Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.
  2. பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?
  3. முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு இனத்தை அழிவின், இருளின் விளிம்புக்கு துரத்தினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக மன்னிப்பு கோரவேண்டும், இனிமேல் இப்படி நடக்காது என உறுதி செய்து பொறுப்பு எடுக்கவேண்டும். அப்போதான் உண்மையான நம்பிக்கை, நல்லிணக்கம், சமாதானம் ஏற்படும். அதைவிட்டு அந்த மக்களின் நிலங்களை பறிப்பதாலேயோ, அவர்களுக்கு பொருத்தமில்லாத கட்டிடங்களை எழுப்புவதாலேயோ, அவர்களை அச்சுறுத்துவதாலேயோ, அல்லது அவர்களை குற்றம் சுமத்துவதாலேயோ இழந்த ஐக்கியதை ஒருநாளும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக சந்தேகம், வெறுப்பு, பகைமை மட்டுமே வளரும். இதை புரிந்து கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அனுபவமில்லை, மத தலைவர்களுக்கும் ஞானமில்லை, கற்றவர்களுக்கும் அறிவில்லை. நமது தலைவர்களும் புலிகளை குற்றம் சுமத்தி இல்லாத குற்றத்திற்கு மன்னிப்பு கோரி அவர்களை நிஞாயப்படுத்துவதை விடுத்து, பிரச்சனைக்கான மூல காரணத்தை விளக்கி, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தார்கள் என்பதை விளக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். அதை செய்வதற்கு வரலாறு தெரியாவிட்டால் விலகியிருக்க வேண்டும். நாம் குற்றவாளிகள் என்று அவர்களை சந்தோஷப்படுத்த முனைந்தால்; அவர்கள் தங்களை நிஞாயவாதிகளாக காட்டி நம்மை இல்லாமற் செய்ய வழி வகுக்கும். இதுவரையில் இத்தனை மக்களை கொன்றவர்கள், எங்களை விரட்டியவர்கள் ஒரு தடவையாவது மன்னிப்பு கேட்டார்களா? அல்லது தவறு நடந்து விட்டதென ஏற்றுக்கொண்டார்களா? ஆக்கிரமிப்பை நிறுத்தித்தான் கொண்டார்களா? ஒரு பக்கம் சமாதான கரம் நீட்டி பயனில்லை. தாக்குதலாளி உணரவேண்டும் உணர வைக்கப் பட வேண்டும்.
  4. சாரத்தின் ஒரு பகுதிக்கு இவ்வளவு பலம் இருக்கு என்று இதுவரை நான் நினைத்திருக்கவில்லை. அது சரி, எங்கே எப்படி தூக்குப்போட்டார்? சாரம் மட்டும் போதாதே தூங்குவதற்கு?
  5. கொரோனோவைத்தொடர்ந்து இதுவும் ஒரு தொற்று நோய் போலுள்ளது.
  6. நேற்று கம்மன்பில சொல்லியிருக்கிறார், அதாவது வெகு விரைவில் செம்மணி புதைகுழியிலிருந்து இராணுவத்தினரின் இலக்க தகடு வெளிவருமாம். எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலில் நகருகிறது என்பது உண்மை. முஸ்லிம்களை காக்க ஆயுதம் தாருங்கள், செம்மணியில் இராணுவத்தினரின் உடல்கள் என்று அடம் பிடித்தார், இப்போ இராணுவத்தகடு வெளிவருமாம். இராணுவத்தினரை வைத்து தம்மையும் அரசியலையும் பாதுகாக்க முனைகின்றனர். இராணுவ புலனாய்வினர் நாட்டை காப்பாற்றினர், இராணுவம் போரிட்டது என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கும் போது, புலனாய்வுப்பிரிவே நாட்டில் பிரிவினையையும் அழிவுகளையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டனர் எனும் ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் போது, நிலைமையை உணராமல் உளறுது சில பூச்சியங்கள்.
