Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.
  2. பிகு பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது. அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.
  3. ஆர்மீனியா? நானும் அப்படித்தான் எழுதி இருப்பீர்கள் என நினைத்தேன். சும்மா தேடிபார்த்ததில் - மார்ச் 31 அசர்பைஜானிகளால், அவர்களின் இனவழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறதாம்.
  4. நான் அறிந்தவரை நெய்தல் படையணி கராச்சி துறைமுகத்தை முற்றுகைக்கு உள்ளாக்கி விட்டதாம். அடுத்த அரைமணியில் பாகிஸ்தானை உலக மேப்பில் இருந்து அழிக்கவே போகிறார்கள் என்பதை அறிந்து, பாகிஸ்தான் டிரம்பை கெஞ்சி, டிரம் அண்ணனின் காலை பிடித்து அதன் பிந்தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்ததாம்.
  5. என்ன நடக்கும்…. எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣 ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம். அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம். தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.
  6. என்னுடைய வண சிங்கராயர் + மன்னார் கொனெக்சன், குரொஸ் கொனெக்சந்தான் என்பது கிட்டதட்ட நிருபணமாகி விட்டது. சவாககச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் காயம் அடைந்த போராளிகள் சீலன், குண்டப்பா, புலேந்தி அம்மானை காப்பாற்ற மருந்து வாங்கிய வகையில் வண பிதா ஆ சிங்கராயர் யாழில் கைதாகியுள்ளார். புலிகளுக்கு உறுதுணையாக இருந்த மரு ஜெயகுலராஜா பற்றிய குறிப்பில் இருந்து 👇 (27-10-1982 )ஆம் திகதி அன்று நடைபெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சீலன், புலேந்திரன், ரகு (குண்டப்பா) ஆகிய போராளிகள் காயமடைந்தனர். முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ். குடாநாட்டில் காயமடைந்த இவர்கள் மூவரையும் காப்பாற்றுவது இலகுவான விடயமல்ல. மேலதிக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பும்வரை தேவையான வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும். இப்பணியில் டாக்டர் ஜெயகுலராஜா, அவரது சகோதரர் போதகர் ஜெயதிலகராஜா, யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் அவரின் துணைவியாக விளங்கிய நிர்மலா ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர். போராளிகள் காயமடைந்ததால் அதற்குத் தேவையான மருந்துகளைப் பெற முயற்சிப்பர் எனக் கருதிய உளவுத்துறையினர் மருந்தகங்களை கண்காணித்தனர். குறிப்பிட்ட வகை மருந்துகளை கொள்வனவு செய்தவர் யார் என ஆராய்ந்தனர். அந்த வகையில் வண. பிதா சிங்கராயர் கைதானார். அதன் தொடர்ச்சியாக வண. பிதா சின்னராசாவும் மேற்குறிப்பிட்ட அனைவரும் கைதாகினர். https://www.battinatham.com/2024/06/blog-post_671.html?m=1
  7. ஜஸ்டின் அண்ணா சொன்னதை போல் வண. ஆ சிங்கராயர் மாரடப்பால் மரணமானதை செய்தியாக வெளியிட்டுள்ளது “களத்தில்”.
  8. தியாகதீபம் திலீபனின் ஈகை பற்றிய நேரடி குறிப்பில் வண. ஆ சிங்கராயர் பற்றி இப்படி வருகிறது. கிறிஸ்தவ பாதிரியாரும், பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார். https://thodarum.com/thileepan-unnanilai-arapporaattam-6/ ஒருவேளை வண சிங்கராயர் மன்னாரில் கைதாகி, தள்ளாடியில் கொடுமைப்படுத்த பட்டபின் மட்டகளப்பு, வெலிக்கடை என மாறி இருப்பாரோ? மேலும் தேடிப் பார்க்கலாம். இந்த மன்னார் கதையை எனக்கு சொன்னவர் என் அம்மா. அவர் இப்போ உயிருடன் இல்லை.
