Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்: சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே. இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா?
  2. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அர்ச்சுனா, சைவ இந்துக்களை பற்றி தவறான கருத்து வைத்திருந்தால் அது நாட்டிலுள்ள எல்லா சைவ இந்துக்களையும் பாதித்திருக்கும். இவர்களை மட்டும் பாதிக்கும்படி அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என இவர்கள் அறிவிக்கவில்லை. இவர்களை மட்டும் பாதிப்பதுபோல் ஏதோ சொல்லியிருப்பார் போல. இங்கு பிரதேசவாதத்தை வலிந்து திணிப்பது நீங்கள். தமிழர், விடுதலை வேண்டி போராடினார்கள். வடக்கு படையணி கிழக்கிலும், கிழக்கு படையணி வடக்கிலும், ஒரே விடுதலைக்காக போராடினார்கள். அங்கே எங்கும் பிரதேசவாதம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்க்குரிய பதவிகள் வழங்கப்பட்டன. அது தமிழரின், இனத்தின் விடுதலைக்கான போராட்டம். இவர் இங்கு, இந்துக்கள் என்றும் கூறுகிறார், சைவர் என்றும் கூறுகிறார். அப்போ ஏன் நாட்டின் மற்றைய பகுதிகளில் உள்ள சைவர் இதை எதிர்க்கவில்லை என்றுதான் கேட்க்கிறேன். இது அவர்களுக்கு மட்டுமுரிய போராட்டமா என்று. நீங்கள் தேவையற்ற ஒன்றை செருகி பிரச்சனையை உருவாக்க துடிக்கிறீர்கள்.
  3. வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?
  4. ரணிலும் இப்போ இவர் மாதிரி புலம்பிக்கொண்டும் சாபம் போட்டுக்கொண்டும் திரியிறார். எப்போ ஆட்சி கவிழும், தான் கதிரை ஏறுவேன் என்று. இவரை மக்கள் பாராளுமன்றம் அனுப்பும்போது அவர்களுக்கு இவர் உதவி வேண்டும். இப்போ இவரை மக்களும் கட்சியும் நிராகரித்துவிட்டார்கள். யாருக்குமே உதவாமல் போய் விட்டார். "வெறுங்கை முழமிடுமா?" இவர் சவால் விட்டு கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். அவர் நினைக்கவில்லை, அனுரா அரசு வெல்லுமென்று, இரண்டிலொரு பெரும்பான்மைக்கட்சியே வெல்லும், எப்போதும்போல் தரகர் வேலை செய்து பிழைக்கலாமென்று தெனாவெட்டாக இருந்ததுமல்லாமல், அநாகரிக வேலை செய்ததுமே இவருக்கு ஆபத்தாக முடிந்தது. இனியாவது மக்களுக்கு சேவைசெய்து இழந்துபோன மரியாதையை கட்டியெழுப்பி மக்கள் மனங்களில் இடம்பிடிப்போம் என நினையாமல், குறுக்குவழியில் மற்றவர்களை பின்தள்ளி முன்னுக்கு வர முயற்சிக்கிறார். இது அவரோடு கூடப்பிறந்த குணம் மாறாது. அனுரா இவரை கூப்பிட்டு கதிரை கொடுக்கும்வரை சவால், கூக்குரல் நிற்காது.
