Everything posted by satan
-
யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு இடம்பெறவில்லை - இராமலிங்கம் சந்திரசேகர்
இவர் ஒருபக்கம், சுமந்திரன் மறுபக்கம் வெல்வோமென சொல்லிக்கொள்கின்றனர். நிராகரிக்கப்பட்ட கட்சிகள் நீதிமன்றம் போய் நிஞாயம் கேட்ப்போம் என்கின்றனர். யாரென்றாலும் மக்களின் நிலையறிந்து அவர்களின் தேவைகளுக்காய், விடுதலைக்காய் உழைக்கின்ற உண்மையானவர்கள் வென்றால் மக்களுக்கு நலம்.
-
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
பட்டலந்த விசாரணையை கேட்டால், தமிழர் பிரச்சனையை தூக்கி தப்புவது, தமிழர் இனப்படுகொலை விசாரணை கேட்டால், பட்டலந்த விசாரணையால் மறைப்பது இனிமேல் எடுபடுமா என்பது தெரியவில்லை? எல்லாமே மனிதப்படுகொலை, அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பலாத்காரமாக பறித்த கொடூரம். காலம் பொறுத்திருந்து சுற்றிவளைக்கும். இன்று ரணில் சொல்லியிருக்கிறார் அதாவது, "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள், சம்பந்தப்பட்டவர் யாரென்றாலும் தண்டியுங்கள், சர்வதேச பொறிமுறையை வெறுக்கிறேன், காரணம் அவர்களின் இரட்டைபொறிமுறை பலஸ்தீனத்துக்கு ஒரு முறை, உக்ரேனுக்கு வேறு ஒரு முறை, இதற்குள் நாம் அகப்பட விரும்பவில்லை, உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்குங்கள்." என்கிறார். யாரை யார் தண்டிப்பது? பலமுறை நாட்டின் தலைவராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஏன் அதை செய்யவில்லை? அந்த மக்களை பாதுகாக்க ஏதாவது சட்டங்களை கொண்டு வரவில்லை? இப்போ ஏன் இந்த கரிசனை? யார் செய்ய வேண்டுமென்கிறார்? தன்னை காப்பாற்றவா? இனி நினைத்தாலும் நடந்து முடிந்ததை மறுபடியும் போய் திருத்த முடியாது. எழுதியது எழுதியதுதான் உங்கள் விதியை. இளமை, அதிகாரம் இருக்கும்போது மற்றவர்களின் உரிமையை பறித்து ரசித்தீர்கள். இப்போ, உங்களை காப்பாற்ற நாடகம். அப்போ நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? எவற்றை மக்களுக்கு வழிகாட்டினீர்கள்? அதையே அவர்களும் தொடர்வார்கள். நீங்கள் எதுவும் சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தரப்பட்ட காலம் முடிந்தாயிற்று.
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
ம்.... நாட்டின் சட்டங்களும், நடைமுறைகளும், விளக்கங்களும் விசித்திரமானவை, நகைச்சுவைக்குரியவை. வடக்கில் சுமந்திரனை தவிர யாருக்கும் சட்ட புலமை இல்லை என்பவர்களுக்கு, சுமந்திரனின் சட்ட புலமையை பரிசீலிக்கவும் திறமையில்லை, சட்டத்தை வாசித்தறியவும் தெரியவில்லை. தொழிலுக்கு தகுதியற்றவர்களை நியமித்து மக்களை முட்டாள்களாக்குவது.
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
அண்மையில் ஒரு பௌத்த பிக்கு தமிழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதாவது திஸ்ஸ மகா விகாரை பிரச்சனைக்கு தன்னால் தீர்வு காண முடியுமென்றும், வடக்குமக்கள்பௌத்தத்தை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்னொரு பிக்கு கூறியிருந்தார், திஸ்ஸ மகா விகாரையை தமிழ் பௌத்த அமைச்சிடம் கையளிப்போம் என்று. இவர்கள் தமிழ் பௌத்த மதத்திற்கு மக்களை மாற்றி, பரப்ப போகிறார்கள். உண்மையை எடுத்துரைக்க மாட்டார்கள், நாட்டில் அமைதியை ஏற்பட விடமாட்டார்கள்.
