Everything posted by goshan_che
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
-
14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ரஸ்யரை விட துரைமார் கூடப்பேர் போயிருக்கினம். 2 வருடம் முன் ஊசிப்போன வடைக்கதை எல்லாம் பெரிய பலனை தராது. வேறு வகையில் முயற்சிக்க வேணும்🤣. லூசனுகள், UK Foreign Office க்கு என்ன தெரியும் ? நாம் 20+ வருடம் நாட்டுக்கு போகாத அனுபவத்தில் சொல்கிறோம். போய்டாதேங்கோ….நரகம்…நரகம்🤣 அதை நல்லூர் கந்தன் பொறுப்பில் விடுங்கள்🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
20 ரூபாய்க்கு வடையில் எண்ணை ஒத்திய பேப்பரும் கிடைக்காது🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
கணிதத்தில் மட்டும் 🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180).
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள். இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன். ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி - இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல, சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை. நன்றி🙏
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது. ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அப்படி இல்லை. இனத்தின், போரின் இழப்பையும், வடைக்கு இரு மடங்கு விலை கொடுப்பதையும் வேறு படுத்தி பார்க்க முடியாவிடின் - பிழை எம்மில்தான்.