Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19479
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88651
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33692
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16574
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/08/26 in Posts

  1. ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது.. நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ... மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்.. எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்
  2. நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.
  3. தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வ‌ஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம். என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை. இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் ப‌தில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேட‌ங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.
  4. என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.
  5. இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .
  6. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  7. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே ........! 😍
  8. உங்கள் அசாத்திய தைரியத்துக்கு வாழ்த்து😂. யாழ்களத்திலேயே அர்ஜூன், ஜூட், துல்பென், ஜீவன் என இப்படி வாய்ப்பை உருவாக்க முனைந்து, பிச்சை வேண்டாம் நாயை பிடி என ஓட வைக்கப்பட்டோர் பலர் 😂. அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்காத, நவீனன் சும்மா சங்ககாராவை அவதாரில் வைத்தமைக்காக கூட்டமாக கூடி கொத்தி கலைக்கப்பட்டார். இப்போ ஐலண்டுக்கு சுன்னத் டெஸ்ட் நடக்கிறது 😂. உண்மையில் இங்கே நாதம், நியாயம், கொழும்பான் தாம் முஸ்லிம்கள் என சொல்லி எழுதும் நிலை இருக்க வேண்டும்? ஆனால் தாதாக்களுக்கு பயந்து அவர்களும் தமிழர் என்பது போல் எழுதுகிறார்கள். நிலமை இப்படி இருக்கும் போது, ஒற்றுமையாவது, ஒரே திசையாவது, ஹைகோர்ட்டாவது என்பதுதான் என் மதிப்பீடு😂.
  9. அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் - அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை! ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி, தரவுகள் செறிந்த அமைப்புகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் வெறும் ஆய்வகத்தோடு நின்றுவிடாமல் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் செயல்பாட்டுத் துறைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 2013-ஆம் ஆண்டு முதல் சிட்னி பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு மற்றும் தொழில் சார்ந்த ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவரது ஆய்வுகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேகலாவின் கல்விப் பயணம் ஈழத்தின் பெருமைமிகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர், பின்னர் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மாதிரியாக்கத்தில் தனது முனைவர் பட்டத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து சிட்னி பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்கான பட்டயத்தையும் பெற்றுள்ள இவர், தொழில்நுட்பத் துறையில் பெண்கள் கால்பதிப்பது அரிதாக இருந்த காலத்தில் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியுள்ளார். இது ஈழத் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள பெண் சமூகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. அறிவியல் துறையில் ஈழத்து அடையாளத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தி வரும் கலாநிதி மேகலா பாலமுரளி அவர்களுக்குத் தமிழ் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இவரது சாதனைகள் வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. HR Tamil News
  10. @ரசோதரன் நீங்க‌ள் தெரிவு செய்த‌ நேபால் அணி க‌ட‌சி க‌ட்ட‌த்தில் எப்ப‌டி அடிச்சு ஆடினார்க‌ள் என்று பாருங்கோ...............என‌க்கு இங்லாந் அணியையும் அதிக‌ம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ம‌ற்றும் ம‌ட்டைய‌டி இர‌ண்டு அருமை..................என்ன‌ இங்லாந்தை போல் 50க்கு மேல் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌ம் நேபாள‌த்தில் இல்லை இருக்கிற‌ ஒன்று இர‌ண்டு மைதான‌த்தில் விளையாடி சர்வ‌தேச‌ப் போட்டியில் சாதிக்கின‌ம்...........................
  11. நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன் அப்கானிஸ்தான் அடிச்ச‌ 182ர‌ன்ஸ் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் என‌ நினைத்தேன் எப்ப‌டியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் ம‌ட‌க்கி போடுவின‌ம் என‌ நினைத்தேன்..............சென்னை மைதான‌த்துக்கு 182பெரிய‌ ஸ்கோர்............நியுசிலாந் வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தால் 17ஓவ‌ரோட‌ விளையாட்டை முடித்து விட்டின‌ம்.............................
  12. நேபால் ந‌ல்ல‌ அணி என்ற‌த‌ தொட‌ர்ந்து நிறுபிக்கின‌ம் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்காவை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து க‌ட‌சி ஓவ‌ரில் தென் ஆபிரிக்கா வீர‌ர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌தால் 2ர‌ன்ஸ் அல்ல‌து மூன்று ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி வ‌ள‌ந்து வ‌ரும் அணிக‌ளில் நேபால் அணியும் ஒன்று..........................
