Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 04/13/22 in all areas
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. பல்லாயிரம் மைல் கடந்து பரதேசத்தில் கனடாவில் வாழும்நான் படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ பத்து ஆண்டு கடந்தும்…முசுப் பாத்திக்கு தன்னும் நோ கனடியன் பூட்.. பக்கத்திலை பத்துத் தமிழ்க் கடை… பலகாரம் முதல் பத்தியச் சாப்பாடுவரை பகலிராவாக் கிடைக்கும்… பகிடி என்ன தெரியுமோ.. வடை மூன்று ஒரு டொலர் அப்ப.. வடை இரண்டு ஒன்றரை டொலர் இப்ப…. இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்.. இடியப்பம் இருபத்தைந்து மூன்று டொலர் அப்ப இப்ப இந்தப்பெட்டி…ஆறு டொலர்.. இதுக்கும் அதையே சொல்லுகினம்… கொத்து ரொட்டியிலும் கொல்லுகினம் விலையை.. கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்… கொள்ளளவில் மாற்றமும் கொண்டுவந்துவிட்டு… கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு கெத்தாகச் சொல்லுகினம்… இலங்கையில் விலைவாசி ஏற்றம்… இங்கையும் கூட்டத்தானே வேணும் உண்ணாணை கேட்கின்றேன்.. இலங்கைக்கும் இவைக்கும் என்ன தொடர்பு.. சித்தாலேபவையும் சிறு குடிநீர் பைகளையும் இறக்கிவிட்டு இவையின்ரை கதைகளைக் கேட்டும் இப்பவும் இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்.. இருக்கின்ற இந்த வயிறு இலங்கைச் சாப்பாடுதான் வேணுமாம்…11 points
-
இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது. .................................. இவ்வாறே அவர்கள் அரசனின் மாளிகையை சுற்றி வளைத்தனர் அன்று தேவ சபையில் அரசன் பல்லாயிரம் ஆடுகளை கொன்று தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி விருந்து கொடுத்து இருந்தான். வண்ணாத்திப் பூச்சிகளின் இறைக்கைகளை வெட்டி படையல் போட்டு இருந்தான் அதை புசித்தவர்கள் இன்று அவன் மாளிகையை சுற்றி வளைத்தனர் தங்களின் நாவு வரண்டு எச்சில் வற்றி விட்டதாக கிளர்ந்து எழுந்தனர் தாளா பசியால் கதவுகளை நெட்டித் தள்ளுகின்றனர் அரசன் அவர்களை அறிவான் இன்னும் ஒருமுறை அவன் விருந்து கொடுத்து இந்தக் கணக்கையும் முடித்து வைக்கும் போது சுற்றி வளைத்தவர்கள் அரசனை ஆரத் தழுவுவர் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளை அவன் மீண்டும் முறிக்கும் போது அவனை அவர்கள் மீண்டும் அரசனாக்குவர் டொட்.4 points
-
நீங்கள் சொல்லிய அனைத்து கடைகளும் நடுசாமத்தில் போய் வேண்டினாலும் சுவை மாறாது ஆனால் நம்ம தமிழ்க்கடைகள் அப்படியா ? நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் வடை என்பதா? சுவையும் போங்கிவிட்டதா? மனமே அழுது விட்டதா அல்லது சிந்திவிட்டதா? சொல் மனமே.... ஒரு நாளைக்கு உப்பு ஒருநாளைக்கு உப்பே இல்லாமல் உறைப்பு அடுத்தநாள் உறைப்பே இல்லாமல் லண்டன் வெதர் போல் சுவை .4 points
-
பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி "அம்மா இந்த பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா" "அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ" தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம் பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார் "நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா தான் பெறும்" "அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே" " என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்" "அப்பா வளவுக்குள் இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்" "எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு" அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான். வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல பானை .ஆடுகள் உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை. இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர் கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் . "அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ" அவர்கள் சிரித்து கொண்டே "இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ" அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர். அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று. அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான். அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர். படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான். குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் . "அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே" "இவர் என்ட சொந்த தம்பி" "அண்ணே இந்த போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ" "இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவருக்கு அனுப்பிவிடுவோம் " "அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது" "அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை" "அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்" அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான் விடியகாலையில் ' "டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி" "இந்தா இருக்கு புதுசு" " எங்கயடா பழைய சட்டி" "அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்" கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு "டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?" இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள் "இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு".. "சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்" " நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா" "அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்" "இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்." "சரி சரி" "உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ" "அம்மா,பரணகோர்ட் அண்ணே பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு" "படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல் வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்" என கோபத்தில கத்திவிட்டு ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை. தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர் குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள். குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் . குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். வாடிவென்ட என்றார்கள் இவனும் பயந்து பயந்து அமர்ந்தான் "நம மொக்கத" "குகன்" "கொயத வடக்கருவே" "வெர்ஸ்ட் ஜொப்" "கம ஹொயத" "யாப்பானய" "அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)" பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள். இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி வீடு வந்தான். "என்னடா இன்டெர்வியூ எப்படி" "சரிவரவில்லையப்பா" "சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்" என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் . "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு" " எந்த கொம்பனி?