Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார் அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது.
  2. ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள்.
  3. ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.
  4. இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர.
  5. இனவாதத்தை அல்ல இனவாதிகளை. தமிழர் நாம் ஒன்றுசேர்ந்து வாக்களித்து அரியாசனம் ஏறிய தலைமைகளே, நமக்கு ஒன்றும் தரவில்லை. மாறாக நமது மண்ணை பல துறைகளாக பிரிந்து நின்று ஆக்கிரமித்து, வளங்களை சுரண்டி, எங்களை நுழையவிடாது தடுத்தது. நமது அரசியல் தலைவர்களே எதுவும் செய்யவில்லை. விகாரை கட்டும்போது எங்கே போனார்கள்? திறப்புவிழா செய்யும்போது எங்கே போனார்கள் என்று கேள்வி கேக்கிறார்கள். ஆனால் அனுரா தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைத்திருக்கிறார். அவரால் எதுவும் செய்யமுடியும். கடைசி நேரத்தில் சுமந்திரன் விசர்க்கூத்தாடாமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் இந்தளவுக்கு அனுராவை வாக்களித்து தெரிந்திருக்க மாட்டார்கள். தமிழரின் வாக்குகள் இல்லாவிட்டாலும் அவர் ஜனாதிபதியாவதை நம்மால் தடுத்திருக்க முடியாது. இருந்தாலும் அவரின் வெற்றியை நானோ நீங்களோ மாற்றமுடியாது, அவர் செய்வதை தடுக்கவும் முடியாது. அவர் அறுதிப்பெரும்பான்மையோடு இருக்கிறார். அவருக்கு அதிக பொறுப்புண்டு, பெருமை பேசவல்ல. ஆனால் கடந்த தலைவர்களை விட ஏதோ செய்ய முயற்சிக்கிறார், அதை நம்புவதைவிட நமக்கு வேறொரு தெரிவில்லை. நீங்கள் பொங்கியெழுவதாலோ அல்லது நான் வழிவதாலோ எதுவும் மாற்ற முடியாது. முன்னைய ஆட்சியாளர்களிடம் உங்களுக்கு இல்லாத கோபம் அனுரா மீது மட்டும் எதற்கு? நாம் விரும்பினாலோ, இல்லையோ அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலேயே இருப்பார். நல்லது செய்தால் தொடர்வார், இல்லையேல் வீழ்வார். எதற்காக அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? வசை பாடுகிறீர்கள்? தருவதை பெற்றுக்கொண்டு மிகுதியையும் பெற முயற்சிப்போம். இவர் வெல்வார் என அவரே நினைத்திருக்க மாட்டார் ஆனாலும் வென்றார். ஆகவே அவர் மனமும் மாறலாமல்லவா? சுமந்திரன் தோற்பேன் என நினைத்தா சன்னதமாடினார்? அவரது ஆட்டமே வேறு வழியின்றி மக்களை அனுரா பக்கம் தள்ளியது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரே ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி. நாங்கள் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். இருந்தாலும் இவரது ஆட்சிக்குப்பின் யார் வந்தாலும், இவரை விட நல்லது செய்வார் யாருமில்லை. எல்லோரும் பலதடவை ஆட்சியை நிர்வகித்தவர்கள், எங்கள் வாக்குகளின் உதவியோடு. இவரோ முதற்தடவையாக ஆட்சியேற்றிருக்கிறார். பாப்போம்!
  6. சுமந்திரனின் புலி எதிர்ப்புக்கொள்கையோடு இணைந்திருந்த தமிழரசுக்கட்சி போல், இது என்றுங்கொள்ளலாம். எல்லாம் மாறும், மனித மனங்களும் மாறும். கொடிய போரில் மக்களை கொன்றொழித்த அசோக சக்கரவர்த்தி, புத்த தர்மத்தை போதிக்க தன் மகளை இலங்கைக்கு அனுப்பவில்லையா? காலம் வரும்போது அதுவும் தானாக மாறும். அனுராவின் ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதியடைய வேண்டும். நீங்கள் அவர்களோடு பேசிப்பாருங்கள், உண்மை புரியும். அந்த நேரம் அவர்கள் கிறிக்கெற் பாத்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். புலிகள் விடுதலை செய்த இராணுவத்தினரையே பத்திரிகைகள் பேட்டி எடுக்கவோ, மக்கள் சந்திக்கவோ அனுமதியளிக்காமல் மீண்டும் போர்முனைக்கு அனுப்பியவர்கள். தப்பியோடும் அல்லது போராட மறுத்த இராணுவத்தினரை கொன்றுவிட்டு புலிகள் மேல் பழி போட்டதும், தப்பியோடிவிட்டனர் என்றும் கதை சொன்னனர். ம், தெரியும். நீங்கள் அதை செய்வீர்கள் என்று. அதனாலேயே உங்களுக்கு மட்டும் சமர்ப்பணம்!
