goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by goshan_che
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
போற போக்கை பார்த்தால் - தெற்கில் என் பி பி தோற்றாலும் வடக்கில் வெல்லும் போல இருக்கிறது. கிழக்கில் கஸ்டம். அங்கே தமிழர்களும், முஸ்லிம்களும், தத்தம் இனச்சார்பு அரசியலின் அவசியத்தை, அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தையும் தாண்டி, புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன். வடமாகாண சபையை என் பி பி கைப்பற்றினால் - யாழ்கள ஊர்புதினம் பகுதியில் comments ஐ disable பண்ணி விடலாம்😂. வட்டுகோட்டை தீர்மானத்தோடு ஆரம்பித்த வட்டம் (பூச்சியம்) வந்த இடத்துக்கே மீள வந்து தன்னை பூர்த்தி செய்த இடமாக அந்த வெற்றி இருக்கும். வட மாகாணசபையை என் பி பி கைப்பற்றினால் - முதலாவது தீர்மானம்… மாகாணசபை ஒழிப்பை கோருவதாக அமையக்கூடும். பிகு கடக்கும் ஒவ்வொரு வருடமும் 1987 இல் எந்த பெரிய தவறை விட்டோம் என்பதை ஒவ்வொரு மடங்கு அதிகரித்தே, காட்டி செல்கிறது.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இப்படியாக இருதரப்பும், நம்ப நட, நம்பி நடவாதே அடிப்படையில் காணி உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை எட்ட வேண்டும். முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெருகுகிறார்கள், என்றால் அது அவர்கள் இஸ்டம். முடிந்தால் நீங்களும் பெருக்குங்கள். அதேபோல் மகிந்தவின் இரெண்டாம் ஆட்சியில் அபாயா களைவு உச்சத்தில் இருந்த போது - மிக கீழதரமாக யாழில் பேரினவாதிகளின் செயலை ஆதரித்து எழுதியதை எல்லாம் நாமும் நினைத்து பார்க்க வேண்டும். கொழும்பில் பொட்டை அழித்து விட்டு பஸ் ஏறிய காலத்தை கடந்து வந்த நாமே, அபாயா களைவை ஆதரித்து எழுதியது அசிங்கமானது. அண்மையில் கூட செருப்புதைக்கும் முஸ்லிம்களிடம் தங்கம் ஏது என ஒரு பொன்மொழி இங்கே உதிர்க்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மீது மட்டும் அல்ல, கிழக்கு தமிழர்கள், மலையக, மேலக தமிழர்கள் மீதும் கொட்டப்படும் விசம்தான். சில சமயங்களில் வடக்கு கிறிஸ்தவ தமிழர் மீதும் கூட கொட்டப்படும். நாம் ஒரு இனஒதுக்கலுக்கு உள்ளாகும் இனம் என்பதால் மட்டும், நாமே ஒரு ஒதுக்கும் இனம் என்பது இல்லை என்றாகி விடாது.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அடுத்த முஸ்லிம் இளைய சந்ததி மேலே நன்னி எழுதியது தொடர்பாக சிந்திக்க வேண்டும். நினைவுகூரல் என்பது never again என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். Never again என்றால் பரஸ்பர வதைகளுக்கு மட்டும் அல்ல. 1990 இல் இனமுறுகலுக்கு தூபம் போட்ட, காணி அடிப்படையிலான பிண்ணக்கு, 60,70 களிலேயே கிழக்கில் ஆரம்பித்து விட்டது. இன்றும் அப்படியே இருக்கிறது. அஷ்ரப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் - 70களில் புதுக்கடையில் வக்கீல் அலுவலகம் வைத்திருப்பாராம். ஜூனியர் தமிழ் வக்கீல்கள் தேனீருக்கு காசில்லை எனில், கையில் உள்ள ஒரு பழைய சுதந்திரன் பேப்பருடன் அவரின் அலுவலகம் போனால் காணுமாம். சுதந்திரன் தமிழ் தேசிய அபிலாசைக்கு எதிரான பத்திரிகையாம். அதை கண்டது சினம் கொள்ளும் அஷ்ரப், இந்த குப்பையை ஏன் வாசிக்கிறீர்கள் என கடிந்து கொண்டு, சிலமணிநேரம் தமிழரசு கட்சியின் கொள்கை பற்றி விளக்கம் கொடுப்பாராம். கூடவே வடையும் தேனீரும். இதே அஷ்ரப். ஒரு பழைய பேப்பரை ரயிலின் கதவடியில் வச்சு, அதன் மேல் அமர்ந்து கிழக்கை விட்டு வெளியேற நேர்ந்ததாக பின்னாளில் மேடையில் பேசி உள்ளார். இந்த கசப்புகளில் இருந்து அவர்களை மீட்டு, சகோதரதுவத்தை வளர்க்க முஸ்லிம் இளையோர் முன்வரல் வேண்டும். அதே