பெயரை சொல்லு?" "GoMaBa" "அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள் அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்" "அடகோதாரி " "நான் சொன்னான் தானே அவன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்" அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன். கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் திடுக்கிட்டு எழுந்தான்3 points
-
சிறியர் இதையும் பாருங்கோ...என்னுடைய நிலைமையும் இதுதான் இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. பல்லாயிரம் மைல் கடந்து பரதேசத்தில் கனடாவில் வாழும்நான் படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ பத்து ஆண்டு கடந்தும்…முசுப் பாத்திக்கு தன்னும் நோ கனடியன் பூட்.. பக்கத்திலை பத்துத் தமிழ்க் கடை… பலகாரம் முதல் பத்தியச் சாப்பாடுவரை பகலிராவாக் கிடைக்கும்… பகிடி என்ன தெரியுமோ.. வடை மூன்று ஒரு டொலர் அப்ப.. வடை இரண்டு ஒன்றரை டொலர் இப்ப…. இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்.. இடியப்பம் இருபத்தைந்து மூன்று டொலர் அப்ப இப்ப இந்தப்பெட்டி…ஆறு டொலர்.. இதுக்கும் அதையே சொல்லுகினம்… கொத்து ரொட்டியிலும் கொல்லுகினம் விலையை.. கொடுவாமீன் சாப்பாட்டுக்கும் அதுதான்… கொள்ளளவில் மாற்றமும் கொண்டுவந்துவிட்டு… கொள்ளையை கூடவும் அடித்துவிட்டு கெத்தாகச் சொல்லுகினம்… இலங்கையில் விலைவாசி ஏற்றம்… இங்கையும் கூட்டத்தானே வேணும் உண்ணாணை கேட்கின்றேன்.. இலங்கைக்கும் இவைக்கும் என்ன தொடர்பு.. சித்தாலேபவையும் சிறு குடிநீர் பைகளையும் இறக்கிவிட்டு இவையின்ரை கதைகளைக் கேட்டும் இப்பவும் இந்தக் கடை வரிசையிதான் நிற்கின்றேன்.. இருக்கின்ற இந்த வயிறு இலங்கைச் சாப்பாடுதான் வேணுமாம்…3 points
-
2 points
-
தோழர்! அரிசி மட்டும் தானா? கருவாடு பருப்பு ஏதுமில்லையா?2 points
-
2 points
-
பனை மரத்து மேலே ஏறி பதனி இறக்க போறேன். குமாரசாமி அண்ணைக்கு சமர்ப்பணம்.😀2 points
-
கேடடால் சொல்லுவினம் இலங்கை சாப்பாட்டு சாமான்கள் வரத்து இல்லை என கரீபியனில் இருந்து இறக்கும் மீன்களைக் காட்டி சிலோன் விளை என்பார்.2 points
-
நிறையவே எழுதி வைத்திருக்கின்றேன்..தலைப்பு ஒன்றை கண்டதும் ..2 கிறுக்கல்களை 2 இடத்தில் போட்டேன்...இப்ப ஒன்று .. அடிவாங்கிறமாதிரி இருக்கு.. எல்லோருக்கும் நன்றி... சிறியர்..உங்கள் உதவிக்கு நன்றி சகாரா ...வாய்க்கட்டுபாடற்ற எனக்கு வாய்த்ததும்..நல்ல சமையல் காப்புக் கைதான் ..நன்றி உங்களுக்கு.. இந்த இடத்தி ல் 25 வருடமாய் இருக்கின்றேன்...சாப்பாடு வாங்காவிட்டாலும்...பார்த்த அனுபவகங்களையே பகிடியாய் கிறுக்கினேன்.. நிழலி...25 வருடமாய் இந்த இடம்....அப்ப இந்தக் கடைகள்..பிறந்து ..தவழ்ந்து நடந்தது வரை தெரியும்...இதை நான் கிறுக்கியது...பகிடிக்காக மட்டுமே...கடைகாரன் அதிலாபம் அடைந்தாலும் ,நான் நட்டமடைந்தாலும் போற இடம் ஒக்டன்தான்.. இரண்டு பேருக்குமே ஒரு இடம்தான் வித்தியாசமில்லை...இருக்கும்வரை சிரித்துவிட்டுப் போவோம்...மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்..2 points
-
தற்போதய இலங்கை நிலவரத்தில் தமிழர் செய்யவேண்டியது என்ன? திரு. சுதன் ராஜ்1 point
-
தமிழ் சிறி யோவ் சிறித்தம்பி இத பாருமையா....."சிறிலங்காவில் மூன்று விமானங்கள் இறங்கி" எண்ட நியூஸ் கன இடங்களிலை சிப்பிலியாட்டுது 😂1 point
-
தலைவர் அன்று கணக்கு போட்டது இன்று கை கூடுகின்றது போல் தெரிகின்றது. சிங்கள மக்கள் கூட தலைவரை தேட ஆரம்பித்து விட்டார்கள்.1 point
-
சிங்கங்களுக்கு பாணிலும், பருப்பிலும், கருவாட்டிலும் கை வைத்தால்தான் புத்தி வரும். தற்போது நகர்ப்புறத்தையண்டிய மத்தியதர வகுப்புத்தான் சண்டை போடுகின்றனர். Lower, lower middle class கத்துவதற்கு காலம் இருக்கிறது.1 point
-
1 point
-
இவரே தான்…. ஏராளன். நீங்களும் இவரின் ரசிகரா? இவரின் காணொளிகளை, நீண்ட நாட்கள் தேடிக்கொண்டிருந்தேன். கண்டுபிடித்து தந்தமைக்கு, நன்றி ஏராளன். 👍🏽 😁1 point
-
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்ளுக்கு…. பிக்குகளும் காரணம் என்பதை, அவர்கள் இன்னும், உணரவில்லையா.1 point
-
சபேஷ், நிறைய நிறைய இறைச்சி போட்டு, இலங்கை தக்காளி சோஸ் (MD) போட்டு ஒரு தமிழ் கடையில் விற்கின்றார்கல். 3 றோல்ஸ் 7.50. கொள்ளுப்பிட்டியில் உள்ள இல் upscale breakfast restaurant இல் சாப்பிட்ட மாதிரி இருக்கும். விற்பியில் தான் உள்ளது. பெயர்: Cuisine Xpress. அங்குள்ள எல்லா உணவும் நல்ல தரமானது. ஆனால் விலை...கடும் விலை. (ஒரு கொத்து $13 இல் இருந்து $15 வரை). நல்ல தரமாக, ஆனால் விலை அதிகமாக விற்கும் சில தமிழ் / இலங்கை உணவுக் கடைகள் அண்மையில் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது ஸ்பைஸ் லாண்ட், பூரணி போன்ற தரத்தை போன்றவை அல்ல (Example: Bhai biriyani)1 point
-
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 7.6% இருந்த பணவீக்கம் 6 மாதத்திற்குள்ளாக இரண்டு மடங்கிற்கு மேலாகி விட்டது இப்படி இன்னுமொரு வருசம் மகிந்த குடும்பம் ஆட்சியிலிருந்தால் இலங்கை காசு வலுவிழந்து இலஙகை ரூபா செல்லுபடியற்ற காசாகிவிடும் அதன்பின் வேறு நாட்டு காசுதான் இலங்கையில் பயன்படுத்தப்படும். இலங்கையின் Balance of payment இல் Current account deficit GDP யில் வெறும் 2% குறைவாகவுள்ள நிலையில் எதற்காக இவ்வளவு கடன் வாங்கினார்கள்? அதுவும் 2 வருடத்திற்குள்ளாகவே (கடன் GDP யில் 2019 இல் 42% இலிருந்து 2021 இல் 104%) எப்பிடி நாட்டை திவாலாக்க முடிந்தது, தூர கிழக்கு ஆசிய வளரும் நாடுகள் மாலைதீவு போன்ற உல்லாசதுறையை மட்டுமே நம்பியுள்ள நாடுகளே இப்படி ஆகவில்லை, ஆனால் இலங்கையால் எப்பிடி திவாலாக முடிந்தது? இலங்கையை மகிந்த குடும்ப சும்மா விடப்போவதில்லை.1 point
