Everything posted by goshan_che
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
1. விபத்து நடந்த இடத்தில் இருந்து போகக்கூடாது என்பது எப்போதும் இல்லை, விபத்து நடந்த இடத்தில் உடனடியாக நிப்பாட்டினால் அவருக்கு ஆபத்து என பயந்தால், அல்லது வேறு தக்க காரணம் இருந்தால் போகலாம். போய்விட்டு முடிந்தளவு விரைவில் அருகில் உள்ள பொலிஸ்நிலையம் போகலாம். அல்லது அவசர இலக்கத்தை தொடர்பு கொள்லலாம். மோட்டார் சைம்கிளில் வந்தோர் பொலிசார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. 2. இனக்கலவரம் - இதைத்தான் சொன்னேன் . 83 இல் நடந்தது இன கலவரம் அல்ல. கலவரம் எண்டால் (இரு) பகுதியும் அடித்து கொள்வது. 83 இல் நடந்தது ethnic riots அல்ல, pogrom. இனவழிப்பு எனலாம். 👆👍 அதே
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நியாயமான கேள்வி. ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை. அரசு இயந்திரம் சிங்களவரான (?), பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு. ம்ம்ம்.. 83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி. சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
இதை சொல்ல கூட தைரியம் இல்லை எண்டா பிறகு என்ன ஹைகோர்ட்டுக்கு பாராளுமன்றம் போற ஆசை. அவர் சொல்லாட்டில் என்ன? நீங்களே ஏத்துறது தண்டவாளத்தில்? கலையரசனும் கேக்கிறாதாமா? பிறகு நம்மட நேரு ஜூனியர் - இலண்டனில் குளிர் எண்டா அம்பாறை அரசியலில் கூதல் காய்வாரே, அவரும் கேட்கிறாரா?
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
கேள்வி 2 சரி நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும், ஆனால் கெளரவமாக வாழ முடியும் எனும் போது அதை ஏற்றால் என்ன பிழை? பதில் இதை பிழை என வெளிநாட்டு பிரசை நான் சொல்ல முடியாது. இன்று ஒருவர் கூறினார் போதை பொருளை யாழில் ஒழிப்பார்கள் எனவே என் வோட்டு என் பி பிக்குத்தான். நாம் உரிமையை (பிச்சை) கேட்ட போது அவர்களாகவே நாயை (போதைபொருள்) அவிழ்த்து விட்டார்கள். இப்போ நாம் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்கிறோம். ஆனால் இதுதான் வாக்காளர் தேர்வு என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
- 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழர்களோடு டீல் பண்ணுவது மட்டும் இல்லாமல், முன்னர் தரகர்களாக இருந்த தமிழ் தேசிய, அபிவிருத்தி அரசியல்வாதிகள் சாதிக்காத பலதை செய்து தரபோகிறனர் என்ற செய்தியையும் சொல்லி நிற்கிறது. யாழ்களத்தில் இந்த இரு நிகழ்வுகளும் பலரை கொஞ்சம் அல்ல நிறையவே நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது என்பது தெரிகிறது. எனக்கும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. களத்துக்கு வெளியிலும் இப்படியே இருக்கும் என ஊகிப்பது கடினம் அல்ல. ஆனால் இதற்கு இன்னொரு கோணமும் இருப்பதை நாம் மறக்க கூடாது. அது பற்றிய என் பார்வை கீழே. தமிழ் அரசியல்வாதிகள் கேட்டபோதெல்லாம் கொடுக்காததை - இப்போ எனக்கு வாக்கு போடுங்கள் தருவேன் என்கிறார் அனுரா. அதாவது, தமிழ் அரசியல்வாதிகளை காயடித்து, அவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையை வலிந்து உருவாக்கி விட்டு, அவர்களிடையே சுயநலமிகளை இறக்கி ஒற்றுமையை தூள் தூளாக்கி விட்டு, இப்போ தமிழ் மக்களிடம் தெற்கு நேரடியாக டீல் பேசுகிறது. சுயநிர்ணயம், 13+, இப்போ இருக்கும் மாகாணசபை கூட இல்லை, ஆனால் அரசியல் கைதிகளை, காணிகளை, விடுவிப்போம். உங்களை ஒரு சம பிரசையாக நடத்துவோம். எமக்கு வாக்களியுங்கள். இதுதான் தெற்கு, வடக்கு-கிழக்கு தமிழ் வாக்காளரோடு இப்போ போடுகிற டீல். இதை நான் ஒரு நெடிய, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட போரின், மூன்றாவதும், கடைசியும், வெற்றியை உறுதி செய்ய விழைவதுமான பகுதியாக பார்க்கிறேன். 