Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஆஸ்பத்திரி தாக்கப்பட்டபோது ஹமாஸ் ராக்கெட் ஒன்று அதனருகில் வீழ்ந்ததாக Geo Location ஐ வைத்து நிறுவ முயலும் ஒரு கணக்கு. இதை பகிர்வது இஸ்ரேலை கவர் எடுக்க அல்ல. மாறாக தகவல்களை பரிந்து கொள்ளவே.
  2. நன்றி. இந்தாளுக்கு வாழ்நாள் சிறை கொடுக்க வேண்டும். —————- நாம் ஒன்றை நினைவில் கொள்ளல் வேண்டும். ஆஸ்பத்திரியை தாக்கும் அளவுக்கு மோசமானவர்கள் இஸ்ரேல். அதே போல் ஆஸ்பத்திரியை தாமே தாக்கி விட்டு, இஸ்ரேல் மீது பழியை போட கூடியவர்கள்தான் ஹமாஸ். தாக்கப்பட்ட ஆஸ்பத்திரி கிறிஸ்தவர்களின் ஆஸ்பத்திரி என அறிய கிடைக்கிறது (ஹிண்ட் - ஈஸ்டர் தாக்குதல்).
  3. ஏம் பம்முறியள்🤣 இந்த மனிதனும் ஒரு பயங்கரவாதிதான். சிக்காகோவில் குழந்தைகளை 1st degree murder செய்வோருக்கு என்ன தண்டனை?
  4. உண்மையில் பாதுகாப்பு கவின்சிலில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் தமது புவிசார் அரசியலை தற்காலிகமாக கைவிட்டு ஒரு பொது அமைதி திட்டத்தை பிரேரித்தால் இதை ஒரு வாரத்தில் தீர்க்கலாம். ஏலவே 1967 எல்லைகள், காம்ப் டேவிட், ஒஸ்லோ உடன்படிக்கைகள் தீர்வை கொடுத்து உள்ளன. இஸ்ரேலையும், பலஸ்தீன பக்கத்தையும் இதை பிடரியில் ஒன்று கொடுத்து “அமல் படுத்துங்கள்” என சொன்னால், செய்வித்தால் போதும். 1967 எல்லையோடு பலஸ்தீனத்தை அமைத்து, ஜெருசலேத்ததை சர்வதேச நகராக்கி, ஹமாசை ஆயுதம் களைந்து, பலஸ்தீன நாட்டின் பாதுகாப்பை, பலஸ்தீன அதிகாரசபையின் காவல்துறை+அரபு நாடுகளின் கூட்டமைப்பில் அமைந்த ஒரு அமைதி படை கண்காணிக்கும் படி செய்தால். நிரந்த அமைதி திரும்பும். ஒரு காலத்தில் காசா எகிப்தின் கட்டுப்பாட்டிலும், மேற்கு கரை ஜோர்தானின் கட்டுப்பாட்டிலும் இருந்த இடங்கள்தான். பாதுகாப்பு கவுன்சிலின் 5 நாடுகள்+ எகிப்து, ஜோர்டான் சேர்ந்து இதை கையாளலாம். ஆனால் ஈரான் ஹிஸ்புலா, ஹமாஸ் மூலம் மத்திய கிழக்கில் தனக்கு கிடைத்துள்ள வகிபாகத்தை விட்டு கொடுப்பது சந்தேகமே. Land for security guarantees, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தந்தால் பலஸ்தீனர்களுக்கு நிலத்தை அதற்கு ஈடாக தருவோம் என்பது இஸ்ரேலின் நீண்ட நாள் கொள்கை. இதை நடைமுறை படுத்தி, நிலத்தை பெற்று பலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதே அமைதிக்கான ஒரே வழி. இஸ்ரேலை மேப்பில் இருந்து தூக்குவோம் என்ற கொள்கையை உடையவர்கள் பலஸ்தீனத்தில் அதிகாரம் செலுத்தும் நிலை இருக்கும் வரை - அமைதி எட்டாக்கனியே.
  5. பகிர்வுக்கு நன்றி. இங்கே கண்மூடித்தனமாக மேற்கு வெறுப்பில் எழுத பட்ட பல கருத்துகள் கொடுக்காத “சிந்திக்கும் உந்துதலை” இந்த நெடிய கட்டுரை கொடுத்தது. இதைத்தான் நானும் நினைத்தேன்.
  6. இஸ்ரேல் காஸாவில் குண்டு தாக்குதல் செய்வதை நிறுத்தினால்- ஒரு மணத்தியாலத்தில் சகல பிணையகைதிகளையும் விடுவிப்போம் என உயர் ஹமாஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளாராம்.