-
இதுதான் உண்மை.....நாங்களும் கஸ்டப்பட்டு உழைக்கிறது...அவர்களும் அவ்வாறுதான்....ஆனால் ஒரு மனச்சாட்சி வேண்டும்....1 point
-
இந்தக் கவிதையை தடை செய்த காரணம் அரசியல் இல்லையாம். வண்ணாத்துப் பூச்சிகளை கொல்வது (Animal cruelty) பற்றி எழுதியதாம் என்று காரணம் போட்டு இருந்தார்கள். எங்கே போய் தலையை முட்ட என்று இருந்தது....1 point
-
அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைக்க அலுப்பதில்லையோ இவர்களுக்கு? திருப்பி மூஞ்சசையில அடிச்ச மாதிரி நாலு கேட்டானுகள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அன்றைக்கு நிக்கும் இந்த வீறாப்பு. அதுவரை பிதற்றிக்கொண்டு திரிய வேண்டியது. தேவையில்லாமல் போர் செய்து நாட்டை அழித்து, இனங்களை பிரித்து வைத்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? அவர்களுக்கு உரியதை பறித்து, எதை சாதித்தீர்கள் என்று கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு.1 point
-
இலங்கை பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ள உதவும் வரைகலை வழிகாட்டி - எளிய விளக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் வழக்கமான காட்சிகளாகி விட்டன. இலங்கை நாடு, கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்கிறது. பெட்ரோலிய எரிவாயு முதல் கச்சா சர்க்கரை வரை என அனைத்தும் அதில் அடங்கும். இப்போது அந்த இறக்குமதிகள் தடைபட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய பணவீகத்தை சந்திக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் (தேசிய நுகர்வோர் விலை குறியீடு) வெறும் 5% ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், பணவீக்கத்தில் ஆண்டுதோறும் காணப்படும் மாற்றம் கிட்டத்தட்ட 18% ஆக உயர்ந்துள்ளது - இது முந்தைய ஆண்டை விட 13% அதிகமாகும். விநியோகத்திற்கு எதிராக தேவை அதிகமாக இருப்பதால், எஞ்சியிருக்கும் பொருட்களின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் உச்சவரம்பை பாதிக்கிறது. மக்களின் சேமிப்பில் விழுந்த வெட்டு காய்ந்த மிளகாய் போன்ற எளிய பொருட்கள் - உள்ளூர் உணவு வகைகளை சமைக்க இன்றியமையாதவை, அதன் சில்லறை விலைகள் முந்தைய ஆண்டை விட 190% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஒரு கிலோ ஆப்பிள் கிட்டத்தட்ட 2021இல் ஏப்ரலில் இருந்த ஒரு கிலோ 55 என்ற விலையை விட இப்போது இரட்டிப்பாகியிருக்கிறது. தேங்காய் எண்ணெய்யை உள்ளூர் மக்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 520 கொடுத்து வாங்கினர். இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ. 820க்கு விற்கப்படுகிறது. உள்ளூர் நாளிதழ்களில் வெளிவரும் தகவல்களின்படி, சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அலமாரிகள் முற்றிலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையர்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதை இந்தக் காட்சிகள் காட்டுவதாக உள்ளன. பணவீக்கம் காரணமாக பலர் உணவைத் தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறக்குமதி தேசம் இலங்கை கிட்டத்தட்ட அனைத்தையும் இறக்குமதி செய்கிறது. ஓஇசிடி அமைப்பின் கருத்துப்படி, இலங்கை 2020இல் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தது. துணிகள் முதல் மூலப்பொருட்கள் வரை, மருந்துகள் முதல், கோதுமை, சர்க்கரை வரை - அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், இந்த நாடு 214 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்களை இறக்குமதி செய்தது. இத்தனைக்கும் கார்கள், அந்த நாடு இறக்குமதி செய்யும் முதல் 10 பொருட்கள் வரிசையில் கூட இல்லை. 2020இல் மட்டும் 305 மில்லியன் டாலர் பெறுமதியான செறிவூட்டப்பட்ட பாலை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகள். தற்போது இலங்கை வெளிநாட்டு உதவிக்கு எதிர்பார்த்து நிற்கும் நிலையில், நெருக்கடியை சமாளிக்க, சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளையும் இலங்கை அணுகியுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் 70% க்கும் அதிகமானோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். அரசாங்கத்தின் மாதாந்திர சுற்றுலா அறிக்கையின்படி, ரஷ்யாவிலிருந்து 15,340 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் - வேறு எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கவில்லை. இருப்பினும், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முடங்கி விட்டது. இதற்கு முன்பு, கொரோனா பெருந்தொற்று இந்த நாட்டை முடக்கிப்போட்டது. இதுவும் இலங்கை சுற்றுலா துறைக்கு பெரும் அடியை கொடுத்தது. ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் கோதுமை, பெட்ரோலியம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. மேலும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. கடனில் மூழ்கிய இலங்கை இலங்கை மிகப்பெரிய அளவிலான கடனில் மூழ்கியுள்ளது. வெளிநாட்டு வளங்கள் இணையதளத்தின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளுக்கு அடுத்தபடியாக இலங்கையின் கடன் பங்குகளுக்கு அதிக கடன் வழங்குவது சீனாவாகும். இலங்கையின் கடன் அதன் சொந்த அந்நிய செலாவணி கையிருப்புகளை தாண்டியுள்ளது மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன்கள் அந்நாட்டை பொருளாதார அவசரநிலையின் விளிம்பில் தள்ளியுள்ளன. https://www.bbc.com/tamil/sri-lanka-610572391 point
-
புத்தாண்டை கொண்டாடுங்கள்: இலங்கைக்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பிய இந்தியா.! sri lanka crisis : தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது புத்தாண்டு கொண்டாட்டம் இலங்கையில் சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது, தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்புத்தாண்டு(சித்திரை-1) ஏப்ரல் 14ம் தேதி பிறக்கிறது. இலங்கையில் சிங்கள மக்களும், தமிழர்களும் தங்களின் புத்தாண்டை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். புத்தாண்டு தினத்துக்கு முன்பாக இலங்கையில் அரிசி சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தியாவிலிருந்து 11 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டு நேற்று கொழும்பு துறைமுகம் சென்று சேர்ந்தது. விலைவாசி உயர்வு இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதாரச் சிக்கலால் அரிசி, கோதுமையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால்தான் இந்த விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கூட இலங்கை அரசிடம் அன்னியச் செலவாணி கையிருப்பு இல்லை. கடனுதவி இதனால் இந்தியாவி்டம் நிதியுதவி கோரியதைத் தொடர்ந்து, ஏற்கெனவே 100 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்கியிருந்தது தவிர்த்து 100 கோடி டாலருக்கு தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், டீசல், பெட்ரோல் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து ஏற்கெனவே டீசல் கப்பலில் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர உணவுப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. அரிசி அனுப்பிய இந்தியா அந்தவகையில் இலங்கையில் சிங்களப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு பிறப்புக்கு முன்பாகஅரிசியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இலங்கை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு முன்பாக அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிரந்து 16ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்த கடினமான நேரத்தில் இந்தியா செய்யும் உதவி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளது https://tamil.asianetnews.com/business/sri-lanka-crisis-11-000-mt-of-rice-from-india-reaches-lanka-ahead-of-new-year-ra9kha1 point
-
எனக்கும் நம்ம சாப்பாடுதான் பிடிக்கும்......அப்பதான் சாப்பிட்டது போல் இருக்கும்......! நல்லதொரு புலம்பல் கவிதை அல்வாயன்......தொடர்ந்து கிறுக்குங்கள்.....! 😂1 point
-
# பிரதர்ஸ்குள்ள தூங்கிட்டு இருக்குற மிருகத்த தட்டி எழுப்பிடாதியள் ..தாங்க மாட்டியள்.. 😢1 point
-
1 point
-
1 point
-
எங்க தான் போனாலும் எமது சாப்பாடுக்காக தவிக்கும் போதுதான் சாப்பாட்டின் அருமை புரியும். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அண்மையில் சிறி சிகிச்சைக்காக தங்கியிருந்த போது எமது உணவுக்காக எப்படி ஏங்கியிருப்பார்?1 point
-
ஓயாத அலைகள் மூன்றில் குறிசூட்டுநரும் பொட்டுநரும்1 point
-
டாக்டர்> என்ன பிரச்சினை உங்களுக்கு ? . எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர் . அப்படியா...!? . ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல... . இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..? . ஆமா டாக்டர்... ஆமா...? . சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க... . உங்க பேரென்ன... . ராமநாதன்... . என்ன தொழில் பண்றீங்க... . பைனான்ஸ்... . நைட்டு நல்லா தூங்குவீங்களா...? . கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்... . சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...? . நெறய டாக்டர்.... . அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...? . ஆமா டாக்டர்... . எந்த மாதிரி நடிகைங்க... . ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க.... . சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா... . சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க... . சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...? . ஷகிலா... . உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...? . வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க... . ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்.. . அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க... . சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்... . ம்ம்... அவ்ளோதான் டாக்டர்... . அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க... . 45,48,54,41.. . நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு... . அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்... . என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..? . தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணிநேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..! . அடப்பாவி...1 point
-
இலக்கு வைக்கும் தமிழீழ குறிசூட்டுநர் 10-5-20081 point
-
காப்புக்கையால் உணவு கிடைக்க ஏகப்பட்ட புண்ணியத்தை போன ஜென்மத்தில் செய்திருக்க வேணும் இலையான் கில்லர் உங்களைப் போல எல்லாருக்கும் கிடைக்குமோ? பாவம் அல்வாயன் வாயிற்கு வாழ்க்கைப்பட்ட மனுசன்போல... இடியப்பத்திற்கும் வடைக்கும் வரிசையில் நின்று வாங்குவதில் இன்னும் வாழ்க்கை வெறுக்காமல் இருப்பது பெரியவிடயம்1 point
-
அந்த ஆளின்ரை… வீடியோ இருந்தால், இணைத்து விடுங்கள். 🙂1 point
-
ஓடு மீன் ஒடி…. உறு மீன், வரும் வரைக்கும்…. உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கினம். ரணில்…. வர வேண்டும் என்றும், நேர்த்திக் கடன் வைத்திருப்பினம். ரணில்… வந்தால், சம்/சும் மாறி,மாறி… முதுகு சொறிய, வசதியாக இருக்கும். 😂1 point
-
எண்ணை இல்லாமல் நல்ல சுவையாய் சமைக்கலாம் சிறித்தம்பி.....😎 எண்ணைச்சாப்பாடு உடம்புக்கு கூடாது🤣1 point
-
கிட்டத் தட்ட… இரண்டு பெண்டாட்டிகாரன் நிலை என்று, சொல்கிறீர்கள். 😂1 point
-
அளவோடு...கருவாடு கொண்டு வந்தது தான். அதனால் முழிக்கத் தேவையில்லை. இங்கிலாந்து இந்த விடயத்தில் அவுஸி... சுவிஸை விட எவ்வளவோ மேல். ஆனால் கருவாடு வாங்கப் போய் பக்கத்தி பக்கத்தி கடைக்காரர் போட்டி போட்டுக் கொண்டு அடிபிடி படும் அளவுக்கு போகப் பார்த்திட்டுது. அவங்கள விலக்குப் பிடிக்கிறதே பெரியப்பாடாப் போச்சு. ஆனாலும்.. இப்ப எல்லாம் நல்லா சின்னதா வெட்டி.. நல்லா பக்கிங் பண்ணி தாறாய்ங்க. தகவலுக்கு நன்றி.1 point
-