  13. மைடியர் மீனா உன் ஐடியா என்ன ........! 😍
  14. அப்ப என்ன, இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கை..... மூவரில் யார் முதலில் தோற்பது என்பதுதான் போட்டியோ. ஏதோ ஒரு சிறிய அணி அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  15. ரச்சின் துப்பரவா கணிக்கவேயில்லை. பந்து அப்பிடியே காலுக்கும் மட்டைக்கும் இடையால போய் விக்கட்டை உடைக்கும். நீங்கள் தெளிவாச் சொல்லியிருக்கிறீர்கள்
  16. லன்கன்ஸ் ஆருகாண்டியோ புல்லுப்போட்டு பொங்கினவை ...இப்ப அவைக்கே ஆபத்து...ரத்நாயக்கவும் அவுட் ..இந்த மச் வெல்லவிட்டால் உவை நாட்டில் இருந்தபாடில்லை
  17. 2009 இதன்பின்புதான் தமிழன்யார்? தமிழ் பேசுபவன்யார்?? தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்??? என்பதனை அறியமுடிந்தது.
  18. பொய்யுரை - சுப.சோமசுந்தரம் இக்கட்டுரை பொய்மையும் வாய்மையிடத்த பொய்யுரை பற்றியது. இரண்டொரு எடுத்துக்காட்டுகளுடன் அத்தகு பொய்யுரையை நிறுவ முற்படுவது. சமீபத்தில் நண்பர் ஒருவர் திருக்குறள் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில், "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" (குறள் எண் 37) என்றுள்ள குறளுக்கு உரைகள் பலவற்றிலும் பொருள் தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று தம் மனக்குறையை வெளியிட்டார். பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாளர்கள் 'கர்மா'வின் அடிப்படையில் தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல, பல்லக்கைத் (சிவிகை) தூக்குபவனும் (பொறுத்தான்) அதில் அமர்ந்திருப்பவனும் (ஊர்ந்தான்) அவர் தாம் செய்த அறத்தின் பயனை இவ்வாறு அனுபவிக்கின்றனர் எனச் சொல்ல வேண்டியதில்லை (தானாக விளங்கி நிற்பது) என்று சொல்லிச் செல்கின்றனர். வள்ளுவனைச் சிறந்த பகுத்தறிவாளனாய்ப் பார்த்துப் பழகிய நமக்கு குறளின் பொருள் வேறாய்த் தொனிக்கிறது. நமக்கு மட்டுமா ? ஜி.யு.போப், மு.வரதாசனார், சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோருக்கும் அவ்வாறே தொனிக்கிறது. ஆனால் குறளைப் போலவே பொருளையும் அவர்கள் இரத்தினச் சுருக்கமாய்ச் சொல்லியதால் சிலருக்குப் பொருள் புலப்படாமல் போயிருக்கலாம். எனவே அந்த சிலர் உணர விரித்துரைக்கும் தொழிலை நாம் மேற்கொள்ளலாமே ! "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" (குறள் 319) போன்று நாம் செய்த குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதெல்லாம் முதிர்ச்சி குறைந்தோரை மிரட்டி அறவழி செலுத்துவதற்காகவே. இது சமூக நன்மை கருதி அறன் வலியுறுத்துவோரின் மேன்மைதகு பொய்யுரை. இதனை இக்கட்டுரையில் சுட்டப்படும் முதல் பொய்யுரை எனக் கொள்ளலாம். மற்றபடி முதிர்ச்சியுடையோர்க்கு இப்பொய்யுரையெல்லாம் தேவையில்லை. அறவழி நடத்தலே சமூகத்தில் இன்னல்களைத் தவிர்ப்பது என்று அன்னார் உணர்ந்து செயல்படுவர். எனவே ஒருவன் இன்று அல்லலுறும்போது அது அவன் முன் செய்த தீவினையால் என்று பழிக்கும் மனநிலை, நமது பொய்யுரையாலோ என்னவோ, வாழ்வில் பக்குவம் பெறாதோர்க்கு ஏற்படுவது இயல்பு (எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு தொழு நோயாளி இருந்தார். என் ஆச்சி, "அது அவன் முன்னம் செய்த பாவம்" என்று சொல்ல நான், "என்ன ஆச்சி இதெல்லாம்?" என்று அவளைக் கடிந்து கொண்டது உண்டு). அவ்வாறு பழித்தல் சரியன்று என்று அத்தகையோர்க்கு எடுத்துக் கூறும் பொறுப்பும் அறம் பேசுவோர்க்கு உண்டு. அப்பொறுப்பை சிரம் மேற்கொண்டு வள்ளுவன் தந்ததே முதலில் நாம் எடுத்த குறள் எண் 37. இன்று பல்லக்கு தூக்குபவனைப் பார்த்து இது அவன் முன்னம் செய்த தீவினையால் என்றும், பல்லக்கில் அமர்ந்திருப்பவனைப் பார்த்து அது அவன் முன்னர் நன்றாற்றியதால் என்றும் கொள்ள வேண்டாம் என்று குறள் உரைப்பதாய் நாம் உணர்கிறோம். இஃது பகுத்தறிவின்பாற்பட்டு