Everything posted by goshan_che
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
🤣🤣🤣 இதென்ன…நான் பத்து வருசம் முதல் தனி திரி திறந்து சொன்னதை இப்ப கேட்டு ஷாக் ஆகிறியள்🤣. #இந்திராகாந்தி செத்துட்டாவா😝 ஓமா…ஓமா… அடுத்த முறையும் போட்டு வந்துதான் சொல்லுவன்🤣. இப்பவே புளுகொடியல், கோப்பி, இறால் கருவாடு, மிக்சர், சித்தாலேப, மா, பனங்கட்டி, எள்ளுருண்டை, நைஸ், லெமன்பப், கண்டோஸ் எண்டு ஒரு சரக்கு லொறி மாரித்தான் திரும்பி வந்தது😝.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்த களை ஆறவில்லை அதற்குள் மறுபடியும் ஆவலை தூண்டுகிறீர்களே ஐலண்ட் ஐயா. அடுத்த முறை கட்டாயம் போய் பாருங்கள். வீடியோ இன்னமும் பார்க்கவில்லை. நான் எப்போபோனாலும் போய் பார்க்கும் இடம். அருகே சர்வதேச மைதானமும் உண்டு. கோட்டை சுவரில் நின்று போட்டிகளை காணலாம். திருகோணமலை, காலி இவை இரெண்டும்தான் கோட்டைக்குள் குடியிருப்புகள், ஒரு சின்ன ஊரே இருக்கும் வகையில் அமைந்த கோட்டைகள் என நினைக்கிறேன். 2010 இல் டச்சு அரச உதவியுடன் பல கட்டிடங்கள், ஒட்டு மொத்தமான வீதிகள், புராதனம் கெடாமல் பெரும் செலவில் புனரமைக்கப்பட்டன. Rampart Hotel இல் கடலோர அறையில் நின்றால், அறையில் இருந்தபடியே சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். கொழும்புக்கு சவால் விடும் பல high end மேற்கத்திய உணவங்கள் உள்ளன. Peddlers Inn பரிந்துரைக்க கூடியது. Indian Hut உம் நல்லது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி போகும் நாளின் கடைசி ரயிலை எடுத்து, கடற்கரை பக்க சீட்டில் அல்லது புட்போர்ட்டில் இடம் பிடித்துக்கொண்டால், மாலை மங்கும் வேளை - தென்மேற்கு இலங்கையின் வனப்பை பருகியபடியே பயணிக்கலாம். போகும் போது விரைவுச்சாலை வழி போனால் - சர்வீஸ் செண்டரில் நிறுத்தி ஒரு கட்டு கட்டலாம். சொதி, சம்பல், கிரிபத், அம்பரல்ல தொக்கு, KFC, pizza, burger என வகை வகையாக கிடைக்கும். போகும் போது தகவல் தேவைப்படின் கேட்கவும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
யாழில் ஒரு முறை ஈழபிரியன் அண்ணா மாட்டுப்பண்ணைகள் பற்றிய ஒரு செய்தியில், இப்படியான பண்ணைகள் எங்கே உள்ளன என கேட்ட போது….அம்பேவல, நியூசிலாந்து பண்ணைகள் பற்றி எழுதினேன். அருமையான இடம். வேலையாட்கள் பலரும் மலையக மக்களே. நான் டிக்கெட் எடுத்து பார்த்ததை நீங்கள் சம்பளம்+கொத்துடன் பார்த்துள்ளீர்கள்😀. ஹோர்ட்டன் சமவெளிக்குள் இருப்பது பேக்கேர்ஸ் நீர்வீழ்ச்சி என நினைக்கிறேன். தண்ணீர் ஒரு curtain போல பரந்து விழும். பம்பரகந்த இரத்திரபுரி, நுவெரெலியாவின் பின்புறத்தில் இடையே உள்ளது. நெடிய “பாகுபலி டைப்” நீர் வீழ்ச்சி. குளிக்கலாம். தலையில் நீர் விழும். நேர் எதிரே ஒரு சிங்கள அம்மாவின் தேனீர் கடை. நீர்வீழ்ச்சியை பார்த்தபடியே தேனீர் அருந்தலாம்.