  7. விடுதலைப்புலிகள் மீண்டும் நாட்டில் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று பிரச்சனையை திசை திருப்புவது, அல்லது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு பிள்ளையானை போட்டுத்தள்ளி அதை புலிகளின்மேல் சுமத்துவது, ஏதோ ஒரு பயங்கரத்திடம் தீட்டப்பட்டிருக்கிறது இதன் பின்னணியில். இப்போ எதிரிகளுக்கு எதிராக நாளாந்தம் சாட்சிகளும் ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கிழக்கில் ஊர்காவல் படை, ஹிஸ்புல்லா செய்த அட்டூழியங்களும் வருகின்றன. என்ன செய்து தம்மை காப்பாற்றலாம் என்கிற நிலையில் பலர் அறிவிழந்து விசர் பிடித்த ந** போல ஓடுகிறார்கள். அதற்கு வக்காலத்து வாங்க அதன் ஏவல்களும், இந உணர்வாளர்களும் சிலதை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். புலிகள் சிறாரை போராட்டத்தில் இணைத்தார்கள் என்று குற்றம் சுமத்தியவர்கள், செம்மணியில் பொம்மைகளோடும் பள்ளி பைகளோடும் இணைந்த சிறுவர்களின் உடல்களை இராணுவத்தினரின் உடல்கள் என்று உரிமை கொண்டாடுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளலாம்? சிங்களம் எது வேண்டுமானாலும் சொல்லும் செய்யும். அதனை சார்ந்தவர்களும் அதனை ஆமோதிப்பார்கள். இங்கு வயது முக்கியமல்ல அதன் பின்னால் உள்ள செயலே முக்கியம்!
  8. றக்பி வீரரின் கொலையோடு தொடர்பு பட்ட, சாட்சியங்களை அழித்த போலீஸ் அதிகாரியே நோயினால் இறந்ததாக முடித்தார்கள். அதனோடு தொடர்பு பட்ட புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் தூக்கில் தொங்கினார். தாக்குதலாளி ஒருவரை காப்பாற்ற கொலைசெய்யப்பட்டாரா அல்லது அவரும் சேர்ந்தே தான் கொலை செய்தாரா என்பது வெகு விரைவில் வெளிவரும். நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. அன்று அவை காதோடு காதாக பேசி செய்யப்பட்டவை. இன்று எல்லாமே பகிரங்கப்படுத்தப்படுகிறது. இதை அனுரா முடித்து வைக்கவேண்டும் இல்லையேல் அனுராவும் இலக்கு வைக்கப்படுவார்.
  9. தாம் குற்றச்செயலுக்கு பயன்படுத்தும் தமிழருக்கு, இராணுவ புலனாய்வு என்கிற பெயரில் சம்பளம் வழங்கி, இப்படியான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். டக்கிளஸ் கூட இப்படி சிலரை பயன்படுத்தி அவர்களின் பணத்தில் பல லட்ஷங்களை கொள்ளையடித்திருக்கிறார். சுரேஷ் சாலேயே இந்த வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். இப்போ பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தாறுமாறாக ஓடி தாங்களாகவே மாட்டுப்படப்போகிறார்கள். சுரேஷ் சாலேயை கைது செய்வதற்கு பலமான சாட்சிக்காக காத்திருக்கிறார்கள். அதற்கிடையில் சுரேஷே பலமான ஆதாரத்தை கொடுக்கப்போகிறார் போலுள்ளது. அவன் கைது செய்யப்பட்டால், ராஜபக்ச குடும்பம் சிக்கும். அதற்கிடையில் ஏதோ ஒரு அனர்த்தம் நிகழ்த்த முயல்வார்கள், முடிந்தால் சாலேயின் கதையே முடியலாம்.
