Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அருமை. ஆனால் யாழ் போன்ற பொதுவெளியில் கூட இது வழமையானதுதான், இதுதான் பிழைக்கும் முறை, நேர்மை என்று எழுதுபவர்கள் கையாலாகதோர் என்பதாக அல்லவா எழுதுகிறார்கள். இப்படி ஒருவர் அல்ல, பலரை வெளியிலும் காண முடிகிறது. பிள்ளைகள் படிப்பும் இல்லை, தொழிலும் ஏதும் இல்லை, ஆனால் G Wagon வாங்கி தந்தால் சந்தோசமாக, எப்படி வந்தது என கேட்காமல் வாங்கும் நிலையில் பல பெற்றார்கள் உள்ளார்கள். வியாபாரம் = களவு என்பது போல் ஆக்கி வைத்துள்ளார்கள் எமது சமூகத்தில். இது வெளி பார்வைக்கு அநியாயமாக தெரிந்தாலும், இதில் ஆழமான தத்துவம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் individuality உள்ளது. Income tax ஒரு personal tax என்பதால் அதை அப்படி அறவிடுவதே, சரியானது.
  2. இது கொழும்பான் அல்ல, அமர்தியா சென்னால் கூட விளங்க முடியாத விடயம்😂. சிதம்பர ரகசியம் போல - அனுபவிக்கணும், நக்கல் அடிக்கலாம், ஆராயப்படாது. மூளை கரைந்து விடும்😂. உங்கள் எண்ணம் உன்னதமானது👍. வியாபாரத்தில் முதன்மையானது நீங்கள் உங்கள் வேலையாட்களுக்கு காட்டும் பொறுப்பு என்பது இந்த திரியில் தெளிவாக ஒலிக்கிறது என நம்புகிறேன். அடுத்த பாடம் - விடயம் பிசகும் போது, அதை போத்து மறைகாமல் (KPMG ஐ அனுப்பி விட்டு ஒரு சின்ன அமைப்பவை அமர்த்தியுள்ளனர் ) நேர்மையாக அணுகுங்கள். மூன்றாம் பாடம் ஆங்கிலத்தில் captains of industry என்பார்கள் பெரும் தொழிலதிபர்களை. டைட்டானிக் கேப்டன் போல் உங்கள் தவறோ, இல்லையோ கப்பல் மூழ்கினால் கடைசி ஆளாக வெளி ஏறுங்கள். இயலாதோரை தாள விட்டு விட்டு, கள்ளர் போல் கம்பி நீட்டாமல்.
  3. இல்லை பலர் வியாபாரம் ஆரம்பிப்பதே வங்குரோத்து அடித்து அதில் (உறவுகளுக்கு மாற்றிய, வெளியால் எடுத்த காசை) ஆட்டையை போடத்தான். நடிகை ஷில்பா செட்டியின் கணவர் குடும்பம் இலண்டன் ஈலிங் ரோட்டில் ஒரே நகை கடையை வைத்து, பல குடும்ப உறுப்பினர் மாறி, மாறி இப்படி செய்துள்ளனர். கடையின் பெயர் ஐந்து வருடம் ஒரு தரம் மாறும். இதில் இழப்பை சந்திப்பது திறைசேரி. அதாவது ஒவ்வொரு குடிமகனதும் வரிப்பணம். சஞ்சீவும் மனைவியிம் இப்படி நோக்கோடு ஆரம்பித்தனர் என நான் சொல்லவில்லை. ஆனால் கடந்த 3 வருடத்திலாவது இவர்கள் dishonesty யாக நடக்க ஆரம்பித்துள்ளனர். எண்ணை வழங்கியவர்கள் மீதி எண்ணையை எடுத்து கொண்டார்கள். கணவனும், மனைவியிம் கடைசி வருடத்தில் 3.5 மில்லியனை டிவிடெண்ட் எடுத்துள்ளனர். தத்தளிக்கும் ஒரு வியாபரத்தை நீங்க முயல்பவர் இப்படியா செய்வார்? பிள்ளைகள் இருவர் பேரில் டிரஸ்டில் எல்லாத்தையும் போட்டு விட்டு. மாடமாளிகையை மார்கெட்டில் போட்டு விட்டு ஓடி விட்டார்கள். ஏமாந்த சோணகிரிகள்? சம்பளம் இல்லாத தொழிலாளர்கள். திறைசேரி - அதாவது என்போன்றோரின் வரிப்பணம். உண்மையான தொழில்முனைவோர் எண்டால் இதை நாட்டில் நிண்டு டீல் பண்ணி இருப்பார்கள். முதலில் தமக்கு இலாபம் ஈட்டி கொடுத்த வேலியாட்களின் கடைசி மாத சம்பளத்தையாவது கொடுத்திருப்பர். இதை களவு எண்டு சொன்னால் ஒயில் கானோடு ஒருவர் வருகிறார், ஐநா சபையை இன்னொருவர் கூட்டி வருகிறார்😂