  5. மக்களிடம் இழந்துபோன தன் மதிப்பை இதன் வழியாக உயர்த்தலாமென நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்றை உணர மறுக்கிறார், சிறிதரனை பார் சிறியர் என்று பலகாலமாக பேச்சு அடிபடுகிறது, அவரை பெரும்பாலான மக்கள் அழைப்பதும் அப்படியே. இருந்தும் தேர்தல் காலத்தில் உச்சஸ்தாயில் கத்தி வெளிப்படுத்தினவரும் இவர்தான். ஆனால் மக்கள் அவரையே தம் பிரதிநிதியாக தெரிந்தெடுத்துள்ளனர். இவரை நிராகரித்து மக்கள் சொல்லும் செய்தி; இதைவிட பெரிய, மன்னிக்க முடியாத துரோகி சுமந்திரன் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். அது அவருக்கு விளங்கவில்லை, அவ்வளவு பதவியாசை, அதிகார வெறி அறிவை மயக்கி வைத்திருக்கிறது. அது தெளிய வேண்டுமானால்: மக்கள் இவரை சிறப்பு விருந்தினராகவோ, விருந்தினராகவோ எங்கும் அழைக்கக்கூடாது, ஊடகங்கள் இவரை பேட்டியெடுப்பதை தவிர்க்க வேண்டும், நீதிமன்றம் இவர் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது; கட்சியை முடக்கி, செயற்படாமல் தடுத்ததற்காக இவரை எச்சரிக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சுய நினைவு வர வாய்ப்புண்டு.
  6. இந்தியாவில் ஸ்ராலினோடு நின்று சுயபடம் எடுத்து முகநூலில் விளம்பரம் செய்தது வெறும் புலுடா. அங்கு விருந்தினர்களாக வந்தவர்களை சுற்றி, அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லி கொண்டுவரும்போது, படம் எடுக்க விருபியவர்களின் தொலைபேசியை வாங்கி அவர்களோடு சேர்த்து படம் எடுத்து ஸ்ராலினே கொடுத்தாராம். அங்கு வந்திருந்த அனைவருமே அவரோடு நின்று சுயபடம் எடுத்துக்கொண்டார்களாம். படம் எடுத்தால்; இவர்களை அழைத்து கதைத்தார் என்று பொருள் இல்லை. இதிலிருந்து முன்பு வெளிநாட்டு தூதுவர்களோடு நின்று எடுத்து வெளிவந்த படங்களும், அதுசார்ந்த செய்திகளும், விளக்கங்களும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கான, பதில் அனுராவோடு படம் எடுத்து விளம்பரம் செய்த போதே கொடுக்கப்பட்டு விட்டது. இனிவருங்காலத்தில், இவர் வெளியிடும் பிரமுகர் படங்கள், அறிக்கைகள், செய்திகள் இவரின் மதிப்பை கூட்டப்போவதில்லை. தனது தவறுகளையும் குழிபறிப்புகளையும் மறைப்பதற்கு இவ்வாறான பிரச்சனைகளை ஊதிப்பெருபிப்பதை தவிர இவருக்கு வேறு வேலையில்லை. மதுபான சாலைகளை மூடுங்கள் என்று கேட்டால்; அது நிஞாயம். அதைவிட்டு, ஆட்களை வெளிப்படுத்துங்கள் என்று அடம் பிடிப்பது; இவரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இவரே வெளிப்படுத்திவிட்டு, இப்போ தனது இந்திய பயணம், குழிபறிப்பு பற்றிய கேள்வியை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் சவால் இது. தான் தோற்ற பின்னும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இப்படி முட்டாளாக, மக்களை முட்டாள்களாக்க செயற்படுகின்றாரே. சிறியர் தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்காக அதிக சேவை செய்து மக்களின் பாராட்டைபெற வேண்டும். இப்போது சுமந்திரனுக்கு உள்ள ஒரே சவால் சிறிதரன் மட்டுமே. அவரை விலக்கி விட்டால் தான் நினைத்தது போல், நீதிமன்ற செயற்பாடுகளை தான்நினைத்ததுபோல் மீளப்பெற்று, சர்வாதிகாரியாக செயற்படலாமென நினைக்கிறார். ஆனால் சிறிதரனின் பொறுமை, இவரை பைத்திய நிலைக்கு இட்டுச்செல்கிறது. இவர் ரொம்ப அவமானப்படுத்தப்படப்போகிறார். இதோடு தனது ஆட்டதை முடித்து ஒதுங்கிக்கொள்வது இவருக்கு நல்லது!