-
லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
நடத்துனரா சாரதியா என்பதா இப்போ பிரச்சனை? தமிழர் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கிறது. இது நமக்கும் வெட்கக்கேடு.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
இவருக்கு பதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்தவர்கள் யாரென்று வெளியில் வந்தால், அது இன்னும் வெட்கக்கேடு. அதையும் சரி என்று வாதாடுவார்கள். நாடு முழுவதுமே வெட்கக்கேட்டால் நிறைந்துள்ளது. இவர் அதிகாரத்தில் இருக்கும் போது அளித்த சாட்சியங்கள் மீண்டும் விசாரணை செய்யப்படவேண்டும், இவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவரது நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படவேண்டும். இவர் ஒன்று தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொலை செய்யவும் படலாம். இவருக்கு உதவியவர்கள் யாவரும் விசாரணை, தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இவர் முறையாக மன்றில் ஆயராகி தன் பக்க நிஞாயத்தை எடுத்துக்கூறியிருந்தால்; இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. இவர் மறைந்தது, இவருக்குப்பின் நிறைய சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றன.
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
ஏன் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென இவர் கேட்கிறார்? கட்சியை உடைத்த இவருக்கு அதை கேட்கும் அருகதை இருக்கிறதா? இருக்கிற கொஞ்ச நஞ்சஉணர்வுகளையும் இல்லாமல் செய்வதற்கா? அவர் வெற்றியடைய மாட்டார் என்பது அவருக்கே நன்றாகத்தெரியும்.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
லஞ்சமாக மதுப்போத்தல்களை கேட்டிருப்பாரோ பதவியில் இருந்தபோது. இவர் பதவியில் இருந்தபோது, பல சமூக விரோதிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளாராம், அதனால்சிறையில், சிறைக்கைதிகளால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாம் என இவரது சட்டத்தரணி வாதாடியுள்ளார். இவரே ஒரு சமூக விரோதி, சட்டத்தை மதித்து காப்பாற்ற வேண்டியவர் சட்டத்திற்கு தண்ணி காட்டியவர், சட்டத்தை மதிக்கத்தெரியாதவர், இவர் யாருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்திருப்பார்? மதுப்போத்தல் கொடுக்க மறுத்தவர்களுக்கு? சட்டமா அதிபரின் சொலிசிற்றார் திலீப் சொல்கிறார், இவர் செய்த கர்மா வினைதான் இவரை பிடித்திருக்குதாம். அப்போ நாடுமுழுவதும் கர்மவினை நிறைந்திருக்கு, அவர்களை எப்போ அது பிடிக்கும்?
-
அவளைத்தொடுவானேன்....???
குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காதாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன வாழ்க்கைத் தத்துவமும் அதோடு ஒத்துப்போகிறது.
-
மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
ஒருகாலம் நீதிமன்றத்தை ஆட்டிப்படைத்தவர்கள், இப்பவும் நீதிக்கு மாறாக கோரிக்கை வைக்கிறார்கள்.
-
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!
எல்லா தமிழ்கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கோரிக்கையும் விட்டிருக்கிறார். எல்லோருக்கும் கண்கெட்டபின்தான் ஞானம் பிறக்குது. அடுத்தமுறை தமிழரசுக்கட்சி இப்படியொரு கோரிக்கையை வைக்க சாத்தியமுள்ளது. எதற்கும் ஒரு விதிமுறைகள் உண்டு. அதற்கு கட்டுப்படாமல் தானே ராஜா என்று ஆடும் சுயநலம், எப்போதும் தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் அழிக்கும்.
-
அப்பா......
களத்திலுள்ள எல்லோரையும் எழுதும்படி ஊக்குவிக்கிறார்.
-
அவளைத்தொடுவானேன்....???
அவர் மனதாலை கூட யாரையும் தொடமாட்டார், ஏகபத்தினி விரதன்!
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
உங்களுக்கு தெரியாத மனிதர்களே இல்லைப்போல் இருக்கிறதே .
-
அவளைத்தொடுவானேன்....???
கதை முடிந்தது என்று தன்பாட்டில போன மனுஷனை தொடருங்கள், தொடருங்கள் என்று தொடர வைத்து, எங்கேயோ தொடுத்து விடுகிற பிளான் போலிருக்கே.
-
கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு.