  4. அது பட்டயக்கணக்காளரான தனக்கே புரியவில்லை. சில jargons ஐ ஆங்காங்கே தூவி விட்டு எதுவும் விளங்காத மாதிரி இருக்கு எழுத்து என்பதுதான் கொழும்பானின் கொம்பிளைண்டே (கீழே பார்க்கவும்). நீங்க அவரை போய் விளங்கபடுத்த சொன்னா அவர் பாவம் இல்லையா😂? கொழும்பான் மைண்ட் வாய்ஸ் - கொடுமை கொடுமை எண்டு கோவில்ல வந்து முறையிட்டால் - ஐயர் என்னை மந்திரம் ஓத சொல்லுறார்😂.
  5. அதுக்கெல்லாம் சட்டத்தோட கொஞ்சம் “உராய்வு” இருக்கோணும் கண்டியளே😂. 😂 அது AirPod Pro 3 யால் கூட முடியாது. பாவம் கொழும்பான் ஒரு பட்டய கணக்காளர் அவருக்கு அக்கவுண்டன்சி புரியும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் பிழை. யாராவது கணக்கியலோடு உராய்வில் இருப்பவர்களிடம் கேட்டு பார்க்கலாமே😂.
  6. இந்த திரியை வாசித்தால் சஞ்சீவின் எண்ண ஓட்டம்: என் குறைகளை சுட்டி காட்டிய கோஷானையிம், ஜஸ்டினையும் கூட மன்னிசிருவேன். ஆனா நான் நல்லவன்னு சொல்லி, இரெண்டு பக்கமா பொல்லுக்கு மேல் பொல்ல கொடுத்து அடிவாங்க வைக்கிற அந்த ஒரு கருத்தாளரை மட்டும் சாகும் வரை மன்னிக்க மாட்டேன் 😂.
  7. நான் பெண்கள் “மூர்சை” ஆகும் அளவுக்கு அழகன் தான் ஐயா😂. மயங்கிய சிலர் இன்னும் கோமாவில்தான் இருக்கிறார்கள். ஆனால் மேலே நான் சொன்னது நிழலியை பற்றி.
  8. வீரப்பன் யானைத் தந்தங்களை விட்டு சந்தனமரங்களை கடத்த தொடங்கியது ஏன்? ஒரு தடவை வேட்டையில் இறந்த யானை இறக்கும் போது “அடேய் விழுவானே நாசமாய் போவாயடா” என தமிழில் பிளிறியது. அதன் மூலம் யானைகள் கூட தமிழர் என்பதை உணர்ந்த எங்க குலசாமி இந்த முடிவை எடுத்தார். தெலுங்கு சதிகாரார் வேற மாரி சொல்லுவாங்க நம்பாதீக.
  9. உட்கட்சி மோதல் கூடாது… இப்போ நா த க வை எடுங்கள்… திமுக வை எடுங்கள்…. சபரீசன் பெட்டிக்கு பிறகு எப்படி இரு தரப்பும் ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக வேலை செய்கிறார்கள். இந்த திரியில் கூட திமுக பாடகர் உச்ச ஸ்தாயில் பாட… நாதக தம்பிகள் எவ்வளவு அழகாக கோரஸ் பாடுகிறார்கள். மார்கழி சீசன் ஐப்பசியிலேயே வந்து விட்ட பீலிங்😂. இடையில் ஒரு தம்பிக்கு மெமோ போகவில்லை போலும், திராவிடம் எதையும் சாதிக்கவில்லை என போன சீசன் பாட்டை அபஸ்ஸ்வராமாக கட்டை குரலில் குறுக்கால இழுக்கிறார்😂. இவர்களை பார்த்து த வெ க ஒற்றுமையின் பலத்தை உணர வேண்டும்.