பொய்யாமொழியின் தகைமைக்கு உற்றதாய் அமைகிறது. என்னைப் போன்ற இறை மறுப்பாளர் பலர், சமூகத்தில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கையுடன் இருக்கட்டுமே என நினைப்பதற்குக் காரணம் உண்டு. அதுவும் சமூக நன்மை கருதியே ! எந்தவொரு சமூகக் குழுவிலும் பக்குவம் பெறாத மானிடரே அதிகம் இருப்பர் என்ற எங்கள் எண்ணம் சற்று அடாவடித்தனமாக இருக்கலாம். இருக்கட்டுமே ! இறை மறுப்பிற்கு அதீதமான விவேகம் தேவை என்பது எங்களின் இறுமாப்பு என்றும் கொள்ளலாம். பக்குவம் பெறாதோரிடம் இறை நம்பிக்கை இருப்பதாலேயே, இறை மீது ஏற்படும் பயத்தின் காரணமாக ஓரளவு அறவழி நிற்கின்றனர் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே நாங்கள் இறை மறுப்பைப் பொதுச் சமூகத்தில் அடக்கி வாசிப்பதும், சில நேரங்களில் ஒரு படி மேற்சென்று, "அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று சொல்லிக் கடந்து செல்வதும் எங்களின் பொய்யுரை. எங்களால் வேறு என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் வேறு. இக்கட்டுரையில் அடியேன் எடுத்துக்காட்டாக வைக்கும் பொய்யுரைகளில் இது இரண்டாவது. மேற்கூறிய இரண்டிலும் பகுத்தறிவாளர்தம் பொய்யுரைகளையே பேசினோம் - same side goal போல ! அதிகம் பொய்யுரைப்போர் எதிரணியினர் அல்லரோ !அதிலும் அன்னார் கூறுவதெல்லாம் சமூக நன்மை சார்ந்த பொய்யுரைகள் அல்லவே !அறியாமையில் உழலும் அவர் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் அவர் கூறும் பொய்யுரைகளில் நல்லதாக ஒன்றினை மட்டும் எடுத்துக்காட்டி நிறைவு செய்ய எண்ணம். இப்போது நாம் கையில் எடுப்பது உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் பாடல் 9. "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லவன் சலமிலன் பேர்சங் கரன்" அருஞ்சொற்பொருள் : நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று மலைக்குக் காரணம் பெயரானது; ஆகவே வேங்கட மலைக்கு வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு அருணாசலம் எனவும் வழக்கு). முதல் வரியின் பொருள் : தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலம் மிக்கவன். இரண்டாம் வரியின் பொருள் : அவன் வேண்டியவர், வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளன் (சலம் இலன்). அவன் பெயர் சங்கரன். பாமரர் ஒருவர்க்கு இந்த இரண்டு வரிகளுக்கு இடையே உள்ள முரண் தெரிவதில்லை. முதல் வரியை எடுத்துக்கொண்டு, இறைவன் தன்னை நம்புபவர்களுக்கு மட்டுமே நன்மை தருவான் என்று கொள்வர்; இரண்டாம் வரியைத் தனியே எடுத்து அவன் வேண்டுதல் வேண்டாமை இலாதான் எனக் கொள்வர். எந்த ஒரு சமயமும் பாமரரிடத்தில் தன் இருப்பை நிலை நிறுத்த தன் இறைவன் ஒருவனே பக்தனுக்கான இளைப்பாறுதலைத் தர முடியும் எனப் பரப்புரை செய்வது வாடிக்கைதானே !ஆனால் பாடலை உய்த்துணரும் சான்றோர் இரு வரிகளுக்கு இடையே முரண் தெரிவதை எவ்வாறு கடப்பர் ? வரிகளை உற்று நோக்குங்கால், "அவன் நலமிலனாகவும் நல்லனாகவும் தெரிவதெல்லாம் அவரவர் மனதை அல்லது பார்வையைப் பொறுத்தது; மற்றபடி அந்த சங்கரன் மாறுபாடு இலாதவன்; தன்னை விழைந்தார் விழையாதார் அனைவருக்கும் நல்லன்" என்பதே பாடலின் உறுபொருளாய் நிற்பது என்பதை உய்த்துணர்வர். இவ்வாறு மாந்தரில் ஒரு சாரார்க்கு ஒரு பொருளும் மற்றொரு சாரார்க்கு வேறு ஒரு பொருளும் தந்து நிற்பது ஏதோ ஒரு வகையில் பொய்யுரைதானே ? இதனால் யாருக்கும் கேடில்லை என்பது வேறு. இங்கு வஞ்சகமோ ஏமாற்று வேலையோ இல்லைதான். பகுத்தறிவாளர் மக்கள் நலன் கருதி பொய்யுரைப்பது போல, தம் இருப்பைத் தக்க வைக்க யாருக்கும் தீங்கிழைக்காத பொய்யுரை மாற்றார்க்கும் உரிமையன்றோ ? எனவே பொய்மையும் வாய்மையிடத்த ...............................
  19. மிக்க நன்றி ஐயா. தமிழ் மொழியின் சிறப்பும் புரிகிறது ஐயா.