  9. நன்றி. இவர் சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானாரா. நகங்களை பிடுங்கினர் என கேள்விபட்டேன்.
  10. தகவலுக்கும் பிழையை திருத்தியமைக்கும் நன்றி. நான் கேள்விப்பட்ட அல்லது வாசித்த இரு சம்பவங்களின் நியாபக வயர்கள் குறுக்கால் ஓடிவிட்டது என நினைக்கிறேன். வெலிக்கடை சிறை உடைக்கப்படவில்லை? முடிந்தால் இந்த தகவலை சரிபார்க்கவும். கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார் என கேள்விபட்டது நல்ல நினவு இருக்கிறது. இயற்கையாக மரணம் என்பது ஆறுதலான செய்தி. நாம் இருவேறு சிங்கராயர் பற்றி கதைக்கிறோமோ? ஒருவர் தாவீது அடிகளார் - யாழ் நூலகம் எரிந்த செய்தியோடு படுக்கைக்கு போய் அப்படியே சாவடைந்த தமிழ் அறிஞர். இன்னொருவர் ஆ. சிங்கராயர்? மட்டகளப்பு சிறை உடைப்பில் தப்பி போகாமல் இருந்தவர்.
  11. இதனால்தான் முன்னரை விட மிக உயர் ரக இராணுவ தளபாட, தகவல், தொழில் நுட்ப உதவியை இப்போ சீனா பாகிஸ்தானுக்கு வழங்குகிறது. இப்படி நடக்கும் என்பதைதான் ராகுல் காந்தி 2019 கஸ்மீர் அந்தஸ்து நீக்க விவாதத்தில் பாராளுமன்றத்தில் கூறினார். 2014 வரைக்கும் இருந்த இந்தியாவின் கஸ்மீரி கொள்கையை, பாகிஸ்தான் கொள்கையை மோடி/அமித்ஷா மாற்றியதன் விளைவுதான் சீனாவின் பாகிஸ்தான் மீதான அதீத ஆர்வமும், கிட்டதட்ட இரு நாடுகளும் ஒரு கூட்டணி என்ற நிலமை உருவாகியுள்ளதும். பாகிஸ்தான் நாலு துண்டாகினால் - அதனால் பாகிஸ்தானுக்கு அடுத்து பாரிய கேந்திர இழப்பு சீனாவுக்கே ஏற்படும். எனவே இப்போ சீனாவை பொறுத்தவரை பாகிஸ்தானை காப்பாற்றுவது, சீனாவை காப்பாற்றுவதே. மோடி/அமித் ஷா/ ஆர் எஸ் எஸ் இந்தியாவின் இரு எதிரிகளை ஒருங்கிணைத்துள்ளார்கள்.
  12. பாக்கிஸ்தான் இரு நாடுகள் ஆகும் —- உண்மையில் பாகிஸ்தானை 4 நாடுகள் ஆக்குவதுதான் ஆர் எஸ் எஸ் சின் திட்டம். பலூசிஸ்தான், மேற்கு பஞ்சாப், பஹ்தோனிஸ்ட்டான், சிந்து. இதை சுப்ரமணியம் சுவாமி போன்ற ஆர் எஸ் எஸ் தளகர்த்தாக்கள் மிக வெளிப்படையாகவே பேசி வருகிறனர். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை இதுவல்ல இந்தியாவின் கொள்கை. எப்போதும் நாடுகளின் கொள்கை முடிவுகள் அதன் தலைமையில் உள்ள அல்லது தலைமையை கட்டுப்படுத்தும் அரசியல் சக்திகளேலேயே முடிவு செய்யப்படும். ஆர் எஸ் எஸ் கொள்கை படி கஸ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிஜேபி அரசு, இப்போ மெல்ல மெல்ல, பாகிஸ்தானை நாலாக உடைக்கும் வேலையை ஆரம்பித்து நடத்துகிறது. அண்மையை போரின் ஆரம்பம் கஸ்மீரின் பெஹல்கம் தாக்குதல் என நாம் பலர் தவறாக எண்ணுகிறோம்… இல்லை… இது ஆரம்பித்தது ஓரிரு மாதங்கள் முதல் பலூசிஸ்தானினில் ஒரு தொலைதூர ரயிலை பிரிவினைவாதிகள் கடத்தி, பாக் ஆமி மற்றும் பொதுமக்களை கொன்று குவித்தத்தில். இதை இயக்கியது முழுக்க முழுக்க றோ. அதற்கான பதிலடிதான் பெஹல்கம். ஆனால் பாகிஸ்தானை இந்தியா உடைக்க சீனா விடாது.
