Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நான் இங்கே தயாரிப்பவை பற்றி எழுதவில்லையே மீரா. நான் கதைத்தது ஒரு 70 வயதான பெண் குடும்ப தலைவியிடம். 14 நாள், மிகவும் நன்றாக உலர்த்தினால் 1 மாதம் கெடாமல் செய்து தருகின்றார். தன்னிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப என வியாபாரிகள் பக்கெட் பண்ணி ஆனால் லேபல் ஒட்டாமல் பக்கெட் 2500 க்கு வாங்குவதாக சொன்னார். நானும் அதே விலையில் வாங்கினேன். இவைதான் இங்கே வேறு லேபல் ஒட்டி 3.50 க்கு விற்கிறது என நான் நினைக்கிறேன். வியாபாரிகள் எப்போதுதான் கொள்ளை இலாபம் அடித்ததை ஏற்று கொண்டுளார்கள்? யுத்த காலத்கில் பனடோலில் கொள்ளை இலாபம் பார்த்த ஆட்கள் அல்லவா நம் வியாபாரிகள்.
  2. இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது. இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது. முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி. பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர். அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு. இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது. இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள். ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட். நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா? இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது. இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர். ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது. நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள். இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை, சி எஸ் கே யை ஆதரிக்கிறனர். நன்றி வசி, நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள். இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.
  3. வாசன், தினகரன் தாமரையில். கமலுக்கு கேட்காதபடியால் ஒதுக்கவே இல்லை என நினைகிறேன். தரவுகளை சரிபார்க்கவும். அப்படி பக்கசார்பாக நடந்திருந்தால் தை ஏன் உச்ச நீதிமன்றில் நாதக சொல்லவில்லை? அங்கேயும் தான் தோற்பதை ஏற்க முடியாத அதே bad loser குணம் உடைய அமெரிக்கன் சீமான் டிரம்ப் அவர் ஆட்கள்கள் இப்படி அலட்டுகிறார்கள்.
  4. 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம். 2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு.
  6. 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  7. வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன். ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
  8. நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
  9. ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை. ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
  10. வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  11. நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம். பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  12. இதே போல் மத்திய பிரதேசத்திலும், ஆட்சி மாறி காங்கொரசின் கமல்நாத் வந்தார். ராஜஸ்தானில் ஹலோட் வந்தார். டெல்லியில் கேஜ்ரிவால் வந்தார். பஞ்சாபிலும் ஆட்சி மாறியது.
  13. எல்லாரும் மூன்று கூட்டணியில் இருந்தால், தனியே ஒரு தும்புதடி நிண்டாலும் அதுதான் நாலாவது பெரிய கட்சி. கட்சி ஆரம்பித்து இரெண்டு தசாப்தம் ஆக போகுது. ஒரு பிள்ளை பிறந்திருந்தா…இப்ப யூனி செகண்ட் இயர்ல இருக்கும்🤣. ஒரு உள்ளாட்ட்சி சபை சீட் கூட இல்லை என நினைக்கிறேன். அண்ணனின் சொத்து மதிப்பை தவிர வேறு ஏதும் வளரவில்லை என்பதே உண்மை. இதே இயந்திரத்தை பாவித்துத்தான் காங்கிரசை அகற்றி பிஜெபி ஆட்சிக்கும் வந்தது.
  14. இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.
  15. இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
  16. இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட. ஓம்.
  17. சீமானுக்கு ஒரு மகந்தான். அந்த இளைஞர் கடந்த மூன்று வருடங்களுக்குள் சீமானிடம் வந்த, மனைவி வழி உறவினர் பிள்ளை. அவர் தமிழ் கதைப்பது சீமானால் அல்ல. ஆனால் அதுவல்ல பொயிண்ட். கீழே நிழலி எழுதியதை பாருங்கள், தமிழ்நாட்டில் திறமான தமிழ் வழி கல்வி இருக்கிறது. இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது- அவரின் வழமையான கோக்கு மாக்கு சுய நல அரசியலே.
  18. ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது. தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது. குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  19. இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?
  20. 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள். சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  21. இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣. கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.