Everything posted by satan
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
ம் ..... அவர்கள் இருந்த காலத்தில், அவர்களை அழிக்கிறோமென சொல்லி, முப்பது ஆண்டுகளும், பலகோடி ரூபாக்களும், பல நாடுகளின் உதவி, ஆலோசனைகளும் தேவைப்பட்டன. அவர்களை அழித்துவிட்டோமென விழா கொண்டாடி, இல்லாதவர்களுக்கு தடை விதிக்கிறார்களாம்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
அவர்களை விட அவர்களது பணம் பேசுகிறது. அரச கருவிகளும் அவர்கள் பக்கம். வித்தியா வழக்கிலும் போலீசாரே குற்றவாளிகளுக்கு உதவினர். இவர்களின் துணிவிலே இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், அதிலும் கொலை மிரட்டல் விடுகிறார்கள். தாங்கள் தங்கள் பணத்தினால் தப்பி விடுவோம் என்று சவால் வேறு விடுகிறார்கள். பாப்போம் எங்கே போய் முடிகிறது என்று? எப்படியும் ஒருநாள் சிக்கத்தான் போகிறார்கள்!
-
கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்
சுமந்திரன், சி. வி .கே. சிவஞானம் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் வரை அது நடைபெற வாய்ப்பேயில்லை. அவர்களுக்கு, யாராவது திறமையானவர்கள், சட்டம், அரச மொழி தெரிந்தவர்கள் வந்தால்; ஒவ்வாமை, பயம் கவ்விக்கொள்ளும். நிறை குடம் தழம்பாது, குறை குடம் எப்போதும் தழம்பிக்கொண்டேயிருக்கும். தமிழரசுக்கட்சியை அழிக்க வந்தவர், ஓரளவு அழித்தும் விட்டார். நீங்கள் தமிழரசை தனியே தள்ளி விட்டிட்டு வேறு அரசை தெரிந்தெடுங்கள்.
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
ம் ..... நம்பிற்றோம்! இது உங்களின் வழமையான பாணி. முன்பு தமிழருக்கு எழுதிய வசனம், இப்போ மஹிந்தவின் விசுவாசிகளுக்கு எழுதி, சாட்சிகளை அழியுங்கள். நாட்டை குண்டுகளால் அழித்து, அரசை பிடித்து ஊழல்களை மறைத்தவர்கள், புதிதாக யோசிக்க தோன்றவில்லை. நீதிமன்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து, நாமல் முந்திக்கொண்டு கருத்து தெரிவிக்கிறார். இப்போ என்னடா வென்றால், நாட்டை பொறுப்பேற்க தான் தயாராம். இதை வைத்தே இவரை விசாரிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆதாரம். போலீசாரிடம் இல்லாத கைக்குண்டா என்ன? குறித்த போலீசாரை விசாரணை செய்ய வேண்டும்!
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எப்போ நாட்டுக்கு வந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்கிற விபரம் எதுவும் எனக்கு தெரியாது. அதை நான் கேட்கவுமில்லை. சிலர் நாட்டுக்கு வருகை தந்து போடும் அலங்கோலங்களை எழுதினேன். அதற்கு உங்களுக்கு கோபம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. சிலர் இங்கு வந்து செய்யும் கூத்துக்களை பார்த்தால், அவர்களால் சிலர் அனுபவிக்கும் துன்பங்களை பார்த்தால், இவர்களை ஏன் கனடா அரசு அடிக்கடி நாட்டுக்கு வர அனுமதியளிக்கிறது என்று தோன்றுகிறது? அங்கே சும்மா கொடுக்கும் பணத்தை கொண்டுவந்து இங்கு கொழுத்தாடு பிடிக்குதுகள். கனடா போவதற்கு முன்னும் அவர்கள் அப்படித்தான். அது அவர்களின் பிறவிக்குணம். வருடக்கணக்கில் வந்து வேலை வெட்டி இல்லாமல் பிரச்சனை கொடுக்கிறார்கள் என்றால்; அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள்? காசு எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு?
