Everything posted by goshan_che
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மைதான். ஆனால் ஆனானப்பட்ட இத்தாலிக்கு நவீன கால்பந்தை அறிமுகபடுத்தியவர்கள் ஆங்கிலேயர். ஏசி மிலான், ஜினோவா, இண்டர் மிலான், ரோமா எல்லாம் ஒரு காலத்தில் கிரிகெட் விளையாடி கிளப்புகள். அதேபோல் 1844 இல் உலகின் முதலாவது சர்வதேச கிரிகெட் போட்டி யூ எஸ் க்கும் கனடாவுக்கும் நிகழ்ந்தது. இதன் மறுவளமாக யூ எஸ் சில் கிரிகெட் நிலை கொண்டால் எல்லாருக்கும் நல்லம். *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணணும்🤣
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் பல கேள்விகள் மிச்சம் இருக்கு. இனி எனக்கு இறங்குமுகம்தான். விஜய பிரபாகரன், செளம்யா போல் முதலில் லீடிங்கில் இருந்தாலும் கடைசியில் வெல்லப்போவதில்லை. திமுக+ 39/39 என கணித்தோர் இனி கட கட என மேலே வருவார்கள். இவங்களையே இந்த கலாய்…கலாய்க்கிறீங்களே….. அப்ப…. தோல்வி பயத்தில் போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டவர்களை எப்படி கலாய்ப்பீங்களோ🤣. அவர்களின் பேராண்மைக்கும், தைரியத்துக்கும் நானும் தலை வணங்குகிறேன்💪🏿💪🏿💪🏿
-
சாமி சிறீ பாஞ்
வணக்கம் பாஞ்ச் ஐயா. நலமுடன் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள்🙏.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது வழமையாக பெண்கள் பேசும் வசனமாயிற்றே🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிறகுதான் ஐ சி சி பொறுப்பேற்றதா🤣? அஸ்கு புஸ்கு. நான் joint second place🤣
-
சமஸ்டி தீர்வை பெற்றுத்தருவதில் இந்தியா பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்! - மோடிக்கு சிறிதரன் கடிதம்.
சமஸ்டியை தீபாவளிக்குள் தராவிட்டால், நடுவண் அரசுக்கான ஆதரவை விலக்கப்போவதாக சிறிதரன் நாயுடு மிரட்டல்! இவரின் கடிதத்தை டெல்லியில் எதையோ துடைக்க கூட பாவிக்க மாட்டார்கள். நானும் அரசியல் செய்கிறேன் என தனது வாக்காளரை ஏமாற்ற எழுதப்பட்ட கடிதம் இது. # சுத்துமாத்து சிறிதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமேரிக்கா போன்ற நாட்டில் கிரிகெட் பிரபலமானால் ரொம்பவும் நல்லது. காசு கொட்டும். BCCI யின் கொட்டத்தையும் அடக்கி வைக்கலாம்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
மிக தெளிவான விளக்கம். நன்றி அண்ணை. இப்படி ஒருக்கா முயன்று பார்க்கிறேன். இதுவும் சரிதான். ஆனால் நீங்கள் மேலே சொன்ன வழிதான் உள்ளதில் ஓரளவு யதார்த்தத்தை நெருங்கி வரும் முடிவை தரும் என நினைக்கிறேன். நன்றி ரசோ. நீங்களும் அதே முறையைத்தான் பரிந்துரைத்துள்ளீர்கள். நன்றி. உங்கள் கேள்வியின் அர்த்தம் புரிகிறது. ஆனால் பதில் தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் . உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது. முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள். தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சாக்கிரடீசை நஞ்சூட்டிய உலகம் அல்லவா இது 🤣🤣🤣.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இப்பெல்லாம் யாரும் மிசின் மோசடி பற்றி கதைப்பதே இல்லை🤣. மீண்டும் ஆட்சியில் இருக்கும் கட்சி தனி பெரும்பான்மை வெற்றி பெறும் போது - இதை தூக்கி கொண்டு வருவார்கள் என நினைக்கிறேன். வாழ்க்கையில் சிலர் இருப்பார்கள் தமது தோல்விக்கு தம்மை தவிர மிகுதி அனைவரையும் குறை சொல்வார்கள். சில கட்சிகளும் அப்படித்தான்🤣.
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
கக்கா போகும் காகம்கள் சார்பாக இதை நான் வரவேற்கிறேன்🤣.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த புள்ளிகளை தேர்தல் ஆணையம் % சொல்லும் வரை பூர்வாங்க புள்ளிகளாக கருதலாம் என நினைக்கிறேன். அனைவரும் சொந்தமாக கணிப்பிட்டே 8.1%, 8.2%, 8.6% வரை சொல்கிறார்கள். தேர்தல் ஆணைய கணிப்பீடு 7.99% ஆக அமைந்தால்?
