Everything posted by satan
-
சிரிக்கலாம் வாங்க
பசி வந்தால் பத்தும் ப(ம)றந்து போகும். மானம், ரோசம், வெக்கம், கௌரவம், கோபம், பழிவாங்கும் மனப்பான்மை சுயநலம், பொறாமை, பேராசை.
-
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
வேண்டுமென்றே வதந்தியை பரப்பி மக்களை அதன் பக்கம் திருப்ப முனைகிறார்கள் என்றே நினைக்கிறன். அப்படியா? அப்போ எதற்காக முன்னாள் ஜனாதிபதி சொல்லிக்கொள்ளாமல் நாட்டை விட்டு ஓடினார்? எப்படி ஆட்சி ரணிலின் கைக்குள் போனது? நான் நினைக்கவில்லை நாமலுக்கு அந்த தகுதியோ அதிஷ்டமோ இருக்கென்று. அப்படி இருந்திருந்தாலும் அதை அவர் அப்பாவும் சித்தப்பாவும் கெடுத்து விட்டனர்.
-
முத்தையன்கட்டு சம்பவம் - கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம் - இராணுவ பேச்சாளர்
இவர்கள் இதுவரையில் தாம் செய்தவற்றில் எதைத்தான் ஏற்றுக்கொண்டார்கள்? இதைமட்டும் மறுப்பதற்கு. அன்று மறுத்ததை இன்று ஏற்றுக்கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனரே. இந்த சம்பவத்தையும் இன்னொரு காலம் விசாரணையில் ஏற்றுக்கொள்வார்களாக்கும்.
-
ஊருக்கு... "கொலிடே" போறேன்.
இது என்ன சொந்த அனுபவமோ சிறியர்?
-
கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும் - ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால்
ஓம், இவையளின்ர நிலைப்பாட்டினாற்தான் வடக்கில் தமிழர் முதலமைச்சர் ஆகிறார் இல்லையெனில் அதெல்லாம் முடியாது. இதையும் தமிழரசுக்கட்சி நம்பும்.
-
கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை
ஒரு குழப்பதை உருவாக்கி, இராணுவத்தினரை நிலையாக நிறுத்துவதற்காக வெளியேறும் இராணுவத்தினர் செய்யும் கொலையாக இருக்கலாமோ?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
உறவினர் பெயரில் வைத்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே அவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களும் விசாரிக்கப்படும். ஏற்கெனவே சில அரசியல்வாதிகளின் உறவினர்கள் இந்த விசாரணையில் இவ்வாறான சிக்கி தண்டனை பெற்றிருக்குகிறார்கள்.
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
தங்கத்தை புடமிடுவதுபோல சிறிதரன் புடமிடப்படுகிறார். மக்களுக்கு இன்னும் சேவை செய்ய உத்வேகம் அளிக்கப்படுகிறார். அவரை நம்பி வாக்களித்த மக்கள் அவரோடு இருந்து சவால்களை சந்திப்பர். வருமானத்திற்கு மேல் சொத்து குவித்தவருக்கு வாக்களித்த மக்கள், ஏன் சொத்தில்லாத சுத்தமான மனிதரை நிராகரித்தனர் என்பதுதான் கேள்வி. மக்களுக்கு சிறிதரனை பற்றி தெரியாமலா வாக்களித்தார்கள்?