-
சுதந்திரம்
நாட்டில ஒரு குழப்பம், அதிகரித்த துப்பாக்கிச்சூடுகள் களை கட்டப் போகின்றன. இனவாதத்தையும், ஊழலையும் பெருக்கி அதில் சுகம் கண்ட அரசியல் வியாதிகள் சிறை செல்லும் நிலைமை வரும்போது, நாட்டில் அமைதியை குழப்பி, தங்களை காட்டிக்கொடுக்கக் கூடியவர்களை கொலை செய்து, சாட்சிகளை அழிக்கவும், மக்களை அரசுக்கெதிராக கிளப்பவும், போலீசார், இராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் குற்றவாளிகள், தாங்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை அடையாளம் காட்ட போலீசாரை அழைத்துச்சென்ற போது, குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து போலீசரை தாக்க முற்பட்ட வேளை, பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் குற்றவாளிகள் உயிர் இழந்துள்ளனர் என்கிற கதைகள் வெளிவரப்போகின்றன. இராணுவ ஆட்சிக்கும் முயற்சிக்கலாம். தமிழருக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட கொலைகள், இயற்றிய சட்டங்கள் இப்போ அவர்களுக்கெதிராகவே திரும்பப்போகின்றன. முந்துகிறவன் பிழைப்பான். மஹிந்த கோஷ்டியோடு ஒட்டிக்கொண்டுதிரிந்தவர்கள் தங்களை மஹிந்தவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும். விமல் வீரவன்சவின் பாதுகாப்பும் சந்தேகமே.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
கனடா??? பெரும்பாலும் கனடாவில் இருந்து வருபவர்கள் ஊரிலும் சரி, அரசியலிலும் சரி அதிகமாக சிக்கலை தோற்றுவிப்பவர்கள். ஊரில் நடக்கும் அடாவடிகளையும், சொல்லும் தெனாவட்டான கதைகளையும் வைத்துச் சொல்கிறேன். போலீசார் இவர்களின் கைக்கூலிகள். நாங்கள் செய்வதை செய்துவிட்டு கனடாவிற்கு போய் விடுவோம், எங்களை யாரும் ஒன்றும் பண்ண முடியாதென சவால் வேறு விடுகிறார்கள். கனடா அரசாங்கம் இவர்கள் மேல் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், ஏன் அடிக்கடி செல்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது மனித உரிமை மீறல் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் நாட்டுக்கு வந்து, ஏழைகளுக்கு மனஉளைச்சலையும் அலைச்சலையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அங்கே கஸ்ரப்பட்டு உழைப்பவர்களாக தெரியவில்லை.
-
போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
சத்தியமூர்த்தி, சி. வி. கே. சிவஞானம் இன்னும் சிலர், சுமந்திரன் எதை சொல்கிறாரோ அதற்கே தலையாட்டுபவர்கள். அவர்களுக்கென்று ஒரு இலட்சியம் கிடையாது, இந்தப் பதவி தருகிறேன் என்றால், தலையாலும் நடப்பார்கள். இல்லை மீண்டும் பதவியை பறித்தாலும் தலையை ஆட்டுவார்கள். பாராளுமன்றத்தேர்தலின் போது, பதவிக்காக அலைபவர்கள் என்று சிலரை விமர்ச்சித்தார்கள், அதிலும் களத்தில் ஒருபடி மேலே போய், நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைபவர்கள் என்றார்கள். இப்போ, முன்னெப்போதும் இல்லாத பதவிகளை உருவாக்கி, இறுக்கிப்பிடித்திருப்பவர் யார்? சுத்துமாத்து பண்ணி பாராளுமன்றம் போகத்துடிப்பது யார்? இவர் முன்பு பாராளுமன்றம் போய் என்னத்தை சாதித்தார்? தன்னைவிட யாராவது நல்லது செய்து விடுவார்களோ, தனது சுத்து மாத்து வெளிவந்து