  7. நான் ஒன்றும் சட்டத்தரணியில்லை, சட்டங்களை ஆராய. ஏதோ ஒரு சட்டத்தில் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளார். இனிமேல் இப்படியான செயலில் இறங்கினால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.
  8. இனவாதம் பேசி, தமிழருக்கு தீர்வு இல்லை, அதிகாரம் இல்லை, நாடு இல்லை என்று சிங்களமக்களை உசுப்பேத்தி வாக்கு சேர்த்த தேர்தல்கள் நடந்த இலங்கை வரலாற்றில், முதன்முதலாக இனவாதம், மதவாதம், வாக்குறுதி எதுவும் இல்லாமல் பெரும்பான்மையோடு ஜெயித்தவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரா அவர்கள்! அவர் போராட்டத்தின் இழப்பு, வலி தெரிந்தவர், அரச கொடூரம் அனுபவித்தவர், உறவுகளை இழந்தவர், நிஞாயமான கோரிக்கைக்காக போராடியவர், எதை அரசு செய்திருந்தால் இழப்புகளை தவித்திருக்கலாம் என்கிற கொள்கை உடையவர். தமிழரை பற்றி சிந்திக்காத நாட்டில், தமிழர் படும் அவலங்களை உணர்ந்தவர், அதை வெளியில் சொன்னவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களும் நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும் என எடுத்துச்சொன்னவர். இனவாதம் பேசி, தம்மை ஏமாற்றி, நாட்டை சூறையாடிய வெறுப்பு, விரக்தியினால் மட்டும் மக்கள் அனுராவுக்கு வாக்களிக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் இவ்வளவு பெரும்பான்மையோடு வென்றிருக்க முடியாது. மக்களும், நாட்டில் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிறார்கள். குடும்பி மலை விகாரை விடயத்தில் சில பிக்குகளும் இனவாதிகளும் சேர்ந்து நாட்டில் ஒரு கலகத்தை ஏற்படுத்த வீதியில் நின்று கூப்பாடு போட்ட போதும் யாரும் செவிமடுக்கவில்லை, கஜேந்திரன் எம். பியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் யாரும் அணிசேரவில்லை. இதிலிருந்து தெரிவது; மக்கள் இனிமேலும் வன்முறையை, வன்முறையாளர்களை தொடரப்போவதில்லை என்பது. ஆகவே பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுக்கலாம். அனுரா இல்லாமல் வேறொருவர் வந்திருந்தால், அவர்களிடம் இருந்து எதை தருவார்கள் என எதிர்பார்த்திருப்பீர்கள்? மக்களே மாற்றத்தை கொண்டு வந்தவர்கள், ஆகவே சிங்கள சகோதரர்களிடம், சிங்களம் தெரிந்தவர்கள் பேசுங்கள். தமிழருக்கு ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது என பெரும்பாலான சிங்களமக்களுக்கு தெரியாது, இனவாதிகளும் ஊடகங்களும் பொய்களையே பரப்பின, பொய்யான காரணங்களை கூறினர், திரித்த வரலாறுகளை கற்பித்தனர். அவை எல்லாவற்றையும் இங்கு எழுதிக்கொண்டிருக்க முடியாது. சிங்களம் தெரிந்த யாராவது முகநூல் வழியாக அவர்களுக்கு தெரிவிக்கலாம். டொ. அர்ச்சுனா இதை செய்ய முடியும். நாட்டுக்கு எப்போ பயங்கரவாத சட்டம் தேவையில்லையோ, அப்போ அது தானாக தேவையற்று போகும். முன்னைய அரசுகளில் இந்த சட்டம் தமிழருக்கெதிராக இயற்றி செயற்படுத்தப்பட்டது. இனிமேல் அது இயற்றியவர்களுக்கெதிராகவும் பாய இடமுண்டு. வாழ்க அனுர.
  9. கக்கியிருக்க கூடும், ரேணுக பெரேரா கைது, முக நூலில் தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை இணைத்தவர் கைது, என்பவை அவர்களை அடக்கியிருக்கும். முன்பு மாவீரர் தின வாரம் புலிகளின் கொடியை இராணுவமே ஏற்றி அதை தமிழர் மீது திணித்தது, போலீசார் தடையுத்தரவு வாங்க நீதிமன்றத்தில் வரிசையில் நிற்பினம். இந்தமுறை அப்படியொன்றும் நடக்கவில்லை. ரேணுக பழக்க தோஷத்தில வெளிக்கிட்டு எச்சரிக்கப்படுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அதோடு அடங்கிவிட்டனர். தெரியும், தொடர்ந்தால் தலைமைக்கு ஆபத்து வருமென்று அதனால் அடங்கி விட்டார்கள்.