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
சிறிதரனை அசிங்கப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுக்கி விட நினைப்பவர்கள் அவரை மக்களிடத்தில் உயர்த்தி அவருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மடியப்போகிறார்கள். காழ்ப்புணர்ச்சி என்பது தன்னை திருத்தாமல் மற்றவர்களின் நற்பெயரை அழிப்பதிலேயே குறியாக இருக்கும். மக்களின் பிரச்சனையை புறந்தள்ளி தங்களை நிலை நிறுத்த போராடுகிறார்கள். அரசியல் மேடையில் அவருக்கு சேறு பூசி அவரை உயர்த்தி, தங்களை தாழ்த்திக்கொண்டார்கள். சிறிதரன் தன்னை மெய்ப்பிப்பதை விட லஞ்ச ஊழல் விசாரணைக்குழு மெய்ப்பிப்பது மேலானது. அதுதான் எல்லோரின் முகத்திரையையும் கிழிக்கும். முறைபாடளித்தவர்கள், இரகசியத்தகவல் வழங்கியவர்களும் தங்களை சுத்தமானவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
-
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமைச்சரே, மேலும் பல நாடுகளுக்கும் இலவச விசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கையரசு. இலவச விசாவை காட்டி சுற்றுலாப்பயணிகளைஅழைத்து, கல்லாப்பெட்டியை நிரப்புவதற்காக. எங்கே நீங்கள் இலங்கை அரசோடு இணைந்து தமிழரை நசுக்கினீர்களோ, அவ்வாறே உங்களுக்கு எதிராக இஸ்ரேலோடு இலங்கை இணைந்துவிடுமோ என அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். இலங்கையே யுத்தக்குற்றவாளிகள் பிறந்த, நிறைந்த நாடு. இதில இவர் வேற புனித நாடு போல கதையளக்கிறார். எல்லோருக்கும் சப்பித்துப்புவதற்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். சிங்கள கிறிஸ்தவர்களை சொல்லப்பயம். ஏன் நீங்கள் அழுத்தங்களை கொடுப்பது? தமிழருக்கு சமஉரிமை வழங்கக்கூடாது என்பதற்காக சகல ஒத்துழைப்புகளையும் வழங்கினீர்கள். உங்களுக்குத்தான் அதிக பலம், உரிமை இருக்கிறது கேட்பதற்கு கேட்டுப்பாருங்கள். இப்போ புரியும், தமிழர் ஏன் போராடினார்கள் என்பது. உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே வரப்போவதில்லை கூப்பாடு போட்டுப்பாருங்கள், போராடிப்பாருங்கள் என்ன பதில் கிடைக்கிறது என அறிய ஆவல்! சும்மா சுற்றுலா வருபவர்களை நிரந்தரவாசிகளாக்கப்போகிறார்கள் கூப்பாடு போட்டு.
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
இவரும் வெகு விரைவில் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்படலாம். உண்மையை எதிர்கொள்ள பயம், அதனால் உண்மையை வெளிக்கொணர்பவர்களை அச்சுறுத்துவது. அடக்கி ஒடுக்கினாலும் உண்மை வீறு கொண்டு எழும் என்பதற்கு இந்த மனித புதைகுழிகள் சான்று.
-
ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு
எதிரிகள் கையிலெடுக்கும் இறுதி ஆயுதம் இது. நாட்டில் தமிழருக்கெதிரான அடக்குமுறையில் குளிர் காய்ந்த, காய காத்திருக்கும் கூட்டம் பதட்டமடைந்திருக்கு.
-
நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்
நாடு முழுக்க சிறைச்சாலை கட்டினாலும் போதாது போலிருக்கே. இப்போதானே ஆரம்பம்!
-
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச
புலிகளை ஒழித்திருக்கலாம் ஆனால் நாட்டில் முக்கியமான புரையோடிப்போயுள்ள பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அதனாலேயே உங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. யாரைப்பார்த்தாலும் எதைக்கண்டாலும் புலி என உளறுகிறீர்கள். உங்களுடைய நீதிமன்றங்களிலேயே வழக்குகள் தொடரப்படுகின்றன, உங்கள் இராணுவமும் புலனாய்வுமே சாட்சிகள் அளிக்கின்றனர். உங்கள் நீதிமன்றங்களில், அதிகாரிகளில், நீதிபதிகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், பயம் வேண்டாம். சர்வதேச நீதிமன்றங்களை நாடலாம் அமைச்சரே. கடந்த காலங்களில் பயங்கர வாதச்சட்டம், நீதிபதிகள், விசாரணை அதிகாரிகளை மாற்றி நீங்கள் போட்ட நாடகம், அதனாலேயே உங்களுக்கு இவற்றின்மேல் நம்பிக்கையில்லை. உங்களைப்போல் இவர்களும் பழிவாங்குகிறார்கள் என்று மக்களை திசை மாற்றுகிறீர்கள். எங்கே உண்மையை வெளியில் கொண்டுவந்துவிடப்போகிறார்கள் என அஞ்சி விசாரணை அதிகாரியை மாற்றினீர்கள். இப்போ அதிகாரம் இழந்து, படைகள் உங்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதால் படைகளுக்காக அழுகிறீர்கள். வெகு சீக்கிரம் உங்களுக்காகவும் அழுவீர்கள்.