விடுமோ என அஞ்சுகிறார். சரி, சத்தியலிங்கம் தனது சுகயீனத்துக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்தாரா? விடுப்புக்கு விண்ணப்பித்தாரா? செயலாளர் பதவியை வகிக்க முடியாதவர் எப்படி மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்? கட்சியிலிருந்து விலகுவது மக்களுக்கு நல்லது, விலக வேண்டும்! சும்மா கட்சிக்குள்ளிருந்து குழி பறிப்பு, பிரித்தாளுதல் செய்யாமல். அது இருக்க, ஏதோ மாவையில் மரியாதை வைத்திருந்ததுபோல், இந்த சிவஞானம் மூக்கால் அழுதார். ஆனால் கடந்த வருடங்களில் இவர் அளித்த பல நேர்காணலில். மாவை அப்படி செய்தார், இப்படி செய்தார், எனக்கு அறிவிக்கவில்லை, நான் போகவில்லை, கேட்கவில்லை என்று புறணி பாடியவர், அவருக்கே ஆப்பு இறுக்கினார். இங்கு, மாவையர் எல்லோரையும் அனுசரித்து போய் கட்சியின் ஒருமைப்பாட்டை காத்தவர், எல்லோரின் விமர்சனத்தையும் அவதூறுகளையும் தாங்கிக்கொண்டவர். கட்சி இரண்டுபடக்கூடாதென்று எல்லாவற்றையும் சகித்தார், ஏளனப்படுத்தப்பட்டார். கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில், அவரை பகிரங்கமாக சுமந்திரன் விமர்சித்தபோதும் வாயே திறக்கவில்லை சுமந்திரனுக்கு எதிராக. மீண்டும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக சுமந்திரன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்விலும் கலந்து கொண்டு ஒற்றுமையை காட்டினார். சிவஞானத்துக்கு வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, அறிவுமில்லை, பக்குவமுமில்லை. பதவி கொடுத்தால் போற்றுவார், இல்லையென்றால் தூற்றுவார் அவ்வளவுதான் அவரிடமுள்ள அறிவு. இதுகளை வைத்துக்கொண்டு உரிமை பெறுவதென்பது முடியுமா? "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது."
-
போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
அது மானஸ்தர்களுக்குத்தான் பொருந்தும். அது இருக்க, மக்கள் விரும்பாத இடத்து தான் பாராளுமன்றம் போகப்போவதில்லை என்று சொன்ன சத்தியவான், வெகுவிரைவில் பாராளுமன்றம் போகப்போகிறார். எதற்கு? அனுராவிற்கு ஆலோசனை வழங்க. ஆனால் யார் இவரை மதிக்கப்போகிறார்கள்? ஏற்கெனவே அனுராவோடு சேர்ந்துபடம் எடுத்தால் பதவி கிடைக்காது என்று அடித்துக்கூறிவிட்டார்கள். இப்போ தந்திரமாக பூந்தால் மட்டும் கிடைத்துவிடுமா என்ன? நேரடியாகவே சொல்வார்கள், நீங்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததோ அவர்களுக்கு பின்னால் திரிந்தீர்கள் என்று. அப்போதும் இந்த மனிதனுக்கு ரோசம் வராது கண்டியளோ. இவர்களும் இவர்களின் கொள்கைகளும் பதவிகளும். நாங்கள் எப்பவோ சொன்னது யாரும் காதில வாங்கவில்லை. இப்போ அப்படியே நிறைவேறுகிறது.
-
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்.
இவர் அவரை பதில் தலைவராக்க, அவர் இவரை பொதுச்செயலாளராக்க, ஒருவரை ஒருவர் புகழ சரியாக இருக்கும். ஆனால் மக்கள் இவர்களை மதிக்கவோ, தெரிந்தெடுக்கவோ போவதில்லை. தங்களுக்குள் தாங்களே பதவிகளை உருவாக்கி பகிர்ந்து மகிழட்டும்.
-
போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
சுமந்திரனோடு சேர்ந்து கூத்தடித்ததால் சாணக்கியனுக்கும் அதே நிலை.