  10. இண்டைக்கு கழிவு ஒயில் கொஞ்சம் அதிகமாக கிடைத்திருக்கும் போல… வழிய….வழிய பூசி கொண்டு நிக்கிறார் ஒனா கினா. வாசகர்களுக்காக Breach of fiduciary duty யும் fraud ஆக கருதப்படும். எப்போது? அந்த breach கள்ள எண்ணத்தில், களவு நோக்கில் செய்யப்பட்டிருப்பின் (bad faith, dishonesty ). இதைத்தான் மேலே ஒழுங்கான பத்திரம் கொடுத்து மோகேஜ் எடுப்பது vs கள்ள payslip கொடுத்து மோகேஜ் எடுப்பது என எளிய உதாரணம் மூலம் விளக்க முனைந்தேன். விளங்கினால் தானே. a breach of fiduciary duty can amount to fraud, especially when the breach involves dishonesty or a lack of good faith . While not every breach is fraudulent, fraud occurs when the fiduciary deliberately acts against the principal's interests, is reckless as to those interests, or acts with an absence of honesty. For example, a director who misuses company funds or improperly diverts business opportunities can be held liable for fraud. சஞ்சீவ் நுனிப்புல் மேயும் ஒயில் கிழவன் அல்ல 😂. விசயகாரன். அவருக்கு தான் செய்தது களவு எண்டு தெரியும். அதுதான் கடந்த வருடத்தில் மட்டும் கம்பனியில் இருந்து 3.2 மில்லியனை லவட்டி கொண்டு…. மனையியையிம் கூட்டி கொண்டு….. வீட்டை விற்க போட்டு விட்டு… யூகேயை விட்டு தப்பி ஓடியுள்ளார்
  11. கேணல் கடாபியின் பொடிகாட்ஸ் போல ஆட்காளால் என்டால், கைதே தேவையில்லை தானாக போய் கூண்டுக்குள் அமர்ந்தே விடுவார் என்கிறனர் விபரம் அறிந்தோர்.😂 உண்மை பொய் தெரியவில்லை.
  12. யாழ்கள ஆர்வலர்கள் சிலர்: கடல்கடந்து வர்த்தகம் செய்யும் போது இப்படியான சிக்கல் வருவது வழமைதான். ஆனந்தனை குற்றம் சொல்பவர்கள் பிழைக்கத்தெரியாத திண்ணை பேச்சுகாரர்😂.
  13. நன்றி. ஜேவிபி மிக மெதுவாக, ஆனால் தெளிவாக, கிட்டதட்ட ரகசியமாக …. ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இலங்கையை நகர்த்தி வருவதாக எனக்கு படுகிறது. போதை மாபியா பற்றிய மக்களின் பயம் அவர்களுக்கு நன்றாக கைக்கொடுக்கிறது. இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல் என்றார் டில்வின். ஆனால் அது சம்பந்தமாக எதுவும் இல்லை. மிக விரைவாக, அரச இயந்திரம், முப்படைகள், பொலிசில் அதிகாரம் உள்ள பதிவிகளை தம் கொள்கை சார்ந்தோரால் நிரப்புகினறாம். யூ என் பி, சு க வின் தொழில்சங்கங்கள் கூட நெருக்குதலுக்கு ஆளாகிறனவாம். இத்தனை வருட தியாகத்தின் பின் கிடைத்த அதிகாரத்தை அவர்கள் அவ்வளவு லேசில் விடப்போவதில்லை. இது போக..போகத்தான் புலப்படும்.
