Everything posted by goshan_che
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
மாற்று கருத்து இல்லை. இதில் தமிழர் தரப்பில் பிழை இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு அரசாக அவர்கள் தரப்பில்தான் பிழை அதிகம். தெற்கில் ஒரு புராதன சின்னம் - ஒரு சிங்களவர் தனிசொத்தாக இருந்திருப்பின் - தகுந்த சட்ட, நட்ட ஈடு மூலம் அதை மீட்டிருப்பர். யாழில் வீதிகள் போடும் போது கூட இப்படித்தான் செய்தனர். வீதி அவர்களுக்குதேவை. இதை அழிய விட்டால் அவர்களுக்கு நல்லது. உண்மையில் இதை 2010 போய் சுத்தி சுத்தி படம் எடுத்த போது, கொஞ்சம் அருகில் இருந்தோரிடம் பேச்சு கொடுத்தேன். பின்னால் ஒரு கிணறு இருந்தது அதை ஒட்டி வேலிகள் போட்டு மக்கள் தம் இடங்கள் என அடையாளபடுத்தி இருந்தனர். ஆனால் கட்டிடம் காதலர் பெயர் கிறுக்கல்களால் நிரம்பி இருந்தது. ஆனால் கட்டிடம் இருந்த நிலம் வெளிபார்வைக்கு யாரும் உரிமை கோராது இருந்தது. தெற்கு லொரி டிரைவர்கள் தங்கி இருந்தனர். அதன் பின் சில வருடம் போகும் போது போய் பார்க்கவில்லை. 2012 அல்லது 14 இல் கடந்து போகும் போது தொல்பொருள் ஆராய்சி பலகை மாட்டி இருந்தது. 2024 இல் போன போது சில முட்டு கொடுப்புகள் இருந்தன. சில அவதானிப்புகள் பல கட்டுமானங்கள், பூங்காக்களை இதன் அருகிலேயே எழுப்பிய இயக்கம் கூட இதை அப்படியே விட்டார்கள். ஏன் என தெரியவில்லை. இது உண்மையில் சங்கிலியன் கால கட்டிடமா என்பது பலத்த சந்தேகத்துக்குரியது. ஏன் எண்டால் இதில் நான் கண்டது பலது ஐரோப்பிய கட்டிட முறை போல இருந்தது. ஆனால் தெற்காசிய கூறுகளும் இணைந்திருந்தன. முகப்பில் ஒரு பெரிய கல்வெட்டு இருந்தது - இதில் யாரோ சில கிறீஸ்தவ தமிழர்கள் பெயரே பொறிக்க பட்டிருந்தது. ஒரு திருமணம் பற்றிய கிரயம் என்பதாக நினைவு. எனது ஊகம் - இவ்விடத்தில் சங்கிலியன் அரண்மனை இருந்திருக்கலாம். பழைய நல்லூர் கோவிலும் இந்த இடத்தில்தான் இருந்தாக (முத்திரை சந்தையடி) சொல்வார்கள். அதன் அழிவின் பின், இந்த இடத்தை மதம் மாறிய ஒரு உள்ளூர் போர்த்துகேசருக்கு உதவிய, மதம் மாறி அவர்களின் உள்ளூர் ஏஜெண்ட் போல் ஆகிவிட்ட ஒருவருக்கு கொடுத்திருக்கலாம். அவர் அல்லது அவர் வழிவந்தோரே இதை எழுப்பி இருக்கலாம். எனது பார்வையில் இந்த கட்டிடம் 250 வருடத்துக்கு மேற்பட்டதாக தெரியவில்லை.
