goshan_che
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by goshan_che
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த உரிமையாளரை முதலிலேயே அணுகி இதை செய்திருக்கலாம். இதில் மக்கள் அதிகம் அலட்டவில்லை என்பது “வேலனும் பத்து மொக்கராசுகளும்” நிற்கும் படத்தை பார்தாலே புரியும். அத்துகிரிய பரிஸ்டாவின் மெனு கீழே. ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே மாடு. அதை மாற்றுவதில் அதிக சிக்கல் இருக்காது என நினைக்கிறேன். மூன்று சிக்கன் அயிட்டம் உள்ளது. https://barista.lk/menu/ மாட்டும் வரை விவேகானந்தா.. மாட்டினா நித்யானந்தா🤣. அண்மையில் இதே போல் இன்னொரு மதிப்புக்குரியவரை இலண்டன் கோர்ட் பாலியல் வன் புணர்வு குற்றவாளி என உள்ளே போட்டது. பாப்பம் வேலனுக்கும் ஒரு லெனின் இருப்பார்தானே🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எனது தாயாரிடம் ஒரு தவில் அடிப்பவரின் மகன் படித்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் எங்கள் வீட்டில் நேற்று குடல் கறி என சொல்லி விட்டான்🤣. அவனின் அப்பாதான் எங்கள் ஊர் கோவிலில் தினமும் மேளம். அப்பா நேற்று கோவிலுக்கு போகவில்லையா என கேட்க, போனவர். எங்கள் வீட்டில் வழமையாக நாங்கள் மச்சம் சாப்பிட்டு விட்டே கோவிலுக்கு போவோம், அப்போதுதான் உசாராக மேளம் அடிக்கலாம் எண்டு வேறு சொல்லிவிட்டான். அடுத்த நாள் காலை அவனோடு அவன் தாயும் வந்து, மகன் நேற்று சோயா மீட்டை, இறைச்சி என தவறாக சொல்லி விட்டார் என ஒரு விளக்கம் கொடுத்தார்🤣. இது எங்கும் நடப்பது என நினைக்கிறேன். மேற்கு வங்க பிராமணர் மீனை சைவம் என சொல்லி அடிப்பார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இவர் தமிழர் சுமன் தோழர் என யாழில் இன்னொரு திரியில் கூறப்பட்டதே? அவனவன் சுமந்திரனை எதிர்கிறேன் பேர்வழி எண்டு தன் தன் வியாபார கறளை எல்லாம் தீர்த்து கொள்கிறார்கள் போல உள்ளது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் என்ன செய்வது என்றால்…இப்படி சொல்லி…ஒரு அறை நிமிட கேப் விட்டு… ஆனாலும் சீனா இல்லை எண்டால் இந்தியா உங்களை ஊதி தள்ளி இருக்கும் எண்டும் சொல்லி விடுவன். கோல் அடிப்பது எண்டு முடிவாகிவிட்டால் இரெண்டு பக்கமும் அடிக்கவேண்டும் 🤣 ஆள் வர பிந்துகிறது… பாரிஸ்டாவில் கோப்பி குடித்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இதில் இன்னொரு விடயமும் உள்ளது. அதுதான்…வாக்கு. ஜனநாயகம் என்பதே ஏதோ ஒருவகையில் வாக்குக்காக கையூட்டு கொடுப்பதே. அதை பணமாக அல்லது லேப்டாப்பாக கொடுக்கும் போது நம்மில் பலருக்கு கண்ணை உறுத்தும். ஆ..ஊ..என கத்துவோம். ஆனால்…நாம் வாழும் நாடுகளில், நரை-வாக்கு எனப்படும் grey vote ஐ பெற அரசியல்வாதிகள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். ஓய்வூதிய வயதினாரகிய இவர்கள் வாக்கு போடும் நிகழ்தகவு அதிகம் என்பதால் - இவர்களுக்கு சாதகமாகவே (அதிகம் வாக்கு போடாத இளையோருக்கு பாதகமாக) கட்சிகளின் கொள்கை முடிவுகள், செலவீன முடிவுகள் இருக்கும். இதேதான் தமிழ்நாட்டிலும் நடக்கிறது. ஆனால் - இந்த ஈழத்தமிழர் எண்ணிக்கையும் மிக சொற்பம், வாக்கும் இல்லை. ஆகவே இவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் மனமிரங்கி