Everything posted by Paanch
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
விமான நிலையங்களில் அந்தக் காந்தப்புல பரிசோதனை வளைவூடாக நான் செல்வதில்லை. வைத்தியர் தந்த எச்சரிக்கை அட்டை ஒன்று என்னிடம் எப்போதும் இருக்கும். அதனைக் காண்பித்தவுடன் என்னைத் தனியாக ஒருவர் அழைத்துத் தடவி பரிசோதிப்பார். ஒருதடவை அழகான இளமங்கை ஒருவர் என்னை அழைத்துத்து உச்சம் தலைமுதல் உள்ளம் கால்வரை தடவி பரிசோதித்த சம்பவமும் உண்டு.🤗
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
உங்கள் அனுபவம் எனக்கில்லை என்றாலும் அம்மாள் வருத்தம் மனிதர்களுக்குத்தான் வரும் என்பதை அறிந்துள்ளேன்.
-
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
பொக்கிழிப்பான், சின்னமுத்து போன்ற வருத்தங்களை அம்மாள் வருத்தம் என்று சொல்வார்கள். அதற்கு மருத்துவரிடம் போவதில்லை, சீவல் தொழிலாளியிடம் சொல்லிப் பனம் கள்ளு வாங்கித் தருவார்கள். வீட்டுக்குப் பயந்து அருந்த முடியாதிருந்த கள் அருந்தும் ஆசையும் நிறைவேறும். அருந்தியபின் வந்த வருத்தமும் மாறிவிடும்.🤩
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
கால்தான் போச்சுது என்று பார்த்தால் கண்ணும் போச்சா.🫣
-
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨
-
ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.
ஆடு, மாடு, கோழி, மீன், முட்டை என்று மனிதர்கள் உண்ணும் ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்துக்குமே உயிருண்டு. அத்துடன் மாமிசம் மட்டுமல்ல நாங்கள் உண்ணும் தாவரங்கள் அனைத்துக்குமே உயிருண்டு என்பதை இன்றல்ல அன்றே மனிதர்கள் அறிந்துள்ளனர். அதிலும் சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் ஒரு சிலர் மாமிசம் உண்டாலும். உயிர்கொலை மகா பாவம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவேதான் வருடத்தில் ஒருமுறையாவது, மிகக் கசப்பான. உண்ணவே வயிற்றைக் குமட்டும் காத்தோட்டிக்காயை பொரித்து உண்டு அதன் கசப்பால் துன்பத்தை அனுபவித்து, உயிர்களைக் கொல்லும் பாவத்திலிருந்து சற்று விடுபடுவதாக ஒரு நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது. ஆகவேதான் அந்த நம்பிக்கையை வருடத்தில் ஒருமுறை வரும் ஆடி அமாவாசையன்று கடைப்பிடித்துப் பாவத்தைப் போக்கிக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
-
1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்
இந்த யோசனை உண்மையில் செயற்பட வேண்டுமானல் இனிப் பிறக்கப்போகும் சிங்களப் பிள்ளைகள் காடையர்களாக இல்லாது மனிதர்களாகப் பிறக்கவேண்டும். இருக்கும் சிங்களக் காடையர்கள் மனிதர்களாக மாறவேண்டும். அதுவரை யோசனை விழலுக்கு இறைத்த நீ்ர்தான். இது தவறான இடுகை. உலகில் மிகவும் சாதுவான உயிரினங்கள்கூட ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்புவதற்கு வீறுகொண்டு எழவேசெய்யும். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளும், அந்த இனத்தின் புத்த பிக்குகளும், இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளே இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தமிழர்கள் மேற்கொள்ள வைத்தது.