போல் தமிழ் இளையோர் மீதும் ஒரு கடமை உள்ளது. என்னை பொறுத்தவரை தமிழர்கள் முதலில் முஸ்லிம்களை வந்தான் வரத்தான் என நினைப்பதையும், அவர்கள் ஒரு இனமே அல்ல என மறுதலிப்பதையும் கைவிட வேண்டும். இதுவே இந்த பிரச்சனையின் ஆரம்பம். நீங்கள் என்ன நினைத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் கிட்டதட்ட ஈழவம்சாவளி தமிழரை நெருங்கி விட்ட ஒரு இனக்குழு. அவர்களை இலங்கை அரசியலமைப்பே அப்படி ஏற்கிறது. இதை நாம் மறுதலித்து அவர்களை எம்முள் அடக்கும் வேலை 80க்கு பின் ஒருபோதும் சரி வராததொன்று. ஆகவே அவர்களை ஒரு சக இனமாக மதித்து பேச்சுவார்த்தைக்கு போவதே நடக்ககூடியது. உங்கள் அங்கீகாரம் அவர்களுக்கு தேவையே இல்லை. ஆனால் இதை அங்கிகரிக்க மறுத்தால் ஒரு அடி கூட நகர முடியாது.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
😂 வாலி சார் நீங்க அடிவாங்கணுண்னு முடிவெடுப்பது உங்கள் சுதந்திரம் வாலி சார் 😂 சரியான முன்னோக்கிய பார்வை.
-
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
2005 பேப்பரில் சுற்றி உள்ளது எண்டால் - இது அந்தகாலத்தில் பதுக்கி வைத்ததாய் இருக்கும்.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
மிகவும் காத்திரமான கருத்து. நான் அவர்களின் வலியை இல்லை என சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய சேர்க்கையை கொண்டு வருவதுதான்…. இவர்களின் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் இதை பெருபித்து காட்டவிளைகிறார்களோ என எண்ண வைக்கிறது.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது. ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது. தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம். ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும். ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல் டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல் எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல். இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம். ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள். மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம். அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார். அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை. இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது. விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள். ஜெமினி இப்படி சொல்கிறது. Countries with no extradition treaty Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. Countries that do not extradite their own citizens to the UK China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது. பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம். கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது. இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம். நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம். ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂. ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம். இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
-
'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?
கார்திகா சாதி என்னவாம்? இல்லை ஏன் கேக்கிறன் எண்டா… குகேஷ் தெலுங்கன், கார்த்திகா தமிழச்சி என அரசியல் செய்ய வசதியாய் இருக்கும்… அதுக்குத்தான் 😂
-
கைகூ வடிவில்!
இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-
-
கைகூ வடிவில்!