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
தமிழருக்கு உரிமை வழங்கக் கூடாது என்பதற்காக, எல்லா நாட்டினரையும் கூவி கூவி அழைத்து எல்லா உபசரணைகளும் செய்வார்கள். பின் குத்துது குடையுது என்பார்கள். அவர்கள் மூக்கை நுழையாது விட்டிருந்தால் இன்று தமிழர் தமது உரிமைகளை தாமே முயன்று பெற்றிருப்பர். எல்லாம் இழந்த பின் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அப்போ, இவர்களெல்லாம் பேசவே முடியாத நிலையிலிருப்பர்.
-
தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.
இந்த யதார்த்தம் தமிழரை சிங்கள புலனாய்வுடன் சேர்ந்து கொலை செய்யும் போது, அவர்களின் காணிகளை அடாத்தாக பிடிக்கும்போது ஏன் வரவில்லை? எங்களுக்கு தனி மாகாணம் வேண்டும், பிரிவினைக்கு இடமளியோம் என்று தோளோடு தோள் நின்று போராடும்போது இந்த எண்ணம் எங்கே போனது? இவர் மன்னாரில் செய்த ஊழல், அடாவடி, தமிழருக்கெதிரான வெறுப்பு பேச்சு எல்லாவற்றையும் மறைத்து அதை தக்க வைத்துக்கொள்வதற்காக நல்லிணக்கம் எனும் பெயரில் மீண்டும் தன்னை மூடி மறைத்து தப்ப முயற்சிக்கிறார். இனிமேலும் இவர்கள் புட்டும் தேங்காய்ப்பூவும் என்கிற விசர் ஒப்புமைகளை தூக்கியெறிந்து விட்டு கறாராக பேசி நாம் நம் வழியில் பயணிப்பதே நமது எதிர்கால சந்ததிக்கு நல்லது. இவர்கள் தாங்கள் சங்கடப்படும்போது எங்களோடு ஒட்டிக்கொள்வார்கள். ஆனால் எப்போ முதுகில் குத்தலாமென சமயம் பார்த்திருப்பார்கள். எட்டப்பர் உறவே வேண்டாம், அது எமது சமுதாயத்திற்கு கேடு!
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
அதென்றால் நூறு வீதம் உண்மை. தமிழரை நம்ப வைத்து கழுத்தறுத்ததும் இந்தியாதான். ஆனால் அதை சுட்டிக்காட்ட மாட்டார் விமல் வீரவன்ச.
-
பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !
யாராவர் நாமலா? எத்தனை ஆட்டம்? அத்தனையும் அதிகாரம் தந்த போதை! இனி அதன் பலனை உணரட்டும். தனக்காகவா இத்தனையும் செய்திருப்பார்? அவர்கள் ஒருவரும் இவரை இனி சந்திக்கவே முன்வர மாட்டார்கள். யோசிக்கட்டும் தனிய இருந்து.
-
செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
இருநூறுபேர் பார்வையிட்டிருந்தனர், வெறும் எலும்புக்கூட்டை வைத்து எப்படி அடையாளம் காண முடியும்? சான்றுப்பொருட்கள் உள்ளவர்களின் உறவினர் யாரும் உயிருடன் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்களின் டி என் ஏ பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமோ என்னவோ?