  10. அருண் சித்தார்த் சொல்லியிருக்கு, கிழக்கு முஸ்லீம் படுகொலைகளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், புலம்பெயர் புலிகள் தண்டிக்கப்படவேண்டுமாம். ஆனால் இராணுவத்துடன் இயங்கும் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். அதாவது இராணுவத்தோடு இயங்கும் முன்னாள் போராளிகள், இராணுவம் எனும் பெயரில், முன்னாள் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லது இராணுவத்தின் தாக்குதலில் புலிப்பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் அப்பப்போ தமக்கு ஆதரவாக அல்லது தமக்கு நேரும் விசாரணைகளை திசை திருப்ப மோதல்களை உருவாக்க இப்படியான தமிழரை பயன்படுத்த இவ்வாறு செயற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தாங்களாக சிந்திக்கவோ, இயங்கவோ முடியாத நிலை. ஆகவே முன்னாள் புலிகளை சாட்டி செய்ய்யப்படும் குற்றச்செயல்களுக்கு இராணுவ புலனாய்வே பொறுப்பெடுக்க வேண்டும். அதோடு இவர் முன்னாள் புலி, தாக்குதலை நடத்தவே வந்தார் என்று சொன்னால்; வடக்கிலுள்ள இராணுவம் அதற்கு பொறுப்பெடுத்து வெளியேற வேண்டும். அவர்களால் எந்தப்பயனுமில்லை, அவர்களே முன்னாள் புலிகளை போதைப்பொருள் கடத்தவும், இப்படியான தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம். தமிழரை கொத்துக்கொத்தாக அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் தர்மம் அவர்களை எந்த வழியிலேனும் தண்டிக்கும். அப்போ யாரும் யாரையும் குற்றம் சாட்டி கலவரங்களை ஏற்படுத்தவோ, ஊழையிடவோ முடியாது.
  11. இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை, அப்படி கதைப்பவர்களுக்கு எதிராக சட்டம் பாயும் என்று ஒரு பகுதி அச்சுறுத்துகிறது. இன்னொரு பகுதி அதற்கான ஆதாரங்கள் போதாது நிறுவுவதற்கு என்று வாதாடுகிறது. இத்தனைக்கும் காரணமான தாய் நாடு என்று இன்றும் நம்மவர் நம்பும் நாடு மௌனம் காக்கிறது. ஆனால் எங்கோ இருந்து ஒரு நாடு, இங்கு நடந்தது இனப்படுகொலைதான், தமிழரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று உரத்து சொல்கிறது. வழமைபோல் இது தேர்தல் உத்தி என்று கடந்து போகுமா இலங்கை?
  12. இந்த சொறியனுக்கே இலங்கை சட்டம் நீதியில் நம்பிக்கை இல்லையென்றால், இவற்றால், இவர்களால் பாதிக்கப்பட்ட நமக்கு இந்த நீதித்துறையில், நீதி கிடைக்குமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்வதேசம் எப்படி உள்ளூர் விசாரணையை சிபாரிசு செய்யவோ, ஊக்கப்படுத்தவோ முடியும்? அனுர இந்த விசாரணைகள் மூலம் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி தமது செல்வாக்கை மீள எழுப்பவும், தாமே யுத்த குற்றங்களை விசாரிக்க முடியுமென நிரூபிக்க முயற்சிக்கிறார். அவரால் இவர்களை விசாரித்து தண்டிக்க முடியுமென்றால், சர்வதேசம் தண்டிப்பதற்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்? அடுத்த ஐ .நா. தொடருக்கு முன் தடபுடலாக விசாரணையை ஆரம்பித்து, தம்மால் முடியுமென காட்ட முனைப்பு நடைபெறுகிறது. ஆனால் தண்டனை என்பது சாத்தியமா? அது இருக்க, தாம் அகப்படுமுன் கத்தி கூச்சல் போட்டு விசாரணைகளை தடுத்து விட்டால், தாம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குற்றவாளிகளின் கற்பனை.
  13. எங்கள் உறவுகளில், தெரிந்தவர்கள், ஊரவர்கள் என்கிற வட்டத்தில் கூட பலர் சிங்கள பெண்களை, ஆண்களை செய்து வாழ்ந்தும் கெட்டும் இருக்கிறார்கள். இங்கு களத்தில் கூட சிலர் இருக்கலாம். அதில் சிங்களத்துக்கு அநிஞாயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே அதிகம். யாருக்காவது வக்காலத்து வாங்கலாம், ஆனால் நீதிக்கு புறம்பாக, பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது சரியல்ல, வக்கிரம்.