  7. உனக்கும் பேய் உன் அப்பனுக்கும் பேய் எண்டுறார். இந்தியாவின் போர்க்கப்பல் வரப்போகுதோ, இல்லை போர்தான் மூளப்போகுதோ தெரியவில்லையே?
  8. இந்தியா எப்படித்தான் விழுந்து விழுந்து இலங்கைக்கு உதவினாலும், தமிழ் மக்களை கொல்வதற்கு அனுசரணை வழங்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், இறுதியில் இந்தியாவை மாட்டிவிடும் வழக்கம் இலங்கையிடம் உண்டு. ஆனால் இந்தியா பாடம் படிப்பதாக இல்லை. ஒரு நேர்காணலில் அனுரா கூறிய வார்த்தை: "இலங்கையில் இரு இன மக்களின் அழிவிற்கும் காரணம் இந்தியாதான். அது தனது சுய லாபத்திற்காக எங்களிடையே மோதலை உருவாக்கியது. இதற்காக இந்தியா எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று கூறியிருந்தார். சும்மா இந்தியாவை தனது தேவைக்காக சிங்களம் பாவிக்கிறதேயொழிய, அதை கவனத்திலெடுப்பதில்லை. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் மூழுமானால், இலங்கை கண்டிப்பாக சீனா பக்கமே சாயும். அதை இந்தியா கண்டபின்னே தன் தவறை உணரும். முன்பும் இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சினை உருவானபோது, இலங்கை பாகிஸ்தானுக்கே தன் ஆதரவை வழங்கியது. இருந்தும் இந்தியா நம்மை வைத்து சிங்களத்தை வளைக்க முயற்சிக்கிறது.
  9. "ஆடத்தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம்." இவர், கடற்தொழில் அமைச்சராக இருந்து என்னத்தை சாதித்தார்? கைவிட்டுப்போன பதவியை நினைத்து புலம்ப வேண்டியதுதான். விசாரித்துப்பார்த்தால், உண்மை விளங்கும். முன்பு காணி விடுவிப்புக்கும் இங்கு ஒருசில அரசியல்வாதிகள் இவருட்பட உரிமை கொண்டாடினர். பின்னர் பார்த்தால், அதன்பின்னால் வேறு ஒருவர் இருந்ததாக இப்போ தெரியவருகிறது. அப்படியேதும் சாதனை இருந்திருந்தால், யாராவது கேட்டிருந்தால், சொல்லியிருப்பார். அவர் எல்லாவற்றையும் சொல்ல விரும்பவில்லை. அப்படியெல்லாம் நன்மை செய்த இவரை நிராகரித்து, ஒன்றுமே செய்யாதவர்களை ஏன் மக்கள் தெரிந்தெடுத்தார்கள் என்பதையாவது இந்த முட்டாள் ஒருநாளாவது யோசித்துப்பார்த்து, தன் பல்லவியை மாற்ற மாட்டாரா? திருந்த மாட்டாரா? தேர்தல் வரும்போதெல்லாம் இவர் கெஞ்சாத கெஞ்சலில்லை இருந்தாலும் சாதித்தேன் என்று புலம்புகிறார். பதவி இருக்கும்போது சாதிக்காதவர், இனிமேலும் சாதிக்கமாட்டார், வாயால் பினாத்துவார் என்கிற உண்மை மக்களுக்கு புருந்திருக்கிறது.