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இதுவே ஒரு புத்த கோவில் எனில் compulsory purchase order மூலம் உரிய நட்ட ஈட்டை கொடுத்து எப்பவோ காணியை வாங்கி இருப்பார்கள். இடிந்து விழும்மட்டும் காத்கிருப்பதே சிங்களத்தின் அணுகுமுறை.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
ஐயோ கந்தையா அண்ணை சொன்னது கோசான் வீட்டை. அங்கே ஏது திரள்நிதி🤣
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
மேலே உள்ள விளக்கம், எழுதியவருக்கும், லைக்கியவருக்கும். 🤣🤣🤣 பொறுப்பு துறப்பு மேலே கருத்தாளரை அன்றி, வாக்கு ஒப்பீட்டு முறையையே அடிமுட்டாள்தனமானது என விளித்துள்ளேன். வாசிப்போர் எப்படி பொருள்கொள்கிறார்கள் என்பற்கு நான் பொறுப்பல்ல🤣.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
பரவாயில்லை, இப்போதாவது மலசலம் கலக்காமல் எழுத முயன்றுள்ளீர்கள். வாத்தியார் குட்டு வேலை செய்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் அடி முட்டாள்தனமான வாக்கு எண்ணிக்கை ஒப்பீட்டுக்கான பதில் கீழே. 36 இலட்சம் எடுத்தது 234 சட்டமன்ற தொகுதிகளில் 39 பாராளுமன்ற வேட்பாளர்கள் சேர்ந்து 🤣. சுமன் எடுத்தது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும். யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம். தமிழ் நாட்டின் மொத்த (234 தொகுதி) - ஆறு கோடி முப்பத்தாறு இலட்சம். பிகு மேலே உள்ள தரவுகளை உள்வாங்கினால் (முடிந்தால்)…. ஒரு தனி வேட்பாளர் 5.4 இலட்சம் வாக்காளரிடம் பெற்ற வாக்குகளையும்… 234 தொகுதியில் 39 வேட்பாளர் 6.3 கோடி வாக்காளரிடம் பெற்றதையும் ஒன்றென்ன எண்ணி ஒப்பிடுபவரின் அதி, அதி புத்திசாலிதனத்தை விளங்கி கொள்ளலாம். *2021 இல் திருவெற்றியூரில் சீமான் எடுத்தது 48,000 சொச்சம்.
-
விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!
“விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்! Vignesh SelvarajUpdated: Thursday, September 18, 2025, 17:27 [IST] அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும்போது கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் நேற்று கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இதுகுறித்துப் பேசி இருந்தார். இந்நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியிருந்தது தொடர்பாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எடப்பாடி எதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கேட்க போனாருனு செய்தி வருது. விருது கேட்க போனவர் முகத்தை மூடிக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை. என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் தி.மு.க இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.கவோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்." எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள். திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாளாகும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை கொள்கை தலைவர்களாக அறிவித்ததற்கான விளக்கத்தை விஜய் தெரிவிக்க வேண்டும். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரைவார்த்தது யார்? தமிழ் பாட மொழி, ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது எப்போது? பின்னர் இந்தி பயிற்று மொழி, தமிழ் விருப்ப மொழி என மாறியது. இப்படி மாறினால் அதனை எந்த தமிழர்கள் விரும்புவார்கள். இந்த நிலைக்கு வர யார் காரணம். நான் கட்சி ஆரம்பிப்பதற்காக ஏசி அறையில் இருந்து யோசிக்கவில்லை, சிறையில் இருந்து யோசித்தேன். 2007, 2008- ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் திமுக கூட்டணியை எதிர்க்கும் போது, விடுதிகளில் எனக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிறைக்குள் தனி சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தேன்." எனக் கூறியுள்ளார் சீமான். https://tamil.oneindia.com/news/chennai/seeman-criticizes-eps-over-meeting-with-amit-shah-says-no-need-to-come-with-covered-face-736601.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி ஆட்சியில் தாதுமணல் கொள்ளை, கொலைகள் என பலதில் கள்ள மெளனம் சாதித்து எடப்பாடியை சித்தப்பா என வாஞ்சையாக அழைத்த சீமான்… இப்போ எடப்பாடி மீது சீறி பாய்கிறார். சபரீசன் கொடுத்த 100 கோடி பேசுகிறது. #பெட்டிக்கு முன், பெட்டிக்கு பின்
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