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
கிழக்கில் முஸ்லீம் ஊர்காவற்படை அமைக்கத்தேவை என்ன வந்தது? அன்றைய ஜனாதிபதி, அரபு முஸ்லீம் நாடுகளிடம் பயங்கரவாதத்தை அழிக்க உதவி கோரினார். அது நிஞாயமான காரணம் தெரிவித்து மறுக்கப்பட்டதால், தமிழ் முஸ்லீம் மோதலை ஏற்படுத்தி, புலிகளை அதற்குள் இழுத்துவிட்டு காரியம் சாதிக்க வேண்டிய தேவை பிரேமதாசாவுக்கு இருந்தது. அதற்கு இராணுவ புலானய்வு, முஸ்லீம் ஊர்காவற்படையை இணைத்துக்கொண்டது. ஆனாலும் முன்னர் இல்லை என்று சொன்ன அரபு தேசம், பின்னர் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல. கிழக்கில் அரபு முஸ்லீம் கல்லூரிகளை நிறுவலாம், சமய நிறுவனங்களை ஆரம்பிக்கலாம் என்ற உறுதிப்பாட்டுக்கமைய சம்மதம் தெரிவித்திருக்கலாம். ஆகையாலேயே கிழக்கு முஸ்லிம்களுடையது என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் கூவுகின்றனர். ஆரம்பத்தில் அது தமிழர் மாகாணமாகவே இருந்தது. ஆரம்பத்தில் ஏற்படும் மோதல் பின்னைய நாளில் அதன் காரணம் ஆதாரமாக வெளிப்படுவது இல்லையா? இப்படித்தான் தொண்ணூறுகளில் நிகழ்ந்திருக்கிறது. ஏன் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள் பின்னாளில் செய்த தவறுகளை விசாரிக்கும் பொழுது வெளிவரவில்லையா? அல்லது அது முன்னாளில் நடந்தது அதற்கும் இதற்கும் சம்மதமில்லை என்று விலக்கி விட்டனரா? பலநாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடும்போது வாழ்நாள் களவுகள் வெளிவருவதில்லையா? அல்லது வரக்கூடாதா?
-
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
எல்லாமே ஒரு குட்டையில ஊறின மட்டையள்தான். போராட்டத்தில் உடமைகளை, உறவுகளை, நிலங்களை இழந்தவர்கள், பங்களிப்பு செய்தவர்கள், அந்தப்பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் மக்கள். அவர்களுக்குத்தான் தெரியும் அங்கே என்ன நிகழ்ந்தது, தங்களுக்கு என்ன வேண்டுமென்பது. இதில் எந்தவிதத்திலும் ஈடுபடாத, இழப்புகளை சந்திக்காத, அந்தப்பிரதேசத்தில் வாழாத இவர்கள் அந்த மக்களுக்கு தலைமை தாங்கவோ அல்லது அவர்களுக்கு எது வேண்டுமென்று முடிவெடுக்கவோ முடியாது. அந்த மக்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து குறுகிய நேரத்திற்குள் தமக்கென எதுவும் எடுக்க அனுமதிக்காது திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர், துரத்தி துரத்தி கொன்றொழிக்கப்பட்டனர். இது இனப்படுகொலை இல்லையா? அவர்களுக்கு இங்கு அரசியல் உரிமை இல்லை என்பதும் கேட்டால் இரத்த ஆறு ஓடும் என்று மிரட்டுவதும் அவர்கள் பூர்வீக நிலங்களிலிருந்து அவர்களை விரட்டிவிட்டு தங்கள் மத தலங்களை எழுப்புவது இந அழிப்பு இல்லையா? பல மனித நேய அமைப்புகள் சொல்கின்றன, கனடா இலங்கையில் நடந்தது இந அழிப்பே அதை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்கிறது. ஆனால் ஒரு இந அழிப்பை சந்தித்தவர்களின் பிரதிநிதிகள் அதை மறுக்கின்றனர். சரி, புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்றாவது தெரியுமா இவர்களுக்கு? புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு முன் தமிழினத்தை குறி வைத்து இனக்கலவரம் நடக்கவில்லையா, அவர்களின் பொருளாதாரம் சிதைக்கப்படவில்லையா, தமிழ் மக்கள் கொல்லப்படவில்லையா, விரட்டப்படவில்லையா? எங்களுக்கு இனவழிப்பு நடைபெறவில்லை என்று இவர்கள் சொன்னால், எங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இரக்கம் காட்டும் நாடுகள் எம்மை கைவிடாதா? சிங்களம் இவர்களை வைத்தே அந்த நாடுகளை விரட்டும். எமது வலியும் இழப்பும் வேணவாவும் புரியாதவர்கள் தமக்கு அரசியல் செய்வதற்கு நம்மை பயன்படுத்துகிறார்கள்.
