Everything posted by goshan_che
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சூப்பர் அண்ணா. நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான். தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும். முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣. கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன். ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன். குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்… மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா? -பெரியார் திரைப்படப்பாடல்- நெஞ்சு கூடு கட்டும். தொய்வு வரும். கண்பார்வை மங்கும். இதெல்லாம் கூட ஓக்கே… கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இன்றும் நம்பாமல் ஆனால் கடைப்பிடிக்கும் சனி பயம்கள் 1. நல்லெண்ணையை கையில் வாங்கினால் அவர்களின் சனியன் எமக்கு தொத்தி விடும் 🤣 2. காலை கழுவும் போது குதி மேற்பகுதியை கழுவாவிட்டால், நளன் போல எம்மையும் சனியன் பிடிக்கும் 3. ஏழரை, அஷ்டமாத்து காலங்களில் சனிகிழமையில் மச்சம் சாப்பிட்டால் சனி கேமை கேப்பார் 4. பிரட்டாசி மாசம் சனி விரதம் பிடிச்சு எள்ளெண்ணை ஏரிக்காட்டில் சனி கேமை கேப்பார் 5. விரத சோற்றை சனிக்கு படைத்து அதை காகம் தின்ன முதல் நாம் தின்றால் சனி கேமை கேப்பார்
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தியை இந்த கோமாளி சர்க்கஸ் காட்டி நீர்த்துபோக செய்கிறார்.
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
ஒரிசாவுக்கு அண்மையில் கடலில் தொலைந்து இங்கே நீரோட்டம் கொண்டு வந்து விட்டிருக்கலாம். விஜயனும் தோழர்களும் வந்தது போல.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்🤣 2. கருணாநிதி தமிழ் உணர்வாளர் 3. இந்திரா காந்தி எமக்கு “அன்னை” 4. மேற்கு நாடுகள் ஜனநாகத்தை மதிக்கும் 5. கம்யூனிச நாடுகள் பொதுவுடமை கொள்கையை மதிக்கும் 6. பாலா அண்ணை யதார்தத்தை எடுத்து சொன்னால் தலைவர் கேட்ப்பார் 7. ஓரளவுக்கு மேல் தமிழ் மக்களை இலங்கை அழிக்க உலகநாடுகள் விடாது 8. தலைவர் இல்லாமல் போனாலும் அவர் வழிநின்ற புலம்பெயர் செயல்பாட்டாளர் வழி தவற மாட்டார்கள் 9. சம், சும், விக்கி இதயசுத்த்தியோடு இன நலனுக்கு பாடுபடுவர்
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣
-
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
இந்தியா, ரஸ்யா, யூகே, ஜேர்மனி, முதல் 4 நாடுகளாக வருவதே வழமை. உக்ரேன் அநேகம் 10 வதுக்கு பின்புதான்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
ஒரு திமுக ரெளடி வசமாக சிக்கி உள்ளார். எல்லாரும் திமுக வை வச்சி செய்கிறார்கள். ஆனால் இந்த வாயை வாடகைக்கு விடும் ப்ரோ மட்டும் அமைதிகாக்கிறார்?
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
பதில்: அப்பன் குதிருக்குள் இல்லை 🤣
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும். —————————————- @island 1987 புலிகளும் ஜே ஆரும் இடைக்கால மாகாணசபை நிறுவலில் பிடுங்குபட்டார்கள். இந்த இடைக்கால சபையின் தலைவராக புலிகள் மூன்று ஆட்களை பிரேரிக்க அதில் ஒருவரை ஜே ஆர் தேர்வார் என உடன்பாடு காணப்பட்டது. மூன்று பெயர் களை புலிகள் பிரேரித்து அதில் ஒன்றை ஜே ஆர் தெரிய, அதன் பின் இல்லை தாம் கொடுத்த மூன்றில் இன்னொரு பெயர்தான் இந்த சபையின் தலைவர் என புலிகள் அடம்பிடிக்க அது அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பின் இந்தியன் ஆமியுடன் போர் வந்து விட்டது. இதில் புலிகள் வேண்டும் என அடம்பிடித்த ஆளின் பெயரும் சிவஞானம்தான். இவருவரும் ஒரே ஆளா?
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
அஞ்சலிகள்
-
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
2,000,000/365=5,479.452 நாளொன்றுக்கு 5,479.5/24=228.313 மணத்தியாலம் ஒன்றுக்கு 228/60=3.8 நிமிடத்துக்கு ——————- கட்டுநாயக்காவில் நாளொன்றுக்கு சராசரியாக 85 விமானங்கள் வருகை/செல்கை. 5480/85=64.471 ஒரு விமானத்தில் சராசரியாக 64 ஆட்கள் வந்தாலே வருடத்துக்கு 2 மில்லியனை எட்டி விடலாம். நாளுக்கு 6479 பேர் வந்தால் - 6479/85=76.224 ஒரு விமானத்தில் 76 பேர் வந்தால் போதும்.