ஏதாவது செய்தால் மட்டுமே சாத்தியம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஓங்கோல் கருணாநிதி தெலுங்கன் என டிவிட்டரில் அலப்பறை கிளப்பும் புலம்பெயர் மொக்கராசுகள் தலைவர்கள் மனமிரங்க தம்மாலானதை செய்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் எனும் குடும்ப சொத்து மீது எனக்கு எந்த பெரிய பிரமிப்பும் இல்லை. கோவண ஆண்டியிடமும், அன்னதான கந்தனிடமும் இருக்கும் ஈர்ப்பு இந்த “காட்டாப்பு” கந்தனிடம் என்றும் இருந்ததும் இல்லை. ஆனால் ஏனையோரின் நம்பிக்கை என்ற அளவில், கோவில் வெளி வீதியில் இதை அனுமதிக்க முடியாது என்பதை ஏற்கிறேன். பிகு எந்த கோவில் எண்டால் என்ன, சுடுகாடு என்றால் என்ன, சோறு போடுவதாயின் அதுவும் கறி சோறு - நான் தயாரே🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் கோவில் அண்மை என்பது கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் என நீள முடியாது. டெம்பிள் ரோட்டில், கோவில் வெளி வீதி முடிந்து வீதி தொடங்கும் புள்ளியில் இருந்து, சங்கிலியன் ஒழுங்கை (முன்பு அது ஒரு பெயரில்லாத ஒழுங்கை) தொடங்கும் இடம் வரையான பகுதி கோவில் வெளிவீதியில் இருந்து 150 மீட்டர், 200 மீட்டர்தான் . இங்கே பல வீடுகளில் நானே நல்ல மச்ச கறி சாப்பிட்டுள்ளேன். கோவிலில் இருந்து 300, 400 மீட்டர் தொலைவில் கூட ஒரு கோப்பிக்கடை போடக்கூடாது என்பது சுத்த கோமாளித்தனம். அவர்கள் செய்ய நினைப்பது என்ன? வியாபாரம். Beef panini யை அங்கே வசிக்கும் மக்கள் வாங்கினால்தானே விற்க முடியும்🤣. ஒரு கிழமை யாரும் வாங்காவிட்டால் அடுத்த கிழமை முதல் கிழங்கு ரொட்டி போடுவார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. கோத்தும்பீ - அரச வண்டே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு - கண்ணப்பருடைய அன்புக்கு ஒப்பான அன்பு, இன்மை கண்டபின் - என்னிடத்தில் இல்லாமை அறிந்தும், என் அப்பன் - என் தந்தை, என் ஒப்பில் - எதனோடும் ஒப்பில்லாத, என்னையும் ஆட்கொண்டருளி - என்னையும் அடிமையாகக் கொண்டருளி, வண்ணம் பணித்து - யான் ஒழுக வேண்டிய வகையைத் தெரிவித்து, என்னை வாவென்ற - என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வான் கருணை - மேலாகிய கருணையையுடைய, சுண்ணம் - பொடியாகிய, பொன் நீற்றற்கே - அழகிய திருநீற்றையணிந்தவனிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. பிகு இந்த யாழ்பாணத்து சங்கிகள், 10 வகுப்பு சைவ சமயம் கூட ஒழுங்கா படிக்கவில்லை என நினைக்க்கிறேன். படித்திருப்பின் இந்த திருகோத்தும்பீ செய்யுளும் அதன் பொருளும் விளங்கி இருக்கும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பச்சை தீர்ந்து விட்டது. சுமந்திரனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக…வேலன்… (எதுகை மோனையில் எழுதாலாம் சபை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்)…. போன்ற குடுகுடுப்பைகாரர்களை எல்லாம் களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இந்த பாரிஸ்டா என்ற சொல் பற்றி ஒரு துணுக்கு. பலருக்கு தெரிந்திருக்கும். Barista - பாரிஸ்டா - ஒரு கபேயில் கோப்பி போட்டுத்தருபவர். டீ மாஸ்டர் போல கோப்பி மாஸ்டர். Barrister - யுகே போன்ற நாடுகளில் கோர்ட்டுக்கு போய் வாதாடும் வழக்குரைஞர். சொல்லும் போது, குறிப்பாக இலண்டன் நகர பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தொனிக்கும்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தீர்க்கமான பார்வை, தெளிவான கருத்து. அப்படியே மாடு மேய்ப்பதை அரச தொழிலாக்கவேண்டும்🤣