50 களில் பேரினவாதம் எம்மீதான போரை தொடங்கிய போது தொட்டு இன்று வரை அதன் இலக்கு - எமக்கான குறைந்த பட்ச சுயாட்ச்சியை கூட தராமல், எமது நில, பொலிஸ் அதிகாரங்களை, பாரம்பரிய வாழிடம் மீதான எம் கோரிக்கையை, பின்னாளில் திம்பு கோட்பாடு வலியுறுத்திய அத்தனையையும் நிராகரித்து, அந்த நிராகரிப்பை நாமே ஏற்கும் அளவுக்கு எம்மை தோற்கடித்தல். நாம் இந்த நிலையை ஏற்கும் போதுதான் பேரினவாத்ததின் எம் மீதானா போர் வெற்றி முழுமை அடையும். இந்த வகையில்தான் எம்மீது போர் 3 பகுதிகளாக நடத்தப்பட்டது. பகுதி 1 -1948 முதல் 2009 வரை. பேரினவாதம் எம்மீது வன் போரை தொடுத்தது. நாமும் பாரிய தவறுகளை விட்டோம். முடிவு -பேரினவாதம் வன்போரில் வென்றது. பகுதி 2 -2009 முதல் 2024 வரை. இது மென்போர் காலம். எமது ஒற்றுமையை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் சிதைத்து, போலிகளை உள்ளிருத்தி, ஓர்மத்தை முனை மழுங்க வைத்து, ஆளை ஆள் சந்தேகபட வைத்து, தலைவர் இருக்கிறார், இன்னும் பல மாயக்கதைகளை, மாய மனிதர்களை எம்மை நம்பவைத்து, அல்லது நம்பாமல் அடிபட வைத்து, கூடவே ஊரில் உள்ள எமது தேசிய தலைமைகளுக்கு எதுவும் கொடாமல் (வடக்கு முதலமைச்சர் நிதியம்) அவர்களை காயடித்து, கேலிப்பொருளாக்கி, சுயநலமிகளை அவர்களாகவே அடையாளப்படுத்த விட்டு (கஜேஸ், சுமந்திரன், சிறி, சுரேஸ் இத்தியதிகள்), வினைத்திறன் அற்றோரை மேலும் வினைதிறனற்ரோர் ஆக்கி (விக்கி), அபிவிருத்தி அரசியல் காரர்களை கூட ஒரு அளவுக்குள் தட்டி வைத்து (டக்கிளஸ், அங்கயன், பிள்ளையான்), இவர்கள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்று முழுதாக துடைத்தெறித்தார்கள். இதையேதான் நாடுகடந்த அரசு இதர புலம் பெயர் தமிழ் அமைப்புகளிலும் செய்தார்கள். எனக்கு இதை எழுதும் போதே ஐலண்ட்டின் @island குரல் கேட்கிறது. இந்த பகுதி 1, 2 இல் நடந்தவைக்கு புலிகளும், நமது அரசியல்வாதிகளும், புலம்பெயர் பிரமுகர்களும் அல்லவா அல்லவா பொறுப்பு என்பார் அவர். அவர்களும் பொறுப்பு, மறுக்கமுடியாது. ஆனால் நான் மேலே விபரித்த வகையில் இந்த இரு காலப்பகுதிகளிலும் எம்மீது ஒரு நேரடி, பின் மறைமுகப்போரை நன்கு திட்டமிட்டு, இலங்கையின் ஆழ்-அரசு தொடுத்தது என்பது என் நம்பிக்கை. அதற்கு நாமும் அறிந்தோ அறியாமலோ துணை போனோம். இப்போ…. பகுதி 3 - போர் வெற்றியை நிரந்தரமாக்கும் காலம் -2024 முதல். மேலே நான் சொன்னதை போல - நாமாக “திம்பு”வை கைவிடும் காலம் வரும் வரை தெற்கின் எந்த வெற்றியும் நிரந்தரமானதல்ல (நாம் என்றால் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்கள்). இப்போ இதை நோக்கித்தான் அதாவது தாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கும் நகர்வைத்தான் தெற்கு எடுக்கிறது. ஒற்றை இலங்கையர் அடையாளம்+ மாகாணசபைகள் வெறும் விரய செலவுகள்,+தமிழ் கட்சிகள் எதுவும் செய்யாது+ஊழல் அற்ற அரசு+ எல்லோர்க்கும் ஒரே உரிமை +மேனாடுகள் போன்ற ஒரு இனவாதமற்ற நாடு = நீங்களாகவே “திம்பு” வை மறுதலித்தல், அதாவது தமிழ் தேசிய அரசியலை கைவிடல். இதை நோக்கி எம்மை உந்துவதுதான், இந்த கடைசி பகுதி போரின் நோக்கம். இதுதான் தெற்கு பெற்ற போரின் வெற்றியை நிரந்தரமக்கும் மூலோபாயம். இதன் முதல் படிதான் 2024 இன் இரு தேர்தல்களும். இதுதான் என் பார்வை. ———————————————— அடுத்து…… இங்கே சில கேள்விகளை ஊகித்து பதிலை தருகிறேன். கேள்வி1 அறகல, என்பிபி எழுச்சி, கோவிட், பொருளாதார நெருக்கடி எல்லாமும் random நிகழ்வுகளாக இருக்கும்போது , நீங்கள் சொல்லும் மூன்றாம் பகுதி ஏற்படவே இவைதான் காரணம் எனும் போது - இதை எப்படி ஒரு நீண்ட போரின், போர் இலக்கின் ஒரே பகுதி என்பீர்கள்? பதில் இவை எல்லாமுமே உண்மையில் random நிகழ்வுகளா என்பது கேள்வி குறி. அப்படியே random நிகழ்வுகளாக இருப்பினும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு ஆழரசு (deep state) இலங்கையில் உள்ளது என்பதையும் அதன் முதல் இலக்கு பெளத்த-சிங்கள மேலாண்மையை பேணல் என்பதையும் இங்கே அநேகர் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். இந்த ஆள் அரசைத்தான் நாம் இலகு மொழியில் பிக்குகள் என்போம். நான் சொன்னபடி 1950 இல் இருந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலில்த்தான் இந்த யுத்தம் நடக்கிறது எனில், இப்போ நடக்கும் random நிகழ்வுகளை சுற்றி, இப்போரின் மூன்றாம் பகுதியை இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்பது என் பதில்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இதில் 2 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தமிழர் அல்லாதோர் (என ஆக்கப்பட்டுள்ளது). வன்னியிலும் 30%வரை வேட்பாளர் தமிழர் அல்லாதோர் என நினைக்கிறேன். யாழில் அனைவரும் தமிழ் +முஸ்லிம். மட்டில் 1 சிங்களவர் என நினைக்கிறேன். வடிவாகத் தெரியாது.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
நான் தொடங்குகிறேன்…. நீங்கள் தொடரவும் 🙏- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
பார்ரா… தம்பி… சுன்னாகம் சுண்டக்காய்… முள்ளிவாய்க்கால்…பிலாப்பழம்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இதுதான் கதைக்கும் போது என் மனதில் ஓடியது.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நான் சொன்னதுக்கு இது பதில் இல்லையே புலவர். நான் சொன்னது புலிகள் காலத்தில் இருந்த திக, புலிகள், திராவிட, தமிழ் தேசிய சித்தாந்த ஒன்றியவாழ்தல் (symbiotic relationship) பற்றி. இந்த வரலாற்றைத்தான் நீங்கள் நா.த.க நிலைப்பாட்டுக்கு ஏற்ப புனைய முனைந்தீர்கள் என்பது என் கூற்று. அதை மறுத்துரைக்காமல்…சி.பா.ஆ…என்று புலிகளுக்கு முந்தியதையும், அம்மா மு.க. என புலிகளுக்கு பிந்தியதையிம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள். தவற விட்டிருந்தால் மீண்டும் என் கேள்வி கீழே. 👆இது உங்கள் கூற்று. 👇இது அதுக்கான என் கேள்வி. இதற்கான பதிலை அல்லவா நீங்கள் தரவேண்டும்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள். முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
உண்மைதான். நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார். அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே. இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50. ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன். ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣. தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.- கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