  7. என்ன நடந்தாலும் ஜோர்தானுக்கோ, எகிப்துக்கோ பலஸ்தீன அகதிகள் வருவது என்பது - நடக்கவே முடியாத காரியம் (redline). - ஜோர்தான் மன்னர்-
  8. காசாவில் ஒரு ஆஸ்பத்திரி மீது தாக்குதல். 500+ வரை பலி என அச்சம். பலஸ்தீனத்தரப்பு இஸ்ரேலை குற்றம் சாட்டி உள்ளது. இஸ்ரேல் ஆதரவுக் கணக்குகள் இது ஹமாஸ் ஏவிய ராக்கெட் அங்கேயே வெடித்ததால் நிகழ்ந்தது என்கிறன.
  9. உக்ரேன் தமக்கு வழங்கப்பட்ட கொத்து குண்டுகளை பாவித்து Berdyansk and Luhansk ஆகிய இடங்களில் உள்ள ரஸ்ய விமான ஓடுபாதைகளை தாக்கியுள்ளதாம். இது ஹெலிகள் எரியும் காட்சியாம். பைடனுக்கு வாக்கு கொடுத்தது போலவே கொத்து குண்டை சரியான இடத்தில் பாவிக்கிறோம் என்கிறார் செலன்ஸ்கி.
  10. https://x.com/TreasChest/status/1714071913293602978?s=20 ரஸ்யா கொணர்ந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் தோல்வி. பணய கைதிகள் விடுதலை, உடனடிப் போர் நிறுத்தம், மனிதாபிமான உதவியை அனுமதித்தல் என்பனவற்றை இது கோரியது. ஆனால் ஹமாசை பெயர் சொல்லி குறிக்காமல் தனியே மக்கள் தாக்கப்படுவதை, பயங்கரவாதத்தை கண்டித்தது. ஆம்: Russia, China, UAE, Gabon and Mozambique. இல்லை: USA, Britain, France and Japan. வாக்களிக்காதோர்: Albania, Brazil, Ghana, Malta, Switzerland, Ecuador. ————- ஹமாஸ் ஆயுததாரிகள் ஒரு இஸ்ரேலிய இளம்பெண்ணின் வீடியோவை, பணய கைதி வீடியோ என வெளியிட்டுள்ளனர்.
  11. நான் எந்த அப்பாவி மக்களுக்கும் அல்லது இனங்களுக்கும் எதிரியல்ல. ஆனால் அடிப்படைவாத முஸ்லிம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் என்னால் வாழ்வதை கற்பனை செய்ய கூட முடியாது. நான் மட்டும் அல்ல யாழில் எழுதும் எல்லாரின் நிலையும் இதுதான். இலண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல LGBQT+ ஆட்களும் ரெயின்போ பதாதைகளுடன் கலந்து கொண்டார்கள். இலண்டனில் ஒரு நாள் ஹமாசை ஆளவிட்டால் முதலில் இவர்கள் தோலையே உரிப்பார்கள்🤣. அதே போலத்தான் மியா கலிபா அம்மையாரும். அவரின் கலையை பெற்றாரின் நாடாகிய லெபனானில் போய் செய்தால் - கல்லால் அடித்தே கொல்வார்கள். யாழில் சயோடின்ஸ்ட், பயோனிக் என நீட்டி முழக்குவோரும் அப்படியே. Chickens voting for KFC🤣
  12. இதை இஸ்ரேல் ஏற்காது. சில சமயம் விடும் வரை ஓம் எண்டு சொல்லிப்போட்டு பிறகு இன்னொரு சாட்டை வைத்து உட்புகும். கந்தகாரில் விமானத்தை கடத்தி வைத்ததும் வெளிநாட்டு அமைச்சரே போய் கேட்டதை கொடுத்து விமானத்தை மீட்டு வந்த இந்தியா போல அல்ல இஸ்ரேல். அவர்களுக்கு அரசியல், இராணுவ இலக்குத்தான் முக்கியம். பணயகைதிகள் உயிர் இரெண்டாம் பட்சமே. அதே போல் ஹமாசும் ரொக்கேட்டை எல்லாம் பேரீச்சம் பழத்துக்கு விற்று விட்டு சும்மாவா இருக்கப்போகிறது? எப்படியும் இஸ்ரேல் மீது தாக்கத்தான் போகிறது.
  13. குத்தி அல்ல சுட்டு கொலை, இருவரை என்கிறார்கள்.
