Everything posted by goshan_che
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஓம் Sir, சோசல் காசில் வாழும் நான் என்ன காலையில் எழும்பி வெட்டி முறிக்கவோ…. நல்ல தூக்கம். இனி எழும்பி அடுத்த கொலிடே எங்கே என ரிசேர்ஜ் பண்ணப்போறன். நீங்கள் எப்படி, பகல் முழுக்க வழமை போல் களவுதானோ?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் அப்படி சொல்லவுமில்லை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இது சரியான தகவலாக தெரிகிறது. அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம். நன்றி. நல்லதுக்கு காலமில்லை🤣
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
கூகிள் டிரான்சிலேட்டர் பாவித்திருபார்களோ….சேர்?🤣
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
என்ன மறந்து விட்டீர்களா Sir பெருமாள் ? நான் இருப்பது இலங்கை அரசின் புலாய்வு கொடுப்பனவில், அல்லவா? ஆகவே யூனிவேர்சல் கிரெடிட் எல்லாம் எனக்கு, சும்மா நொறுக்கு தீனி வாங்கும் காசு🤣.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தட்டி கேட்கவேண்டும். ஒண்டில் ஆதாரம் இல்லாமல் “தட்டி”. இல்லை என்றால் சட்ட ரீதியாக. இப்போ கைக்கொண்ட இரெண்டுக்கும் இடைப்பட்ட வழி, நல்லதை வொட தீயதையே தரும். தருகிறது. 👆🏼👍
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நான் நினைப்பது: இங்கே எடுத்தால் 20, அங்கே எடுத்தால் 30 எனில். பேசாமல் அங்கேயே போய் எடுக்கலாம்? எடுக்கும் போது - கவுண்டரில் விளக்கத்தை கேட்டு வந்தால். அடுத்த முறை போகும் போது அங்கே அல்லது இங்கே எடுக்கலாம்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
என்ன ஜோக்கா, இரெண்டும் இருந்தாலும் ஆட்கள் கூட என்றால் வரிசையில்தான் நிற்க வேண்டும். போன மாசம் No Limit இல் ஒரு 20 நிமிடம் கியூவில் நிண்டுதான் வாங்கினேன். எங்கள் சிறி @தமிழ் சிறி அண்ணா கூட இலங்கை போன நேரம் நோ லிமிட்டின் முந்திய கடையான ஹவுஸ் ஆப் பேசனில் வரிசையில் நின்றுள்ளார், அது செய்தியாக யாழில் வந்தது. அவர் போன்ற செல்வ சீமான்களே வரிசையில்தான். இங்கே நிற்பவர்கள் ஏழைகள் இல்லை. ஆனால் ஆட்களை அனுப்பி உடுப்பு வாங்க பெரும் முதலைகளமில்லை. பாஸ் இவர்கள் ஏழைகள் இல்லை. உழைக்கும் வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம். போற போக்கில் இலங்கையில் கார் வைத்திராத எல்லாரும், பஸ் ரயிலில் போவோர் எல்லாரும் ஏழைகள் என அடிச்சி விடுவியள் போல🤣. இது எல்லா நாட்டிலும் தானே? கனடாவில் நீங்கள் எப்படி? வாரம் முழுக்க குப்புற படுத்து கிடந்து விட்டு, வார இறுதியில் மரத்தில் காசை புடுங்கியா பொருட்கள் வாங்குவது🤣?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நாம் வாழுவதில் கூட இல்லாத சந்தோசம் இன்னொருவன் வீழ்வதில் உள்ளது - என்பது தொன்று தொட்டு தமிழர் நம் வாழ்வியல்தானே🤣. #சும்மா பகிடிக்கு🙏 இல்லை ஏழைகள் இந்த கடைகளில், இந்த படம் காட்டும் தோற்றத்தில் இருக்க மாட்டார்கள். அதே போல் அவர்கள் நாளுக்கு நல்ல உடுப்பு எடுத்தாலும், இப்படி பட்ட கடையில் இன்றி, நடைபாதை கடையிலோ அல்லது துணி வாங்கி தைத்தோதான் போடுவார்கள். நீங்கள் கனடா வந்த பின் ஏழ்மை, ஏழைகளை நூதனகாட்சி சாலையில்தான் பார்த்தீர்களோ? அப்படி இருக்கிறது உங்கள் ஏழ்மை பற்றிய புரிதல்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இல்லை அதற்கு முன்பே கட்டாயம்தான். ஆனால் வீதியில் மறிக்கும் பொலிசுக்கு இது 2022 க்கு பின்பே அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். நான் சொன்னது போல 2010 அல்லது 12 இல் நான் இதையிட்டு விசாரித்த போதே கொழும்பில் AA யில் பதிய வேண்டும் என்று எனக்கு தெரிய வந்தது. 2017 வாக்கில் யாழில் கூட இதை பற்றி நாதமும் நானும் இன்னும் சிலரும் கதைத்துள்ளோம்.
- ரணில் விக்கிரமசிங்க: One Man Government
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
தெரியவில்லை அண்ணை. கேட்டுப்பார்கிறேன்.
-
பொருளாதாரம் உறுதியாக இருந்தாலும் இலங்கையில் வறுமைநிலை உயர்வாகவே காணப்படுகின்றது - உலக வங்கி
உலக வங்கியின் வறுமை குறித்த அறிக்கை திரியில், அதை அரைமுறையாய் விளங்கி கருத்தெழுதிய சொர்காபுரி மன்னர்கள் இந்த திரியில் கப்சிப்🤣. இந்த green shoots of growth ஐ கண்டு வந்து சொன்னதுக்குதான், சிங்கள அபிமானி பட்டம் கிடைத்தது🤣. செல்லா குட்டீஸ், 2024 யூகே, பிரான்சின் எதிர்வு கூறப்படும் வளர்சி வீதம் என்ன? 0.5?, 1?, மைனஸ்? அன்ரிக்கு ஒரு சிங்கள பின் பக்கம் கழுவி பட்டம் பார்சல்!