எந்த இரு தடவை? 2010 இல் தேசியப்பட்டியல், 2015,20 இல் வெற்றி. 2024 இல் தோல்வி. இதுதான் சுமனின் தேர்தல் வரலாறு. மீண்டும் சொல்கிறேன் சுமன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடும். ஆனால் அரசியல்வாதிகள் மக்காலால் தேர்ந்தெடுக்கபடுவதும் இல்லாமல் போவதும் சகஜம். தந்தை செல்வா கூட காங்கேசந்துறையில் தோற்றார் அல்லவா? அரசியலை விட்டே போனாரா? நீங்கள் சொல்லும் மேற்கில் கூட பல உதாரணக்கள் உள்ளன, உங்கள் பாசத்துக்குரிய டிரம்ப் உட்பட. ஆகவே சுமனுக்கு வந்தால் தக்காளி சோஸ், சீமானுக்கு வந்தால் ரத்தம் என்பது இரெட்டை நிலைப்பாடே. அதைத்தான் அம்பலப்படுத்தினேன்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
இங்கே ஒப்பீடு தமிழரசு, நாதக கட்சிகள் பற்றியதல்ல. கட்சிகள் மேற்கில் கூட ஒரு தேர்தலில் தோற்றவுடன் கடையை சாத்திவிட்டு கிளம்புவதில்லை. இங்கே ஒப்பீடு தேர்தலில் மக்களால் ஒருதடவை தேரப்பட்டு, ஒரு தடவை நிராகரிக்க பட்ட சுமனுக்கும்….போட்ட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் டெபாசிட் இழந்த சீமானுக்கும். கவனிக்கவும். நீங்கள் கூட அரசியல்வாதிகள் பற்றித்தான் சொல்லி உள்ளீர்கள். கட்சிகள் பற்றியல்ல. பிகு ஆட்டுக்குள் மாட்டை விடவில்லை. ஆனால்…. சுமந்திரன் ஒரு தேர்தல் தோல்வியோடு விலகி விட வேண்டும், என மேற்கை ஆதாரம் காட்டும் நீங்கள்… சீமான் எத்தனை தேர்தலில் டெபாசிட் இழந்தாலும் அதை ஆதரிக்கும் … இரெட்டை நிலைப்பாட்டை மட்டுமே சுட்டுகிறேன்.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
உங்கள் அளவுக்கு எனக்கு சட்ட அறிவும் இல்லை என்பதையும் ஏற்கிறேன் மை லார்ட். ஆனால் சட்டம் நாட்டுக்கு நாடு வேறுபடும். குரானை கிழித்தால் பாகிஸ்தானில் பெரிய குற்றம். சுவீடனில் அது குற்றமே இல்லை. இந்த விடயத்தில் இந்திய சட்டம் ஐரோப்பிய சட்டத்தில் முற்றிலும் வேறுபட்டது. திருமணத்துக்கு முந்திய பாலியல் உறவு சம்பந்தமான இந்திய, ஐரோப்பிய சமூகங்களின் பார்வை மாறுபட்டது, அதையே சட்டமும் பிரதிபலிக்கிறது. ஆனால் இப்போ இந்திய சமூகத்தின் பார்வை கொஞ்சம் மாறுகிறது, அண்மைய உச்சநீதிமன்ற தீர்புகள் இதையே காட்டுகிறன.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
உங்கள் அளவுக்கு எனக்கு இந்திய அரசியல் அறிவு இல்லை என்பதை நானும் ஏற்கிறேன். இதை நான் என்றும் மறுத்ததில்லை. அதனால்தான் சீமானை “சின்ன கருணாநிதி” என பத்து வருடம் முன்பே எழுதினேன். அப்போ அதை நீங்கள் கடுமையாக எதிர்தீர்கள். சீமான் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்கும் அரசியல்வாதி அல்ல, கட்டிடத்தை உடைத்து புதிதாக கட்டும் புரட்சியாளன் என துதி பாடுனீர்கள். இப்போ அதே சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி (100 கோடி என்கிறார்கள்) தானும் ஒரு leader அல்ல dealer தான் என்பதை நிறுவி உள்ளார். தம்பிகளுக்கு தொண்டை தண்ணி நஸ்டம், புலம்பெயர் தமிழர் சிலருக்கு திரள்நிதி நஸ்டம். சீமான் மீது பாலியல் வல்லுறவு வழக்கு இன்றும் இந்திய உயர் நீதிமன்றில் உள்ளது. பெரியார் தாயை புணர சொன்னார் என பொதுவெளியில் பொய்யை சொன்னவர் சீமான். ஆதாரம் இல்லாத இந்த குற்றசாட்டு சீமானின் உள்மன பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே. ஆகவேதான் என்பார்வையில் அவர் செ.சை.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அருமையான இடம் எல்ல. ரயில்வே பாலம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். கித்தல எல்ல வீதியில் கொஞ்ச தூரம் ஆட்டோவில் போனால் Ella Gap எனும் ரம்மியமான இடம் வரும்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
தேர்தலில் மக்கள் நிராகரித்தால் விலகி போகும் வழக்கம் தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா🤣
-
குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு
நல்லார் ஒருவர் பிறப்பின் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாமே, மழை ?🤣
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
அன்னிய நாடு இது ஆயினும் நீ இங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய்... எங்கள் மன்னன் திலீபனின் கோரிக்கையாவயும் ஏளனம் செய்துமே கொன்றாய்... தாகத்தோடு புலிபோனது.. தமிழ் சந்ததியே சூடு கண்டது தியாக தீபத்துக்கு வீர வணக்கம்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிங்களவன் சுழியன். # புரிஞ்சவன் பிஸ்தா
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
கருணா ஒரு தீர்க்கதரிசி…. (டக்கெண்டு பாய்ந்து பிராண்ட வேண்டாம், கீழே வாசிக்கவும்) கருணா மோடங்கள் என சொல்லியது…. 2009 இல் தலைவர் வீரச்சாவை அடையவில்லை என, 2025, 2055 இலும் நம்பி கொண்டு இருக்க போகும் புலம்பெயர் தமிழர் சிலரை.