  20. தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன. அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. "தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது" என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார். அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். "ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்" என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்' பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் மகன் ரவி மேக்வால், தனது தாயை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார். காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார். "நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்" என்று ரவி பிபிசியிடம் கூறினார். காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். படக்குறிப்பு,கிராம மக்கள் காஞ்சன்பாயை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடியில் நம்பகமானவராகவும் நினைவில் கொள்கிறார்கள். தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். "அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன." தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், "இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்." என்றார். அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார். "நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். "அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்" என்று சுரேஷ் கூறுகிறார். கிராம மக்கள் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாயின் மைத்துனர் திலீப் மேக்வால் அங்கன்வாடிக்கு வருவதற்குள், கஞ்சன் பாய் தரையில் விழுந்துவிட்டார். காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார். அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்."நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை." சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், "அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்" என்று அவர் கூறினார். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா டி சுயஉதவி குழுவின் தலைவராக இருந்து அங்கன்வாடி பணிகளை கையாண்டார். சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், "அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது," என்று கூறினார். "அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்." என சந்தீப் சர்மா கூறினார். அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும். காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள். "காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று ஒரு கிராமவாசி கூறினார். திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் வீட்டுக்கு வெளியே திரண்ட கிராம மக்கள் காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார். "வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்" என்று ரவி கூறினார். ரவி கூறுகையில், "வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்." "தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார். கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." கிராமத்தில் நிலவும் அச்சம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். "பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்" என்று ரவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20d0d1xz5qo
  21. இப்படியும் சில தெய்வத் தாய்கள் வாழ்ந்திருக்கிறார்கள் . ......!
  22. நம்ம அம்மணிகள் கிட்ட இந்த பலன்ஸிங்க் எல்லாம் ஜுஜுபி .......! 😂
  23. சென்றமாதம் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றார்.
  24. உங்களுக்குப் புரியுது. அதுவரையில் மகிழ்ச்சி.