  10. இந்த ஓநாய் மக்களுக்காகவா அழுகிறது? சிறியரை கட்சியை விட்டு விரட்டுவதற்கு வழிதேடுகிறார். கட்சிக்காக மக்களில்லை, மக்களுக்காகவே கட்சி. மதுபானசாலை விவகாரத்தை தூக்கிப்பிடித்து, தான் புனிதன் என்பது போல் எங்கள் கைகள் சுத்தம் என்று சொல்லி தொண்டை கிழிய பிரச்சாரம் செய்தார். விழுந்தது சிறிதரனுக்கு வாக்கு. இன்னும் உணராமல் கத்துகிறார் என்றால் இவரின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சிறியரை விழுத்த எடுக்கும் ஒவ்வொரு படியும், இவரை இன்னும் தாழ்த்திக்கொண்டு போகும். சிறியர் இவர் எடுக்கும் படியால் மேல் ஏறி இவருக்கு முன்னுக்கு போய் விடுவார். எல்லோருக்கும் தெரியும் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட புழுக்கத்தில் புலம்புகிறாரென்று.
  11. ஐயோ, மக்கு பெருமாள். ஐயா! நீங்கள் ஏன் மேடையின் கீழ் பார்வையாளர் வரிசையில் இருத்தப்பட்டீர்கள், எதற்காக சிறீதரனுக்கு முன்னாடியே இந்தியாவுக்கு சென்றீர்கள், சேர்ந்து போயிருக்கலாமே, அங்கு எமது மக்கள் சார்பாக என்ன பேசினீர்கள் என்று கேட்டால், என்ன சொல்வது? அதை தவிர்ப்பதற்காக, சிறீதரனுக்காக அழுகிறார்களாம். அப்படி அக்கறையுள்ளவர்கள், ஏன் அவரை விலத்திவிட்டு சென்றார்கள்? நாங்கள் எங்கே இருந்தோம் என்பதை கேட்கமுதல், சிறிதரன் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டால், அதோடு கதை திசை திரும்பிவிடும். இது ஒரு தந்திரம்! தங்கள் குற்றத்தை, வெட்கத்தை மறைக்க. நீங்கள் ஏன் தோற்றீர்களென்றால்; நாங்கள் நான்கு ஆசனங்களை பெற்று வென்றிருக்கிறோம், இது வெற்றிதான். தமிழ் மக்களுக்கான பிரச்சனையை கதைக்க, விளக்க ஜெனிவா போங்கள் என்றால்; அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்பவர்கள், வைகோ போகிறார் அதுபற்றி பேச. அயலக தமிழர் தினத்துக்கு முண்டியடித்து ஓடுகிறார்களாம். எது முக்கியம் நமது அரசியல் சட்ட மேதைகளுக்கு?
  12. இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கி, இங்குள்ள ஊடகங்களுக்கு, பேட்டி கொடுக்கும்போது தங்களது கண்டனத்தையும் கவலையையும் வெளியிடுவார்கள். இவர்கள் விரும்பாத, பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் பதிலிறுக்க வேண்டிவரும். ஆனால் எஎல்லாவற்றுக்கும் தயாராய்த்தான் வருவார்கள். "தலைக்கு மேலே வெள்ளம் போனபின், சாண் ஏறினாலென்ன முழம் ஏறினாலென்ன?" சிறிதரன். நானும் போகலாம், விரும்பிய யாரும் போகலாம். ஆனால் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்துவது முக்கியம்! இந்த வழியாக பதிவு செய்து முன்னுக்கு ஓடி சந்திப்புகளை நடத்தினால், முதல் இருக்கை கிடைக்கலாமென நம்பி முண்டியடித்து சிறிதரனுக்கு அறிவிக்காமல் ஓடியிருப்பார்களோ? சிவஞானம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, சிறிதரனை இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதற்கு காரணம்; மக்களின் பிரச்சனைகளை பற்றி கதைத்ததாலாம். அப்போ, இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், ஏன் ரகசிய சந்திப்புகளை தனியாக நடத்துகிறார்கள்? ஏன் வெளிநாடுகளுக்கு, இந்தியா உட்பட போகிறார்கள்? தனிப்பட்ட பயணம் போகட்டும். மக்களுக்காக போனோம், பேசினோம் என்று ஏன் புலுடா விடுகிறார்கள்? போனவுடனே, போகிற இடங்களிலே, அரசியல் முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து படம் பிடித்து போடுவதிலேயே நேரம் செலவழித்திருக்கிறார்கள். மக்களுடைய பிரச்சனை அவர்களுக்கு இப்போ முக்கியமில்லை, தங்களை முன்னிலைப்படுத்த முக்கியம்.