சாதியச் செருக்கு… ஊர்ப்பெருமை… ஆசாரவாதம்… ஆண்-இன வாதம்… பிரதேசவாத பித்து… சுயநலனே கெத்து… என்று களவை போற்றும் கபடம்… இத்தனையும் குரோமசோமில் குடிகொண்ட இனத்தின் பழைய ஏற்பாடுகளை பஸ்பமாக்குவதால்… நன்றே…நன்றே… நையாண்டி நன்றே. -புதிய ஏற்பாடு-
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மீண்டும் ஒரு பீப்பாய் கழிவு ஆயிலுக்குள் தொபுக்கடீர் என விழுந்து விட்டார் மேற்படியார் 😂 இமோசனல் என சொன்னது நகைச்சுவையாக வசி. நீங்கள் இதன் மறுபக்கத்கை பார்கிறீர்கள் என்பதும் - இவர்கள் மோசடியாக இல்லாமல் பிழையாக நடந்து கொண்டதன் பலனே இது என சிந்திக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் நீங்கள் you are cutting them a lot of slack என நினைக்கிறேன். உலக நாடுகள் எங்கெனும் வியாபாரங்கள், பெரு வியாபாரங்கள் திவாலாவது வழமை. ஆனால் நீங்களே சொன்னது போல அதை சரியான முறையில் செய்தால் வேலையாட்கள் உட்பட vulnerable ஆக உள்ளோரை முடிந்தளவு இதன் தீய விளைவில் இருந்து காக்கலாம். எரிந்த வீட்டில் பிடுங்குவது இலாபம் என நடப்பது பின் கம்பி நீட்டுவது - சுயநலத்தின் உச்சம்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
விகடனுக்கும், நக்கீரனுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியும். சும்மா தமாஷ் பண்ணுகிறீர்கள். பிபிசிக்கும், RT க்கும் உள்ள வேறுபாடு போன்றது அது. அல்லது யாழுக்கும், அதிரடி/தேனி போன்றவற்றிற்கும் இருந்த வேறுபாடு என்றும் சொல்லலாம். எல்லாமுமே அஜெண்டாவுடன் இயங்கும் ஊடகம்தான். ஆனால் பட்டவர்தனமாக பிரச்சாராம் செய்யும் ஊடகங்கள் ஒரு தனி ரகம். அதில் நக்கீரன் முதல் இடம். கோவாலு ஜெ ஆளை தூக்கி உள்ளே வைத்தது முதல் எப்படி ஊடகம் நடத்துகிறார் என்பதை வாச்கர் அறிவார்கள். விஜை கோவாலு மீது வழக்கு போடவேண்டிய அவசியம் இல்லை. ஏன் எனில் இதை ஒரு குற்றவியல் வழக்ககாக சிபிஐ விசாரிக்கிறது. அப்படி திரைப்படத்துக்காகத்தான் வீடியோ எடுக்கப்பட்டது என தன்னிடம் உள்ள ஆதாரத்தை சிபிஐ அல்லது த நா அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் கோவாலு கொடுத்தாலே போதும். விடயம் உண்மை எனில் விஜையை களி திங்க வைக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இதில் உள்குத்து ஏதும் இல்லையே😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உங்கள் மனநிலை புரிகிறது. ஜஸ்டின் அண்ணா அடிக்கடி சொல்லும் post truth world இன் கஸ்டங்களில் இதுவும் ஒன்று. சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை புரிதல் இது ஒரு explosive mix. இப்படி இருப்பவர்கள் அமெரிக்காவையே ஒரு குழப்பு குழப்பி, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யாழ் எம்மாத்திரம். “எதை நம்புவது என்றே தெரியவில்லை” என்ற மனநிலைக்கு வாசகரை கொண்டு வருவதே இவர்களின் வெற்றியின் முதல் படி. இது கிட்டதட்ட தத்துவவியலில் வரும் fallacy களில் ஒன்றான false equivalency போன்றது. தரவுகளையும், இவர்கள் சொல்லும் கற்பனைகளையும் சமன் என வாசகரை குழப்பி விட்டால்…. அடுத்து அதே வாசகரை தமது கற்பனைகளை நம்ப வைப்பது இலகுவாகிவிடும். Anti vaxers எனப்படும் வக்சீன் எதிர்பாளர் தொட்டு, சீமான், டிரம்ப் என இந்த கஞ்சா கப்ஸா கதையாளர்களின் லிஸ்ட் மிக நீண்டது. யாழும் விதிவிலக்கல்ல.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂. நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன். திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே. முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும். இருவரும் தலைமறைவு என்பது தரவு. அவர்களை வியாபாரத்தை பொறுப்பேற்று கொண்டோராலே தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் யாழில் டெலிகிராபின் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுபவர்களின் எழுத்தை நம்பினால் யாரும் காப்பாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை எப்போ இவர்கள் இருக்கும் வரை இருந்து டிவிடெண்டை சுருட்டி கொண்டு, தெரிந்தே வேலையாட்களை நட்டாற்றில் விட்டு சென்றனரோ அன்றே இவர்கள் குற்றவாளிகள்தான். சட்டம் கூட இரெண்டாம் பட்சமே.