தமிழ் உணவுக் கடைகளில் உள்ள விலையேற்றம் ஓரளவுக்கு நியாயமானதே. இரண்டு வருடங்களுக்கு முன்னர் Costco வில் $15 இற்கு விற்ற 16 லீட்டர் கனோலா எண்ணெய் , இன்று மூன்று மடங்கை விட அதிகரித்து $48 இல் வந்து நிற்கின்றது. கண்டெயினர்களின் விலையேற்றத்தினால், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது (சீனர்களின் கடைகளைத் தவிர). உக்ரைன் மீதான யுத்தத்தின் பின் கோதுமை மாவின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதே போன்றே அனைத்து மரக்கறிகளின் விலைகளும் Walmart போன்ற இடங்களில் கூட அதிகரித்து உள்ளன. எல்லாவற்றையும் எண்ணையில் பொரித்து சாப்பிடும் எமக்கு அதன் விலை அதிகரிப்பு பாதிக்கத் தான் செய்யும். தமிழ் உணவுக் கடைகளில் ஒவ்வொரு உணவுப் பொருளை விற்கும் போது கிடைக்கும் லாபம் மிகச் சிறியது. அதிக எண்ணிக்கையில் விற்கும் போது மாத்திரமே லாபம் காண முடியும். இந்த சிறிய லாபத்தின் மூலம் தான் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் இருந்து வாடகை வரைக்கும் கொடுக்க வேண்டும். லாபம் கிடைத்து தொடர்ந்து நடாத்துவது சவாலான விடயம். இதனால் தான் பல தமிழ் உணவுக் கடைகள் வந்த வேகத்தில் மறைந்து விடுகின்றன. ஒரு தமிழ் உணவுக் கடை என்பது ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே விற்கும் கடையாக இல்லாமல் வடையில் இருந்து புரியாணி, வாழையிலையில் சைவ சாப்பாடு மற்றும் மாலுபாண் வரை விற்கும் பல் உணவுச் சாலை என்பதால் றிஸ்கும் அதிகம். எம்மவர் Mc Donald's, Tim Hortons, Pizza hut போன்றவற்றில் ஏற்படும் விலையுயர்வை பற்றி கேள்வி கேட்பது இல்லை. ஆனால் தமிழ் கடையில் வடையின் விலையை ஏற்றினால் உடனே Google reviews இல் வந்து தாறுமாறாக எழுதுகின்றனர்.1 point
-
1 point
-
படம் : கண்ணோடு கண்(1982) பாடியோர்: SPB & SP சைலசா .1 point
-
செலவுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதால் உலக வங்கியிடம் இருந்து கடன் பெற பின் வாங்கினார்கள். இப்போ வேறு தெரிவு இல்லாததால் உலக வங்கியை நாடி உள்ளார்கள். இந்தியாவிடம் எவ்வளவு கடன் பெற முடியுமோ அவ்வளவையும் பெற்றுக்கொள்வார்கள். அதை கடன் என்றும் சொல்ல முடியாது.ஏனெனில் திருப்பி கொடுத்தால் தானே.1 point
-
1 point
-
இப்படி ஒரு போராட்டம் தமிழ் மக்களால் இனிஷியேட் பண்ணப்பட்டு இருந்தால் முஸ்லிம்கள் அதுக்கு ஆதரவு தந்திருப்பார்களா? எப்பவுமே வெல்ற பக்கத்திலதான் முஸ்லிம்கள் இருப்பார்கள். நோகாமல் நுங்கு சாப்பிடுவதில் வல்லவர்கள். புலிகள் காலத்தில் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோது தென்கிழக்கு அலகு என்று முழங்கினர்கள். இப்ப அது எங்க போச்சுது எண்டு தெரியேல்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு தடையாக இருப்பவர்கள் இந்த முஸ்லிம்கள். இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது. கிழக்கு பிரிந்திருந்தால் சிங்களவருடன் சேர்ந்து அல்லது தமிழரை பேக்காட்டி ஆட்சி அமைக்கலாம். எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துருக்கித் தொப்பி அணிந்த கணவான்களை நம்பக் கூடாது1 point
-
இலங்கையில் மட்டும்தான் அரசாங்கத்திற்கெதிராக வெளிநாட்டினரும் ஆர்ப்பாட்டம் செய்யும் புதுமையைக் காணலாம். இன்னொரு நாட்டிலென்றால் உடனேயே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருப்பார்கள். 😃1 point
-
1 point
-
அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை தாங்கிய பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்குக் கிட்டியது. இன்று பரி. யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அவர்களும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல, 1979 இல் பரி. யோவானின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers), யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளிற்கிடையிலான இந்தச் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். SOLT அமைப்பின் பொறுப்பாளராக முரளி இருந்த அந்தக் காலப்பகுதியில், பரி. யோவான் மைதானத்தில் இடம்பெற்ற கப்டன் பண்டிதர் நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை SOLT அமைப்பின் நிரஞ்சன் ஒருங்கிணைத்து முன்னின்று நடாத்தினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளிற்குப் பின்னர் அனைத்து யாழ்ப்பாணப் பாடசாலைகளும் பங்கெடுத்த, உண்மையை சொல்லப் போனால் பங்கெடுக்க வைக்கப்பட்ட, உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பரி. யோவான் கல்லூரி அணி வெற்றியீட்டியது. பண்டிதர் கோப்பையை வென்ற 1986 ஆம் ஆண்டின் பரி. யோவான் கல்லூரி அணியை, கல்லூரியின் வரலாற்றில் இடம்பிடித்த பலமான உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றாக கருதமுடியாது. ஆனாலும், சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலுடன், ஒற்றுமையாகவும், தன்னம்பிக்கையோடும், வெல்ல வேண்டும் என்ற ஓர்மத்துடனும் விளையாடியதால்தான், 1986 டிசம்பர் மாதம் இடம்பெற்ற பண்டிதர் கோப்பைக்கான சுற்றுப் போட்டியை பரி. யோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. 1984 இல் பரி. யோவான் கல்லூரியின் First XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வெளிநாடு சென்றுவிட, அந்த இடத்திற்கு கல்லூரியின் இன்னுமொரு புகழ்பூத்த உதைபந்தாட்ட வீரரான அருள்தாசன் மாஸ்டரை அதிபர் ஆனந்தராஜா அழைத்து வந்தார். 1979 இல் பரி. யோவான் கல்லூரியின் First XI உதைபந்தாட்ட அணியை தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர், பின்னர் 1981 இல் Greenfield கழக அணிக்கும், பின்னர் 1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக உதைபந்தாட்ட தலைமை தாங்கியிருந்தார். வழமையாக உதைபந்தாட்டத்தில் முன்னனி வகிக்கும் பற்றிக்ஸ் மற்றும் மகாஜனா பாடசாலை பழைய மாணவர்களே யாழ் பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணிக்கு தலைமை தாங்குவார்கள். அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய முதலாவது ஜொனியன், அருள்தாசன் மாஸ்டர்தான். 1985 இல் அருள்தாசன் மாஸ்டர் கல்லூரியில் ஆசிரியராக இணைந்த பொழுது எங்களது Grade 6B வகுப்பிற்கு அவர்தான் வகுப்பாசிரியர். அத்தோடு எங்களிற்குக் கணிதப் பாடமும் கற்பித்தார். Captain பார்த்திபன் அண்ணா தலைமை தாங்கிய 1986 ஆம் ஆண்டு கல்லூரியின் உதைபந்தாட்ட அணிக்கு கோல் காப்பாளராக இருந்த ராஜ்குமார் தான் Vice Captain. பண்டிதர் கோப்பையில் விளையாடிய பரி. யோவான் அணியின் வியூகம் பின்வருமாறு அமைந்திருந்தது. Forwards: Left extreme - ஜோனதாஸ் Left in - செந்தில்நாதன் Centre forward - கேதீஸ்வரன் Right In - லோகராஜ் Right Extreme - தேவபிரியன் Centre half - நேசகுமார் Left half - துஷிதரன் Right half - பார்த்திபன் Right-back சுரேந்திரா Centre back முரளி Goal Keeper ராஜ்குமார் யாழ்ப்பாணத்தின் சில பிரபல பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணியில் பாடசாலையில் கற்காத மாணவர்களும் விளையாடும் பழக்கம் இருந்தது. பாடசாலை அணியில் விளையாடும் மாணவர்கள் வழமையாக 19 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சில பாடசாலை அணிகளில் 19 வயதிற்கு மேற்பட்டவர்களும் அந்தக் கல்லூரிகளின் உதைபந்தாட்ட அணிகளில் விளையாடுவது அனைவரும் அறிந்த ரகசியம். சில பாடசாலைகள் பலமான உதைப்பந்தாட்ட அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் சிறந்த வீரர்களை ஊர் ஊராகத் தேடி தங்கள் பாடசாலைகளில் சேர்த்து விடுதி வசதிகள் செய்து கொடுத்த வரலாறுகள் யாழ்ப்பாணத்தில் நிறையவே இருக்கிறது . புலிகள் நடாத்திய பண்டிதர் கோப்பைச் சுற்றுப்போட்டியில் இந்த 19 வயதெல்லை கடுமையாக அமுல்படுத்தப்பட, சில பாடசாலை அணிகளில் விளையாடிய பலமான சில வீரர்கள் பண்டிதர் கோப்பைச் சுற்றுப் போட்டியில் ஆட முடியாமல் போய்விட்டது. பண்டிதர் வெற்றிக்கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியின் format ஐச் சரியாக உறுதி செய்யமுடியவில்லை. ஆனால், அந்தச் சுற்றுப் போட்டியில் பரி.