Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. நீங்கள் சொல்வதில் முழுவது உடன்பட்டாலும், என்னை பொறுத்தவரை முடிந்தளவு processed food, preservatives, கலரிங், இவற்றை தவிர்த்து உண்ண கூடியதே இயலுமானதென நினைக்கிறேன். இந்த உணவு சங்கிலியின் ஒவ்வொரு படியாக ஆராய்ந்து உண்ணுவது சாத்தியமில்லை. பிரிதானியாவின் நதிகள் அனைத்திலும் மிக மோசமாக மனித கழிவு மட்டும் அல்ல, நாம் எடுக்கும் மருந்துகளும் கலக்கிறன. நதி நீரில் மனிதர் பாவித்த மீதி anti depressant, class A drugs கலப்பதால் - மீன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளும், பாலின அடையாளம்களும் மாறி வருவதாக அண்மையில் ஒரு ரெடியோ நிகழ்ச்சியில் கேட்டேன். இதில் வரும் நீரை பயன்படுத்தி வளரும் புல்லைத்தான் ஓர்கானிக் பால் தரும் மாடுகள் உண்கிறன. எல்லாம் ஒரு பலன்ஸ்தான். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அந்த தம்பி பொன், இது கவரிங்🤣.
  2. 1. தூள்/கோப்பி - அங்கே வியாபாரிகளிடம் வாங்கும் மூலப்பொருட்களை வைத்தே இடிப்பது. ஆகவே பயிர் விளைவிக்கும் போது பாவிக்கப்படும் கெமிக்கல் பாதிப்பு இருக்கவே செய்யும். இந்த முறை போகும் போது பார்க்க நினைத்து முடியாமல் போன விடயம் ஒர்கானிக் தோட்டங்கள். இவை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அங்கே வரத்தொடங்கி விட்டன. ஓர்கானிக் தோட்டங்களில் மிளகாய் எடுக்க முடியுமாய் இருக்கும். மல்லி, கோப்பி இப்படி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. எனது மகனுக்கு முடிந்தளவு மிளகாய் உறைப்பை பழக்காமல் தவிர்கிறேன். ஒரு காலத்தில் உறைப்பு சாப்பிடுவதை ஏதோ வீர சாகசம் போல நானும் கதைத்து திரிந்தவனே. ஆனால் இந்த பழக்கத்தால் தேவையில்லாமல் குப்பைகளை உண்கிறோம் என்பது காலம் செல்லவே உறைத்தது (pun intended 🤣). தவிரவும் மிளகாய் என்பதே தென்னமரிக்காவில் இருந்து எமக்கு போத்துகேயர் அறிமுகம் செய்ததுதானே. அதில் ஒரு “தமிழேண்டா” பெருமையும் இல்லை. யோசிக்க வேண்டிய கோணம்தான். நாங்கள் ஊரில் இருந்து எடுப்பிக்கலாம் அண்ணை. 1kg வுக்கு சுமைக்கூலி 1000 ரூபா.
  3. சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர். நிற்க, சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள். சுருக்கமாக, புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக). படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.
  4. புலம்பெயர் தேசத்தில் சில மொக்கு கூட்டம் பிள்ளைகள் உறைப்பு சாப்பிடும் என்பதை ஏதோ பெரிய தகமை போல் கதைத்துகொண்டு திரியும். என்னை கேட்டால் முடிந்தளவு மிளகாய்தூள் பாவனையை பிள்ளைகளுக்கு இல்லாமலே பழக்க வேண்டும். இப்படியான கான்சர் ஊக்கிகள் மட்டும் அல்ல, புலம்பெயர் கடைகளில் ஒரு ஆட்டு கறியை வாங்கி அதை சுடு தண்ணியில் கழுவி பாருங்கள் - சிவப்பாய் கலரிங்கும், எண்ணையும் ஓடும். உறைப்பை கூட்ட, உப்பு கூட்ட சொல்லும், உப்பு கூட உபாதைகள் கூடும். திறமான வழி பண்டைய தமிழர், இன்றைய சிங்களவர் வழி - உறைப்புக்கு மிளகு பாவித்தல். @பெருமாள் # எரியுதடி மாலா
  5. என் inspiration ஆல் இப்படி பல தரவுகளை ஆராய்ந்தமை அதை நான் உட்பட பலருக்கு அறியதந்தமைக்கு நன்றி. என் கட்டுரை வேறு எந்த பலனை தராவிடிலும் - இது ஒன்றே போதும். நான் எப்பவுமே இவற்றை அங்குதான் போய் சாப்பிடுவது. தவிரவும் கோப்பித்தூள், மிளகாய்தூள், எல்லாம் அங்கே இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டேன்.
  6. தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே? அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home 2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  7. பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா? இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான். London living wage மணிக்கு £13.15. கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780 ஒரு வருடம்= 780x52= £40560 ஒரு மாசம் = 3380. ——— பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்? ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம். ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர். அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.
  8. அறுதி பெரும்பான்மையானோர் செய்கிறார்கள். இல்லாவிடில் நாட்டில் கோவில்களும், தேவாலங்களும் வயோதிபர்களால் நிரம்பி வழியும்.