-
தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
அனுர அரசுக்கு தமிழரின் ஆதரவு என்பது, எந்த சிங்கள தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் தமிழரை அரவணைக்கவும் அவர்களுக்கு இயலாத காரியம். இரு இனத்தையும் பரம எதிரிகளாக வைத்திருக்குமட்டும் தங்கள் அரசியலுக்கு பாதகமில்லையென்றே நினைத்திருந்தனர். அனுரவோ தமிழர் தன்னை ஆதரிப்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இங்கே சவாலாகப்போவது இந்த விகாரை விவகாரம். இங்கே அனுரவின் திறமை வெளிப்படுமானால் சிங்கள மக்களின் எதிர்ப்பை ஊதுவார்கள். அதையும் கடந்து செய்ய முடியும் அனுரவால் ஆனால், அவரும் முயற்சிப்பது போல் தெரிகிறது. அதை நிறைவேற்ற முடியாவிடில் சிங்களம் அனுரவையும் தமிழர் வழங்கிய ஆதரவையும் ஏளனம் செய்யும். அவரை செய்யவும் விடமாட்டார்கள், தடைகளை ஏற்படுத்தி தடுக்கவே செய்வார்கள். தாங்கள் தீர்க்காத பிரச்சனையை யாரும் தீர்க்கக்கூடாது, தடைகளை ஏற்படுத்துவது. அப்போ யார்தான் தீர்ப்பது? யாருக்கும் துணிவு இல்லை. மக்களால் முடியும். இவர்கள் கலவரங்களை ஏற்படுத்த முனையும்போது, எதிர்த்து நிற்கவேண்டும். மக்கள் ஓரளவு சிந்திக்கிறார்கள். ஏற்கெனவே கஜேந்திரன் குமாரின் வீட்டை முற்றுகையை ஏற்படுத்தவும், தையிட்டிக்கு பெருமெடுப்பில் மக்களை திரட்டி வர முயற்சித்தும் பயனளிக்கவில்லை. ஊழையிட்டு விட்டு அடங்கி விட்டார்கள். இனி அப்படி முயற்சிக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பல ஊழல் மோசடிக்காரரே இதன் பின்னால் உள்ளனர். அவர்களில் ஒருவரை விகாரை பிரச்சனையில் கைது செய்து அவரது ஊழலை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் போதும், மற்றவர்கள் தாங்களாகவே பொறியில் தலைவைக்க விரும்பாமல் விலகுவர்.
-
தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
ஒருதடவையாவது இவர் தனது அரசியல் பதவிக்காலத்தை அமைதியாக, முழுமையாகவே கழிக்கவில்லையே, அது ஏன்? கணக்கன் கணக்கறிவானாம் தன் கணக்கை தானறியானாம். வெறும் சொல் மட்டுந்தான், அதிலிருந்து வெளிவர வகை தெரியாது. அப்படியேதும் அசம்பாவத்தில் இவர் ஜனாதிபதியானாற்தானுண்டு.
-
மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம்
ஆமா, சட்டப்படி, தார்மீகப்படி, கொள்கைப்படி, நடைபெற்ற போட்டியில் தெரிவு செய்யப்பட்ட தலைவரை ஏற்காமல் நீதிமன்ற வாசற்படி ஏறியதற்கும் நீங்கள் கூறும் இவர்கள்தான் காரணம். கட்சியில் நடைபெற்ற இழுபறிகள், குழிபறிப்புகள் வேறு யாருக்கும் தெரியாது, அவிழ்த்து விடுங்கோ. ஆமா..... நீங்கள் வந்து போனபின்தான் அவர் விழுந்தார், அதற்கு முதல் நீங்கள் சொல்வதுபோல் சுகவீனமுற்றிருந்ததாக செய்தி வரவில்லையே. அவர் சுகவீனமுற்றிருந்தால் வைத்தியசாலையிலல்லவா அனுமதிக்கப்பட்டிருப்பார்? ஒரு மரணச்சடங்கிற்கு ஏன் போகிறோம்? எங்கள்அனுதாபத்தையும், ஆதரவையும், ஆறுதலையும் உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு தெரிவிக்கவே. ஆனால் சம்பந்தப்பட்டவரின் மரணத்திற்கு காரணமானவர்களால் அதை கொடுக்க, தெரிவிக்க முடியுமா? அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் அங்கு