Everything posted by satan
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னமே சிவஞானம் டக்கிலஸை குறிவைத்து, ஆயுதம் ஏந்தியவர் எல்லோரும் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கட்டியம் கூறும்போதே நினைத்தேன், டக்கிலஸை விட இவர் ஒருபடி கீழ் என்று. உண்மையிலேயே இவர்கள் ஈ. பி. டி. பியோடு இணைவதுதான் பொருத்தமானது. வீட்டை உடைத்தாயிற்று, அங்கே குடியேறுவதுதான் இவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். சிங்கள எஜமானாரோடு கூடிக்குலாவி, அவர்களுக்கு வாக்கு போடும்படி மக்களை வழிநடத்தியவர்கள், அனுரா மட்டுமே ஏதோ சிங்களகட்சி அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று கூட்டம் போட்டு கத்திவிட்டு, பின் அவர்களோடேயே டீல் போட்டு, சரிவராத சந்தர்ப்பத்தில் டக்கிலஸை வரவேற்கினம். வெட்கம், தன்மானம் கெட்டவர்கள். இந்த மனிதனுக்கு வயதிற்கு தகுந்த அறிவுமில்லை, அனுபவமுமில்லை, பட்டறிவுமில்லை. வெறும் வெத்து.
-
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் - மஹிந்த ராஜபக்ஷ
இவ்வளவுகாலமும் போர் வெற்றிக்கதைகளைப்பேசியவர், சற்று மாற்றிப்பேசுகிறார். அனுராவின் பேச்சை கேட்டு சுருதி மாறிவிட்டதோ? அதை எப்படி இவர் சொல்லமுடியும்? போர் கனவிலேயே இருக்கிறார்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.
-
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி
எல்லாம் சரி. அந்த போராட்டம் எதனால், யாரால்.எழுந்தது என தெளிவு படுத்த மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? போராட்டத்தின் மூல வேரை அறிந்து அகற்றாவிட்டால், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் சமாதானம், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது. சாந்தி, சமாதானத்தை அழித்த விழாவை கொண்டாடிக்கொண்டு, அதுபற்றி பேசுவது தங்களை தாங்களே ஏமாற்றுவதாகும். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் ஜனாதிபதி என்று சொல்ல தகுதியற்றவர். இல்லை, தங்கள் பதவிகளை தற்காத்துக்கொள்ள அந்த ஏழை இளைஞர்கள் பலி கொடுக்கப்பட்டனர். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர்புரிந்திருந்தால், உயிர் துறந்திருந்தால், இன்று போர் வெற்றி விழா அல்ல சமாதானத்தின் விழாவாக இருந்திருக்கும். எத்தனை பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளின், கணவரின், தந்தையின் இறுதி உடலை காணாமல் அவர்களுக்கு என்ன நடந்ததென அறியாமல் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அது அந்த இறந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம். ஆமா, வெற்றி நாயகனின் உரை இன்னும் வெளிவரவில்லையா? இதற்குமேல் அவரால் என்ன உரையாற்ற முடியும்?
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
பாவம் இவர்! பதவிக்காக எப்படியெல்லாம் ஆமா போடுகிறார். கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள பதவியாசை விடவில்லை. ஆமா, ஆமா என்று எல்லாப்பக்கமும் தலையாட்டுவார், பின்னர் எல்லோராலும் கைவிடப்படுவார்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தமிழர்களை அழித்து அவர்களை ஏதிலிகளாக்கும்போது இந்தியா இதை உணர்ந்திருக்க வேண்டும். அடைக்கலம் கொடுக்க முடியாதவர்கள் ஏன் அவர்களை அழிக்க தூண்டினர், உதவி செய்தனர்? எங்களது இன்றைய கையறுநிலைக்கு, இந்தியா, பிரிட்டன், ஐ.நா, இன்னும் சர்வதேச நாடுகளே பொறுப்புக்கூறவேண்டும், பொறுப்பெடுக்க வேண்டும். இந்த லட்ஷணத்தில காசா மக்களை லிபியாவில் குடியேற்ற போகிறாராம் ஒருவர். அப்போ நினைத்தேன், தமிழரை இந்தியாவில் குடியேறுங்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்று. அதற்குள் இந்தப்பதில் கிடைத்துள்ளது. அவர்களை தங்கள் நாட்டில் அமைதியாக வாழ விட்டிருந்தால், அவர்கள் ஏன் பிறநாடுகளில் தஞ்சமடைய வேண்டும். தமது நாட்டில் இருபத்தாறு பேர் கொலைசெய்யப்பட்டபோது, போர் முரசு கொட்டியவர்கள், லட்ஷம் பேரை காலத்திற்கு காலம் கொன்றபோது தம்மைப்பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை கூடி அழித்தது எந்த வகையில் நிஞாயம்? அதற்கும் இந்த நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும்!
