Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அவர்: இந்தாய்யா…உண்மையை சொல்லு….நீ பிட்பாக்கெட் அடித்தாயா? இல்லையா? இவர்: நான் ஐநா சபையை பார்த்து கேட்கிறேன்… ஓ ஐ நா சபையே உனக்கு வெட்கம் இல்லையா? எத்தனை கொடுமைகளை நீ கவர் எடுத்து மறைக்கிறாய்…. நான் வத்திக்கனை நோக்கி சவால் விடுகிறேன்…. ஓ …வத்திக்கனே….🤣
  2. யாழ்பாணம்…. படகு….. தமிழ் நாடு….. வட இந்தியா… நேபாளம்…. ஐரோப்பா…. 1991 இல் இன்னொரு முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக தேடப்பட்ட இன்னொரு இலங்கையை சேர்ந்த குழுவும்…. இதே பாதையில் தப்பலாம் என நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக சொல்வார்கள். இதை வாசிக்க அன்றைய பத்திரிகை செய்திகள் நினைவுக்கு வந்தது.
  3. நன்றி. இவ்வாறு யாழ்க்களத்தில் இன்பம் துய்ப்பதை அனுமதிக்கும் தகுதிகாண் அதிகாரியாகியமைக்கு வாழ்த்துக்கள்🤣. நோ…நோ….சீமானை எதிர்ப்பது என்பது மனைவி மாதிரி மாறாது. விஜை பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த நல்ல பிகர் மாதிரி. பார்க்கலாம்…ரசிக்கலாம்…என்னதான் இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பதா என ஆதங்கப்படலாம்… இவ்வளவு ஏன்…. பாஜகவோட பைக்கில் ஏறி சுற்றினால் சீமானை திட்டுவது போலவே ஏசலாம். இரெண்டையிம் ஒப்பிடவே முடியாது…
  4. டூ வன்னா வை விட்டு விட்டு தலைப்பை வாசித்து ஒரு தரம் கலங்கிட்டேன் நானு🤣
  5. டாக்டர் லீ க்கு வாழ்த்துக்கள். அந்த பெடியனை பார்….நீயும் இருக்கிறியே என சராசரித் தமிழ் பெற்றார் திட்ட இன்னுமொரு உதாரணபுருசர் 🤣
  6. இது திமுகவும் தோற்க வேண்டும், பிஜேபியிம் அரசில் அங்கம் வகிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் எமக்கு நல்ல தெரிவு. ஆனால் காங்கிரசுக்கு இதில் ஒரு இலாபமும் இல்லை. தவிர அதிமுக பெரும்பான்மைக்கு அதிக சீட்டுகள் எடுத்தாலும் கூட கூட்டணி ஆட்சிதான் என்பதை அமித்ஷா எடப்பாடியை வைத்து கொண்டே சொல்லி விட்டார், ஆகவே அதிமுக+பிஜேபி கூட்டணி அமைந்தால் - தமிழ் நாட்டு அரசில் பிஜேபி மந்திரிகள் இருபார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இது விஜை+ காங்கிரஸ் கூட்டணியால் மட்டும் சாதிக்க முடியாத விடயம். நிச்சயமாக. One week is along time in politics. இன்னும் 6 மாதம் இருக்கிறது.
  7. (2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …) தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்… இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க. அண்ணி கிச்சன்ல இருந்தா… மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்… சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்…. தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்… பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக… அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக…. கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்… அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி… அதுதான் மின் வலு… மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க… விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு…. மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்… இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்… சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார். (கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)
  8. கொஞ்சம் காசு வேறு எந்த தேவைக்கும் அல்லாமல் இருந்தால் இந்த பங்குகளை 5x leverage இல்க் short பண்ணி பார்க்கலாம். வந்தால் மலை, போனால் எச் ராஜா.
  9. நான் இருக்க பயமேன்🤣 பிகு குசா அண்ணை மைன்ட் வாயய்ஸ்: நீங்க இருப்பீங்க….🤣
  10. இப்படி சொந்த நாடுகளை நாசமறுத்துப்போட்டு, அடைக்கலம் தந்த நாடுகளுக்கும் வந்து இங்கேயும் ஊத்த வேலை செய்வது - ஒட்டுமொத்தமாக இப்போ உள்ளூர்வாசிகள் கலக குரல் எழுப்ப காரணங்களில் ஒன்றாகிறது. கேட்டால் வெள்ளைகாரன் மட்டும் சுத்தமா என ஒரு கேள்வி.