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது புலிகள் முஸ்லிம்கள் போல் வந்து கொலைசெய்தனராம். புலிகள் ஏன் அப்படி வரவேண்டும்? ஏன் முஸ்லிம்களை கொல்ல வேண்டும்? புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? சிரியா முஸ்லிம்களுக்கும் சுதேச முஸ்லிம்களுக்கும் இடையிலேயே பிரச்சனை. அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றாதவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த மக்களை வற்புறுத்தி, துன்புறுத்தியவர்கள் அவர்களே. 2020 அப்துல் பாஹிர்என்பவர் காணாமற் போய் விட்டார், புலிகள் அவரை கடத்தி விட்டார்கள் என்று வதந்தியை பரப்பி முறுகல் நிலையை ஏற்படுத்தினர். அவரை தேடி போலீசார் நடத்திய தேடுதலில் அவர் தனது வீட்டிலே சாவகாசமாக மறைந்து இருந்திருக்கிறார். இவர் ஈ பி டி யை சேர்ந்தவர். பொலிஸாரின் விசாரணையில், தான் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் இந்த நாடகத்திற்கு சம்மதித்தால் பணம் தருவதாக கூறப்பட்டதாகவும் அதற்கு தான் சம்மதித்தே இந்த வேலையை செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் ஈ பி டி பி, முஸ்லீம் குழு, இராணுவ புலனாய்வு இருந்ததாக கூறப்படுகிறது. ஓட்ட மாவடியில் மணாளன் மகேசன் எனும் தமிழர் கொல்லப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் போடப்பட்டார், அதே நேரம் குசேன் உயிரற்ற உடல் வீசப்பட்டதற்கு கப்டன் ஹைஜி என்பவருக்கு சம்பந்தம் என்றும், நிந்தவூர் விடுதலைப்புலி உறுப்பினர் பூவண்ணன் வெட்டப்பட்டு முஸ்லீம் பிரதேசத்தில் ஈ பி டி பியால் போடப்பட்டதும் முஸ்லீம், தமிழர் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி வேண்டுமென்றே திணித்து புலிகளை வலிந்து இழுத்து முஸ்லிம்களை எதிரிகளாக்கினர். இதற்கு முஸ்லிம் ஊர்காவற் படை, ஈ பி டி பி, இராணுவ புலனாய்வுமே காரணம். நல்ல வேளையாக வடக்கிலிருந்து உயிரிழப்பில்லாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையால் இந்த கலவரம் அங்கு தோன்ற வாய்ப்பிருக்கவில்லை. இல்லையேல் அங்கும் பல நாடகங்கள் அரங்கேறியிருக்கும். தமிழரின் காணிகளை பறித்து, முஸ்லீம் வியாபார தலங்களை அமைத்தேன், பேருந்து தரிப்பிடங்களை அமைத்தேன், எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை எனது அதிகாரத்தை கொண்டு மாற்றினேன், கிழக்கு முஸ்லீம் மாகாணமாக மாற்ற வேண்டுமென்றால் ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வேண்டுமென்று ஹிஸ்புல்லா சவால் விட்டார். இப்போ கக்ஹீம் கூறுகிறார். அப்படியிருக்க முஸ்லிம்கள் நிலங்களை இழந்தனராம் நம்பக்கூடியதாகவா இருக்கிறது? வி. முரளிதரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள் இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டுமென கட்டளை இட்டபோது, யாழ்ப்பாணத்தாரின் வியாபார நிலையங்களை முஸ்லிம்களே குறைந்த விலையில் பெற்றுக்கொண்டனர். தமிழரை விரட்டிவிட்டு அவர்களின் நிலங்களை அடாத்தாக பிடித்து குறைந்த விலையிலும் பயமுறுத்தியும் பிடித்துள்ளனர். இவர்களுடன் எந்தக்காலத்திலும் தமிழர் இணைந்து வாழ முடியாது. தமிழர் இவர்களை கழட்டி விட்டால், இவர்களை சிங்களம் கூட மதிக்காது.