யோவான் கல்லூரி அணி ஆடிய முக்கிய மூன்று ஆட்டங்கள் இன்றுவரை பேசப்படுகிறது. ஸ்கந்தவரோதயா கல்லூரியுடனான இறுதியாட்டம், சென். ஹென்றீஸ் கல்லூரியுடனான அரையிறுதி ஆட்டம் மற்றும் மகாஜானாக் கல்லூரியுடனான ஆட்டம் என்பவையே அந்த முக்கிய மூன்று போட்டிகளாகும். சுற்றுப் போட்டியின் ஆரம்ப ஆட்டங்கள் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் பலம் பொருந்திய மகாஜனாக் கல்லூரி உதைபந்தாட்ட அணியுடன் பரி. யோவான் கல்லூரி அணி மோதியது. “மோதியது” என்ற சொற்பிரயோகம் இந்த ஆட்டத்திற்கு சாலவும் பொருந்தும். ஏனென்றால், இரு கல்லூரியின் வீரர்களின் உடல்கள் ஆளோடு ஆள் பொருதி, மோதி, உதைபந்தாட்டத்தில் நிகழ்ந்த ஒரு மல்யுத்தம் போலவே, ஒரு physical game ஆகவே, இந்த ஆட்டம் இன்றும் நினைவு கூறப்படுகிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே மகாஜனா அணி rough game விளையாடத் தொடங்கியது. “நான் நிலத்தில விழுந்து கிடக்க.. என்ர நெஞ்சில பூட்ஸ் காலால மிதிச்சாங்கள்” இப்போது கனடாவில் வசிக்கும் லோகராஜ் அண்ணா இன்றும் மகாஜனாவுடனான அன்றைய ஆட்டத்தை மறக்கவில்லை. இந்த லோகராஜ் தான் அடுத்து வந்த Semi finals போட்டியிலும் Finals போட்டியிலும் கோல்கள் அடித்த பரி. யோவான் அணியின் legend. பரி. யோவான் கல்லூரியில் படிக்கும் போதே யாழ்ப்பாண உதைபந்தாட்டக் கழக அணிகளிற்கு விளையாடிக் கொண்டிருந்த பார்த்திபன், சுரேந்திரா, ராஜ்குமார் போன்ற பரி. யோவான் வீரர்கள் மகாஜனாவின் உத்தியை உடனடியாக உணர்ந்து கொண்டு பதிலடிக்குத் தங்கள் அணியைத் தயாராக்கினார்கள். “அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் coach பண்ணேக்க மற்ற Team rough game விளையாடினால் நாங்க அதை எப்படி handle பண்ணுறது என்றதைச் சொல்லித் தந்திருந்தவர்” பார்த்திபன் அண்ணா மகாஜனாவுடனான ஆட்டத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “எங்களில் சில பேருக்கு club experience உம் இருந்ததால நாங்கள் அவங்கள் விளையாடின rough game ஐ counter பண்ணி விளையாடத் தொடங்கினோம்” என்று descent and discipline ஆகவும் “ Johnians always play the game” எனும் பரி. யோவானின் தாரகமந்திரத்துடன் விளையாடும் பரி.யோவான் அணி, மகாஜனாவுடனான ஆட்டத்தில் தனது விழுமியங்களில் இருந்து வழுவாமல் களத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட பரிணாமத்தின் பின்னனியைப் பார்த்திபன் அண்ணா விளங்கப்படுத்தினார். ஆட்டத்தின் முக்கிய திருப்பங்களில் ஒன்றாக மகாஜனாக்காரர் தெரியாத்தனமாக பரி. யோவானின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேந்திராவோடு தனகினார்கள். “எங்கட defence ஐ மீறி அவயலால போக முடியாமல் போச்சு” சுரேந்திரா அண்ணாவும் மீண்டும் 1986 இற்கு கூட்டிக் கொண்டு போனார். “அப்ப தான் என்னை தள்ளுறது, இடிக்கிறது என்று அவயல் foul போட்டவ.. பார்த்திபன்.. நாங்கள் எல்லாம் ஒழுங்காத் தான் விளையாடிக் கொண்டிருந்தனாங்கள்” மகாஜனாவுடனான அந்தப் போட்டியை சுரேந்திரா விவரித்துக் கொண்டு போனார். மகாஜனா வீரரொருவர் பந்தை விட்டு விட்டு சுரேந்திராவின் காலை உதைய, சுரேந்திரா பந்தோடு துரத்திக் கொண்டு போய் தனக்கு உதைத்தவருக்கு பதிலடி கொடுத்த காட்சியை யாராலும் இன்றும் மறக்க முடியாது. அதற்குப் பிறகு தான் அந்தப் பிரளயம் நடந்தது. ஏற்கனவே சூடேறிப் போயிருந்த ஆட்டத்திடலில் பார்த்திபன் அண்ணா போட்ட foul இல் மகாஜானாக் கல்லூரி வீரனான சீவரத்தினம் பிரபாகரன் மைதானத்தில் விழுந்து நினைவின்றி கிடந்தக் காட்சியை இன்று நினைத்தாலும் உள்ளம் பதறும். Slip shot அடித்துப் பந்தை எடுக்க, மைதானத்தில் சாய்ந்து கொண்டே சரிந்த சீவரத்தினம் பிரபாகரனின் முதுகைப், பார்த்திபன் அண்ணா பந்தை நோக்கி உதைந்த உதை பதம் பார்த்தது. பார்த்திபன் உதைந்த உதை பந்தில் படாமல் சீவரத்தினம் பிரபாகரனின் முதுகில் ஓங்கி விழ, சீவரத்தினம் பிரபாகரன் நினைவிழந்து மைதானத்தில் முகம் குப்புற விழுந்தார். விறு விறு என்று ஓடிவந்த referee சுடர் மகேந்திரன் பார்த்திபன் அண்ணாவிற்கு red card காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியறும் உத்தரவை வழங்கிக் கொண்டிருக்க, மகாஐனாக் கல்லூரி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் பாய, ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. நினைவின்றி கிடந்த சீவரத்தினம் பிரபாகரனை உடனடியாக வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். மைதானத்தின் நடுவில், கிரிக்கெட் பிட்ச் அடியில், பரி. யோவான் கல்லூரி அணியைச் சூழ பாதுகாப்பு வளையமாக பரி. யோவான் ஆதரவாளர்கள் நின்று கொள்ள, மைதானத்தில் நின்ற புலிகள் இயக்கப் பெடியள் துரிதமாக இயங்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கலவரத்தைத் தடுத்தார்கள். இந்த சம்பவத்தி்ல் பாதிக்கப்பட்ட மகாஜனா சீவரத்தினம் பிரபாகரன் வேறுயாருமல்ல, பின்னாட்களில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளாராக இருந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட புலித்தேவன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புலித்தேவன் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அந்த சம்பவத்தை தன்னோடு நினைவு மீட்டதாக அதிபர் துஷிதரன் தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பதற்றமான அந்தச் சூழ்நிலை தணிந்து, இரு கல்லூரி அணிகளும் இடைநிறுத்தப்பட்ட ஆட்டத்தை மீண்டும் தொடங்கி போட்டி நிறைவடைந்த போது, மகாஜனாவுடனான அந்த ஆட்டத்தில் பரி. யோவான் கல்லூரி அணி 1-0 கணக்கில் வெற்றியீட்டியது. மறக்க முடியாத அந்த ஆட்டத்தில் பரி. யோவான் அணிக்கு கோல் அடித்தது யாரென்று மட்டும் யாருக்கும் சரியாக ஞாபகம் இல்லை. “நேசா இருக்கேக்க எழுதியிருக்கோணுமடா.. அவனுக்கு