சமூகமளிக்கும்போது, உறவுகளின் மனநிலை எப்படியிருக்கும்? இவர்கள் அவரை நோகடிக்காமல் இருந்திருந்தால்; தமது உறவு இன்று எங்களோடு இருந்திருப்பாரே, என்கிற வேதனை வராதா? அவரை, நிஞாயத்துக்கு மாறாக பதவியிலிருந்து இறக்கி அவமானப்படுத்தியவர்கள் உள்ளத்தில், உண்மையான மரியாதை, கவலை இருக்குமா? போலிக்கு போய் தம்மை முதன்மைப்படுத்தவா? உறவுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட எவருமே பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வீட்டில் இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் தெரிந்திருக்கும். அதுதான் பாத்தோமே, மரணச்சடங்கில் சி. வி .கே. எப்படி காட்சியளித்தாரென்று. முகத்தில் வெறுப்பு, கவலையில்லை. மறுபக்கம் முகத்தை திருப்பி கையால மறைத்துக்கொண்டிருந்தாரே, இதற்கு போகாமலே இருந்திருக்கலாம்.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
ஒரு குரங்கு காணும் நாட்டையழிக்க.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இந்த உளறுவாய் சொல்லுது, கட்டி முடிந்த விகாரையை இடி இடி என்று சொல்கிறீர்கள், இப்படி சிங்களவர் சொன்னால் நீங்கள் இடிப்பீர்களா? என்கிறார். இவருக்கு வரலாறு தெரியாவிட்டால், வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். தம்புள்ள நகரில் முப்பது ஆண்டு பழமை வாய்ந்த, கோவில் காணியில், கட்டிய பத்திரகாளி அம்மன் ஆலயம் இடிக்கப்பட்டதே? முதலில், பொதுமக்களின் காணியில் விகாரை கட்டவில்லை, மக்கள் யாரும் தங்கள் காணி என்று பிக்குவிடம் வந்து கேட்கவில்லை என்கிறார். தங்கள் ஆலயத்தில் வழிபாடு செய்யசென்றவர்களை வழிபட விடாமல் துரத்தவில்லையா? நீதிமன்றம் அது மக்களின் காணி, அங்கே கட்டிடப்பணிகள் ஏதும் முன்னெடுக்க வேண்டாம் என்று தடையுத்தரவு போட்டும் ஏன் கட்டினார்கள்? மக்கள் தங்கள் காணியை விடுவிக்கும்படி போராடவில்லையா? பிறகு சொல்கிறார் மக்கள் காணியில் தான் கட்டியிருக்கிறது, எட்டு ஏக்கர் எல்லாம் இல்லை, ஒரு சின்ன விகாரை கட்டியிருக்கிறார்களாம். சின்னனோ, பெரிதோ அடுத்தவர் காணியில் இவர்களுக்கு எதற்கு விகாரை? அதற்கு மீள் காணியோ, நஷ்ட்ட ஈடோ பெற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்கிறார். பௌத்த மக்கள் யாரும் இல்லாத இடத்தில விகாரை எதற்கு? அந்த மக்களிடம் அனுமதி பெற்றார்களா? கட்டிட அனுமதி பெற்றா கட்டினார்கள்? அல்லது அந்த மக்களை தங்கள் சொந்த நிலங்களில் வாழ விட்டார்களா? துரத்தியது யார்? கலவரம் வெடிக்குமாம். ஏன் தமிழர் காணாத கலவரங்களா? முடிந்தால் தொடங்கிபார்க்கட்டும்? இப்படியே சொல்லிச்சொல்லி நிலம் பிடிப்பார்கள், அதற்கு ஒரு காரணம் இவர் சொல்வார். ஆமிக்காரர் நல்லவர்களாம். மக்களின் காணிகளில் முகாங்களும், கொட்டல்களும் கட்டி சொந்த மக்களை குடியிருக்க விடாமல் அகதிகளாக அல்லல் பட விட்டது யார்? அப்போ இத்தனை லட்சம் மக்களை கொன்றவர்கள் யார்? ஏலியன்களா? இவரை இதற்காகவா மக்கள் தெரிந்தார்கள்? பௌத்த சம்மேளனம் அறிக்கை விட்டிருக்கிறது, இதோடு சேர்த்து பதினெட்டு ஏக்கர் என நினைக்கிறன் அது தமக்கு வேண்டுமாம். எதற்கு? அப்படியொன்று இல்லவேயில்லை என்கிறார் இந்த