Everything posted by goshan_che
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம். உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்…. செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.
- திண்ணை
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————- கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
-
திண்ணை
அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
-
கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்
என்னையா இது? ********* தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என. சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா? எவரையும் இல்லை. ஓம். ஆனால் அவர் அதிகாரத்தில் இல்லை. சாணாக்ஸ் குரல் கொடுக்கத்தான் வேண்டும். முன்பு பலதுக்கு போராடியும் உள்ளார். ஆனால் அவர் போராடமட்டுமே முடியும். அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம். நான் எங்கே இதை வேண்டாம் என்றேன்? அனுரவை கேள்வி கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாழ் போன்ற இடங்களில் அவரை தூக்கி தலையில் வைத்து ஏன் ஆடுகிறீர்கள் எண்டுதான் கேட்கிறேன்.
-
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை!
இதுவரை இந்தியாவை புறம் தள்ளுவோம் என கூறி கொண்டிருந்த முண்ணனியினர் இப்போ ஆக்கபூர்வ பங்களிப்பை கோருவது நல்ல நிலை மாற்றம். வரவேற்கிறேன். தமிழ் தேசிய கட்சிகளிடம் பொது நிலைப்பாட்டு எட்டப்பட இப்படியான நெகிழ்வு போக்கு அவசியமாகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இருவர் தான் முழு நேரம். நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣. தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம், பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣. எதை வைத்து சொல்கிறேன்? யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து. இது எல்லோரும் செய்வதுதான். எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம். சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை. என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை. நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
ஓம்…அது பாருங்கோ…உங்களுக்கும் எனக்கும் கதியால் சண்டை…. அதுதான்…உங்களோடு பொருதுகிறேன்….🤣 என்னை பொறுத்தமட்டில் அனுரவை யாழில் தூக்கி பிடிப்பதில் முதன்மையானவர் நீங்கள். அந்த அரசியலினை விமர்சிக்கும் போது நீங்கள் collateral damage. அதுக்காககதானா யாழில் கிடந்து முக்குகிறீர்கள்.
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ…. அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்…. வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல. இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன். இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல). இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அனுர அல்லவோ ஜனாதிபதி. இனவாதம் களைய பிறந்த மீட்பர். அவரைத்தான் கேட்கவேண்டும்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
செத்து…செத்து…விளையாட இது என்ன தமிழ் நகைச்சுவை படமா?🤣 இது கட்சி யாப்பு என்ன சொல்கிறது என்பதை பொறுத்தது. 1. இராஜினாமா செய்ததன் பின் - அதை மத்திய குழு அல்லது வேறு எவரும் ஏற்பபின்பே அது செல்லும் - என யாப்பு கூறின், அவ்வாறு நடக்க முன் மாவை ராஜைனாமாவை வாபஸ் பெறலாம். 2. அப்படி இல்லாமல் ராஜினாமா செய்யாலே - அந்த நொடி முதல் அது செல்லும் என யாப்பு கூறின். வாபஸ் வாங்க முடியாது. 3. நடக்கும் இழுபறியை பார்த்தால் - யாப்பு இதில் எதுவும் கூறாமல் silent ஆக உள்ளது போல் உள்ளது. அதுதான் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம். செல்வா, அமிர், பெரிய பெரிய சட்டத் தூண்கள், சுமன் எல்லாரினதும் யாப்பு எழுதும் இலட்சணம் இதுதான்🤣.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.