  13. ம், வரப்போவது பாலியல் குற்றவாளி. அதில முகவசீகரம் தேவைதானா? பயம் அவமானம் அவற்றை தாங்குமா, காக்குமா? அவரும் கதாநாயகன் போட்டியென்று, அலங்காரத்துடன் வந்து துலைக்கப்போகிறார்.
  14. இன்றுடன் பொய்க்கு வக்காலத்து குறைந்து விடும்..... நிற்க, தேர்தலுக்கு முன் ஒரு நேர்காணலில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கட்சியின் வழக்கு பற்றி சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், தேர்தல் முடிந்தபின் அந்த வழக்கை மீளப்பெற்று கட்சியை முன்கொண்டு செல்வோம் என்றார். அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எது தடுக்கிறது? அப்போது, அவரது நம்பிக்கை, மதுபான சாலை அனுமதிப்பத்திர விடயத்தை ஊதிப்பெருக்கி விட்டேன், மக்கள் இந்த அரிச்சந்திரனின் வாக்கை கேட்டு சிறிதரனை நிராகரிப்பார்கள். அதன் பின் இந்த தலையாட்டிகள் சிவஞானம், சத்தியலிங்கத்தை பொம்மைகளாக ஆட்டிக்கொண்டு சிறிதரனை விரட்டுவதே அவரது திட்டம். ஆனால் நடந்ததோ வேறொன்று. இவர் தமிழ் மக்களையும் அவர்தம் அபிலாசைகளையும் எதிரிக்கு அடிமைகளாக அனுமதிக்கிறார், அதை மறைப்பதற்கு, தொடர்ந்து செய்வதற்கு சிறிதரனை குறிவைக்கிறார் என்பது யாவருமறிந்தது. சிறிதரனுக்கு சுமந்திரன் வெட்டிய குழியில் தானே விழுவேனென எதிர்பார்க்கவில்லை, பதவியாசை விடவுமில்லை. இது ஒரு முக்கியமான கட்டம். இதோடு தமிழரின் அபிலாசைகள் குழிதோண்டிப்புதைக்கப்படும் அபாயம். இதற்கான சகல வேலைகளும் சட்ட வரைபுகளும் முடிந்திருந்தன. சுமந்திரன் பாராளுமன்றம் போயிருந்தால்; அதற்கான இறுதி ஆணி அடித்திருப்பார். ஆனால் காலம் விடவில்லை. மக்கள் பகிரங்கமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரனுக்கு தக்க பாடம் புகட்டுவோமெண்டு. உண்மையிலேயே இவர் ஒரு அரசியல் சாணக்கியன் என்றால், மக்களுக்கும் கட்சிக்கும் நன்மை செய்பவராக இருந்திருந்தால்; சிறிதரனை வசை பாடுவதை நிறுத்தியிருப்பார், தான் போட்டியிடுவதை தவிர்த்து வேறொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பார், தானும் பழிச்சொல்லில் இருந்து தப்பியிருப்பார். அதைவிட, அவருக்கும் தான் தோற்பேன் என்கிற பயம் இருந்ததினாலேயே சிறிதரன் மற்றும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் மீது கட்டுப்பாடில்லாமல் குற்றச்சாட்டுகளையும் சேறையும் வாரிக்கொட்டினார். அது தனது திறமை என எண்ணினார். ஆனால் இவரது செயற்பாடு, சிறிதரனுக்கு ஏணியாய் அமைந்தது. வெட்கம், மானம், ரோசம், குற்ற உணர்வுள்ளவர்கள் அதோடு தமது வக்கிரத்தை நிறுத்தி விலகியிருப்பர் அல்லது தமது செயற்பாட்டை மாற்றியிருப்பர். மாறாக சுமந்திரன் தன் சுயரூபத்தை வெளிப்படையாக வெறித்தனமாக, அற்ப ஆசை கொண்டதுகளை வளைத்துக்கொண்டு ஆட வெளிக்கிட்டார். "கோவிற் பூனை தேவரை மதியாது." என்பார்கள். நீதிமன்றம் என்பது எவ்வளவு மதிப்பானது, நம்பிக்கையானது என்பது சட்டம் தெரிந்தவர் தொடங்கி பாமரர் வரை அறிவர். ஆனால் இந்த சட்டமேதை, எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்தை தன் வீடு போல பாவிக்கிறார். சட்டத்தையும் நீதிபதியையும் தான், தன் சுயநலத்திற்கு