  11. கோகிலா விடயம்தான் லிபாராவின் ஆரம்பமுமா என்பது உண்மையில் எனக்கு தெரியாது. லைக்காவில் வேலை பார்த்த ஆட்கள், சம்பளத்துக்கு வேலை செய்யாமல், தாமே தொடங்கிய வியாபாரம் என ஒரு நம்பகூடிய கதையையாவது backstory யையாவது செட் பண்ணி வைத்துள்ளார்கள். ஆனால் லைக்காவின் கதை படையப்பாவில் ரஜனி மலையை பிக்கானால் உடைத்து வித்து பணக்காரன் ஆனது போல் இருக்கும்🤣. பரிசில் போய் கேட்டால் வேற மாதிரி சொல்வார்கள். யூகேயில் இப்படி ஒரு ஐந்து வருடத்தில் சிங்கிள் டீக்கு சிங்கி- அடித்து விட்டு, தீடீரென ஜாவா சுந்தரேசன் ஆகி லம்போவில் வருவோர், தமிழர்கள் மத்தியில் அதிகம். கேட்டால் அவர்கள் சொல்லும் கதை விட்டலாச்சார்யா படம் போல இருக்கும்🤣. ஏன்?
  12. “கீதைக்கும் ராமாயணத்திற்கும் இருக்கும் மரியாதை திருக்குறளுக்கு இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பி, “அறிவுக்குத் திருக்குறளைப் பார். உழைப்பிற்குத் திருக்குறளைப் பார்" என்று முழங்கினார். திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார். மலிவு விலையில் குறளை அச்சடித்துக் கொடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார், தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கர்ஜித்தார். பெரியார், “நான் இந்தி மொழிக்கு எதிரியல்ல! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழிக்கும் நான் எதிரியல்ல. நான் ஆதிக்கத்திற்கே எதிரி” என்றார். மொழி என்பது கருத்தைப் பரிமாறும் ஒரு கருவி. அதில் எளிமையை வேண்டினார். மொழியிலிருக்கும் ஆபாசங்களை எதிர்த்தார். மொழி என்பது பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் எண்ணம். “செந்தமிழ் மொழியானாலும் பாமரனுக்குப் புரியவில்லை, அவனுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் என்ன பயன்?” என்பதே அவரது கேள்வி. குறிப்பாக மொழியில் மதம் சேர்த்ததை எதிர்த்து அதிகம் பேசியிருக்கிறார். இதே ஆதங்கத்தை 1962-ம் ஆண்டு ‘மொழியும் அறிவும்’ எனும் தலைப்பில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில், பொருளில், எழுத்தில், எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே தலைசிறந்த நீதி இலக்கியமான திருக்குறள் தமிழில் உள்ளது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலேயே சிறந்த கணக்கு முறை, அதாவது இளஞ்சுவடி எனும் எண்கணக்கு இருக்கிறது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் தமிழனுக்குப் பயன்படக் கூடியதாக எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன" என்கிறார் பெரியார். கட்டுரையின் முடிவு : இதைக் கூர்ந்து கவனித்தால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்று கூறிய விதம், ஒரு பூனை தனது இரையான எலியைப் பிடிப்பது போன்றது கிடையாது, மாறாகப் பூனை தன் குட்டியைக் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற உணர்வே! அதில் எந்தப் பற்றுக்கும் இடமில்லாமல் மனித பற்றை மட்டுமே பிரதானமாக வைத்து யோசித்திருக்கிறார் அந்த தொண்டு செய்து பழுத்த பழம். இன்று அவரின் 146-வது பிறந்த தினம்!