  10. இனவாதத்தை யார் கக்குகிறார்களோ, அவர்கள்மேல் பாயும். பொறுத்திருந்து பாப்போம். பொறுமை அவசியம்! எல்லோரும் முனகிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார்களே, என்ன செய்வது? பொறியை வைத்துவிட்டு, எலி விழுகுதா என பரிதவிப்பவர் போலிருக்கிறீர்களே.
  11. பயங்கரவாத சட்டம் தமிழரை காப்பாற்றும் என்று நான் சொல்லவரவில்லை, அனுராவின் அரசையும் எடுக்கும் திட்டங்களையும், கலைக்கும் இனவாதிகளின் மேல் பாயும். அது எவ்வளவு கடுமையானதென இயற்றியவர்களுக்கும் தெரியும். அதனாலேயே மாவீரர் தினத்திற்கு எழும்பிய எதிர்ப்பு, எழும்பிய வேகத்திலேயே அடங்கியது. சிலர் அடக்கியும் வாசித்தனர். கிடைத்த சந்தர்ப்பத்தை அளவுக்கதிகமாக கற்பனை செய்து செயற்பட்ட நம்மவர்களும் பாதிக்கப்பட்டனர். நினைவு கூர இடமளித்த போது, அதற்குமேல் எடுத்த எடுப்பிலேயே பிரபல்யம் ஆக்கவேண்டுமென்ற பேராசை மதிமயங்க வைத்து, தாமே மாட்டிக்கொண்டனர். காலம் கனியும்வரை பொறுமை வேண்டும். இடையில தட்டிக்கொட்ட நினைக்கலாமா?
  12. எல்லாம் மாறும். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தபின், மஹிந்த கோஷ்டியை யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. இப்போ, அவர்களால் இனி அரசியல் கதிரை ஏற முடியுமா என்பதே கேள்வி. பெரும்பான்மையோடு கம்பீரமாக ஆட்சியேற்ற கோத்தா அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடிந்ததா? ஆனால் அந்த வரலாற்று அவமானம் நிகழ்ந்தது. மக்களோடேயே நாம் பேச வேண்டும், நமது கோரிக்கைகளை அவர்கள் பக்கம் வைக்க வேண்டும்.
  13. அரசியலாளர்கள் தங்கள் இருப்புக்காக இனவாதத்தை தோற்றுவித்தனர்,வளர்த்தனர், அதற்கு அப்பப்போ தூபம் காட்டி சலுகை அளித்து போஷித்தனர். அதை விட்டால் அரசியல் செய்வதற்கு அங்கொன்றுமில்லை. இதை களைந்து அரசியல் செய்ய முடியாது. அனுர சில நடவடிக்கைகளை நேரடியாக, உடனடியாக எடுக்க முடியாது, அவர்கள் பாதையில் போய்த்தான் வேறொரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதற்குமுன் இனவாதிகளை, இனவாத கருத்துக்களை, தூண்டுதல்களை, கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பயங்கரவாதச்சட்டம் இப்போதைக்கு தேவையானது. அதை எடுத்துவிட்டால் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாது போய்விடும். பழையபடி தீ வைப்புகள், கொலைகள், கொள்ளைகள், குண்டுகள் வெடிப்புகள் தமிழருக்கெதிராக நடக்கும். அது தற்போதைய அரசுமேலே விழும். அதை தவிர்ப்பதற்கு பயங்கரவாத சட்டம் நடைமுறையில் இருப்பதே நல்லது. இனவாதிகளே பயங்கரவாத சட்டத்தை இயற்றியவர்கள், அதில் நீதி நிஞாயங்களை இழுத்து மூடியவர்கள். அதன் தாக்கம் என்ன என்பதை அவர்களும் உணரவேண்டும். அதை எடுங்கள் என்று அவர்களால் கூற முடியாது, அதை வைத்திருங்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே இனவாதம் சிங்களத்திடமிருந்து களையப்படும்வரை அது இருப்பது நல்லதே. நம்ம அரசியல் தலைவர்கள் அர்ச்சுனா போன்றவர்கள் சிங்களமக்களிடம் பேச வேண்டும், எமது தேவைகள் என்ன, அது எப்படி உருவானது, அடக்கப்ட்டன என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். இப்போ, மஹிந்தவே வந்து இனவாதம் வேண்டாமென்றால், யாரும் கேட்கப்போவதில்லை. காரணம் அது அவர்கள் கையை மீறிப்போய்விட்டது. ஆனால் அனுர எடுக்கும் நடவடிக்கையினால் அது தானாகவே கருக வாய்ப்பிருக்கிறது.