  25. செம்பாட்டான் கூறுவது, ஒரு தரமான ஆட்டக்காரரை என்றைக்கும் சரிவரமாட்டார் என ஒதுக்கி விடக்கூடாது என்பதே! நீங்கள் பி பி எல் பார்த்திருப்பீர்கள் அவுஸ்ரேலிய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களையும் விட சிமித்தான் அதிக ஓட்ட விகிதத்துடன் அதிக ஓட்டங்களை எடுத்திருந்தார் என கருதுகிறேன் (கெட்டும், டேவிட்டும் விளையாடவில்லை). சிறந்த ஆட்டக்காரர்கள் போர்மிற்கு வந்தால் அணிக்கு மிக நன்மையாக இருக்கும், சிமித்திற்கு உலக போட்டி அணியில் இடமில்லை.
  26. கமலுக்கு தெரியவில்லை உண்மையில் அண்ணா சோழவம்சதின் நேரடி நீட்சி என்று. அண்ணா காஞ்சிபுரம் (கஞ்சிவரம்) முதலியார் - இவர்கள் இப்போதும் தென்கரை மூலநாத சாமி கோயிலில் இருக்கும் சவான் கல்லை (நவகாண்டத்துக்கு எழுப்புபப்பட்டு இப்போதும் உள்ள, நவகாண்டம் அநேகமாக அரச உறவுகளில் ஒருவரே செய்வது) பூசிப்பவர்கள். அனால் இதன் ஆதி வரலாறை சொல்வது கந்தபுராணம் - வீரவாகுதேவர் மற்றும் சோகோதர்கள் முருகனால் அனுப்பப்பட்டது, முசுகுந்த சோழ இராச்சியத்தை மீட்பதற்கு , பரப்புவதற்கு (சுருக்கமாக). அதில் முடிவின் தறுவாயில் இருந்த (சிறிய) சோழவம்சத்தை, வீரஆகுதேவரின் மகளான சித்திரவல்லியை முசுகுந்த சோழன் மணம் முடித்து தொடங்கி, பின் விருட்சமாகிய சோழவம்சம் என்று (சுருக்கமாக). (இந்த (அரச) இறைவரம் என்ற பகுதி பாண்டியர், சேரருக்கு இல்லை) ஆம் அண்ணா (வரலாற்றில் சரியாகத் தான்) குறிப்பீடான அரியணையில் ஏற்றப்பட்டார்.
  27. கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன. அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே. இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. அதாவது -- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது. குறிப்பாக -- பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது. அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள். அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக -- தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது. பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச. அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன. சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. “வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது. அது மாத்திரமல்ல -- 13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார். கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது. ஆகவே -- இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் -- இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால் --- 13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு. அதேவேளை -- இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது. அதாவது -- கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது. அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே -- 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது. குறிப்பாக -- அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது, ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது. ஆகவே -- ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது. அதாவது --- கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆகவே --- 'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது. எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் --- குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால். அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262
  28. ஏன் ஜி ? அடிக்கடி நட் லூஸ் ஆகுமோ😂?
  29. யார் சாமி நீங்க. லண்டனுக்கு வந்தா ஒரு எட்டுப் பாத்திட்டு, பேசாமப் போயிடனும் போல கிடக்கு. 🤣
  30. The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.
  31. இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.
  32. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  33. முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல.. கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂 -கோஷான் சே- ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள். இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀
  34. எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும். இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன். அச்சொட்டாக…😀 முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே…. சாட்சாத்…😀
  35. இதை நகைசுவையாக பகிர்கிறீர்கள் ஆனால் இலண்டனில் சில கிழக்கு ஐரோப்பியர் தமது வீட்டுக்கு வெளியே உள்ள பொது வீதி பாதுகாப்பு தரிப்பிடத்தில் bin ஐ இழுத்து இடம் பிடிப்பார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் cone ஐ வைப்பார்கள்😀
  36. எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.
  37. நாளை ஞாயிறு 08 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZ இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு முட்டை கிடைக்கும்? 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG எதிர் NEP 22 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் ரசோதரன் இந்தப் போட்டியில் @ரசோதரன் புள்ளிகள் எடுக்கும் யோகம் இருக்கின்றதா? 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL எதிர் IRE 21 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் இருவர் மாத்திரம் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அயர்லாந்து நிலாமதி நந்தன் இந்தப் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  38. பாக்கிஸ்தான் சிம்பிலா வென்று இருக்க‌ வேண்டிய‌ விளையாட்டை..............க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை போன‌ பின்பு தான் வென்ற‌வை...............................