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அட கருமமே🤣… இது ஒரு கோப்பி கடை. பல்தேசியம் எல்லாம் இல்லை இந்தியா, இப்போ இலங்கையில் உள்ளது. இலங்கையில் நெஸ்கபே, நெஸ்டி என சீனிபாணியை தரும் கடைகளுக்கு மத்தியில் ஓரளவு தரமான மேற்கத்திய பாணியில் காப்பி பருக உகந்த இடம். உண்மையில் நல்லூர் போன்ற ஒரு செல்வ செழிப்பான இடத்தில் இது அமைவதுதான் பொருத்தம். இதில் மொக்கன் கடை போல் மிச்ச எலும்பை நாய் தூக்கி போக எல்லாம் வாய்பில்லை. Beef panini, sandwich, மிஞ்சி போனால் ரோல்ஸ்… ஐரோப்பாவில் Cafe Nero, Costa, Starbucks போல ஒரு கடை அவ்வளவுதான். கோவிலில் இருந்து 300,400 மீட்டருக்கு அப்பால் கூட இப்படி ஒரு கடை வருவதை எதிர்ப்பது உண்மையிலே தமிழர்கள், குறிப்பாக யாழ்பாண தமிழர்கள் பிற்போக்குவாதிகள் என கூவவே வழி செய்யும். இப்படி தமிழ் (சைவ) தலிபான்களாக மாறி எல்லா தொழில் முயற்சியையும் அடித்து நூத்தால் - ஆப்கானிஸ்தான் மாதிரி இருக்க வேண்டியதுதான். பிகு படத்துக்கும் தகவலுக்கும் நன்றி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்னால் முடியாது… இது மலையாளம் போல தமிழில் இருந்து உருவாகிய இன்னொரு மொழியில் எழுதபட்டிருக்கிறது. தமிழ் எழுத்துரு, தமிழ் சொற்கள் போல இருக்கும் சொற்கள் பாவிக்கபடும்…ஆனால் வாசித்தால் விளங்காது. French இல் இருந்து creole ஆங்கிலத்தில் இருந்து Pigeon English உருவானதை போல இது தமிழில் இருந்து உருவாகியுள்ளது. உலகில் இதை ஒரே ஒருவர்தான் பாவிக்கிறார் என்பது மேலதிக தகவல். # நம்பினால் நம்புங்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் சொல்வது தியரி. அண்ணனின் “நடைமுறை”படி அதை இந்தோனேசியாவில் சேர்திருக்கிறார்.. நீங்கள் புரிந்துகொள்ள சிரமப்படுவாதால் மட்டும், அண்ணன் கஞ்சா கப்ஸா கதை சொல்லிகிறார் என ஆகிவிடாது. ஆதாரம் ? அண்ணன் 1965 ம் ஆண்டு குப்பி விளக்கில் ஆங்கிலோ அமேரிக்கன் டிரிபியூனில் வாசித்தார். தேடிப்பாருங்கள்.
-
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
பிகு சட்டத்தை முறையாக கற்றவர்கள் தவிர ஏனையோருக்கு இது தெரிந்திராது (இப்போ நான் சொல்வதை வைத்து கூகிள் பண்ணி அறிவை விருத்தி செய்யலாம்). வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடுவது Royal Prerogative எனும் வகையில் வரும். இவை அரசின் தனி உரிமைகள் இதில் ஒரு அளவுக்கு மேல் நீதிமன்றம் தலையிடும் போது மிக அவதானமாக இருக்கும். ஒரு காலத்தில் அரசர் வசம் இருந்த இந்த உரிமை இப்போ அரசுகள் வசம். இந்த வழக்கில் கூட ஒப்பந்தத்தை இன்னும் தடுத்து வைப்பது “தேசிய நலனுக்கு பாரிய பிரதிகூலத்தை தரும்” என்பதே நீதிபதியின் காரணமாக இருந்தது. இனியும் வழக்குகள் போடப்படக்கூடும். ஆனால் நீதிமன்றின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இராது.
