Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. பிரபல டவாலி கோசானின் கருத்துப்படி… ஒப்பந்தங்கள் வாய்மூல ஒப்பந்தங்களாகவும் இருக்கலாம். அதே போல் இந்த உறுதிமொழியும் வாய்மூலமாக இருப்பினும் அது அமல்படுத்தபடலாம்…ஆனால் அது தகுந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டதா, அந்த அதிகாரம் அவருக்கு இருந்ததா, இதனால் சபைக்கு வியாபாரிகள் கொடுத்த அனுகூலம் என்ன உட்பட பல விடயங்கள், சூழமைவு தெரிந்த பின்பே இது செல்லும், செல்லாது என சொல்ல முடியும். இது முன்னர் இருந்த நடைமுறையாயி இப்போ இதை ஏன் கைவிட்டனர் என்பதை சபை விளக்க வேண்டி வரும்.
  2. தம்பி…. அந்த வடை (பாலசிங்கம் கொடுத்த பேட்டியின் நகல்) இன்னும் வரவில்லை. அது வரும் வரைக்கும் நீங்கள் வாயால் வடை சுடுவது அம்பலம் ஏறாது. புலிகள் தமது இருப்புக்காக அல்ல இனத்தில்ல்ன் இருபுக்ககாகவே மாற்று இயக்கங்களை தடை செய்தனர். அசாத், புட்டின் தம் தனிமனித இருப்புக்காக ஒப்பிடவே முடியாத பெரும் மனித அழிவுகளை உருவாக்கினர். இரெண்டும் ஒன்றே - புலிகளின் தலைவரின் இருப்புக்காகவே அவர்கள் மாற்று இயக்கத்தை தடை செய்தானர் என்பது உங்கள் வாதம். உங்கள் co-conspirator தவிர வேறு யாரும் இதை யாழில் ஆதரிக்கவில்லை.
  3. நீங்கள் ஜேர்மனியில் எந்த கட்சியில் இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை அண்ணை. ஆனால் ஜேர்மனியின் எந்த கட்சியாயினும் அவர்கள் எல்லாரும் பிரதிநிதிதுவ ஜனநாயகம். சட்டதின் ஆளுமை, ஐரோப்பிய மனித உரிமை சாசனம் போன்ற சட்டங்களும் விழுமியங்களும் மதிக்கப்படும் ஒரு நாட்டில்தான் தம் அரசியலை செய்கிறனர். நீங்கள் AfD இல்லை என நினைக்கிறேன். கிரீன்ஸ் ஆக இருக்கலாம் என ஊகிக்கிறேன். ஆனால் நீங்கள் ரஸ்யாவையும், சீனாவையும், ஈரானையும் - மேற்கில் உள்ள ஜனநாயக நாடுகளோடு ஒப்பிட்டு எல்லாம் ஒன்றே என எழுதும் போது தான் பிணக்கு வருகிறது. இப்படி எழுத: 1. நீங்கள் சும்மா டைம்பாசுக்கு எழுத வேண்டும் அல்லது 2. மேற்கின் மீதான வெறுப்பில் எழுத வேண்டும் 3. அல்லது இன்னும் இருவர் போல் சம்பளத்துக்கு எழுத வேண்டும். இதில் மூன்றாவது இல்லை என அறுதியாக தெரியும். முதலாவதை ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது, ஆகவேதான் 2வது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இது மட்டும் அல்ல - எமது இழப்பில் மேற்கு அளவுக்கு ரஸ்யா, சீனா வுக்கு பங்கு இருக்கிறது என உங்களை விட வேறு எவருக்கும் தெரிந்ததல்ல. இருந்தும் மேற்கை மட்டுமே பழி சொல்வதுடன், ஒரு படி மேலே போய் ரஸ்யாவுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் - இந்தியா புலிகள் விடயத்தில் நடந்தது கூட சரி என்று எழுதினீர்கள். இதை வேறு எப்படி விளங்கி கொள்வது? புலிகள் விடயத்தில் இந்தியா நடந்தது சரி, என வாதாடும் அளவுக்கு உங்களுக்கு புட்டின் காதல். இப்படி காரைக்கால் அம்மையார் கடவுள் மேல் கொண்டதை ஒப்ப உங்கள் புட்டின் மீதான காதல் ஏன் வந்தது? அவர்தான் மேற்கின் எதிரி நம்பர் 1. அதே போல மேற்கில் எந்த பிழை இருந்தாலும், நாம் இலங்கையை விட பலமாக இருப்பது இங்கே மேற்கில்தான். எனவே மேற்கினூடுதான் எமக்கு ஒரு தீர்வு வர வாய்ப்பு அதிகம். ஒரு போதும் ரஸ்யா, சீனா மூலம் இது வராது. இது தெரிந்தும், பலதடவை எடுத்து சொல்லியும் நீங்கள் - தமிழருக்கு இரு தரப்பும் ஒன்றே என்ற பொய் சமன்பாட்டை மீள மீள எழுதிவருகிறீர்கள். இவை எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் - நீங்கள் மிக மோசமான மேற்கு எதிர்ப்பு மனோநிலையில் அவதிபடுவது தெளிவு. இது அநேகமாக உங்களோடு முரண்படும் நான் மட்டும் கண்ட உண்மை அல்ல. இதை உங்களுடன் மிகுதி அனைத்திலும் உடன்படும் நண்பர்கள் கூட எழுதியுள்ளார்கள். பிகு தனிப்பட்டு உங்களுக்கு தனிமனித துதிபாடும் hero worshipping tendency உள்ளது எனவும் நான் அபிபிராயப்படுகிறேன். தலைவருக்கு முன்பு முட்டு கொடுப்பீர்கள் அது நியாயமானது (இப்போ எல்லாம் இதை கடந்து போய் விடுகிறீர்கள், மினகெடுவதில்லை), ஆனால் அதே வீரியத்துடன் சீமானுக்கும், புட்டினுக்கும், லேட்டஸ்டாக அனுரவுக்கும் முட்டு கொடுக்கும் போது - தொலைந்த காதலியை காணும் பெண்களில் எல்லாம் தேடும் காதலன் போல தலைவரை இவர்களில் project பண்ணுவதாகவே எனக்கு படுகிறது. இதுவும் உங்கள் மேற்கு எதிர்ப்பை வலுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன்.