  14. நீங்களும் தும்பளையானும் சொல்லும் கோணமும் நியாயமானதே. ஆனால் எனது gut feeling - இந்த களை எடுப்பு அரசாலும் நடத்தபடுகிறது என்பதே. பார்ப்போம், ஸ்டாலின், பொல்பொட், இடி அமீன், பிலிபைன்ஸ் அதிபர் பலரும் ஆரம்பத்தில் இப்படித்தான் களை எடுத்தார்கள். மக்களும் ஆதரித்தனர். அடுத்து பயிர்களையும் மேய ஆரம்பித்தனர். ஜேவிபி இதை செய்யும் காலம் தொலைவில் இல்லை என்பது என் ஆரூடம்.
  15. நன்றி. இரெண்டு பவுண் - உங்கள் அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது. நான் அப்போது பதின்ம வயதையும் அடையவில்லை. ஆகவே விளக்க குறைபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை பார்த இரு குடும்பங்களுக்கு ஏழ்மை காரணமாக விலக்கு அளித்தார்கால். நான் ஜப்னா ரோயல் 😂
  16. சீண்டுவார் சீண்டல் எத்தகை ஆகினும் நாவினை காத்தல் தலை - புதுக்குறள்-
  17. அப்ப பெப்ரவரி 4 ம் தேதி பூட்டான்காரனுக்கா😂
  18. பிகு நீங்கள் உட்பட யாழில் எழுதும் பலர் கடன் அட்டையை நான் மேலே சொன்னபடி responsible ஆக பாவிப்போர்தான் என்பது அவரவர் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ஆனால் யாழுக்கு வெளியே இறாலுக்கு ஆசைபட்டு சுறாவை இழந்த எமது மக்கள் அதிகம். குறிப்பாக அடுத்த சந்ததி…கொஞ்சம் பயமாகவே உள்ளது😂
  19. நானும் டிக்கெட் வாங்க கடனட்டையைத்தான் பாவிப்பேன். விமான டிக்கெட்டுகளை IATA அதிகாரமுள்ள ஏஜெண்டிடம் வாங்கினும் கடன் அட்டை தரும் section75 உத்தரவாதம் ஒரு மேலதிக பாதுகாப்பு. 30-50 நாள் வட்டி இல்லை. Avios போன்ற புள்ளிகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி அனுகூலங்கள் பல. ஆகவே ஏர் டிக்கெட் மட்டும் அல்ல, சாண்ட்விச் வாங்குவது, டயருக்கு காத்தடிப்பது ஈறாக கடன் அட்டையில்தான். ஆனால் இலவச கடன் அட்டைகள் மட்டும்தான். வாழ்நாளில் மாத சந்தா கடன் அட்டைக்கு கட்டியதே இல்லை. அதேபோல் அடுத்த தவணைக்குள் முழுவதுமாக (0%வட்டியில்) கட்டி முடிக்க பார்ப்பேன். சில சமயம் அது அடுத்த மாதம், 3ம் மாதம் என தள்ளி போகும் (எதிர்பாரா செலவுகள் தொடர்ந்து வரும் போது). ஆனால் வட்டி கட்டும் ஒவ்வொரு மாதமும் வங்கியுடனான போட்டியில் தோற்று விட்டேன் என மனம் அல்லல்படும்😂. ஆனால் ஒரு போதும் ஹொலிடே கடன் அட்டையை நம்பி போவதில்லை என்பது கல்லில் எழுத்து. போய் வந்து அடுத்த தவணைக்குள் கட்ட வேண்டிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே ஹொலிடே. இல்லை எண்டால் ஐரோப்பாவுக்குள் போய் வரலாம். அதுவும் இல்லை எண்டால் யூகேயில் பார்க்க எவ்வளவோ இருக்கு. அதுவும் இல்லை எண்டால் - டிவியில் போகும் ஹொலிடே நிகழ்சிகளை பார்த்து இன்புறலாம் 😂. ஆனால் வட அமெரிக்கா வாழிகளானா உங்களின் அலுப்பும் புரிகிறது. டிரான்சிட்டிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். உங்களுக்கு ஏர்போர்ட் லவுஞ்சுகள் சொகுசு என்பதை மேவி தேவை என்ற எல்லைக்குள் வரும் என நினைக்கிறேன். சும்மா பகிடியண்ணை
  20. ஒருவர் கட்டிக் கொடுத்தவர், மற்றையவர் கட்டி எடுத்துப் போனவர் 😂. நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம் 😂
  21. பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.