  13. அண்ணை போர் முடிஞ்சிட்டு. உள்ளூர் விமான நிலையங்களும் பழைய நிலைக்கு வந்து விட்டன. இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே ஒட்டு மொத்த போர் நிகழ வாய்ப்பில்லை. இப்படி சின்ன சின்ன சண்டைகள்தான் நடக்கும். கார்கில் போரில் இந்தியா அறுதியும் உறுதியுமாக வென்றது. அது நிலப்போர். குறித்த ஒரு இடத்தில் மட்டும் நிகழ்ந்தது. பதான்கோட் தாக்குதலில் இந்தியா தாக்கி, பாகிஸ்தான் ஒரு விமானியை சுட்டு போர் கிட்டதட்ட சமநிலையில் முடிந்தது. இப்போ இந்த ஆகாய போரில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா திட்டவட்டமாக, அறுதியும் உறுதியுமாக பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. இனியும் போர்கள் வரும். ஆனால் பாகிஸ்தான் முழுமையாக தோற்காது. அப்படி தோற்கும் நிலை வரின் அணு ஆயுதத்தை பாவித்து, இந்தியாவின் 2/3 பங்கை தம்மோடு கூட்டிப்போகும்.
  14. அது நக்கீரன் அட்டைப்படம். ஆனால் அதுவும் கோபால் மோர்பிங் செய்து போட்ட போலிப்படமே. உண்மையை தெரிய வைப்பதற்காக தான் பொய்யை கையில் எடுத்ததாக பின்னாளில் கோபால் கூறி இருந்தார்.
  15. இன்னொரு அவுரங்கசீப் சீண்டல் - நேற்றைய பத்திரிகை சந்திப்பில்: நான் நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன்…. PAF 6, IAF 0 😂😂😂😂 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரபேல், ஒரு மிக் ஒரு SU 300 உட்பட ஆறு விமானங்கள் இழப்பு. டிரோன்கள் எண்ணிக்கை தெரியவில்லை. நீங்கள் சொன்ன அளவில் படை வீரர் இழப்பு. இவைதான் உறுதிபடுத்த கூடியன. பெண் விமானிகளை பிடிக்கவில்லை என பாகிஸ்தான் இராணுவத் தளபதி நேற்றே சொல்லி உள்ளார். இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் போகவில்லை. ஆகவே எஜெக்ட் பண்ணி வீழ்ந்த விமானிகள் எல்லாம் இந்தியாவுக்குள்தான் வீழ்ந்துள்ளனர். விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பியுள்ளனர் என இந்திய வான்படை தளபதி நேற்று கூறினார். ஆனால் யுத்தம் இந்தியாவுக்கு முற்று முழுதான தோல்வி என்பது வெள்ளிடைமலை. இதுதான் நடந்திருக்கும். 2 கிழமையா அடிக்கப்போறோம், அடிக்கப்போறோம் என இந்தியா கூவிய பின், நன்கு அறியப்பட்ட முகாம்களில் இருக்க தீவிரவாதிகள் என்ன அடி முட்டாள்களா? அத்தோடு - ஏதாவது பெரிய தலை அவுட் ஆகி இருப்பின் - சாவு ஊர்வலம் பெரிதாக நடந்திருக்கும்.