  13. இதோ இன்னுமொரு இணைப்பு…. உங்களிடம் விகடன் சந்தா இருக்கிறது என நினைக்கிறேன். வாசித்து பயனடையுங்கள். உண்மையை மீண்டும் ஒரு தரம் பறைசாற்ற நீங்கள் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. பிகு இனி என்ன? விகடன், பிபிசி திராவிட ஊடகம் - அதுதானே🤣. Fact Check: நிஜமாகவே தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்? | Long Read https://www.vikatan.com/literature/tamil/did-periyar-actually-say-tamil-is-a-barbaric-language மேலே உள்ள விகடன் Fact-check தரவு சரிபார்க்கும் கட்டுரை சொல்லும் தரவுகளில் சில பெரியாரைப் பொறுத்தவரையில் கன்னடியன், தெலுங்கன், மலையாளி, தமிழன் என்ற வேற்றுமையே ஆரியத்தின் சூழ்ச்சி என்ற கருத்துடையவர். இவர்கள் நால்வர் பேசும் மொழியும் தமிழே! அதில் வடசொற்கள் கலந்தே பிரிவினை உண்டானது என்கிறார். நான்கு மொழி பண்டிதர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் இருக்கும் வடசொற்களை எடுத்துவிட்டால் தமிழே மிஞ்சும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து நான்கு மொழி உருவாகவில்லை. நான்கு மொழியுமே தமிழ்தான் என்கிறார். இதனை 1948-ம் ஆண்டு எழுதிய மொழியாராய்ச்சி நூலில் விளக்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ‘சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் வேறு இல்லை என்கிறார்! இதனால் வடமொழியினைக் கடுமையாகச் சாடியவர், இன்று பேசப்படும் வந்தேறி அரசியலுக்கு எந்த இடத்திலும் இடம் கொடுக்கவில்லை. மேலும் பகுத்தறிவு, விடுதலை, குடியரசு, உண்மை என்று தமிழ் மொழியிலே தனது இதழ்களைத் தொடங்கினார். இந்தி திணிப்பு போராட்டத்துக்காகச் சிறை சென்றார். தமிழ் இசையைக் கேட்கவேண்டும் என்ற இயக்கத்தைக் கொண்டு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கி, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கிய நேரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். தமிழர் தன் குழந்தைக்குத் தமிழில் பெயரிட வேண்டும், நமது ஊர், நகர், தெருவுக்குத் தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழ் மொழி வளர்ச்சி’, ’தமிழ் பொழில்’, ‘தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் ரகசியமும்’, ‘தமிழ்நாட்டின் நாகரீகமும் பழக்க வழக்கங்களும்’, ‘தமிழ் மொழியில் பிற மொழிகள் செய்யும் ஆதிக்கம்’ என மொழிகுறித்து பல கட்டுரைகள் எழுதினார். குறிப்பாக 1932-ல் மதராஸ் மாகாண அரசு, ஆங்கில சொற்களுக்குக் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் வடமொழி அதிகமாகக் காணப்பட, பெரியார், "சமஸ்கிருத தொடர்பினாலும் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தினாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. வடமொழிச் சொற்களும், ஆங்கில சொற்களும் தமிழில் கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் எளிய தமிழில் ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது 'நித்திரை' வேண்டாம் என்கிறேன். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்கள் இனி இயற்றப்படுதல் வேண்டும்" என்றார்.
  14. இதைத்தான் ஒரு விடயத்தை சூழமைவை (context) கருதாமல் நுனிப்புல் மேய்வது என்பது. உண்மையில் நீங்கள் யாழில் சீமான் பிரச்சாரம் தவிர எழுதப்படும் விடயங்கள் எதையும் வாசிப்பதில்லையா? இதை பற்றி நானே திருமாவேலன் எழுதிய நீண்ட விகடன் கட்டுரையை யாழில் பதிந்துள்ளேன். இன்னொரு பிபிசி இணைப்பு கீழே இதை விட பல திரிகளில் இந்த பொய் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. BBC News தமிழ்நிர்மலா சீதாராமன் சொல்வது போல் பெரியார் தமிழை 'காட்டுமிரா...தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை திமுகவினர் ஒவ்வோர் அறையிலும் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் விமர்சித்தார். உண்மையில் பெரியார் கூறியது என்ன? தமிழை அவர் ஏன் காட்டுமிராண்டி
  15. ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.
  16. சிலருக்கு சுட்டு விட்டது. அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது. “அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்” -அமரர் விவேக்- பிகு இதே ஆட்கள்தான். சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள். தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள். நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள். மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.
  17. சிறுவர் துஸ்பிரயோகிகளையே நியாபப்டுத்திய ஆட்கள், இதுக்கு கண்கலங்காட்டித்தான் பிழை 🤣
  18. இதில் எந்த தவெக ஆட்கள் மீதும் கொலை குற்றம் சுமத்தபட முடியாது. ஆனால் - சதி என்பது நிருபணமானால் - பல திமுக தலைகள் உருளலாம்.
  19. ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன். ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்… உலகில் களவு செய்யாதவன் யார்… அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்…. என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா…. அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர். லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.
  20. சீமான் என்ற அழுக்கை…மழை, தூவானம் இல்லாவிட்டாலும், கிணத்தில் மோட்டார் போட்டு இறைத்தாவது கழுவி, கழுவி ஊத்தல் வேண்டும். என்னை கைய பிடிச்சு இழுத்தியா🤣
  21. இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.
  22. https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba இதில் இருவரின் படமும் உள்ளது. தெரிகிறதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.