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், எத்தனை கனவுகளோடு அமெரிக்காவுக்கு போனார், சொல்லாமல் கொள்ளாமலே ஓடி வந்ததனால் தப்பிவிட்டார். தனது குடும்பத்துக்கும் தடை விதித்தது பெரிய கவலை. இதுவா... இன்னும் இருக்கு, அதை அவர் உணரவில்லை. தன் குடும்பம் பலியாகும்போது உணர்வார்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
கட்சி பேதம் மறந்து சிங்களம் ஒன்று சேருகிறது. பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களும், சட்டாம்பியும் கொடுத்த ஆதரவிற்கு கைம்மாறு. எந்தக்கட்சியும் வாக்குக்காகவே தமிழரை பயன்படுத்துகிறது.
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், சொந்த அப்பாவி மக்களை கொன்றது கொண்டாடப்படவேண்டியது?
-
தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
கேட்ப்போம் அனுரா என்ன உரையாற்றுகிறார் என்று.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
சிங்களம் எப்போதும் தமிழரை ஏமாற்றுவதிலும், அடிமைப்படுத்துவதிலும், தமிழரை வெற்றிகாண்பதிலும் என்றும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால் நம்மவர் மட்டும் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்?
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு.
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
முட்டாள் பெரியண்ணனின் சமயோசித புத்தி. இவர் எத்தனை நாளைக்கு அதிகாரம் செலுத்த முடியும்? அதன் பின் குடியேறியவர்களின் நிலை என்னாவது? தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடைபோடும் இவர், இன்னொரு நாட்டில் எப்படி இவர் முடிவெடுக்க முடியும்? முதலாவது பாலஸ்தீனியர்கள் லிபியாவில் குடியேற விரும்புவார்களா? அல்லது அவர்கள் நாட்டை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதற்கு ஏற்கெனவே போட்ட திட்டமா இது?
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
இதிலும் தோல்விதான்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் முதலொரு தடவை ஆர்னோல்ட்க்கு எதிராக மணிவண்ணனை பாவித்தார். இப்போ, இவரை சிறிதரனுக்கு எதிராக இறக்கி குடைச்சல் கொடுக்க விழைகிறார். பாராளுமன்றத்தேர்தலின்போது பரப்புரைகளில், கொலைகாரர், ஆயுதக்காரர் என்று சுமந்திரன் இவர்களை விமர்ச்சித்திருந்தார். டக்கிளசுக்கும் தூது விட்டவர் சுமந்திரன். இவர் தனது நன்மைக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவார். கொள்கை, நேர்மை இல்லாதவர். நான் ஆயுதப்போரை ஆதரிக்கவில்லை என்றவர், இப்போ யாரோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழி பறிக்கும் ஓநாய் இவர்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
லஞ்ச ஊழலை தடுப்பதற்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களாமே? இது இவர்களுக்கு தெரிய வரவில்லையா? அல்லது அவர்களுக்கும் லஞ்சம் கொடுப்போம், வாங்குவோம் என்கிறார்களா. நீங்கள் நேரம் மினைக்கெட்டு இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்? சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள் என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
தரமான மீனை எப்படி பார்த்து வாங்குகிறது என்கிற யோசனையை தரப்போகிறார் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். அங்க பாத்தால், ம்ம்..... தனது மீன் விற்பனையியாளின் வசன அலங்காரத்தை கூறுகிறார். இவர் மீன் சந்தைக்கு போகும்போது மனையாளும் கூடப்போவது நல்லது. மனையாள் திட்டினால் பொறுக்காது, மீன்வியாபாரி திட்டினால் ரசிப்பு. வீட்டுக்காரி சரியில்லை.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அது சரி, சில நாட்களுக்கு முன், இவரேதான் அறிக்கை விட்டிருந்தார். போரில் சம்பந்தப்படாத சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது தனது தந்தை மிகவும் கவலையடைந்திருந்தார் என்று. மாற்றி மாற்றி கதைப்பது இவர்களுக்கு கைதேர்ந்த கதை. அப்படி இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால், ஏன் இவரின் தந்தை தன்னை மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்? இன்னும் ஐ. நாவுக்கு படையெடுக்கிறார்கள்? அதே! போர்குற்றவிசாரணையை மறுத்துக்கொண்டு, நாம் நல்லவர்கள் என்று அலம்புவதை விட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து உங்களை நிரூபியுங்கள்.