-
நன்றி கெட்ட உலகமிது 😡
கடமையில் இறந்த அதிகாரிக்கும், கொல்லப்பட்டவருக்கும் அஞ்சலிகள். கொல்லப்பட்டவர் ஒரு இனத்துவேச, வலதுசாரி அடிப்படைவாதி என்பது உண்மையா? எந்த கருத்து முரணுக்கும் வன்முறை பதில் இல்லை.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பிஜேபி முன்னர் போல் கண்டமேனிக்கு திமுக மீது வழக்குகளை, துறைகளை ஏவி விடுவது இனி கொஞ்சம் கஸ்டம்தான்🤣. # மனவாடு #మనవాడు
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நான் கணக்கில் ரொம்பவே வீக். ஆனாலும் ஒரு சின்ன சமன்பாடு. ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த சதவீதத்தை அது போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்தால் - கட்சிகளின் உண்மையான ஆதரவு நிலை பற்றி ஓரளவுக்கு ஊகிக்க முடியுமா? கணக்கில் புலியாக இருப்போர் சொல்லவும். இதன்படி: திமுக - 26.93/21 = 1.28 அதிமுக - 20.46/32 = 0.63 பாஜக - 11.24/23 = 0.48 காங்கிரஸ் - 10.67/9 =1.18 நாதக -8.10/39 =0.20 பாமக - 4.2/10 = 0.42 * இந்த வகுப்பு கூட்டணி கட்சிகளுக்க்காக கிடைத்த வாக்கை, போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு என்று கருதுகிறது என்பதை கவனிக்கவும்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நிச்சயமாக ஊதலாம். அக்யூஸ்ட் நம்பர் வன் க்கு கூட்டணி இல்லாமலே மேடை ஏறி ஆதரவு திரட்டியவர். ஆகவே அதிமுக கூட்டணியில் சேர எந்த நெருடலும் சீமானுக்கு இல்லை. முட்டு கொடுக்கவும் தம்பிகள் இப்போதே தயார். இப்போ முடிந்த தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் 6 சீட்டில் நின்றிருந்தால் 2 எம்பி யை யாவது அனுப்பி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு “சக்தி” அவரை பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு போகாமல் தடுக்கிறது🤣. பீஜேபி + அதிமுக கூட்டணி, நாதக வாக்கு பிரிக்கும் தொழில் - இதுதான் அந்த சக்தியின் இப்போதைய தந்திரோபாயம். இந்த கூட்டணியில் முதன்மை கட்சியாக பிஜேபி வரும் போது, நாதகவின் தொழில் வகுப்பு - வாக்கை பிரிப்பது என்பதில் இருந்து வாக்கை சேர்ப்பது என ஆகும். அப்போது இந்த கூட்டணியில் நாதகவும் சேரலாம். இதில் யாராலும் கணிக்க முடியாத புதிய factor விஜை. மாவீரன் வரும் வரை காத்திருக்கிறார். வந்ததும் உருவாகி விடுவார். நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்ட தகுதிவாய்ந்த, இளைய, இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது. #காளியம்மாவுக்கு எப்ப கட்டம் கட்டுவாரோ:
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நன்றி ஆனாலும் தேர்தலுக்கு தேர்தல் AfDவளர்கிறது இல்லையா. எதையும் நடக்காது என சொல்ல முடியாது. இதே ஜேர்மனியில், ஜஸ்ட் 80 வருடங்கள் முன் நாஜிகளை மக்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள். ஆகவே AfD ஆட்சியில் பங்கு எடுக்கும் நிலை வர வாய்புகள் மிக அதிகம். இப்படியான விச செடிகளை முளையிலேயே கிள்ளி விட வேண்டு. ஆனால் விகிதாசார முறை இந்த விசசெடிகளை பதியம் போட்டு வளர்க்க உதவுகிறது. 🤣. எனது கருத்தை கொஞ்சம் ஊண்டி சொல்வது உண்மைதான். ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் என திணிக்கும் எண்ணமில்லை🙏.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1. நாதக 8% என்பதை நான் எங்கேயும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஒரு மாதம் முன்பே என் கணிப்பே 8% என்பதுதான். 2. நாதகவுக்கு என ஒரு வாக்கு வட்டம் உள்ளது. உண்மையில் நீங்கள் சொல்லுவது போல் சின்னம் பார்த்து எல்லாம் இப்போ போடும் நிலை தமிழகத்தில் இல்லை. நாதக சின்னம் மைக் என்பதை பெரும்பாலானா வாக்களார், குறிப்பாக நாதக வாக்காளர் அறிந்தே வாக்களித்துள்ளனர். ஆகவே சின்னம் மாற்றம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. 3. நாதக 8% எடுக்கும் என நான் சொன்னது யூன் 4ம் திகதி மட்டும் மூக்கு சாத்திரம். அதன் பின்? அதே போலவே ஏனையவையும். 