அறியாத வயதில தெரியாமச் செய்திட்டார்🤣- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
@பாலபத்ர ஓணாண்டி @ரசோதரன் @வாலி இந்த திரி திசை திருப்பபடும் முன், கஸ்தூரி. ஏன் தன்னை நாடார் என்றும், பிராமணர் என்றும் அடையாளப்படுத்துகிறார் என நாம் கதைத்தோம். இந்த பேட்டியில் ஏஸ் வி சேகரும் நாடார்…என எதுவோ சொல்ல வந்து விட்டு…பின்னர் அப்படியே விட்டு விடுகிறார். இந்த பேட்டியில் ஒன்று தெரிந்து கொண்டேன். இப்போ கஸ்தூரி தெலுங்கில் செம பிசியான நடிகையாம்🤣. இந்த பேச்சுக்கு பிறகு🤣🤣🤣. லூசு கூ முட்டைன்னு கேள்விபட்டிருக்கேன்…இந்தளவுக்குன்னு தெரியல்ல🤣. பிகு ஆங்கிலத்தில் zeal of the convert என்பார்கள். கிறிஸ்தவ மதத்தில் பரம்பரையாக பிறந்தவன் சும்மா இருக்க, முந்தநாள் மதம் மாறியவன் - ஆ..ஊ…பிரசாதம் பேய்க்கு படைத்தது என பேயோட்டுவார்கள். இதைத்தான் அப்படி சொல்வார்கள். இந்த சாதி, இன விடயத்திலும் இதை காணலாம்…. தமிழனாக பிறந்து, தமிழருக்கு போராடி, தமிழருக்காக குடும்பத்துடன் சாவடைந்த தலைவர் நான் தமிழண்டா என ஒரு போதும் இன இறுமாப்பு பூண்டதில்லை. ஆனால் தெலுங்கு வம்சாவழி கருணாநிதி, மலையாள வம்சாவழி எம் ஜி ஆர், மலையாள வம்சாவழி சீமான் தமிழ் தமிழ் என கதறுவது மட்டும் இல்லாமல், ஏனையோருக்கும் இனத்தூய்மை டெஸ்ட் எடுப்பார்கள். கஸ்தூரியும் இப்படித்தான். அவரே நாயர், நாடார் என பலதும் கூறுகிறார்கள். தானே நாடார் என தொனிபட எழுதியுள்ளார், கணவன் தெலுங்கு வழி என்கிறார். ஆனால் நான் பிராமணண்டா என உதார் விடுகிறார்….அக்மார்க் பிராமணன் எஸ் வி சேகர் - எல்லோரும் மனிதர்தான் என்கிறார்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இக்கருத்துடன் எள்ளளவும் மாறுபட முடியாது.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இதை ஏற்கிறேன். இப்படி பார்த்தாலும் விஜையை வளர விடுவது திமுகவுக்கு ஆபத்தில்தானே முடியும். எம் ஜி ஆர் டம் பட்ட பாடம் மறக்குமா? ஓம்…ஆனால் திமுக -பிஜேபி கூட்டணியால் இன்றும் திமுக பழியை சுமக்கிறது. அது சரிதான். விஜை எல்லோரையும் இழுக்கிறார். ஆகவே அவர் 60% திராவிட கொள்கை ஆதரவு வாக்கு வங்கியை ஏன் கைவிடப்போகிறார்? இறங்கி வர வேண்டியது சீமான், என்ற நிலையை விஜை வலிந்து உருவாக்கியுள்ளார். 100%- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இல்லை, என் நியாபகம் சரியானால் - எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கும் போதே தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்தாலும், இனி நாம் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தொடர்வோம் என அறிவித்துவிட்டார். அந்த அறிவிப்போடு கூட்டணி முறிந்து விட்டது. தேர்தலுக்கு பின்னும் கூட்டணி தொடர்வது என்பது இப்போ திமுக+விசிக இருக்கும் நிலை போன்றது. அப்படி ஒரு உறவில் அதிமுக+தேமுதிக அன்றைய தேர்தலுக்கு பின் இருக்கவில்லை. இதன் பின் பலவருடங்கள் அதிமுக - தேமுதிக உறவு மோசமான பின், அடுத்த தேர்தல் சமயம், தேர்தலுக்கு சில மாதம் முன்புதான் மநகூ ஐடியா கருக்கொண்டது. இந்த தரவைத்தான் சொன்னேன். அதே போல், 4 வருடம் எதிர்கட்சியாக எதிர்த்த அதிமுகவுடன் அடுத்த தேர்தலில் தேமுதிக கூட்டு