ஆமா, எல்லோரும் இணைகின்றனர், கழட்டிவிட்டு சென்றவர்களுடன் இணையவோ, இணைக்கவோ யாரும் மறுத்துவிட்டனர், வைத்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டனர். இப்போ, தமிழரசுக்கட்சி முஸ்லீம் காங்கிரஸ் இணைவு செய்தி, நாளைக்கு மறுப்புச்செய்தியும் வரலாம். சுயநலம் பிடித்த மூடரின் முடிவு எப்போதும் அழிவிலேயே முடியும். வீட்டில் குடியிருப்பது நச்சுப்பாம்புகளும் கறையான்களுமே. யாரும் குடியேற விரும்பவில்லை, நாளுக்கு நாள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
-
அவளைத்தொடுவானேன்....???
பலரின் இளமைக்கால நினைவுகள் மெல்ல மெல்ல வெளியில் வரக்காத்திருக்கிறது!
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
தமிழ் மக்களால் கைவிடப்பட்ட கட்சிதான் தமிழரசுக்கட்சி. அது யாரோடு கூட்டு வைத்தாலென்ன நமக்கு? நாங்களே தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்கிறார்கள், பெரிய, ஆரம்ப கால கட்சி என்றார்கள். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் என்றார்கள், அந்த கட்சியை ஏகபோகமாக்கி அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்தார்கள், தாங்கள் தனித்து போட்டியிடப்போகிறோமென்றார்கள், எங்களுக்கு கீழ் இணையுங்கள், எங்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். இப்போ அங்குமில்லை இங்குமில்லை. தேர்தல் சொல்லும் செய்தி என்னவென்று பொறுத்திருந்து பாப்போம். சட்டமேதை எடுக்கும் முடிவு சரியாத்தானிருக்கும். இடையனால கெட்டானாம் மடையன்.
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
நீங்கள் வெட்டி விட்டீர்களா இல்லையா? உங்கள் பெயரை கேட்டேன். வெள்ளைகாரண்ட வாயில் நுழையாத பெயரை வைத்திருந்தால், அவன் எப்படி உங்களை கூப்பிடுவான் என நினைக்கிறீர்கள்?
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக. இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
எனது உறவினர் ஒருவர் தனியாள், கணவரின் ஓய்வூதியம் இருபதினாயிரம், சொந்த வீடு, நீரழிவு நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் இப்படி பல வருத்தம், நடக்க முடியாது, போசாக்கான உணவு இல்லை, மிக சிக்கனமாக வாழ்கிறார், கூடுதலான மருந்து மாத்திரை தனியார் மருந்தகங்களிலேயே வாங்குகிறார், அதிகமாக மரக்கறி சாப்பாடு. அவர் படும் கஸ்ரத்தை பார்த்து நான் நினைக்கிறன், எந்த ஒரு வருமானமும்மில்லாமல் வாழும் குடும்பங்கள் என்ன செய்வார்கள்? முன் ஆயிரம் ரூபா ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. இப்போ ஆயிரம் ரூபா ஒரு மூலைக்குபத்தாது.
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
சட்டமா அதிபர் வீட்டில் மறைந்திருக்கிறாரோ தெரியவில்லை. தேசபந்து தென்னகோனை கைது செய்ய வேண்டாமென உத்தரவிட்டிருக்கிறார் சட்டமா அதிபர். சட்டத்திற்கு முரணான உத்தரவுகளை வைக்கிறார் சட்டமா அதிபர். இவர் முன்னைய அரசுகளின் காவலன் போல் தெரிகிறது. இவரை முதல் கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வளவு நாளாக அவரை கைது செய்ய முடியவில்லையா பொலிஸாரால்? அல்லது கைது செய்ய மறுக்கிறார்களா?
-
இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்
வைத்தியசெலவு, மருந்துச்செலவு, போக்குவரத்துக்கு செலவு தவிர்த்து. இது குறைந்த பட்சம்.
-
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்; முன்னனி சோசலிசக் கட்சி
அது சரி, யார் குற்றவாளிகளை கைது செய்வது? காவற்துறை? இராணுவம்? அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே காவற்துறையும் இராணுவமும், அவர்களது கட்டளைக்காக காத்திருக்கின்றன இந்த இரண்டு படைகளும் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க.