-
கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி
அது சரி ..... கிழக்கிலிருந்து தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகள் பிரதேசங்களை விட்டு விரட்டப்பட்டார்கள், அவர்களின் கோயில்கள், காணிகளை பறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை தனது அதிகாரத்தினால் மாற்றி, முஸ்லீம் வியாபார நிலையங்களை அமைத்தேன் என்று வீராப்பு பேசுகிறார் ஹிஸ்புல்லா. அங்கே முஸ்லீம் ஊர்காவற் படை, சிங்கள இராணுவப்படை இவ்வளவையும் தாண்டி முஸ்லிம்களை புலிகள் தாக்கினார்கள் என்றால் இவர்களது இராணுவப்படை, பலம் என்ன செய்தது? ஏன் அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. புலிகளை சீண்டி மிகுதியை எதிர்பார்த்தபடி தாம் அரங்கேற்றி, புலிகளின் தலையில் கட்டி புலிகளை பெலவீனப்படுத்தும் செயல் இது. சியா முஸ்லிம்கள் இராணுவத்தோடு செய்த அடடூழியம். தமிழரை கொன்ற ஊர்காவற் படையினர் இன்னும் உலாவருகின்றனர், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். இரண்டு போலீசாரை சுட்டும் வெட்டியும் ஆயுதங்களை எடுத்து விட்டு புலிகளின் தலையில் கட்டியவர்கள். ஏன் பலரை கொன்று விட்டு புலிகளின் தலையில் இராணுவமே போட்டது. எல்லாம் வெளிவரத்தான் போகுது. வெளிப்படாமல் மறைந்திருக்கும் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மைகள் வெளிவரும் காலமிது.
-
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
ம், செம்மணியில் வெளிவரும் எலும்புத்தொகுதிகள் இராணுவத்தினரதும் சிங்கள, முஸ்லிம்களினதும் உடல்கள் என கொக்கரித்தவர்கள், ஐ. நா. மனித உரிமையாளர் தங்களை சந்திக்கவில்லையென குறை கூறியவர்கள், புலம்பெயர் புலிகள் விடுதலைப்புலிகளால் அடைய முடியாததை அடைய முயற்சிக்கிறார்கள், புலம்பெயர் புலிகள் சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுக்கிறார்கள் என்றெல்லாம் ஊழையிட்டவர்கள் இப்போ, என்ன சொல்லப்போகிறார்கள்? சோமரத்ன ராஜபக்ச பொய் சொல்கிறார் என்று சொல்வார்களா அல்லது நாட்டை காட்டிக்கொடுக்கிறார் என்று சொல்வார்களா? யார் அந்த உத்தியை எடுத்தார்கள் என்றும் சொல்லலாமே? அப்போ, இந்தக்கொலைகளை ஜனாதிபதிகளின் பணிப்பின் பேரில் இராணுவத்தினர் செய்தார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா? பொதுமக்களையே அதிலும் குழந்தைகளை இராணுவம் கொன்றுள்ளது. இதற்கிடையில் புலிகளையே கொன்றோம், மக்களை பாதுகாத்தோம் என்று