வளைத்து சாதித்து விடுவேன் எனும் பிழையான கருத்தை விதைக்கிறார். இதனால் மக்கள் நீதிமன்றத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, மதிப்பை இழக்க தூண்டுகிறார். இவரின் இந்த இழிவான செயலை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். உயர் நீதிமன்றம், இவரின் இந்த பிழையான செயலை தீர ஆலோசித்து, இவர் சட்டத்தரணி தொழில் செய்ய தகுந்தவரா என்பதை கண்டறிந்து, இவரின் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தாக்கல் செய்த தவறான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் யாருக்கு குழி பறித்தாலும் இனிமேல் அதில் விழுவது இவராகத்தானிருக்கும். சிறிதரன் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென இவர் செய்த சகுனி வேலையின் பின்பகுதியை இனி உணர்வார். தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் இதை எவ்வாறு பார்க்கின்றன என்கிற கருத்து நேர்காணல் அதை விபரிக்கும். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." கடந்த 2020 தேர்தலுக்குப்பின், சுமந்திரன் காட்டிய பதவியாசையில் மாவையருக்கு எதிராக எழும்பிய சிறிதரன், அதற்கான விலையை இப்போ கொடுத்துக்கொண்டிருக்கிறார். காலம் சென்றாலும் நீதி தவறாது. ''மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர், மற்றவர்க்கு குழி பறிப்பார். அது தன் பக்கம் பாத்திருக்கும்என்பதை தானறிய மறந்திருப்பார்.'' அடுத்து வரப்போவது; சிவஞானம், சத்தியலிங்கத்தின் அறுவடை நேரம். வரும்போது யாரும் இருக்க மாட்டார்கள் இவர்களை தேற்ற. "நாலும் நடந்து முடிந்தபின்னே நல்லது கெட்டது புரியும்."
  15. சிறியர்! ஏன் இதை இங்க இணைத்து மானத்தை வாங்கிறேள்? இருக்கிற கொஞ்ச நஞ்ச நல்ல பிள்ளையளின்ர மனதிலே நஞ்சை வார்த்து, அமைதியாய் போகும் சிலரின் வாழ்விலும் பூகம்பம் கிளப்ப வேண்டுமென்றா?
  16. கொஞ்சம் பொறுங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான விபரம் இன்னும் வெளிவரவில்லை. சிறீதரன் என்கிறார்கள், ஈ. பி .டி .பி என்கிறார்கள், மாவீரர் போராளிகள் குடும்ப காப்பகம் என்கிறார்கள். இந்தப்பிரச்சனைக்கு கடந்த மாவீரர் தினத்திலேயே அடிக்கல் போட்டாயிற்று. சிறிதரனை இலக்கு வைத்து பல பிரச்சனைகள், சேறடிப்புகள் பல பக்கத்தாலும் அரங்கேறுகிறது. சொந்த புத்தி இல்லாமல் இரவல் புத்தியில் கொஞ்சம் ஆடுதுகள். மாவீரர், எங்கள் நிம்மதிக்காக உணவிழந்து, உறக்கமிழந்து, உறவிழந்து, போராடி இப்போ, அமைதி கொள்கிறார்கள். அங்கேயும் அவர்களை அமைதியாக உறங்க விடக்கூடாதென எதிரி அவர் உடல்களை கிளறினான். இப்போ, இன்னொரு கூட்டம் அந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேலையில்லாததுகளின் தேவையில்லாத வேலையிது. எங்களுக்காக உழைத்து, இன்று தங்கள் வாழ்வை கொண்டுசெல்ல முடியாமல் ததத்தளிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு இவர்கள் முண்டியடிக்கட்டும் பாப்போம்! மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் செய்யும் தேவை யாருக்கோ இப்போது எழுந்திருக்கிறது.