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
🤣 ஓம்…ஓம்….1995 க்கு முன் நாவாந்துறையில் சந்தணமும், ஜவ்வாதும் எல்லே மணத்தது🤣.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும், கருத்துக்கும், அழகிய வீடியோவுக்கும் நன்றி ஐலண்ட். நீங்கள் இணைத்த வீடியோவில் வரும் இடங்களில் எனக்கு 10/10😎. எல்லே, நுவர-எலிய சிறு வயதிலும், வெளிநாடு வந்த பின்பும், சில தடவைகள் போயுள்ளேன். இந்த முறை போகவில்லை. எல்லே கேப், அழகிய ரயில் பாலம் viaduct, என மனதை கொள்ளை கொள்ளும் ஊர் எல்லே. கொழும்பில் இருந்து பதுளை செல்லும் உடரட்ட மினிகே யின் கடைசி பெட்டியில் ஒப்சவேர்சன் சலூன் என பெரிய கண்ணாடி களால் ஆன பெட்டியை இணைப்பார்கள். 1st class டிக்கெட் விலைதான். ஆனால் கடைசி நான்கு இருக்கைகள் கிடைப்பது முயல்கொம்பு. பெட்டியில் எங்கோ ஒரு இருக்கை கிடைத்தாலே போதும். ரயில் பாதை எங்கும் பொல்கஹாவலவில் இருந்து பதுளை வரை கண்பூத்து போகும் அளவுக்கு இயற்கை அழகு தித்திக்கும். இந்த வீடியோவில் வரும் ஹோர்ட்டன் பிளைன்சில்தான் வேர்ல்ஸ் எண்ட், எனும் அழகிய இடம் உள்ளது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மிக உன்னிப்பாக கூட்டங்களை அவதானித்து எழுதியுள்ளீர்கள். பசித்திருப்பவன் பார்த்திருக்க உண்ண கூடாது என்பது அடிப்படை விதி, ஆனால் தங்கச்சங்கிலிகள் தக தகக்க, கடன் வாங்கி கலர் காட்டும் ஆட்கள் நிறையவே உள்ளார்கள். இதில் படித்தவர் படிக்காதவர் வேறு பாடில்லை. ஒரு டாக்டர் எப்பவும் இலங்கை போகின் பஸ்ட் கிளாஸ்தான். ஆனால் தவறாமல் அந்த இருக்கையில் சாய்ந்து இருந்து ஒரு போட்டோ கட்டாயம் போடுவார். முட்டி வலிக்க cattle class இல் குந்தி இருந்து போகும் எம்மை பற்றி சிறிதும் யோசிக்காமல்🤣. நான் ஊரில் திருவிழா சீசனுக்கு முதல் திரும்பி வந்தமைக்கும் ஒரு காரணம் டிக்கெட் மலிவு🤣, இன்னொரு காரணம் இந்த அலப்பறைகளை தவிர்க்க விரும்பியமை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நீங்கள் மேலே சொல்வதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் சாமத்திய வீடு, கலியாண வீடு, செத்தவீடு, கொடை, விடுமுறை என்று எங்கேயும் எதிலேயும் படம் தான் பிரதானம் என்ற நிலைக்கு ஈழத்தமிழர் வந்து பலகாலமாகி விட்டது என்பதும் உண்மை. ஊர்பக்கம் இன்னும் கொஞ்சம் பேய்க்காட்டலாம் போலும், ஆனால் இலண்டன் வண்டவாளங்களை நகர்புறங்களில் பலர் தெரிந்தே வைத்துள்ளனர். நான் யாழில் ஒரு உறவினர் பெண்மணியை போய்பார்தேன். அருகில் கடையில் நல்ல பழங்களை வாங்கிப்போனேன். ”நீர் பழம் கொண்டு வந்தது நல்ல விசயம், பொதுவா இலண்டன் காரர் poundland சொக்கிலேட்தான் கொண்டுவருவினம், ஒரே பிராண்ட் ஆனால் டேஸ்ட் ஒரு சதத்துக்கு உதவாது” என்று ஒரே போடாய் போட்டு விட்டார்🤣.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மூன்றாக இருக்கலாம். நானும் மேலோட்டமாகவே பார்த்தேன். எனக்கும் இந்த பச்சையில் இச்சை இல்லை. இதை வைத்து என்ன வங்கியில் கடனா எடுக்க முடியும்🤣. ஆனால் யாழிலோ, வெளியிலோ மக்களின் சிந்தனை போக்கு எப்படி உள்ளது என்பதை அறிவதில் எப்போதும் ஆர்வம் உண்டு. இதை அறிய பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று இந்த பச்சை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1£=1Rs என ஆகினால் நீங்கள் சொன்ன இந்த படம்காட்டல் மட்டும் அல்ல அண்ணை, சுற்று மதில் கட்டுகிறோம், இதர தர்ம காரியங்களை படம் எடுத்து போட்டு படம் காட்டுவதும் அடங்கி விடும் அண்ணை. இது வாழ்விட உரிமைக்காக அல்ல. உழைப்புக்கு. இப்படி யோசித்துப்பாருங்கள். 