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
மாற்றமின்மை ஒன்றே மாறாதது?
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
Bringing the police service in to disrepute. உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
அப்படி இருப்பின் அவர் இதை ஒரு எழுத்து உத்தரவாக போட்டிருந்தால் அதை அதிகாரி தட்டி கழித்திருக்க முடியாது. ஏன் வாய்மூலம் சிபாரிசு? ரெக்கோர்ர்ட்டில் இல்லாமல் அலுவல் பாக்கும் கள்ளத்தனம்? மாகாணசபை தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை, பின்கதவால் அனுபவிக்கும், பிரயோகிக்கும் ஒருவர்தான் இந்த ஆளுனரும் ஏனையோரும். இன்னும் ஒரு விடயம் தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு அதிகாரியை பொதுவெளியில் யார் என தெரியும் படி விபரம் சொல்லி விமர்சிக்கிறார்? இதெல்லாம் தலைமைதுவ பண்பு. இவர் எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி. அந்த அதிகாரியை பற்றி எனக்கு தெரியாது - ஆனால் இவர் அனுப்பி விட்டார் என்பதால் கூட்டத்தை விட்டு விட்டு அவர்களை சந்திக்க முடியாதே? வந்தவர்கள் நேராக அவரிடம் வராமல், ஆளுனர் மூலம் வந்த சிபாரிசு பேர்வழிகள் அவர்களுக்கு வெத்திலை வைக்க வேண்டும் என ஆளுனர் எதிர்பார்ப்பது அவரின் மமதையையே காட்டுகிறது. மிக முக்கியமாக - அதிகாரி நடந்தது தவறு எனில் ஏன் அவர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வில்லை? எடுத்தால் இவரின் அதிகார துஸ்பிரயோகம் - employment tribunal இல் நாறும் என்ற பயம்? எனவே தன் இயலாமையை மேடையில் கூறி உள்ளார்.
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை. என நீங்கள் நினைக்க இல்லையா? இமெல்டா சுகுமாருக்கும் இதுவே நடந்தது. அவர்கள் 2009 மேயிற்கு பின் அவர்களை பாதுகாத்தவர் எவரோ அவருக்கு தம் விசுவாசத்தை நிருபிக்க சிலதை செய்யவேண்டி ஆகியது. பின் அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது. பழத்தை கடித்த பின் ஆத ஏவாளுக்கே மீட்சியில்லை. ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நீங்கள் ஊகித்ததுதான் சரி. முதலில் இந்த Auxiliary என்பதை தொண்டர் என மொழிபெயர்ப்பவர்களை பிடித்து உதைக்க வேண்டும். எல்லா Auxiliary யும் volunteer Auxiliary இல்லை. இங்கே இவர்களுக்கு வேதனம் கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன். ஆகவே இவர்களை துணை-ஊழியர் என அழைப்பதே பொருத்தமாய் இருக்கும்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும் எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இந்த முறை ஆற்றை கலியாணவீட்டு பலகாரமோ…🤣 @Paanch @குமாரசாமி @தமிழ் சிறி சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியமாம். மனித உடல் தாங்குமா?
-
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
சுகம் அடைந்தது சந்தோசம்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பிறென்ன @Nathamuni யையும் கூட்டி வந்தாயிற்று. இனி டீம் பிரிச்சு விளையாட வேண்டியதுதான்😂.
-
திண்ணை
😀 ஓம் நான் சந்தித்த போதும் இதைதான் சொல்லி ஒரே கொம்பிளைண்ட்😂 அது சரி உங்க இன்னொரு ஆள் நீங்களும் நானும் ஒரே ஆள் இரெண்டு வேற ஐடியில வாறம் எண்டு கம்பு சுத்தினவர் கண்டனியளே😂. ஒரு மனிசன் நம்பி போன் நம்பரை தந்தா இப்படியா கயித்தை விழுங்க வைப்பியள் நாதம்😂.
-
திண்ணை
சரி சரி அலுவலை வடிவா முடிச்சுக்கொண்டு கெதியா வாங்கோ. வந்து ரெண்டு சுஜ ஆக்கம் போட்டால்தான் சரி வரும். நிர்வாகத்துக்கும் குளிர் விட்டுப்போச்சு😂
-
திண்ணை
கண்டது சந்தோசம் நாதம்ஸ். ஓம் உண்மை எண்டு தெரியும். கு சா அண்ணை படம் அனுப்பினவர். பார்க்க அப்படியே எம்ஜிஆர் மாரி தக தக எண்டு மின்னுறியள் போங்கோ. பிகு எப்படி யூகே எலெக்சன் நான் சொன்ன மாரியே ரிசல்ட் வந்துச்சு? கன்சேவேடிவின் தோல்வியின் அளவு உங்களை அதிர்ச்சிக்கு ஆக்கி இருக்கும்?