  9. அது எல்லாருக்குமானதல்ல. கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர். அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள். எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள். பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன். 👆🏼👇
  10. வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣. கொசுறு இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1 தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது. எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.
  11. பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்? அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை. எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே? (நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣). ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன். பிகு இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன். இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி. இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.
  12. போன டிசம்பர் மாதம், நாதமுனியோடு சேர்ந்து ஒரு மானஸ்தர், சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம், இலங்கை தமிழ் மக்கள் இனி மேற்கை, இந்தியாவை, யாரையும் நம்பாது - சிங்களவரோடு நேரடியாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என எழுதினார். அந்த நல்லிணக்க நாயகனை நான் தேடுகிறேன்🤣. அரோ ஹரா!
  13. இந்த மனோநிலை இவரது மட்டும் அல்ல. பெரும்பாலனா சிங்களவர் மனோநிலையும் இதுவே. அறகல நேரம் இந்த மனநிலை மாறுகிறதோ என பலர் யாழில் எழுதினர். அதில் பல தெள்ளிய தமிழ் தேசிய வாதிகள் (அல்லது அப்படி காட்டி கொள்வோரும் அடக்கம்). ஆனால் - அவர்களை பொறுத்தவரை அது இன்றும் மனிதாபிமானப்போர் தான்.
  14. வீரத்துடன் போட்டியில் குதித்துள்ள @தமிழ் சிறி. மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையளுக்கு ஒரு சல்யூட்🤪 பாத்தியளே பெரிசுக்கு குசும்ப🤣. விட்டால், வீரப்பா, நம்பியார், செந்தாமரை, ரகுவரன், பிரகாஷ்ராஜ் எண்டு போடுவார் போல கிடக்கு🤣
  15. 1. சட்டம் மாற முன்பு வெளிநாட்டு பிரசைகளாக இந்த ஆதனத்தை வாங்கி இருக்கலாம். அல்லது… 2. முதலில் இலங்கை பிரசையாக இருந்த போது ஆதனத்தை அவர்கள் பெயரில் வாங்கி விட்டு பின்னர் வெளிநாட்டு பிரஜா உரிமை எடுத்திருக்கலாம். அல்லது 3. நான் சொன்ன 3ம் முறையில் பெற்றாருக்கு பின் சொத்து பெயர் மாறி இருக்கலாம். அல்லது 4. இரெட்டடை குடியுரிமை இருக்கலாம். அநேகமாக 99 வருட லீஸ் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆதனங்களை நான் மேலே சொன்ன லீசிங் அடிப்படையில் அல்லது, கம்பெனி சொத்தாக வைத்திருக்க கூடும். அல்லது சட்டம் மாற முன்பு அவர்கள் வாங்கிய ஆதனமாக இருக்கலாம். இப்போதும் Board of Investment ஊடாக பெருந்தொகை பணத்தை முதலிடும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஆதனத்தை freehold ஆக வாங்கும் சலுகை உள்ளது என நினைக்கிறேன். நான் மேலே சொன்னது தனி நபர்கள் residential properties, land வாங்கும் நிலை பற்றியது.
  16. ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.
  17. பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது. அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான். உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.
  18. https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣 #லண்டன் #அஜினமோட்டோ
  19. இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி? அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று. முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣. அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள். உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣. 🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣. துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.
  20. (நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.
  21. இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. நான் யாரையும் எதுவும் ஆக்குவதுமில்லை. என்னை யாரும் எதுவும் ஆக்க முடியும் என நம்பவும் இல்லை. நான் பலமுறை சொல்லிவிட்டேன். நான் நீங்கள் நினைக்கும் நபர் இல்லை. எனக்கு நீங்கள் வைத்துள்ள உத்தேச வயது கூட மிகவும் அதிகம். ஆனால் என்னை அடையாளத்தை வெளிகொணர்வதில் இப்போதைக்கு எனக்கு உடன்பாடில்லை. நான் யார் என சொல்லி விட்டால் பிறகு நினைத்ததை எழுத முடியாது. அது தேவையும் இல்லாதது. அதேபோல் என் தந்தை யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், ஹாஸ்டலில் தங்கி படித்தார். அவருக்கும் ஏனையோருக்கும் முள்ளு கரண்டியால் சாப்பிடும் முறை, எந்த கரண்டியை எப்படி, எந்த நேரத்தில் பாவிக்க வேண்டும் என்பதை, டைகட்டும் விதத்தை, சூ பாலிஷ் அடிப்பது, நேரம் தவறாமை இப்படி பலதை அதிபர் ஸ்மித் சொல்லி கொடுத்தார் என்பது பற்றி எல்லாம் முன்பே யாழில் எழுதியுமுள்ளேன் என நினைக்கிறேன்.
  22. ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣
  23. ஓ…உங்கள் வயதை வைத்து நீங்கள் இலங்கையில் வேலை செய்திருக்க கூடும் என நினைத்தேன். நானும் இலங்கையில் வேலை செய்யவில்லை, ஆனால் பெற்றாரின் விடயங்களை கையாளும் போது இது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.