35,000 இலங்கை ரூபாவுக்காக யாழ்பாணத்தில் வந்து உயிரை விட்ட அதே ஆட்களில் இருந்து வருவோரே 3500 ஈரோவுக்காக ரஸ்யாவில் உயிரை விடுகிறனர்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிகு நான் யூகே பணவீக்கம் = இலங்கை பணவீக்கம் என கூறவில்லை. யூகேயில் விலை இரெட்டிப்பாகியுளது எனில், இலங்கையில் 4 மடங்காகி உள்ளது. ஆனால் யூகே காசுக்கு முன்னர் இலங்கையில் இருந்த “வாங்கும் வலு” இப்போ சற்று குறைவு. போர் முடிந்து 15 வருடங்கள் அண்ணை. முகமாலைக்கு வடக்கே போர் நடந்து 20. அரியாலைக்கு அப்பால் போர் நடந்து 25. போரில் நாம் அடைந்த அழிவுகளையோ அதன் நீண்ட கால பாதிப்பையோ மறுக்கவில்லை. ஆனால், இராணுவ பிரசன்னம், வலிகாமம் வடக்கு ஆக்கிரமிப்பை தவிர இப்போ போரின் பாதிப்பு என கண் முன் யாழ்பாணத்தில் காண்பது அரிது.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மிக சிலர். மிக குறைவாக. இலண்டனில் இருந்து நோர்வேக்கோ, சுவிசுக்கோ, ஐஸ்லாந்துக்கு அடிக்கடி சுற்றுலா போவதில்லை, ஆனால் ஸ்பெயினுக்கு முனுக்கென்றால் போய்வருவார்கள். அதே கணக்குத்தான்: 1£=1Rs என்ற நிலை வருமாயின், சராசரி மனிதன் பணம் ஈட்டும் இயலுமையும் இலங்கை=யூகே என ஆகிவிடும். அதே போல் நாடும் குறைந்தது மலேசியா அளவுக்காவது சுதந்திர நாடாக இருக்கும். அப்படி நடப்பின், மிக பெருவாரியான முதல் தலைமுறை புலம்பெயர் ஈழத்தமிழர் ஊருக்கே திரும்பி போய்விடுவார்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக 10 வருடத்துக்குள் வெளிநாடு வந்தோர் திரும்பி விடுவார்கள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இது தப்பு. முன்னர் ஒரு பவுண்ட் 270. இப்போ 390. பெறுமதி இரெட்டிப்பு அளவால் கூட அதிககரிக்க இல்லை. ஆனால் இலங்கையில் பொருட்களின் விலை 3 தொடக்கம் 5 மடங்கால் கூடியுள்ளது. ஆகவே எமது காசும் முன்னர் போன அளவு போவதில்லை. அதேபோல் முன்னர் யூகேயில் ஒரு பவுண்டுக்கு வாங்கிய பல பொருட்கள் இப்போ ஒன்று எழுபது. இரெண்டு. ஆகவே இது உலகளாவிய பிரச்சனையும் கூட. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. நீங்களும் திருமண மண்டபங்கள் போன்றவற்றில் செல்வ செழிப்பு உள்ளது என்பதை ஏற்றாலும், ஆனால் அவை வினைதிறனானவையா என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்கு இதில் அதிகம் மாற்றுக்கருத்து இல்லை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வராது. இப்படியான மனநிலையை, கருத்தியலை, கடந்து போகும் நிலைக்கு மக்கள் புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் வந்து விட்டார்கள். நான் கூட திரியினை தொடங்கியதால் பதில் அளித்தேன். இதைப்போல் சிந்திப்போர் யாழுக்கு வருவது அதிகம். இங்கே கூட உங்கள் கருத்துக்கு நாலு பச்சை மட்டும்தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் அரசியல் உள்ளது இல்லையா? என்னதான் பைடன் நாட்டை சொர்க்கமாக்கினாலும் டிரம்ப் ஆதரவாளர்கள் குறையாகத்தான் எழுதுவார்கள். ஆனால் நாட்டை அடகு வைத்து வாழ்கிறார்கள் என்பதில் உடன்பாடே. அடகு இல்லை, பலாலியில் இருந்து மத்தள வரை விற்கப்போகிறார்கள். இது எமக்கு நல்லதும்தான் (மறைமுக காலனியத்துவம்).