  39. அப்போதே ஆமையின் பல்லை தட்டி கையில் கொடுத்திருந்தால் திருமா, குருமா எல்லாம் இப்படி கருமாத்திர வரலாற்று திரிபை சொல்லும் தைரியம் வந்திராது. ஆமைகதையை பொய்யான தெரிந்தும் கடந்து போனதன், இல்லை உண்மைதான் என் பொய் சாட்சி சொன்ன புலம்பெயர் புஸ்வானங்கள்தான் இந்த இழிநிலைக்கு முழு பொறுப்பு! பச்சை பொய். திருமாவுக்கு மறை கழண்டு விட்டதா? ஏரம்பு ஆரம்பத்தில் காதலை எதிர்த்தார் என நானும் கேள்விபட்டுள்ளேன். இதற்கு பல காரணங்கள் சொல்லபட்ட்டாலும், எந்த தந்தையிம் ஒரு ஆயுத போராளிக்கு மகளை கொடுக்க தயங்குவார். அதுவும் பாலா அண்ணையின் புத்தகம் சொன்னது போல் இப்படி இந்தியா போய் திருமணமானால். இதில் வியப்பேதும் இல்லை.
  40. இங்கே இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைவர்களே வெறுத்து பேசுமளவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தலைவர் ரம் பேசியுள்ளார். அனேகமாக இது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.
  41. ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.
  42. சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மூலமாக ஒப்பந்தம் செய்து 2.5 லட்சம் முற்பணமும் வழங்கி வேலையை தொடங்கச் சொன்னால் அவர் தொடங்காது காலந்தாழ்த்திக்கொண்டிருந்தார். காலதாமதமாவதால் அதிருப்தி அடைந்த வைத்தியர் தனது கொழும்பு றோயல் கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஊடாக பிரதமர் ஹரிணியின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் இப்பிரச்சனையை சொன்னபோது அவர் தான் இராணுவத்தினரைக் கொண்டு கட்டும்படி கூறியிருக்கிறார். அவ்வாறு தான் இந்த பாடசாலை கட்டப்பட்டது. இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த 50 பேருக்கு மேல் இப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த பிரிவில் 30 மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். சாவகச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாறர் மேலும் 5 லட்சத்தை ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வாங்கிவிட்டார். அப்பாவின் தாய் மாமாவின் மகன் தான் இந்த வைத்தியர். 2010 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்தியருடைய அம்மாவின் இறுதிச்சடங்கின் போது அப்பா அவரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தவர். டொக்ரர் ஆறுமுகம் இராசையா நினைவாக அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யும்படி. அதனை ஞாபகம் வைத்திருந்தாரோ என்னவோ இந்த அரும்பணியை செய்து முடித்துள்ளார்.
  43. ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?
  44. நான் சம்பந்தனை புகழவில்லை. மாறாக 2009 அழிவிற்கு பின்னர் சகல தகுதியுமுடையவராக ஈழத்தமிழர் தரப்பில் சம்பந்தன் மட்டுமே இருந்தார்.இனக்கலவரங்கள் தொடக்கம் சகல அழிவு அனுபவங்களை பெற்ற முதுபெரும் அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்தார். வெளிநாட்டு ராஜதந்திரிகள் கூட சம்பந்தனை மட்டுமே தமிழ் தரப்பு அரசியல் தலைமைப்பீடமாக கருதி சந்திப்புக்களை/பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். உண்மையில் கோட்டையை தவறவிட்டவர் சம்பந்தன் மட்டுமே. ஆயுத போராட்டத்தை கைவிட்டு இணக்க அரசியல் செய்த கும்பல்களாலும் இன்றுவரை எதுவுமே செய்யமுடியவில்லை என்பதை கவனத்தில் எடுப்பீர்களாக.
  45. ’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது. குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது. பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன. உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார். அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும். வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088
  46. பாட்டுக்கு பாட்டெடுத்து .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.