  16. பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி அவுரங்கசீப் (என்னே பெயர் பொருத்தம்!) கிட்டதட்ட ஒரு இண்டெர்நெட் லெஜண்ட் ஆகி விட்டார். இன்று அவரிடம் ரபேல் பற்றி கேட்டதும்… அவர் சொன்ன பதில்…. எம்மிடம் இருப்பதற்கு நிகரான, மிக வினை திறனான போர் விமானம் ரபேல்… சரியாக பாவிக்கத்தெரிந்தால் 🤣. இந்த போரில் வெற்றி பாக்கிஸ்தானிடம் என்பதே வெளிப்படையாக தெரியும் உண்மை. ஜெய்சங்கரும், அஜித் டோவலும் வாசிங்டனை தொடர்பு கொண்டு, இப்படியே யுத்தம் மேலே மேலே படி ஏறிக்கொண்டே போனால்…அணு யுத்தம் வர வாய்ப்புண்டு என சொன்ன பின்பே டிரம் தலையிட்டதாக சொல்கிறார்கள். இது உண்மையாயின் இந்தியாதான் யுத்த நிறுத்தத்தை கோரி உள்ளது. தானே தொடங்கி, தானே நிறுத்த கோரும் அவமானகரமான நிலை. பல காலமாக இந்தியா காஸ்மீர் விடயத்தில் யாரையும் தலையிட விடுவதில்லை. ஆனால் மோடி விட்டுள்ளார். அது மட்டும் அல்ல மோடி சொல்ல முன்பே போர் நிறுத்தம் என அமெரிக்கா சொல்லி விட்டது. இந்தியாவுக்கு சரியான இராணுவ, இராஜதந்திர மூக்குடைவை, பின்னடைவை தந்துள்ளது இந்த ஆப்பரேசன் சிந்தூர். உலக அரங்கில் கூட ஒரு நாடும் துணைக்கு வரவில்லை. இதற்கு பெரும் பங்கு - ஆர் எஸ் எஸ் சித்தாந்த வழியில் மோடியின் பிஜேபி அரசியல் தலைமை, ஜெய்சங்கர் எடுத்த வெளிநாட்டு கொள்கை முடிவுகள்தான். 2019 இல் அப்போதே ராகுல் காந்தி எதிர்வுகூறியது இப்போ சரியாகி உள்ளது. காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் அரசியல் கனவு. அதை பிஜேபி நடத்தி காட்டியது. இது சீனாவிற்கு ஏற்புடையது அல்ல (காஸ்மீரை சீனாவும் உரிமை கோருகிறது). அதே போல் மேற்குடன், இஸ்ரேலுடன் முன்பை விட அதி நெருக்கம் காட்டி கிட்டதட்ட அணி சேரா கொள்கையை கையேவிட்டார் மோடி. கஸ்மீரில் தன்னிச்சையா நடந்தது, ரபேல், இஸ்ரேல் டிரோன் உட்பட மேற்கோடு இராணுவ அரசியல் ரீதியில் நெருங்கியது - இந்த அரசியல் நகர்வுகளை மோடி அரசு எடுத்தமை… முன்பை விட பாகிஸ்தான்+சீன உறவை பலப்படுத்தி விட்டது. கார்கில் யுத்த நேரம் இந்தளவுக்கு சீனா பாக்கிஸ்தானுக்காக இறங்கவில்லை. இப்போ இறங்க மோடி அரசின் தப்பான நகர்வுகளே காரணம். மோடி அரசு காஸ்மீருக்கு உள்ள அரசியல் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நேரம் - இது எப்படி பட்ச விளைவை தரும் என ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரை. பப்பு என நாமெல்லாம் கிண்டல் செய்தாலும்…இப்படிதான் இப்போ நடந்துள்ளது.
  17. வெறும் சுட்டியாக கொடுத்துள்ளேன். தெரிகிறதா? https://x.com/clashreport/status/1921603692567867785
  18. வீழ்த்தப்பட்ட இந்தியாவின் SU 30 இன் பாகங்களாம்.