  14. இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.
  15. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள்; தங்கள் போரினை நிஞாயப்படுத்தி, மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, ஆதரவைப்பெறவும், சர்வதேச நாடுகளிடம் நிதி, அனுதாபம், ஆலோசனைகளை பெறவும் நிகழ்த்தப்பட்டன. பொன்சேகாவே கூறியிருந்தார், தன்மீதும் கோத்தா மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டவும் போரின் தாக்குதலை அதிகரிக்கவும் செய்யபட்ட தந்திரம் என்று. இன்னும் பல எதிர்பார்க்கிறோம்! இதில் முஸ்லிமகளின் பங்கும் வெளிவர வேண்டும். வானுயர உயர்த்தப்பட்டு பாராட்டப்பட்டவர்கள் பாதாளம் வரை தாழ்த்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த அழிவு வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். இல்லையேல், மௌனமாக்கப்பட வாய்ப்புண்டு. இன்னும் சிறிது நேரத்தில் உதயன் கம்மன் பில கூப்பாடு போட்டுகொண்டு வருவார் சிங்களத்தை துயிலெழுப்ப.
  16. இந்தியாவில் ஒரு நாளைக்கு பாலியல், வரதட்ஷனை, பெண்பிள்ளை பெற்றதால், கள்ளக்காதலால் இறக்கும் பெண்களின் பதியப்பட்ட தொகை அதிகரித்து வருகிறது. பதியப்படாமலேயே எவ்வளவோ இருக்கிறது. நேற்று ஒரு செய்தி; கர்நாடகாவில் தர்மசாலா எனும் இடத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிறு பெண்களின் உடல்கள் அறுநூறு அல்லது அதற்குமேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு தேவஸ்தானத்தில் நடந்த படு பயங்கரம். மோடி எங்கு கைகூப்பி, யாரை வணங்குகிறாரோ, அங்கெல்லாம் பாலியல் துஸ்பிரயோகம், கொலை, புதைப்பு.
  17. சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு. அல்வாயனுக்கு ஒரு பதிவிட்டிருந்தேன். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது." நான் யாரையும் பிடிக்கவில்லை என்று சிலவற்றை சுட்டிக்காட்டி ஒரு சொல்லில் எழுதினால், ஆதாரம் இருக்கா? வெறும் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வார்கள். ஆதாரங்களை சேர்த்து எழுதினால், அதற்கு மறுத்து ஆதாரம் வைக்க தெரியாவிட்டால், முடியாவிட்டால் பந்தி எழுதுகிறேன் என ஒரு குற்றச்சாட்டு என்மேல் உண்டு. அதனாலேயே ஒரு சில வரிகளுடன் விட்டேன். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் நன்று என்று இன்று தெரிகிறது. கிழக்கில் இத்தனை கொடூரங்களும் யாரால், ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதும் மெல்ல மெல்ல திரை விலகுகிறது. அன்று, தாம் பதவியை கைப்பற்ற முஸ்லிம்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இன்று புலிகளை சாட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். துப்பாக்கியையும் கொடுத்து, போலீசாருக்கும் அறிவித்து, நான் நினைக்கிறன் பயத்தில் தடுமாறுகிறார்கள் என்று. அன்று அனுரா சிறிய பையன். இவர்களின் திரிப்புகளை உண்மையென நம்பியிருக்கலாம், இப்போ வெளிவருபவை உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றன. அன்று பூட்டிய அறைகளுக்குள் காதோடு காதாக பேசியவை, ரகசியமாக செய்தவை இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இனிமேலும் பித்தலாட்டம் ஆட வெளிக்கிட்டால்தாங்களாகவே பொறியில் சிக்குவார்கள். கிழக்கில் முஸ்லிம்களை பலிகொடுத்து, தமிழரை பலி எடுத்து ஆடிய ஊழியாட்டம் வெளியில் வர