  4. இவரும் செய்யமாட்டார்…. ஆள் பார்க்கத்தான் உடுப்பும் நடையும்… பெட்டா மார்கெட்டில் பெல்ட் விக்க போனவர் போல இருப்பார்… ஆனால்….வேட்டிய கட்டிய அத்தனை இனவாதிகளிலும் ஒரு படி கூடிய இனவாதி இவர். வடக்கே தமிழர், தெற்கே சமுத்திரம் நான் எப்படி கால் நீட்டி படிக்க முடியும் என துட்ட கைமுனு தன் தாய் விகாரமாஹாதேவியிடம் சொன்னாராம். இந்தியா கேட்ட லிஸ்டை சிங்களம் கொடுக்காவிட்டால் நல்லது, இடையில் நாம் சைக்கிள் ஓடி 13 ஐயாவது தக்க வைக்ககலாம்.
  5. இதில் மாற்றுகருத்தில்லை. இடையில் உங்கள் சொக்கதங்கத்தை சொருவியாதால் தான் அப்படி கேள்வி எழுந்தது.
  6. அந்த மகன் காது குத்து விழாவில் புரோகிதரை கூப்பிட்டு அவர் சமஸ்கிருதத்தில் ஒத கைகட்டி நின்றாரே அந்த தன்மான சிங்கத்தையா சொல்றீங்க 🤣. முடிந்தால்…அவர் குடும்பத்தில் ஆரிய வணக்கத்தை கைவிட சொல்லுங்கள். பிறகு மிச்ச புரட்சிய ஆரம்பிக்கலாம். நீ வேணா உன்னை பார்ப்பனனாக பாவனை செய்யலாம். இந்து என எண்ணலாம்…. எமக்கு நீ என்றும் டேனியல் இராசையா தான் என மூக்கிலே குத்தி விட்டிருக்கானுனோ…
  7. ஓம். தினக்குரலுக்கு கலாநிதிக்கும் மருத்துவருக்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லை என நினைக்கிறேன். எனது அறிவின்படி MBBS/MD = மருத்துவர் அல்லது வைத்திய கலாநிதி ஏனைய PhD = கலாநிதி, அது மருத்துவ துறை PhD ஆயினும்.
  8. 👆76 வருடங்களின் பின் இதை எழுதி விளங்கப்படுத்த வேண்டி இருக்கிறது. 👇 பிகு எனக்கு அடித்தட்டு சிங்களம் சரளமாக வரும். தமிழ் நெடியே இல்லாமல். என்னை சூழ பலரும் எழுத படித்தார்கள். நடக்கும் அத்தனை கொடுமையும் இந்த மொழியின் திணிப்பில்தான் ஆரம்பமாகியது எனும் போது, பதின்மவயதினான என்னால் அதை படிக்க முடியவில்லை. இப்போ படித்திருக்கலாம் என என்ணுகிறேன். இலங்கையில் அனைவரும் மும்மொழி தேர்ச்சி பெறுவதே நல்லது. ஆனால் உங்களுக்கு சிங்களம் தெரிந்தபடியால் குடியேற்றம் நிற்காது. புத்தர் சிலையும் முளைக்காது விடாது.