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
அதே தான்! அந்தக்கட்சியை இல்லாமல் செய்ய ஒருவர் படாத பாடு படுகிறார், இதற்குள் இவர் ஒருவர் சமிக்கை காட்டுகிறார். உள்ளதே நாலு ஆசனம், அரசாங்கம் இவரை திரும்பியும் பாக்கவில்லை. இதற்குள் இவரின் அறிக்கை வேறு. சீசீ.... இந்தப்பழம் புளிக்கும்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்போ புரிகிறதா மக்கள் ஏன் தென்பகுதி கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று? கெஞ்சி கூத்தாடி வாக்கு பெறுவது, பின்னர் ஆதிக்கம் செலுத்துவது. சுமந்திரனுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, வாக்களித்த மக்களுக்கே தாங்கள் விரும்புவோரை நியமிக்க அதிகாரமிருக்கிறது. சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றாவிடின், கட்சி மக்களிடமிருந்து நிராகரிக்கப்படும்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
கனடாவில் போன வருடம் இலங்கையர் துள்ளிக்குதித்து போது, கனேடிய அமைச்சர் ஒருவர் கூறியது, எங்களுடைய நாட்டின் சட்டத்தில் தலையிட முடியாது, வேண்டுமென்றால் கொழும்பில் போய் செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களின் எதிப்புக்குரல் அடங்கிவிட்டது. வழமையாக கனேடிய அமைச்சரை வரவழைத்து தமது கண்டனங்களை தெரிவிப்பவர்கள் அதையும் செய்ய மறந்து விட்டனர். தமது நாட்டு சட்ட திட்டங்களை எதிர்ப்போரை அவர்கள் நாடுகடத்தலாம், அந்த உரிமை, எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் இலங்கைக்கு கிடையாது.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
ம்.... வெளிநாடுகளில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரால் நடத்தப்படும்போதெல்லாம், சில இலங்கையர்கள் அவர்களை அச்சுறுத்துவதும் குழப்புவதும் அவர்களுக்கெதிராக கூப்பாடு போடுவதும் வழமை. கடந்த தடவை வழமைபோன்று அவர்கள் பிரச்சனை செய்தபோது, இலங்கையின் பாணியிலேயே பதில் வழங்கப்பட்டது. இந்த பேச்சை கேட்டதும் தாம் இலங்கையர் என்பதை மறைத்து, ஒதுங்கியிருக்க வேண்டும். அல்லது தாங்களும் சேர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். இது சிங்கள, பவுத்த நாடு தமிழரெல்லாம் வந்தேறு குடிகள் என்று சண்டித்தனம் காட்டுபவர்கள், குடியேறிய நாடுகளிலும் தங்கடை சண்டித்தனத்தை விடவில்லை. கனடாவைப்பின் பற்றி எல்லா நாடுகளும் இந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். காசை கொடுத்து தமிழரின் போராட்டங்களை தடுக்க களமிறக்கப்பட்ட கூலிப்படைகள் கைதும் செய்யப்படலாம் குழப்பம் விளைவித்தால்.
-
பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன்
இப்போ விநயமான வேண்டுகோள் வைப்பார், தன் காரியம் முடிந்தவுடன் அதிரடியாக விசராட்டம் ஆடுவார். எப்படியும் சிறிதரனை துரத்தவே பார்ப்பார். சுமந்திரனோடு கூட்டுச்சேர்கிறவர்கள் மூட்டைப்பூச்சியோடு உறங்குவதற்கு சரி.
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் கொண்டாடும் கைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவாராம், சில சமயம் போதை வஸ்து கடத்தியோர், ஆடு, மாடு கடத்தியோர், களவெடுத்தோர், தங்கச்சங்கிலி அறுத்தோர், பெண்களோடு சேட்டை விட்டோர் என்பவரும் இதற்குள் அடங்கலாம். தமிழ் அரசியல் கைதிகளே இல்லையாம் இலங்கை சிறைச்சாலைகளில். ஒருவேளை, அவர்களையும் காணாமல் செய்து போட்டார்களோ தெரியவில்லை.