  17. இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். அவர்கள் அழிவுக்கும், எத்தனையோ வாழவேண்டிய, போராட்டத்தோடு சம்பந்தப்படாத இளைஞர்களின் அழிவுக்கும் காரணமானவர்கள். ஆமா.... கறுத்த கண்ணாடியோடு நிற்பவர், தன்ர அம்மாவுக்கு நடந்ததைத்தான் கேட்க்கிறேன் என்கிறார். என்னவோ ஒரு தேவை ஏற்பட்டிருக்கு, பொறுப்போம்.
  18. சாதாரண மக்களுக்கெல்லாம் உந்தப்புத்தி வராது. உதுகள் பிறப்பிலேயே கிரிமினல் புத்தியோடு பிறந்திருக்குங்கள். அதென்ன பழக்கம்? ஒருவரின் நல்ல பெயரை கெடுப்பது, தான் விட்ட பிழையை முந்திக்கொண்டு மற்றவர் மேல் சுமத்துவது, ஒருவருக்கு சிறப்பு விருந்தினராக வந்த அழைப்பை தடுத்து, தான் போவது? ஒரே கட்சியை சேர்ந்தவர்கள், ஒரே நிகழ்வுக்கு போகிறார்கள், சிறியரை, தனிய சிக்கலில் மாட்டி விட்டு ஓடிப்போய்சந்திக்கினமாம். அங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த பிரிச்சுக்கொட்டிகளை பார்த்து? இந்தத்திறத்தில இது, கட்சியின் தலைவர் பதவிக்கு அடிபடுகுது. சி .ஐ. டிக்கு இவரின் கடவுச் சீட்டில் தவறு இருக்கிறது என்று அறிவித்து, அவர்கள் குடி வரவு அகல்வு நிலையத்துக்கு அறிவித்தார்களாம். இந்த இரண்டு கோணங்கிகளை தவிர, யார் இதை செய்திருப்பார்கள்? இன்று சிறியர் விமான நிலையத்துக்கு வருவார் என்று யாருக்கு தெரியும்? யாருக்கு அந்த அவசியம்? முன்பெல்லாம் என்னை தனியாக அழைத்தார்கள் என்று ஓடித்திருந்தார், இப்போ அழையா விருந்தாளியா முன்னுக்கு ஓடித்திரியிறார். இப்ப, சிறியர் இதை மேல் விசாரணைக்கு கொண்டு போனால் தெரியும் யார் அந்த களவாளிகள் என்பது. பலநாள் கள்ளன் ஒருநாள் வசமாய் மாட்டாமலே போகப்போகிறார். கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அதன் பெயரால் ஊர் சுற்றுகிறார்கள். இந்த, கட்சி யாப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இப்படியான கோணங்கிகள் கட்சியை முடக்கி அவசர நிலையை ஏற்படுத்தும்போது, கட்சி வேலைகள் தடங்கல் ஏற்படாமல் எப்படி மீள்வது, இப்படியான குழப்பிகளை எப்படி கையாள்வது, அல்லது கட்டுப்படுத்துவது, கண்டிப்பாக, கொள்கைகளை மீறி செயற்படுபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், இப்படியான கண்டிப்பான மாற்றங்களை கொண்டுவரவேண்டும் யாப்பில்.