  14. இறை கோசத்தை எழுப்பிய படி பிரசள்சில் ஒருவரை குத்தி கொலை செய்த நபர், பிரெஞ்சு எல்லையை நோக்கி நகர்வதால், இரு நாட்டிலும் பாதுகாப்பு உசார் நிலையில்.
  15. மேற்கில் இருக்கும் முஸ்லிம்களில் பலர் மேற்கின ஜனநாயக நடைமுறைக்கு இசைவானவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களில் என்ன பிரச்சனை என்றால் அடிப்படைவாதிகள் மதத்தை முன்னிறுத்தி அநியாயங்களை செய்யும் போது அதை எதிர்க்கும் திராணி ஏனையவர்க்கு வருவதில்லை. அப்படி வருவோரையிம் முனாபிக் என கூறி ஒடுக்கி விடுவார்கள். இது ஒரு காலத்தில் மத அடிப்படையிலான உலக யுத்தத்தை கொடுத்தே தீரும். யூகேயில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் 30% வரும் போது இப்போ அனுப்புவது போல் இஸ்ரேலுக்கு கப்பல் அனுப்ப முடியாது. இது எமக்கே விளங்கும் போது மேற்கிற்க்கும், குறிப்பாக மேற்கில் வாழும், மேற்கை மறைமுகமாக அளுத்தும், அல்லது கட்டுப்படுத்தும் யூதருக்கு கட்டாயம் விளங்கும். இப்படி விளங்கியதன் ஒரு அங்கமே - குறிப்பாக அந்த இடத்தில் இஸ்ரேலை மீள உருவாக்கிய காரணம்.
  16. முள்ளிவாய்க்கால் நேரம் கிரிபத் கொடுத்து கொண்டாடியோர், காஸாவுக்கு மூக்கால் அழுகிறார்களாம்.
  17. குழந்தைகள், பெண்கள் உட்பட 199 பேரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு. இவர்களை பார்வையிட அனுமதிக்குமாறு செஞ்சிலுவைச்சங்கம் ஹமாசிடம் கோரிக்கை.
  18. எங்கே.ம் வெளியேற விடுகிறார்கள்? ஒரே எல்லையை சக அரபு/முஸ்லிம் நாடான எகிப்து இறுக்க மூடி வைத்துள்ளது. மக்கள் காத்து கிடக்கிறார்கள்? காரணம்? எப்படி சும்மா இருந்த லெபனானை பலஸ்தீன அகதிகளின் வருகை உள்நாட்டு போரை உருவாக்கி சீரழிச்சதோ அப்படி தமக்கும் நடக்கும் என்ற பயம். இந்த மக்களை, ஹமாசை போசித்த ஈரான் பொறுப்பெடுப்பதே முறை. அவர்கள் ஹமாசை பொறுப்பெடுப்பார்களா என்பதே சந்தேகம். இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.
  19. நானும் அப்படியே நினைக்கிறேன். அண்மை வரை கூட ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கடும் தொனியில் கதைத்தார். அத்தோடு இஸ்ரேல் டமாஸ்கஸ், அலெப்போ விமான தளங்களை குண்டு வீசி தாக்கியதால், இப்போ ஈரான் வழியாகவே சிரிய-இஸ்ரேல் எல்லை க்கு விநியோகம் நடக்கிறதாக சொல்கிறார்கள். ——— காஸாவின் வைத்தியசாலைகளில் எரி பொருட்கையிருப்பு இன்னும் 24 மணி நேரத்துக்கு மட்டுமே. -ஐ நா-
  20. ஹமாசை கைவிட்டதா ஈரான்? ஈரானை, ஈரானின் நலன்களை, குடிகளை, இஸ்ரேல் தாக்காது விடின், இஸ்ரேலுடன் நாம் மோதலுக்கு போக போவதில்லை என ஐநாவில் இயங்கும் ஈரான் தூதரகம் அறிவித்துள்ளதாம். இது ஈரான் ஹமாஸை கைவிட்டு விலகுவதை காட்டுகிறதா அல்லது பதுங்கி பாயும் உத்தியா எனத் தெரியவில்லை.