பொய் வேறு. உலகம் நம்பி விட்டது என இவர் இன்னும் நம்புகிறார். ஐ. நா. மனித உரிமையாளர் ஏன் செம்மணிக்கு போனார் என்றாவது இந்த மடையனுக்கு புரியுமா? அப்படி ஒன்றும் நடக்கவேயில்லை என்று வாதாடியவர் இப்போ இப்படி கூறுகிறார். அதை சொல்ல இவர் யார்? ஏன் அதை செய்வதற்கு இவ்வளவு காலம்? எதுவுமே நடைபெறவில்லையென இழுத்தடித்தார்கள். உவன் ஒரு ரோஷமுள்ளவன் என்றால் உதோடு வாயை பொத்திக்கொண்டு இருப்பான். இல்லை அடிவாங்கியே தீருவேனென அடம்பிடித்தால், யாரும் ஒன்றும் செய்ய இயலாது. எங்கே விமல், உதயன் கம்மன்பில இன்னும் தூக்கம் கலையவில்லையோ? இப்படியான கூட்டத்தொடர் தொடங்கினாற்தான் நீங்களும் பரபரப்பாகிறீர்கள். அப்படியேதும் நடைபெறவில்லையென்றால் ஏன் இவ்வளவு பரபரப்பு, பயம்? இது ஒன்றும் இன்றைய நேற்றைய குற்றச்சாட்டல்ல சரத் வீரசேகர அவர்களே! இருபத்தொன்பது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, நிரூபிக்கப்பட்ட, ஒத்துக்கொண்ட குற்றம். ஆனால் குற்றம் செய்தவர் யாரோ, தண்டிக்கப்படுபவர் வேறொருவர். அதனாற் தான் உண்மையை வெளிக்கொணர முன்வந்துள்ளார். சோமரத்ன ராஜபக்சவுக்கு பாதுகாப்பளிக்க வேண்டியது ஜனாதிபதியின் முக்கிய கடமை. அப்போதான் தெருத்தெருவாக ஊழையிட்டு கூட்டம் சேர்க்கலாம். இந்தமுறை உதெல்லாம் நடவாது. எதுக்கும் இவர் இராணுவப்பாதுகாப்பு பெறுவது நல்லது. அப்படி யாரும் இருக்கிறார்களா?
-
300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
ராஜ பக்ஸ குடும்ப வலையமைப்பு மீது சர்வதேச விசாரணை தொடங்கப்படுள்ளதாக செய்திகள் கசிகின்றன. தந்தையார் ஈடு வைத்த வீட்டை மீட்க முடியாமல் பாராளுமன்ற உறுப்பினர்களே உதவி செய்து மீட்டுக்கொடுத்ததாகவும், மஹிந்த அரசியலில் இணைவதற்கு பணமின்மையால் பணிசெய்த இடத்தில் ஒரு வருட சம்பளத்தை கடனாகப் பெற்றே இணைந்ததாகவும் இவரது முன்னைய வரலாறு கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களிடம் கோடிகளில் பணம், வெளிநாடுகளில் முதலீடு எப்படி வந்தது? இவர்களது ஆட்சிக்காலத்தில் ஏழை சிங்கள இளைஞர்களை பலிகொடுத்து, மக்களை ஏமாற்றி சேர்த்த சொத்து. இப்போ இவை எல்லாம் வெளிவரும் நிலையில் நாமல் ஒருபுறம், கட்சி உறுப்பினர் மறுபுறம் எச்சரிக்கை விடுகிறார்கள். பொறுத்திருந்து பாப்போம் எப்போ பூதம் வெளிக்கிளம்புதென்று. அதற்கு முதல் இவர்களை காப்பாற்றும் பரிவாரங்களை கைது செய்து இவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.