லை அவன் பாட்டுக்கு போட்டுட்டே இருக்கான் அவுட்டாக்கிட்டு சாதாரணமா சிரிச்சிட்டு போயிட்டே இருக்கான்மா அப்புறம் அந்த சைலண்ட் வில்லன் அக்‌ஷர் பட்டேல்ன்னு ஒருத்தன் ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்து எங்க சோலிய முடிச்சிட்டான்மா அப்புறம் அந்த பீல்டிங் நின்னானே திலக் வர்மான்னு ஒருத்தன் அவன் க்ரௌண்ட்ல விழுந்து பந்தை புடிக்கிர மாதிரியே புடிக்கலைம்மா எங்க பந்து போனாலும் நீச்சல் குளத்தில் குதிக்கிர மாதிரி நீண்டு நீண்டு உழுந்து உழுந்து பந்தை புடிச்சிட்டே இருக்கான்மா அந்த இஷாந்த் கிஷன் பயபுள்ள அவன் எங்க நின்னாலும் அவன்கிட்டயே பந்து போகுதும்மா கோழிகுஞ்சை கழுகு தூக்குர மாதிரி கேட்ச் புடிச்சிட்டே இருக்கான்மா நாக்அவுட்ல 24 வருசமா அவன்களை தோக்கடிச்சதுக்கு தொடர்ச்சியா இரண்டு உலக கோப்பை பைனல்ல வச்சி செஞ்சு விட்டுட்டானுங்கம்மா.... Share from fb......!
  22. அந்தக்காலத்தில் இருந்து இன்றுவரை அருமையான அரசியல் அலசல் ...... இளந்தலைமுறையின் அரசியல் அறிவு சிறப்பாக இருக்கு .......! பகிர்வுக்கு நன்றி செந்தமிழாளன் 25........! 👍
  23. வீதியோரம். மலர் ............ 7. நால்வரும் பின்னால் இருந்த தமது வீட்டின் கூடத்தில் உட்க்கார்ந்து கதைத்துக் கொண்டு கடையில் இருந்து எடுத்து வந்த உணவைப் பகிர்ந்து உண்கிறார்கள். யுகேந்திரன் மட்டும் சாப்பிடாமல் உணவைப் பிசைந்து கொண்டிருக்கிறான். ஏன்டா தம்பி சாப்பிடேல்ல ……அந்தச் சம்பவம் உன் மனசைப் பாதித்து விட்டதா. ஓம் அம்மா அதுதான் அவன் கவலையாய் இருக்கிறான் என்று சுஜிதா சொல்கிறாள். மேகலை எழுந்து வந்து அவனைத் தன் மார்போடு சாய்த்துக் கொண்டு சரி சரி நீ கவலைப் படாதே, இங்கு நாங்கள் எல்லோருமே எமது குடும்பங்களில் இருந்து பிடுங்கப்பட்டுத்தான் இங்கு வந்திருக்கிறோம். இன்று இந்தக் கடைக்குள் ஒன்றாய் அடைந்திருக்கிறோம். இடையில் ஒவ்வொருவரும் சொல்லவொண்ணா வேதனைகளும்,துன்பங்களும் அடைந்திருக்கிறோம் என்று சொல்லி தேற்றுகின்றாள். அருகில் இருந்த விநோதனும் ஆதரவாய் அவன் முதுகை வருடிக் கொண்டிருக்க ……யுகேந்திரன் சொல்கிறான் — அதில்லை அம்மா, அந்தப்பிள்ளையை எந்த விலங்கும் தூக்கிச் செல்லவில்லை…. — என்னடா சொல்கிறாய் என்று விநோதன் கேட்கிறான்…. — ஓம் அப்பா …. அந்த ஆள் ஒரு கூடாதவன் அப்பா …… —- அவரை உனக்கு முன்பே தெரியுமா எப்படி ….. — ஓம் அப்பா ....அது அப்பா அன்டைக்கு எங்கள் வீட்டின் முற்றத்தில் நானும் அக்காவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பா பக்கத்தில் நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார். அம்மா அடுப்படிக்குள் சமைத்துக் கொண்டிருக்கிறா. அப்போது ஒழுங்கையில் கன ஆட்கள் வருகினம்.எங்கட நாய் விடாமல் குரைக்குது. திடீரென அஞ்சாறு பேர் படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாங்கள். அக்கா உடனே அம்மா கவனம் உவங்கள் வாறாங்கள் என்று கத்தியபடி என்னையும் இழுத்துக் கொண்டு பின் வளவால் ஓடுறா. வந்தவர்களில் இவனும் இருக்கிறான். இவன் தன்ர துவக்கை எடுத்து எங்கட நாயைச் சுடுகிறான். அது அனுங்கிக் கொண்டு அங்கேயே செத்துப் போகுது. நான் அக்காவின் கையைப் பறித்துக் கொண்டு ஓடிவர ஒருத்தன் ஓடிவந்து என்னைப் பிடிக்கிறான்.இரண்டு மூன்று பேர் வீட்டுக்குள் போகிறார்கள்.