-
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
- முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
எங்களுக்கு இங்கு ஒரு இந்தியத் தமிழ் குடும்பம் அறிமுகமாகிப் பழகிவருகிறோம். இளம்குடும்பம், நேற்று அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது இட்லி அவித்துக் கொண்டுவந்தார்கள் நான் 3இட்லி சாப்பிட்டேன். இது பொ்யாகவோ, கேலிக்காகவோ எழுதவில்லை. சத்தியமாக உண்மை.- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ரமேஷ் என்பவருக்கு தற்போது 30 வயது என்று தெரிகிறது. இன்னமும் பால்குடி மறக்கவில்லையா.??🤔- புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
பிரபாகரன் படைகள் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் என்று நசூக்காக ஒரு விடயம் இதற்குள் செருகப்பட்டுள்ளது. இனி நாடகங்கள் பெரிதாக மேடைபோட்டு நடாத்தப்படும்.- ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌- பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
நான் ஆணாகப் பிறந்திருப்பதினால் ஆண்களுக்கு வக்காலத்து வாங்க வந்ததாக எண்ணவேண்டாம். இயற்கையின் படைப்பில், அதிகமாக உயிரினங்கள் அனைத்திலும், ஆணைப் பலம்கொண்ட பாதுகாக்கும் இனமாகவும், பெண்ணை மென்மையான பாதுகாக்கப்படும் இனமாகவும் படைத்திருப்பதின் நோக்கம் என்ன?? என் சிறு வயதில் நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், (Jungle cat) அதில் முதலை ஒன்றைக்கண்ட பெண்புலி, தன் குட்டிக்கு அதனால் ஆபத்துவருமோ என்று பயந்து ஏதோ ஒரு சமிக்கை கொடுத்து ஆண்புலியை வரவழைத்தது, ஆண்புலிவந்து அந்த முதலையோடு சண்டையிட்டு அதனைக் கடித்துக் குதறிக் கொன்றது. பயம் நீங்கிய பெண்புலி ஆண்புலியைக் கட்டித் தழுவி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. இயக்குனர் சில காலம் காட்டுக்குள் ஒழிந்திருந்ததாலேயே இந்தக் காட்சியைப் படம் பண்ண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.- பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
எம் முன்னோர்கள் எதற்காக ஒரு குழந்தையின் பிறப்பிற்கு தந்தையின் பெயரை அத்தாட்சிப்படுத்தினார்கள். அவர்கள் என்ன முட்டாள்களா? தந்தை எவர் என்று தெரியாத, அறியமுடியாதவிடத்து அந்தத் தாயை எங்கள் சமூகம் எப்படி அழைக்கும்.?????🫣- கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது
அடுத்தது தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்கள் நிறையவே இருக்கின்றனர்.☹️- சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
- சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
சுவிட்சர்லாந்து சிறீலங்கா போன்று மதங்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், மொழிகளுக்கும் முன்னுரிமை அளித்து ஆட்சி நடைபெறும் நாடல்ல. அங்கு வாழும் மக்கள் சிறப்பாக வாழ்வதற்கே முன்னுரிமை அளித்துவரும் நாடு.😌- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்
https://youtu.be/WowAJRrd_p0?si=XmTFNlGZ_gAUmE0e- அனுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு.
இவருக்கும் மடகாஸ்கர் நீதிமன்றம் கொடுத்த தண்டனைபோன்று கொடுத்தால் என்ன.🤔- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
தோணி வடிவில், படகு வடிவில் வாகனங்கள் தயாரிப்பதற்கு, வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் “நீர் உயர வாகனங்கள் உயரும்”🤪- அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham; பிறப்பு 4 மார்ச் 1938 மட்டக்களப்பு மறைவு 14 திசம்பர் 2006 லண்டன் இங்கிலாந்து. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகங்கள். சோசலிசத் தமிழீழத்தை நோக்கி · பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் · போரும் சமாதானமும் · மக்கள் திலகமும் மாவீரனும் ·- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
ஈழப்பிரியரே உங்கள் பிரசன்னம் மனதிற்கு ஆறுதல் தருகிறது.- முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
புலவரே! நீங்கள் என்னதான் உலகம் போற்றும் சிறந்த பாடல் எழுதினாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்க பல நக்கீரர்கள் யாழ்கழத்திலும் இருக்கிறார்கள்.🧐- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.🙌 மூனா அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்…..உறவுகளுக்கு இப்போது விளங்கியிருக்கும்.😁- அனீரிஸம்: இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?
இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣 - முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.