விவரம் கெட்டது. ஆமி ஏன் இன்னும் பொதுமக்கள் காணிகளை தடுத்து அடைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இவரிடம் பதில் இருக்கிறதா? தனது காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்பாராம், வேண்டுகிறவர்கள் அதில் விகாரை கட்டினாலென்ன, மசூதி கட்டினாலென்ன, கோவில் கட்டினாலென்ன அதுபற்றி தனக்கு கவலையில்லையாம். ஆம். பணம் முக்கியம் என்பவருக்கு எதுபற்றியும் கவலையில்லை. ஆனால் இங்கு மக்கள் விகாரைக்கு காணி விக்கவில்லை. அடாத்தாக பிடித்திருக்கிறார்கள். இனக்கலவரம் யாரால் ஏன் வந்தது என்பதற்கு விளக்கம் கூறுவாரா இவர்? அதற்கு பயந்தவர் தலைவரின் பெயரை உச்சரிக்க கூடாது. தமிழ் மக்கள் பிரதிநிதியாய் வாக்கு கேட்டிருக்க கூடாது. இவர் சொல்லுற காரணம், பேசுற பேச்சு இரத்தம் கொதிக்க வைக்கிறது. சிங்களவரோடு சமாதானமாக வாழவேண்டுமாம், பிறகேன் நான் தமிழேண்டா என்கிறார்? வல்வெட்டித்துறையில் யாரோ அனுராவை கட்டிப்பிடித்தார்களாம், சந்திரசேகரன் சொன்னாராம், தாங்கள் அடிக்கத்தொடங்கினால் ஓடுவதற்கு இடமில்லையாம். ஏன் அவர் அப்படி பேசினார்? முரணாக இல்லை இவர் பேச்சு? இவருக்கு எங்கே, எப்படி, என்ன பேசவேண்டுமென்பது தெரியாது. எல்லோர் பேச்சிலும் குறுக்கீடு செய்து முரண்டு பிடிக்கிறது. ஒரு கார், காணொளியில் அரசியல் செய்ய நினைக்கிறார். இதை சொல்லியா மக்களிடம் வாக்கு கேட்டார் இவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கே சமர்ப்பணம் இவர் பேச்சு!
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சொல்லுறதை தெளிவா சொல்லுறது!
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
ம், புலம்பெயர்ந்தோர் கக்கூசு கழுவத்தான் வெளிநாடு போனார்கள் என்று ஒரு காணொளி அர்ச்சுனா வெளியிட்டுள்ளாராம். நான் பார்க்கவில்லை. இதனைக்கண்டித்து கடற்தொழிலாளர் சமாய உப தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது தொழிலையே ஒழுங்காக பார்க்க வக்கில்லாதவர், புலம்பெயர்ந்தோரை விமர்சிக்க வந்துவிட்டார். முன்னைய காணொளிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யார், யார் எவ்வளவு பணம் தனது வழக்குகளுக்காக அனுப்பினர் என்று வெளியிட்டவர். இன்று இவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். இதைப்பார்த்தாவது கவுசலியா இந்தாளின் சகவாசத்தை விட்டு விலகுவது அந்தப்பெண்ணுக்கு நல்லது.
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
விகாரை ஒன்றும் சும்மா கட்டவில்லை. அதை சுற்றி, சிங்கள குடியேற்றம் நிகழும். சிங்களவர் இல்லாத இடத்தில, விகாரை, தியான மண்டபம், விடுதி எல்லாம் யாருக்கு? இதற்கு மாற்றீடு கேட்டுப்பெற்றால், அதை தொடர்ந்து இந்த இடத்தில சிங்கள குடியேற்றம் உடனடியாக நிகழும். அடுத்து இதேபோல் தமிழரின் ஏனைய காணிகளுக்கு நிகழும். அப்போ நம்ம தலைவர்கள், ஆளுநர் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதேகாரணத்தை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டு தமது பதவிகளை காத்துக்கொள்வர். அவர்கள், முதலில் தமது காணிகளை பகிர்ந்து கொடுக்கட்டும் பாதிக்கப்பட்ட, காணியற்ற மக்களுக்கு.
