Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. நான் யேர்மனி வந்து அந்த நாட்டுக் கலாச்சாரத்தில் பழகிய சில காலத்தின் பின்பு பிறந்தமண் சென்றிருந்தேன். அங்கு நான் சுவைத்த ஒரு இனிப்பைச் சுற்றிய பேப்பரைப் போடுவதற்கு என் உணர்வு குப்பைத்தொட்டியை தேடவைத்தது. அனேகமாக மேலைநாடு வந்து திரும்ப ஊர்சென்ற கள உறவுகள் பலருக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணுகிறேன்.
  2. எனக்குச் சீண்டித்தான் அமைந்தது……….இறைவன் கொடுத்த வரம்.🥰
  3. நிலமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஓணான் அல்ல ஓணாண்டி அவர்கள். அது வாசிப்போரின் உள்வாங்கலைப் பொறுத்தது சுவி அவர்களே!🤔 சும்மாதான் ஒரு சீண்டல் சுவி.😁
  4. எங்கள் பாட்டனார் அருனாசலம் அவர்களின் குடும்பச் சொத்தான திருநெல்வேலி பழங்கிணத்தடி பிள்ளையார் கோவிலில் எனது பெரியப்பாவும் தனக்குத் தெரிந்தவகையில் தேவாரம்பாடி பூசை செய்து வந்தார். பெரியப்பா இறந்ததும் கோவில் சற்று விசாலமாகக் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு, சிறிய மண்டபமும் கட்டிப் பிராமண ஐயர் தற்போது பூசை செய்துவருகின்றார்..
  5. பாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகலாம். ஆனால் பக்கத்தில் இருக்கும் மக்கள் நலம்கருதாத சுயநல இனவாதிகளை அதிகம் கொண்ட எதிர்க்கட்சி உலகானது….. ஆடுவது எப்போ விழும் கௌவித்தின்று ருசிக்கலாம் என்ற பின்னால் திரிகிறதே? அதிலிருந்து தப்பிவர அல்லது அதனை நல்வழிப்படுத்த நடவடிக்கை ஏதும் உள்ளதா?? இரண்டு கொழுத்த பெரிசுகளும் அங்கு இணைய வருவதாகச் செய்திகளும் வருகின்றனவே!.🤔
  6. கொழும்பு தபால் கந்தோரில் வேலைசெய்யும் ஒரு ஊழியர் தபால்களைப் பிரித்து அனுப்பும் போது கனமாக உள்ளவற்றைக் கிலிக்கிப் பார்த்து உள்ளே காசு பணம் பெறுமதியான பொருட்கள் இருந்தால் ஆட்டையைப் போடுவது வழக்கமாம். ஒருமுறை கனதியான சரை ஒன்று இந்தியாவுக்கு அனுப்பும் தபாலில் இருக்க ஆவலோடு பிரித்துப் பார்க்க, அது வீபூதி நிறைந்த சரையாக இருந்தது கண்டு சிவ சிவா என்று அள்ளி நெற்றியிலிட்டு, வாயிலும் போட்டுப் பின்பு அத்துடன் இருந்த கடிதம் ஒன்றையும் பிரித்துப் பார்த்தாராம். “அன்புள்ள மாமா அறிவது! இத்துடன் இருக்கும் எங்கள் தாத்தாவின் அஸ்தியை கங்கையில் கரைத்து அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளவும்”.😂🥵
  7. உக்ரெயின் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. பிரிந்தபின் சிவனே என்று இருந்திருக்க வேண்டும். நாட்டோவை நாடியதால் நட்டாற்றில் நிற்கிறது. இலங்கையில் தமிழ் சிறார்களை குண்டுபோட்டுக் கொண்ற பழியும் சும்மா விடாது.