  9. பேரா எம்பிபிஎஸ். பின் கொழும்பில் PGDip மற்றும் MSc. https://manthri.lk/en/politicians/jagath-wickramaratne
  10. உண்மையில் பாராளுமன்றம் இப்படி படித்தவர்களால் நிரம்பி வழிவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சகல துறை, வாழ்க்கை அனுபவம் உள்ளவர்களும் இருக்கும் போதுதான் அங்கே சராசரி மனிதன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக நடைமுறை அனுபவம் உள்ளோர். இல்லாட்டில் ஏட்டு சுரக்காய் போல் ஆகிவிடலாம். வைத்திய கலாநிதி என்றே நினைக்கிறேன்.
  11. சிவில் எஞ்சினியருக்கே தெரியாட்டி பிறகு நாங்கள் எங்க போறது ரசோ அண்ணை (உங்கள் பட்ஜை சொன்ன பின் ரசோ எண்டு அழைக்க ஒரு மாரியாக உள்ளது). ஒருவேளை - போடப்படும் materials ஐ கூல் பண்ண இப்படி நடக்கிறதோ? பாஸ்சுன்னே க்கள் கொங்ரீட் போடும் போது இப்படி எதையோ போட்டு தண்ணீர் ஊற்றுவதை கண்டுள்ளேன்.
  12. உண்மைதான். வதந்தியாம். மனிசன் சேர்பிக்கேட்டும் கையுமா வந்து சி ஐ டி யிடம் கம்பிளைண்ட் கொடுத்துள்ளார். https://www.newswire.lk/2024/12/16/energy-minister-shows-his-degree-certificate/
  13. தேவையில்லாத பென்ச்மார்க். பாராளுமன்றம் என்பதே சாதாரண குடிகளின் இல்லம்தான் (house of Commons, House of Representatives). அப்படி இருக்க பா . உ என்ற தகுதி மட்டுமே போதுமானது. தம்மை ஒரு technocratic அரசாங்கம் என பாவனை செய்யும் பில்டப் இது.
  14. அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு சொல்லுவம்🤣 கலாநிதியா, மருத்துவரா (வைத்தியகலாநிதி). ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது. எஞ்சினியர் என்பதை பெயருக்கு முன்னால் போடும் எனக்கு தெரிந்த ஒரே நாடு இலங்கை😆 சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.
  15. “சில நேரம் தொழில் செய்யும் இடத்தில் கூட்டமாக வந்து நிண்டு, யோவ் வாய்யா வெளியே எண்டு சவுண்டு விடுவார்கள், அப்படியான சந்தர்பங்களில் எதுவும் செய்யாது மிக்சர் சாப்பிட வேண்டும்” -கோஷானின் நேற்று வெளியிடப்பட்ட தொழில் ரகசிய குறிப்பில் இருந்து - 🤣
  16. குறைந்த பட்சம் இரெண்டு யூனியன் பிரதேசமாவது வேணும் யுவர் ஆனர் 🤣. 🤣இது உண்மையான பட்டம் என நினைக்கிறேன். முன்பே சட்ட முதுகலை முடித்திருந்தார்….முனைவருக்கு படிக்கிறார் என வாசித்த நியாபகம். முடித்துவிட்டார் போலும்.
  17. இஸ்ரேல் தமிழன் அல்ல யூதன். யாரை எங்கே எப்படி டீல் பண்ணுவது என்பது அவனுக்கு தெரியும்.
  18. இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார். அப்போ அவரோடு முரண்டு பிடித்த நீங்கள் இப்போ அதே வழிக்கு வந்துள்ளீர்கள். காலம் தாழ்தியாவது சரியான பஸ்சில் ஏறியுள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு சரியானதுதான். ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும்.
  19. மிக்க நன்றி. இதை வாசிக்க ஆங்கிலத்தில் லூஸ் கனன் என்பது போல் அருச்சுனாவும் ஒரு focus இல்லாமல் சுழட்டி அடிப்பதாக படுகிறது.
  20. நன்றி. அந்த உரையாடலை நினைத்து கொண்டு உறங்கசென்றிருப்பீர்கள் போலும். கல் நெஞ்சகாரன் நாதமுனியா அல்லது நான் சுகம் விசாரித்ததை சொல்லாத நீங்களா🤣. தனி மடலில் எப்படி பட்ட படத்தை அனுப்பி இருப்பீர்கள் என நினைத்து ஒரே குபீர்…🤣 இதுக்கேன் மன்னிப்பு. தவறுகளுத்தான் மன்னிப்பு 🤣. செல்லிய எல்லாம் செல்லிப்போட்டு, மன்னிப்பு கேக்கிய இல்லியா🤣
  21. 1. முருகன், ஜெய்சங்கர், நிர்மலா என தமிழ் பேசுவோரை வைத்து வரவேற்று ஒரு சின்ன ஜேர்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2. தரை வழி பாலம், எண்ணை குழாய், காற்றாலை, புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட்ட 5 ஐ நிறைவேற்றினால் - 13 ஐ வலியுறுத்த மாட்டோம் என சொல்லப்பட்டதாம். ஹபரண ல காந்தி… ஹரவபொத்தானயில மா வோ கேம் ஒவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.