-
யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
வந்தது தினேஷ் “பாண்டியன்” என்ற வகையில் ஒரு அமைதி.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
வாத்தியார் பிள்ளை……Sir
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள். நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும். ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள். இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள். ஓம். நான் மேலே சொல்லி உள்ள விளக்கம்தான். கெத்துத்தான் தலைவா.
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார். ஒரு குடுவையை எடுத்து கொண்டு கிளம்புங்கள்🤣.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
ஏன் sir I love you எண்டு யாரும் சொன்னவையோ🤣. மீராவுக்கு இன்னொரு திரியில் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், குடி சனங்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியயுள்ளேன். மேலேயும் உ. வங்கி, என்ன சொன்னது என்று விளக்கி - இந்த அறிக்கை 22/23 பற்றியது. 23/24 முன்னேற்றமான ஆண்டாக அமையும் என்றே உ. வங்கியும், அதைத்தான் நானும் சொன்னோம் என்ற விளக்கமும் கொடுத்துள்ளேன். அவர் விளக்கம் உள்ளவர், விளக்கியதும், விளங்கி, விலகி விடுவார். ஏனையோர் - Sir தான் (Stupid I Remain)🤣.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
உண்மை. ஆனால் தமிழருக்கு அதிகமாக கொடுத்தால் - ஒரு புதிய புத்திரர் தோன்றும் வாய்ப்பு உருவாகும். அல்லது மகிந்தரே மீள புத்திரபாத்திரம் ஏற்கலாம். இதை எஜமானர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால்தான் இப்போ உள்ள ஸ்டேடஸ் குவோவையே நீடிப்பது எஜமானர்களின் தெரிவாக இருக்கிறது.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
அதுவே…. நான் இலங்கை போன பின், அங்கே உருவாகிய பொருளாதார நெருக்கடி, அறகளை, ரணில் வருகை, அதன் பின்னான முன்னேற்றம் எல்லாமுமே “உருவாக்கப்பட்ட நெருக்கடி” manufactured crisis என நம்பத்தலைபடுகிறேன். ரோலிங்கில் போய் கொண்டிருந்த நாட்டை, கோவிட் மற்றும் இந்த உருவாக்கப்பட்ட நெருக்கடி, பொருள்களை சர்வதேச சந்தையில் வாங்க முடியாதவாறு செய்துள்ளது. அதை பயன்படுத்தி சில நாடுகள் இலங்கயின் அத்தனை அரசியல் கட்சியையும், பெளத்த பீடத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டில் எடுத்து விட்டன. அது மட்டும் இல்லாமல் - இலங்கைக்காக பொருள் விநியோகமும் இவர்களின் முகவராகிய தனியாரிடம் போய் விட்டது. இருக்கும் நாட்டின் இலாபமீட்டும் சொத்துக்களும் இவர்களிடமே விற்கப்படுகிறது. ஆனால் ஒரு சிறுபான்மையாக - நான் இந்த நிலையை வரவேற்கிறேன்.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
நான் சொன்னதுக்கு மாறாக உலக வங்கி எதையும் சொல்லவில்லை. 1. உலக வங்கி எந்த 2022-2023 தரவுகளை வைத்து இதை சொல்கிறது. இந்த தரவுகள் கூட இலங்கைக்கு புதிதல்ல. பல வருடகாலமாகவே வறுமை கோட்டுக்கு கீழே குறித்த சதவீத மக்கள் வாழ்வது இலங்கையில் சகஜம். இந்த அறிக்கை 25% பேர் வறுமை கோட்டுக்கு கீழே என்கிறது. அப்போ 75% வறுமைகோட்டுக்கு மேலே என்பது சரிதானே? இதைத்தானே நான் எழுதினேன்? 4 வருடமாக வறுமை அதிகரித்தது என்கிறது. இதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் கடந்த 4 வருடத்தில் யூகே யில் வறுமை அதிகரித்துள்ளதா இல்லையா? ஆனால் இதன் அர்த்தம் யூகேயில் கடும் நெருக்கடி என்பதில்லைதானே? 2. 2023-2024 வில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்வு கூறுகிறது. அந்த முன்னேற்றத்தைதான் நான் அனுபவமாக எழுதினேன். 3. நீங்கள் ஒரு வியாபாரம் தெரிந்த, செய்யும் ஆள் என நினைக்கிறேன். ஆனால் microeconomics ஐ அணுகுவது போல் macroeconomics ஐ அணுகுகிறீர்கள் என நினைக்கிறேன். விசுகு அண்ணைக்கும் இதே பிரச்சினைதான்.
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
இலங்கையில் கடைசியாக எந்த வருடம் 20% கீழான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்தார்கள் என யாராவது நினைத்தீர்களா? அல்லது நாட்டு நிலமையை கண்டு வந்து சொன்னர் மீதுள்ள கடுப்பில் இப்படியான கேள்விகளை மறந்தே விட்டீர்களா?
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
இது விளங்கினால் இந்த இனம் எப்போதோ தனக்கென ஒரு நாட்டை அடைந்திருக்கும். இங்கே மேலே கருத்து எழுதிய பலர் - வாசித்தும், வாசிக்காதது போல நடிக்கும் பந்தியை மீள இணைக்கிறேன்.