  8. பூமிக்கு வெளியேஉள்ள சிறிய கோள் ஒன்று பூமியைத் தாக்கி அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. அதைவிடச் சிறிய கோள் ஒன்று பூமியின் உள்ளே இருந்து பூமியைத் தாக்கி அழிவுகளை ஏற்படுத்த முயல்வதை நாங்கள் காண்கிறோமே.😳
  9. தமிழ் Mirror ஏன் தானும் குழம்பி எங்கள் பிழம்பையும் குழப்பியது? ஊழல் (கையூட்டு) அங்கும் உள்ளதா??🤔 தம்பி தமிழ் சிறியையும் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டதே???😢
  10. அந்த காலம் . ஊசி போடாத Doctor. சில்லறை கேட்காத Conductor .. சிரிக்கும் police... முறைக்கும் காதலி .. உப்பு தொட்ட மாங்கா .. மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... Notebookன் கடைசிப்பக்கம் ... தூங்க தோள் கொடுத்த சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்.. இப்பவும் டேய் என அழைக்கும் தோழி .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா... கோபம் மறந்த அப்பா .. சட்டையை ஆட்டய போடும் தம்பி.. அக்கறை காட்டும் அண்ணன்.. அதட்டும் அக்கா ... மாட்டி விடாத தங்கை.. சமையல் பழகும் மனைவி ... சேலைக்கு fleets எடுத்துவிடும் கணவன் .. வழிவிடும் ஆட்டோ காரர்... High beam போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி தேங்கா .. 12மணி குல்பி .. sunday சாலை ... மரத்தடி அரட்டை ... தூங்க விடாத குறட்டை ... புது நோட் வாசம்.. மார்கழி மாசம் .. ஜன்னல் இருக்கை .. கோவில் தெப்பகுளம் .. Exhibition அப்பளம்.. முறைப்பெண்ணின் சீராட்டு ... எதிரியின் பாராட்டு.. தோசைக்கல் சத்தம் .. எதிர்பாராத முத்தம் ... பிஞ்சு பாதம் .. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது ., சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., மிதி வண்டி வைத்திருந்தோம்., எம்ஜிஆர், கலைஞர் உயிரோடு இருந்தார்கள். ரஜினி, கமல் படம் ரிலிஸ். கபில் தேவின் கிரிக்கெட் . குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., எல்லோரும் *அரசு* பள்ளிகளில் படித்தோம்., சாலையில் எப்போதாவது வண்டி வரும்., தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்., மயில் இறகுகள் குட்டி போட்டன, புத்தகத்தில் ., மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, ஆங்கிலம் ., ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர் ., பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.., கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா அழகி* ... பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ... கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை ... 7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் #பாட்டி.. பாட்டியிடம் பம்மும் #தாத்தா ... எல்லா வீடுகளிலும், #ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது வீடுகளின் முன் #பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள் #சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம் ஆடி 18 #தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம் பருவ பெண்கள் #பாவாடை தாவணி உடுத்தினர்., சுவாசிக்க #காற்று இருந்தது., #குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., தெருவில் சிறுமிகள் #பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் #நுங்கு வண்டி ஓட்டுவோம்., இதை எழுதும் நான் .. படிக்கும் நீங்கள் .. இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .. கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., அனுபவித்தவர்கள் யார்? யார்? மனசுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு வருமே!! உண்மையா? இல்லையா? David Samuel Rajah.
  11. இப்போதே வாழ்த்திவிட்டால்? என் பிறந்தநாளுக்கு எவர் வாழ்த்துவார்கள்??🤨 தப்புக் கணக்கு போட்டுவிட்டேன்.😩😭
  12. இந்த விடையத்தில் யேர்மானியரைப் போற்றவேண்டும். ஒருமுறை நான்வந்த புதுதில் என் பெயரிட்டு யேர்மனி என்ற முகவரிமட்டும் இட்ட என் நண்பர் ஒருவரின் கடிதம் என்னை வந்தடைந்தது.😁
  13. அப்படி அல்ல தங்கையே, “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” அப்படித்தான் வாகனம் அமைவதும்.🙏 நான் யேர்மனி வந்து முதன் முதலில் வாங்கிய வாகனம் 500டிஎம், அது எங்களைச் சுவிஸ், இத்தாலி, டென்மார்க் என்று சில ஐரோப்பிய நாடுகளுகளும் சுற்றிவர எந்தத் தடங்கலும் தராது உழைத்தது. இரண்டு வருடங்களின் பின்னர் வேறொருவருக்குச் சொந்தமாக சென்றபோது 500யூரோ பெற்றுத் தந்துவிட்டுச் சென்றது. இது கற்பனையோ, கடாச்சலோ இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் சாட்சி. எனது நண்பர் ஒருவருக்கும் இப்படி ஒரு வரம் இங்கு கிடைத்தது. அவர் இப்போது லண்டனில் இருக்கிறார்.🤩
  14. மன்னிக்வேண்டும் பகிடி அவர்களே! நான் சம்பந்தரை மறந்ததென்ன.🤔
  15. அல்வாயனையே கவி வாயனாக்கிய அந்த அழகுமங்கை யரோ??🏃🏽‍♀️
  16. முன்பு ஆபிரிக்கர்களை விலங்கிட்டுக் கொண்டுவந்தார்கள். தற்போது இந்தியர்களை விமானத்தில் அனுப்புகிறார்கள், இது பெருமை அல்லவா! 😁
  17. நுணாவிலான் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌💐
  18. ஆமை புகுந்த வீடும் அமீனா(சும்)புகுந்த வீடும் விளங்காது.😳
  19. மோகன் அவர்களுக்கு மிக்கநன்றி! புதிய களம் என்னைப் பரவசமடையச் செய்தது. பல ஆண்டுகள் கழிந்த பழைய பதிவுகளும் வெளிவந்து, நானா பதிந்தேன்? என்று என்னை ஆச்சரியப்பட வைத்தது. இது என்னை மட்டுமல்ல பல கள உறவுகளையும் மகிழ வைத்திருக்ககும் என நம்புகிறேன்.😁🙏
  20. இதைத்தான் சொல்வது, உண்டி கூழுக்கு அழுகுது, கொண்டை பூவுக்கு அலையுது.
  21. நாடாளுமன்ற உறுப்பினர்களால் சாவகச்சேரி பிரபலமடைந்து வருகிறதின் மர்மம் என்ன?🤔
  22. என் விருப்பப்படி நீ நடக்கவேண்டும் என வேண்டி வாக்குப் போடுவதிலும், ஒரு லஞ்ச ஊழல் தலைகாட்டுவதுபோல் தெரிகிறது. 🤔😝

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.