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஏன் என்றால் அதில் ஒரு நிலம் எனது பாட்டனாரினதும் என்பதால். நான் போய், கண்டு, உண்டு, கேட்டு, உணர்ந்து எழுதியதல்ல… குறிப்பாக நீங்கள் சிலாகிக்கும் அரகளயவுக்கு பின்… நாம் எல்லோரும் இலங்கையர் என்ற ஒரு மனோநிலை வடக்கு, கிழக்கில் மிக விரைந்து உருவாகி வருகிறது. உருவாகி விட்டது. தெற்கிலும் இதே மனநிலை உருவாகதவிடத்து இது தமிழர் இன நலனுக்கு குந்தகமானது. இதை உருவாக்கியதுதான் சிங்களதின் வெற்றி. அதை நான் கண்டு வந்து சொல்வதல்ல.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எது உண்மை என்பது ஒவ்வொரு வாசகரும் தாம் இலங்கை போய் பார்க்கும் போது உணரப்படும். இவை அரசின் சாதனை என நான் எங்கும் கூறவில்லை. மாத சம்பளகாரரின் நிலையை சுட்டிக்காட்டி - அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை, ஆனால் வீதிக்கு வராமல் சமாளிக்கிறார்கள் என எழுதியுள்ளேன். இது இலங்கை போவோர் எல்லாம், அல்லது உண்மையை கண்டு வந்து எழுதுவோர் எல்லாம் துரோகிகள் என்ற உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடே . காப்பெட் ரோட் நல்லாக உள்ளது என்பதால், நடந்த கொடுமைகளை அப்படி எழுதுபவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதல்ல. அதேபோல் கொடுமை செய்தார்கள் என்பதால் மட்டும், நல்ல இருக்கும் காப்பெட் ரோட்டை குண்டும் குழியுமாக உள்ளது என எழுதவா முடியும்?
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
கொழும்பில் மாநகர எல்லைக்குள் குடிசைகளை காண்பது மிக அரிதென நினைக்கிறேன். தோட்டங்கள் வத்தைகள் உள்ளன. அங்கேயும் கூட அநேகம் கல்வீடுகளும் அஸ்பெஸ்டட் சீட்டுகளும்தான். கோட்ட அபய காலத்திலேயே பலருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் தெகிவளளை, கல்கிசை தாண்டியதும் கடற்கரையோரம், சேரிகள் என சொல்லத்தக்க குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. ஆனால் இவை எப்போதும் கொழும்பை அண்டி இருந்தவனவே. இன்னொரு விடயம். வர்க்க ஏற்றத்தாழ்வு எங்கும் உண்டு. இலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அதிக தூரம் போகத்தேவையில்லை, ஒப்பீட்டளவில் மிகவும் வறுமைப்பட்ட இடங்களை அடைய. மறுக்க ஏதும்மில்லை. உலகில் சகல நாட்டிலும் இது உண்டு. இலங்கையில் முன்புக்கு அதிகமாக இந்த வேற்றுமை அதிகரித்ததாக நான் உணரவில்லை.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மேலே இனாமாக கிடைத்த வி ஐ பி டிக்கெட் என்றேனே அப்போதே நாந்தான் அந்த பனங்காட்டு நரி என்பதை கண்டு பிடித்திருக்க வேண்டும் அல்லவா🤣. கந்தர்மடமும் போனேன் - ஆஸ்பத்திரிகள், ஷோரூம்கள் என லக..லக…என்று இருக்கிறது உங்கள் ஊர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்த (டட்டூ) இப்போ உங்கள் ஊர் கடை ஒன்றுதானாம் பேமஸ். கொழும்பு புதுக்கடையில் சாப்பிட்ட போது, உங்களையும் நீங்கள் சிலாகிக்கும், நான் அனுபவித்திராத மொக்கன் கடையையும் நினைத்துக்கொண்டேன்.