வைப்பதும் சரியாக இருந்திராது, ஆகவே அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முன்பு இருந்த தெரிவுகள், 1. அவர் தலைமையில் கூட்டணி 2. திமுக கூட்டணி ஆகவே வைகோ பேச்சை கேட்டு, விஜகாந்த் அதிமுக கூட்டை உடைக்கவில்லை. கூட்டு உடைந்த சில வருடங்களின் பின்பே மநகூ உருவானது. சீமானும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. கூட்டணி முறிவு எப்போ நடந்தது என்ற தரவை மட்டுமே குறிப்பிட்டேன். இப்போ சீமான் கூட்டணி வைப்பது பற்றிய என் கருத்து. ஊரில் சில ஆண்கள் பெயரை கெடுத்து கொண்டதால் எவரும் அவருக்கு பெண்கொடுக்காமல், கலியாணம் பண்ணாமல் இருப்பார்கள். ஆனால் கேட்டால் நான் கலியாணம் எல்லாம் கட்டமாட்டேன் எண்டு உதார் விடுவார்கள். சீமான் நிலையும் அதுவே. அவருடன் சேரப் பலர் தயார் இல்லை என்பது விஜை அவரை வேணும் எண்டே வெட்டி விட்டதிலே தெரிகிறது. இதுவரை எந்த கட்சியாவது நாம் சீமானுடன் கூட்டணி வைப்போம் என கூறியதுண்டா? ஈழத்தில் எம் மக்களிடம் தலைவருக்கு இருக்கும் இடம் போன்றது தமிழகத்தில் பெரியாருக்கு மக்கள் மனதில் இருக்கும் இடம். ஈழத்தில் தலைவரை, தமிழக்கதில் பெரியாரை தூற்றி கொண்டு அரசியலில் ஜெயிக்க முடியாது. தலைவரை, பெரியாரை எதிர்க்கும் ஒரு 10% குறுக்கு புத்தி கூட்டத்தின் வாக்கு மட்டும் கிடைக்கும். இலங்கை தேர்தல் முறை இது டக்லசுக்கு ஒரு சீட்டை தொடர்ந்து வழங்குகிறது. தமிழ்நாட்டு முறையில் சீமானுக்கு அதுவும் இல்லை. ஆனால் ஈழத்தில் டக்லஸ் சோடு வேறு எந்த தமிழ் கட்சியும் கூட்டுக்கு ரெடி இல்லை. இதே நிலைதான் சீமான் விடயத்தில் தமிழகத்திலும்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
கருணாநிதியை விமர்சிப்பது = நாம் விட்ட பிழைகளை மறுப்பது/மறைப்பது என்ற சமன்பாடு, இங்கே சிலர் எனக்கு சீமானை எதிர்பது=திமுகவை ஆதரிப்பது என போடும் சமன்பாடு போல் தெரிகிறது எனக்கு. ——— இதற்காக அவர்கள் நாட்டு அரசியலில் நாச சக்கிதியை முன் தள்ளுவது பிழைதான். ஆனால் இந்த நாச சக்தி அங்கே ஒரு நாளும் வெல்லாது. ஆனால் இதை நம்மில் சிலர் ஆதரிப்பதால் அங்கே எமக்கு பெருவாரியான எதிரிகள் உருவாகி விட்டுள்ளார்கள். 2009 க்கு பின் விசிலடிக்க ஆள் கிடைக்காமல் அலைந்த ஒரு மொக்கு கூட்டம், எமக்கு சொருகிய இன்னொரு ஆப்பு இது. விஜை தமிழ் தேசிய அரசியல் என சொல்லும் அதே வேளை, மிக தெளிவாக அம்பேத்கரை உள்ளே கொண்டு வந்து, தலைவரை தேவையில்லாமல் இழுக்காமல் விட்டதன் பின்னால் உள்ள தெளிவு - இவர்களுக்கு விளங்கும் என நான் நினைக்கவில்லை.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
@valavan உங்கள் கருத்தை ஒட்டி என் கருத்து. சீமான் விஜையை எதிர்த்த காரணங்கள் இரண்டு. 1. சீமான் கருவறுப்பேன் என்ற திராவிட கொள்கையை, விஜை தன் கண்ணில் ஒன்று என்றது. பெரியாருக்கு மாலைபோட்டபோது கூட அமைதியாக இருந்தார். ஆனால் விஜை அப்படி ஒரு கொள்கை விளக்கம் கொடுத்த பின், சீமான் எதிர்த்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அல்லது விஜை தள்ளினார். இனி, ஒன்றில் விஜை திராவிடம் என் ஒரு கண்ணில்லை என சொல்ல வேண்டும். அல்லது சீமான் திராவிட கொள்கையும் தனக்கு ஏற்பு என சொல்லி, திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டை கைவிட வேண்டும். இது இரெண்டுக்கும் வாய்பில்லை என நான் நினைக்கிறேன். 2. யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி. இத்தனை காலம் சீமான் உழைத்ததே இந்த பதவிக்குதான். அதேபோல் நம்பர் 1 ஸ்டார் சம்பளத்தை விட்டு விஜை வந்ததும் இந்த பத்விக்குத்தான். அடுத்து இன்னொர் விடயம், விஜய், சீமான் இருவரும், தலைவரோ, அம்பேத்கரோ இல்லை. அந்தளவு கொள்கைவாதிகள் அல்ல. ஆகவே இந்த உறவாடி கெடுத்தல் எல்லாம்¥ வெறும் கற்பனை கதைகளே. விஜைக்கு தமிழ்நாட்டில் வாக்கு எங்கே இருக்கிறது என புரிகிறது. அதாவது திராவிட கொள்கை வாக்கு வங்கியில் ஒரு பங்கு, தமிழ் தேசிய வாக்கு வங்கியில் ஒரு பங்கு எடுக்க நினைக்கிறார் விஜை. அதை தனதாக எடுத்து கொள்கிறார். இது முழுக்க முழுக்க வாக்கு வங்கி கணக்கு. முன்னர் கருணா பிரிந்த சமயம் - யாழில் சிலர் முதலில் அப்படி எதுவும் இல்லை என எழுதினார்கள், பின்னர் ரணிலை ஏமாற்ற தலைவரும் கருணாவும் பிரிவு போல் நடிப்பதாகவும் எழுதினர் சிலர். அதே போலத்தான் வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தை கொண்டு போய் விடுமோ என்ற பதற்றத்தில் தம்மைதாமே தேற்றி கொள்ள சிலர் சொல்லிகொள்ளும் கதைதான் இந்த உறவாடி கெடுக்கும் கதை.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இது தரவு பிழை என நினைக்கிறேன். ஜெ யுடன் விஜயகாந்த் கூட்டு வைத்து, தேர்தல் முடிந்து அவர் எதிர்கட்சி தலைவரானதுமே அவரின் ஜெ யுடனான கூட்டணி முறிந்து விட்டது, எதிர் கட்சி, ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்க ஜேர்மனி இல்லையே தமிழ் நாடு. அப்புறம் விஜயகாந்த நாக்கை துருத்தி பேசி, உறவு முற்றிலுமாக பகை என்றான பின்பே வைகோ மக்கள் நல கூட்டணி ஐடியாவோடு வந்தார்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இருக்கிறது? எப்படி தெரியுமா? மனிதர்களாக, தமிழர்களாக. இதில் புலிகள் செய்தது சரியா, எத்தனை வீதம் சரி என்பது கருது பொருள் அல்ல. யுத்தத்தை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற முனைப்பில், தமிழர்கள் மீது போர்குற்றம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தனியே புலிகள் மீது மட்டும் அல்ல. அந்த யுத்தத்தை நிறுத்த ஒரு மனிதனாக, சக தமிழனாக கருணாநிதி தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்க வேண்டும். அப்படி ஒரு சக தமிழனாக, மனிதனாக நாம் எதிர்பார்த்தது தவறில்லை. அப்படி செய்யாத அவரை தூற்றுவதும் தவறில்லை.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
👆இதில் ஒவ்வொரு சொல்லுடனும் உடன்படுகிறேன். 👆 இதனோடும் உடன்படுகிறேன்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
என் பக்கம் நியாயம் இல்லாத போது, அதை சுட்டும் வகையில் போது, அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளேன், கேட்ப்பேன். மேலே நீங்கள் சொன்ன கருத்தை, கடந்துதான் போனேன், நீங்கள் நேரடியாக என்னை போல இந்த திரியில் கருத்து எழுதியோரை சுட்டி எழுதியபோதும், அதை ஒரு மனித வழு என கடந்தே போனேன். அதன் பின் பல கருத்துக்களை எழுதினேன், அதை பற்றி ஒரு சொல்கூட எழுதவில்லை. குழுவாத மனோநிலை தலைக்கேறிய இன்னொருவர், ஏதோ உங்கள் கருத்துக்கு வலுச் சேர்பதாக நினைத்து, அதே பிழையான, நியாயமற்ற கருத்தை மீள எழுதிய பின்பே, இதை டீல் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்தேன். நாம் எல்லோரும் பிழை விடுவது வழமை. இது நாளைக்கு எனக்கும் நடக்கலாம் என்பதை உணர்ந்தே உள்ளேன். - 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.