அம்மா குளறும் சத்தம் கேட்குது. பக்கத்தில் கக்கூசுக் கதவின் கீழால் அப்பாவின் கால்கள் தெரிய அதை ஒருத்தன் பார்த்து விட்டு அங்கிருந்தபடி கதவைப்பார்த்து நாலைந்து தரம் சுடுகிறான். “என்ர கடவுளே” என்று கத்தியபடி அப்பா வெளியே வந்து விழுகிறார். பின் வீட்டுக்கு வெளியே அம்மாவின் முனகல் சத்தமும் அலங்கோலமான கோலத்தில் அவாவை இழுத்துக் கொண்டு அவங்கள் சிரித்தபடி வெளியே வாறதையும் பார்க்கிறேன். நான் அம்மாவிடம் ஓட இவன் என்னை தூக்கி இடுக்கிப் பிடிக்கிறான். அம்மா கத்துறா “என்னை சுட்டு கொன்றுட்டுப் போங்கடா உங்களுக்குத் புண்ணியமாய் போகும், என்ர பிள்ளையை ஒண்டும் செய்யாதையுங்கோடா என்று. அப்போது ஒருத்தன் சொல்கிறான் பொடியினை இறக்கிவிடு என்று சொல்ல இவன் சொல்கிறான் எங்களுக்கு எடுபிடி வேலைசெய்ய பொடியனை எங்களுடன் கொண்டு போவம் என்று கொண்டு வந்திட்டாங்கள். அன்றில் இருந்து என்னை நித்திரை கூட கொள்ள விடுகிறதில்லை……சாக்கடை கழுவுவது என்று அருவருப்பான வேலைகள் எல்லாம் செய்ய சொல்லுவாங்கள். செய்யாவிடில் அடிப்பாங்கள், சிகரட்டால சுடுவாங்கள்.இப்ப கூட நான் சாப்பிடும்போது இந்த நினைவுகள் வந்தால் ஓங்காளிப்பும் சத்தியும் வரும் சாப்பிடாமல் எழுந்து போய் விடுவேன் என்று அழுதழுது சொல்கிறான். அதுதான் நான் இவன் காரில் இருந்து இறங்கினதைக் கண்டதும் ஒளித்திருந்தேன். உவை அவசரமாய் வெளியேறி கடைக்குப் போவதைப் பார்த்தேன்.பின் கார் அருகில் சென்று பார்த்தபோது உள்ளே குழந்தை கூடையில் நித்திரையாய் கிடந்தது. உடனே அவனுக்கு செய்யிறன் வேலை என்று அக் குழந்தையை மெதுவாகப் போர்வையோடும் பால்போச்சியோடும் சேர்த்து தூக்கிக் கொண்டுவந்து அங்கு நின்ற ஒரு பஸ்ஸின் பின் சீட் பக்கம் மூட்டைகளுடன் மறைவாக கிடத்தி விட்டு வந்திட்டன். பின் சனங்கள் வந்து ஏற பஸ்சும் வெளிக்கிட்டுப் போட்டுது. — உனக்கு அது எங்கே போற பஸ் என்று தெரியுமோ விநோதன் கேட்க….. — இல்லை அது எனக்குத் தெரியாது என்று யுகேந்திரன் சொல்கிறான்….. அப்போது மணிமேகலை குறுக்கிட்டு விநோதனைப் பார்த்து இப்ப நீ அதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறாய்…….அவன் செய்தது சரி……கண்முன்னே தகப்பனின் சாவையும், தாய் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பதையும் பார்த்திருக்கிறான்.தமக்கையையும் காணவில்லை. வளர்த்த நாயும் செத்துக் கிடக்கு. இந்நிலையில் இவன் மனம் பேதலிக்காமல் இருந்ததே அதிசயம். அதோட உந்தத் துலைவாங்களுடைய காம்பில சொல்லவொண்ணா துன்பங்களையும் சிறுவயதில் இருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். பிள்ளையால் ஒருவாய் சோறு நிம்மதியாய் சாப்பிட முடியவில்லை. சரி சரி இதை இப்படியே விடுவம் என்று சொல்லி யுகேந்திரனை தன்னுடன் சேர்த்து ஆறுதல் சொல்கிறாள்.இதன்பின் ஒருவராலும் சாப்பிட முடியவில்லை. அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவுகின்றது.........! மலர் . ......... 🦋 7.
  24. வீதியோரம். மலர் .......... 6. மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள். — என்னடி என்ன ஆச்சு . — என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள். சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. — என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க ….. — போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல ….. — என்ன சொல்கிறாய் நீ ….. — உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் ….. அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6. மலர் .......... 🌼 6.
  25. சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் .......! 😍
  26. முன்பு போல்... பொறுமையாக இருந்து, கோர்வையாக எழுதுவதற்கு நேரம் கிடைத்தாலும்... ஏனோ தெரியவில்லை, மனம் ஒன்றிப் போக மறுக்கின்றது. கூடிய விரைவில்.... இரண்டாம் பாகத்தை எழுத முயற்சிக்கின்றேன். அதுவரை பொறுமை காக்கவும் நண்பர்களே... ❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.