  21. உங்கள் வியாக்கியானம் எந்தளவு தூரம் பொருத்தமானது என தெரியவில்லை. ஹமாஸ் எப்போதும் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்யவில்லை. எப்போதும் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே தூக்குவதே அதன் கொள்கையாக இருந்தது. இஸ்ரேல் கூட மதச்சார்பற்ற ஃப்ட்டாவை நியாயமாக நடத்தி ஒரு அதிகாரம், போதிய நிலம் உள்ள பலஸ்தீன அதிகாரசபையை கொடுக்கவில்லை. மாறாக காலத்தை இழுத்தடித்து, முடிந்தளவு மதச்சார்பற்ற, ஆயுத வழியை கைவிட்ட தரப்புகள் மீது பலஸ்தீன மக்கள் நம்பிக்கை இழக்கும் விதமாகவே இஸ்ரேல் நடந்து கொண்டது. காஸாவில் படை பிரசன்னம், குடியேற்றம், பொருளாதார முற்றுக்கை என காஸா மக்களை அமைதி பேச்சில் முற்றாக நம்பிக்கை இழக்க செய்தபின், தன்னிச்சையாக இஸ்ரேல் காஸாவில் இருந்து விலகியது. கமாஸ் தேர்தலில் வென்று, காஸாவில் இருந்து ஃபெட்டவை திரத்தியடித்தது. பலஸ்தீன தரப்பில் சமாதானத்துக்கு தயாராக இருந்தோரை இஸ்ரேல் முடிந்தளவு பலவீனப்படுத்தி, அந்த வெற்றிடத்தை ஹமாஸும் பலஸ்தீனிய ஜிகாதும் நிரப்புவதை மறைமுகமாக ஊக்குவித்தது. இந்த பிண்ணனியில்தான் காஸா நிலப்பரப்பு கமாஸின் கைக்கு போனதும் அங்கே யுத்த தயாரிப்புகள் மேற்கொள்ள பட்டதும் நிகழ்ந்தது. பிகு 1. கமாஸ் காஸாவை கைப்பற்றியதும் எகிப்து எல்லையை அடித்து மூடியது. இடையில் அங்கே முஸ்லீம் பிரதர்ஹுட் ஆட்சி அமைத்த போது (இவர்களின் பலஸ்தீன பிரிவே ஹமாஸ் என்றாகியது) உறவுகள் மேம்பட்டன. 2. எப்படி இஸ்ரேலை மேப்பில் இருந்து அழிக்க வேண்டும் என்பது ஹமாஸ் நிலைப்பாடோ அதே போல், தமக்கு சமனான ஒரு பலஸ்தீன நாடு அமையவே கூடாது என்பது நெத்தன்யாகு போன்ற கடும்போக்கு இஸ்ரேலியரின் நிலைப்பாடும் ஆகும். #ஜாடிக்கேத்த மூடி இன்னும் ஒரு விடயம் இஸ்ரேலின் நரித்தனத்தை விளக்க: 2007 இல் விலகிய பின் ஹமாசின் பிடியில் இருந்த காஸாவில் ஒரு துண்டு நிலத்தைதானும் இஸ்ரேல் எடுக்கவில்லை. ஆனால் மிதவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு கரையை மிக வேகமாக கபளீகரம் செய்தது. இதுவும் கூட ஹமாஸ் அல்லது அழித்தொழிப்பு என்ற இரு மோசமான தெரிவுகளை மட்டும் பலஸ்தீனருக்கு கொடுக்கும் இஸ்ரேலின் நகர்வின் ஒரங்கமே.
  22. இதை நான் பார்க்கவில்லை. ஆனால் காஸாவினுள் ஒரு நெடிய சுரங்க கட்டமைப்பு உள்ளதும் அது இஸ்ரேலுக்குள்குள்ளும், எகிப்துள்ளும் முன்னர் ஊடுருவியுள்ளதும் உண்மைதான். இப்படியான சுரங்கங்களை தவிர்க்க எல்லையில் இஸ்ரேல் பத்தடி ஆழத்தில் காங்ரீட் சுவர்களை அமைப்பதும் உண்டு. அதேபோல் காசா-எகிப்து இடையான எல்லையில் பிலடெல்பியா கோடு என ஒரு சிறு பகுதியை இஸ்ரேல் கண்காணிக்கும் (எகிப்து-இஸ்ரேல் அமைதி ஒப்பந்த படி). இந்த எல்லை வழியாக ஆட்கள் மட்டும் போகவே அனுமதி (பொருட்கள் இஸ்ரேல் பக்கம் உள்ள சாவடி வழியாகவே போகலாம்). இதற்கு கீழாலும் சுரங்கம் அமைத்து எகிப்தில் இருந்து பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறி இஸ்ரேல் நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்த சுரங்கங்களில் சிலது இஸ்ரேல் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அமைத்தவை. ————- லெபனான்-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் காவல் அரணில் ஹிஸ்புல்லா கொடி பறக்கிறாதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.