தான் எல்லாம் ஞாபகம் இருந்திருக்கும்” என்ற ஒற்றை வசனத்தையே இன்றைய அதிபர் துஷிதரன், அன்றைய கப்டன் பார்த்திபன், அன்றைய கோச்சர் அருள்தாசன் மாஸ்டர் மூவரும் சொன்னார்கள். பண்டிதர் கிண்ண சுற்றுப் போட்டியில், மகாஜனாக் கல்லூரிக்கு எதிரான போட்டியின் பின்னர், மானிப்பாய் இந்துக் கல்லூரியுடனான ஆட்டத்திலும் பரி. யோவான் கல்லூரி அணி வெற்றியீட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. பண்டிதர் கோப்பையை பரி. யோவான் அணி வெற்றி பெற்றதில் பார்த்திபன் அண்ணாவின் தலைமைத்துவப் பண்பு பெரும்பங்காற்றியிருந்தை அவரோடு விளையாடிய சக வீரர்களும், அந்த அணியின் பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். “எங்களுக்கு அந்தக் காலத்தில கொலிஜ் jersey மட்டும் தான் தந்தது.. எல்லோரும் விரும்பின விரும்பின shorts தான் போட்டவ” பார்த்திபன் அண்ணா பண்டிதர் கோப்பை ஆட்டங்களின் பின்னியில் நிகழ்ந்த விடயங்களை பகிரத் தொடங்கினார். “அப்பயடாப்பா.. நாங்கள் Old Boys, Teacher என்று எல்லார்டயும் காசு சேர்த்து team இற்கு black shorts வாங்கினாங்கள்.. அதோட எல்லோருக்கும் Red & Black stockings உம் எடுப்பிச்சனாங்கள்” என்று பண்டிதர் கோப்பையில் ஆடிய பரி. யோவான் அணி ஒரு professional அணியைப் போல மாறியதன் பின்புலத்தை பார்த்திபன் அண்ணா விளக்கினார். “சொன்னா நம்ப மாட்டாயடாப்பா.. stocking முழங்காலடியில் இருந்து சறுக்கி விழாமல் இருக்க.. எல்லோருக்கும் plaster tape வேற வாங்கிக் கொடுத்தனாங்கள்” பார்த்திபன் அண்ணா அடுக்கிக் கொண்டே போனார். “Training இற்கு Register வச்சு mark பண்ணினாங்கள்.. யார் வந்தது யார் வரேல்ல என்று பார்த்து.. எல்லாரையும் கட்டாயம் practice இற்கு வரப் பண்ணினாங்கள்” என்றார் பார்த்திபன் அண்ணா. “பார்த்திபன் என்ன செய்வான் என்றா.. match முடிஞ்சு அடுத்த நாள் practice இற்கு வந்தால் team ஐ நிற்பாட்டி வச்சு.. முதல் நாள் game ஐ analyse பண்ணுவான்” அன்று அந்த அணியில் ஆடி இன்று கல்லூரியின் அதிபராகத் திகழும் துஷிதரன் அவர்களும் பார்த்திபனின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விபரித்தார். “என்ன சரியாச் செஞ்சனாங்கள்.. என்ன பிழை விட்டனாங்கள்.. எங்க improve பண்ணோனும் என்று ஒரு பதினஞ்சு இருபது நிமிஷம் பார்த்திபன் கதைப்பான்” என்று தொடர்ந்தார் அதிபர் துஷிதரன் அவர்கள். பண்டிதர் கோப்பைக்கு முன்னர், சென். ஹென்றீஸ் அணியுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பரி. யோவான் அணி வாங்கிக் கட்டியிருந்தது. சென். ஹென்றீஸ் அணியில் பயஸ் (No 7) பென்ஜமீன் ( No 10) என்று இரண்டு திறமான விளையாட்டு வீரர்கள் ஆடினார்கள். இருவரும் எதிரணியின் தடுப்பு வியூகங்களுக்குள் லாவகமாக புகுந்து கோல்கள் அடிப்பதில் கில்லாடிகள். சென். ஹென்றீஸ் அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் பரி. யோவான் அணியின் வெற்றிக்கு பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டர் வகுத்த Game plan உம் ஒரு பிரதான காரணமாக இருந்ததாம். Aggressive ஆக விளையாடும் சென். ஹென்றீஸ் அணியை எதிர் கொள்ள பரி. யோவானின் defence பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாக பரி. யோவான் அணியில் திடகாத்திரமான உடலோடு ஓடி விளையாடிக் கூடிய நேசக்குமாரையும் கேதாவையும் வைத்து சென். ஹென்றீஸ் அணியின் பயஸை lock பண்ணும் திட்டத்தை அருள்தாசன் மாஸ்டர் வகுத்திருந்தார். அந்த strategy நன்றாகவே வேலை செய்து பயஸை கோல் அடிக்க விடாமல் முடக்கிப் போட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் சென். ஹென்றீஸ் அணியின் கையே ஓங்கியிருந்தது. “எங்கட half இற்குள் தான் அவங்கள் 1st half முழுக்க ball ஐ வச்சிருந்தவங்கள்.. என்னட்ட ball ஏ வரேல்ல..”என்று பரி. யோவான் அணியில் forward விளையாடிய லோகராஜ் அந்த முதற் பாதி ஆட்டத்தில் தான் அடைந்த விரக்தியை பதிவு செய்தார். “Penalty box இற்குள் வைத்து இரண்டு முறை அடிச்சாங்கள்..இரண்டையும் என்ற உடம்பை கொடுத்துத் தான் மறிச்சனான்” அந்த ஆட்டத்தில் பரி. யோவான் அணியின் தடுப்புச் சுவராக விளங்கிய அதிபர் துஷிதரன் அவர்களும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “Match முடிய அருள்தாசன் மாஸ்டர் வந்து அப்படியே என்னை கட்டிப் பிடிச்சதை மறக்கேலாது” என்று அன்றைய ஆட்டத்தில் தானாற்றிய பங்களிப்பிற்கு பயிற்றுவிப்பாளரிடமிருந்து தனக்குக் கிடைத்த பாராட்டை அதிபர் துஷிதரன் அவர்கள் இன்றும் உணர்வுடன் நினைவுகூர்ந்தார். “Half time முடிஞ்சு திரும்ப தொடங்கினாப் பிறகு.. பின்னுக்கு வந்து பந்தை எடுத்துக் கொண்டு போய் தான் அந்த கோல் அடிச்சனான்” சென். ஹென்றீஸ் அணியை உலுக்கிய அந்த ஒற்றைக் கோல் அடித்த லோகராஜ் சொல்லிக் கொண்டே போனார். Principal Bungalow பக்கம் இருந்த Goal Post இற்குள் விழுந்த அந்த கோல் அடித்ததும் பரி. யோவான் பக்கமிருந்து மைதானத்தில் எழுத்த ஆரவாரம் உண்மையில் பரி. யோவான் வளாகத்தில் வரலாறு காணாதது. “அந்த கோலோட match மாறிட்டுது.. எங்கட ஆக்களுக்கு ஒரு வெறி வந்திட்டுது.. அதுக்கு பிறகு நாங்க aggressive ஆக விளையாடத் தொடங்க அவங்க defensive ஆகிட்டாங்கள்” பண்டிதர் கோப்பையின் இறுதியாட்டத்திற்கு பரி. யோவான் அணியை தகுதிகாணச் செய்த அந்த ஒற்றைக் கோலின் பின் விளைவுகளை லோகராஜ் மீண்டும் நினைவிறுத்திக் கொண்டார். சென். ஹென்றீஸ் அணியை 1-0 கணக்கில் வென்று யாழ்ப்பாணத்தாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பரி. யோவான் அணி, பண்டிதர் கோப்பையின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, முழு இலங்கையிலும் பலமான அணியாக கருதப்பட்ட பற்றிக்ஸ் அணி, யாழ்ப்பாணக் கல்லூரியுடனான காலிறுதி ஆட்டத்தில் தோற்று சுற்றுப் போட்டியில் இருந்து வெளியேறியிருந்ததாம். சம். பத்திரிசிரியார் vs யாழ்ப்பாணக் கல்லூரி காலிறுதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு கிடைத்த ஒரு controversial ஆன penalty kick ஐ, யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் தலைவர் ஜெயராஜா கோலாக மாற்ற, 1-0 கணக்கில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றி பெற்கது. யாழ்ப்பாணக் கல்லூரி அணியை அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி கொண்ட ஸ்கந்தவரோதயா அணி, பரி. யோவான் கல்லூரியுடனான இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடனான இறுதியாட்டம் கிட்டத்தட்ட Big Match மாதிரியான ஒரு சூழலிலேயே அரங்கேறியது. A/L படித்துக் கொண்டிருந்த அண்ணாமார், பிரதான