இருக்கிறது. எத்தனை பலம், படை இருந்து, தமிழரின் நிலங்களை, உயிர்களை, கோயில்களை பறிக்க அதிகாரம் இருந்ததென்றால்; அந்த முஸ்லிம்களை காக்க முடியவில்லையா? அப்போ எந்த அதிகாரத்தினால் இதை சாதித்தேன் என்று சவால் விட்டார் ஹிஸ்புல்லா? முஸ்லீம் அரபு நாடுகளிடம் முதலில் உதவி கேட்டு சென்றபோது முஸ்லிம்களுக்கு அங்கு ஒரு ஆபத்துமில்லை ஆகவே உதவி செய்ய தயங்கிய அந்த நாடுகளிடம், புலிகள் முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்கிறார்கள் ஆகவே உதவி செய்யுங்கள் என்று மீண்டும் போனால்; அங்கு என்ன நடந்திருக்கு என்று சொல்லாமலே புரியும். எந்த நாடும் இந்த நாட்டில் முதலிடலாம், வியாபார, கல்வி, சமய கருமங்களை ஆற்றலாம். ஆனால் தமிழருக்கு இடமில்லை, அவர்களை அழிக்க உதவுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்றால்; இவர்களின் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்லலாம்? எத்தனையோ சாட்சிகளை கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் சிலருக்கு அதிகாரிகள் வற்புறுத்தி பொய் சாட்சி சொல்ல வைத்தார்கள் என்று கதை எழுதினார்கள். ஒன்றை மறைக்க பல கொலைகளை அஞ்சாமல் செய்து காரியத்தை சாதித்தார்கள். இப்போ அதற்கான விலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும், விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள், ஜனாதிபதி போன்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைத்து இவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். இந்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது, பழைய கொலைகலாச்சாரத்தை அரங்கேற்றுவார்கள். காலம் எப்படி சுற்றி வளைத்திருக்கிறது பாருங்கள்!
  18. ஆமா.... துல்லியமான தகவல் வழங்கி, எதை தடுத்தீர்கள்? தகவல் கிடைத்தும் தடுக்கத்தவறியவர்கள் குற்றவாளிகளே. அது கூடத்தெரியாத இதெல்லாம் வக்கீலாமெல்லே! இந்த இரத்தக்காட்டேரி ஏன்இப்போ பதறுது? சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்படவில்லை, அவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்றார், இப்போ இப்படி புலம்புகிறார். ஒருநாள் வக்கீல் சட்டையை மாட்டி விட்டு சட்டம் தெரிந்ததுபோல் அலப்பறை பண்ணக்கூடாது. ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுவர், வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாரா என விசாரிக்கும்போது எல்லாமே வெளியில் வரும், சம்பந்தப்பட்டவரின் குற்ற வரலாற்றை பார்க்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். ஏன் கிரிசாந்தி வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் மற்ற கொலைகள் பற்றி தெரிவிக்கவில்லையா? இவர் எல்லாம் சிறைக்குள் போய் குற்றவாளியை சந்திப்பதற்காக வக்கீல் சட்டை மாட்டுபவர். ரொம்பதான் துடிக்கிறார், சிறைக்கு போவதற்காகவோ?
  19. முன்னர் பிரித்தானியாவில் சுரேன் என்று அழைக்கப்படுபவர் சுமந்திரனின் எடுபிடியாக இருந்து மூடிய அறைக்குள் ஆலோசனைகள் நடந்தன. இப்போ, கட்சியை மாற்றி அமைத்ததுபோல் அந்த அணியை மாற்றி அமைக்க சென்றிருப்பார் போலுள்ளது. ஊரில், தெருக்கோடியெங்கும் கோட்டு ஸூட்டோடு காட்சியளித்து அலைபவர், அங்கே சமயலறையில் சமையற்காரன், தனது சமையல் பற்றி விளக்குவது, விவரிப்பதுபோல் ஒரு படம். எப்பிடியிருந்த சுமந்திரனா இப்படி?