-
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
எரியுதடி மாலா…, பேனை 82 இல வையி🤣
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
யானை காதில் புகுந்த இலையான்….🤣 # பைத்தியம் புடிக்கும் திரிகளில் தரங்கெட்ட வசை மொழியில் எழுதி இன்பம் அடையும் மனிதர்களுக்கு, இலையான் பரவாயில்லை🤣.
-
என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி
என்னை மிரட்ட முடியாது.. தன்மானமே முக்கியம்! கைகூலிகளுக்கு முடிவு கட்டப்படும்.. இறங்கி அடித்த எடப்பாடி Mani Singh SUpdated: Monday, September 15, 2025, 21:24 [IST] சென்னை: என்னை யாரும் மிரட்ட முடியாது, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்யும் jiஎன வானிலை மையம் அறிவுறுத்தியதால் அந்த பயணத்தை மாற்றி அமைத்தோம். அதற்கு அமித்ஷாவை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி விட்டது என எடப்பாடி கூறுகிறார். 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடம் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்றுடன் முடிந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவர், அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில் புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக வெளியான தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தருமபுரி மாவட்டத்தில் நான் வரும் 15 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை வைத்திருந்தோம். ஆனால் அன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் அந்த தேதியில் சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் அதற்குள் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்க, இணைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக செய்திகளை வெளியிட்டு விட்டார்கள். கைக்கூலிகளுக்கு முடிவு கட்டப்படும் அப்படி ஒரு நாளும் நான் செய்ய மாட்டேன். எனக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். கைக்கூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் அதிமுகவை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. அதிமுக அலுவலகத்தை உடைத்தவர்கள் இப்போது அதிமுகவில் சேர வேண்டும் என துடிக்கிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துக்கொண்டு சென்றார். எவர் ஒருவர் துரோகம் செய்தால் அவர் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும்.. இவ்வாறு அவர் பேசினார். அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்களை கட்சியில் சேர்க்க முடியுமா? என்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்தி செனறார் அவர்களையும் சேர்க்க முடியுமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதன் மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக பேசியிருப்பதை காட்டுவதை அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/no-one-can-intimidate-me-self-respect-matters-more-than-power-edappadi-k-palaniswami-fires-back-735891.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி எடப்பாடி அமித்ஷா இடையே லடாய் போல உள்ளது.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
அதெல்லாம் அந்த காலம். இப்ப அண்ணனுக்கும் திமுக வுக்கும் ஒரே எதிரி விஜை 🤣. பெட்டி வாங்கி கொண்டு தேர்தலுக்கு தேர்தல் வாயை வாடகைக்கு விடும் தன்மானத் தமிழன் 🤣
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல். நான் வாசனாக இருந்த காலத்தில் இவர் கருத்தாளார். குறும்படங்கள் பற்றி இவர் எழுத்துகள் மூலம்தான் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
VPN பாவித்தால் வேகம் குறைவதோடு, பலசமயம் page load ஆகாது. அதை நூத்து போட்டு வந்தால் வேகம் பரவாயில்லை.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம் பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர். சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர். நீதி மன்ற தீர்ப்பு பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை. அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார். SKK LegalSupreme Court: False Promise to Marry Not Rape | SKK LegalThe Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇. கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது. இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது. அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும். ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட். பிகு இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣. நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
இதில் எனக்கும் உடன்பாடே. குறிப்பாக சவுக்கு சீமானை விட மோசமான அங்கிறு தட்டி. குறிப்பான அமவுண்டை கொடுத்தால் அவிச்ச மீன் துடிக்கும் என்பார். இங்கே ரிக்ரொக் ஆய்வுகளை இணைக்கும் பலருக்கு ஜஸ்டீன் அண்ணா கொடுக்கும் அறிவுரைகள் போலத்தான் யூடியூப் வீடியோக்களும். ஆனால் இயற்கை நமக்கு பகுத்தறிவை வெறும் ஒப்பனைக்கான தரவில்லை, அதை நாம் பயன்படுத்தவும் வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இங்கே, தேவாவை ஸ்டாலின் சந்திப்புக்கு சீமான் கூட்டி போன படம்… அவர் சசிகலா குடும்பத்தோடு, அதிமுகவோடு நெருக்கமாக இருந்த படங்கள் காட்டப்படுகிறன. பல முண்ணனி கட்சி நிர்வாகிகள், இடும்பாவனம் போல உண்மையிலேயே இனமான உணர்வில் திமுகவை எதிர்க்கும் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு, இவரை ஏன் சீமான் ஸ்டாலினிடம் கூட்டி போனார் என்ற கேள்வியை நாம் கேட்காவிடில் நமது பகுத்தறிவை ஷோகேசில்தான் வைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.