Everything posted by goshan_che
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான். ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
ஒரு குட்டி ஸ்டோரி 50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
-
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
#பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣. அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான். சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள். (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).
-
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence இல்லை Sir.
-
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/
-
பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஓம்… ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது. என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்…. பெரிய பானையை உடைக்கக்கூடாது. @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏. சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣. ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣. அவனவனுக்கு அவனவன் பதவி.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
எல்லா முஸ்லிம்களையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது. இலங்கையில் பெரும்பாலானவர்கள், மலேசியா, தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இப்படி இல்லை. ஆனால் என்ன பிரச்சனை - அடிப்படைவாதிகள் கை ஓங்கும் போது ஏனையோர் அடங்கி போகிறார்கள் அல்லது சல்மான் ருஸ்டிகளாக்கப்படுகிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா….. வேணும்…… என்ர புத்திக்கு…. வேணும்…..🤣
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நீங்கள் பூலோக சொர்க்கம் இலண்டன் வந்ததில்லையா? https://www.swlondoner.co.uk/life/14082023-five-bizarre-london-scams-that-you-need-to-know-about https://theculturetrip.com/europe/united-kingdom/england/london/articles/13-scams-all-tourists-should-avoid-in-london கனடாவில் ஒவ்வொரு மனிதனும் யேசு, புத்தர்தான் போலும்? சுய அனுபவம். இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம். கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம். ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣. இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣 மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka. என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை. தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இன்னொரு ஜொனியன் புளிச்சலோ🤣
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நான் இஸ்ரேல் இடத்தில் இருந்தால் இப்படித்தான் செய்வேன். ஆனால் இஸ்ரேலின் பெரிய பானை பைடன், தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், போர் வந்து எண்ணை விலை120+ போவதை விரும்பவில்லையாம். உண்மையில் பைடன் ஈரானுடன் அதி மென்போக்கை எடுப்பவர். சில வேளை தேர்தலுக்கு பின் (யார் வெண்டாலும்) சாத்துப்படி நடக்கலாம். இப்போதைக்கு பெரிய எடுப்பில் இராது என்றே நினைக்கிறேன். ஆனால் லெப்ட் சிக்னல் போட்டு ரைட் கட் பண்ணுவதில் இஸ்ரேல் சூரர். சொல்லமுடியாது. முட்டுக்கு, முட்டாக…. சொத்துக்கு, சொத்தாக…. அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக🤣. #சும்மா பகிடிக்கு🙏