-
சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது - உதய கம்மன்பில
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. பெயர் வெளியிடப்படவுடன் தாங்கள் பெற்ற கடனை திருப்பியளிக்க வேண்டியது கடன் பெற்றவரின் கடமை. வீட்டை விட்டு வெளியேறும்படி முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எத்தனை தடவை அறிவித்தல் விட்டாயிற்று, வெளியேறினாரா அவர்? அவர் அனுபவிப்பது ஒன்றும் அனுராவின் சொத்தல்ல, மக்களின் உழைப்பு. சட்டமா அதிபர் பிழைவிடுவதால், மக்கள் வீதியில் இறங்கி நீதி கேட்கின்றனர். ஜனாதிபதியாக விளக்கம் கேட்பது அவரது பொறுப்பு. நீங்கள் உங்களை ஊழலை மறைக்க ஊளையிடுகின்றீர்கள். உங்கள் எஜமானர், தங்கள் ஊழலை மறைக்க உங்கள் ஊழலை கண்டுகொள்ளவில்லை. நீங்கள் உங்களை காப்பதற்காக இவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள். அனுர, மக்களின் ஜனாதிபதி. அவர் மக்களுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் விலகி இருங்கள்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
உங்கள் மனைவி உங்களுக்கு செவிடன் என்று பட்டம் சூட்டினால், நீங்கள் புத்திசாலி, வாதத்தை வளர்க்க விரும்பாதவர் என்று அர்த்தம். இன்று பல ஆண்கள் வீட்டில் செவிடர்களாகவே இருக்கிறார்கள்.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
சுவியர் கெட்டிக்காரன். எல்லோரையும் கட்டிப்போடும் விடயத்தை தெரிந்து, கதையை ஆவலோடு எதிர்பார்க்க வைத்து கடைசியில் கோட்டையை இடிக்க வாருங்கள் என்று கூப்பிட்டால் என்ன செய்வீர்கள், தொடருங்கள் நாங்களும் வருகிறோம் என்று பின்தொடரும் நீங்களெல்லோரும்?
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
போராட்ட பாதை வளைந்து, நெளிந்து, சுருங்கி, விரிந்து போகுது. நீங்களோ, நாங்களும் தொடருகிறோம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியேல்லை. நானும் ஏதோ கோட்டையை இடிக்கிற போராட்டமாக்கும் என்று ஆவலோடு தொடர்கிறேன். கதை எல்லோரின் ஆவலையும் தூண்டுகிறது.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இவர்கள்தான் ஏமாற்றுக்காரரின் முதல். இவர்களை தேடியே வலை விரிப்பார்கள். யாரைத்தான் நம்புவது மக்கள், தங்கள் துயர் களைவார்களென்று?
-
சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் ; அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர்
இல்லை, இவர் அனுரா அரசாங்கத்துக்கு கேக்காமலே வக்காலத்து வாங்கி, தன்னை முதன்மைப்படுத்தவும், தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்கி, கெத்துக்காட்டவும் நினைத்தார் அது நடைபெறவில்லையென்றவுடன், தலைவரை இழுத்து மக்களை அரசுக்கு எதிராக கிளப்ப முனைகிறார். ஆயனில்லா மந்தைகள் தங்களை மீட்ப்பார் என நம்பி, ஓநாய்களை தெரிவு செய்கிறார்கள், மக்கள் தான் பாவம். இவருக்கு காரில சுத்துவதும், காணொளி வெளியிடுவதும், அடுத்தவர் பேச்சுக்களில் குறுக்கிடுவதும், அமளி பண்ணுவதும், வீண் வம்புகளில் மாட்டுப்படுவதும் வேலையாய் போச்சு. வெகு விரைவில் பாராளுமன்ற பதவியை இழக்கும் அபாயமுமுண்டு. கவுசலியா, இவருக்கு வக்காலத்து வாங்கி தன் நன்மதிப்பையும் எதிர்காலத்தையும் வீணடிக்காமல், தன் வேலையை பார்ப்பது நல்லது. இல்லையேல் அவர் மேலும் வீண் பழி சுமத்தி சேறடிப்பார்.