வீதி - கண்டி வீதி- பழைய பூங்கா வீதி வழியாக கத்திக் கொண்டும், பாடிக் கொண்டும் ஊர்வலமாகக் கல்லூரி வளாகத்துக்குள் வந்தார்கள். அட்டகாசமாக அண்ணாமார் கல்லூரிக்குள் வந்திறங்கிய நேரம், Old Park பக்கமிருந்த பொன்னுதுரை பவிலியனடியில் மகளிர் கல்லூரிகளிற்கிடையிலான Netball இறுதியாட்டம் நடந்து கொண்டிருந்தது. Netball இறுதியாட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி ஆடிக் கொண்டிருந்ததால் பரி. யோவான் அண்ணாமாரின் அட்டகாசம் எல்லை கடந்தது. பரி. யோவான் வளாகத்துக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை கல்லூரி எப்பவும் இறுக்கமாகவே கடைபிடிக்கும், அதை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஒழுக்க விதிகளை நிர்வாகம் தளர்த்தவே தளர்த்தாது. அன்று Netball court அடியில் எல்லை மீறிய அண்ணாமாரும் உப அதிபராக இருந்த பஞ்சலிங்கம் மாஸ்டரின் முறையான கவனிப்பிற்கு உள்ளானார்கள். Netball சுற்றுப் போட்டிக்கான ஞாபகார்த்தக் கிண்ணம் புலிகள் இயக்கத்தின் எந்த மாவீரர் பெயரில் இருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் அந்த வெற்றிக்கிண்ணத்தை பரி. யோவான் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி வென்றது மட்டும் எல்லோருக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. பண்டிதர் கோப்பைக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் physical game ஆகவே இருந்தது. ஆனால் இந்த முறை பரி. யோவான் அணியின் தந்திரோபாயம் (strategy) வேறுவிதமாக இருந்தது. “எங்களுக்கு இந்த game உம் physical ஆகத் தான் இருக்கும் என்று தெரியும், ஆனால் நாங்க ஏலுமானளவு முட்டாமல் விளையாடுவம் என்று முடிவெடுத்தனாங்கள்” அதிபர் துஷிதரன் அவர்கள் அந்த இறுதிப் போட்டியில் பரி. யோவான் அணி ஆடிய வித்தையின் விபரத்தை விபரித்தார். இறுதி ஆட்டத்திலும், half time இற்கு பிறகு, அதே Principal bungalow முனையில், அதே லோகராஜ், அதே ஒற்றைக் கோலைப் போட, அதே 1-0 கோல் கணக்கில், பரி. யோவான் கல்லூரி அணி பண்டிதர் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை வென்றது. பண்டிதர் கிண்ணச் சுற்றுப் போட்டியில் பரி. யோவான் அணிக்கு எதிராக எந்த அணியாலும் ஒரு கோலைக் கூடல் போட முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அந்தளவிற்கு பரி. யோவானின் ஸ்டைலிஷான கோலியான ராஜ்குமாரின் பங்களிப்பும் பரி. யோவான் கல்லூரி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிரதான காரணங்களில் ஒன்று. “Finals இன்ட கடைசி நிமிடங்களை என்னால பார்க்கேலாமல் போட்டுது.. அவ்வளவு டென்ஷன்” அந்த இறுதிப் போட்டியின் இறுதிக் கணங்களின் பரபரப்பான பொழுதுகளை பரி.யோவான் அணியின் இளம் பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டர் நினைவுகூர்ந்தார். “நான் Fleming Hostel அடியில் நின்று தான் கடைசி நிமிடங்களைப் பார்த்தனான்.. match முடிய players, students, old boys எல்லாம் ஓடிவந்து என்னை தங்கட தோளில தூக்கிட்டாங்கள்” அருள்தாசன் மாஸ்டர் சொல்லிக் கொண்டு போகும் போது அவரது குரல் தழுதழுத்தது. “நேசகுமாராத்தான் இருக்கோணும்.. அவன்ட தோளில என்னைத் தூக்கிக் கொண்டு principal bungalow க்கு கொண்டு போய்ட்டாங்கள்” என்று தொடர்ந்தார் அருள்தாசன் மாஸ்டர். இறுதி ஆட்டம் முடிந்ததும், பரி. யோவான் மாணவர்களும், பழைய மாணவர்களும், ஆதரவாளர்களும் பரி. யோவான் மைதானத்தில் ஆடிய ஆனந்தக் கூத்தைக் கண்டுகளித்துக் களைத்துப் போன சூரியன் ஓய்வெடுக்கப் போக, கடைசியில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில் தான் இயக்கம் பரிசளிப்பு விழாவை நடாத்த வேண்டியதாகி விட்டது. பண்டிதர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை, சம்பத்திரிசிரியார் கல்லூரி Rector வணபிதா பிரான்சிஸ் யோசேப்பு அவர்கள் பரி யோவான் அணியின் தலைவர் பார்த்திபன் அண்ணாவிற்கு வழங்கினார். வணபிதா பிரான்சிஸ் யோசேப்பு இறுதியுத்ததில் காணாமால் ஆக்கப்பட்டவர்களில் அடங்குவார். இருள் கவிழ்ந்து விட்ட அந்த நேரத்திலும் பண்டிதர் கோப்பையை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற அவாவோடு அலைமோதிய மாணவர்கள் அந்தப் பொழுதை என்றும் மறக்க மாட்டார்கள். அப்படித் தொட்டுப் பார்க்க பாஞ்சடிச்சு விழுந்து எழும்பியதில் தனக்கு கையில் ஏற்பட்ட தழும்பை 1990 ஆம் ஆண்டு பரி. யோவான் உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் அணிகளிற்குத் தலைமை தாங்கி, இலங்கை தேசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியின் Poolற்கும் தெரிவான, சதீசன் இன்றும் மகிழ்வோடு காட்டி பெருமைப்படுவார். பண்டிதர் கிண்ணத்தை வென்ற பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணியை கெளரவிக்க, மறைந்த சேவியர் மாஸ்டர் ஏற்பாடு செய்த மதியபோசன விருந்துபசாரத்தையும் அருள்தாசன் மாஸ்டர் ஞாபகப்படுத்தினார். மகாஜனாக் கல்லூரியுடானா பரி. யோவான் கல்லூரியின் போட்டியில் அதிகளவான fouls போடப்பட்டதால் அடிக்கடி சுடர் மகேந்திரன் referee இன் விசில் ஊதப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆட்டத்தின் இடைவேளை நேரம், ref சுடர் மகேந்திரன் சோடா குடித்துக் கொண்டிருக்க, மைதானத்துக்கு வெளியே இருந்த யாரோ ஒருவர் “referee இற்கு கனக்க சோடா குடுக்காதீங்கோடா.. பிறகு சோடால இருந்த gas எல்லாம் விசுலுக்கால வெளில வந்திடும்” என்று நக்கலடித்தது ref சுடர் மகேந்திரத்தின் காதில் விழுந்து விட்டது. Principal Bungalow பக்கம் இருந்து நக்கலடித்த பார்வையாளரை நோக்கி கிடு கிடுவென ஓடிவந்த ref சுடர் மகேந்திரன், “அப்ப இந்தா நீ வந்து ஊதேன்” என்று ஏறுபட்டதையும் ஞாபகப்படுத்தினார்கள். Ref சுடர் மகேந்திரன் பின்னாட்களில் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக இருந்தவர். இன்றும் பரி. யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி. யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல என்பதற்கு ஆதாரமாக, பண்டிதர் வெற்றிக்கிண்ணம் வென்ற பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணியின் சாதனையும் நினைவுகளும், கம்பீரமான அந்தப் பென்னாம் பெரிய பண்டிதர் வெற்றிக் கிண்ணத்தைப் போல காலமெல்லாம் வீற்றிருக்கும். https://kanavuninaivu.blogspot.com/2022/03/blog-post.html?fbclid=IwAR1a-nPIoPKgUCD5b6q9XLaU2uOXUdcLB6xltwJu2Qcpwrcuj7qZMYTZW3c&m=11 point
-
1 point
-
விஞ்செசுரர் 70 குறிசூட்டுத் துமுக்கியுடன் பொதிக்கும்(pose) கடற்கரும்புலி1 point