  19. உந்த இரண்டு சகுனியளும் சேர்ந்து, வெகுவிரைவில் வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை உருவாக்கி மக்களை அடிபட தூண்டப்போகுதுகள். போரின்பின், கனிமொழி இலங்கைக்கு வந்து மஹிந்தவின் உபசாரத்தில் மகிழ்ந்து வந்த நோக்கத்தையே மறந்து போனவா. பக்கத்தில நிக்கிற இரண்டும் மகிந்தவின் தரகர்கள், இதுகள் எங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கப்போகுதுகள்? அதில அவவின் அப்பா, ஈழத்தமிழர் அழியும்போது தனக்கு ஆதரவு தேடி நாடகம் நடித்த கதாநாயகன்.
  20. அவர்களின் ஆலோசனை ஆயிரத்தில் ஒன்று. நீங்களும் விரும்பினால்; இலவச ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
  21. இதன் இலைகள் மேற்பரப்பில் எல்லாம் எண்ணெய்த்தன்மை கொண்டவை. இலகுவில் வெயிலினால் தீ பற்றக்கூடியது. உயர்ந்த இந்த அடர்ந்த மரங்கள் காற்றையும் பலமாக ஏற்படுத்தும் போலிருக்கிறது. அதனாலேயே விரைவாக தீப்பிடித்து பரவுகிறது என நினைக்கிறன். இலங்கையில் இந்த மரம் அதிகமாக இருக்கிறதோ தெரியவில்லை. அங்குதான் இந்த மருந்து தயாரிக்கிறார்கள். விக்ஸ், சித்தா லெப்பை போன்றவை.
  22. தெரியும் சிறியர். 2020’ம் ஆண்டு, தான் தேர்தலில் வெல்வதற்காக, அந்த அப்பாவி மக்களுக்கு தூசணப்பிக்கரை இறக்கி நாடகம் ஆடியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த தேர்தலின்பின், வடக்கை எங்களிடம் தாருங்கள் என்று அறைகூவல் விட்டவர். அடுத்த தேர்தலில் காணாமல் போவார், உந்த குழப்பியின் சகவாசத்தை விட்டு விலகி உண்மையாக மக்களுக்கு சேவை செய்யாவிடில். கிழக்கில் மேய்ச்சல் தரை பறிப்பு விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் மக்கள் போராடுகிறார்கள். இதில வடக்கையும் தன்னட்ட தரட்டாம். அவ்வளவுதான் அவரின் அறிவு. தன்னை முன்னுக்கு கொண்டுவந்து, காட்ட துடிப்பவர். அதற்காக எப்படியும் மாறுவார், யாரோடும் சேர்வார், எந்தக்கட்சிக்குள்ளும் நுழைவார்.
  23. போன வாரந்தான், இந்தியாவின் கால் கழுவுகிறார்கள், ஏதோ குடிக்கிறார்கள் என்று ஒருவர் அநாகரிகமாக வர்ணித்தார். இப்போ, உறவு சிறிதரனுக்கு முன் போய் இந்தியாவில் இறங்கி நின்று ஆதாரம் வெளியிடுகிறார். மாவையர் கூட்டத்துக்கு வருவதற்குமுன், அவரின் பதவியை பறிக்க அந்தரப்பட்ட சாணக்கியன் சுமந்திரன் கூட்டு, சிறிதரன் எங்கோ இருந்தார், நான் அவரோடு கதைக்கவுமில்லை, கட்சி எடுத்த முடிவை நான் அறிவித்தேன் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கொடுக்கும் சுமந்திரன், ஆதாரத்தை வெளியிட்டு எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிறார். பொய்யும் புரட்டும் பண்பாளர்களை ஒன்றும் பாதிக்காது. மாறாக தீயவர்கள் தாங்கள் மக்களின் உண்மையான தலைவர்கள் இல்லை, அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் சுயநலத்தை திரும்ப திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.
  24. அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்! சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.