  19. கேள்வி: எத்தனை ரபேல் விமானங்களை நீங்கள் இழந்துள்ளீர்கள் சேர்? இந்திய விமானப்படை தளபதி: நீங்கள் எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி - பயங்கரவாதிகளின் முகாம்களை திட்டமிட்டமாதிரி அழித்து விட்டீர்களா என்பதே. அதற்கான பதில் ஆம் 😂. யுத்த நிலை என்பதால் நடவடிக்கை சம்பந்தபட்ட விபரங்களை தரமுடியாது (அதான் போர் நிறுத்தம் ஆகிவிட்டதே). பிகு இங்கே தளபதி கொடுத்த பதிலின் சுருக்கம் = சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு 🤣
  20. நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள். இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன். தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள். இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை. கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை. இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள். ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது. புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. இலங்கையில் அறவே இல்லை. அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள். ஆகவேதான் சொல்கிறேன். இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை. நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள். சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம். ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர். காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.
  21. என்னை பொறுத்தவரை இந்தியா தனது நலன் கருதி நேரடியாக ஈழத்தமிழரை அரவணைக்க வேண்டும். அதற்கான காலம் வந்தே விட்டது. அதாவது ஈழதமிழ் தலைவர்கள் எவருக்கும் எந்த வகிபாகமும் தேவையில்லை. நான் மேலே சொன்னது போல குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த ஒரு தீர்வை இந்தியாவே தயாரித்து விட்டு. இலங்கையிடம் அதை கொடுத்து… குறித்த கால அவகாசத்தில் அதை நடைமுறைபடுத்தும் படி சொல்ல வேண்டும். இலங்கையில் வரவிருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அண்மைய சண்டையில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பாவித்து, பொருளாதார அசமநிலையையும் மீறி இந்தியாவை சவாலுக்கு உள்ளாக்கியதை பார்கிறோம். இதே ஒரு நிலை இலங்கையில் வர அதிக காலம் எடுக்காது. பாகிஸ்தான் உதாரணத்தை இலங்கை கையில் எடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை. புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை தோற்கடிக்க இந்தியா செய்த இத்தனை உதவிக்கு பின்னும், இன்று இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட சொல்லவில்லை. கஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கூட கண்டிக்கவில்லை. ஆனாலும் இன்றும் மெலிதாகவேனும் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எங்கே இருந்து வருகிறது எனபார்ப்பின் அது ஈழதமிழரிடம் இருந்தே. அதற்கு யாழ்கள கருத்துக்களே சாட்சி. சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுள்ளது வெள்ளிடமலை. கேந்திர ரீதியாக சீனாவும், மத அடிப்படையில் துருக்கி, பங்களாதேஷ், நாடுகளும் பாக்கிஸ்தான் பின்னால் நின்றன. இந்தியாவுக்கு யாரும் இல்லை, இஸ்ரேலின் வெறும் சந்தர்ப்பவாத, ஆயுத விற்பனையின் பால்பட்ட ஆதரவு கூட மிகவும் சுரத்தில்லாமலே இருந்தது. எங்கே நேபாளம்? எங்கே ஈழத்தமிழர்கள்? இந்தியா இழந்த நண்பர்களை மீள அரவணைக்க வேண்டியது, அவர்களை விட இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது. தன் வடக்கு, தெற்கு வாசல்களில் அசைக்க முடியாத நட்புசக்திகளை உருவாக்குவது இந்தியாவுக்கு இன்றி அமையாதது. அதன் முதல்படியாக இலங்கையை பிரிக்காத, ஆனால் காத்திரமான ஒரு தீர்வை தமிழருக்கு கொடுப்பது அமையும். இப்படி ஒன்று நடக்குமாயின் உலகலாவிய தமிழ் இனமும், இலங்கை வாழ் தமிழரும், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழரும் இந்தியாவின் பின் பெரும் அளவில் அணி திரள சில மாதங்கள் கூட எடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.