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நீங்கள் 2000 ஆண்டில் ஒரு பெற்றோல் செட்டுடன் ஆரம்பித்து, பின்னர் ஒரு கோலிங்கார்ட்ட நிறுவனத்தை நடத்தி, அதை தகுந்த சமயத்தில் விற்று வெளியேறி, சில நூறு பெற்றோல் நிலையங்களை நாடெங்கும் உள்ள, இப்போதும் இலாபகரமாக இயங்கும் வலையமைப்பை உருவாக்கிய, இரெண்டு Kent University அக்கவுண்டன்சி கிரஜுவேற்சை, ஏதோ கம்பெனி நடத்துவது எப்படி என தெரியாத பச்சைபுள்ளைகள் என்பது போல எழுதுகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன விளக்கங்கள் எல்லாம் உங்களை, என்னை இட இந்த தம்பதிக்கு தெரியும். கம்பனி லாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஆலோசனையும் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்படி நடந்து கொண்டு, தலைமறைவாகி உள்ளார்கள் எண்டால் …கடைசி சில வருடங்களிலாவது இவர்கள் நோக்கம் வேறாக இருந்துள்ளது என்பதே என் கருத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கு வியாபாரத்தின் feasibility ஐ பொறுத்து 95% வரை கொடுப்பார்கள். அதேபோல் சில தமிழ் “ஏற்பாட்டாளர்கள்” மூலம் வங்கி அதிகாரிகளை அணுகினால், 80 ரூபா பெறுமதியான வியாபாரத்தை 110 ரூபாய் பெறுமதி என மிகை மதிப்பீடு செய்து, உங்களுக்கு 90 ரூபாய் வங்கி கடனாக வாங்கி தருவார்கள். இதில் நீங்கள் ஏற்பாட்டாளருக்கு ஒரு % வெட்ட வேணும். இது சிறு வியாபாரங்களுக்கு. பல தொழில் வாய்புக்களை இழக்கும் அபாயம் உள்ள பெரிய தொழில்களை 1£ க்கு கூட விற்றுள்ளார்கள், அதேபோல் அரசே வங்கி கடன்களை உத்தரவாதம் செய்வதும் உண்டு, அண்மையில் ஜகுவார் லேன்றோவருக்கு இப்படி சலுகை கொடுத்தார்கள். அதேபோல் வியாபாரத்தை 100% ஏனையோரின் முதலீடு+வங்கி கடனில் வாங்குவது இங்கே சாதாரணம். ஆகவே இப்படித்தான் நடந்தது என தெரியாமல் அந்த பெரியதொகையின் 20% ஆரணி, சஞ்சீவ் சொந்த காசில் போட்டார்கள் என்பது வெறும் ஊகம் என்பதே நான் சொல்வது.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா? பார்ப்போம்… அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா? ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்? தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு. அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது. உண்மை என்றால் வெளி வரும்தானே. உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
பிஸ்கோத்து ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து தலைவர் படத்தை போட்டால் நனைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து மாவீரர் வீரத்தை மெச்சினால் உடைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான் தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள். ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.
-
தவெக உட்கட்சி மோதல்
ஒருபக்கம்தானே சொல்லி இருக்கிறியள் அண்ணா? இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂
-
கைகூ வடிவில்!
நானும் போராட வருகிறேன் எனவந்தவனை… நாய் போல நடுத்தெருவில் கொன்றதை… நல்லது என நயப்போரைக்கூட… நையப்புடைக்க முடியாத கோழை நான்… நான் ஆதாலால் தேர்ந்தெடுத்த ஆயுதம்… நையாண்டி. -என் குரல்-
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
யாழில் வைரமுத்துக்கு பலத்த ஆதரவு கோஸ்டிகள் உண்டு. அதில் அநேகர் சீமானின் தம்பிகள். சின்மயி சர்ச்சை நேரம் என்னையும் இன்னும் சிலரையும் போட்டு பிறாண்டி விட்டார்கள். இப்ப பழசெல்லாம் மறந்து போச்சோ😂