-
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
முதலில் கொடுங்கப்பட்டது ஒரு தற்காலிக தடையுத்தரவு. இதை இன்றைய வழக்கின் பின் நீக்கி விட்டது நீதி மன்று. ஒப்பந்தமும் சற்றுமுன் கைச்சாத்தாகி விட்டது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பிற்குறிப்பு இலண்டன் வெம்பிளி நடராஜருக்கு பக்கத்து வீடு முஸ்லிம்கள், முன்பக்கம் ரோடு, பின்பக்கம் தமிழரின் மீன்கடை, மற்றபக்கம் கொத்து ரொட்டி கடை. ஈழமதீஸ்வருக்கு பக்கத்தில் (அதே கட்டிடத்தில் மசூதி, நல்லா நோன்பு கஞ்சி பரிமாறுவார்கள்). இந்த கோவில்களின் புனிதம் கெடாதா?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
🤣 உணவகம் எந்த ரகமாம்? சும்மா தேத்தண்ணி கடை டைப் எண்டால் நீங்க சொன்ன பிரச்சனைகள் இருக்கும். நல்லூரில் சும்மின் நண்பர் வைப்பது எண்டால் posh மேனாட்டு பாணியில்தான் இருக்கும். அங்க ஆட்களையே தரம் பார்த்துதான் விடுவாங்கள், நாயை எல்லாம் 🤣. எனது கவலை எல்லாம் : திருப்பரங்குன்றத்தில் பிரியாணி கடை என சங்கிகள் ஆடும் ஆட்டம் போல ஈழத்து சங்கிகள் நல்லூரில் ஆட முனைகிறார்களா? இதை இப்படியே விட்டால் நல்லூரில் இருந்து 1 கிமிக்குள் ஜீன்ஸ் போடக்கூடாது, ஷோர்ட்ஸ் போடக்கூடாது என்பதில் போய் நிற்க கூடும். இப்படி சகல கோவில்களும் வெளிகிட்டா - நம்ம வயித்திலதான் அடி🤣 அட நம்ம காப்பரேட்….யார் அது? மக்டொனால்ட் இலங்கையில் இப்போ இல்லை. கே எப் சியில் மாடு இல்லை. பீசா ஹட்? மறைக்கப்பட்ட போர்ட்டை பார்த்தால் பீஸா ஹட் போலத்தான் தெரியுது?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ம்ம்ம்…வெளி வீதிக்கு அப்பால் என்றால்…அங்கே மாமிச உணவகம் வைக்க கூடாது என்பது கொஞ்சம் “சங்கி” தனமாக எனக்குப்படுகிறது. இந்த கடைக்கு அருகில் உள்ள வீடுகளில் மச்சம் சமைப்பாகள்தானே? அத்தோடு தனியே நல்லூர் மட்டும் அல்ல அனைத்து கோவில்களும் புனிதமானதுதான். யாழில் மூலைக்கு ஒரு கோவில் இருக்கும் போது, எப்படி பார்த்தாலும் இப்போ இருக்கும் பல மாமிச உணவு கடைகள் ஒரு கோவிலில் இருந்து 400 மீட்டருக்குள் வரும். அவற்றையும் அல்லவா நீக்க வேண்டும்? பிகு கடைக்காரர் சும்மின் கூட்டாளி என்பதை நான் கருத்தில் எடுக்கவில்லை🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பிச்சகாரன் சத்தி எடுத்தால் முதல் வீட்டு இட்லி, இரெண்டாம் வீட்டு ஆட்டு பாயா, ஐந்தாம் வீட்டு பிரியாணி, 9ம் வீட்டு தயிர்சாதம், கோவில் பிரசாதம் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து வருமாம். கண்ட, கண்ட இடங்களில் நுனிப்புல் மேய்ந்து விட்டு சத்தி எடுத்தால் அப்படித்தான் வரும்🤣. ஆனால் இலங்கையில் மொரட்டுவ E1 உங்களுக்கு இதை விளங்கி கொள்ளும் ஆற்றல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து🤣🤣🤣.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நானும் நல்லூரில் எங்காவது தெரு ஒன்றிலாக்கும் என நினைத்தேன். ஆனால் வெளிவீதியிலேயே அமைத்துள்ளார்கள் போல இருக்கு. கடையின் அமைவிடம் எங்கே என யாருக்காவது சரியாக தெரியுமா?
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
2009 ற்கு முன்பு போனோரைத்தான் CAA யில் சேர்க்க வேண்டும் என்றேன்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
👆 சரியான தரவுகள் 👆நியாயமான கேள்வியும், சரியான முடிவும் (conclusion). நீங்கள் மேலே சொன்னதிலேயே இதற்கான பதில் உள்ளது. அதாவது ஒரு அரசுக்கு நிகராக செயல்பட முடியாத நிலையில் மட்டும் அல்ல, ஒரு அரச அதிகாரமில்லாத இனம் செயற்படும் அளவில் கூட நாம் இல்லை. ஆக எனக்கு 2 தெரிவுதான் புலப்படுகிறது. இதை பற்றி நாம் அலட்டி கொள்ளகூடாது. அந்த மக்கள் சந்ததி சந்ததியாக எந்த உரிமையும் அற்ற ஏதிலிகளாகவே இருப்பது அவர்கள் தலைவிதி என விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை. தமிழ் நாட்டு கட்சிகளை லாபி பண்ணி, CAA யில் இவர்களை சேர்க்க கோரிக்கை வைக்க சொல்லலாம்.
-
பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!
இந்திய உதவியில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவதாம்.
-
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு
இஸ்லாமிய பயங்கர, பிரிவினைவாதத்தை தூண்டும் பேச்சு. ஹன்சார்ட்டில் இருந்து நீக்கி, பாராளுமன்றத்துக்கு வெளியே இப்படி பேசினால் தூக்கி பத்து வருடம் உள்ளே வைக்க வேண்டும்? அது சரி ரிசாத் வீட்டில் கொல்லப்பட்ட வீட்டு வேலைக்கார சிறுமிக்கு நியாயம் கிடைத்துவிட்டதா?