4. நிச்சயம் சீமான் தொடர்ந்து 10% க்கு கீழ் வாக்கு எடுத்தபடி, அத்தனை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தபடி காலத்தை ஓட்ட முடியாது. ஆகவே கூட்டணி வைப்பார் என்பது ஊகிக்க கூடியதே. 5. ஏனையவர்கள் கள்ளர், கசை போக்கிரிகள் - ஆகவே பிஜேபியுடன் கூட்டி இருந்தார்கள். சீமானும் அப்படி செய்தால்——கவனிக்கவும்——செய்தால், அவரும் அதுவே. ஆனால் “யாரோடு சேர்ந்தாவது வெல்லட்டும்” என்ற முட்டுக்கு இப்போதே @ஈழப்பிரியன் அண்ணா வந்து விட்டார். யாழ்களத்தில் இன்னும் எத்தனை பேர் இப்படி நிலைமாறுவார்கள் என்பதை காலம் விரைவில் காட்டும் என நம்புகிறேன். இதைதான் பல வருடமாக இங்கே எழுதி வருகிறேன். ஆனால் இதை செய்யும் இதயசுத்தி அவரிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை எப்போதோ பொய்த்து விட்டது. ஆனாலும் திருத்தி கொண்டால் வரவேற்க தயார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தடக்கள வீரர்கள், தடை தாண்டி ஓடுபவர்கள்….போட்டியில் ஓடுகிறோம் என பாவ்லா காட்டி விட்டு…அப்படியே ஓடிவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்🤣 முதலாவது அல்லது இரெண்டாவது 50 ஓவர் உலக கிண்ணத்தில் இந்த அணிகள் எல்லாம் - கிழக்கு ஆபிரிக்கா என்ற பெயரில் விளையாடின என பள்ளிகூட லைபரரியில் ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு. 96 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை கென்யா வீழ்த்தியது மறக்க முடியாத நிகழ்வு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏதோ நாம் பிறந்த சொந்த வீட்டில் போய் கண்ணயரும் பீலிங் எனக்கு🤣
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
விகிதாசார தேர்தல் முறையில் நாஜிகள், முழுக்க முழுக்க அடிப்படை வாதிகளாக இருப்போர் கை ஓங்கும். அவர்கள் தயவில் ஆட்சி எனும் போது அவர்கள் கேட்க்கும் இனதுவேச சட்டங்களுக்கு பெரிய கட்சிகள் அடி பணிய வேண்டி வரும். உதாரணமாக யூகேயில் பின் என் பி, நேஷனல் புரொண்ட் போன்றோருக்கு 10% வரைக்கும் ஆதரவு இருந்தாலும் அவர்களால் அந்த அடிப்படை வாத கருத்துகளின் அடிப்படையில் எம்பி ஆக முடியாது. ஆகவேதான், யூகிப், ரிபோர்ம் என கொஞ்சம் மிதவாத முகமூடியை போட்டு கொண்டு முயல்கிறார்கள். ஜேர்மனியில் AfD யின் வளர்ச்சியும், ஏறுமுகமும் மிக ஆபத்தானது. ஒரு காலத்தில் அரசில் இந்த கட்சி வரவும் வாய்புள்ளது. பிரித்தானிய தேர்தல் முறையை ஜேர்மனி பின்பற்றினால் இந்த கட்சி இந்தளவுக்கு வளர வாய்ப்புகள் மிக குறைவு.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இதே போல நிதிஷிடமும் ஜூனியர் பார்னராக போய், சீனியர் பார்ட்னர் ஆக முயற்சித்தனர் பாஜக. நிதீசுக்கும், நாய்டுவுக்கும் பாதுகாப்பான வழி இந்தியா கூட்டணியில் சேர்ந்து அதிகூடிய சலுகைகளை அடைவதே. பிஜேபியோடு சேர்ந்தால் - பழம் இருக்க சுளை எடுத்து விடுவார்கள்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இரெண்டு வருடத்தில் ஒரே கூட்டணி என்றால் இப்பவே ஆளை ஆள் பாராட்ட ஆரம்பித்தால்தான் மெள்ள, மெள்ள நகர்ந்து, கைகோர்ர்கும் அளவுக்கு தம்பிகளையும், சங்கிகளையும் தயார் செய்ய முடியும் என்பது அண்ணாமலைக்கு புரிகிறது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இரெண்டு முறையிலும் குறைபாடுகள் உள்ளன. விகிதாசார பிரதிநிதிதுவம், கலப்பு பிரதிநிதிதுவம் என மாறி மாறி அமல்படுத்திய இத்தாலியில் நடக்கும் ஊழல் கூத்துக்களை, நிலையற்ற தன்மையை பார்க்கிறோம்தானே. பிரிட்டனில் இப்போ உள்ள சிஸ்டமா, விகிதாரசாரமா என 2012 அளவில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, படு தோல்வியடடைந்தது. இந்தியாவும் இதே நிலைதான் என எண்ணுகிறேன். இந்தியா மட்டும் அல்ல அமேரிக்காவும் கூட. சில நாடுகளுக்கு பொருந்துவது ஏனைய நாடுகளுக்கு பொருந்தாது. கலாச்சாரம் போல அரசியல் கலாச்சாரமும் நாட்டுக்கு நாடு வேறுபடும்.