  14. பெயரை போடலாந்தான் ஆனால் இன்னொரு பகுதி பெயரை வெளியிட்டது தவறு என கூப்பாடு போடும், அதோடு சம்பந்தம் இல்லாத உறவுகளும் பாதிக்கப்படும் இதனால். ஒருவேளை நன்றாக வழக்கை ஆராய்ந்தபின் வெளிப்படுத்தக்கூடும். திருடனின் பெயர் அறிவதில் அவ்வளவு அவசரம் உங்களுக்கு. அவன் திருடன், அவன் பெயரை அறிந்து, அவன் பெயரிலுள்ள எல்லோரையும் சந்தேகப்பட, திருடன் என பெயர் சூட்ட ஏதுவாகிவிடும்.
  15. நீங்கள்தான் 5 வருடம் பொறுத்து, அவர் நல்லது செய்தால் அதன் பின் அவரை துதிபாட வேண்டும். பொறுமை அவசியம் சாத்தானுக்கு. ஐந்து வருடங்கள்!
  16. அதுசரி, இந்தக் கருத்தை (உண்மையை) பகிர ஏன் இத்தனை கால தாமதம் எடுத்தீர்கள், தயங்கினீர்கள் என்பதை அறியலாமா? கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு?
  17. பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி, மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
  18. சனத்தின் சாவிலும் அழிவிலும் வியாபாரம் செய்து பிழைக்கத் தெரிந்தவர்கள்.
  19. மஹிந்தவும் முன்பு ஏதோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், பின்பு அதே தவறைஅவரே தனது ஆட்சியில் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. அனுராவின் ஆட்சியில் நீதி, நிஞாயம், நிலை நிறுத்தப்பட்டால்; நாடு அமைதியடையும், தங்களது அரசியல் அஸ்தமனமாகும் என சிலர் துடிப்பதும் எச்சரிப்பதும் குற்றம்சாட்டுவதும் தெரிகிறது. அன்று ரேணுக பெரேராவிற்கு அரசியல் செய்வதற்கு அது தேவையாக இருந்திருக்கும், இன்று அந்த அரசியலுக்கு உயிர் கொடுப்பதற்கு தமிழரை பயங்கரவாதிகளாக சித்திரிக்க வேண்டிய தேவையிருக்கிறது. சாகர காரியவசம்தான் ரேணுகா பெரேராவை ஏவிவிட்டு ஒட்டம் பார்த்தாரோ தெரியவில்லை. இவரையும் விசாரிக்க வேண்டும். மஹிந்த ஆட்சிக்கு வந்திருந்திருந்தால், என்ன நடக்குமோ அதையே அவர்கள் செய்தார்கள், ஆனால் தண்டனை என்றவுடன் பொருமுகிறார்கள்.
  20. கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதான் இன்னொருவர் இந்த குற்றத்தை செய்ய தயங்குவர். தம்மை பாதுகாப்பதற்கும் தமது சுயநலத்திற்கும் அப்பாவி மக்களை பலிகொடுத்து தமது திட்டங்களை நிறைவேற்றுவது தடுக்கப்படவேண்டும். இனவாதம் பேசுவோருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படவேண்டும்.
  21. அது என்ன மாதிரியான சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டது என்று எங்களுக்கும் சொல்கிறது. இல்லையென்றால், எங்களுக்கு வேறொரு சந்தேகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாராய அனுமதி பெற்றிருப்பாரோ என. சிறியர் மன்னிக்கவும், இது வெறும் சந்தேகமே!
  22. ஒசாமா பின்னலேடனுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு? அவரை ஏன் இலங்கை முஸ்லிம்கள் நினைவு கூரவேண்டும் என்றும் விளக்கி தொடர்பு படுத்தலாமே? நல்லிணக்கம் என்றால் என்ன என்று தெரியாதவர்களெல்லாம் பாடம் எடுக்கிறார்கள், அதுதான் கொடுமை.
  23. ஏங்கோ, இந்நாளில் விடுதலைப்புலிகள் இயங்குகின்றனரா? அல்லது அவர்களை நீங்கள் உருவாக்குகிறீர்களா? உங்களுக்கு, புலிகளுக்கும் விசுவாசத்தை காட்ட வேண்டும். அதே நேரம் சுமந்திரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும். ஒரு தோணியில் காலை வைத்து பயணியுங்கள்.
  24. முன்னாள் விடுதலைப்புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.