  20. செம்மணி மனித எலும்புகள் வெளிக்கிளம்பியதுதான் தாமதம், சகோதரத்துவமும் முளை விடுகிறது. இது ஒன்றும் கிழட்டுப்புலி, தருப்பை காப்பை ஏந்திய கதையில்லைத்தானே? இனிமேல் சண்டித்தனம் காட்ட முடியாதென்றால் அணைத்து குத்த வேண்டியது. இது இனத்தின் பாரம்பரியம். இத்தனை அழிவுகள் நம் இனத்துக்கு நடக்கும்போது, இவர்களும் நாட்டில், பாராளுமன்றத்தில், பதவிகளில் இருந்து ஆதரவு கொடுத்திருந்தார்கள். தமிழருக்காக அனுதாபத்தை கூட வெளிப்படுத்த வில்லையே இந்த செம்மணி விவகாரம் வெளிவரும்வரை. ஐ .நா வில் அப்படியொன்றும் நடக்கவில்லை, இனஅழிப்பு என்று யாராவது கதைத்தால் சட்டம் பாயும் என்று வேறு அச்சுறுத்தினார்களே? நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும் எங்கள் நிலங்களை மீள அளியுங்கள், தடைகளை நீக்குங்கள், தேவையற்ற விகாரைகளை அகற்றுங்கள், நமது நிலங்களை ஆக்கிரமித்திருந்து சமூக சீர்கேடுகளை உருவாக்கும் இராணுவத்தினரை மீளப்பெறுங்கள், சம உரிமையை தாருங்கள், உங்களை நாங்கள் நம்புகிறோம். இங்கு ஒன்று, தெற்கில் வேறொன்று கூறி இரு பகுதி மக்களையும் ஏமாற்ற வேண்டாம்.
  21. "இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை."எங்கும் நாம் சொல்லும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் திருமணங்கள், நாங்கள் சொல்லும் காரணங்களுக்குள் அடங்காது. எமது சமூகத்திலும் சாதி, சமயம் பாராமல், சீதனம் வாங்காமல் தாங்களே விரும்பியும், பெற்றோர் பார்த்தும் செய்துவைத்த திருமணங்கள் உண்டு. அப்போ சிலர் சொல்லிக்கொண்டனர்; பெண் கிடைக்காததால் அவ்வாறு செய்து கொண்டனர், ஆணில் ஏதோ குறையுண்டு. இவ்வாறு பல காரணங்கள் சொல்லிக்கொண்டனர். எனக்கு தெரிந்து அப்போது போலீசாக இருந்த ஒரு சிங்களவர், தாதியாக பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண்ணை விரும்பி திருமணம் செய்திருந்தார். அவர் ஒருதடவை தன் குடும்பத்தை பார்த்து குடும்ப சொத்தில் தனது பாகத்தை பெற சென்றிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டார். அன்று போர் நடக்கும் போது, கோத்தா சொன்னார் என நினைக்கிறன். "தமிழ் இளைஞரின் உடல்கள் கடல் மீன்களுக்கு, பெண்கள் உடல் சிங்கள இளைஞருக்கு." போரிலும், திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள், பறிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், நிலங்கள், பெண்கள் வேறு வழியில்லாமல் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறது. நாம் ஏதோ நல்ல மாற்றம் நிகழ்ந்து விட்டதாக நினைக்கிறோம். ஏன் சிங்கள தம்பதியினர் விவாகரத்து பெறவில்லையா? கள்ள தொடர்பு வைத்து காதலியையோ மனைவியையோ கொலை செய்யவில்லையா?
  22. முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
  23. இன்றைய பரிதாப நிலை! புலிகள் மீள எழுகிறார்கள் என காண்பிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா?
  24. அவ்வாறே வடக்கில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் குரல் எழுப்பினால் தாழ்ந்து போகமாட்டீர்களே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.